உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு பள்ளி ஆண்டு விழா குட்டீஸ் உற்சாகம்

அரசு பள்ளி ஆண்டு விழா குட்டீஸ் உற்சாகம்

அனுப்பர்பாளையம்;திருப்பூர், சாமுண்டிபுரம், செல்லம்மாள் காலனி மாநகராட்சி துவக்கப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.விழாவுக்கு வார்டு கவுன்சிலர் நாகராஜ், தலைமை வகித்தார். முன்னாள் கவுன்சிலர் சின்னசாமி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் நாகராஜ் கணேஷ்குமார் வரவேற்றார். திருப்பூர் வட்டார கல்வி அலுவலர் முஷ்ரக் பேகம், பி.டி.ஏ., தலைவர் பழனிசாமி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் மோகனா பேசினர்.விழாவில், தமிழ் மற்றும் ஆங்கில பேச்சு, பாட்டு, நடனம், உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாவட்ட அளவில் நடைபெற்ற சிலம்பம், கராத்தே, ஓவிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. விழா நிறைவாக, மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை