| ADDED : ஏப் 28, 2024 01:39 AM
திருப்பூர் நகரப்பகுதியில் உள்ள ரோடுகள், கடந்த 10 ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்டன. ரோடு விரிவாக்க பணியில் ஏற்பட்ட இடையூறு காரணமாக, மங்கலம் ரோடு மேம்பாட்டு பணி அதிகம் நடக்கவில்லை.பெரியாண்டிபாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் மட்டும், ரோடு நான்கு வழிச்சாலையாக அகலம் செய்யப்பட்டிருந்தது. பாரப்பாளையம் முதல், பெரியாண்டிபாளையம் வரையிலான பகுதியை, நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தும் பணி நடந்து வருகிறது. ரோட்டோரம் இருந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி, ரோடு விரிவாக்க பணி நடந்து வருகிறது.ரோட்டின் இருபுறமும், குழி தோண்டி, கான்கிரீட் கலவை கொண்டு மேம்படுத்தப்பட்டது. பிறகு, முழு அகலத்தில் தார்ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, மையத்தடுப்புகள் தற்காலிகமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.குமரன் கல்லுாரி அருகே இருந்த, பழைய இரும்பு மையத்தடுப்பு அகற்றி, புதிய கான்கிரீட் டிவைடர் வைக்கப்பட உள்ளது. நீண்ட நாள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், ரோடு நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்படுகிறது.இதேபோல், மாநகராட்சி அலுவலகம் முதல், பாரப்பாளையம் வரையிலான பகுதியிலும், ரோட்டை விரிவாக்கம் செய்து, போக்குவரத்து நெரிசலை தீர்க்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.