உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வேதியியல், கணக்கு பதிவியல் கட்டாய வினா மட்டும் கடினம்!

வேதியியல், கணக்கு பதிவியல் கட்டாய வினா மட்டும் கடினம்!

திருப்பூர்;'பிளஸ் 1 வேதியியல் மற்றும் கணக்குப்பதிவியல் தேர்வில் கட்டாய வினா மட்டும் கஷ்டமாக இருந்தது; மற்றவை எளிதில் விடையளிக்கும் வகையில் இருந்தது,' என தேர்வெழுதிய மாணவ, மாணவியர் கூறினர்.திருப்பூர் மாவட்டத்தில் நேற்று நடந்த பிளஸ் 1 வேதியியல் தேர்வெழுத, 14 ஆயிரத்து, 69 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில், 13 ஆயிரத்து, 996 பேர் தேர்வில் பங்கேற்றனர்; 73 பேர் தேர்வறைக்கு வரவில்லை. விண்ணப்பித்த, 75 தனித்தேர்வர்களில், 54 பேர் தேர்வெழுதினர்; 21 பேர் வரவில்லை.கணக்கு பதிவியல் தேர்வை, 11 ஆயிரத்து, 758 பேர் எழுத வேண்டும்; 166 பேர் எழுதவில்லை. 11 ஆயிரத்து, 592 பேர் எழுதினர். 247 தனித்தேர்வர் விண்ணப்பித்தனர், 189 தேர்வெழுதினர். 58 பேர் வரவில்லை. புவியியல் தேர்வை, 275 மாணவர்கள் எழுதினர்; ஏழு பேர் தேர்வுக்கு வரவில்லை.

தேர்வு குறித்து, மாணவர்கள் கருத்து

ஸ்ரீவந்தினி: ஒரு மதிப்பெண்ணில், நான்கு வினாக்கள் புத்தகத்துக்குள் இருந்து வந்திருந்தது. மற்ற, 11க்கு சரியாக விடையளிக்க முடிந்தது. ஐந்து மதிப்பெண்ணில் ஏற்கனவே கேட்கப்பட்ட, முக்கிய வினாக்கள் இடம் பெற்றதால், எளிதில் விடையளிக்க முடிந்தது. கட்டாய வினா மட்டும் கஷ்டம்; மற்றவை கஷ்டமில்லை. நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.வேதியியல், முதுகலை ஆசிரியர் பிரகாஷம் கூறுகையில், ''புத்தகத்தை முழுமையாக படித்திருந்த மாணவர்கள், மூன்று மதிப்பெண் கட்டாய வினாவுக்கு விடையளித்திருக்க முடியும். ஐந்து மதிப்பெண் வினாக்கள் அல்லது பகுதி உட்பட எளிமையாக இருந்தது. ஒரு மதிப்பெண் யோசித்து, நிதானமாக, சரியாக விடை எழுதிய மாணவர்கள் சென்டம் பெற்று விடுவர்,'' என்றார்.மனோஜ்: எதிர்பார்த்து சென்ற கேள்விகள் இடம் பெற்றிருந்தது. ஆசிரியர் முக்கிய வினாக்கள் என குறிப்பிட்டு கொடுத்தவை, திருப்புதல் தேர்வில் வந்தவையே மீண்டும் வந்திருந்தது. கட்டாய வினா புத்தகத்துக்குள் இருந்து எடுக்கப்பட்டதால், யோசிக்க வைத்தது. மற்றவை எளிதாக இருந்தது. நிச்சயம் நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.கணக்கு பதிவியல், முதுகலை ஆசிரியர் பூபதி கூறுகையில், ''இரண்டு மதிப்பெண் கட்டாய வினா புத்தகத்துக்குள் இருந்து கேட்கப்பட்டதால், சென்டம் குறையலாம். அதற்கும் சரியாக விடையளித்து முழு மதிப்பெண் பெறும் மாணவர்களும் உண்டு. ஒன்று, மூன்று, ஐந்து மதிப்பெண்ணில் ஏற்கனவே பல முறை கேட்கப்பட்ட கேள்விகள் தான் இடம் பெற்றது. மெல்ல கற்கும் மாணவரும் தேர்ச்சி பெற்றிடும் வகையில் வினாத்தாள் இருந்தது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை