உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / செயற்கை நிறமியால் உடலுக்கு பாதிப்பு ஆபத்தின் நிறம் சிகப்பு: ஓட்டலில் சுகாதாரமற்ற சிக்கன் அழிப்பு

செயற்கை நிறமியால் உடலுக்கு பாதிப்பு ஆபத்தின் நிறம் சிகப்பு: ஓட்டலில் சுகாதாரமற்ற சிக்கன் அழிப்பு

திருப்பூர்;திருப்பூரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய ஆய்வில், செயற்கை நிறமி சேர்க்கப்பட்ட 4 கிலோ சிக்கன் பறிமுதல் செய்து அழித்தனர். உணவு பாதுகாப்பு விதிகளை மீறிய, 23 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு திருப்பூர் - பல்லடம் ரோடு, அவிநாசி ரோடு, தாராபுரம் ரோடு, காங்கயம் ரோடு பகுதி கடைகளில் ஆய்வு நடத்தினர். 3 நாளில், 82 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதில், செயற்கை நிறமி சேர்க்கப்பட்ட சில்லி சிக்கன், காலிபிளவர், பிரிட்ஜில் வைக்கப்பட்ட சிக்கன், 4 கிலோ கைப்பற்றப்பட்டு, அழிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய ஏழு கடைகளுக்கு, தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம், 14 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற முறையில் இயங்கிய, 15 கடைகளுக்கு தலா 1,000 ரூபாய் வீதம், 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:உணவு பாதுகாப்புத்துறையால் அங்கீகரிக்கப்படாத செயற்கை நிறமிகள், துரித உணவு வகைகளான இறைச்சி, காளான், காலிபிளவர் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறதா என, திருப்பூர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. விதிமீறும் உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கடந்த மூன்று நாட்களில், 82 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, விதிமீறிய 23 கடைகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற முறையில் இயங்கிய கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்படாத செயற்கை நிறமிகளை, சில்லி, காலிபிளவரில் சேர்த்து பொரித்து விற்பனை செய்யக்கூடாது.பொரித்த உணவுகளை வாழை இலையில் மட்டுமே பார்சல் செய்யவேண்டும். பாலிதீன் கவர்களை பார்சலுக்கு பயன்படுத்தக்கூடாது. சுத்தமான, சுகாதாரமான மற்றும் தரமான உணவு பொருட்களை நுகர்வோருக்கு வழங்க வேண்டும். உணவு தயாரிப்புக்காக கொள்முதல் செய்யும் அனைத்து பொருட்களுக்கும் உரிய ரசீது வைத்திருக்க வேண்டும்.சைவம் மற்றும் அசைவ உணவுகளை ஒரே பிரிட்ஜில் சேமித்து வைக்க கூடாது. சமைத்த உணவுகளை, பிரிட்ஜில் சேமித்து வைத்து, மீண்டும் சூடுபடுத்தி பரிமாறக்கூடாது. தள்ளுவண்டி கடை வைத்திருப்போர், உணவு பதார்த்தங்களை மூடிவைத்து, சுகாதாரமான முறையில் விற்பனை செய்ய வேண்டும். கழிவு பொருட்களை உரிய முறையில், குப்பை கிடங்கில் கொட்டி அழிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.சுகாதாரமற்ற முறையில் இயங்கிய கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்படாத செயற்கை நிறமிகளை, சில்லி, காலிபிளவரில் சேர்த்து பொரித்து விற்பனை செய்யக்கூடாது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை