உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆறுமுகம் பழனிக்குரு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ஆறுமுகம் பழனிக்குரு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சத்திரப்பட்டி : சத்திரப்பட்டி ஆறுமுகம் பழனிக்குரு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.கல்லூரி முதல்வர் (பொறுப்பு) தர்மராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் ராமகிருஷ்ணன் பட்டம் வழங்கி பேசியதாவது, பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணம் இருக்க வேண்டும்.மாணவிகள் உயர்ந்த குறிக்கோளை முன்னெடுத்து சமுதாயத்திற்கு தனது பங்களிப்பை அளிப்பதுடன், பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும், என்றார். 158 மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.விழாவில் கல்வி குழும தலைவர் ஆறுமுகம், தாளாளர் பழனிக்குரு, துறை பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை