sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 07, 2026 ,சித்திரை 24, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

/

13

முந்தய பதிப்புகள்

இன்றுநேற்று
இன்றுநேற்று

To type in English

 (or) 

Press CTRL+G 

To type in English

மொத்த செய்திகள்: 1374

1 நிமிட செய்தி | நள்ளிரவு 12 மணி | 14-04-2026 | 1 Minutes News | Dinamalar

ஷார்ட்ஸ்

13-Apr-2026

மேஷம்: அசுவினி: யோக காலம்தைரிய காரகனான செவ்வாய், ஞானகாரகனாக கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, உங்களுடைய அசுவினி நட்சத்திர சாரத்தில் மேஷ ராசியில் சூரியன் உச்சமடையும் நாளில் பராபவ வருடம் பிறக்கிறது. எதிலும் யோசித்து செயல்படும் உங்களுக்கு இந்த ஆண்டு யோகமான ஆண்டாக இருக்கும். உங்கள் திறமை வெளிப்படும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். நினைத்த வேலைகள் நினைத்தபடி நடந்தேறும்.சனி சஞ்சாரம்: ஆண்டு முழுவதும் சனி பகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், உங்கள் நட்சத்திரநாதனுக்கு நட்பான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணிப்பதால் எடுத்த வேலை நடந்தேறும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். நோய் நீங்கும். எதிர்ப்பு விலகும். வழக்கு விவகாரங்கள் வெற்றியாகும். ஆடம்பர செலவு அதிகரிக்கும்.ராகு – கேது சஞ்சாரம்: 2026 நவ. 13 வரை ராகு கும்பத்தில் சஞ்சரிப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். வியாபாரம், தொழில் லாபம் தரும். நவ. 13 முதல் கேது கடகத்திலும், ராகு மகரத்திலும் சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும். வேலைப்பளு கூடும். மறைமுகத் தொல்லைகளால் மனம் வேதனைப்படும்.குரு சஞ்சாரம்: மே 26 வரை மிதுனத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகளால் திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் கைகூடும். இடம், வீடு, வாகனம் வாங்க முடியும். மே 26 முதல் கடகத்தில் சஞ்சரிக்கும் குருவால், விரய சனியின் பாதிப்புகள் விலகும். அக். 20 முதல் சிம்மத்தில் அதிசாரமாக சஞ்சரிக்கும் குருவால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். நெருக்கடி நீங்கும். குடும்பத்தில் நிம்மதி, தொழிலில் வளர்ச்சி, உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். 2027 பிப். 13 முதல் மீண்டும் கடகத்தில் சஞ்சரிக்கும் குருவால், சனி பகவான் தரும் சங்கடங்கள் விலகும்.சூரிய சஞ்சாரம்: ராஜ கிரகமான சூரிய பகவான் ஒவ்வொரு ராசியினருக்கும் 3, 6, 10, 11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் யோகப்பலன்களை வழங்குவார். அந்த நிலையில் ஆனி, புரட்டாசி, தை, மாசி ஆகிய நான்கு மாதங்களிலும் உங்கள் செல்வாக்கு, அந்தஸ்தை உயர்த்துவார். தைரியமாக நடைபோட வைப்பார். வழக்கு விவகாரங்களில் வெற்றியை ஏற்படுத்துவார். ஆரோக்கியத்தை அதிகரிப்பார். எதிர்ப்புகளை இல்லாமல் செய்வார். அரசுவழி முயற்சிகளை சாதகமாக்குவார். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சிகளை வெற்றியாக்குவார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வையும் விரும்பிய இடமாற்றத்தையும் வழங்குவார். பொருளாதார நிலையை உயர்த்துவார்.பொதுப்பலன்: தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வீண் செலவுகள் கட்டுப்படும். வருமானம் உயரும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் கனவு நனவாகும். கையில் பணம் புரளும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.தொழில்: செய்துவரும் தொழில் முன்னேற்றமடையும். பணியாளர் ஒத்துழைப்பால் உற்பத்தி அதிகரிக்கும். சிறு குறு தொழில்கள் வளர்ச்சி அடையும். சிலர் புதியதாக தொழில் தொடங்குவீர். இயந்திரம், எலெக்ட்ரானிக், எக்ஸ்போர்ட், பங்கு வர்த்தகம், திரைத்துறை, கெமிக்கல், மெடிக்கல், காண்ட்ராக்ட், ரியல் எஸ்டேட், விவசாயம் சார்ந்த தொழில்கள் வளர்ச்சி அடையும். பணியாளர்கள்: வேலைக்கேற்ற ஊதியமில்லை திறமைக்கேற்ற மரியாதை இல்லை என்று மனம் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவு உண்டாகும். எதிர்பார்த்த சலுகைகளுடன் வேலையில் உயர்வு கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு வரும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும்.பெண்கள்: படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என்று அவரவர் கனவுகள் நனவாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். வேலையின் காரணமாக குடும்பம் ஓரிடம், தான் ஓரிடமாக வாழ்ந்தவர்கள் மீண்டும் குடும்பத்துடன் ஒரே வீட்டில் வாழும் நிலை உண்டாகும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு முதலீட்டிற்கும் முயற்சிக்கும் ஏற்ற ஆதாயம் கிடைக்கும். பொன், பொருளுடன் புகழும் கூடும்.கல்வி: உயர் கல்வி என்ற இலக்கை எட்ட முடியும். விரும்பிய கல்லூரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். சிலர் மேற்கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாடு என்று செல்லும் யோகமும் உண்டாகும்.உடல்நிலை: ருண ரோக ஸ்தானத்தை ஆயுள்காரகன் சனி பகவான் பார்ப்பதால் நோய் நொடி விபத்து என்று சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். மந்திரம் போட்டதுபோல் உங்களுக்கிருந்த நோய்கள் மருத்துவத்திற்கு கட்டுப்படும். ஆரோக்கியமாக நடைபோடுவீர்கள்.குடும்பம்: குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். எலியும் பூனையுமாக வாழ்ந்து வந்த கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும், சொத்து சுகம், வாகனம் என்று வாழக்கூடிய நிலை உருவாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.பரிகாரம்: ராஜ கணபதியை வழிபட்டுவர வாழ்க்கை வளமாகும். பரணி: உழைப்பால் உயர்வீர்கள்இரத்தக்காரகன் யுத்தக் காரகனான செவ்வாய், அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் பராபவ ஆண்டு யோகமான ஆண்டாக இருக்கும். வருடத்தின் முதல் மாதத்தில் உங்கள் ராசிக்குள் ஆத்ம காரகனான சூரியன் உச்சமாக சஞ்சரிப்பதால் வருடத்தின் தொடக்கமே உங்களுக்கு முன்னேற்றமாக இருக்கும். நினைப்பதை எல்லாம் நடத்திக்கொள்ள முடியும். உழைப்பதற்கும் முயற்சிப்பதற்கும் தயங்காத உங்களுக்கு முன்னேற்றப்பாதை தெரியும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். பொருளாதார நிலை உயரும்.சனி சஞ்சாரம்: சனி பகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், கடக குருவின் பார்வையாலும், வக்கிர, அஸ்தமன நிலைகளாலும் விரயச்செலவுகள் கட்டுப்படும். விருப்பங்கள் பூர்த்தியாகும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். எடுத்த வேலைகள் நடந்தேறும். நோய்நொடிகள் விலகும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். வழக்கு விவகாரங்கள் வெற்றியாகும். ஆரோக்கியம் மேம்படும்.ராகு - கேது சஞ்சாரம்: கும்ப ராசியில் சஞ்சரிக்கும் ராகு, முடங்கிய முயற்சிகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். வியாபாரம் தொழிலில் லாபத்தை அதிகரிப்பார். பணப்புழக்கத்தை ஏற்படுத்துவார். பொருளாதார நிலையை உயர்த்துவார். நவ. 13 முதல் சுக ஸ்தானத்தில் கேதுவும், ஜீவன ஸ்தானத்தில் ராகுவும்  சஞ்சரிப்பதால் வேலைபளு கூடும். தொழிலில் நெருக்கடிகளை சந்திக்க வேண்டிவரும். மறைமுகத் தொல்லைகளால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சங்கடங்கள் அதிகரிக்கும்.குரு சஞ்சாரம்: மிதுனத்தில் மே 26 வரை சஞ்சரிக்கும் குருவின் பார்வைகள் குடும்பத்தில் நிம்மதியை உண்டாக்கும். திருமணம், குழந்தை பாக்யம், வீடு வாகனம் என்ற கனவுகள் நனவாகும். மே 26 முதல் கடகத்தில் சஞ்சரிக்கும் குருவால் விரய சனியால் ஏற்படக்கூடிய சங்கடங்கள் உங்களை நெருங்காமல் போகும். அக். 20 முதல் சிம்மத்தில் அதிசாரமாக சஞ்சரிக்கும் குருவால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். அரசியல் வாதிகளுக்கும், பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்போருக்கும் பட்டம் பதவி கிடைக்கும். பணப்புழக்கம் இருக்கும். புதிய சொத்து சேரும். குடும்பத்தில் நிம்மதி, தொழிலில் வளர்ச்சி, உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். 2027 பிப். 13 முதல் மீண்டும் கடகத்தில் சஞ்சரிக்கும் குருவால், சனி பகவான் தரும் சங்கடங்கள் விலகும்.சூரிய சஞ்சாரம்: சனி, ராகு, கேது, குரு கிரகங்கள் ஒருவருக்கு எதிர்மறையாக சஞ்சரித்து பாதகமான பலன்களை வழங்கிடக்கூடிய காலங்களிலும், ராஜ கிரகமான சூரிய பகவான் ஒவ்வொரு ராசியினருக்கும் ஒரு வருடத்தில் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் 122 நாட்கள் மிகப்பெரிய யோகத்தை அளிப்பார். அந்த நிலையில் பராபவ வருடத்தில் ஆனி, புரட்டாசி, தை, மாசி ஆகிய 4 தமிழ் மாதங்களும் உங்களுக்கு ஏற்றம் நிறைந்த காலங்களாகும். முன்னேற்றம் காணும் நேரங்களாக இருக்கும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். ஆரோக்கியம் சீராகும். எதிர்ப்பு போட்டி என்பது இல்லாமல் போகும். வம்பு வழக்கு என்ற பிரச்னைகள் முடிவிற்கு வரும். அரசுவழி வேலைகள் சாதகமாகும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். புதிய தொழில் அமையும். செய்துவரும் தொழில் லாபம்தரும். சமூகத்தில் அந்தஸ்தும், செல்வாக்கும் உயரும்.பொதுப்பலன்: விரய ஸ்தானத்தில் சனி சஞ்சரித்தாலும், குருவின் பார்வைகளும், நவ.13 வரை லாப ராகுவும், வருடத்தின் 4 மாதங்கள் சூரியனும் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர் என்பதால், படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம், வீடு, வாகனம், தொழில் என்ற கனவுகள் நனவாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பணப்புழக்கம் இருக்கும்.தொழில்: தொழில் காரகன் சனி பகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், குருப்பார்வை, வக்கிரம், அஸ்தமனம் என்ற நிலைகளால் செய்துவரும் தொழில் சுபிட்சமாகும். சிலர் புதியதாக தொழில் தொடங்குவீர். ஆடை, ஆபரணம், வாகன விற்பனை, எலக்ட்ரானிக்ஸ், ஸ்பேர்பார்ட்ஸ், அழகு சாதனங்கள், நிதி நிறுவனம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், கெமிக்கல், மருந்தகம், உணவகம், பெட்ரோலியம், விவசாயம் சார்ந்த தொழில்கள் லாபம் தரும்.பணியாளர்கள்: தற்காலிகமாக வேலைப்பார்த்து வந்தவர்களுக்கு வேலை நிரந்தரமாகும். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்களுக்கு உழைப்பிற்கும் திறமைக்கும் உரிய மரியாதை கிடைக்கும். வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம் கிடைக்கும்.பெண்கள்: உடல்நிலை, மனநிலை சீராகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வேலைப்பார்க்கும் இடத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். திருமண வயதினருக்கு கழுத்தில் மாங்கல்யம் ஏறும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். கணவருடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும். விவாரத்து கேட்டு நீதிமன்றம் வரையில் சென்றவர்களும் மீண்டும் கணவருடன் வாழும் நிலைக்கு வருவீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். பொன் பொருள் சேரும்.கல்வி: பொதுத்தேர்விலும், போட்டித் தேர்வுகளிலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்விக்காக மேற்கொள்ளும்முயற்சி வெற்றியாகும். விரும்பிய கல்லுாரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.உடல்நிலை: விரய சனி மருத்துவ செலவுகளை உண்டாக்குவார் என்றாலும், ருண ரோக ஸ்தானத்தை சனி பகவானே பார்ப்பதால் பரம்பரை நோய், தொற்றுநோய் என்று அவதிப்பட்டு வந்த நிலை மாறும். தலை, முகம், மூளை, எலும்பு, முடி, பற்களில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உங்களுக்கிருந்த நோய்கள் மருத்துவத்திற்கு கட்டுப்படும். ஆரோக்கியமாக நடைபோடமுடியும்குடும்பம்: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள், பிரச்னைகள் விலகும். தம்பதிக்குள் இணக்கமான நிலை இருக்கும். தன்னுடைய குடும்பம் தன்னுடைய பிள்ளைகள் என்ற அக்கறையுடன் செயல்படுவீர்கள். புதிய இடம், வீடு, வாகனம், பிள்ளைகளின் மேற்கல்வி, குடும்பத்தில் சுப நிகழ்ச்சி என்று பணம் செலவாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். நீண்டகால கனவுகள் நனவாகும்.பரிகாரம்: திருவாலங்காடு காளியை வழிபட வாழ்க்கை வளமாகும்கார்த்திகை: நல்ல காலம் வந்தாச்சுஆத்மக்காரகன் சூரியன் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1ம் பாதமான மேஷத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும், 2,3,4ம் பாதமான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர். பிறக்கும் பராபவ ஆண்டில் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். வருமானம் அதிகரிக்கும், வசதி வாய்ப்புகள் உருவாகும். 2,3,4ம் பாதத்தினருக்கு இதுவரை இருந்த நெருக்கடிகள் நீங்கும். வேலையில், வாழ்க்கையில், தொழிலில் முன்னேற்றமான நிலை இருக்கும். வருமானம் அதிகரிக்கும், குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும்.சனி சஞ்சாரம்: கார்த்திகை 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு விரய சனியாக சஞ்சரிப்பதால் செலவு அதிகரிக்கும். வேலைக்காக வெளிநாடு செல்வதற்கு மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் வகையிலும் மருத்துவத்திற்காகவும் கையிருப்பு கரையும். 2,3,4ம் பாதத்தினருக்கு வேலை, தொழில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும்.ராகு - கேது சஞ்சாரம்: 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, நவ. 13 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு, பணப்புழக்கத்தை அதிகரிப்பார், விருப்பங்களைப் பூர்த்தியாக்குவார். தைரியமாக நடைபோட வைப்பார். வியாபாரம் தொழிலில் லாபத்தை அதிகரிப்பார். பொருளாதார நிலையை உயர்த்துவார். 2,3,4ம் பாதத்தினருக்கு,  நவ. 13 முதல் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார், எதிர்பார்த்த முன்னேற்றத்தை உண்டாக்குவார், தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரிப்பார்.குரு சஞ்சாரம்: 2026 மே 26 வரை மிதுனத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 26 முதல் கடகத்தில் சஞ்சரிக்கிறார். அக். 20 முதல் அதிசாரமாக சிம்மத்திற்கு செல்பவர், 2027 பிப். 13 முதல் மீண்டும் கடகத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் 1 ம் பாதத்தினருக்கு வாழ்க்கை வளமாகும். குடும்பம், தொழில் முன்னேற்றமடையும், சுப நிகழ்ச்சி நடந்தேறும். விரய சனியின் பாதிப்புகள் குறையும். 2,3,4ம் பாதத்தினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும், பொன் பொருள் சேரும், பழைய கடன்கள் அடையும், குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும், சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும்.சூரிய சஞ்சாரம்: 1ம் பாதத்தினருக்கு, ஆனி, புரட்டாசி, தை, மாசி மாதங்களிலும், 2,3,4ம் பாதத்தினருக்கு, ஆடி, ஐப்பசி, மாசி, பங்குனி மாதங்களிலும் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன் எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார், சோர்ந்து கிடந்தவர்களையும் சுறு சுறுப்பாக செயல்பட வைப்பார், வீரத்தையும் வேகத்தையும் அளிப்பார். நோய் நொடி வம்பு வழக்கு என்ற நிலைகளில் இருந்து விடுவிப்பார். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சியை வெற்றியாக்குவார், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றத்தையும், எதிர்பார்த்த பதவி உயர்வையும் வழங்குவார், வியாபாரம் தொழிலில் லாபத்தை உண்டாக்குவார், பணவரவை ஏற்படுத்துவார், நிம்மதியையும் சந்தோஷத்தையும் அதிகரிப்பார்.பொதுப்பலன்: பராபவ ஆண்டு உங்கள் வாழ்வில் நன்மைகள் காணும் ஆண்டாகவே இருக்கும், உங்களுக்கிருந்த நெருக்கடிகள் நீங்கும், நினைத்த காரியங்கள் நடந்தேறும், யோக வாசல் திறக்கும், பொன்னும் பொருளும் சேரும், படிப்பு, வேலை, திருமணம், குழந்தை, சொத்து, சுகம் என்ற கனவுகள் நனவாகும், அரசு பணியில் இருப்பவர்களுக்கும், அரசியல் வாதிகளுக்கும் எதிர்பார்த்த இடம் கிடைக்கும்.தொழில்: தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் தடைகள் விலகும், நஷ்டத்தில் இயங்கிவந்த தொழில்களும் லாபமடையும், சிலர் புதியதாக தொழில் தொடங்குவீர். இன்டஸ்ட்ரீஸ், ஹார்ட்வேர், ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர், அலைபேசி, சினிமா, சின்னத்திரை, யூட்யூப், பங்கு வர்த்தகம், ஆடை ஆபரணம் தொழில்கள் வளர்ச்சி அடையும்.பணியாளர்கள்: வேலையில் இருந்த பயமும் நெருக்கடியும் நீங்கும். உங்கள் திறமைக்கும் தகுதிக்கும் உரிய மரியாதை கிடைக்கும். நிர்வாகம் உங்களைப் புரிந்து கொள்ளும். வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு வேலை மீதிருந்த பயம் விலகும். அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தள்ளிப்போன பதவி உயர்வு கிடைக்கும்.பெண்கள்: தொடர்ந்து நெருக்கடிகளை சந்தித்து வந்தவர்களுக்கு பராபவ ஆண்டு யோகமான ஆண்டாக இருக்கும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும், சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். கணவருடன் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். இணக்கமான நிலை ஏற்படும். உடல்நிலை மனநிலை சீராகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பொன் பொருள் சேரும்.கல்வி: படிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லுாரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். சிலர் வெளி நாடு, வெளி மாநிலம் என்றும் மேற்கல்விக்காக செல்வீர்கள்.உடல்நிலை: பரம்பரை நோய், தொற்றுநோய், விபத்து என்று மருத்துவ மனைக்கு சென்று வந்தவர்களுக்கு பராபவ ஆண்டு ஆரோக்கியமாக நடைபோடக்கூடிய ஆண்டாகும்.  நோய்கள் மருத்துவத்திற்கு கட்டுப்படும். மருத்துவ செலவு குறையும். குடும்பம்: குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். வீடு, வாகனம், சேமிப்பு என்று வசதி அதிகரிக்கும், புதிய வாய்ப்புகள் தேடிவரும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். உறவினர்கள் ஆச்சரியப்படும் வகையில் உங்கள் நிலை உயரும். பிள்ளைகளுக்கு உயர்கல்வி, திருமணம் என்ற முயற்சி வெற்றியாகும்.பரிகாரம்: சூரியனார் கோவில் சிவசூரியனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும். 

ரிஷபம்: கார்த்திகை: நல்ல காலம் வந்தாச்சுஆத்மக்காரகன் சூரியன் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1ம் பாதமான மேஷத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும், 2,3,4ம் பாதமான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர். பிறக்கும் பராபவ ஆண்டில் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். வருமானம் அதிகரிக்கும், வசதி வாய்ப்புகள் உருவாகும். 2,3,4ம் பாதத்தினருக்கு இதுவரை இருந்த நெருக்கடிகள் நீங்கும். வேலையில், வாழ்க்கையில், தொழிலில் முன்னேற்றமான நிலை இருக்கும். வருமானம் அதிகரிக்கும், குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும்.சனி சஞ்சாரம்: கார்த்திகை 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு விரய சனியாக சஞ்சரிப்பதால் செலவு அதிகரிக்கும். வேலைக்காக வெளிநாடு செல்வதற்கு மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் வகையிலும் மருத்துவத்திற்காகவும் கையிருப்பு கரையும். 2,3,4ம் பாதத்தினருக்கு வேலை, தொழில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும்.ராகு - கேது சஞ்சாரம்: 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, நவ. 13 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு, பணப்புழக்கத்தை அதிகரிப்பார், விருப்பங்களைப் பூர்த்தியாக்குவார். தைரியமாக நடைபோட வைப்பார். வியாபாரம் தொழிலில் லாபத்தை அதிகரிப்பார். பொருளாதார நிலையை உயர்த்துவார். 2,3,4ம் பாதத்தினருக்கு,  நவ. 13 முதல் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார், எதிர்பார்த்த முன்னேற்றத்தை உண்டாக்குவார், தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரிப்பார்.குரு சஞ்சாரம்: 2026 மே 26 வரை மிதுனத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 26 முதல் கடகத்தில் சஞ்சரிக்கிறார். அக். 20 முதல் அதிசாரமாக சிம்மத்திற்கு செல்பவர், 2027 பிப். 13 முதல் மீண்டும் கடகத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் 1 ம் பாதத்தினருக்கு வாழ்க்கை வளமாகும். குடும்பம், தொழில் முன்னேற்றமடையும், சுப நிகழ்ச்சி நடந்தேறும். விரய சனியின் பாதிப்புகள் குறையும். 2,3,4ம் பாதத்தினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும், பொன் பொருள் சேரும், பழைய கடன்கள் அடையும், குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும், சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும்.சூரிய சஞ்சாரம்: 1ம் பாதத்தினருக்கு, ஆனி, புரட்டாசி, தை, மாசி மாதங்களிலும், 2,3,4ம் பாதத்தினருக்கு, ஆடி, ஐப்பசி, மாசி, பங்குனி மாதங்களிலும் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன் எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார், சோர்ந்து கிடந்தவர்களையும் சுறு சுறுப்பாக செயல்பட வைப்பார், வீரத்தையும் வேகத்தையும் அளிப்பார். நோய் நொடி வம்பு வழக்கு என்ற நிலைகளில் இருந்து விடுவிப்பார். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சியை வெற்றியாக்குவார், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றத்தையும், எதிர்பார்த்த பதவி உயர்வையும் வழங்குவார், வியாபாரம் தொழிலில் லாபத்தை உண்டாக்குவார், பணவரவை ஏற்படுத்துவார், நிம்மதியையும் சந்தோஷத்தையும் அதிகரிப்பார்.பொதுப்பலன்: பராபவ ஆண்டு உங்கள் வாழ்வில் நன்மைகள் காணும் ஆண்டாகவே இருக்கும், உங்களுக்கிருந்த நெருக்கடிகள் நீங்கும், நினைத்த காரியங்கள் நடந்தேறும், யோக வாசல் திறக்கும், பொன்னும் பொருளும் சேரும், படிப்பு, வேலை, திருமணம், குழந்தை, சொத்து, சுகம் என்ற கனவுகள் நனவாகும், அரசு பணியில் இருப்பவர்களுக்கும், அரசியல் வாதிகளுக்கும் எதிர்பார்த்த இடம் கிடைக்கும்.தொழில்: தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் தடைகள் விலகும், நஷ்டத்தில் இயங்கிவந்த தொழில்களும் லாபமடையும், சிலர் புதியதாக தொழில் தொடங்குவீர். இன்டஸ்ட்ரீஸ், ஹார்ட்வேர், ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர், அலைபேசி, சினிமா, சின்னத்திரை, யூட்யூப், பங்கு வர்த்தகம், ஆடை ஆபரணம் தொழில்கள் வளர்ச்சி அடையும்.பணியாளர்கள்: வேலையில் இருந்த பயமும் நெருக்கடியும் நீங்கும். உங்கள் திறமைக்கும் தகுதிக்கும் உரிய மரியாதை கிடைக்கும். நிர்வாகம் உங்களைப் புரிந்து கொள்ளும். வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு வேலை மீதிருந்த பயம் விலகும். அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தள்ளிப்போன பதவி உயர்வு கிடைக்கும்.பெண்கள்: தொடர்ந்து நெருக்கடிகளை சந்தித்து வந்தவர்களுக்கு பராபவ ஆண்டு யோகமான ஆண்டாக இருக்கும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும், சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். கணவருடன் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். இணக்கமான நிலை ஏற்படும். உடல்நிலை மனநிலை சீராகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பொன் பொருள் சேரும்.கல்வி: படிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லுாரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். சிலர் வெளி நாடு, வெளி மாநிலம் என்றும் மேற்கல்விக்காக செல்வீர்கள்.உடல்நிலை: பரம்பரை நோய், தொற்றுநோய், விபத்து என்று மருத்துவ மனைக்கு சென்று வந்தவர்களுக்கு பராபவ ஆண்டு ஆரோக்கியமாக நடைபோடக்கூடிய ஆண்டாகும்.  நோய்கள் மருத்துவத்திற்கு கட்டுப்படும். மருத்துவ செலவு குறையும். குடும்பம்: குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். வீடு, வாகனம், சேமிப்பு என்று வசதி அதிகரிக்கும், புதிய வாய்ப்புகள் தேடிவரும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். உறவினர்கள் ஆச்சரியப்படும் வகையில் உங்கள் நிலை உயரும். பிள்ளைகளுக்கு உயர்கல்வி, திருமணம் என்ற முயற்சி வெற்றியாகும்.பரிகாரம்: சூரியனார் கோவில் சிவசூரியனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும். ரோகிணி: யோகமான காலம் இதுமனோகாரகன் சந்திரன், அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் பராபவ ஆண்டு மிக யோகமான காலமாக இருக்கும். இதுவரை கனவாகவே இருந்த ஒவ்வொன்றும் நனவாகும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் எல்லாம் நீங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். சனி சஞ்சாரம்: லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானால் தொட்டதெல்லாம் பொன்னாகும். நினைத்ததெல்லாம் நடந்தேறும். முடங்கிய தொழில்கள் செயல்பட ஆரம்பிக்கும். முயற்சிக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். வேலையில் ஏற்பட்ட பயம் போகும். எதிர்பார்த்த உயர்வு ஏற்படும். உத்தியோகத்தில் தோன்றிய பிரச்னைகள் முடிவிற்குவரும். வரவேண்டிய பணம் வரும். சேமிப்பு உயரும்.ராகு - கேது சஞ்சாரம்: நவ. 13 வரை ஜீவன ஸ்தானத்தில் ராகு, சுக ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும். வேலைபளு கூடும். செய்துவரும் தொழில் பார்த்துவரும் உத்தியோகத்தில் நெருக்கடி இருக்கும் என்றாலும், நவ. 13 முதல் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவாலும், சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவாலும் உங்களுக்கிருந்த நெருக்கடிகள் நீங்கும், எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். தைரியமும் தன்னம்பிக்கயும் அதிகரிக்கும், பெரியோர் ஆதரவு கிடைக்கும்.குரு சஞ்சாரம்: 2026 மே 26 வரை மிதுனத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 26 முதல் கடகத்தில் சஞ்சரிக்கிறார், அக். 20 முதல் அதிசாரமாக சிம்மத்திற்கு செல்பவர் 2027 பிப். 13 முதல் மீண்டும் கடகத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும், கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும், பொன் பொருள் சேரும், பழைய கடன்கள் அடையும், திருமண வயதினர் மணமேடையில் ஏறுவர், சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். புதிய இடம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும்.சூரிய சஞ்சாரம்: ஆடி, ஐப்பசி, மாசி, பங்குனி மாதங்களில் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கிறார் சூரியன். இக்காலத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும் வெற்றியாக்குவார், தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரிப்பார். வேகத்தையும் விவேகத்தையும் வழங்குவார், உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகளை இல்லாமல் செய்வார், வம்பு வழக்கு என்று நீதிமன்றங்களுக்கு சென்று வந்தவர்களுக்கு வெற்றியை உண்டாக்குவார். வேலைக்காக முயற்சி செய்பவர்களுடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வை வழங்குவார், வியாபாரம் தொழிலில் லாபத்தை அதிகரிப்பார், அரசியல் வாதிகள் செல்வாக்கை உயர்த்துவார். சிலருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும்படி செய்வார். எதிர்பார்த்த பதவியில் அமர வைப்பார். பொதுப்பலன்: பராபவ ஆண்டில் உங்களுக்கிருந்த நெருக்கடிகள், போராட்டங்கள் விலகும். பெரியோர், உறவினர் ஆதரவு உங்களை வெற்றிநடை போடவைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். கடன் வாங்கியாவது வீடு, நிலம் என்று வாங்குவீர்கள். பொன் பொருள் சேரும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.தொழில்: தொழில் காரகனான சனி பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செய்துவரும் தொழில் லாபம்தரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வாகன உற்பத்தி, ஸ்பேர் பார்ட்ஸ், இண்டஸ்ட்ரீஸ், ஹார்ட்வேர், ஸ்டேஷனரி, அழகு சாதனம், நவீன சாதனம் தயாரிப்பு, கம்ப்யூட்டர், எலெக்ட்ரானிக்ஸ், சினிமா, சின்னத்திரை, பங்கு வர்த்தகம், ஆடை ஆபரணம் தொழில் முன்னேற்றமடையும்.பணியாளர்கள்: பெரு நிறுவனங்களில் பணியாற்றி வருபவர்களுக்கு ஆட்குறைப்பின் காரணமாக தங்களுடைய வேலைப் பறிபோய்விடுமோ என்று பயந்து கொண்டிருந்த நிலைமாறும். உங்கள் திறமையை நிர்வாகம் புரிந்து கொள்ளும். வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு நிம்மதியான நிலை உண்டாகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.பெண்கள்: லாப ஸ்தானத்தில் சனி பகவான், குடும்ப ஸ்தானத்தில் குரு சஞ்சரிக்கும் நிலையில் பராபவ ஆண்டு பிறப்பதால் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும், குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும், ஒவ்வொரு நாளும் போராட்டமாக இருந்த நிலைமாறும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கும், பிரிந்தவர்களுக்கும் மறுமணத்திற்குரிய வாய்ப்புகள் உருவாகும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும், வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும், கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும், சிலருக்கு புதிய நட்புகள் வழியே பெயர் கெடுவதற்கு வாய்ப்பிருப்பதால் பழக்கத்தில் எச்சரிக்கை அவசியம், எதிர்பாலினரை ஓரடி விலக்கி வைப்பது நன்மையாகும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும்.கல்வி: குரு சஞ்சாரமும் பார்வைகளும் சாதகமாக இருப்பதால் படிப்பில் அக்கறை உண்டாகும். பொதுத்தேர்வில் வெற்றி கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும். சிலர் உயர் கல்விக்காக வெளிநாடு, வெளிமாநிலம் என்றும் செல்வீர்கள்.உடல்நிலை: ஆரோக்கியத்தில் ஏதாகிலும் ஒரு குறைபாடு, அதனால் பார்க்கும் வேலையில்கூட கவனம் செலுத்த முடியவில்லை டாக்டர்... டாக்டர் என்று பார்த்தும் உடல்நிலை சரியாகவில்லை என்று வருத்தப்பட்டு வந்தவர்களின் கவலை நீங்கும். பராபவ ஆண்டில் நோய்கள் மருத்துவத்திற்கு கட்டுப்படும். மனதில் நிம்மதி உண்டாகும். ஆரோக்கியமாக நடைபோடுவீர்கள்.குடும்பம்: சனி பகவானால் லாபம், குரு பகவானால் முன்னேற்றம், கேதுவால் தைரியம் தன்னம்பிக்கை உண்டாக இருப்பதால் குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்குவரும். நீண்டநாள் கனவு நனவாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். சிலர் சொந்த வீட்டில் பால் காய்ச்சுவீர்கள். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட இடைவெளி விலகி ஒருவரை ஒருவர் ஆலோசித்து செயல்படும் நிலை உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும்.  வீட்டில் மங்கல ஒசை கேட்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.பரிகாரம்: திங்களூர் கைலாச நாதரை வழிபட மனம் தெளிவாகும். வாழ்க்கை வளமாகும். மிருகசீரிடம்: உழைப்பால் முன்னேறுவீர்கள்தைரிய, வீரிய, பராக்கிரமக்காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2ம் பாதங்களான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 3,4ம் பாதங்களான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர். பிறக்கும் பராபவ ஆண்டில் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும், பொன்னும் பொருளும் சேரும், புகழும் பெருமையும் உண்டாகும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொழிலில் அக்கறை உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்பு கூடும். வேலைப்பளு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். வருமானம் கூடும். வீடு, வாகனம், ஆடை ஆபரணம் என்ற கனவு நனவாகும்.சனி சஞ்சாரம்: மிருகசீரிடம் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு லாப சனியாக சஞ்சரிப்பவர் வியாபாரம் தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார், வேலையில் உயர்வையும் நிம்மதியையும் உண்டாக்குவார், வசதி வாய்ப்புகளையும், பணப்புழக்கத்தையும் அதிகரிப்பார். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜீவன சனியாக சஞ்சரிப்பவர் வேலையில் நியாயமாக நடந்து கொள்பவர்களை முன்னேற்றப்பாதையில் நடைபோட வைப்பார், தவறு செய்பவர்களுக்கும் வேலையில் அக்கறை இல்லாமல் பொறுப்பற்றத்தனமாய் இருப்பவர்களுக்கும், தவறு செய்பவர்களுக்கும் மெமோ இடைநீக்கம் என்று தண்டனை அளிப்பார். சுய தொழில் செய்பவர்களுக்கு உழைப்பால் முன்னேற்றத்தை உண்டாக்குவார்.ராகு – கேது சஞ்சாரம்: 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ. 13 வரையிலும், 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ. 13 முதல் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது, முயற்சிகளை வெற்றியாக்குவார், தைரியமாகவும் தன்னம்பிக்கையாகவும் நடைபோட வைப்பார். செல்வாக்கை உயர்த்துவார், தொழிற்கூடங்கள் நடத்தி வருவோருக்கு பணியாளர்கள் ஒத்துழைப்பையும் லாபத்தையும் அதிகரிப்பார், நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை உண்டாக்குவார்.குரு சஞ்சாரம்: 2026 மே 26 வரை மிதுனத்தில் சஞ்சரிக்கும் குரு மே 26 முதல் கடகத்தில் சஞ்சரிக்கிறார், அக். 20 முதல் அதிசாரமாக சிம்மத்திற்கு செல்பவர் 2027 பிப். 13 முதல் மீண்டும் கடகத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். பழைய கடன்கள் அடைபடும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பொன் பொருள் சேரும். திருமண வயதினருக்கு வரன் அமையும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். புதிய இடம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தடைபட்ட வேலைகள் முடிவிற்குவரும், பெரியோர் ஆதரவு உண்டாகும். திருமண வயதினரின் கனவு நனவாகும். ஜீவன சனியின் பாதிப்புகள் தீரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். செய்துவரும் தொழில் லாபம் தரும்.சூரிய சஞ்சாரம்: 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஆடி, ஐப்பசி, மாசி, பங்குனி மாதங்களிலும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, ஆவணி, கார்த்திகை, பங்குனி, சித்திரை மாதங்களிலும் உங்கள் ராசிக்கு 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன் தன்னம்பிக்கையோடு செயல்பட வைப்பார். எடுத்த வேலைகளை முடிக்க முடியும். நினைத்ததை சாதிக்க முடியும். எதிர்ப்பு போட்டி வம்பு வழக்கு என்பதெல்லாம் இல்லாமல் போகும். அரசு வழி முயற்சிகள் சாதகமாகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். வேலைக்காக மேற்கோள்ளும் முயற்சி வெற்றியாகும். புதிய தொழில் தொடங்க எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் விரும்பிய இடத்திற்கு மாற்றமும் ஏற்படும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும் சிலருக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும்.பொதுப்பலன்: பராபவ ஆண்டு முன்னேற்றமான ஆண்டாக இருக்கும், எந்தவொரு வேலையும் நடக்கவில்லை, எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை என்ற நிலை மாறும், திட்டமிட்டும் சுறுசுறுப்பாகவும் செயல்படுவோருக்கு வருமானம் அதிகரிக்கும். சொந்த வீடு வாகனம் என்ற கனவு நனவாகும், குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும், வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.தொழில்: செய்துவரும் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும், எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். விவசாயம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், உணவகம், கேட்டரிங், ஆடை, ஆபரணம் மருந்தகம், கெமிக்கல், பெட்ரோல், நிதிநிறுவனம், ஷேர் மார்க்கெட் தொழில்கள் லாபமடையும், மருத்துவர்கள், காவல் துறையினர், ஆசிரியர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் முன்னேற்றமடைவர்.பணியாளர்கள்: பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமையை உணருவார்கள். வேலையில் அக்கறை உடையவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவும் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்கள் மேல் அதிகாரியின் ஆலோசனையின்படி செயல்படுவது நன்மையாகும். அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவோருக்கு மெமோ, இடைநீக்கம் என்ற நிலை உருவாகலாம் என்பதால் எச்சரிக்கை அவசியம்.பெண்கள்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் பொறுப்புணர்ந்து செயல்படுவது நன்மையாகும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கு மறுமணம் நடந்தேறும். சிலருக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும். கணவருடன் இணக்கமான நிலை இருக்கும். பொன் பொருள் சேரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.கல்வி: உயர் கல்வி கனவு நனவாகும், சட்டம், மருத்துவம், பொறியியல் படிக்க வேண்டும் என்ற விருப்பம் நிறைவேறும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலை: ஆரோக்கியத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் விலகும், நீண்ட நாட்களாக சங்கடப்படுத்தி வந்த நோய்கள் மருத்துவத்தால் குணமாகும். மனக்குழப்பம் விலகி தெளிவு பிறக்கும்.  ஆரோக்கியமாக நடைபோட முடியும்.குடும்பம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வீர்கள். சொந்த வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். கையில் பணம் புழங்கும், சேமிப்பு உயரும் உதவி என்று உங்களைத்தேடி வருபவர்களுக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். பரிகாரம்: அங்காள பரமேஸ்வரியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

மிதுனம்: மிருகசீரிடம்: உழைப்பால் முன்னேறுவீர்கள்தைரிய, வீரிய, பராக்கிரமக்காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2ம் பாதங்களான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 3,4ம் பாதங்களான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர். பிறக்கும் பராபவ ஆண்டில் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும், பொன்னும் பொருளும் சேரும், புகழும் பெருமையும் உண்டாகும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொழிலில் அக்கறை உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்பு கூடும். வேலைப்பளு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். வருமானம் கூடும். வீடு, வாகனம், ஆடை ஆபரணம் என்ற கனவு நனவாகும்.சனி சஞ்சாரம்: மிருகசீரிடம் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு லாப சனியாக சஞ்சரிப்பவர் வியாபாரம் தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார், வேலையில் உயர்வையும் நிம்மதியையும் உண்டாக்குவார், வசதி வாய்ப்புகளையும், பணப்புழக்கத்தையும் அதிகரிப்பார். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜீவன சனியாக சஞ்சரிப்பவர் வேலையில் நியாயமாக நடந்து கொள்பவர்களை முன்னேற்றப்பாதையில் நடைபோட வைப்பார், தவறு செய்பவர்களுக்கும் வேலையில் அக்கறை இல்லாமல் பொறுப்பற்றத்தனமாய் இருப்பவர்களுக்கும், தவறு செய்பவர்களுக்கும் மெமோ இடைநீக்கம் என்று தண்டனை அளிப்பார். சுய தொழில் செய்பவர்களுக்கு உழைப்பால் முன்னேற்றத்தை உண்டாக்குவார்.ராகு – கேது சஞ்சாரம்: 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ. 13 வரையிலும், 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ. 13 முதல் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது, முயற்சிகளை வெற்றியாக்குவார், தைரியமாகவும் தன்னம்பிக்கையாகவும் நடைபோட வைப்பார். செல்வாக்கை உயர்த்துவார், தொழிற்கூடங்கள் நடத்தி வருவோருக்கு பணியாளர்கள் ஒத்துழைப்பையும் லாபத்தையும் அதிகரிப்பார், நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை உண்டாக்குவார்.குரு சஞ்சாரம்: 2026 மே 26 வரை மிதுனத்தில் சஞ்சரிக்கும் குரு மே 26 முதல் கடகத்தில் சஞ்சரிக்கிறார், அக். 20 முதல் அதிசாரமாக சிம்மத்திற்கு செல்பவர் 2027 பிப். 13 முதல் மீண்டும் கடகத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். பழைய கடன்கள் அடைபடும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பொன் பொருள் சேரும். திருமண வயதினருக்கு வரன் அமையும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். புதிய இடம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தடைபட்ட வேலைகள் முடிவிற்குவரும், பெரியோர் ஆதரவு உண்டாகும். திருமண வயதினரின் கனவு நனவாகும். ஜீவன சனியின் பாதிப்புகள் தீரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். செய்துவரும் தொழில் லாபம் தரும்.சூரிய சஞ்சாரம்: 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஆடி, ஐப்பசி, மாசி, பங்குனி மாதங்களிலும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, ஆவணி, கார்த்திகை, பங்குனி, சித்திரை மாதங்களிலும் உங்கள் ராசிக்கு 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன் தன்னம்பிக்கையோடு செயல்பட வைப்பார். எடுத்த வேலைகளை முடிக்க முடியும். நினைத்ததை சாதிக்க முடியும். எதிர்ப்பு போட்டி வம்பு வழக்கு என்பதெல்லாம் இல்லாமல் போகும். அரசு வழி முயற்சிகள் சாதகமாகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். வேலைக்காக மேற்கோள்ளும் முயற்சி வெற்றியாகும். புதிய தொழில் தொடங்க எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் விரும்பிய இடத்திற்கு மாற்றமும் ஏற்படும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும் சிலருக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும்.பொதுப்பலன்: பராபவ ஆண்டு முன்னேற்றமான ஆண்டாக இருக்கும், எந்தவொரு வேலையும் நடக்கவில்லை, எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை என்ற நிலை மாறும், திட்டமிட்டும் சுறுசுறுப்பாகவும் செயல்படுவோருக்கு வருமானம் அதிகரிக்கும். சொந்த வீடு வாகனம் என்ற கனவு நனவாகும், குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும், வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.தொழில்: செய்துவரும் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும், எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். விவசாயம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், உணவகம், கேட்டரிங், ஆடை, ஆபரணம் மருந்தகம், கெமிக்கல், பெட்ரோல், நிதிநிறுவனம், ஷேர் மார்க்கெட் தொழில்கள் லாபமடையும், மருத்துவர்கள், காவல் துறையினர், ஆசிரியர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் முன்னேற்றமடைவர்.பணியாளர்கள்: பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமையை உணருவார்கள். வேலையில் அக்கறை உடையவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவும் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்கள் மேல் அதிகாரியின் ஆலோசனையின்படி செயல்படுவது நன்மையாகும். அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவோருக்கு மெமோ, இடைநீக்கம் என்ற நிலை உருவாகலாம் என்பதால் எச்சரிக்கை அவசியம்.பெண்கள்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் பொறுப்புணர்ந்து செயல்படுவது நன்மையாகும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கு மறுமணம் நடந்தேறும். சிலருக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும். கணவருடன் இணக்கமான நிலை இருக்கும். பொன் பொருள் சேரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.கல்வி: உயர் கல்வி கனவு நனவாகும், சட்டம், மருத்துவம், பொறியியல் படிக்க வேண்டும் என்ற விருப்பம் நிறைவேறும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலை: ஆரோக்கியத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் விலகும், நீண்ட நாட்களாக சங்கடப்படுத்தி வந்த நோய்கள் மருத்துவத்தால் குணமாகும். மனக்குழப்பம் விலகி தெளிவு பிறக்கும்.  ஆரோக்கியமாக நடைபோட முடியும்.குடும்பம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வீர்கள். சொந்த வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். கையில் பணம் புழங்கும், சேமிப்பு உயரும் உதவி என்று உங்களைத்தேடி வருபவர்களுக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். பரிகாரம்: அங்காள பரமேஸ்வரியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.திருவாதிரை: முயற்சி வெற்றியாகும்வித்யா காரகனான புதன், யோகக்காரகனான ராகு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் பராபவ ஆண்டு முயற்சியாலும் உழைப்பாலும் வெற்றி அடையக்கூடிய ஆண்டாக இருக்கும். வசதி, வாய்ப்பு, பதவி, சொத்து சுகம் என்ற தேடல் அதிகரிக்கும். விரும்பியதை அடைந்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுவீர்கள். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் பொறுப்பு கூடும், குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரிக்கும்.சனி சஞ்சாரம்: ஆண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு 10ம் இடமான மீனத்தில் ஜீவன சனியாக சஞ்சரிப்பதால் வேலைபளு கூடும். எந்த ஒன்றையும் எளிதாக அடைந்து வந்த நிலைமாறும். உத்தியோகத்தில் தவறு செய்பவர்கள் மெமோ, இடைநீக்கம், பதவி உயர்வில் தடை என்ற நிலைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். செய்துவரும் தொழிலில் முயற்சிக்கும் முதலீட்டிற்கும் ஏற்ற ஆதாயத்தையே காண முடியும், பெரிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்த பொருள்களுக்குரிய பணத்தை வாங்குவதற்கு அலைய வேண்டியதாக இருக்கும்.ராகு – கேது சஞ்சாரம்: நவ. 13 வரையில் பாக்ய ஸ்தானத்தில் ராகுவும், சகாய ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் அதுவரை செல்வாக்கோடு நடைபோடுவீர்கள், பெரியோர் ஆதரவும் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். நவ.13 முதல் கேது, தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்திலும், ராகு அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் அனைத்திலும் நிதானமும் கவனமும் தேவைப்படும்.குரு சஞ்சாரம்: 2026 மே 26 வரை மிதுனத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 26 முதல் கடகத்தில் சஞ்சரிக்கிறார், அக். 20 முதல் அதிசாரமாக சிம்மத்திற்கு செல்பவர் 2027. பிப். 13 முதல் மீண்டும் கடகத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் மே 26 வரை அலைச்சல் அதிகரிக்கும், சிலருக்கு இடமாற்றம் ஏற்படும், திருமணம், குழந்தை பாக்யம், சொந்த வீடு என்ற கனவுகள் நனவாகும். மே 26 முதல் உடல்நிலை சீராகும் எதிர்ப்பு விலகும், வழக்கு விவகாரம் சாதகமாகும், மறைந்த செல்வாக்கு வெளிப்படும், தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும், ஜீவன சனியால் ஏற்படும் சங்கடங்கள் விலகும்.சூரிய சஞ்சாரம்: ஒருவருடைய ஜாதகத்தில் ஒரு நேரத்தில் 8 கிரகங்கள் எதிர்மறையாக சஞ்சரித்து ஜாதகருக்கு பாதகமான பலன்களை வழங்கினாலும் அந்த நேரத்தில் ஆத்ம காரகனான சூரியன் 3, 6, 10, 11 ம் இடங்களில் சஞ்சரித்தால் ஒளிமிக்க சூரியன்போல் அந்த ஜாதகரின் வாழ்க்கை இருக்கும். அந்த நிலையில், ஆவணி, கார்த்திகை, பங்குனி, சித்திரை மாதங்கள் உங்கள் வாழ்வில் யோகமான மாதங்களாக இருக்கும். எடுத்த வேலைகள் வெற்றியாகும், நினைத்த காரியங்கள் நடந்தேறும், வேலை, தொழில் முன்னேற்றமடையும், செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும், அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும், அரசுவழி முயற்சிகள் சாதகமாகும், வம்பு வழக்குகள் முடிவிற்கு வரும், வரவேண்டிய பணம் வரும். ஆயிரம் யானைகளுக்கு மத்தியில் ஒரு சிங்கமென வாழக்கூடிய அளவிற்கு வலிமை உண்டாகும்.பொதுப்பலன்: குரு சஞ்சாரம் மற்றும் பார்வைகள், நவ. 13 வரை கேது, நான்கு மாதங்கள் சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதால் பராபவ ஆண்டு உங்களுக்கு யோகமான ஆண்டாக இருக்கும், நீண்டநாள் கனவு நனவாகும், இடம் வீடு வாகனம் என்று சேரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு ஏற்படும்.தொழில்: வியாபாரம் தொழில் புதிய முயற்சிகளில் நிதானம் தேவை, எக்ஸ்போர்ட், பைனான்ஸ், இன்டஸ்ட்ரீஸ், ஐ.டி, ஷேர் மார்க்கெட், வாகன விற்பனை, தொழிற்சாலை, டிராவல்ஸ், பதிப்பகம், கல்வி நிறுவனம், கமிஷன் ஏஜன்சி, சினிமா, சின்னத்திரை, வலைதளம், ஏஐ தொழில்கள் வளர்ச்சி அடையும், மற்ற தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கு முயற்சிக்கேற்ற ஆதாயம் கிடைக்கும்.பணியாளர்கள்: வேலைப்பார்க்கும் இடத்தில் நிதானமும் கவனமும் நேர்மையும் அவசியம், தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்ப்பவர்களுக்கு திறமைக்கேற்ற உயர்வும் சலுகையும் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வும் சலுகைகளும் கிடைக்கும். தற்காலிகப் பணியாளர்கள் சிலருக்கு வேலை நிரந்தரமாகும், வெளிநாட்டில் வேலைப்பார்ப்பவர்களுக்கு வேலையின் மீதிருந்த பயம் போகும்பெண்கள்: உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்று அவரவர் நிலைக்கேற்ப தேவைகள் பூர்த்தியாகும், குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கணவரின் ஆதரவு கிடைக்கும், பிள்ளைகள்மீது அக்கறை கூடும், பொன் பொருள் சேரும், வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும், உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும்.கல்வி: பொதுத்தேர்வு போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லுாரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.உடல்நிலை: வேலைபளுவின் காரணமாக உடல்நிலையில் அவ்வப்போது சிறு சங்கடங்கள் தோன்றக்கூடும், பரம்பரைநோய், பருவநோய் என்று தலைக்காட்டும் என்றாலும் அவை மருத்துவத்திற்கு கட்டுப்படும்.குடும்பம்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும், வீடு, இடம், வாகனம் வாங்கும் கனவு நனவாகும். பொருளாதார நிலை உயரும், பழைய கடன்கள் அடைபடும், வேலையின் காரணமாக  கணவன் ஓரிடம் மனைவி ஒரிடம் என்று வாழ்ந்த நிலைமாறும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும், பிள்ளைகளின் கல்வி, திருமணம் என்ற எண்ணம் பூர்த்தியாகும்.பரிகாரம்: பிரத்தியங்கிராவை வழிபட சங்கடங்கள் விலகும், வாழ்க்கை வளமாகும்.புனர்பூசம்: உழைப்பால் உயர்வுபொன் பொருள் புகழுக்கு காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2,3 ம் பாதங்களான மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும், 4 ம் பாதமான கடக ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திரன் ராசிநாதனாகவும் உள்ளனர். பிறக்கும் பராபவ ஆண்டில் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, உழைப்பிற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். முதலீட்டிற்கேற்ற வருமானம் வரும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். உத்தியோகம், தொழிலில் கவனம் கூடும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு இதுவரை இருந்த போராட்டங்கள் பிரச்சனைகள் எல்லாம் முடிவிற்கு வரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். பொன் பொருள் சேரும். பொருளாதார நிலை உயரும். செல்வாக்கும் சொல்வாக்கும் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.சனி சஞ்சாரம்: புனர்பூசம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜீவன சனியாக சஞ்சரிப்பவர், வியாபாரம் தொழிலில் அக்கறையை அதிகரிப்பார். தவறுக்கு இடம்கொடுக்காமல் செயல்படுபவர்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவார். உழைத்தால்தான் உயர்வு என்ற நிலையை ஏற்படுத்துவார். அதனால் வேலைப்பளு கூடும். உத்தியோகத்தில் தவறு செய்பவர்களுக்கு மெமோ, இடைநீக்கம், பதவி உயர்வில் தடை என்ற நிலைகள் உருவாகும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பாக்ய சனியாக சஞ்சரிப்பவர், சமூகத்தில் செல்வாக்கையும் அந்தஸ்தையும் உயர்த்துவார். நெருக்கடிகளையும் போராட்டங்களையும் சந்தித்து வந்தவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். பட்டம், பதவி, அந்தஸ்து, புகழ், வீடு, மனை, வாசல், வாகனம் என்ற கனவுகளை நனவாக்குவார்.ராகு – கேது சஞ்சாரம்: 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ. 13 வரையில் பாக்ய ராகுவும், சகாய கேதுவும் செல்வம் செல்வாக்கோடு நடைபோட வைப்பார்கள். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார்கள். தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரிப்பார்கள். வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றமான நிலையை உருவாக்குவார்கள். நவ.13 முதல் கேது தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்திலும், ராகு அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் அனைத்திலும் நிதானமும் கவனமும் தேவைப்படும். 4 ம் பாதத்தினருக்கு, நவ. 13 வரை ராகு அஷ்டம ஸ்தானத்திலும், கேது தன குடும்ப வாக்கு ஸ்தானத்திலும் அதன்பிறகு, ராகு சப்தம ஸ்தானத்திலும், கேது ராசிக்குள்ளும் சஞ்சரிப்பதால் சர்ப்ப கிரகங்கள் உங்களுக்கு நிறையவே படிப்பினைகளையும் பாடங்களையும் வழங்குவார்கள் என்பதால் அனைத்திலும் நிதானமாகவும், திட்டமிட்டும் செயல்படுவது நன்மையாகும்.குரு சஞ்சாரம்: 2026 மே 26 வரை மிதுனத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 26 முதல் கடகத்தில் சஞ்சரிக்கிறார், அக். 20 முதல் அதிசாரமாக சிம்மத்திற்கு செல்பவர் 2027 பிப். 13 முதல் மீண்டும் கடகத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 26 வரை அலைச்சல் அதிகரிக்கும், சிலருக்கு இடமாற்றம் ஏற்படும், திருமணம், குழந்தை பாக்யம், சொந்த வீடு என்ற கனவுகள் நனவாகும். மே 26 முதல் குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும், வழக்கு விவகாரம் சாதகமாகும், தொழில், வியாபாரம் முன்னேற்றமடையும், ஜீவன சனியால் ஏற்படும் சங்கடங்கள் விலகும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு இடம், வீடு, வாகனம் என்ற ஆசைகள் நிறைவேறும். உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்று அவரவர் நிலைக்கேற்ப பலன்கள் உண்டாகும். வாழ்வில் நிம்மதி இருக்கும்.சூரிய சஞ்சாரம்: 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, ஆவணி, கார்த்திகை, பங்குனி, சித்திரை மாதங்களிலும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு புரட்டாசி, மார்கழி, சித்திரை, வைகாசி மாதங்களிலும் ஆத்ம காரகனான சூரியன் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிப்பதால்,  வாழ்க்கை வளமாகும், எடுத்த வேலைகள் வெற்றியாகும், நினைத்த காரியங்கள் நடந்தேறும், வேலை, தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றம் இருக்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும், அரசுவழி முயற்சிகள் சாதகமாகும், வம்பு வழக்குகள் முடிவிற்குவரும், வரவேண்டிய பணம் வரும்.பொதுப்பலன்: பராபவ ஆண்டு உங்கள் வாழ்க்கையில் யோகமான ஆண்டாக இருக்கும், தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும், இடம் வீடு வாகனம் என்று சேரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு ஏற்படும்.தொழில்: அலட்சியத்திற்கு இடம் கொடுக்காமல் தொழிலில் கண்ணும் கருத்தமாக இருக்க வேண்டிய காலமிது. புதிய முதலீடு செய்வதற்கு முன் மார்க்கெட் நிலவரம் அறிந்து செயல்படுவது நன்மையாகும். சர்வதேச விவகாரங்கள் உங்கள் தொழிலிலும் எதிரொலிக்கும் என்பதால் உற்பத்தி, விற்பனை இரண்டிலும் திட்டமிட்டு செயல்படுவது அவசியம். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி., ஏ.ஐ., அலைபேசி, ஏற்றுமதி, இறக்குமதி, பங்கு வர்த்தகம், நிதிநிறுவனம், தொழிற்சாலை, ட்ராவல்ஸ், குடிநீர், விவசாயம் சார்ந்த தொழில்கள், ரியல் எஸ்டேட், ஜீவல்லரி, அழகு சாதன பொருட்கள் விற்பனை லாபம் தரும்.பணியாளர்கள்: வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு வேலையின்மீது பயம் இருக்கும். சிலர் சொந்த ஊருக்குத் திரும்பும் நிலையும் உருவாகும். உள்நாட்டில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு வேலைபளு கூடும் என்றாலும் திறமைக்கேற்ற உயர்வும் சலுகையும் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்கள் இக்காலத்தில் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவது அவசியம். வேலையில் சரியாக இருப்பவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வும் சலுகைகளும் கிடைக்கும்.பெண்கள்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். குடும்பத்தினர் ஆதரவால் நீண்டநாள்  கனவுகள் நனவாகும் படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்று அவரவர் வயதிற்கேற்ப தேவைகள் பூர்த்தியாகும், வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். கணவருடன் இணக்கமான நிலை இருக்கும். பிள்ளைகள்மீது அக்கறை கூடும், பொன் பொருள் ஆடை ஆபரணம் சேரும்.கல்வி: மேல்நிலையில் இருந்து உயர் கல்விக்கு செல்வீர்கள். எதிர்பார்த்த கல்லுாரியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.உடல்நிலை: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக மருத்துவ மனைகளுக்கு அடிக்கடி சென்று வந்தவர்களுக்கு நோய்களில் இருந்து விடுதலைக் கிடைக்கும். ஆரோக்யம் சீராகும். விபத்து, பரம்பரைநோய், தொற்றுநோய், பருவநோய் என்று சங்கடப்பட்டு வந்தவர்களுக்கு ஏற்பட்ட பயம் போகும்.குடும்பம்: குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். பண நெருக்கடி நீங்கும், இடம், வீடு, வாகனம் வாங்கும் கனவு நனவாகும். பிள்ளைகளின் கல்வி, திருமணம் என்ற எண்ணம் பூர்த்தியாகும். சிலர் சொந்த வீட்டில் பால் காய்ச்சுவீர்கள்.பரிகாரம்: ஜெகந்நாதரை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். சங்கடங்கள் விலகும். 

கடகம்: புனர்பூசம்: உழைப்பால் உயர்வுபொன் பொருள் புகழுக்கு காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2,3 ம் பாதங்களான மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும், 4 ம் பாதமான கடக ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திரன் ராசிநாதனாகவும் உள்ளனர். பிறக்கும் பராபவ ஆண்டில் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, உழைப்பிற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். முதலீட்டிற்கேற்ற வருமானம் வரும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். உத்தியோகம், தொழிலில் கவனம் கூடும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு இதுவரை இருந்த போராட்டங்கள் பிரச்சனைகள் எல்லாம் முடிவிற்கு வரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். பொன் பொருள் சேரும். பொருளாதார நிலை உயரும். செல்வாக்கும் சொல்வாக்கும் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.சனி சஞ்சாரம்: புனர்பூசம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜீவன சனியாக சஞ்சரிப்பவர், வியாபாரம் தொழிலில் அக்கறையை அதிகரிப்பார். தவறுக்கு இடம்கொடுக்காமல் செயல்படுபவர்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவார். உழைத்தால்தான் உயர்வு என்ற நிலையை ஏற்படுத்துவார். அதனால் வேலைப்பளு கூடும். உத்தியோகத்தில் தவறு செய்பவர்களுக்கு மெமோ, இடைநீக்கம், பதவி உயர்வில் தடை என்ற நிலைகள் உருவாகும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பாக்ய சனியாக சஞ்சரிப்பவர், சமூகத்தில் செல்வாக்கையும் அந்தஸ்தையும் உயர்த்துவார். நெருக்கடிகளையும் போராட்டங்களையும் சந்தித்து வந்தவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். பட்டம், பதவி, அந்தஸ்து, புகழ், வீடு, மனை, வாசல், வாகனம் என்ற கனவுகளை நனவாக்குவார்.ராகு – கேது சஞ்சாரம்: 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ. 13 வரையில் பாக்ய ராகுவும், சகாய கேதுவும் செல்வம் செல்வாக்கோடு நடைபோட வைப்பார்கள். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார்கள். தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரிப்பார்கள். வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றமான நிலையை உருவாக்குவார்கள். நவ.13 முதல் கேது தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்திலும், ராகு அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் அனைத்திலும் நிதானமும் கவனமும் தேவைப்படும். 4 ம் பாதத்தினருக்கு, நவ. 13 வரை ராகு அஷ்டம ஸ்தானத்திலும், கேது தன குடும்ப வாக்கு ஸ்தானத்திலும் அதன்பிறகு, ராகு சப்தம ஸ்தானத்திலும், கேது ராசிக்குள்ளும் சஞ்சரிப்பதால் சர்ப்ப கிரகங்கள் உங்களுக்கு நிறையவே படிப்பினைகளையும் பாடங்களையும் வழங்குவார்கள் என்பதால் அனைத்திலும் நிதானமாகவும், திட்டமிட்டும் செயல்படுவது நன்மையாகும்.குரு சஞ்சாரம்: 2026 மே 26 வரை மிதுனத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 26 முதல் கடகத்தில் சஞ்சரிக்கிறார், அக். 20 முதல் அதிசாரமாக சிம்மத்திற்கு செல்பவர் 2027 பிப். 13 முதல் மீண்டும் கடகத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 26 வரை அலைச்சல் அதிகரிக்கும், சிலருக்கு இடமாற்றம் ஏற்படும், திருமணம், குழந்தை பாக்யம், சொந்த வீடு என்ற கனவுகள் நனவாகும். மே 26 முதல் குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும், வழக்கு விவகாரம் சாதகமாகும், தொழில், வியாபாரம் முன்னேற்றமடையும், ஜீவன சனியால் ஏற்படும் சங்கடங்கள் விலகும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு இடம், வீடு, வாகனம் என்ற ஆசைகள் நிறைவேறும். உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்று அவரவர் நிலைக்கேற்ப பலன்கள் உண்டாகும். வாழ்வில் நிம்மதி இருக்கும்.சூரிய சஞ்சாரம்: 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, ஆவணி, கார்த்திகை, பங்குனி, சித்திரை மாதங்களிலும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு புரட்டாசி, மார்கழி, சித்திரை, வைகாசி மாதங்களிலும் ஆத்ம காரகனான சூரியன் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிப்பதால்,  வாழ்க்கை வளமாகும், எடுத்த வேலைகள் வெற்றியாகும், நினைத்த காரியங்கள் நடந்தேறும், வேலை, தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றம் இருக்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும், அரசுவழி முயற்சிகள் சாதகமாகும், வம்பு வழக்குகள் முடிவிற்குவரும், வரவேண்டிய பணம் வரும்.பொதுப்பலன்: பராபவ ஆண்டு உங்கள் வாழ்க்கையில் யோகமான ஆண்டாக இருக்கும், தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும், இடம் வீடு வாகனம் என்று சேரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு ஏற்படும்.தொழில்: அலட்சியத்திற்கு இடம் கொடுக்காமல் தொழிலில் கண்ணும் கருத்தமாக இருக்க வேண்டிய காலமிது. புதிய முதலீடு செய்வதற்கு முன் மார்க்கெட் நிலவரம் அறிந்து செயல்படுவது நன்மையாகும். சர்வதேச விவகாரங்கள் உங்கள் தொழிலிலும் எதிரொலிக்கும் என்பதால் உற்பத்தி, விற்பனை இரண்டிலும் திட்டமிட்டு செயல்படுவது அவசியம். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி., ஏ.ஐ., அலைபேசி, ஏற்றுமதி, இறக்குமதி, பங்கு வர்த்தகம், நிதிநிறுவனம், தொழிற்சாலை, ட்ராவல்ஸ், குடிநீர், விவசாயம் சார்ந்த தொழில்கள், ரியல் எஸ்டேட், ஜீவல்லரி, அழகு சாதன பொருட்கள் விற்பனை லாபம் தரும்.பணியாளர்கள்: வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு வேலையின்மீது பயம் இருக்கும். சிலர் சொந்த ஊருக்குத் திரும்பும் நிலையும் உருவாகும். உள்நாட்டில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு வேலைபளு கூடும் என்றாலும் திறமைக்கேற்ற உயர்வும் சலுகையும் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்கள் இக்காலத்தில் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவது அவசியம். வேலையில் சரியாக இருப்பவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வும் சலுகைகளும் கிடைக்கும்.பெண்கள்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். குடும்பத்தினர் ஆதரவால் நீண்டநாள்  கனவுகள் நனவாகும் படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்று அவரவர் வயதிற்கேற்ப தேவைகள் பூர்த்தியாகும், வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். கணவருடன் இணக்கமான நிலை இருக்கும். பிள்ளைகள்மீது அக்கறை கூடும், பொன் பொருள் ஆடை ஆபரணம் சேரும்.கல்வி: மேல்நிலையில் இருந்து உயர் கல்விக்கு செல்வீர்கள். எதிர்பார்த்த கல்லுாரியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.உடல்நிலை: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக மருத்துவ மனைகளுக்கு அடிக்கடி சென்று வந்தவர்களுக்கு நோய்களில் இருந்து விடுதலைக் கிடைக்கும். ஆரோக்யம் சீராகும். விபத்து, பரம்பரைநோய், தொற்றுநோய், பருவநோய் என்று சங்கடப்பட்டு வந்தவர்களுக்கு ஏற்பட்ட பயம் போகும்.குடும்பம்: குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். பண நெருக்கடி நீங்கும், இடம், வீடு, வாகனம் வாங்கும் கனவு நனவாகும். பிள்ளைகளின் கல்வி, திருமணம் என்ற எண்ணம் பூர்த்தியாகும். சிலர் சொந்த வீட்டில் பால் காய்ச்சுவீர்கள்.பரிகாரம்: ஜெகந்நாதரை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். சங்கடங்கள் விலகும். பூசம்: நல்லநேரம் வந்தாச்சுமனக்காரகனான சந்திரன், கர்மக்காரகனான சனி அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் பராபவ ஆண்டு மிக யோகமான ஆண்டாகும். இதுவரை பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் நடக்காத வேலைகள் இப்போது நடக்கும். வாழ்க்கை முழுவதும் போராடிக்கொண்டே இருக்க வேண்டியதுதானா? நமக்கு விடிவு காலமே இல்லையா? என்று சங்கடப்பட்டு வந்தவர்களுக்கு இந்த ஆண்டில் எடுத்த வேலையெல்லாம் வெற்றியாகும், நினைத்த காரியமெல்லாம் நடந்தேறும். வாழ்வில் எதுவெல்லாம் கனவாக இருந்ததோ அவையெல்லாம் நனவாக ஆரம்பிக்கும்.சனி சஞ்சாரம்: சனி பகவான் 12 ராசிகளில் சஞ்சரிக்கும் காலங்களில், பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில்தான் ஜாதகருக்கு மிகப்பெரிய யோகத்தை வழங்குவார். காரணம், அவருடைய மூன்று பார்வைகளும் 3,6,11 ம் இடங்களுக்கு கிடைத்து அந்த இடங்களின் வழியாகவும் அவர் நற்பலன்களை வழங்குவதால்தான், பாக்ய சனியால் இந்த ஆண்டில் உங்கள் வாழ்க்கை வளமாகும். தைரியம் கூடும். புதிய சொத்து சேரும். வருமானம் அதிகரிக்கும். பட்டம் பதவி கவுரவம் அந்தஸ்து, சொத்து சுகம் ஆரோக்யம் என்று வாழ்க்கை வளமாகும். சிலர் புதிய தொழில் தொடங்கி லாபம் காண்பீர்கள். அரசியல்வாதிகள் உயர்ந்த இடத்தை எட்டுவீர்கள். ராகு – கேது சஞ்சாரம்: நவ. 13 வரை ராகு அஷ்டம ஸ்தானத்திலும், கேது தன குடும்ப வாக்கு ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் உங்கள் வேலைகளில் நிதானம் வேண்டும், குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதுடன் பண விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். நவ. 13 முதல் ராகு சப்தம ஸ்தானத்திலும், கேது ராசிக்குள்ளும் சஞ்சரிப்பதால் புதியவர்களால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும், ஒரு பக்கம் ஆசை அதிகரித்து அதன் பாதையில் செல்லக்கூடிய நிலையும் மறுபக்கம் அதனால் சங்கடங்கள், பிரச்னைகள் என்ற நிலையும் உண்டாகும். எனவே அனைத்திலும் நிதானமாக யோசித்து செயல்படுவது நன்மையாகும்.குரு சஞ்சாரம்: 2026 மே 26 வரை மிதுனத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 26 முதல் கடகத்தில் சஞ்சரிக்கிறார், அக். 20 முதல் அதிசாரமாக சிம்மத்திற்கு செல்பவர் 2027 பிப். 13 முதல் மீண்டும் கடகத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் மே 26 வரை செலவு அதிகரிக்கும், இடம், வீடு, வாகனம் என்று வாங்குவதால் கையிருப்பு கரையும், நோய்நொடி விலகும், அஷ்டம ராகுவின் பாதிப்புகள் விலகும். மே 26 முதல் உச்ச குருவால் உங்கள் வாழ்க்கை வளமாகும். இளைஞர்களுக்கு உயர்கல்வி கனவு நனவாகும். எதிர்பார்த்த வேலை கிடைக்கும். திருமணம் நடந்தேறும், குழந்தை பாக்யம் உண்டாகும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். புதிய சொத்து சேரும். சேமிப்பு உயரும். சூரிய சஞ்சாரம்: தன்னுடை சஞ்சாரத்தில் மற்ற கிரகங்களை அஸ்தமனம் அடையச்செய்யும் ராஜ கிரகமான சூரியன், 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் செல்வம் செல்வாக்கு அந்தஸ்தோடு நடைபோட வைப்பார். அந்த நிலையில், புரட்டாசி, மார்கழி, சித்திரை, வைகாசி மாதங்களில் சூரியன் உங்களுக்கு நன்மைகளை உண்டாக்குவார். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். தைரியமாக செயல்பட வைப்பார். நோய்நொடிகள், எதிர்ப்பு, வம்பு வழக்குகளில் இருந்து விடுவிப்பார். வேலை, தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். செல்வாக்கு அந்தஸ்தை உயர்த்துவார், அரசுவழி முயற்சிகளை சாதகமாக்குவார்.பொதுப்பலன்: பாக்ய சனி, ஞானக்காரகன் குரு, 120 நாட்கள் சூரியனால் பராபவ ஆண்டு உங்கள் வாழ்க்கையை பசுமையாக்கும் ஆண்டாக இருக்கும். இதுவரை வெறும் கனவாகவே இருந்தவை எல்லாம் இப்போது நனவாகும். பொன் பொருள் வீடு, வாகனம், அந்தஸ்து உங்களை வந்து சேரும். வேலை, தொழில், வருமானம் என்ற கனவுகள் நனவாகும்.தொழில்: தொழிலுக்கு காரகனான சனி பகவான் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன், சகாய, சத்ரு ஜெய, லாப ஸ்தானங்களைப் பார்ப்பதால் செய்துவரும் தொழில் வளர்ச்சி அடையும், புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்ப்பு போட்டி என்ற நிழல் விலகும். வருமானம் உயரும். வருமானக்குறைவாலும், ஆட்கள் பற்றாக்குறையாலும் மூடி வைக்கப்பட்ட தொழில்களும் மீண்டும் புத்துயிர்பெறும். இயந்திரத் தொழிற்சாலை, வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு, வாகன விற்பனை, ஐ.டி., ஏ.ஐ., வெளிநாட்டு வர்த்தகம், ட்ராவல்ஸ்,  குடிநீர் சம்பந்தப்பட்ட தொழில்கள், விவசாயம் சார்ந்த தொழில்கள்,  கால்நடை வளர்ப்பு, பால் வியாபாரம், ஜூவல்லரி தொழில்கள், சட்டம் சார்ந்த தொழில் வளர்ச்சி அடையும். பணியாளர்கள்: வேலையின் மீதிருந்த பயம் போகும். நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு  வேலையில் இருந்த குழப்பம் போகும். நிம்மதி உண்டாகும்.பெண்கள்: போராட்டமும் பிரச்னையாகவுமே இருந்த வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். உடல்நிலை சீராகும். சிலருக்கு திருமணம் நடந்தேறும். குழந்தை பாக்யம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைபட்டு வந்த பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு பொறுப்புகள் தேடிவரும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு ஆதாயம் கூடும். கணவரின் ஆதரவால் உங்கள் தைரியம் கூடும். பொன் பொருள் சேரும். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும்.கல்வி: படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்விக்காக சிலர் வெளிநாடு, வெளிமாநிலம் என்றும் செல்வீர்கள். பொறியியல், சட்டம், மருத்துவக் கனவு நனவாகும்.உடல்நிலை: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். படுக்கையில் இருந்தவர்களும் எழுந்து நடமாடக்கூடிய அளவிற்கு நிலைமாறும். மருத்துவச்செலவுகள் குறையும். ருண ரோக ஸ்தானத்தை ஆயுள்காரகன் பார்ப்பதால் ஆரோக்கியம் சீராகும். சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய அளவிற்கு உடல்நிலை முன்னேற்றமடையும்.குடும்பம்: குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் இருந்த இடம் தெரியாமல் போகும். புதிய இடம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட இடைவெளி விலகும். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பீர்கள். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். பிள்ளைகளின் உயர்கல்வி முயற்சி வெற்றியாகும். வீட்டில் மங்கல ஓசை கேட்கும். பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும். வேண்டுதல் நிறைவேறும்.ஆயில்யம்: நினைத்தது நடக்கும்வித்யா காரகனான புதன், மனக்காரகனான சந்திரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் பராபவ ஆண்டு அதிர்ஷ்டமான ஆண்டாகும். பணவரவில் தடை, உடல்நிலையில் பாதிப்பு, வியாபாரம், தொழிலில் நெருக்கடி, உத்தியோகத்தில் பிரச்னை, குடும்பத்தில் நிம்மதி இல்லாத நிலை என்று சுற்றிச்சுற்றி சங்கடங்களையே அனுபவித்து வந்த உங்களுக்கு இனி, எடுத்த வேலைகள் வெற்றியாகும், நினைத்த காரியங்கள் நடந்தேறும், அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும், மனதில் நிம்மதி உண்டாகும்.சனி சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானமான 9 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கர்மக்காரகன் சனி பகவான் தனது 3,7,10 பார்வைகளால் லாப, சகாய, சத்ரு ஜெய ஸ்தானங்களைப் பார்ப்பதால் உங்கள் வாழ்வில் வசந்தம் வீசும். பொன்னும் பொருளும் புகழும் கூடும், தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும், திட்டமிட்டு வெற்றிக்கோட்டை எட்டுவீர்கள், எதிர்ப்பு, வம்பு, வழக்கு, நோய், நொடி என்பதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். புதிய இடம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். சனி கொடுக்க எவர் தடுப்பார் என்ற வார்த்தைக்குரிய அர்த்தத்தை இப்போது உணர்வீர்கள். அரசியல் வாதிகள் வாழ்க்கையில் இந்த ஆண்டு செல்வாக்கான ஆண்டாக இருக்கும்.ராகு – கேது சஞ்சாரம்: நவ. 13 வரை எட்டாமிடத்தில் ராகு, இரண்டாமிடத்தில் கேது நவ. 13 முதல் ஜென்ம ராசிக்குள் கேது, ஏழாமிடத்தில் ராகு என்று சஞ்சரிப்பதால் இந்த ஆண்டில் சர்ப்ப கிரகங்களால் சங்கடங்களே ஏற்படும். எனவே ஆசைகளை கட்டுப்படுத்திக் கொள்வதும், நிதானமாக செயல்படுவதும் நன்மையாகும். புதியவர்களிடம் ஓரடி விலகியே இருக்கவும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனையை ஏற்று நடப்பதும், அனுசரித்துச் செல்வதும் நன்மையளிக்கும். புதிய முதலீடுகளில் கூடுதல் கவனம் தேவை.குரு சஞ்சாரம்: 2026 மே 26 வரை மிதுனத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 26 முதல் கடகத்தில் சஞ்சரிக்கிறார், அக். 20 முதல் அதிசாரமாக சிம்மத்திற்கு செல்பவர் 2027 பிப். 13 முதல் மீண்டும் கடகத்தில் சஞ்சரிக்கிறார். பொதுவாக, குரு பகவானின் சஞ்சாரங்களைவிட அவர் பார்க்கும் இடங்களும், பார்க்கும் பாப கிரகங்கங்களும் சுபத்துவம் பெறும். இதனால், செலவு ஏற்பட்டாலும் வீடு, வாசல், வாகனம் என்ற தேவைகள் பூர்த்தியாகும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை என்ற கனவுகள் நனவாகும். பட்டம், பதவி என்ற ஆசைகள் பூர்த்தியாகும். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் தொழில் லாபமடையும், பொருளாதார நிலை உயரும்.சூரிய சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு தன குடும்ப வாக்காதிபதியான சூரியனின் சஞ்சார நிலைகள் இந்த ஆண்டில் 120 நாட்கள் வாழ்வை வளமாக்கும். 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் சூரியன் அந்த இடத்திற்குரிய பலன்களை யோகப்பலன்களாக வழங்குவார், மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைகள் எதிர்மறையாகவும் பாதகமாகவும் இருந்தாலும் சூரியனின் 3,6,10,11 ம் இட சஞ்சாரங்கள் உங்களைப் பாதுகாக்கும். இக்காலங்களில் உங்கள் நிலை உயரும். உடல்நிலை சீராகும், அரசுவழி முயற்சிகள் சாதகமாகும், வழக்கு விவகாரங்களில் வெற்றி உண்டாகும், வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். புதிய தொழில் தொடங்குவதற்கு தேவையான அனுமதிகள் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். அந்த நிலையில், புரட்டாசி, மார்கழி, சித்திரை, வைகாசி மாதங்களில் சூரியன் உங்களுக்கு நன்மைகளை உண்டாக்குவார். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார்.பொதுப்பலன்: பராபவ ஆண்டு நினைத்ததை சாதித்துக்கொள்ளும் ஆண்டாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். வாழ்க்கையின் அடிப்படைகள் பூர்த்தியாகும். செல்வம் செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் பிரச்னைகள் முடிவிற்குவரும். எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். பொன் பொருள் பணம் வீடு வாசல் என்று நிலை உண்டாகும்.தொழில்: செய்துவரும் தொழில் முன்னேற்றமடையும். சூழ்நிலையின் காரணமாக மூடிய தொழிற்சாலைகள் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும், எதிர்பார்த்த லாபம் வரும். பால்பண்ணை, நிதி நிறுவனம், எக்ஸ்போர்ட், காலண்டர், டைரி, நோட்டுப்புத்தகம் தயாரிப்பு, செய்தித்தாள், ஐ.டி, ஏ.ஐ துறைகள், வெளிநாட்டு வர்த்தகம், குடிநீர் சம்பந்தப்பட்ட தொழில்கள், மினரல் வாட்டர், ஹார்ட்வேர், ஷேர் மார்க்கெட், சின்னத்திரை, வலைதளம், தனியார் கல்வி நிறுவனங்கள் வளர்ச்சி அடையும். லாபம் தரும்.பணியாளர்கள்: உழைப்பாளர்கள் திறமை வெளிப்படும் ஆண்டாக பராபவ ஆண்டு இருக்கும். வேலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்ப்பவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவு கிடைப்பதுடன் எதிர்பார்த்த சம்பளமும் சலுகைகளும் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு தடைபட்டுவந்த பதவி உயர்வு, கேட்டும் கிடைக்காத இடமாற்றம் இந்த ஆண்டில் கிடைக்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.பெண்கள்: திட்டமிட்ட வேலைகள் நடக்கவில்லை, எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகவில்லை என்று சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். இதுவரை இருந்த பிரச்னைகள் இருந்த இடம் தெரியாமல் போகும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். நீண்டநாள் கனவுகள் நனவாகும். கருத்து வேறுபாடு மற்றும் வேலையின் காரணமாக கணவரைவிட்டு விலகி இருந்தவர்கள் மீண்டும் ஒன்றாக வாழக்கூடிய நிலை உருவாகும். வெளிவட்டாரத்திலும் உறவினர்கள் மத்தியிலும் செல்வாக்கு உயரும். மரியாதை அதிகரிக்கும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். வேலைக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும்.கல்வி: மாணவர்கள் எதிர்காலம் பற்றி திட்டமிடுவீர்கள். படிப்பில் அக்கறை உண்டாகும். உயர்கல்வி கனவு நனவாகும்.உடல்நிலை: அஷ்டம சனியால் உடல் நிலையில் பாதிப்பினை சந்தித்து, மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி இறங்கி வந்தவர்கள் நிலையில் மாற்றம் ஏற்படும், விபத்து, நரம்புக்கோளாறு, தொற்றுநோய் என்று சங்கடப்பட்டு வந்தவர்கள் மருத்துவத்தால் குணமடைந்து ஆரோக்கியமாக நடைபோடுவீர்கள்.குடும்பம்: இதுவரை கனவாகவே இருந்ததெல்லாம் பராபவ ஆண்டில் நனவாகும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய இடம் வீடு வாகனம் என்று வாங்க முடியும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும்.பரிகாரம்: சுவேதாரண்யேசுவரரை வழிபட வாழ்வில் இருந்த சங்கடம் விலகும். வளம் உண்டாகும்.

சிம்மம்: மகம்: நிதானம் அவசியம்ஞான மோட்சக்காரகனான கேது, ஆத்மக்காரகனான சூரியன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் பராபவ ஆண்டு நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் ஆண்டாகும். திருமணம், குழந்தை பாக்யம், படிப்பு, வேலை, சொந்த வீடு, வாகனம், பட்டம் பதவி என்ற கனவுகள் நனவாகும். ஒரு பக்கம் நெருக்கடிகள் இருந்தாலும் மறுபக்கம் அதையெல்லாம் சமாளிக்கும் அளவிற்கு உங்கள் நிலைமை இருக்கும்.சனி சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், தனது 3,7,10 ம் பார்வைகளால் உங்கள் ராசிக்கு ஜீவன, குடும்ப, பூர்வ புண்ணிய ஸ்தானங்களைப் பார்ப்பதால் செய்துவரும் தொழிலில் கூடுதல் கவனம் தேவைப்படும், புதிய தொழில் தொடங்குபவர்கள் மார்க்கெட் நிலவரம் அறிந்து முயற்சிகளை மேற்கொள்வது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் நியாயமாக நடந்து கொள்வதும், மேல் அதிகாரியை அனுசரித்துச்செல்வதும் நன்மையளிக்கும். குடும்பத்தில் அடிக்கடி ஏதாகிலும் ஒரு பிரச்னை உருவாக வாய்ப்பிருப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும், வார்த்தைகளில் நிதானம் காப்பதும் நன்மையாகும். உடல்நிலையிலும் சுய ஒழுக்கத்திலும் கவனமாக இருப்பதால் ஆரோக்கியம் மேம்படும். செல்வாக்கு நிலைக்கும்.ராகு - கேது சஞ்சாரம்: நவ. 13 வரை ஏழாமிடத்தில் ராகு, ஜென்ம ராசிக்குள் கேது, நவ. 13 முதல் சத்ரு ஜெய ஸ்தானத்தில் ராகு, விரய ஸ்தானத்தில் கேது என்று சஞ்சரிப்பதால், நவ. 13 வரை மனதில் ஏதேனும் ஒரு சங்கடம், தேவையற்ற பிரச்னைகள், பொருளாதார நெருக்கடி, கணவன் மனைவிக்குள் சச்சரவு, நண்பர்களால் சங்கடம் என்று ஏற்பட்டாலும், நவ. 13 முதல் இந்நிலை மாறும். உடல்நிலை சீராகும், ஆரோக்கியம் மேம்படும், எதிர்ப்பு வம்பு வழக்கு என்பதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும்.குரு சஞ்சாரம்: 2026 மே 26 வரை மிதுனத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 26 முதல் கடகத்தில் சஞ்சரிக்கிறார், அக். 20 முதல் அதிசாரமாக சிம்மத்திற்கு செல்பவர் 2027 பிப். 13 முதல் மீண்டும் கடகத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் மே 26 வரை லாப குருவாக சஞ்சரிப்பவர் பணப்புழக்கத்தை அதிகரிப்பார். செய்துவரும் தொழிலில் லாபம் காண வைப்பார். சிலருக்கு திருமணம் கூடும், குழந்தை பாக்யம் ஏற்படும், பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மே 26 முதல் விரய குருவாக சஞ்சரிப்பவர் செலவுகளை அதிகரித்தாலும் அவையெல்லாம் சுபச்செலவுகளாகவே இருக்கும். இதற்கும் மேலாக, அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானையும் தனது பாக்ய பார்வையால் பார்ப்பதால் அஷ்டம சனியின் பாதிப்பு உங்களை நெருங்காமல் போகும், குடும்பத்திலும், தொழிலிலும் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். செல்வாக்கு உயரும். வீடு, வாசல், வாகனம் என்ற தேவைகள் பூர்த்தியாகும். படிப்பு, வேலை என்ற கனவுகள் நனவாகும். பட்டம், பதவி என்ற ஆசைகள் பூர்த்தியாகும். வியாபாரம், தொழில் லாபமடையும், பொருளாதார நிலை உயரும்.சூரிய சஞ்சாரம்: உங்கள் ராசியாதிபதியான சூரியன் ஒவ்வொரு ராசியினருக்கும் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் அந்தந்த பாவகங்களுக்குரிய பலன்களை யோகப்பலன்களாக வழங்கிடக்கூடியவர். இந்த ஆண்டில் ஐப்பசி, தை, வைகாசி, ஆனி மாதங்களில் எடுக்கும் வேலைகள் வெற்றியாகும், முயற்சிகள் சாதகமாகும், தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும், உடல்நிலை சீராகும், போட்டி, பகை என்பதெல்லாம் விலகும், இழுபறியாக இருந்த வழக்கு விவகாரங்கள் சாதகமாகும், வேலையில் எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும், வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு திறமைக்குரிய வேலை கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். மூடி வைத்த தொழில்களை மீண்டும் திறப்பதற்குரிய நிலை உருவாகும். வருமானம் அதிகரிக்கும், பொருளாதார நிலை உயரும், அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள், அனுமதி, ஆதரவு கிடைக்கும்.பொதுப்பலன்: பராபவ ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவைப் பார்ப்பதுடன், மே 26 முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானையும் பார்க்கிறார், நவ. 13 முதல் ராசியை விட்டு கேது விலகுவதுடன் சத்ரு ஜெய ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கப்போவதால், உங்கள் முயற்சிகள் வெற்றியாகும், எடுக்கும் வேலைகள் லாபம்தரும், வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும்,  நினைத்ததை சாதிக்கும் நிலை உண்டாகும். உடல்நிலை சீராகும். வழக்கு ஜெயமாகும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். செல்வம் செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். வயதானவர்களுக்கு ஆரோக்கியம் மேம்படும், இத்தனை நாளும் இருந்த நெருக்கடிகள் விலகும்.தொழில்: தொழில் காரகன் தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் வீழ்ச்சி அடைந்த தொழில் வளர்ச்சி அடையும், மூடி வைத்த தொழில்கள் மீண்டும் செயல்பட ஆரம்பிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், ஐ.டி., ஏ.ஐ., கால்நடை, இயந்திரத் தொழில், மருத்துவம், மெடிக்கல், எக்ஸ்போர்ட், ரியல் எஸ்டேட், ஹார்ட்வேர், ஷேர் மார்க்கெட், சினிமா, சின்னத்திரை, ஜுவல்லரி, ஆடை ஆபரணத் தொழில்கள், செய்தித்தாள், மீடியா, காலண்டர், டைரி, தனியார் பள்ளிகள் முன்னேற்றம் அடையும். லாபம் காணும்.பணியாளர்கள்: பராபவ ஆண்டு பணியாளர்களுக்கு நன்மையான ஆண்டாக இருக்கும். வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு நீண்ட நாள் எதிர்பார்ப்பான பி.ஆர். கிடைக்கும். வேலையின் மீதிருந்த பயம் போகும். தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வருபவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும் என்றாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைக்கும். அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் பதவி உயர்வும் தேடிவரும். பகுதி நேரமாக வேலைப்பார்த்து வருபவர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.பெண்கள்: உடல் நிலையிலும் மன நிலையிலும் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். எந்த ஒன்றையும் சமாளிக்கும் அளவிற்கு சக்தி உண்டாகும். தனித்தன்மை வெளிப்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட இடைவெளி விலகும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு தொழில் மீது அக்கறை அதிகரிக்கும் எதிர்பார்த்த லாபம் வரும். பொன் பொருள் சேரும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.கல்வி: குருப் பார்வைகள் சாதகமாக இருப்பதால் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். மேல்நிலையில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும். சிலர் உயர் கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாடு என்றும் செல்வீர்கள்.உடல்நிலை: அஷ்டம சனி உங்களை பயமுறுத்தினாலும், குருப் பார்வைகள், செவ்வாய் சஞ்சாரம், நவ. 13 முதல் ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகு உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவார், உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும், தொற்று நோய் இயற்கை வைத்தியத்தால் குணமாகும், ஆரோக்கியமாக வாழும் நிலை உண்டாகும் என்றாலும், வாகனப்பயணத்தில் எச்சரிக்கையாக இருப்பது நன்மையளிக்கும்.குடும்பம்: வருடத்தின் தொடக்கத்தில் பூர்வ புண்ணியாதிபதி குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். பொன் பொருள் சேரும், வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். சொந்த இடம் வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். உறவினர் மத்தியில் செல்வாக்கோடு வாழும் நிலை உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சி நடந்தேறும்.பரிகாரம்: ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமியை வழிபட உடல்நிலையில் ஏற்பட்ட பயம் போகும்.பூரம்: சவாலே சமாளிஅதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன், ஆத்மக்காரகனான சூரியன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் பராபவ ஆண்டு சவால்கள் நிறைந்த ஆண்டாக இருக்கும். உடல்நிலையிலும் மன நிலையிலும் அடிக்கடி பின்னடைவு ஏற்பட்டாலும் அதில் மாற்றமும் ஏற்படும். எதிர்பார்த்த முன்னேற்றமும் உண்டாகும். பூரத்தானுடன் போர் செய்யாதே என்ற வார்த்தைக்கேற்ப இந்த வருடத்தில் உங்களுடன் யாரும் போட்டியிட்டு வெல்ல முடியாமல் போகும். எந்தநிலை வந்தாலும் அதை சமாளித்து உங்கள் இலக்கை அடைந்து விடுவீர்கள். லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிக்கும் நிலையில் வருடம் தொடங்குவதால் திருமணம், குழந்தை பாக்யம், படிப்பு, வேலை, சொந்த வீடு, வாகனம், பட்டம், பதவி என்ற கனவுகள் நனவாகும்.சனி சஞ்சாரம்: பராபவ ஆண்டு முழுவதும் மீன ராசிக்குள் அஷ்டம சனியாக சஞ்சரிப்பவர் உங்கள் முயற்சிகளில் தடைகளையும், செயல்களில் சங்கடத்தையும், உடல்நிலையில் பாதிப்பையும் ஏற்படுத்துவதுடன் பொருளாதார நிலையிலும் பின்னடைவை உண்டாக்குவார், செல்வாக்கிற்கு சோதனையையும், தொழிலிலும், குடும்பத்திலும் நிம்மதியற்ற நிலையினையும் உண்டாக்குவார், உத்தியோகத்தில் பயத்தையும், எந்த நேரத்தில் என்ன ஆகுமோ என்ற பதட்டையும் ஏற்படுத்துவார் என்பது ஸ்தான மற்றும் பார்வைகளின் பலன்களாக இருந்தாலும், மே 26 முதல் அஷ்டம சனிக்கு குருப்பார்வை கிடைப்பதாலும், ஜூலை 15 - நவ.30 காலத்தில் வக்கிரம், 2027 மார்ச் 25 முதல் அஸ்தமனம் என்ற நிலையினை அடைவதாலும் பராபவ ஆண்டில் அஷ்டம சனியின் பாதிப்புகள் என்பது தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதுபோல் போய்விடும். பெருமளவிற்கு சனி உங்களைப் பாதிக்கமாட்டார்.ராகு - கேது சஞ்சாரம்: கிரகங்களில் யோகத்தைக் கொடுக்கின்ற ராகுவும், ஞானத்தைக் கொடுக்கின்ற கேதுவும் நவ. 13 வரை ராசிக்குள்ளும் சப்தம ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால், ஒரு பக்கம் ஆசைகள் அதிகரிக்கும், சொத்து சேர்ப்பதிலும் சுகம் தேடுவதிலும் பணம் சம்பாதிப்பதிலும் மனம் செல்லும், மறுபக்கம் அதனால் சங்கடங்களும், கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகளும் ஏற்படும். என்றாலும் நவ. 13 முதல் இந்த நிலை மாறும், சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கப்போகும் ராகு உங்கள் நிலையை உயர்த்துவார், ஆரோக்கியமாக நடைபோட வைப்பார், போட்டி பகை என்பதையெல்லாம் இல்லாமல் செய்வார், வழக்கில் சிக்கியவர்களை விடுவிப்பார்.குரு சஞ்சாரம்: 2026 மே 26 வரை மிதுனத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 26 முதல் கடகத்தில் சஞ்சரிக்கிறார், அக். 20 முதல் அதிசாரமாக சிம்மத்திற்கு செல்பவர் 2027. பிப். 13 முதல் மீண்டும் கடகத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் வருடத்தின் தொடக்கமே லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவுடன் தொடங்குகிறது. அங்கிருந்து மே 26 வரை 3,5,7 ம் இடங்களைப் பார்ப்பவர், பொருளாதார நிலையை உயர்த்துவார், வியாபாரம் தொழிலில் ஆதாயத்தை அதிகரிப்பார், திருமண வயதினரின் கனவை நனவாக்குவார், குழந்தை பாக்யத்திற்காக ஏங்கியோரின் ஏக்கத்தை தீர்த்து வைப்பார், பிள்ளைகளால் பெருமையை உண்டாக்குவார். மே 26 முதல் விரய குருவாக சஞ்சரிப்பவர் 4,6,8 ம் இடங்களைப் பார்ப்பதால் அஷ்டம சனியின் பாதிப்புகள் உங்களை நெருங்காமல் போகும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும், நோய்நொடி வம்பு வழக்கு என்பதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும், வீடு, வாகனம், பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம் என்று சுபச்செலவுகள் ஏற்படும்.சூரிய சஞ்சாரம்: ராசிக்கு 3,6,10,11 ம் இடங்களில் சூரியன் சஞ்சரிக்கும் காலங்களில் அந்தந்த பாவகங்களுக்குரிய பலன்களை யோகப்பலன்களாக வழங்குவார். மற்ற கிரகங்கள் வருடம் முழுவதும் எதிர்மறையாக சஞ்சரித்தாலும் வருடத்தில் 120 நாட்கள் சூரியனின் சஞ்சாரம் ஒவ்வொருவரையும் பாதுகாக்கும் முன்னேற்றத்தை உண்டாக்கும். அந்த வகையில் இந்த ஆண்டில் ஐப்பசி, தை, வைகாசி, ஆனி மாதங்களில் சூரியனின் சஞ்சாரங்களால் அரசு வழி முயற்சிகள் வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த வருமானம் வரும், நஷ்டத்தில் இயங்கிய தொழில்களும் லாபம்தரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலையில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம் கிடைக்கும், வெளிநாட்டில் தற்காலிகமாக குடியிருந்து வருபவர்களுக்கு நிரந்தர குடியுரிமைக் கிடைக்கும். வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு தகுதிக்குரிய வேலைக்கிடைக்கும், அரசியல் வாதிகளுக்கும், பொதுநலப்பணியாளர்களுக்கும் செல்வாக்கு உயரும். வம்பு வழக்குகள் ஜெயமாகும்.பொதுப்பலன்: பராபவ ஆண்டு உங்கள் முயற்சிக்குரிய பலன்கள் கிடைக்கும் ஆண்டாக இருக்கும். குரு சஞ்சாரங்கள், பார்வைகளுடன் நவ.13 முதல் ராகுவும் சாதகமாக சஞ்சரிப்பதால் நினைத்ததை சாதிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்தை எட்டுவீர்கள். வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றத்தை அடைவீர்கள். ஆரோக்கியமாக நடைபோடுவீர்கள், வழக்கு விவகாரங்களில் வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். பட்டம், பதவி, அந்தஸ்து என்ற லட்சியத்தை எட்டுவீர்கள்.தொழில்: ஜீவன ஸ்தானத்தை சனி பகவான் பார்ப்பதால் தொழில்மீது அக்கறை அதிகரிக்கும். பணியாளர்கள் ஆதரவு கிடைக்கும். பிறரை நம்பி செயல்பட்ட நிலைமாறி உங்களுடைய நேரடி கண்காணிப்பில் ஒவ்வொன்றையும் நடத்துவீர்கள். ஜுவல்லரி, பேன்சி ஸ்டோர், அழகு சாதனப்பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, ஆடை வணிகம், கவரிங் நகைகள், வாகன விற்பனை, உதிரி பாகங்கள் விற்பனை, பியூட்டி பார்லர், ஸ்பா, உடற்பயிற்சி கூடங்கள், சின்னத்திரை, சினிமா, யூட்யூம் தொழில்கள் லாபம் தரும்.பணியாளர்கள்: பராபவ ஆண்டு உங்களுக்கு பரோபகார ஆண்டாக இருக்கும். வேலையில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். ஆட்குறைப்பு செய்வதின் காரணமாக நம்முடைய வேலையும் பறிபோய்விடுமோ! கடன்களை எப்படி அடைப்பது? குடும்பத்தை எப்படி காப்பாற்றுவது என்று ஒவ்வொரு நாளும் பயந்து கொண்டிருந்தவர்களின் வாழ்க்கையில் நிம்மதி ஏற்படும். உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு சம்பளம் உயரும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள், மறைமுகத் தொல்லைகள் விலகும். வேலையில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.பெண்கள்: அஷ்டம சனிக்காலம் என்றாலும், குரு சஞ்சாரங்களுடன் பார்வைகளும், நவ. 13 முதல் ராகுவும் சாதகமாக இருப்பதால் உயர்கல்வி, வேலை, திருமணம் என்ற கனவுகள் நனவாகும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு விலகும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும். சுயதொழில் செய்பவர்களுக்கு தொழில்மீது அக்கறை அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். பொன் பொருள் சேரும்.கல்வி: பொதுத்தேர்விலும் போட்டித் தேர்வுகளிலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்விக்காக விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும் சிலர் வெளி மாநிலம் வெளிநாடு என்றும் செல்வீர்கள். மருத்துவம், சட்டம், இன்ஜினியரிங் என்ற விருப்பம் நிறைவேறும்.உடல்நிலை: தொற்றுநோய், பரம்பரைநோய், விபத்து என்று மருத்துவமனையிலும், தொடர் சிகிச்சையிலும் இருந்து வந்தவர்களுக்கு ஆரோக்கியம் சீராகும், சித்தா, ஆயுர்வேதா மருத்துவத்தால் சிலர் பழைய நிலைக்கு வருவீர்கள் என்றாலும் இயந்திரப்பணியிலும், வாகனம் இயக்குவதிலும், மின்சாரம் தொடர்பான வேலைகளிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மையளிக்கும்.குடும்பம்: குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும் வருடத்தின் தொடக்கத்தில் லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும், புதிய சொத்து சேரும், தம்பதிகளுக்குள் இணக்கமான நிலை ஏற்படும், நீண்ட நாள் கனவுகள் நனவாகும், குழந்தை பாக்யம், சொந்த வீடு, வாகனம் என்ற எண்ணங்கள் பூர்த்தியாகும். பிள்ளைகள் நலனின் அக்கறை அதிகரிக்கும்.பரிகாரம்: கபாலீஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் உண்டாகும்.உத்திரம்: செயல்களில் கவனம்ஆத்மக்காரகனான சூரியன் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1ம் பாதமான சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனே ராசிநாதனாகவும், 2,3,4ம் பாதங்களான கன்னியில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர். பிறக்கும் பராபவ வருடத்தில் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஒரு பக்கம் பிரச்சனை போராட்டம் என்ற நிலை இருந்தாலும், மறுபக்கம் அதையெல்லாம் சமாளித்திடக்கூடிய நிலை உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம் தொழில்கள் முன்னேற்றமடையும். இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நட்புகளால் பிரச்னைகளை சந்திக்க நேரும். உத்தியோகத்தில் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். உங்களுக்குரிய இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக அதிக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியதாக இருக்கும் என்றாலும் நினைத்ததை சாதிக்கும் வலிமையும் உண்டாகும்.சனி சஞ்சாரம்: உத்திரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பராபவ ஆண்டு முழுவதும் அஷ்டம ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால் மறைமுகத் தொல்லைகள் அதிகரிக்கும். உடல்நிலையில் அவ்வப்போது ஏதேனும் சங்கடம் வெளிப்படும். வியாபாரம் தொழிலில் நெருக்கடியும் போராட்டமான நிலையும் இருக்கும். உத்தியோகத்தில் நிம்மதியற்ற நிலை இருக்கும். வரவு இழுபறியாகும். குடும்பத்தினருடன் ஒரு இடைவெளி ஏற்படும். எதிரிகள் விரிக்கும் சூழ்ச்சி வலையில் சிக்க நேரும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கண்டக சனிக்காலம் என்பதால் கூண்டில் சிக்கிய புலியாக சங்கடப்படுவீர்கள். குடும்பத்தினரும் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவார்கள். நன்றாகப் பழகி வந்தவர்களும் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். வேகமாகவும் திறமையாகவும் செயல்பட்டு நினைத்ததை சாதித்திடக்கூடிய உங்களால் முன்புபோல் இப்போது செயல்பட முடியாமல் போகும்.  இருந்தாலும், மே 26 முதல் சனிக்கு குருப்பார்வை கிடைப்பதாலும், ஜூலை 15 - நவ.30 காலத்தில் வக்கிரம், 2027 மார்ச் 25 முதல் அஸ்தமனம் என்ற நிலையினை அடைவதாலும் சனி பகவானால் உண்டாகும் பாதிப்புகள் குறையும்.ராகு - கேது சஞ்சாரம்: நவ. 13 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும், அதன்பிறகு ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை அனைத்திலும் போராட்டம் நெருக்கடி என்றிருந்தாலும் அதன்பின் நிலைமாறும். நினைத்ததை சாதித்து முடிக்கும் வலிமை உண்டாகும். திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை ராகு ஆறாமிடத்தில் சஞ்சரிப்பதாலும், அதன்பிறகு கேது பதினொன்றாம் இடத்தில் சஞ்சரிப்பதாலும் எடுத்த காரியம் யாவிலும் வெற்றி என்ற நிலை உண்டாகும். செல்வாக்கு, அந்தஸ்து, பொன், பொருள், வீடு வாசல் என்று பராபவ ஆண்டு யோகமான ஆண்டாக இருக்கும்.குரு சஞ்சாரம்: உத்திரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் தொடக்கத்தில் வரவு அதிகரிக்கும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். அதன்பின் வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உடல்நிலை சீராகும். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் தொடக்கத்தில் போராட்டமான நிலை இருந்தாலும் அதன்பின் நிலைமை சீராகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். குடும்பம், தொழில், உத்தியோகம், நட்பில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும், வரவு அதிகரிக்கும் வசதி வாய்ப்புகள் உருவாகும்.சூரிய சஞ்சாரம்: ஆத்ம காரகனான சூரியன் ஒவ்வொரு ராசியினருக்கும் 3,6,10,11ம் இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் அந்த ராசியினருக்கு யோகப் பலன்களை வழங்கிடக்கூடியவர் என்பதால், உத்திரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, ஐப்பசி, தை, வைகாசி, ஆனி ஆகிய நான்கு மாதங்களும், 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, கார்த்திகை, மாசி, ஆனி, ஆடி ஆகிய நான்கு மாதங்களும் சூரியனின் சஞ்சாரங்களால் எடுத்த வேலைகளில் வெற்றியுண்டாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும், வசதி வாய்ப்பு, செல்வாக்கு, அந்தஸ்து, ஆரோக்கியம், எதிர்பார்த்த உயர்வு உண்டாகும்.பொதுப்பலன்: பராபவ வருடம் உங்களுடைய நீண்டநாள் கனவுகள் நனவாகும் வருடமாக இருக்கும். முயற்சிக்குரிய பலன்கள் கிடைக்கும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். குடும்பம், தொழில், வேலையில் நிம்மதியான நிலை உண்டாகும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம், வீடு, வாகனம், பட்டம், பதவி என்று வாழ்க்கை வளமாகும்.தொழில்: தொழிலில் அக்கறை அதிகரிக்கும். உங்கள் முயற்சியால் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவீர்கள். விற்பனை கூடும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசுவழி காண்ட்ராக்ட் கிடைக்கும், ஷேர் மார்க்கெட் முன்னேற்றமடையும், ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் வரும். ட்ராவல்ஸ், ஆட்டோமொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், விவசாயம் சார்ந்த தொழில்கள், வாகன விற்பனை, சின்னத்திரை, சினிமா, யூட்யூப், ஏ.ஐ, தொழில்கள் வளர்ச்சி அடையும்.பணியாளர்கள்: வேலையில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். வெளிநாட்டில் வேலைப்பார்த்து வரும் சிலருக்கு பி.ஆர். கிடைக்கும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும். தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் ஏற்படும்.பெண்கள்: படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற வாழ்வின் தேவைகள் பூர்த்தியாகும். கணவருடன் இணக்கமான நிலை இருக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.கல்வி: வாழ்க்கையின் ஆதாரம் படிப்பு மட்டும்தான் என்பதை உணர்வீர்கள். படிப்பின்மீது அக்கறை அதிகரிக்கும். தேர்வு முடிவுகள் மகிழ்ச்சிதரும். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்விக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும். விரும்பிய கல்லுாரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.உடல்நிலை: உடல்நிலையில் திடீர் திடீரென பின்னடைவு ஏற்பட்டாலும் அவை மருத்துவத்தால் சீராகும். நீண்டநாட்களாக தொந்தரவுகள் கொடுத்துவந்த பரம்பரை நோய், தொற்று நோய்கள் சித்தா, ஆயுர்வேதா மருத்துவத்தால் குணமாகும். ஆரோக்கியம் மேம்படும்.குடும்பம்: குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்குவரும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட இடைவெளி விலகும். தன் குடும்பம், தன் பிள்ளை என்ற எண்ணம் உண்டாகும். புதிய இடம், வீடு, வாகனம் என்று வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழும் நிலை உண்டாகும்.பரிகாரம்: அமிர்த கடேஸ்வரரை வழிபட சங்கடம் விலகும். நன்மை உண்டாகும்.

கன்னி: உத்திரம்: செயல்களில் கவனம்ஆத்மக்காரகனான சூரியன் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1ம் பாதமான சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனே ராசிநாதனாகவும், 2,3,4ம் பாதங்களான கன்னியில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர். பிறக்கும் பராபவ வருடத்தில் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஒரு பக்கம் பிரச்சனை போராட்டம் என்ற நிலை இருந்தாலும், மறுபக்கம் அதையெல்லாம் சமாளித்திடக்கூடிய நிலை உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம் தொழில்கள் முன்னேற்றமடையும். இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நட்புகளால் பிரச்னைகளை சந்திக்க நேரும். உத்தியோகத்தில் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். உங்களுக்குரிய இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக அதிக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியதாக இருக்கும் என்றாலும் நினைத்ததை சாதிக்கும் வலிமையும் உண்டாகும்.சனி சஞ்சாரம்: உத்திரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பராபவ ஆண்டு முழுவதும் அஷ்டம ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால் மறைமுகத் தொல்லைகள் அதிகரிக்கும். உடல்நிலையில் அவ்வப்போது ஏதேனும் சங்கடம் வெளிப்படும். வியாபாரம் தொழிலில் நெருக்கடியும் போராட்டமான நிலையும் இருக்கும். உத்தியோகத்தில் நிம்மதியற்ற நிலை இருக்கும். வரவு இழுபறியாகும். குடும்பத்தினருடன் ஒரு இடைவெளி ஏற்படும். எதிரிகள் விரிக்கும் சூழ்ச்சி வலையில் சிக்க நேரும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கண்டக சனிக்காலம் என்பதால் கூண்டில் சிக்கிய புலியாக சங்கடப்படுவீர்கள். குடும்பத்தினரும் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவார்கள். நன்றாகப் பழகி வந்தவர்களும் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். வேகமாகவும் திறமையாகவும் செயல்பட்டு நினைத்ததை சாதித்திடக்கூடிய உங்களால் முன்புபோல் இப்போது செயல்பட முடியாமல் போகும்.  இருந்தாலும், மே 26 முதல் சனிக்கு குருப்பார்வை கிடைப்பதாலும், ஜூலை 15 - நவ.30 காலத்தில் வக்கிரம், 2027 மார்ச் 25 முதல் அஸ்தமனம் என்ற நிலையினை அடைவதாலும் சனி பகவானால் உண்டாகும் பாதிப்புகள் குறையும்.ராகு - கேது சஞ்சாரம்: நவ. 13 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும், அதன்பிறகு ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை அனைத்திலும் போராட்டம் நெருக்கடி என்றிருந்தாலும் அதன்பின் நிலைமாறும். நினைத்ததை சாதித்து முடிக்கும் வலிமை உண்டாகும். திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை ராகு ஆறாமிடத்தில் சஞ்சரிப்பதாலும், அதன்பிறகு கேது பதினொன்றாம் இடத்தில் சஞ்சரிப்பதாலும் எடுத்த காரியம் யாவிலும் வெற்றி என்ற நிலை உண்டாகும். செல்வாக்கு, அந்தஸ்து, பொன், பொருள், வீடு வாசல் என்று பராபவ ஆண்டு யோகமான ஆண்டாக இருக்கும்.குரு சஞ்சாரம்: உத்திரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் தொடக்கத்தில் வரவு அதிகரிக்கும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். அதன்பின் வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உடல்நிலை சீராகும். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் தொடக்கத்தில் போராட்டமான நிலை இருந்தாலும் அதன்பின் நிலைமை சீராகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். குடும்பம், தொழில், உத்தியோகம், நட்பில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும், வரவு அதிகரிக்கும் வசதி வாய்ப்புகள் உருவாகும்.சூரிய சஞ்சாரம்: ஆத்ம காரகனான சூரியன் ஒவ்வொரு ராசியினருக்கும் 3,6,10,11ம் இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் அந்த ராசியினருக்கு யோகப் பலன்களை வழங்கிடக்கூடியவர் என்பதால், உத்திரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, ஐப்பசி, தை, வைகாசி, ஆனி ஆகிய நான்கு மாதங்களும், 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, கார்த்திகை, மாசி, ஆனி, ஆடி ஆகிய நான்கு மாதங்களும் சூரியனின் சஞ்சாரங்களால் எடுத்த வேலைகளில் வெற்றியுண்டாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும், வசதி வாய்ப்பு, செல்வாக்கு, அந்தஸ்து, ஆரோக்கியம், எதிர்பார்த்த உயர்வு உண்டாகும்.பொதுப்பலன்: பராபவ வருடம் உங்களுடைய நீண்டநாள் கனவுகள் நனவாகும் வருடமாக இருக்கும். முயற்சிக்குரிய பலன்கள் கிடைக்கும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். குடும்பம், தொழில், வேலையில் நிம்மதியான நிலை உண்டாகும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம், வீடு, வாகனம், பட்டம், பதவி என்று வாழ்க்கை வளமாகும்.தொழில்: தொழிலில் அக்கறை அதிகரிக்கும். உங்கள் முயற்சியால் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவீர்கள். விற்பனை கூடும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசுவழி காண்ட்ராக்ட் கிடைக்கும், ஷேர் மார்க்கெட் முன்னேற்றமடையும், ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் வரும். ட்ராவல்ஸ், ஆட்டோமொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், விவசாயம் சார்ந்த தொழில்கள், வாகன விற்பனை, சின்னத்திரை, சினிமா, யூட்யூப், ஏ.ஐ, தொழில்கள் வளர்ச்சி அடையும்.பணியாளர்கள்: வேலையில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். வெளிநாட்டில் வேலைப்பார்த்து வரும் சிலருக்கு பி.ஆர். கிடைக்கும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும். தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் ஏற்படும்.பெண்கள்: படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற வாழ்வின் தேவைகள் பூர்த்தியாகும். கணவருடன் இணக்கமான நிலை இருக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.கல்வி: வாழ்க்கையின் ஆதாரம் படிப்பு மட்டும்தான் என்பதை உணர்வீர்கள். படிப்பின்மீது அக்கறை அதிகரிக்கும். தேர்வு முடிவுகள் மகிழ்ச்சிதரும். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்விக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும். விரும்பிய கல்லுாரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.உடல்நிலை: உடல்நிலையில் திடீர் திடீரென பின்னடைவு ஏற்பட்டாலும் அவை மருத்துவத்தால் சீராகும். நீண்டநாட்களாக தொந்தரவுகள் கொடுத்துவந்த பரம்பரை நோய், தொற்று நோய்கள் சித்தா, ஆயுர்வேதா மருத்துவத்தால் குணமாகும். ஆரோக்கியம் மேம்படும்.குடும்பம்: குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்குவரும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட இடைவெளி விலகும். தன் குடும்பம், தன் பிள்ளை என்ற எண்ணம் உண்டாகும். புதிய இடம், வீடு, வாகனம் என்று வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழும் நிலை உண்டாகும்.பரிகாரம்: அமிர்த கடேஸ்வரரை வழிபட சங்கடம் விலகும். நன்மை உண்டாகும்.அஸ்தம்: எச்சரிக்கை தேவைமனக்காரகன் சந்திரன், வித்யாகாரகன் புதன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் பராபவ வருடம் பொறுப்புடனும் நிதானமாகவும் யோசித்தும் செயல்பட வேண்டிய வருடமாகும். சத்ரு ஜெய ஸ்தானம் பலமடைந்திருப்பதால் உங்களிடம் அளவிற்குமீறிய நம்பிக்கையும் துணிச்சலும் இருக்கும் என்றாலும், சனி பகவான் ஏழாமிடத்தில் சஞ்சரிப்பதும், வருடத்தின் தொடக்கத்தில் பத்தாமிடத்தில் குரு சஞ்சரிப்பதும் உங்களுக்குள் அழுத்தத்தை ஏற்படுத்தும், திட்டமிட்டபடி எந்த ஒன்றையும் செய்து முடிக்க முடியாமல் போகும், நண்பர்களிடமும் வருத்தம் ஏற்படக்கூடும் என்பதால் வேகத்தையும் வீரத்தையும் கட்டுப்படுத்தி விவேகத்துடன் செயல்படுவது நன்மையாகும்.சனி சஞ்சாரம்: சப்தம ஸ்தானமான ஏழாம் இடத்தில் வருடம் முழுவதும் சனி பகவான் கண்டக சனியாக சஞ்சரிப்பதால், உடல்நிலையும் மனநிலையும் ஒருநேரம் இருப்பதுபோல் மறுநேரம் இல்லாமல் போகும். உங்களுக்கு ஆதரவாக இருந்த நண்பர்களுடனும் பெரியவர்களுடனும் கருத்து வேறுபாடு ஏற்படும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமற்ற நிலை உருவாகும். மனம் வெறுமையாகும் என்பது பொதுப்பலன் என்றாலும், எல்லாம் சில காலம்தான் என்பதுபோல் இப்பலன்களும் குறுகிய காலத்திற்குத்தான். காரணம் மே 26 முதல் சனிக்கு குருப்பார்வை கிடைப்பதும், ஜூலை 15 - நவ.30 காலத்தில் வக்கிரம், 2027 மார்ச் 25 முதல் அஸ்தமனம் என்ற நிலையினை அடைவதும் கண்டக சனியால் ஏற்படும் பாதிப்புகள் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதுபோல் போய்விடும்.ராகு - கேது சஞ்சாரம்: நவ. 13 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும், அதன்பிறகு ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால், நவ.13 வரை ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் ஆற்றல் அதிகரிக்கும். எடுத்த வேலைகள் முடியும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். உடல்நிலை சீராகும், எதிர்ப்பு பகை என்பதெல்லாம் விலகும், இழுபறியாக இருந்த வழக்கு விவகாரம் சாதகமாகும். நவ. 13 முதல் லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் வியாபாரம் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வரும். பொருளாதார நிலை உயரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்துடன் வாழும் நிலை உருவாகும்.குரு சஞ்சாரம்: வருடத்தின் தொடக்கத்தில் குரு பத்தாமிடத்தில் சஞ்சரிப்பதால் பார்த்துவரும் வேலையில் கவனமாக இருக்க வேண்டும், புதிய தொழில் தொடங்குபவர்கள் சந்தை நிலவரம் அறிந்து செயல்பட வேண்டும். மே 26 முதல் லாப ஸ்தானத்தில் குரு உச்சமாக சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் வசந்தம் வீச ஆரம்பிக்கும். வருமானம் அதிகரிக்கும். சப்தம சனியின் பாதிப்பு விலகும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். தொழில் நிறுவனம் நடத்தி வருபவர்களுக்கு பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும், பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும், சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். திருமண வயதினர் கழுத்தில் மணமாலை ஏறும். நண்பர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.சூரிய சஞ்சாரம்: ஆத்ம காரகனான சூரியன் கார்த்திகை, மாசி, ஆனி, ஆடி ஆகிய நான்கு மாதங்களும் சாதகமாக சஞ்சரிப்பதால்,  எடுக்கும் முயற்சி வெற்றியாகும். அரசுவழி வேலைகள் சாதகமாகும், வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும், வசதி வாய்ப்பு அதிகரிக்கும், செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும், ஆரோக்கியம் மேம்படும், உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு உண்டாகும்.பொதுப்பலன்: பராபவ வருடத்தில் உழைப்பும் முயற்சியும் அதிகரிக்கும். தன்னம்பிக்கை ஏற்படும். வருமானமும் சேமிப்பும் உயரும், புதிய சொத்து சேரும், வாய்ப்புகள் தேடிவரும். வசதியாக வாழும் நிலை உருவாகும்.தொழில்: தொழிலில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர்கள், சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள், சிலர் தொழிலை விரிவு செய்வீர்கள், அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும், பணியாளர்கள் ஒத்துழைப்பு உண்டாகும், ஷேர் மார்க்கெட், நிதி நிறுவனம், மினரல் வாட்டர் தயாரிப்பு, விற்பனை, ட்ரான்ஸ்போர்ட், எக்ஸ்போர்ட், ஜவுளி, விவசாயம் சார்ந்த தொழில்கள், பதிப்பகம், செய்தித்தாள், காலண்டர், நோட்டுப்புத்தகம் தயாரிப்பு, தனியார் பள்ளிகள், வலைதளம், ஏ.ஐ., சின்னத்திரை, சினிமா, குளிர்பானம் தொழில்கள் முன்னேற்றம் அடையும்.பணியாளர்கள்: வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும், சிலர் பார்க்கும் வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்குச் செல்வீர்கள். அரசு பணியில் இருப்பவர்களுக்கு வழக்குகளைக் காரணம் காட்டி தடைபட்டு வந்த பதவி உயர்வும், பண பயன்களும் கிடைக்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.பெண்கள்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பொறுப்பு அதிகரிக்கும். கணவருடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும். உடல்நிலையில் அவ்வப்போது சிறு சிறு பாதிப்புகள் வெளிப்படும், பிரசவம் சர்ஜரி வழியே நிகழும், பொன் பொருள் சேரும், உறவினர்கள் ஆதரவு கிடைக்கும்.கல்வி: இயல்பாகவே படிப்பின்மீது ஆர்வம் கொண்ட உங்களுக்கு பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்விக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும். சிலர் மேற்கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாடு என்று செல்வீர்கள்.உடல்நிலை: கண்டக சனியின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள், மூச்சுத்திணறல், இருதய நோய்கள் என்று தோன்றுவதற்கு வாய்பிருந்தாலும், ருண ரோக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவாலும், ருண ரோக ஸ்தானத்தைப் பார்க்கும் குருவாலும் அவை குணமாகும். உடல்நிலைப் பாதிப்பிற்காக தொடர் சிகிச்சை எடுத்து வந்தவர்களும் ஆரோக்கியத்துடன் உற்சாகமாக நடைபோடுவீர்கள்.குடும்பம்: குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். பொன் பொருள், வீடு வாகனம் என்று வாழ்க்கை வளமாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.பரிகாரம்: வீரராகவப் பெருமாளை வழிபட வேண்டுதல் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும்.சித்திரை: உயர்வு காத்திருக்குதைரிய வீரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2ம் பாதங்களான கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு, புதன் ராசிநாதனாகவும், 3,4ம் பாதங்களான துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர். பிறக்கும் பராபவ வருடம் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முயற்சியாலும் கடும் உழைப்பாலும் முன்னேற்றம் காணும் வருடமாக இருக்கும். வருடத்தின் தொடக்கத்தில் சில சங்கடங்களை சந்தித்தாலும் அதன்பிறகு நிலை மாறும், நினைத்தது நடந்தேறும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பாக்ய குரு, லாப கேது, சத்ரு ஜெய ஸ்தான சனி என்று அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் முன்னேற்றத்தையும் வழங்குவார்கள், செல்வம் செல்வாக்கு அந்தஸ்து உயரும்.சனி சஞ்சாரம்: 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கண்டக சனியால் சங்கடங்கள் ஏற்படும், உடல்நிலையில் பாதிப்பு, குடும்பத்தில் குழப்பம், தொழிலில் நெருக்கடி, நண்பர்களுக்குள் வருத்தம், கணவன் மனைவிக்குள் பிரச்னை என்று உருவாகும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சத்ரு ஜெய சனியால் இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். உடல்நிலை சீராகும், எதிர்ப்பு விலகும், நினைத்ததை சாதிக்கும் நிலை உண்டாகும்.ராகு - கேது சஞ்சாரம்: நவ. 13 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும், அதன்பிறகு ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால், 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகு, ஆற்றலை அதிகரிப்பார், செல்வாக்கை உயர்த்துவார்,  எடுத்த வேலைகளை வெற்றியாக்குவார். நவ. 13 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பண வரவை அதிகரிப்பார், வியாபாரம் தொழிலில் லாபத்தை ஏற்படுத்துவார், செல்வாக்கை உயர்த்துவார். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை லாப கேது வசதி வாய்ப்புகளை அளிப்பார், செல்வம் செல்வாக்கை உயர்த்துவார். நவ. 13 முதல் கேது ஜீவன ஸ்தானத்திலும், ராகு சுக ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும், செய்துவரும் தொழிலிலும் பார்த்துவரும் வேலையிலும் கூடுதல் அக்கறை தேவைப்படும்.குரு சஞ்சாரம்: 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் தொடக்கத்தில் குருவின் பார்வைகளும், மே 26 முதல் லாப குருவும் அவருடைய பார்வைகளும் முன்னேற்றத்தை வழங்கும், முயற்சிகளை வெற்றியாக்கும், நினைத்ததை சாதிக்க வைக்கும், பொன்பொருள் சேர்க்கையை உண்டாக்கும், புகழை ஏற்படுத்தும், கண்டக சனியின் பாதிப்பிலிருந்து விடுவிக்கும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 26 வரை பாக்ய குருவும், அதன்பின் கடக குருவின் பார்வைகளாலும் பொருளாதார நிலை உயரும், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும், சிலருக்கு புதிய தொழில் அமையும், குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். புதிய சொத்து சேரும்.சூரிய சஞ்சாரம்: 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஆத்ம காரகனான சூரியன், கார்த்திகை, மாசி, ஆனி, ஆடி ஆகிய நான்கு மாதங்களும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்கழி, பங்குனி, ஆடி, ஆவணி ஆகிய நான்கு மாதங்களும் 3,6,10,11ம் இடங்களில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும், தடைபட்ட வேலைகள் நடந்தேறும், செல்வம் செல்வாக்கு உயரும், வியாபாரம், தொழில் லாபம்தரும், உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும், அரசுவழி வேலைகள் சாதகமாகும், அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு பதவி கிடைக்கும்.பொதுப்பலன்: பராபவ வருடம் உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தை உண்டாக்கும் வருடமாகும். இதுவரை போராட்டமாகவே இருந்த உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும், வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்,  உழைப்பிற்கேற்ற ஆதாயமும் முயற்சிக்கேற்ற உயர்வும் ஏற்படும், பணம், புகழ், செல்வாக்கு, அந்தஸ்துடன் வாழும் நிலை உருவாகும்.தொழில்: செய்துவரும் தொழில் முன்னேற்றமடையும், போட்டியாளரால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும், பணியாளர் ஆதரவு கிடைக்கும், வாடிக்கையாளர் அதிகரிப்பர். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், கெமிக்கல் தயாரிப்பு மற்றும் விற்பனை, மெடிக்கல், உணவகம், விவசாயம் சார்ந்த தொழில்கள், ரசாயன பொருட்கள், குடிநீர் சார்ந்த தொழில்கள் மற்றும் விற்பனை, பப்ளிகேஷன், ஷேர் மார்க்கெட், நிதி நிறுவனம், எக்ஸ்போர்ட், ஆடை ஆபரணம் காலண்டர், நோட்டுப் புத்தகம் தயாரிப்பு மற்றும் விற்பனை, தனியார் பள்ளிகள், ஏ.ஐ., யூட்யூப், சின்னத்திரை, சினிமா மற்றும் அதைச்சார்ந்த தொழில்கள் லாபம்தரும்.பணியாளர்கள்: உழைப்பிற்கேற்ற ஆதாயமில்லை, திறமைக்கேற்ற மரியாதை இல்லை என்று வருத்தப்பட்டு வந்தவர்கள்மீது நிர்வாகத்தின் பார்வை படும், எதிர்பார்த்த பொறுப்பும் சலுகைகளும் கிடைக்கும், வேலையில் இருந்த பயம் போகும், அரசு பணியில் இருப்பவர்களுக்கு மேலதிகாரியின் ஆதரவும் எதிர்பார்த்த மாற்றமும் தேடிவரும்.பெண்கள்: குடும்பத்தில் நிம்மதி இல்லை, வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை என்றிருந்த நிலையில் மாற்றம் ஏற்படும், குடும்பத்தினர் ஆதரவு உண்டாகும், வேலைப் பார்த்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும், திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும், சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும், வாழ்க்கைத்துணையுடன் இணக்கமான நிலை ஏற்படும், பொன் பொருள் சேரும், உடல்நிலை சீராகும்.கல்வி: எந்த ஒன்றிலும் முழுமையான கவனத்தை செலுத்தக்கூடிய உங்களுக்கு குரு பார்வைகள் சாதகமாக இருப்பதால் பொதுத் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும், உயர் கல்வி கனவு நனவாகும்.உடல்நிலை: கடுமையான உழைப்பின் காரணமாகவும், ஓய்வில்லா நிலையினாலும், சிலருக்கு பரம்பரை வழியாகவும் ஏற்பட்ட நோய்களால் அவதிக்கு ஆளாகி வந்த நிலையில் மாற்றம் ஏற்படும், மருந்து மாத்திரை மருத்துவமனை என்ற நிலை மாறும், உடல்நிலையில  ஏற்பட்ட பாதிப்புகள் சிகிச்சையால் குணமாகும், ஆரோக்கியத்துடன் நடை போடக்கூடிய நிலை உண்டாகும்.குடும்பம்: உங்கள் நீண்ட நாள் கனவுகள் நனவாகும், பிறரைப்போல் வாழ முடியவில்லையே என்ற ஏக்கம் உங்களை விட்டு விலகும், சொந்த இடம், வீடு, வாகனம் என்ற முயற்சி நிறைவேறும், கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட சச்சரவுகள் முடிவிற்குவரும், ஒருவரை ஒருவர் ஆலோசித்து செயல்படுவீர்கள், சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும், பிள்ளைகளுடைய கல்வி, திருமணம் என்ற முயற்சியை மேற்கொள்வீர்கள், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும், சிலர் சொந்த வீட்டில் பால் காய்ச்சுவீர்கள், பெரியோர் ஆதரவு உங்களை வழிநடத்தும்.பரிகாரம்: மதுராந்தகம் திருவெண்காட்டீஸ்வரரை வழிபட வேண்டுதல் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும்.

துலாம்: சித்திரை: உயர்வு காத்திருக்குதைரிய வீரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2ம் பாதங்களான கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு, புதன் ராசிநாதனாகவும், 3,4ம் பாதங்களான துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர். பிறக்கும் பராபவ வருடம் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முயற்சியாலும் கடும் உழைப்பாலும் முன்னேற்றம் காணும் வருடமாக இருக்கும். வருடத்தின் தொடக்கத்தில் சில சங்கடங்களை சந்தித்தாலும் அதன்பிறகு நிலை மாறும், நினைத்தது நடந்தேறும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பாக்ய குரு, லாப கேது, சத்ரு ஜெய ஸ்தான சனி என்று அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் முன்னேற்றத்தையும் வழங்குவார்கள், செல்வம் செல்வாக்கு அந்தஸ்து உயரும்.சனி சஞ்சாரம்: 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கண்டக சனியால் சங்கடங்கள் ஏற்படும், உடல்நிலையில் பாதிப்பு, குடும்பத்தில் குழப்பம், தொழிலில் நெருக்கடி, நண்பர்களுக்குள் வருத்தம், கணவன் மனைவிக்குள் பிரச்னை என்று உருவாகும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சத்ரு ஜெய சனியால் இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். உடல்நிலை சீராகும், எதிர்ப்பு விலகும், நினைத்ததை சாதிக்கும் நிலை உண்டாகும்.ராகு - கேது சஞ்சாரம்: நவ. 13 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும், அதன்பிறகு ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால், 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகு, ஆற்றலை அதிகரிப்பார், செல்வாக்கை உயர்த்துவார்,  எடுத்த வேலைகளை வெற்றியாக்குவார். நவ. 13 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பண வரவை அதிகரிப்பார், வியாபாரம் தொழிலில் லாபத்தை ஏற்படுத்துவார், செல்வாக்கை உயர்த்துவார். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை லாப கேது வசதி வாய்ப்புகளை அளிப்பார், செல்வம் செல்வாக்கை உயர்த்துவார். நவ. 13 முதல் கேது ஜீவன ஸ்தானத்திலும், ராகு சுக ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும், செய்துவரும் தொழிலிலும் பார்த்துவரும் வேலையிலும் கூடுதல் அக்கறை தேவைப்படும்.குரு சஞ்சாரம்: 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் தொடக்கத்தில் குருவின் பார்வைகளும், மே 26 முதல் லாப குருவும் அவருடைய பார்வைகளும் முன்னேற்றத்தை வழங்கும், முயற்சிகளை வெற்றியாக்கும், நினைத்ததை சாதிக்க வைக்கும், பொன்பொருள் சேர்க்கையை உண்டாக்கும், புகழை ஏற்படுத்தும், கண்டக சனியின் பாதிப்பிலிருந்து விடுவிக்கும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 26 வரை பாக்ய குருவும், அதன்பின் கடக குருவின் பார்வைகளாலும் பொருளாதார நிலை உயரும், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும், சிலருக்கு புதிய தொழில் அமையும், குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். புதிய சொத்து சேரும்.சூரிய சஞ்சாரம்: 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஆத்ம காரகனான சூரியன், கார்த்திகை, மாசி, ஆனி, ஆடி ஆகிய நான்கு மாதங்களும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்கழி, பங்குனி, ஆடி, ஆவணி ஆகிய நான்கு மாதங்களும் 3,6,10,11ம் இடங்களில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும், தடைபட்ட வேலைகள் நடந்தேறும், செல்வம் செல்வாக்கு உயரும், வியாபாரம், தொழில் லாபம்தரும், உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும், அரசுவழி வேலைகள் சாதகமாகும், அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு பதவி கிடைக்கும்.பொதுப்பலன்: பராபவ வருடம் உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தை உண்டாக்கும் வருடமாகும். இதுவரை போராட்டமாகவே இருந்த உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும், வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்,  உழைப்பிற்கேற்ற ஆதாயமும் முயற்சிக்கேற்ற உயர்வும் ஏற்படும், பணம், புகழ், செல்வாக்கு, அந்தஸ்துடன் வாழும் நிலை உருவாகும்.தொழில்: செய்துவரும் தொழில் முன்னேற்றமடையும், போட்டியாளரால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும், பணியாளர் ஆதரவு கிடைக்கும், வாடிக்கையாளர் அதிகரிப்பர். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், கெமிக்கல் தயாரிப்பு மற்றும் விற்பனை, மெடிக்கல், உணவகம், விவசாயம் சார்ந்த தொழில்கள், ரசாயன பொருட்கள், குடிநீர் சார்ந்த தொழில்கள் மற்றும் விற்பனை, பப்ளிகேஷன், ஷேர் மார்க்கெட், நிதி நிறுவனம், எக்ஸ்போர்ட், ஆடை ஆபரணம் காலண்டர், நோட்டுப் புத்தகம் தயாரிப்பு மற்றும் விற்பனை, தனியார் பள்ளிகள், ஏ.ஐ., யூட்யூப், சின்னத்திரை, சினிமா மற்றும் அதைச்சார்ந்த தொழில்கள் லாபம்தரும்.பணியாளர்கள்: உழைப்பிற்கேற்ற ஆதாயமில்லை, திறமைக்கேற்ற மரியாதை இல்லை என்று வருத்தப்பட்டு வந்தவர்கள்மீது நிர்வாகத்தின் பார்வை படும், எதிர்பார்த்த பொறுப்பும் சலுகைகளும் கிடைக்கும், வேலையில் இருந்த பயம் போகும், அரசு பணியில் இருப்பவர்களுக்கு மேலதிகாரியின் ஆதரவும் எதிர்பார்த்த மாற்றமும் தேடிவரும்.பெண்கள்: குடும்பத்தில் நிம்மதி இல்லை, வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை என்றிருந்த நிலையில் மாற்றம் ஏற்படும், குடும்பத்தினர் ஆதரவு உண்டாகும், வேலைப் பார்த்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும், திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும், சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும், வாழ்க்கைத்துணையுடன் இணக்கமான நிலை ஏற்படும், பொன் பொருள் சேரும், உடல்நிலை சீராகும்.கல்வி: எந்த ஒன்றிலும் முழுமையான கவனத்தை செலுத்தக்கூடிய உங்களுக்கு குரு பார்வைகள் சாதகமாக இருப்பதால் பொதுத் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும், உயர் கல்வி கனவு நனவாகும்.உடல்நிலை: கடுமையான உழைப்பின் காரணமாகவும், ஓய்வில்லா நிலையினாலும், சிலருக்கு பரம்பரை வழியாகவும் ஏற்பட்ட நோய்களால் அவதிக்கு ஆளாகி வந்த நிலையில் மாற்றம் ஏற்படும், மருந்து மாத்திரை மருத்துவமனை என்ற நிலை மாறும், உடல்நிலையில  ஏற்பட்ட பாதிப்புகள் சிகிச்சையால் குணமாகும், ஆரோக்கியத்துடன் நடை போடக்கூடிய நிலை உண்டாகும்.குடும்பம்: உங்கள் நீண்ட நாள் கனவுகள் நனவாகும், பிறரைப்போல் வாழ முடியவில்லையே என்ற ஏக்கம் உங்களை விட்டு விலகும், சொந்த இடம், வீடு, வாகனம் என்ற முயற்சி நிறைவேறும், கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட சச்சரவுகள் முடிவிற்குவரும், ஒருவரை ஒருவர் ஆலோசித்து செயல்படுவீர்கள், சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும், பிள்ளைகளுடைய கல்வி, திருமணம் என்ற முயற்சியை மேற்கொள்வீர்கள், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும், சிலர் சொந்த வீட்டில் பால் காய்ச்சுவீர்கள், பெரியோர் ஆதரவு உங்களை வழிநடத்தும்.பரிகாரம்: மதுராந்தகம் திருவெண்காட்டீஸ்வரரை வழிபட வேண்டுதல் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும்.சுவாதி: தொட்டதெல்லாம் பொன்னாகும்அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன், யோகக்காரகன் ராகு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் பராபவ வருடம் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும் காலமாக இருக்கும், வாழ்க்கையின் அத்தனை நெருக்கடிகளையும் சந்தித்த உங்களுக்கு இனி நடப்பதெல்லாம் நன்மையாகவே இருக்கும், ஆழ்கடலில் தத்தளித்து வந்தவர் படாதபாடுபட்டு கரையேறியதுபோல் உங்கள்நிலை மாறும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும், செல்வம் செல்வாக்கு அந்தஸ்து உயரும்.சனி சஞ்சாரம்: கடந்த ஐந்து ஆண்டுகளாக அர்த்தாஷ்டம மற்றும் பூர்வ புண்ணிய சனியால் வேதனைகளையும் சோதனைகளையும் அனுபவித்த வந்த உங்களுக்கு இந்த வருடம் யோகமான வருடமாக இருக்கும், சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் சோர்ந்து கிடந்த உங்களை சுறுசுறுப்பாக்குவார், வேலையில்லை வருமானமில்லை என்ற நிலையை மாற்றுவார், வியாபாரம் தொழிலில் லாபத்தை வழங்குவார், போட்டி பகை என்ற நிலைகளை இல்லாமல் செய்வார், உங்கள் ஆற்றலை அதிகரிப்பார், வெறும் கனவாகவே இருந்தவற்றை நனவாக்கி வெற்றிநடை போடவைப்பார், வழக்கை வெற்றியாக்குவார், வாழ்க்கையை வளமாக்குவார்.ராகு - கேது சஞ்சாரம்: நவ. 13 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும், அதன்பிறகு ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால், நவ.13 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பண வரவை அதிகரிப்பார், பொருளாதார நிலையை உயர்த்துவார், வசதி வாய்ப்புகளை அதிகரிப்பார், செல்வம் செல்வாக்கை ஏற்படுத்துவார். புதிய இடம், வீடு, வாகனம் என்ற முயற்சியை வெற்றியாக்குவார். நவ. 13 முதல், தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில் கேதுவும்,  சுக ஸ்தானமான நான்காம் இடத்தில் ராகுவும் சஞ்சரிப்பதால் செய்துவரும் தொழிலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும், பணியாளர்கள் ஒத்துழைப்பு என்பது எதிர்பார்ப்பதுபோல் இல்லாமல் போகும், வேலைப்பார்க்கும் இடத்திலும் குற்றம் குறை என்ற நிலைக்கு ஆளாக வேண்டிவரும், என்னதான் உழைத்தாலும் அதற்குரிய பலன் என்பது பூசணிக்காய்போல் கிடைக்க வேண்டிய அளவில் நெல்லிக்காய் அளவிற்குத்தான் கிடைக்கும், எனவே இக்காலத்தில் அனைத்திலும் நிதானம் தேவை.குரு சஞ்சாரம்: வருடத்தின் தொடக்கமே உங்களுக்கு அமோகமாக இருக்கிறது, பாக்ய குருவும் அவருடைய பார்வைகளும் உங்கள் நிலையை உயர்த்தும், உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவுகளை நனவாக்கும், வெளி வட்டாரத்தில் உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். மே 26 முதல் பத்தாம் இடமான கடகத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குருவின் பார்வைகளால் பொருளாதார நிலை உயரும், மனதில் நிம்மதி உண்டாகும், உடல்நிலை சீராகும், சிலருக்கு புதிய தொழில் அமையும்.சூரிய சஞ்சாரம்: ஆத்ம காரகனான சூரியன், மார்கழி, பங்குனி, ஆடி, ஆவணி ஆகிய நான்கு மாதங்கள் உங்கள் ராசிக்கு 3,6,10,11ம் இடங்களில் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் உங்களிடம் புதிய நம்பிக்கை உண்டாகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்குவரும், செல்வம் செல்வாக்கு அந்தஸ்து உயரும், வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.பொதுப்பலன்: இதுவரை பிறரை நம்பி வாழ்ந்துவந்த நீங்கள் இந்த பராபவ வருடத்தில் பிறரை வாழ வைப்பவர்களாக மாறுவீர்கள், உங்கள் எதிர்பார்ப்புகள் ஒவ்வொன்றும் பூர்த்தியாகும், கனவுகள் யாவும் நனவாகும், பொன் பொருள் புகழ் சேரும்.தொழில்: இதுவரை பல்வேறு முயற்சிகள் செய்தும் போட்ட பணத்தைக்கூட எடுக்க முடியவில்லை, தொழிலும் சரியாக நடக்கவில்லை என்று வருத்தப்பட்டு வந்தவர்களுக்கு பராபவ வருடத்தில் அந்தநிலை மாறும். பணியாளர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கமிஷன் வியாபாரம், ரசாயனம், ஹோட்டல், திருமண மண்டபம், விடுதி, ட்ராவல்ஸ், பில்டிங் டிசைனிங், டெக்கரேஷன், ஆடை வணிகம், ஜுவல்லரி, கால்நடை வளர்ப்பு, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை என்று அனைத்திலும் ஆதாயம் கிடைக்கும், சினிமா, தொலைக்காட்சி வலைதளம் வளர்ச்சி அடையும்.பணியாளர்கள்: வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். கடுமையாக உழைத்தும் முன்னேற்றம் இல்லை என்ற நிலை மாறும், நிர்வாகத்தின் ஆதரவும் சலுகைகளும் கிடைக்கும், அரசு பணியில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட வழக்குகள் முடிவிற்குவரும், தடைபட்ட பதவி உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும்.பெண்கள்: சமீப காலமாக சங்கடப்பட்டு வந்த உங்களுக்கு, பிறக்கும் பராபவ வருடம் மகிழ்ச்சியான வருடமாக இருக்கும், உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் சந்தித்த தொல்லைகள் விலகும். உற்சாகமாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும், குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும், கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும், திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும், சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும், பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும், வேலைப் பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை ஏற்படும், பொன் பொருள் சேரும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும்.கல்வி: பொதுத்தேர்வு போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும், படிப்பின் மீது ஆர்வம் ஏற்படும், உயர்கல்விக்கான முயற்சி வெற்றியாகும், விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும், சிலர் வெளிநாடுகளுக்கும் செல்வீர்கள்.உடல்நிலை: நீண்ட நாட்களாக ஆரோக்கியத்தில் குறைபாட்டோடும், ஏதாகிலும் ஒரு பிரச்னையோடும் மருந்து மாத்திரையோடு வாழ்ந்து வந்தவர்களுக்கு பராபவ வருடம் நோய்தீர்க்கும் வருடமாக இருக்கும், ஆறாமிட சனியால் குணமாகாது என்று மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் நிலையிலும் அதிசயமான மாற்றம் ஏற்படும். அல்சர் நீரழிவு ரத்தக்கொதிப்பு  கட்டுப்படும். ஆரோக்கியம் சீராகும்.குடும்பம்: ஐந்தாண்டுகளுக்கு மேலாக நிறையவே சங்கடங்களை அனுபவித்த உங்களுக்கு, பிறக்கும் பராபவ ஆண்டு யோகமான ஆண்டாக இருக்கும். இனி நீங்கள் நினைத்தது நடக்கும், எதிர்பார்த்தது கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். இடம் வீடு வாகனம் என்ற முயற்சி வெற்றியாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.பரிகாரம்: ஜேஷ்டா தேவியை வழிபட சங்கடங்கள் விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.விசாகம்: நல்லநேரம் வந்தாச்சுஞானக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2,3ம் பாதங்களான துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 4 ம் பாதமான விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும் உள்ளனர்.பிறக்கும் பராபவ வருடம் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் தொடக்கமே வசந்த காலமாகும், குடும்பம், தொழில், உத்தியோகம் என்று எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 26 முதல் பாக்ய குருவும், நவ.13 முதல் சகாய ஸ்தான ராகுவும் வசதி வாய்ப்புகளை அதிகரிப்பர், ஆரோக்கியமாகவும் செல்வ செழிப்போடும் வாழ வைப்பர்.சனி சஞ்சாரம்: விசாகம் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், சோதனைகளையும் வேதனைகளையும் சுமந்து வாழ்ந்து வந்த உங்களை சாதனைகள் புரிய வைப்பார், எடுத்த காரியம் யாவிலும் வெற்றி என்ற நிலையினை உண்டாக்குவார், ஆரோக்கியத்தை மேம்படுத்துவார், செல்வாக்கை உயர்த்துவார், வம்பு வழக்குகளில் வெற்றியை அளிப்பார், அரசியல் வாதிகளுக்கு புதிய பொறுப்பு பதவி என்று உயர்வினை ஏற்படுத்துவார், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் நிம்மதியையும், வியாபாரம் தொழிலில் லாபத்தையும், பொருளாதாரத்தில் உயர்வினையும் உண்டாக்குவார்.ராகு - கேது சஞ்சாரம்: நவ. 13 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும், அதன்பிறகு ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால், 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் பணவரவு அதிகரிக்கும், பொருளாதார நிலை உயரும், வசதி வாய்ப்புகள் உண்டாகும், நவ. 13 முதல், பத்தாம் இடத்தில் கேதுவும், நான்காம் இடத்தில் ராகுவும் சஞ்சரிப்பதால் செய்துவரும் தொழிலில் கூடுதல் கவனம் தேவைப்படும், உடல்நிலையிலும் கவனமாக இருப்பது நன்மையாகும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை அனைத்திலும் நிதானம் தேவை, அதன்பின் மூன்றாமிட ராகுவால் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும், வரவேண்டிய பணம் வரும், துணிச்சலும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.குரு சஞ்சாரம்: விசாகம் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 26 வரை பாக்ய குரு சுபிட்சமான நிலையை ஏற்படுத்துவார், சமூகத்தில் உங்கள் நிலை உயரும், படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவுகள் நனவாகும், அதன்பின் குருவின் பார்வைகள் உங்களைப் பாதுகாக்கும். 4ம் பாதத்தினருக்கு மே 26 முதல் பாக்ய ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதுடன் உங்கள் ராசியையும், ஐந்தாமிடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானையும் பார்ப்பதால் சங்கடங்கள் எல்லாம் விலகும், குடும்பம், தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும், பணம், புகழ், அந்தஸ்து ஏற்படும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.சூரிய சஞ்சாரம்: விசாகம் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஆத்ம காரகனான சூரியன், மார்கழி, பங்குனி, ஆடி, ஆவணி ஆகிய நான்கு மாதங்களும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு தை, சித்திரை, ஆவணி, புரட்டாசி ஆகிய நான்கு மாதங்களும் 3,6,10,11ம் இடங்களில் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும், எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும், உடல்நிலை சீராகும், எதிர்ப்பு வம்பு வழக்கு என்பதெல்லாம் வந்த வழி தெரியாமல் போகும். வேலையில் உயர்வு ஏற்படும், வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும், புதிய தொழில் தொடங்க முடியும், பணவரவு அதிகரிக்கும், கடன்தொல்லை விலகும், வெளிநாடு செல்வதற்கு எதிர்பார்த்த அனுமதிகள் கிடைக்கும்.பொதுப்பலன்: பராபவ வருடத்தில் உங்கள் வாழ்க்கையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும், மறைந்த உங்கள் செல்வாக்கு வெளிப்படும், திருமண முயற்சி வெற்றியாகும், குழந்தை பாக்யம் கிடைக்கும், ஆரோக்கியம் சீராக இருக்கும், நோய்நொடிகள் விலகும், சிலருக்கு சொந்த வீடு, வாகனம் என்ற நீண்டநாள் கனவு நனவாகும், செல்வாக்கோடு வாழும் நிலை உண்டாகும்.தொழில்: தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும், போட்டியாளர்கள் பலமிழப்பர், பணியாளர்கள் உங்கள் முயற்சிக்கு உதவியாக இருப்பார்கள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கமிஷன் வர்த்தகம், ரசாயன தொழில்கள், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த தொழில்கள், ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிப்பு மற்றும் விற்பனை, இன்ஜினியரிங், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள், உணவகம், திருமண மண்டபம், விடுதி, ட்ராவல் ஏஜென்சி, பில்டிங் டிசைனிங் அண்ட் டெக்கரேஷன், ஆடை வணிகம், ஜுவல்லரி, கால்நடை வளர்ப்பு, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை வளர்ச்சி அடையும்.பணியாளர்கள்: வேலையில் இருந்த நெருக்கடிகள் நீங்கும், திறமைக்கும் உழைப்பிற்கும் உரிய மரியாதைக் கிடைக்கும். சிலருக்கு தற்போதுள்ள வேலையைவிட வேறு இடத்தில் அதிக சம்பளத்துடன் வேலைக்கிடைக்கும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட போராட்டநிலை மாறும். தடைபட்ட பதவி உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும்.பெண்கள்: குரு பகவானின் அம்சமான உங்களுக்கு குடும்பத்தில் மதிப்பு ஏற்படும், வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும், கணவரின் ஆதரவால் துணிச்சல் அதிகரிக்கும். உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும், கையிருப்பு கூடும், பொன் பொருள் சேரும், உறவுகள் மத்தியில் மதிப்புடன் வாழ்வீர்கள்.கல்வி: பிறரை வழி நடத்துவதற்காகவே பிறந்த உங்களுக்கு, பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும், பொறியியல், மருத்துவம், சட்டம் என்று விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.உடல்நிலை: மனதளவிலும், உடல் அளவிலும் பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவரை சந்தித்து மருந்து மாத்திரை என்று வாழ்ந்து வந்தவர்கள் அதிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக நடைபோடுவீர்கள். சிலருக்கு மாற்று சிகிச்சையால் நோய்கள் இருந்த இடம் தெரியாமல் போகும்.குடும்பம்: பராபவ வருடம் குடும்பத்தில் சுபிட்சத்தை உண்டாக்கும் வருடமாக இருக்கும், ஆளுக்கொரு திசையாக இருந்த தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். தன் குடும்பம் தன் பிள்ளைகள் என்ற எண்ணத்துடன் வாழத் தொடங்குவீர்கள். சொந்த வீடு, வாகனம், பொன் பொருள், சேமிப்பு என்று வாழ்க்கை வளமாகும். குடும்பத்தில் மங்கள ஒசை கேட்கும்.பரிகாரம்: திருத்தங்கல் நின்ற நாராயணரை வழிபட குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும், நிம்மதி உண்டாகும்.

