உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆம்னி பஸ் நிறுத்துமிடம் மாறுவது எப்போது?

ஆம்னி பஸ் நிறுத்துமிடம் மாறுவது எப்போது?

திருப்பூர்:ஆம்னி பஸ்கள் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு இடமாற்றம் செய்வது எப்போது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.திருப்பூர், அவிநாசி ரோடு, புஷ்பா தியேட்டர் ஸ்டாப்பில் இருந்து ஆம்னி பஸ்கள் பெங்களூரு, சென்னை, கொச்சின் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது.பத்து முதல், 20 பஸ்கள் இங்கு வந்து பயணிகளை அழைத்துக் கொண்டும், சரக்குகளை ஏற்றியும் செல்கிறது. புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவை (அவிநாசி வழி), சத்தி, மேட்டுப்பாளையம் செல்லும் பஸ்களுக்கான ஸ்டாப்பாகவும், புஷ்பா தியேட்டர் ஸ்டாப் உள்ளது.இங்கு ஆம்னி பஸ்கள் இரவில் நிறுத்தி, அங்கிருந்து இயக்கப்படுவதால், இடையூறு ஏற்பட்டு வந்தது. இதனை தவிர்க்க, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆம்னி பஸ்கள் இயக்க மாநகராட்சி நிர்வாகம் ஆலோசித்தது. இது தொடர்பாக ஆலோசனைகள் நடந்த நிலையில், புஷ்பா தியேட்டர் ஸ்டாப்பில் இடையூறு தொடர்ந்தும் அத்திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. புதிய பஸ் ஸ்டாண்டில் இடமிருந்தும் பயன்படுத்தப்படாமல் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை