மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்..
28-Oct-2025
இன்றைய மின்தடை ரத்து
28-Oct-2025
தொடர் மழையால் பசுமையான மீடியன்
28-Oct-2025
போலீஸ் செய்திகள்
28-Oct-2025
வீரசோழனில் ஆக்கிரமிப்பால் சிரமம்
28-Oct-2025
அக். 31, நவ. 12ல் ஒற்றுமை அணிவகுப்பு
28-Oct-2025
சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் எதிர்கோட்டையில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள ஓடையில் ஆக்கிரமிப்பினால் கழிவுநீர் தேங்கி இருப்பதால் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது.வெம்பக்கோட்டை எதிர்கோட்டை பஸ் ஸ்டாப், குடியிருப்புகளுக்கு மத்தியில் ஓடை செல்கிறது. தவிர ஓடையின் அருகிலேயே அங்கன்வாடி மையம் உள்ளது. ஓடையில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளது. இதில் குப்பைகளும் கொட்டப்படுகின்றது.மேலும் ஓடையில் ஆங்காங்கே ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் சமீபத்தில் பெய்த மழையில் தண்ணீர் வெளியேற வழி இன்றி ஓடையிலேயே தேங்கி விட்டது. தண்ணீர் நிறமே மாறி அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனால் இப்பகுதியினர் வீட்டில் குடியிருப்பதற்கே சிரமப்படுகின்றனர். மேலும் ஓடை, கொசு உற்பத்தி கேந்திரமாக மாறி, கொசு இரவில் மட்டுமல்லாது பகலிலும் குடியிருப்புவாசிகளை துன்புறுத்துகிறது. அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் படிக்கின்ற குழந்தைகளும் தொற்று நோயினால் பாதிக்கப்படுகின்றனர். எனவே ஓடையை துார்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீரை வெளியேறச் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
28-Oct-2025
28-Oct-2025
28-Oct-2025
28-Oct-2025
28-Oct-2025
28-Oct-2025