விருச்சிகம்: விசாகம்: நல்லநேரம் வந்தாச்சுஞானக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2,3ம் பாதங்களான துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 4 ம் பாதமான விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும் உள்ளனர். பிறக்கும் பராபவ வருடம் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் தொடக்கமே வசந்த காலமாகும், குடும்பம், தொழில், உத்தியோகம் என்று எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 26 முதல் பாக்ய குருவும், நவ.13 முதல் சகாய ஸ்தான ராகுவும் வசதி வாய்ப்புகளை அதிகரிப்பர், ஆரோக்கியமாகவும் செல்வ செழிப்போடும் வாழ வைப்பர்.சனி சஞ்சாரம்: விசாகம் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், சோதனைகளையும் வேதனைகளையும் சுமந்து வாழ்ந்து வந்த உங்களை சாதனைகள் புரிய வைப்பார், எடுத்த காரியம் யாவிலும் வெற்றி என்ற நிலையினை உண்டாக்குவார், ஆரோக்கியத்தை மேம்படுத்துவார், செல்வாக்கை உயர்த்துவார், வம்பு வழக்குகளில் வெற்றியை அளிப்பார், அரசியல் வாதிகளுக்கு புதிய பொறுப்பு பதவி என்று உயர்வினை ஏற்படுத்துவார், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் நிம்மதியையும், வியாபாரம் தொழிலில் லாபத்தையும், பொருளாதாரத்தில் உயர்வினையும் உண்டாக்குவார்.ராகு - கேது சஞ்சாரம்: நவ. 13 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும், அதன்பிறகு ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால், 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் பணவரவு அதிகரிக்கும், பொருளாதார நிலை உயரும், வசதி வாய்ப்புகள் உண்டாகும், நவ. 13 முதல், பத்தாம் இடத்தில் கேதுவும், நான்காம் இடத்தில் ராகுவும் சஞ்சரிப்பதால் செய்துவரும் தொழிலில் கூடுதல் கவனம் தேவைப்படும், உடல்நிலையிலும் கவனமாக இருப்பது நன்மையாகும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை அனைத்திலும் நிதானம் தேவை, அதன்பின் மூன்றாமிட ராகுவால் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும், வரவேண்டிய பணம் வரும், துணிச்சலும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.குரு சஞ்சாரம்: விசாகம் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 26 வரை பாக்ய குரு சுபிட்சமான நிலையை ஏற்படுத்துவார், சமூகத்தில் உங்கள் நிலை உயரும், படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவுகள் நனவாகும், அதன்பின் குருவின் பார்வைகள் உங்களைப் பாதுகாக்கும். 4ம் பாதத்தினருக்கு மே 26 முதல் பாக்ய ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதுடன் உங்கள் ராசியையும், ஐந்தாமிடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானையும் பார்ப்பதால் சங்கடங்கள் எல்லாம் விலகும், குடும்பம், தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும், பணம், புகழ், அந்தஸ்து ஏற்படும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.சூரிய சஞ்சாரம்: விசாகம் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஆத்ம காரகனான சூரியன், மார்கழி, பங்குனி, ஆடி, ஆவணி ஆகிய நான்கு மாதங்களும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு தை, சித்திரை, ஆவணி, புரட்டாசி ஆகிய நான்கு மாதங்களும் 3,6,10,11ம் இடங்களில் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும், எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும், உடல்நிலை சீராகும், எதிர்ப்பு வம்பு வழக்கு என்பதெல்லாம் வந்த வழி தெரியாமல் போகும். வேலையில் உயர்வு ஏற்படும், வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும், புதிய தொழில் தொடங்க முடியும், பணவரவு அதிகரிக்கும், கடன்தொல்லை விலகும், வெளிநாடு செல்வதற்கு எதிர்பார்த்த அனுமதிகள் கிடைக்கும்.பொதுப்பலன்: பராபவ வருடத்தில் உங்கள் வாழ்க்கையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும், மறைந்த உங்கள் செல்வாக்கு வெளிப்படும், திருமண முயற்சி வெற்றியாகும், குழந்தை பாக்யம் கிடைக்கும், ஆரோக்கியம் சீராக இருக்கும், நோய்நொடிகள் விலகும், சிலருக்கு சொந்த வீடு, வாகனம் என்ற நீண்டநாள் கனவு நனவாகும், செல்வாக்கோடு வாழும் நிலை உண்டாகும்.தொழில்: தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும், போட்டியாளர்கள் பலமிழப்பர், பணியாளர்கள் உங்கள் முயற்சிக்கு உதவியாக இருப்பார்கள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கமிஷன் வர்த்தகம், ரசாயன தொழில்கள், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த தொழில்கள், ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிப்பு மற்றும் விற்பனை, இன்ஜினியரிங், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள், உணவகம், திருமண மண்டபம், விடுதி, ட்ராவல் ஏஜென்சி, பில்டிங் டிசைனிங் அண்ட் டெக்கரேஷன், ஆடை வணிகம், ஜுவல்லரி, கால்நடை வளர்ப்பு, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை வளர்ச்சி அடையும்.பணியாளர்கள்: வேலையில் இருந்த நெருக்கடிகள் நீங்கும், திறமைக்கும் உழைப்பிற்கும் உரிய மரியாதைக் கிடைக்கும். சிலருக்கு தற்போதுள்ள வேலையைவிட வேறு இடத்தில் அதிக சம்பளத்துடன் வேலைக்கிடைக்கும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட போராட்டநிலை மாறும். தடைபட்ட பதவி உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும்.பெண்கள்: குரு பகவானின் அம்சமான உங்களுக்கு குடும்பத்தில் மதிப்பு ஏற்படும், வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும், கணவரின் ஆதரவால் துணிச்சல் அதிகரிக்கும். உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும், கையிருப்பு கூடும், பொன் பொருள் சேரும், உறவுகள் மத்தியில் மதிப்புடன் வாழ்வீர்கள்.கல்வி: பிறரை வழி நடத்துவதற்காகவே பிறந்த உங்களுக்கு, பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும், பொறியியல், மருத்துவம், சட்டம் என்று விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.உடல்நிலை: மனதளவிலும், உடல் அளவிலும் பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவரை சந்தித்து மருந்து மாத்திரை என்று வாழ்ந்து வந்தவர்கள் அதிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக நடைபோடுவீர்கள். சிலருக்கு மாற்று சிகிச்சையால் நோய்கள் இருந்த இடம் தெரியாமல் போகும்.குடும்பம்: பராபவ வருடம் குடும்பத்தில் சுபிட்சத்தை உண்டாக்கும் வருடமாக இருக்கும், ஆளுக்கொரு திசையாக இருந்த தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். தன் குடும்பம் தன் பிள்ளைகள் என்ற எண்ணத்துடன் வாழத் தொடங்குவீர்கள். சொந்த வீடு, வாகனம், பொன் பொருள், சேமிப்பு என்று வாழ்க்கை வளமாகும். குடும்பத்தில் மங்கள ஒசை கேட்கும்.பரிகாரம்: திருத்தங்கல் நின்ற நாராயணரை வழிபட குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும், நிம்மதி உண்டாகும்.அனுஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும்தைரிய வீரிய காரகனான செவ்வாய், கர்மக்காரகன் சனி அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் பராபவ வருடம் முன்னேற்றமான வருடமாக இருக்கும். கடந்தகால நெருக்கடிகள் எல்லாம் விலகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும், பணப்புழக்கம் அதிகரிக்கும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.சனி சஞ்சாரம்: அர்த்தாஷ்டம சனிக்காலம் முடிந்திருப்பதால் ராசியை விட்டு சனி பகவானின் பார்வை விலகி இருக்கிறது என்பதே உங்களுக்கு நன்மையாகும். முன்பிருந்த அளவிற்கு இப்போது நெருக்கடிகள் இருக்காது, லாப ஸ்தானத்திற்கு சனி பகவானின் பார்வை உண்டாவதால் வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும், வரவு அதிகரிக்கும். அதே நேரத்தில் நன்றாகப்பழகி வந்தவர்களுடன் ஒரு இடைவெளி ஏற்படும். குடும்பத்திலும் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் நேரம் காலம் அறிந்து சந்தர்ப்ப சூழ்நிலை உணர்ந்து, அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்வது நன்மையாகும்.ராகு - கேது சஞ்சாரம்: நவ. 13 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும், அதன்பிறகு ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால், நவ.13 வரை வியாபாரத்தில் உங்களுடைய நேரடி கண்காணிப்பு தேவை, உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வது அவசியம். வேலைப்பளு அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் உடல்நிலையிலும் கூடுதல் கவனம் தேவை. நவ.13 முதல் சகாய ஸ்தானமான மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகு, உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார், பயந்து பயந்து வாழ்ந்த நிலைமாறி செல்வாக்கோடு நடைபோடக்கூடிய நிலை உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும்.குரு சஞ்சாரம்: மே 26 வரை குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் மறைவு பெற்றாலும் அவருடைய பார்வைகள் வீண் அலைச்சலையும் செலவுகளையும் கட்டுப்படுத்தும், குடும்பத்தில் நிம்மதியான நிலையை உண்டாக்கும், பணப்புழக்கத்தை ஏற்படுத்தும், மார்ச் 26 முதல் பாக்ய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பவர் உங்கள் ராசியையும், ஐந்தாமிடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானையும் பார்ப்பதால் உங்கள் வாழ்க்கை வளமாகும், நீண்டநாள் கனவுகள் நனவாகும், செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும்,  குடும்பம், தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் இருந்த இடம் தெரியாமல் போகும், பணம், புகழ், அந்தஸ்து ஏற்படும், பிள்ளைகள் நலனுக்காக எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.சூரிய சஞ்சாரம்: ஆத்ம காரகனான சூரியன், தை, சித்திரை, ஆவணி, புரட்டாசி ஆகிய நான்கு மாதங்களும்  3,6,10,11ம் இடங்களில் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் மற்ற கிரகங்களால் எதிர்மறையான பலன்கள் ஏற்பட்டாலும் அவை உங்களை நெருங்காமல் போகும், வியாபாரம் தொழில் வளர்ச்சி அடையும், வேலை மற்றும் உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். உடல்நிலை சீராகும், எதிர்ப்பு வம்பு வழக்கு எல்லாம் வந்தவழி தெரியாமல் போகும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும், புதிய தொழில் தொடங்க முடியும், பணவரவு அதிகரிக்கும், அரசுவழி முயற்சிகள் வெற்றியாகும்.பொதுப்பலன்: பராபவ வருடம் உங்களுக்கு யோகமான வருடமாகும், எந்த முயற்சியும் நடக்கவில்லை, எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகவில்லை, மனதில் நிம்மதியில்லை என்று வாழ்ந்து வந்தவர்களுக்கு இதுவரை இருந்த சங்கடங்கள் எல்லாம் விலகும், குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். ஆரோக்கியம் சீராகும், நோய்நொடிகள் விலகும், சிலருக்கு சொந்த வீடு, வாகனம் என்ற நீண்டநாள் கனவு நனவாகும்.தொழில்: ராசியை விட்டு சனி பகவானின் பார்வை விலகியதால் சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்குவீர்கள், லாப ஸ்தானத்திற்கு தொழில் காரகனின் பார்வை கிடைப்பதால் நஷ்டத்தில் இயங்கிய தொழில்களும் இனி லாபமடையும், விவசாயம் சார்ந்த தொழில்கள், செங்கல் தயாரிப்பு, எம்சாண்ட், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், சிறு குறு தொழிற்சாலைகள், கால்நடை வளர்ப்பு, எண்ணெய் வியாபாரம், இன்ஜினியரிங் பேக்டரி, உதிரி பாகங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, வாகன விற்பனை, ட்ராவல்ஸ், கெமிக்கல், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த தொழில்கள், விளையாட்டுப் பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனை, கம்ப்யூட்டர், பொறியியல், ட்ராவல் ஏஜென்சி, ஹார்டுவேர் தொழில்கள் வளர்ச்சி அடையும்.பணியாளர்கள்: என்னதான் உழைத்தாலும் நல்ல பெயரும் இல்லை, திறமைக்கேற்ற மரியாதையும் இல்லை என்று வருத்தத்தோடு இருந்தவர்களுக்கு இதுவரை இருந்த நிலையில் மாற்றம் ஏற்படும், நிர்வாகம் உங்களுக்குரிய இடத்தையும் சலுகைகளையும் வழங்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும், தடைபட்ட இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.பெண்கள்: மனதில் இருந்த சங்கடங்களும் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பும் விலகும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும், சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும், வேலைக்காக முயற்சி மேற்கொண்டவர்களுக்கு வேலைக்கிடைக்கும், கணவருடன் இணக்கமான நிலை உண்டாகும், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும், வசதி வாய்ப்புகளோடு வாழும் நிலை உண்டாகும்.கல்வி: படிப்பில் மந்தமாக இருந்தவர்களுக்கும் படிப்பின்மீது அக்கறை அதிகரிக்கும், உயர் கல்வி கனவு நனவாகும்.உடல்நிலை: அர்த்தாஷ்டம சனியின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தவர்களுக்கு இனி மாற்றம் ஏற்படும், உடல்நிலை சீராகும், உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.குடும்பம்: குடும்பம் நன்றாக இருந்தால்தான் நாம் வெளியில் கவுரவமாக நடைபோடமுடியும் என்பதை உணர்வீர்கள், தம்பதிகளுக்குள் இருந்த கருத்து வேறுபாடு விலகும், பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும், கடன் பட்டாவது சொந்த வீடு, வாகனம், நவீன பொருட்கள் என்று வாங்குவீர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கோடு வாழ்வீர்கள்.பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபட சங்கடங்கள் விலகும், நன்மைகள் நடக்கும்.கேட்டை: முயற்சி வெற்றி தரும்வித்யா காரகன் புதன், தைரிய வீரிய காரகன் செவ்வாய் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் பராபவ வருடம் நெருக்கடிகள் நீங்கும் வருடமாக இருக்கும், நினைத்த வேலைகள் நடந்தேறும், எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும், விருப்பங்கள் பூர்த்தியாகும், எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும், குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.சனி சஞ்சாரம்: பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், தனது 3,7,10ம் பார்வைகளால் உங்கள் ராசிக்கு 7,11,2ம் இடங்களைப் பார்ப்பதால் பூர்வீக சொத்தில் பிரச்னை, பிள்ளைகளால் சங்கடம், மனதில் குழப்பம், சபலம், சஞ்சலம், உயர் கல்வியில் தடை, தம்பதிக்குள் பிரச்னை, நட்பிற்குள் இடைவெளி என்று ஏற்பட்டாலும் கையில் பணம் புழங்கும், பண வரவு அதிகரிக்கும், வசதி வாய்ப்புகள் ஏற்படும்.ராகு - கேது சஞ்சாரம்: நவ. 13 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும், அதன்பிறகு ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால், நவ.13 வரை செய்துவரும் தொழிலில் அக்கறை செலுத்துவது அவசியம், மாத ஊதியம் பெறுபவர்கள் மேலிருப்போரின் கண்காணிப்பிற்கு ஆளாக வாய்ப்பிருப்பதால் பார்த்துவரும் வேலையில் நேர்மையாகவும் முழு ஈடுபாட்டுடனும் இருப்பது நன்மையாகும். நவ.13 முதல் சகாய ஸ்தானமான மூன்றாமிடத்தில் ராகு சஞ்சரிப்பதால் மந்திரம் போட்டதுபோல் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும், தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும், வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும், மற்றவர்களால் சாதிக்க முடியாதவற்றை சாதித்திடக்கூடிய வலிமையும் திறமையும் உண்டாகும்.குரு சஞ்சாரம்: மே 26 வரை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகள் 12,2,4ம் இடங்களுக்கு கிடைப்பதால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும், எதிர்பார்த்த பணம் வரும், விருப்பங்கள் பூர்த்தியாகும், வீண் செலவுகள் குறையும். மார்ச் 26 முதல் பாக்ய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பவர், அவருடைய பார்வைகளால்  உங்கள் ராசியையும், 3,5ம் இடங்களையும் பார்ப்பதால் நீண்டநாள் கனவுகள் நனவாகும், முயற்சி வெற்றியாகும், செல்வம் செல்வாக்குடன் வாழும் நிலை உருவாகும், ஐந்தாமிடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானையும் பார்ப்பதால் இதுவரை இருந்த பிரச்னைகள் எல்லாம் விலகும், சிலருக்கு காதல் கை கூடும், பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும், பிள்ளைகளால் பெருமை உண்டாகும், கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும், பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் உங்களைத் தேடிவருவர். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.சூரிய சஞ்சாரம்: ஆத்ம காரகனான சூரியன் 3,6,10,11ம் இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் அந்த ஜாதகரின் நிலையை உயர்த்துவார், எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்வார், வசதி வாய்ப்புகளை அதிகரிப்பார், வியாபாரம் தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார், பொருளாதார நிலையை மேம்படுத்துவார், அரசுவழியில் எதிர்பார்த்த அனுமதிகளைக் கிடைக்க வைப்பார், உத்தியோகத்தில் முன்னேற்றத்தை வழங்குவார், சிலருக்கு உத்தியோகத்தையும் வழங்குவார், சட்ட சிக்கல்களில் இருந்து விடுவிப்பார் அந்த நிலையில், பராபவ வருடத்தில் தை, சித்திரை, ஆவணி, புரட்டாசி ஆகிய நான்கு மாதங்களும் உங்களுக்கு யோகமான மாதங்களாவே இருக்கும்.பொதுப்பலன்: பராபவ வருடம் உங்கள் வாழ்வில் வளமான வருடமாக இருக்கும், செல்வாக்குடனும் அந்தஸ்துடனும் உங்களால் வாழமுடியும், இழுபறியாக இருந்த வேலைகள் முடியும், எதிர்பார்த்த பணம்வரும், கடன்தொல்லை விலகும், பட்டம், பதவி, அரசுவேலை, சுயதொழில் என்று உங்கள் நிலை உயரும். திக்கற்றிருந்த நேரத்தில் துணையாக இருந்த தெய்வத்தின் கோயிலுக்கு சென்று வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள்.  தொழில்: புதபகவான் எடுத்த வேலையை எடுத்த வேகத்தில் செய்து முடித்திடக்கூடிய திறமையை வழங்குவார். செவ்வாய் அம்சத்தில் பிறந்த நீங்கள் போடும் கணக்கு சரியாகவே இருக்கும், ஒரு முயற்சியில் தோல்வி ஏற்பட்டாலும் அதற்கான காரணத்தை கண்டறியும் உங்களுக்கு, பராபவ வருடம் சுய தொழிலில் வெற்றியடையும் வருடமாகவே இருக்கும். சிறு வியாபாரம், பெரும் வர்த்தகம், நிதி நிறுவனம், ஸ்டேஷனரி, அச்சகம், செய்தித்தாள், நோட்டுப் புத்தகம், காலண்டர் தயாரிப்பு மற்றும் விற்பனை, தகவல் தொடர்பு, விளம்பரம், ஷேர் மார்க்கெட், காண்ட்ராக்ட், கமிஷன் ஏஜென்சி, கூட்டுத்தொழில், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள், கால்நடை வளர்ப்பு, எண்ணெய் வியாபாரம், மருத்துவம், ரசாயனம், ட்ராவல் ஏஜென்சி, தனியார் பள்ளிகள் கல்லூரிகள் வளர்ச்சி அடையும், வருமானம் தரும்.பணியாளர்கள்: வேலைப்பார்க்கும் இடத்தில் நிம்மதி இல்லை, பார்க்கும் வேலைக்குரிய சம்பளமும் இல்லை என வருத்தப்பட்டுக் கொண்டிருந்த நிலைமாறும். உங்களுக்குரிய அங்கீகாரமும், சம்பளத்துடன் கூடிய சலுகைகளும் கிடைக்கும், சிலருக்கு பெரிய நிறுவனங்களிடம் இருந்து அழைப்பு வரும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்த போராட்டநிலை மாறும், தடைபட்ட பதவி உயர்வு இடமாற்றம் கிடைக்கும்.பெண்கள்: மன ரீதியாக சங்கடப்பட்டதுடன், உடல் ரீதியாகவும் நலிவினை சந்தித்துவந்த நிலைமாறும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என அவரவர் கனவு நனவாகும். குடும்பத்தில் மரியாதை கூடும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட இடைவெளி விலகும், பணிபுரியும் இடத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு  வருமானம் உயரும். பொன் பொருள் சேரும்.கல்வி: இயல்பாகவே படிப்பில் ஆர்வம் கொண்ட உங்களுக்கு தேர்வு முடிவு மகிழ்ச்சியை அளிக்கும், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும், மருத்துவம், சட்டம், பொறியியல் என்ற உங்கள் கனவுகள் நனவாகும்.உடல்நிலை: மருந்து மாத்திரை மருத்துவமனை என்று தொடர்ந்து சங்கடப்பட்டு வந்தவர்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். மருத்துவ செலவுகள் குறையும், ஆரோக்கியம் மேம்படும், சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய நிலை உருவாகும். மூச்சுத்திணறல், நரம்புக்கோளாறு, ரகசியநோய் என்று சங்கடப்பட்டு வந்தவர்கள் நவீன மருத்துவத்தால் குணமடைவர்.குடும்பம்: குடும்பத்தில் இருந்த சங்கடங்கள், பிரச்னைகள் விலகும், எதிர்காலம் பற்றிய அக்கறை உண்டாகும், பணத்தை சேமிப்பதில் கவனம் செல்லும், செலவுகளையும் திட்டமிட்டு ஆதாய நோக்கதுடன் மட்டுமே செய்வீர்கள். சொந்த இடம், வீடு, வாகனம் என்று வாங்குவீர்கள், தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்தும் ஆலோசித்தும் செயல்படுவீர்கள், உறவினர்கள் மத்தியில் கவுரவமாக வாழ்வீர்கள், குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.பரிகாரம்: யோக நரசிம்ம பெருமாளை வழிபட்டுவர சங்கடங்கள் விலகும்.

தனுசு: மூலம்: குறை தீர்ப்பார் குருஞான மோட்சக்காரகன் கேது, மங்களக்காரகன் குரு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் பராபவ வருடம் நினைத்ததை சாதிக்கும் வருடமாக இருக்கும். வருடத்தின் தொடக்கமே உங்களுக்கு யோகமாக இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பொன் பொருள் சேரும், உயர் கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம், புதிய சொத்து என்ற கனவு நனவாகும்.சனி சஞ்சாரம்: சுக ஸ்தானமான 4ம் இடத்தில் அர்த்தாஷ்டம சனியாக சஞ்சரிக்கும் சனி பகவான், தனது 3,7,10ம் பார்வைகளால் உங்கள் ராசியையும் 6 மற்றும் 10ம் இடங்களைப் பார்ப்பதால், வேலைப்பளு அதிகரிக்கும். எந்தவொரு வேலையையும் எடுத்தோம் முடித்தோம் என்று முடிக்க முடியாமல் போகும், உற்சாகமாக செயல்படக்கூடிய உங்களிடம் இயல்பாகவே ஒரு மந்தநிலை உண்டாகும். வேலைப்பார்க்கும் இடத்தில் நிம்மதி என்பது இல்லாமல் போகும், செய்துவரும் தொழிலிலும் ஆதாயம் கேள்விக்குறியாக இருக்கும். வீடு, வாகனம் வகையில் செலவு ஏற்படும். இருந்தாலும் அனைத்தையும் சமாளித்திடக்கூடிய சக்தியும் உண்டாகும். வம்பு, வழக்குகளில் வெற்றி கிடைக்கும், ஆரோக்கியம் சீராகும்.ராகு - கேது சஞ்சாரம்: நவ. 13 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும், அதன்பிறகு ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால், நவ.13 வரை சகாய ஸ்தான ராகு உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார், உற்சாகமாக செயல்பட வைப்பார், வியாபாரம் தொழில் உத்தியோகத்தில் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தியாக்குவார், தன்னம்பிக்கையை தைரியத்தை அதிகரிப்பார், மற்றவர்களால் சாதிக்க முடியாதவற்றை சாதித்திடக்கூடிய வலிமையையும் திறமையையும் வழங்குவார். நவ. 13 முதல் ராகு குடும்ப ஸ்தானத்திலும், கேது அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் குடும்பம், தொழில், உத்தியோகம், உடல்நிலை என அனைத்திலும் கவனமாக இருப்பது நன்மையளிக்கும்.குரு சஞ்சாரம்: மே 26 வரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து ராசியைப் பார்க்கும் குருவால் உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். பணவரவு அதிகரிக்கும், திருமண வயதினருக்கு வரன் அமையும், வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக்கிடைக்கும், வீடு, வாகனம் என்று வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். மே 26 முதல் உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் குரு சஞ்சரித்தாலும், அவருடைய பார்வைகள் 12,2,4ம் இடங்களுக்கு கிடைப்பதால் வீண் அலைச்சல் குறையும், செலவுகள் கட்டுப்படும், குடும்பத்தில் நிம்மதி இருக்கும், எதிர்பார்த்த பணம் வரும், விருப்பங்கள் பூர்த்தியாகும், நான்காமிடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானுக்கும் குருப்பார்வை உண்டாவதால் அவரால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும், தடைபட்ட வேலைகள் நடந்தேறும், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும்.சூரிய சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு பாக்யாதிபதியான சூரியன், பொதுவாக அவருடைய சஞ்சாரங்களில் 3,6,10,11ம் இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் ஜாதகரின் நிலையை உயர்த்துவார், தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரிப்பார், தடைபட்ட வேலைகளை முடித்து வைப்பார், வேலை, சுயதொழில், பதவி உயர்வு, வெளிநாட்டு முயற்சி என அனைத்தையும் அளிப்பார், வம்பு வழக்கு என்றிருந்த நிலையினை மாற்றுவார், பொருளாதார நிலையை உயர்த்துவார், அந்த நிலையில், பராபவ வருடத்தில் மாசி, வைகாசி, புரட்டாசி, ஐப்பசி ஆகிய நான்கு மாதங்களும் உங்களுக்கு நன்மையான, நினைத்ததை சாதித்துக்கொள்ளும் மாதங்களாக இருக்கும்.பொதுப்பலன்: பராபவ வருடத்தின் முற்பகுதி உங்களுக்கு சாதகமாகவும், பிற்பகுதி நிதானமாகவும் செயல்பட வேண்டிய வருடமாக இருக்கும், உழைப்பும் முயற்சியும் உங்களை வெற்றிநடை போடவைக்கும். குலதெய்வ வழிபாடும், அம்மன் வழிபாடும் உங்களைப் பாதுகாக்கும்.தொழில்: தொழில்காரகனான சனி பகவான் நான்காம் இடத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால், செய்துவரும் தொழிலில் கூடுதல் கவனம் தேவைப்படும், பிறரை நம்பி இந்த நேரத்தில் நிர்வாகப் பணிகளை ஒப்படைக்க வேண்டாம், கொள்முதல், விற்பனை, நிர்வாகம் என அனைத்திலும் உங்களுடைய நேரடி கண்காணிப்பு அவசியம்,  மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த தொழில்கள், ஆன்மிகம் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு விற்பனை, நிதி நிறுவனம், காண்ட்ராக்ட், எக்ஸ்போர்ட், ஜூவல்லரி தொழில்கள் முன்னேற்றம் அடையும்.பணியாளர்கள்: தொழில் காரகனான சனி பகவான் இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ராசியையும், தொழில் ஸ்தானமான 10ம் இடத்தையும் பார்ப்பதால் வேலைபளு அதிகரிக்கும், வேலையின்மீது பயம் ஏற்படும், சிலருக்கு வேலை இழப்பும் ஏற்படும் என்பதால் வேலையில் அக்கறையோடு செயல்படுவது நன்மையளிக்கும், அரசு பணியில் இருப்பவர்கள் மேல் அதிகாரியை அனுசரித்துச் செல்வது சங்கடமற்ற நிலையை உண்டாக்கும்.பெண்கள்: வருடத்தின் முற்பகுதியில் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும், கனவுகள் நனவாகும், உடல்நிலை சீராகும், குடும்பத்தினர் ஆதரவும் கணவரின் அன்பும் உங்களுக்குள் மகிழ்ச்சியை அதிகரிக்கும், வருடத்தின் பிற்பகுதியில் அனைத்திலும் நிதானம் தேவை, வேலை மற்றும் சுயதொழிலில் எச்சரிக்கை அவசியம், குடும்பத்தினர் ஆலோசனையோடு செயல்படுவதும், உடல்நிலையில் கவனமாக இருப்பதும் நன்மையாகும்.கல்வி: தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரத்தில் ராசிக்கும், 11ம் இடத்திற்கும் குருப்பார்வை கிடைப்பதால் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும், உயர்கல்வி என்ற லட்சியத்தை எட்டுவீர்கள். மருத்துவம், இன்ஜினியரிங், சட்டப்படிப்பு என்ற உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாகும்.உடல்நிலை: அர்த்தாஷ்டம சனிக்காலம், ராசிக்கும் சனி பகவானின் பார்வை என்பதால் உடல்நலனில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்றாலும், ருண ரோக ஸ்தானத்தையும் சனி பகவான் பார்ப்பதால் வரும் நோய்கள் மருத்துவத்தால் குணமாகும். ஆரோக்கியம் மேம்படும்.குடும்பம்: குருப்பார்வை, சகாய ஸ்தானத்தில் ராகு, 120 நாட்கள் சூரியன் என்று உங்களுக்கு சாதகம் புரிவதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும், புதிய இடம், வீடு, வாகனம் என்ற முயற்சி வெற்றியாகும், பிள்ளைகளின் மேல்படிப்பு, திருமணம் என்ற எண்ணம் நிறைவேறும். தம்பதிக்குள் ஒற்றுமை இருக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.பரிகாரம்: நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகியை வழிபட சங்கடங்கள் விலகும்.பூராடம்: உழைப்பு முன்னேற்றம் தரும்அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன், ஞானக்காரகன் குரு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் பராபவ வருடம் உழைப்பாலும் சுய முயற்சியாலும் வெற்றிபெறும் வருடமாக இருக்கும், இதுவரை எந்த ஒன்றிலும் பிடிப்பில்லாமல் வாழ்ந்துவந்த நிலையில் மாற்றம் ஏற்படும், இனி திட்டமிட்டு செயல்படுவீர்கள், உங்கள் நோக்கமெல்லாம் உயர்ந்த இடத்தை எட்டுவதாகவே இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும், உங்கள் கனவுகள் நனவாகும், விருப்பங்கள் பூர்த்தியாகும்.சனி சஞ்சாரம்: அர்த்தாஷ்டம சனியாக சஞ்சரிக்கும் சனி பகவான் முன்பிருந்த நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவார், அலட்சியமாக செயல்பட்டவர்களையும் அக்கறையுடன் செயல்பட வைப்பார், செய்து வரும் தொழிலிலும் பார்த்துவரும் உத்தியோகத்திலும் கவனம் கொள்ள வைப்பார். வேலைபளுவால் சங்கடத்திற்கு ஆளாக்குவார், உழைப்பிற்கும் முயற்சிக்கும் ஏற்ற ஆதாயத்தை வழங்குவார்.ராகு - கேது சஞ்சாரம்: நவ. 13 வரை உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானமான மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு, உங்களது முயற்சிகளை வெற்றியாக்குவார், வருமானத்தை அதிகரிப்பார், துணிச்சலுடனும் தைரியத்துடனும் நடைபோட வைப்பார், நினைத்ததை முடித்திடக்கூடிய அளவிற்கு உங்கள் செல்வாக்கை உயர்த்துவார். நவ. 13 முதல் அஷ்டம ஸ்தானத்தில் கேதுவும், குடும்ப ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரிப்பதால் மறைமுகத் தொல்லைகள் அதிகரிக்கும், உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும், உங்களுடைய ரகசிய விவகாரங்கள் வெளிச்சத்திற்கு வரும், குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உருவாகும், பண விவகாரத்தில் நெருக்கடி ஏற்படும், கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும்.குரு சஞ்சாரம்: வருடத்தின் தொடக்கத்தில் குரு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன், லாப ஸ்தானத்தையும் ராசியையும் பார்ப்பதால் நெருக்கடிகள் விலகும், விருப்பங்கள் பூர்த்தியாகும், திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவு நனவாகும், செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். மே 26 முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகளால் பணவரவில் ஏற்பட்ட தடை விலகும், குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும், வீண் அலைச்சல் குறையும், செலவுகள் கட்டுப்படும், அர்த்தாஷ்டம சனியால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும், தடைபட்ட வேலைகள் நடந்தேறும், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும்.சூரிய சஞ்சாரம்: 3,6,10,11ம் இடங்களில் சூரியன் சஞ்சரிக்கும் காலங்களில் ஜாதகருக்கு யோகப் பலன்களை வழங்குவார். அந்த நிலையில் பராபவ வருடத்தில் மாசி, வைகாசி, புரட்டாசி, ஐப்பசி ஆகிய நான்கு மாதங்களும் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும், நினைத்த காரியங்கள் நடந்தேறும், வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும், செல்வம் செல்வாக்கு உயரும், பட்டம் பதவி கிடைக்கும்.பொதுப்பலன்: உங்களுடைய முழுத்திறமையையும் இந்த வருடத்தில் நீங்கள் வெளிப்படுத்த வேண்டியதாக இருக்கும். உழைப்பும் முயற்சியுமே உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும், வருடத்தின் முற்பகுதியில் நீங்கள் நினைப்பது நடக்கும், பொருளாதார நிலை உயரும், தேவைகள் பூர்த்தியாகும். வழக்கறிஞர், நீதிபதி, ஆசிரியர், அமைச்சர்கள், ஆன்மீகப் பணியாளர்கள், வைத்தியர்கள், புரோகிதர்கள், கலைஞர்கள், பொறியாளர்கள் நிலையும் மதிப்பும் உயரும்.தொழில்: தொழில்காரகன் சனி பகவான் தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் தொழில்மீது அக்கறை அதிகரிக்கும், முதலீட்டிற்கும் முயற்சிக்கும் ஏற்ற ஆதாயம் கிடைக்கும், பணியாளர் ஒத்துழைப்பால் திட்டமிட்டபடி தொழில் முன்னேற்றமடையும். சினிமா, தொலைக்காட்சி, வலைதளம், ஏ.ஐ., உணவகம், விடுதி, திருமண மண்டபம், ட்ராவல் ஏஜென்சி, ஆடை வணிகம், கால்நடை வளர்ப்பு, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, நிதி நிறுவனம், ஜுவல்லரி, வாகனம் தயாரிப்பு மற்றும் வாகனம் சம்பந்தப்பட்ட  தொழில்கள் வளர்ச்சி அடையும்.பணியாளர்கள்: வேலைபளு அதிகரிக்கும் என்றாலும் அதற்குரிய மரியாதை உண்டாகும், அக்கறையோடு வேலைப் பார்ப்பவர்களுக்கு ஊதிய உயர்வும் சலுகைகளும் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்கள் சட்டத்திற்கும் தங்களுடைய வரம்பிற்கும் உட்பட்டு செயல்படுவது நன்மையாகும், நேர்மையாக வேலைப்பார்ப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும், வேலையில் தவறு செய்பவர்கள் இந்த ஆண்டில் சட்ட சிக்கல்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.பெண்கள்: சப்தம குருவின் சஞ்சாரமும் பார்வைகளும் இதுவரை இருந்த பிரச்னைகளில் இருந்து உங்களை விடுவிக்கும், உடல்நிலை சீராகும், எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும், கணவருடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும். பொன் பொருள் சேரும், வேலைப்பார்க்கும் இடத்தில் கூடுதல் பொறுப்பை சுமக்க வேண்டியதாக இருக்கும், சுய தொழில் செய்பவர்கள் முதலீடு செய்வதற்குமுன் மார்க்கெட் நிலவரம் அறிந்து செயல்படுவது நன்மையளிக்கும். சுக ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் இந்த வருடத்தில் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம்.கல்வி: உங்களுக்கு வருடத்தின் பிறப்பே சாதகமாக, ராசிக்கு குருப்பார்வையோடு பிறப்பதால் பொதுத்தேர்வு, போட்டித்தேர்வு முடிவுகள் மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும், தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும், உயர்கல்வி கனவு நனவாகும்.உடல்நிலை: உடல்நிலையில் அவ்வப்போது சிறு சிறு சங்கடங்கள் தோன்றும், பரம்பரை நோய், தொற்றுநோய், சிறுநீரக கோளாறு, ரகசியநோய், சுவாசக்கோளாறு என்று ஏற்பட வாய்ப்புண்டு என்றாலும் அவை மருத்துவத்திற்கு கட்டுப்படும்.குடும்பம்: ராசிநாதனின் சஞ்சாரமும் பார்வைகளும் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி, கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும், கடன் பட்டாவது சொந்த வீடு, வாகனம் என்று வாங்குவீர்கள், பிள்ளைகள் நலனிலும் முன்னேற்றத்திலும் அக்கறை எடுப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும், உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும்.பரிகாரம்: சங்கர ராமேஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும்.உத்திராடம்: வெற்றிமேல் வெற்றிஆத்ம காரகனான சூரியன் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1ம் பாதமான தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு குரு ராசிநாதனாகவும், 2,3,4ம் பாதங்களான மகர ராசியில் பிறந்தவர்களுக்கு சனி ராசிநாதனாகவும் உள்ளனர். பிறக்கும் பராபவ வருடத்தில் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் முற்பகுதி யோகமாகவும், பிற்பகுதி உழைப்பால் உயரக்கூடிய காலமாகவும் இருக்கும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு எடுத்த வேலைகள் வெற்றியாகும், எண்ணிய காரியங்கள் நடந்தேறும், வசதி வாய்ப்பு அதிகரிக்கும்.சனி சஞ்சாரம்: உத்திராடம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அர்த்தாஷ்டம சனிக்காலம் என்பதால் வேலைபளு கூடும், உத்தியோகத்தில் நெருக்கடி ஏற்படும், தொழிலில் சங்கடங்கள் உருவாகும், உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும், 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் வாழ்க்கை வளமாகும், நீண்டநாள் கனவுகள் நனவாகும், செல்வாக்கு உயரும்.ராகு - கேது சஞ்சாரம்: நவ. 13 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும், அதன்பிறகு ராகு மகரத்திலும் கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால், 1ம் பாதத்தினருக்கு நவ.13 வரை முயற்சி வெற்றியாகும், முன்னேற்றம் உண்டாகும், வசதி வாய்ப்புகள் கூடும், அதன்பின் குடும்ப ஸ்தானத்தில் ராகுவும் அஷ்டம ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் குடும்பம், தொழில், உடல்நிலை என அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும். 2,3,4ம்  பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை குடும்ப ஸ்தானத்தில் ராகு, அஷ்டம ஸ்தானத்தில் கேது, அதன்பின் ஜென்ம ராசியில் ராகு, ஏழாமிடத்தில் கேது என்று சஞ்சரிப்பதால் வருடம் முழுவதும் சர்ப்ப கிரகங்கள் சோதனைகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பர் என்பதால் அனைத்திலும் நிதானம் அவசியம்.குரு சஞ்சாரம்: 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் தொடக்கத்தில் குரு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நினைத்தது நடந்தேறும், வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும், வருமானம் அதிகரிக்கும், திருமண வயதினருக்கு திருமணம், சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். அதன்பின் குருவின் பார்வைகளால் நன்மைகள் அதிகரிக்கும், அர்த்தாஷ்டம சனியின் பாதிப்பு நீங்கும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 26 முதல் சப்தம ஸ்தானத்தில் குரு உச்சமாக சஞ்சரிப்பதால் விருப்பங்கள் பூர்த்தியாகும், செல்வம் செல்வாக்கு உயரும், குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும், பணப்புழக்கம் அதிகரிக்கும். சிலருக்கு சொந்த தொழில் அமையும், வேலையில் உயர்வு கிடைக்கும், வருடம் முழுவதும் குருவின் பார்வைகளால் குடும்பத்தில் நிம்மதியும், பணப்புழக்கமும் இருந்து கொண்டிருக்கும்.சூரிய சஞ்சாரம்: 3,6,10,11ம் இடங்களில் சூரியன் சஞ்சரிக்கும்போது ஜாதகருக்கு யோகப் பலன்களை வழங்குவார். அந்த நிலையில் பராபவ வருடத்தில், 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, மாசி, வைகாசி, புரட்டாசி, ஐப்பசி ஆகிய நான்கு மாதங்களும், 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பங்குனி, ஆனி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களும் யோக மாதங்களாகும், இந்த மாதங்களில் எடுக்கும் வேலைகள் வெற்றியாகும், வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும், நினைத்த காரியங்கள் நடந்தேறும், வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.பொதுப்பலன்: பராபவ வருடம் உங்கள் வாழ்வில் மாற்றங்களை உண்டாக்கும் வருடமாக இருக்கும். இதுவரை தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும். திருமணம், குழந்தை பாக்யம், அரசியலில் செல்வாக்கு என்ற நீண்ட நாள் கனவுகள் நனவாகும்.தொழில்: செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வருமானம் உயரும். நிதி நிறுவனம், உதிரி பாகங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, இயந்திர தொழிற்கூடம், வாகன விற்பனை, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், தகவல் தொடர்பு, ஏ.ஐ., ஏற்றுமதி இறக்குமதி, ஆன்லைன் வர்த்தகம், ஜுவல்லரி தொழில்கள் லாபமடையும்.பணியாளர்கள்: வேலையில் ஏற்பட்ட சங்கடங்களும், வேலை மீதிருந்த பயமும் போகும். உங்கள் திறமைக்குரிய மரியாதையும், எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்த பிரச்னைகள், சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாட்டில் வேலைப்பார்த்து வரும் சிலருக்கு பி.ஆர். கிடைக்கும்.பெண்கள்: பராபவ வருடம் பெண்களுக்கு முன்னேற்றமான வருடமாக இருக்கும். உடல் ரீதியாக பாதிப்பு, குடும்பத்தில் பிரச்னை, வேலையில் சங்கடம் என்றிருந்த நிலைகள் மாறும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும், நீண்ட நாட்களாக குழந்தை பாக்யம் இல்லாமல் இருந்தவர்கள் ஏக்கம் தீரும். பொன் பொருள் சேரும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உண்டாகும்.கல்வி: தேர்வுகள் முடிந்து ரிசல்ட்டுக்காக காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சிதரும் வகையில் மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும்.உடல்நிலை: உடல் நிலையில் ஏதேனும் ஒரு தொல்லை ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தவர்களுக்கு சரியான சிகிச்சைகள் கிடைத்து ஆரோக்கியம் சீராகும் என்றாலும், தொடர்ந்து உடல்நிலையில் அக்கறை எடுத்துக் கொள்வது நன்மை அளிக்கும். வாகனப் பயணத்திலும், இயந்திரப் பணியிலும், சுய ஒழுக்கத்திலும் கவனமாக இருப்பது அவசியம்.குடும்பம்: குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் முடிவிற்குவரும். கருத்து வேறுபாட்டால் ஒருவர் சொல்வதை ஒருவர் கேட்காமல் வாழ்ந்து வந்த தம்பதிகளுக்குள் இணக்கமான நிலை உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகளின் படிப்பு, திருமணம், எதிர்காலத்திற்கு தேவையான வசதிகள் என திட்டமிட்டு செயல்படுவீர்கள். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.பரிகாரம்: ராமநாத சுவாமியை வழிபட சங்கடங்கள் விலகும்.

மகரம்: உத்திராடம்: வெற்றிமேல் வெற்றிஆத்ம காரகனான சூரியன் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1ம் பாதமான தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு குரு ராசிநாதனாகவும், 2,3,4ம் பாதங்களான மகர ராசியில் பிறந்தவர்களுக்கு சனி ராசிநாதனாகவும் உள்ளனர். பிறக்கும் பராபவ வருடத்தில் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் முற்பகுதி யோகமாகவும், பிற்பகுதி உழைப்பால் உயரக்கூடிய காலமாகவும் இருக்கும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு எடுத்த வேலைகள் வெற்றியாகும், எண்ணிய காரியங்கள் நடந்தேறும், வசதி வாய்ப்பு அதிகரிக்கும்.சனி சஞ்சாரம்: உத்திராடம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அர்த்தாஷ்டம சனிக்காலம் என்பதால் வேலைபளு கூடும், உத்தியோகத்தில் நெருக்கடி ஏற்படும், தொழிலில் சங்கடங்கள் உருவாகும், உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும், 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் வாழ்க்கை வளமாகும், நீண்டநாள் கனவுகள் நனவாகும், செல்வாக்கு உயரும்.ராகு - கேது சஞ்சாரம்: நவ. 13 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும், அதன்பிறகு ராகு மகரத்திலும் கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால், 1ம் பாதத்தினருக்கு நவ.13 வரை முயற்சி வெற்றியாகும், முன்னேற்றம் உண்டாகும், வசதி வாய்ப்புகள் கூடும், அதன்பின் குடும்ப ஸ்தானத்தில் ராகுவும் அஷ்டம ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் குடும்பம், தொழில், உடல்நிலை என அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும். 2,3,4ம்  பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை குடும்ப ஸ்தானத்தில் ராகு, அஷ்டம ஸ்தானத்தில் கேது, அதன்பின் ஜென்ம ராசியில் ராகு, ஏழாமிடத்தில் கேது என்று சஞ்சரிப்பதால் வருடம் முழுவதும் சர்ப்ப கிரகங்கள் சோதனைகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பர் என்பதால் அனைத்திலும் நிதானம் அவசியம்.குரு சஞ்சாரம்: 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் தொடக்கத்தில் குரு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நினைத்தது நடந்தேறும், வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும், வருமானம் அதிகரிக்கும், திருமண வயதினருக்கு திருமணம், சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். அதன்பின் குருவின் பார்வைகளால் நன்மைகள் அதிகரிக்கும், அர்த்தாஷ்டம சனியின் பாதிப்பு நீங்கும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 26 முதல் சப்தம ஸ்தானத்தில் குரு உச்சமாக சஞ்சரிப்பதால் விருப்பங்கள் பூர்த்தியாகும், செல்வம் செல்வாக்கு உயரும், குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும், பணப்புழக்கம் அதிகரிக்கும். சிலருக்கு சொந்த தொழில் அமையும், வேலையில் உயர்வு கிடைக்கும், வருடம் முழுவதும் குருவின் பார்வைகளால் குடும்பத்தில் நிம்மதியும், பணப்புழக்கமும் இருந்து கொண்டிருக்கும.சூரிய சஞ்சாரம்: 3,6,10,11ம் இடங்களில் சூரியன் சஞ்சரிக்கும்போது ஜாதகருக்கு யோகப் பலன்களை வழங்குவார். அந்த நிலையில் பராபவ வருடத்தில், 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, மாசி, வைகாசி, புரட்டாசி, ஐப்பசி ஆகிய நான்கு மாதங்களும், 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பங்குனி, ஆனி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களும் யோக மாதங்களாகும், இந்த மாதங்களில் எடுக்கும் வேலைகள் வெற்றியாகும், வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும், நினைத்த காரியங்கள் நடந்தேறும், வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.பொதுப்பலன்: பராபவ வருடம் உங்கள் வாழ்வில் மாற்றங்களை உண்டாக்கும் வருடமாக இருக்கும். இதுவரை தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும். திருமணம், குழந்தை பாக்யம், அரசியலில் செல்வாக்கு என்ற நீண்ட நாள் கனவுகள் நனவாகும்.தொழில்: செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வருமானம் உயரும். நிதி நிறுவனம், உதிரி பாகங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, இயந்திர தொழிற்கூடம், வாகன விற்பனை, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், தகவல் தொடர்பு, ஏ.ஐ., ஏற்றுமதி இறக்குமதி, ஆன்லைன் வர்த்தகம், ஜுவல்லரி தொழில்கள் லாபமடையும்.பணியாளர்கள்: வேலையில் ஏற்பட்ட சங்கடங்களும், வேலை மீதிருந்த பயமும் போகும். உங்கள் திறமைக்குரிய மரியாதையும், எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்த பிரச்னைகள், சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாட்டில் வேலைப்பார்த்து வரும் சிலருக்கு பி.ஆர். கிடைக்கும்.பெண்கள்: பராபவ வருடம் பெண்களுக்கு முன்னேற்றமான வருடமாக இருக்கும். உடல் ரீதியாக பாதிப்பு, குடும்பத்தில் பிரச்னை, வேலையில் சங்கடம் என்றிருந்த நிலைகள் மாறும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும், நீண்ட நாட்களாக குழந்தை பாக்யம் இல்லாமல் இருந்தவர்கள் ஏக்கம் தீரும். பொன் பொருள் சேரும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உண்டாகும்.கல்வி: தேர்வுகள் முடிந்து ரிசல்ட்டுக்காக காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சிதரும் வகையில் மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும்.உடல்நிலை: உடல் நிலையில் ஏதேனும் ஒரு தொல்லை ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தவர்களுக்கு சரியான சிகிச்சைகள் கிடைத்து ஆரோக்கியம் சீராகும் என்றாலும், தொடர்ந்து உடல்நிலையில் அக்கறை எடுத்துக் கொள்வது நன்மை அளிக்கும். வாகனப் பயணத்திலும், இயந்திரப் பணியிலும், சுய ஒழுக்கத்திலும் கவனமாக இருப்பது அவசியம்.குடும்பம்: குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் முடிவிற்குவரும். கருத்து வேறுபாட்டால் ஒருவர் சொல்வதை ஒருவர் கேட்காமல் வாழ்ந்து வந்த தம்பதிகளுக்குள் இணக்கமான நிலை உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகளின் படிப்பு, திருமணம், எதிர்காலத்திற்கு தேவையான வசதிகள் என திட்டமிட்டு செயல்படுவீர்கள். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.பரிகாரம்: ராமநாத சுவாமியை வழிபட சங்கடங்கள் விலகும்.திருவோணம்: முயற்சியில் வெற்றிமனக்காரகன் சந்திரன், ஆயுள்காரகன் சனி அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் பராபவ வருடம் யோகமான வருடமாகும். சோதனைமேல் சோதனை என்று தொடர்ந்து சங்கடங்களை அனுபவித்து வந்த நிலையில் இனி மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும், நினைத்ததை சாதிக்கும் நிலை உருவாகும். தொழில் முன்னேற்றமடையும், அரசியலில் எதிர்பார்த்த இடம் கிடைக்கும்.சனி சஞ்சாரம்: உங்கள் ராசிநாதனும், தன குடும்பாதிபதியுமான சனி பகவான், சகாய ஸ்தானமான மூன்றாம் இடத்தில் வருடம் முழுவதும் சஞ்சரிப்பதால், எடுத்த வேலைகள் வெற்றியாகும், இதுவரை இருந்த நெருக்கடிகள் முடிவிற்கு வரும், வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும், தைரியம் அதிகரிக்கும், உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும், வாழ்வில் நிம்மதி உண்டாகும்.ராகு - கேது சஞ்சாரம்: நவ. 13 வரை ராகு இரண்டாம் இடமான தன குடும்ப ஸ்தானத்திலும், கேது அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சரித்து, அதன்பின் ராகு ராசிக்குள்ளும் கேது ஏழாமிடத்திலும் சஞ்சரிப்பதால் வருடம் முழுவதும் சர்ப்ப கிரகங்கள் உங்களை சங்கடத்திற்கு ஆளாக்குவர், உடல்நிலையில் பாதிப்பு, மறைமுகத்தொல்லைகள், குடும்பத்தில் குழப்பம், பணத்தடை, தவறான நட்புகளால் செல்வாக்கில் பின்னடைவு, கவரவத்திற்கு இழுக்கு என்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் அனைத்திலும் கவனமாகவும் கட்டுப்பாட்டுடனும் நடந்து கொள்வது அவசியம்.குரு சஞ்சாரம்: மே 26 வரை குருவின் பார்வைகள் தொழில் மற்றும் விரயம், குடும்ப ஸ்தானங்களுக்கு உண்டாவதால் செய்துவரும் தொழில் லாபம்தரும், உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும், வீண் செலவுகள் குறையும், பணப்புழக்கம் இருக்கும், குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். மே 26 முதல் சப்தம ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குருவால் உங்கள் நீண்டநாள் கனவுகள் நனவாகும், விருப்பங்கள் பூர்த்தியாகும், வருமானம் அதிகரிக்கும், திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும், திருமணம், குழந்தை பாக்யம், சொந்த வீடு, வாகனம், செல்வாக்கு என்ற கனவுகள் நனவாகும்.சூரிய சஞ்சாரம்: ஆத்ம காரகனான சூரியன், பங்குனி, ஆனி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதக் காலங்களும் தனது 3,6,10,11 ம் இட சஞ்சாரங்களால் உங்கள் நிலையில் உயர்வினை ஏற்படுத்துவார், செல்வாக்கோடு நடைபோட வைப்பார்,  எடுக்கும் வேலைகளை வெற்றியாக்குவார், வியாபாரம் தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார், வசதி வாய்ப்புகளை அதிகரிப்பார், புதிய பொறுப்பு, பதவி என்று அதிகாரத்துடன் வாழக்கூடிய நிலையை உருவாக்குவார்.பொதுப்பலன்: எந்த ஒரு வேலையை எடுத்தாலும் அதில் ஏதாவது ஒரு தடை, தாமதம் போராட்டம் என்றிருந்த நிலைமாறும். உங்கள் திறமை வெளிப்படும், தடைபட்ட வேலைகள் நடந்தேறும், செல்வம், செல்வாக்கு, அந்தஸ்தோடு வாழக்கூடிய நிலை உருவாகும். நீண்ட நாட்களாக உங்களுக்கு கனவாகவே இருந்த ஒவ்வொன்றும் இந்த நேரத்தில் உங்களைத்தேடி வரும். தொழில்: தொழிலில் இருந்த தடைகள் விலகும், இதுவரை உற்பத்தி, விற்பனை, வரவு என ஒவ்வொன்றிலும் போராட்டங்களை சந்தித்து வந்த உங்களுக்கு இனி சுபிட்சமான நிலை உருவாகும், வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த தொழில் சொந்தக் கட்டிடத்தில் செயல்படத் தொடங்கும், உதிரி பாகங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, இயந்திரத் தொழிற்கூடம், வாகனம் தயாரிப்பு மற்றும் விற்பனை, கால்நடை வளர்ப்பு, எண்ணெய் வர்த்தகம், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சேல்ஸ் அண்ட் சர்வீஸ், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பொருட்கள், பால், குடிநீர் தயாரிப்பு மற்றும் விற்பனை, ஜவுளி தொழில்கள் முன்னேற்றம் அடையும்.பணியாளர்கள்: வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும், உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும், தடைபட்டு வந்த பதவி உயர்வையும் சலுகைகளையும் நிர்வாகமே வழங்கும், அரசு பணியாளர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு உண்டாகும், சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும், தடைபட்டு வந்த பதவி உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும்.பெண்கள்: மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல்வேறு சங்கடங்களை அனுபவித்து வந்த உங்களுக்கு, இனி அவற்றிலிருந்து விடுதலைக் கிடைக்கும், எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும், குடும்பத்தில் மரியாதை அதிகரிக்கும், வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும், கணவருடன் இணக்கமான நிலை உண்டாகும், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும், சுய தொழில் செய்து வருபவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும், வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும், திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு மாங்கல்யம் ஏறும்.கல்வி: பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லூரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் சேர முடியும்.உடல்நிலை: பரம்பரை நோய், தொற்று நோய், விபத்து, மன அழுத்தம், செரிமானக் கோளாறு, அல்சர், இளைப்பு என்று தொடர்ந்து மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தவர்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியமாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும் என்றாலும், அஷ்டம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் உடல் நிலையில் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருப்பது நன்மை அளிக்கும்.குடும்பம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பொருளாதார நிலை உயரும், புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும், தம்பதிகளுக்குள் இணக்கமான நிலை உண்டாகும். குடும்பத்தில் மங்கள ஓசை கேட்கும், சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும், செல்வாக்கோடு வாழும் நிலை உண்டாகும்.பரிகாரம்: ராகு கேதுவிற்கு பரிகார பூஜை செய்து காளத்தீஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும்.அவிட்டம்: நினைத்தது நிறைவேறும்தைரிய வீரிய காரகனான செவ்வாய் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2ம் பாதங்களான மகர ராசியில் பிறந்தவர்களுக்கும், 3,4ம் பாதங்களான கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கும் சனி பகவானே ராசி நாதனாவார். பராபவ வருடத்தில் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முயற்சிகள் வெற்றியடையும் வருடமாக, நினைப்பது நடந்தேறும் காலமாக இருக்கும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குருப் பார்வையுடன் வருடம் பிறப்பதால் தொட்டதெல்லாம் பொன்னாகும், எடுத்ததெல்லாம்வெற்றியாகும். வாழ்வில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.சனி சஞ்சாரம்: அவிட்டம் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சகாய ஸ்தான சனி, வெற்றிமேல் வெற்றிகளை வழங்குவார், வியாபாரம் தொழில் உத்தியோகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வார்த்தைகளால் சங்கடங்கள் தோன்றும், வரவு செலவில் நெருக்கடி ஏற்படும், குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை இருக்கும்.ராகு - கேது சஞ்சாரம்: 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வருடம் முழுவதும் சர்ப்ப கிரகங்கள் எதிர்மறையாக சஞ்சரிப்பதால், உடல்நிலையில் பாதிப்பு, மறைமுகத்தொல்லை, குடும்பத்தில் குழப்பம், பணவரவில் தடை, தவறான பழக்க வழக்கங்களால் அவமானம் என ஏற்படும். 2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.13 முதல் கேது சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செல்வாக்கு உயரும், வம்பு வழக்குகள் சாதகமாகும், உடல்நிலை சீராகும், நினைத்த வேலைகள் நடந்தேறும்.குரு சஞ்சாரம்: 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 26 வரை குருவின் பார்வைகளால் செய்துவரும் தொழில் லாபம்தரும், உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும், வீண் செலவுகள் குறையும், பணப்புழக்கம் இருக்கும், குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். மே 26 முதல் நீண்டநாள் கனவுகள் நனவாகும், விருப்பங்கள் பூர்த்தியாகும், வருமானம் அதிகரிக்கும், திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் தொடக்கமே,  குருப்பார்வையுடன் பிறப்பதால் குரு பார்க்க கோடி புண்ணியம் என்ற வார்த்தைக்கேற்ப, உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம், சொந்த வீடு, வாகனம், செல்வாக்கு என அவரவர் கனவுகள் நனவாகும்.சூரிய சஞ்சாரம்: ஆத்ம காரகனான சூரியன், அவரவர் ராசிக்கு 3,6,10,11ம் வீடுகளில் சஞ்சரிக்கும் காலங்களில் முன்னேற்றத்தை வழங்குவார். அந்த நிலையில், 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, பங்குனி, ஆனி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதக் காலங்களிலும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சித்திரை, ஆடி, கார்த்திகை, மார்கழி ஆகிய நான்கு மாதக் காலங்களிலும் உங்கள் நிலையில் உயர்வினை ஏற்படுத்துவார்.பொதுப்பலன்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும், வருமானம் உயரும், புதிய சொத்து சேரும், வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும், புதிய தொழில் தொடங்கும் கனவு நனவாகும், ஆரோக்கியமாகவும், மதிப்புடனும், மகிழ்ச்சியுடனும் வாழ முடியும்.தொழில்: தொழிலில் உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலகும். உற்பத்தி அதிகரிக்கும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். பணியாளர் ஆதரவு கிடைக்கும். ரியல் எஸ்டேட், மெடிக்கல், மருத்துவம் சார்ந்த தொழில்கள், கெமிக்கல், உணவகம், ரசாயன விற்பனை, ஆயில் ஸ்டோர், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, உதிரி பாகங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, ஆட்டோ மொபைல்ஸ், வாகன விற்பனை, ட்ராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம் வளர்ச்சி அடையும்.பணியாளர்கள்: வேலைப் பார்க்கும் இடத்தில் தொடர்ந்து சங்கடங்களை சந்தித்து வந்தவர்களுக்கு இனி அதில் மாற்றம் ஏற்படும், உழைப்பிற்கு ஏற்ற வருமானம் இல்லை, சலுகைகள் இல்லை என்று வருத்தப்பட்டு வந்த நிலை மாறும், உங்கள் திறமையை நிர்வாகம் அங்கீகரிக்கும், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும், அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு இந்த வருடத்தில் கிடைக்கும்.பெண்கள்: வாழ்க்கையின் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தவர்களுக்கு பிறக்கும் பராபவ வருடம் நம்பிக்கையை உண்டாக்கும் வருடமாக இருக்கும். நீண்டநாள் முயற்சிகள் வெற்றியாகும், குடும்பத்தில் நிம்மதியான நிலை உருவாகும், கணவன் மனைவிக்குள் இணக்கம் அதிகரிக்கும், வெளியூரில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு சொந்த ஊருக்கு மாறுதல் கிடைக்கும், பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும், உயர்கல்வி வேலை திருமணம் குழந்தை பாக்யம் என்று அவரவர் தேவைக்கேற்றவை பூர்த்தியாகும், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும், பொன் பொருள் சேரும்.கல்வி: குரு சஞ்சாரமும் பார்வைகளும் சாதகமாக இருப்பதால் பொதுத் தேர்வின் முடிவு உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும், உயர்கல்வி கனவு நனவாகும், விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலை: பரம்பரை நோய், தொற்று நோய், விபத்து என்று மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும், ஆரோக்கியம் சீராகும் என்றாலும், ஆயுள் காரகன் சனியின் பார்வையும், கேதுவும் உங்களுக்கு சங்கடத்தை உண்டாக்கலாம் என்பதால் வாகனப் பயணத்திலும், இயந்திரப் பணிகளிலும், சுய ஒழுக்கத்திலும் கவனமாக இருப்பது நன்மையை உண்டாக்கும்.குடும்பம்: பெரும் புயல் வீசி ஓய்ந்ததுபோல் குடும்பத்தில் அமைதி உண்டாகும். நெருக்கடிகள் நீங்கும், தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்படும், புதிய இடம், வீடு நவீன பொருட்கள் வாகனம் என்று வாங்க நீண்டநாட்களாக மேற்கொண்டு வந்த முயற்சி வெற்றியாகும், பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும், அவர்களுடைய  உயர்கல்வி, வேலை, திருமணத்திற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும், குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும்.பரிகாரம்: மடப்புரம் மாகாளியை வழிபட மங்கலம் உண்டாகும். மனக்கவலை விலகும்.

கும்பம்: அவிட்டம்: நினைத்தது நிறைவேறும்தைரிய வீரிய காரகனான செவ்வாய் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2ம் பாதங்களான மகர ராசியில் பிறந்தவர்களுக்கும், 3,4ம் பாதங்களான கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கும் சனி பகவானே ராசி நாதனாவார். பராபவ வருடத்தில் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முயற்சிகள் வெற்றியடையும் வருடமாக, நினைப்பது நடந்தேறும் காலமாக இருக்கும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குருப் பார்வையுடன் வருடம் பிறப்பதால் தொட்டதெல்லாம் பொன்னாகும், எடுத்ததெல்லாம்வெற்றியாகும். வாழ்வில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.சனி சஞ்சாரம்: அவிட்டம் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சகாய ஸ்தான சனி, வெற்றிமேல் வெற்றிகளை வழங்குவார், வியாபாரம் தொழில் உத்தியோகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வார்த்தைகளால் சங்கடங்கள் தோன்றும், வரவு செலவில் நெருக்கடி ஏற்படும், குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை இருக்கும்.ராகு - கேது சஞ்சாரம்: 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வருடம் முழுவதும் சர்ப்ப கிரகங்கள் எதிர்மறையாக சஞ்சரிப்பதால், உடல்நிலையில் பாதிப்பு, மறைமுகத்தொல்லை, குடும்பத்தில் குழப்பம், பணவரவில் தடை, தவறான பழக்க வழக்கங்களால் அவமானம் என ஏற்படும். 2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.13 முதல் கேது சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செல்வாக்கு உயரும், வம்பு வழக்குகள் சாதகமாகும், உடல்நிலை சீராகும், நினைத்த வேலைகள் நடந்தேறும்.குரு சஞ்சாரம்: 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 26 வரை குருவின் பார்வைகளால் செய்துவரும் தொழில் லாபம்தரும், உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும், வீண் செலவுகள் குறையும், பணப்புழக்கம் இருக்கும், குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். மே 26 முதல் நீண்டநாள் கனவுகள் நனவாகும், விருப்பங்கள் பூர்த்தியாகும், வருமானம் அதிகரிக்கும், திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் தொடக்கமே,  குருப்பார்வையுடன் பிறப்பதால் குரு பார்க்க கோடி புண்ணியம் என்ற வார்த்தைக்கேற்ப, உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம், சொந்த வீடு, வாகனம், செல்வாக்கு என அவரவர் கனவுகள் நனவாகும்.சூரிய சஞ்சாரம்: ஆத்ம காரகனான சூரியன், அவரவர் ராசிக்கு 3,6,10,11ம் வீடுகளில் சஞ்சரிக்கும் காலங்களில் முன்னேற்றத்தை வழங்குவார். அந்த நிலையில், 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, பங்குனி, ஆனி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதக் காலங்களிலும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சித்திரை, ஆடி, கார்த்திகை, மார்கழி ஆகிய நான்கு மாதக் காலங்களிலும் உங்கள் நிலையில் உயர்வினை ஏற்படுத்துவார்.பொதுப்பலன்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும், வருமானம் உயரும், புதிய சொத்து சேரும், வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும், புதிய தொழில் தொடங்கும் கனவு நனவாகும், ஆரோக்கியமாகவும், மதிப்புடனும், மகிழ்ச்சியுடனும் வாழ முடியும்.தொழில்: தொழிலில் உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலகும். உற்பத்தி அதிகரிக்கும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். பணியாளர் ஆதரவு கிடைக்கும். ரியல் எஸ்டேட், மெடிக்கல், மருத்துவம் சார்ந்த தொழில்கள், கெமிக்கல், உணவகம், ரசாயன விற்பனை, ஆயில் ஸ்டோர், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, உதிரி பாகங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, ஆட்டோ மொபைல்ஸ், வாகன விற்பனை, ட்ராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம் வளர்ச்சி அடையும்.பணியாளர்கள்: வேலைப் பார்க்கும் இடத்தில் தொடர்ந்து சங்கடங்களை சந்தித்து வந்தவர்களுக்கு இனி அதில் மாற்றம் ஏற்படும், உழைப்பிற்கு ஏற்ற வருமானம் இல்லை, சலுகைகள் இல்லை என்று வருத்தப்பட்டு வந்த நிலை மாறும், உங்கள் திறமையை நிர்வாகம் அங்கீகரிக்கும், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும், அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு இந்த வருடத்தில் கிடைக்கும்.பெண்கள்: வாழ்க்கையின் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தவர்களுக்கு பிறக்கும் பராபவ வருடம் நம்பிக்கையை உண்டாக்கும் வருடமாக இருக்கும். நீண்டநாள் முயற்சிகள் வெற்றியாகும், குடும்பத்தில் நிம்மதியான நிலை உருவாகும், கணவன் மனைவிக்குள் இணக்கம் அதிகரிக்கும், வெளியூரில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு சொந்த ஊருக்கு மாறுதல் கிடைக்கும், பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும், உயர்கல்வி வேலை திருமணம் குழந்தை பாக்யம் என்று அவரவர் தேவைக்கேற்றவை பூர்த்தியாகும், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும், பொன் பொருள் சேரும்.கல்வி: குரு சஞ்சாரமும் பார்வைகளும் சாதகமாக இருப்பதால் பொதுத் தேர்வின் முடிவு உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும், உயர்கல்வி கனவு நனவாகும், விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலை: பரம்பரை நோய், தொற்று நோய், விபத்து என்று மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும், ஆரோக்கியம் சீராகும் என்றாலும், ஆயுள் காரகன் சனியின் பார்வையும், கேதுவும் உங்களுக்கு சங்கடத்தை உண்டாக்கலாம் என்பதால் வாகனப் பயணத்திலும், இயந்திரப் பணிகளிலும், சுய ஒழுக்கத்திலும் கவனமாக இருப்பது நன்மையை உண்டாக்கும்.குடும்பம்: பெரும் புயல் வீசி ஓய்ந்ததுபோல் குடும்பத்தில் அமைதி உண்டாகும். நெருக்கடிகள் நீங்கும், தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்படும், புதிய இடம், வீடு நவீன பொருட்கள் வாகனம் என்று வாங்க நீண்டநாட்களாக மேற்கொண்டு வந்த முயற்சி வெற்றியாகும், பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும், அவர்களுடைய  உயர்கல்வி, வேலை, திருமணத்திற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும், குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும்.பரிகாரம்: மடப்புரம் மாகாளியை வழிபட மங்கலம் உண்டாகும். மனக்கவலை விலகும்.சதயம்: உயர்வு காத்திருக்குகர்மக்காரகன் சனி, யோகக்காரகன் ராகு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் பராபவ வருடம் வெற்றிமேல் வெற்றியடையும் வருடமாக இருக்கும், ஆச்சரியப்படக் கூடிய வகையில் உங்கள் நிலையில் உயர்வு ஏற்படும், செல்வாக்கோடு வாழும் நிலை உண்டாகும். சனி சஞ்சாரம்: ஜென்ம ராசியை விட்டு சனி விலகிவிட்டதால் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும், முடங்கிய தொழில் முன்னேற்றமடையும், வருமானம் உயரும், எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும், குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும், உங்களைத் தவறாக வழிநடத்தியவர்கள், உங்களுடன் இருந்து கொண்டே உங்களுக்கு எதிராக மறைமுகமாக செயல்பட்டவர்கள் உங்களை விட்டு விலகுவர். என்றாலும்,  உடல்நிலையில் கவனமாக இருப்பது அவசியம்.ராகு - கேது சஞ்சாரம்: நவ.13 வரை ஜென்ம ராசிக்குள் ராகு, ஏழாமிடத்தில் கேது சஞ்சரிப்பதால் ஆசைக்கு அணை போடுவதும், தவறான நண்பர்களை விட்டு விலகுவதும், குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும் நன்மையளிக்கும். நவ. 13 முதல் சத்ரு ஜெய ஸ்தானத்தில் கேது  சஞ்சரிப்பதால் எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும், எதிரிகளை வெல்லக்கூடிய அளவிற்கு உங்கள் செல்வாக்கு உயரும், இழுபறியாக இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும், உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும், எடுக்கும் வேலைகள் தடையின்றி நடந்தேறும்.குரு சஞ்சாரம்: பராபவ  வருடம் பிறக்கும்போது குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன் உங்கள் ராசியையும் பார்ப்பதால் வருடத்தின் தொடக்கமே உங்களுக்கு சாதகமாக இருக்கிறது, பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும், சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும், குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் விலகும், பணம், பட்டம், பதவி, செல்வாக்கு, அந்தஸ்து என்று உங்கள் நிலை உயரும், திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். மே 26 முதல் குரு, ருண ரோக ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரித்தாலும் அவருடைய பார்வைகளால் வியாபாரம் தொழில் லாபமடையும், வீண் செலவுகள் கட்டுப்படும், பாத சனியால் ஏற்படும் பாதகங்கள் விலகும்.சூரிய சஞ்சாரம்: சூரியன் அவரவர் ராசிக்கு 3,6,10,11ம் வீடுகளில் சஞ்சரிக்கும் காலங்களில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை ஏற்படுத்துவார், பொருளாதார நிலையை உயர்த்துவார், வசதி வாய்ப்புகளை அதிகரிப்பார், செல்வாக்கோடு நடைபோட வைப்பார். அந்த நிலையில் சித்திரை, ஆடி, கார்த்திகை, மார்கழி ஆகிய நான்கு மாதங்களும் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார், எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார்.பொதுப்பலன்: வருடத்தின் முதல்நாளே உங்கள் ராசியில் பிறப்பதுடன், ராசிக்கு குருப்பார்வையும் உண்டாவதால் பராபவ வருடம் மிக யோகமான வருடமாக இருக்கும், இதுவரை உங்களுக்கேற்பட்ட நெருக்கடிகள் பிரச்னைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். உங்கள் நீண்டநாள் கனவுகள் நனவாகும், செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும், சிலர் சொந்த வீட்டில் பால் காய்ச்சுவீர்கள், அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு பதவி கிடைக்கும்.தொழில்: தொழில் காரகன் சனி பகவானின் 10ம் பார்வை லாப ஸ்தானத்திற்கு கிடைப்பதால் வரவு அதிகரிக்கும், நஷ்டத்தில் இயங்கிய தொழில்களும் இனி லாபமடையும், எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும், வரவேண்டிய பணம் வரும். ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம், நிதி நிறுவனம், சினிமா, தொலைக்காட்சி, மருத்துவம் சார்ந்த தொழில்கள்,  கெமிக்கல், ரசாயனம், இயந்திரத் தொழில் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பு, வாகன உற்பத்தி மற்றும் விற்பனை, ஜுவல்லரி, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், ஆன்லைன் வர்த்தகம்,  ஆட்டோமொபைல்ஸ், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், உணவகம், செங்கல் தயாரிப்பு, எம்சேண்ட் தொழில்கள் வளர்ச்சி அடையும்.பணியாளர்கள்: ராசியை விட்டு சனி பகவான் விலகியதுடன், ராசிக்கு குருப்பார்வையும் கிடைப்பதால் உங்களிடம் இருந்த மந்தநிலை விலகும், மனக்கவலை நீங்கும், வேலையில் அக்கறை கூடும், எடுத்த வேலைகளை உடனுக்குடன் முடித்துக் கொடுப்பீர்கள், உங்கள் திறமையின் காரணமாக நிர்வாகத்தின் ஆதரவும் எதிர்பார்த்த சம்பளமும் சலுகைகளும் தேடிவரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தள்ளிப்போன பதவி உயர்வும் இடமாற்றமும் இந்த நேரத்தில் கிடைக்கும்.பெண்கள்: வாழ்க்கையையும் உடல் நிலையையும் நினைத்து சங்கடப்பட்டுக் கொண்டிருந்த நிலைமாறும், குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும், வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும், வாழ்க்கைத்துணை உங்களைப் புரிந்துகொண்டு ஆதரவாக இருப்பார், குடும்பம் உங்கள் கட்டுப்பாட்டில் வரும், பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும், பொன் பொருள் சேரும்.கல்வி: ஐந்தாமிட குரு உயர் கல்வியை நோக்கி உங்களை நடைபோட வைப்பார், தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்னதாகவே உயர் கல்விக்கு திட்டமிடுவீர்கள், தேர்வு முடிவும் நீங்கள் எதிர்பார்த்ததுபோல் இருக்கும், எதிர்பார்த்த கல்லூரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலை: இரண்டாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வைகள் சுகம் மற்றும் அஷ்டம ஸ்தானத்திற்கு கிடைப்பதால், உடல் நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையாகும், வாகனப் பயணத்தில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம்,  உடல் நிலையில் அவ்வப்போது ஏதேனும் சங்கடங்கள் ஏற்படும் என்றாலும், மே.26 வரை ராசிக்கு குருப் பார்வை ஏற்படுவதாலும், அதன்பிறகு சனி பகவானை குரு பார்ப்பதாலும் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதுபோல் நோய் நொடிகளும் ஆபத்தும் விலகும்.குடும்பம்: ஜென்ம சனிக்காலம் முடிந்து, குடும்ப ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் இக்காலத்தில், குரு பகவானின் சஞ்சாரமும் பார்வைகளும் உங்களைப் பாதுகாக்கும், எடுத்த வேலைகளை வெற்றியாக்கும், எதிர்பார்த்த முன்னேற்றத்தை உண்டாக்கும், பொன், பொருள், வீடு, மனை, வாகனம் என்ற முயற்சிகள் வெற்றியாகும், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும், தம்பதிக்குள் இணக்கமான நிலை உருவாகும், பிள்ளைகளுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் விலகும், அவர்களுடைய எதிர்காலத்திற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும்.பரிகாரம்: திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் நடக்கும்.பூரட்டாதி: நிதானம் அவசியம்தன, புத்திரக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1,2,3ம் பாதங்களான கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு சனி ராசிநாதனாகவும், 4ம் பாதமான மீன ராசியில் பிறந்தவர்களுக்கு குருவே ராசிநாதனாகவும் உள்ளனர். 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குருப்பார்வையுடன் வருடம் பிறப்பதால் வாழ்க்கை வளமாகும், வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும், பொன்னும் பொருளும் சேரும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சத்ரு ஜெய ஸ்தான கேதுவால் தடைபட்ட வேலைகள் நடந்தேறும், ஆரோக்கியம் மேம்படும், செல்வாக்கு உயரும்.சனி சஞ்சாரம்: பூரட்டாதி 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு உடல்நிலை சீராகும், வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும், வருமானம் அதிகரிக்கும், விருப்பங்கள் பூர்த்தியாகும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வீண் செலவுகள் குறையும், சேமிப்பு உயரும் என்றாலும் நட்பு வட்டத்தில் விரிசல் ஏற்படும்,  வாழ்க்கைத் துணையுடன் இணக்கமற்ற நிலை உண்டாகும், செய்துவரும் தொழிலிலும் பார்த்துவரும் வேலையிலும் போராட்டமான நிலை இருக்கும் என்பதால் அனைத்திலும் நிதானம் அவசியம்.ராகு - கேது சஞ்சாரம்: நவ.13 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரித்து, அதன்பின் ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால், 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, நவ. 13 முதல் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது செல்வாக்கை உயர்த்துவார், நினைத்ததை சாதிக்கும் நிலையை உருவாக்குவார், நோய் நொடி வம்பு வழக்குகள் இல்லாமல் வாழவைப்பார். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவ. 13 வரை சத்ரு ஜெய ஸ்தான கேதுவும், அதன்பின் லாப ஸ்தான ராகுவும் வெற்றிமேல் வெற்றிகளை உண்டாக்குவர், வருமானத்தை அதிகரிப்பர், நினைத்ததை நினைத்தபடி நடத்தி முடித்திடக்கூடிய வலிமையை உண்டாக்குவர், சூழ்நிலைகளை சாதகமாக்குவர்.குரு சஞ்சாரம்: 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வருடம் பிறக்கும்போது குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன் ராசியையும் பார்ப்பதால் வருடத்தின் தொடக்கமே சாதகமாக இருக்கிறது, குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும், பணம், பட்டம், பதவி, செல்வாக்கு, அந்தஸ்து என்ற நிலை உருவாகும், மே 26 முதல் குருவின் பார்வைகளால் வியாபாரம் தொழில் லாபமடையும், வீண் செலவுகள் கட்டுப்படும், பாத சனியால் ஏற்படும் பாதகங்கள் விலகும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் முற்பகுதியில் எடுத்த வேலைகள் வெற்றியாகும், உடல்நிலை சீராகும், வியாபாரம் தொழில் வளர்ச்சி அடையும், வீண் செலவுகளும் அலைச்சலும் குறையும். மே 26 முதல் ஐந்தாமிடத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் ஜென்ம சனியின் பாதிப்புகள் விலகும், உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாகும், செல்வாக்கு அந்தஸ்து உயரும், குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும்.சூரிய சஞ்சாரம்: ஆத்ம காரகன் சூரியன் ஒவ்வொரு ராசியினருக்கும் 3,6,10,11ம் இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் அந்த ஜாதகருக்கு சங்கடங்கள் விலகி நன்மைகள் நடக்கும், யோகப் பலன்கள் உண்டாகும், பட்டம் பதவி, அந்தஸ்து, செல்வாக்கு, தொழில், உத்தியோகம் என்ற முயற்சிகள் வெற்றியாகும், அந்த நிலையில் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சித்திரை, ஆடி, கார்த்திகை, மார்கழி ஆகிய நான்கு மாதங்களும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வைகாசி, ஆவணி, மார்கழி, தை ஆகிய நான்கு மாதங்களும் நினைத்த காரியம் நடந்தேறும், எடுத்த வேலைகள் வெற்றியாகும். பொதுப்பலன்: குருவின் சஞ்சாரங்களும் பார்வைகளும், ராகு, கேதுவும் பராபவ வருடத்தில் சாதகமாக சஞ்சரிப்பதால் நெருக்கடிகள் விலகும், போராட்ட நிலை மாறும், பணப்புழக்கம் அதிகரிக்கும், பொன்பொருள் சேரும், குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும், வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும், வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும், வாழ்க்கை வளமாகும்.தொழில்: தொழில்மீது அக்கறை அதிகரிக்கும், திட்டமிட்டு செயல்பட்டு முன்னேற்றம் அடைவீர்கள், தொழிலாளர்கள் உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். ஜுவல்லரி, ஆடை வர்த்தகம், சிறு குறு நிறுவனங்கள், பெரு வணிகம், நிதி நிறுவனம், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி மற்றும் விற்பனை, ஆட்டோ மொபைல்ஸ், ஸ்பேர் ஃபார்ட்ஸ் தயாரிப்பு, ஃபேக்டரி, ட்ராவல்ஸ், எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர், ஏற்றுமதி இறக்குமதி, ஏ.ஐ., ஆன்லைன் வர்த்தகம் லாபம்தரும்.பணியாளர்கள்: வேலையில் ஏற்பட்ட நெருக்கடி மற்றும் பிரச்சனைகள் முடிவிற்கு வரும், சிலருக்கு வெளி நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும், திறமைக்குரிய அங்கீகாரமும் எதிர்பார்த்த ஊதியமும் சலுகைகளும் கிடைக்கும், அரசு பணியில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும்.பெண்கள்: மங்களக்காரகன் குருவும், சர்ப்ப கிரகங்களான ராகு, கேதுவும் வருடம் முழுவதும் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும், இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும், குடும்பத்தினர் மற்றும் வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும், வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும், சுய தொழில் செய்து வருபவர்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும், பிள்ளைகளால் பெருமை உண்டாகும், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும், பொன் பொருள் சேரும். கல்வி: பொது மற்றும் போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைப்பதுடன், விரும்பிய கல்லூரியில் எதிர்பார்த்த பாடப் பிரிவில் இடம் கிடைக்கும்.உடல்நிலை: ஆயுள் காரகன் சனி பகவானின் சஞ்சாரமும் பார்வைகளும் உங்களுக்கு அவ்வப்போது சில சங்கடங்களை ஏற்படுத்தும் என்றாலும் குருப்பார்வைகளும், கேதுவின் சிம்ம, கடக சஞ்சாரங்களும் உங்களைப் பாதுகாக்கும், பெரிய அளவில் பயமுறுத்திய நோய்களும் மருத்துவத்திற்கு கட்டுப்படும். ஆரோக்கியம் மேம்படும், சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள்.குடும்பம்: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும், எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும், புதிய இடம் வீடு வாகனம் பொன் பொருள் என்ற முயற்சி வெற்றியாகும், தம்பதிகளிடம் இணக்கமான நிலை உண்டாகும், வீட்டில் மங்கல ஒலி கேட்கும், பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும், வெளி வட்டாரத்தில் செல்வாக்குடன் வாழ்வீர்கள்.பரிகாரம்: திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரரை வழிபட தடைகள் விலகும், நன்மைகள் நடக்கும்.

மீனம்: பூரட்டாதி: நிதானம் அவசியம்தன, புத்திரக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1,2,3ம் பாதங்களான கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு சனி ராசிநாதனாகவும், 4ம் பாதமான மீன ராசியில் பிறந்தவர்களுக்கு குருவே ராசிநாதனாகவும் உள்ளனர். 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குருப்பார்வையுடன் வருடம் பிறப்பதால் வாழ்க்கை வளமாகும், வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும், பொன்னும் பொருளும் சேரும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சத்ரு ஜெய ஸ்தான கேதுவால் தடைபட்ட வேலைகள் நடந்தேறும், ஆரோக்கியம் மேம்படும், செல்வாக்கு உயரும்.சனி சஞ்சாரம்: பூரட்டாதி 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு உடல்நிலை சீராகும், வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும், வருமானம் அதிகரிக்கும், விருப்பங்கள் பூர்த்தியாகும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வீண் செலவுகள் குறையும், சேமிப்பு உயரும் என்றாலும் நட்பு வட்டத்தில் விரிசல் ஏற்படும்,  வாழ்க்கைத் துணையுடன் இணக்கமற்ற நிலை உண்டாகும், செய்துவரும் தொழிலிலும் பார்த்துவரும் வேலையிலும் போராட்டமான நிலை இருக்கும் என்பதால் அனைத்திலும் நிதானம் அவசியம்.ராகு - கேது சஞ்சாரம்: நவ.13 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரித்து, அதன்பின் ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால், 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, நவ. 13 முதல் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது செல்வாக்கை உயர்த்துவார், நினைத்ததை சாதிக்கும் நிலையை உருவாக்குவார், நோய் நொடி வம்பு வழக்குகள் இல்லாமல் வாழவைப்பார். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவ. 13 வரை சத்ரு ஜெய ஸ்தான கேதுவும், அதன்பின் லாப ஸ்தான ராகுவும் வெற்றிமேல் வெற்றிகளை உண்டாக்குவர், வருமானத்தை அதிகரிப்பர், நினைத்ததை நினைத்தபடி நடத்தி முடித்திடக்கூடிய வலிமையை உண்டாக்குவர், சூழ்நிலைகளை சாதகமாக்குவர்.குரு சஞ்சாரம்: 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வருடம் பிறக்கும்போது குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன் ராசியையும் பார்ப்பதால் வருடத்தின் தொடக்கமே சாதகமாக இருக்கிறது, குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும், பணம், பட்டம், பதவி, செல்வாக்கு, அந்தஸ்து என்ற நிலை உருவாகும், மே 26 முதல் குருவின் பார்வைகளால் வியாபாரம் தொழில் லாபமடையும், வீண் செலவுகள் கட்டுப்படும், பாத சனியால் ஏற்படும் பாதகங்கள் விலகும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் முற்பகுதியில் எடுத்த வேலைகள் வெற்றியாகும், உடல்நிலை சீராகும், வியாபாரம் தொழில் வளர்ச்சி அடையும், வீண் செலவுகளும் அலைச்சலும் குறையும். மே 26 முதல் ஐந்தாமிடத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் ஜென்ம சனியின் பாதிப்புகள் விலகும், உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாகும், செல்வாக்கு அந்தஸ்து உயரும், குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும்.சூரிய சஞ்சாரம்: ஆத்ம காரகன் சூரியன் ஒவ்வொரு ராசியினருக்கும் 3,6,10,11ம் இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் அந்த ஜாதகருக்கு சங்கடங்கள் விலகி நன்மைகள் நடக்கும், யோகப் பலன்கள் உண்டாகும், பட்டம் பதவி, அந்தஸ்து, செல்வாக்கு, தொழில், உத்தியோகம் என்ற முயற்சிகள் வெற்றியாகும், அந்த நிலையில் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சித்திரை, ஆடி, கார்த்திகை, மார்கழி ஆகிய நான்கு மாதங்களும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வைகாசி, ஆவணி, மார்கழி, தை ஆகிய நான்கு மாதங்களும் நினைத்த காரியம் நடந்தேறும், எடுத்த வேலைகள் வெற்றியாகும். பொதுப்பலன்: குருவின் சஞ்சாரங்களும் பார்வைகளும், ராகு, கேதுவும் பராபவ வருடத்தில் சாதகமாக சஞ்சரிப்பதால் நெருக்கடிகள் விலகும், போராட்ட நிலை மாறும், பணப்புழக்கம் அதிகரிக்கும், பொன்பொருள் சேரும், குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும், வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும், வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும், வாழ்க்கை வளமாகும்.தொழில்: தொழில்மீது அக்கறை அதிகரிக்கும், திட்டமிட்டு செயல்பட்டு முன்னேற்றம் அடைவீர்கள், தொழிலாளர்கள் உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். ஜுவல்லரி, ஆடை வர்த்தகம், சிறு குறு நிறுவனங்கள், பெரு வணிகம், நிதி நிறுவனம், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி மற்றும் விற்பனை, ஆட்டோ மொபைல்ஸ், ஸ்பேர் ஃபார்ட்ஸ் தயாரிப்பு, ஃபேக்டரி, ட்ராவல்ஸ், எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர், ஏற்றுமதி இறக்குமதி, ஏ.ஐ., ஆன்லைன் வர்த்தகம் லாபம்தரும்.பணியாளர்கள்: வேலையில் ஏற்பட்ட நெருக்கடி மற்றும் பிரச்சனைகள் முடிவிற்கு வரும், சிலருக்கு வெளி நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும், திறமைக்குரிய அங்கீகாரமும் எதிர்பார்த்த ஊதியமும் சலுகைகளும் கிடைக்கும், அரசு பணியில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும்.பெண்கள்: மங்களக்காரகன் குருவும், சர்ப்ப கிரகங்களான ராகு, கேதுவும் வருடம் முழுவதும் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும், இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும், குடும்பத்தினர் மற்றும் வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும், வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும், சுய தொழில் செய்து வருபவர்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும், பிள்ளைகளால் பெருமை உண்டாகும், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும், பொன் பொருள் சேரும். கல்வி: பொது மற்றும் போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைப்பதுடன், விரும்பிய கல்லூரியில் எதிர்பார்த்த பாடப் பிரிவில் இடம் கிடைக்கும்.உடல்நிலை: ஆயுள் காரகன் சனி பகவானின் சஞ்சாரமும் பார்வைகளும் உங்களுக்கு அவ்வப்போது சில சங்கடங்களை ஏற்படுத்தும் என்றாலும் குருப்பார்வைகளும், கேதுவின் சிம்ம, கடக சஞ்சாரங்களும் உங்களைப் பாதுகாக்கும், பெரிய அளவில் பயமுறுத்திய நோய்களும் மருத்துவத்திற்கு கட்டுப்படும். ஆரோக்கியம் மேம்படும், சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள்.குடும்பம்: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும், எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும், புதிய இடம் வீடு வாகனம் பொன் பொருள் என்ற முயற்சி வெற்றியாகும், தம்பதிகளிடம் இணக்கமான நிலை உண்டாகும், வீட்டில் மங்கல ஒலி கேட்கும், பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும், வெளி வட்டாரத்தில் செல்வாக்குடன் வாழ்வீர்கள்.பரிகாரம்: திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரரை வழிபட தடைகள் விலகும், நன்மைகள் நடக்கும்.உத்திரட்டாதி: விருப்பம் பூர்த்தியாகும்கர்மக்காரகனான சனி, தன புத்திரக்காரகனான குரு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் பராபவ ஆண்டு உங்களுக்கு யோகமான ஆண்டாகவே இருக்கும். சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும் இந்த ஆண்டில் உங்கள் நிலையை உயர்த்துவர், இதை நாமா செய்து முடித்தோம்! இதை நாமா சாதித்தோம்! என்று நீங்களே ஆச்சரியப்படும் வகையில் உங்களுடைய முன்னேற்றம் இருக்கும்.சனி சஞ்சாரம்: ஏழரை சனிக்காலத்தில் இப்போது ஜென்ம சனியாக சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார் சனிபகவான். நீங்கள் பிறந்த உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான்தான் என்றாலும், கோச்சார பயணத்தில் அவர் ஜாதகருக்கு வழங்கிடக்கூடிய பலன்களை வழங்குபவர் என்பதால், நண்பர்களுக்கும் உங்களுக்கும் பிரச்சனைகள் உருவாகும், வாழ்க்கைத் துணையுடன் இணக்கமற்ற நிலை ஏற்படும், உத்தியோகத்தில் தேவையற்றப் பிரச்சனைகளை சந்திக்க வேண்டிவரும், தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்காமல் போகும் என்பது பொதுப்பலனாக இருந்தாலும், மே.26 முதல் சனி பகவானை ராசி நாதன் குரு பார்ப்பதால் இந்த நிலைகளில் மாற்றம் ஏற்படும்.ராகு - கேது சஞ்சாரம்: நவ.13 வரை சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது உங்களை வலிமை மிக்கவராக நடைபோட வைப்பார், எதிர்ப்பு, போட்டி, வழக்கு, நோய் என்பதெல்லாம் உங்களைக்கண்டு விலகிச்செல்லும். நவ. 13  முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு உங்கள் ஆசைக்கனவுகளை நனவாக்குவார், பொருளாதார நிலை உயரும், நட்பின் வழியே நன்மைகள் அதிகரிக்கும், சந்தோஷம் உண்டாகும், வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கும் பிரிந்தவர்களுக்கும் மறு வாழ்க்கைத்தொடங்கும்.குரு சஞ்சாரம்: வருடத்தின் தொடக்கத்தில் அஷ்டம, ஜீவன, விரய ஸ்தானங்களை குரு பார்ப்பதால் உங்களுக்கு எதிரான சதிகளை முறியடிப்பீர்கள், உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும், தொழில் லாபம்தரும், உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும், விரய செலவுகளும் அலைச்சலும் குறையும். மே.26 முதல் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குரு, உங்கள் ராசியையும் பார்ப்பதால் உங்கள் செல்வாக்கு உயரும், எடுத்த வேலைகள் வெற்றியாகும், சிலருக்கு காதல் ஏற்படும், கல்யாணம் நடந்தேறும், சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும், சிலருக்கு பிள்ளைகளால் பெருமை உண்டாகும், பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும், சமூகத்தில் செல்வாக்கோடு வாழும் நிலை உருவாகும்.சூரிய சஞ்சாரம்: ஆத்ம காரகன் சூரியன் ஒவ்வொரு ராசியினருக்கும் 3,6,10,11ம் இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் அந்த அந்த ராசியினருக்கு யோகப்பலன்களை வழங்குவார், அந்த நிலையில் வைகாசி, ஆவணி, மார்கழி, தை ஆகிய நான்கு மாதங்களும் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும், அரசுவழி வேலைகள் சாதகமாகும், சுய தொழில், அரசுவேலை என்ற கனவு நனவாகும்.பொதுப்பலன்: சர்ப்ப கிரகங்களின் சஞ்சாரங்களும், ராசிநாதன் குருவின் நிலைகளும், நான்கு மாதங்கள் சூரியனும் உங்கள் வாழ்க்கையை வளமாக்குவர். நினைத்ததை எல்லாம் நடத்திக்கொள்ளக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும். செல்வாக்கும் செல்வ செழிப்பும் ஏற்படும். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். வாழ்க்கையின் அடிப்படைகள் பூர்த்தியாகும் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும்.தொழில்: தொழில்காரகன் சனி பகவான் ராசிக்குள் அமர்ந்து தொழில் ஸ்தானத்தையும் பார்ப்பதால், செய்துவரும் தொழில்மீது அக்கறை உண்டாகும். எதிர்பார்த்த வருமானம் வரும். நிதி நிறுவனம், ஜுவல்லரி, பங்கு வர்த்தகம், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, ஆட்டோ மொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், ட்ராவல்ஸ், ஹார்ட்வேர், மென்பொருள், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம் லாபம் தரும்பணியாளர்கள்: வேலையின்மீது அக்கறை அதிகரிக்கும். சிலருக்கு புதிய பொறுப்பினை நிர்வாகம் வழங்கும். வேலைபளு அதிகரித்தாலும் அதற்கேற்ற ஆதாயம்வரும். அரசு பணியில் இருப்பவர்கள் தங்களுடைய வரம்பிற்குள் செயல்படுவது நன்மையளிக்கும். சிபாரிசு, கவனிப்பு போன்றவற்றிற்கு இடம் கொடுக்காமல் செயல்படுபவர்களுக்கு வேலையில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். பெண்கள்: ராசிக்குள் சனிபகவான் சஞ்சரிப்பதால் சில சங்கடங்களை நீங்கள் சந்திக்க வேண்டியதாக இருக்கும். உடல் நிலையில் கூடுதல் கவனம் தேவைப்படும். புதிய நட்புகளிடமிருந்து ஓரடி விலகி இருப்பது நன்மையாகும். எந்த ஒன்றாக இருந்தாலும் அதை நன்றாக யோசித்து அதன் பிறகு முடிவிற்கு வருவதால் சங்கடங்கள் ஏற்படாமல் போகும். திருமணம், மறுமணம், வீடு வாகனம் என்ற கனவுகள் நனவாகும். சுய தொழில் செய்து வருபவர்கள் புதிய முதலீடுகளில் கவனமாக இருப்பது நன்மையாகும். கல்வி: பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். ஆசிரியர்கள் ஆலோசனைக் கேட்டு கல்லூரியை தேர்வு செய்வது நன்மையாகும்.உடல்நிலை: உடல்நிலையில் அவ்வப்போது சிறுசிறு சங்கடங்கள் தோன்றும், கவனிக்காமல் விட்டுவிட்ட நோய்கள் வீரியமடையும், பரம்பரை நோய்கள் மீண்டும் தலைதூக்கும் என்றாலும் ஆறாமிட கேதுவும், குருப்பார்வைகளும் நோய்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கும், மருத்துவத்தால் ஆரோக்கியம் மேம்படும்.குடும்பம்: கடல் அளவு சங்கடங்களை எல்லாம் பார்த்துவிட்ட உங்களுக்கு பராபவ வருடத்தில் வரும் சங்கடங்கள் கடுகளவாகவே இருக்கும். அதுவும் உங்களுடைய முயற்சிகளால் இருந்த இடம் தெரியாமல் போகும். சொந்த இடம் வீடு வாகனம் என்ற கனவுகள் நனவாகும், பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும், பொன் பொருள் சேரும், மதிப்பு மரியாதை அதிகரிக்கும், வீட்டிற்குள் புதிய உறவு வரும்.பரிகாரம்: நெல்லையப்பரை வழிபட சங்கடங்கள் விலகும், நன்மைகள் நடக்கும்.ரேவதி: தொழிலில் கவனம்வித்யாகாரகனான புதன், தன புத்திரக்காரகனான குரு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் பராபவ வருடம் முன்னேற்றமான வருடமாக இருக்கும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும், பண வரவு அதிகரிக்கும். புதிய சொத்து சேரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.சனி சஞ்சாரம்: ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் சனி சஞ்சரிப்பதால், வேகமாக செயல்பட்டுவந்த உங்களிடம் ஒரு மந்த நிலை ஏற்படும். தனது மூன்றாம் பார்வையால் உங்கள் தைரியத்தை அதிகரிப்பார், துணிச்சலுடன் நடைபோட வைப்பார், சப்தம பார்வையால் வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளியை ஏற்படுத்துவார், நன்றாகப்பழகி வந்தவர்களையும் விரோதியாக்குவார், பத்தாம் பார்வையால் செய்துவரும் தொழிலில் அக்கறையை அதிகரிப்பார். என்றாலும், மே.26 முதல் சனி பகவானை ராசி நாதன் குரு பார்ப்பதால் இந்த நிலைகளில் மாற்றம் ஏற்படும். சனி தரும் சங்கடங்கள் விலகும்.ராகு - கேது சஞ்சாரம்: நவ.13 வரை சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது உங்கள் செல்வாக்கை அதிகரிப்பார், அரசியல் வாதிகளுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவார், நோய்நொடி என்று வாழ்ந்து வந்தவர்களை ஆரோக்கியமாக நடைபோட வைப்பார், வயதானவர்கள் மனதில் நம்பிக்கையை அதிகரிப்பார், வியாபாரம் தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார், எதிர்ப்பு, போட்டி, வழக்கு என்று சங்கடப்பட்டு வந்த நிலையில் மாற்றத்தை உண்டாக்குவார். நவ. 13  முதல் யோகக்காரகன் ராகு, லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தடைபட்ட வேலைகள் நடந்தேறும், வரவேண்டிய பணம் வரும், புதிய முயற்சிகள் வெற்றியாகும், பொருளாதார நிலை உயரும், புதிய சொத்து சேரும், பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.குரு சஞ்சாரம்: வருடத்தின் தொடக்கத்தில் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு அஷ்டம, ஜீவன, விரய ஸ்தானங்களைப் பார்ப்பதால் உழைப்பு அதிகரிக்கும், அதே நேரத்தில் அதற்குரிய ஆதாயமும் கிடைக்கும், உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும், வியாபாரம் தொழில் லாபம்தரும், உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும், விரய செலவுகள், அலைச்சல் கட்டுப்படும். மே.26 முதல் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் உங்கள் செல்வாக்கு உயரும், பணவரத்து இருக்கும், புதிய இடம் வீடு வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும், அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு பதவி கிடைக்கும், செல்வாக்கு உயரும், எடுத்த வேலைகள் வெற்றியாகும், உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவுகள் நனவாகும்.சூரிய சஞ்சாரம்: ஆத்மகாரகன் சூரியன் வைகாசி, ஆவணி, மார்கழி, தை ஆகிய நான்கு மாதங்களும் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும், எதிர்ப்பு, நோய், பகை, வழக்கு என்பதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும், பணவரவு இருக்கும், பொருளாதார நிலை உயரும், அரசியல் வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். பொதுப்பலன்: பராபவ வருடம் உங்கள் வாழ்வில் முன்னேற்றமான வருடமாகும், இதுவரை தடைபட்டிருந்த வேலைகள் முடிவிற்குவரும், தைரியமாகவும் தன்னம்பிக்கையோடும் நடைபோடுவீர்கள், வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும், லாபம் வரும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும், அரசு வேலை, சுய தொழில், வீடு வாசல் என்ற கனவுகள் நனவாகும்.தொழில்: வருடத்தின் தொடக்கத்தில் தொழில் சுமாராக இருந்தாலும், அதன்பிறகு முன்னேற்றம் அடையும், எதிர்பார்த்த லாபம் வரும். பங்கு வர்த்தகம், ஏற்றுமதி இறக்குமதி, நிதி நிறுவனம், ஜுவல்லரி, ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், காண்ட்ராக்ட், பதிப்பகம், அச்சகம், செய்தித்தாள், தனியார் பள்ளிகள், ஆன்லைன் வர்த்தகம், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் வளர்ச்சிபெறும்.பணியாளர்கள்: பெரிய நிறுவனங்களில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு வேலையின் மீதிருந்த பயம் போகும், சிலருக்கு புதிய பொறுப்பும் சம்பள உயர்வும் கிடைக்கும், வெளிநாட்டில் வேலைப் பார்த்து வருபவர்களுக்கு  மனதில் நிம்மதி உண்டாகும், அரசு பணியாளர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வரும், சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.பெண்கள்: உடல் நிலையிலும் மன நிலையிலும் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும், உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும், குடும்பத்தில் நிம்மதியான நிலை ஏற்படும், கணவருடன் இணக்கமான நிலை உண்டாகும், சிலருக்கு மறுமணம் நடக்கும் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சுய தொழில் செய்து வருபவர்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும், பொன் பொருள் ஆடை ஆபரணம் சேரும்.கல்வி: உயர்கல்வி கனவு நனவாகும். எதிர்பார்த்த பாடப்பிரிவில் விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும். சிலர் வெளிமாநிலம் வெளிநாடு என்றும் மேற்கல்விக்காக செல்வீர்கள்உடல்நிலை: உடல்நிலையில் தொடர்ந்து சங்கடத்தை அனுபவித்து வந்தவர்களுக்கு இந்த வருடம் அவற்றில் இருந்து மாற்றம் கிடைக்கும் வருடமாக இருக்கும், நரம்புக் கோளாறு, ரத்தக் குழாய் அடைப்பு, சுவாச பிரச்சனை, தொற்றுநோய், பரம்பரை நோய் என சங்கடப்பட்டு வந்த நிலை மாறும், சித்தா ஆயூர்வேதா மருத்துவம் சிலருக்கு கை கொடுக்கும், ஆரோக்கியம் மேம்படும்.குடும்பம்: குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவிற்குவரும், கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உருவாகும். பிள்ளைகள் உங்கள் நிலையறிந்து நடந்து கொள்வர், படிப்பில் முன்னேற்றம் அடைவர், கடன் பட்டாகிலும் சொந்த வீடு வாகனம் வாங்குவீர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழ்வீர்கள், சிலருடைய வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். மனதில் நிம்மதி உண்டாகும்.பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மைகள் நடக்கும்.


ShareTweetShareShare

Advertisement

Advertisement Tariff

Advertisement




      Dinamalar
      Follow us