உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இந்த நேரத்தில்! நூல் விலை உயர்வு அதிர்ச்சி அளிக்கிறது பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கவலை

இந்த நேரத்தில்! நூல் விலை உயர்வு அதிர்ச்சி அளிக்கிறது பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கவலை

திருப்பூர்;உள்நாட்டு சந்தை சீராகி, ஏற்றுமதி ஆர்டர் தலைகாட்டும் நேரத்தில், நுால்விலை உயர்வதால் பின்னலாடை உற்பத்தியாளர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இந்திய பருத்தி மார்க்கெட்டில், யார் வேண்டுமானாலும் வர்த்தகம் செய்யலாம் என்ற சுதந்திரம் உள்ளது. காரணம், அத்தியாவசிய பொருட்களில் இருந்து விலக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, பஞ்சு விலை குறைவாக இருக்கும்போது, லட்சக்கணக்கான பேல் பஞ்சு வாங்கி, இருப்பு வைக்கின்றர்.பெரிய நிறுவனங்கள், அதிக அளவு பஞ்சு இருப்பு வைத்து, செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி, பஞ்சு விலையை உயர்த்துகின்றன; இதன்காரணமாக, நுால்விலையும் உயர்கிறது. ஒட்டுமொத்த ஜவுளி உற்பத்தியாளர் மட்டுமல்லாது, நுாற்பாலைகளும் இதனால் பாதிக்கின்றன.நுாற்பாலைகளுக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாக சீரான வர்த்தகம் இல்லை. பஞ்சு விலை குறைவான பிறகும், ஏற்றுமதி பின்னலாடை தயாரிப்பதற்கான நுால் ஆர்டர் வரத்து இயல்புநிலைக்கு திரும்பவே இல்லை. கடும் நஷ்டத்தில் நுாற்பாலைகள் இயங்கி வந்தன.புதிய ஆர்டர் வருகைகடந்த ஓராண்டாக, பஞ்சு விலை மாற்றமின்றி இருந்தது. நடப்பு பருத்தி சீசனும், பஞ்சு வரத்து அதிகம் இருந்தது. தற்போது, உள்நாட்டு பனியன் சந்தை நிலவரம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஏற்றுமதி வர்த்தகமும், சுணக்கில் இருந்து மீண்டு, புதிய ஆர்டர்களை வரவேற்க தயாராகி வருகின்றன.செயற்கை நுாலிழை ஆடைகளுக்கு வரவேற்பு இருந்தாலும், இந்திய பருத்தி ஆடைகளுக்கான கிராக்கி, உலக நாடுகளில் குறையவே இல்லை. அதன் காரணமாக, புதிய ஆர்டர் மீண்டும் வரத்துவங்கயுள்ளது. இந்நிலையில், திடீரென நுால்விலை உயர்வது கவலை அளிப்பதாக மாறியுள்ளது.இதுகுறித்து, பின்னலாடை உற்பத்தியாளர்கள் சிலர் கூறியதாவது:பஞ்சு விலை காரணமின்றி உயர்த்தப்படுவதால், நுால் விலையை உயர்த்த நுாற்பாலைகள் தள்ளப்படுகின்றன. மத்திய அரசு அதிகாரிகள் தலையிட்டு, பஞ்சு விலை உயராமல் தடுக்க வேண்டும். குறிப்பாக, வெளிநாட்டில் இருந்து பஞ்சு இறக்குமதி செய்ய, வரியை முழுமையாக நீக்க வேண்டும்.அவ்வாறு செய்தால், நுால்விலை உயர்வது தடுக்கப்படும். நீண்ட இடைவெளிக்கு பின், பனியன்தொழில் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது. ஏற்றுமதி வர்த்தகமும் சாதகமாக மாறியுள்ளது. இந்நிலையில், நுால் மற்றும் பஞ்சு விலை உயர்வை, மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்இவ்வாறு அவர்கள் கூறினர்.செயற்கை நுாலிழை ஆடைகளுக்கு வரவேற்பு இருந்தாலும், இந்திய பருத்தி ஆடைகளுக்கான கிராக்கி, உலக நாடுகளில் குறையவே இல்லை. அதன் காரணமாக, புதிய ஆர்டர் மீண்டும் வரத்துவங்கயுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை