தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

/

17

முந்தய பதிப்புகள்

இன்றுநேற்று
இன்றுநேற்று

To type in English

 (or) 

Press CTRL+G 

To type in English

மொத்த செய்திகள்: 1181

பாலத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை 

புதுச்சேரி

17-Aug-2026

மேஷம்: அசுவினி..!நேரம் காலம் அறிந்து செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் யோகமான மாதமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஞான மோட்சக்காரகன் கேது சஞ்சரித்து, மனதில் குழப்பத்தை ஏற்படுத்தினாலும், ராசிநாதன் செவ்வாய் சகாய ஸ்தானத்தில் சாதகமாக சஞ்சரிப்பதால் எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். ஆரோக்யம் மேம்படும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். சகோதரர்களுடன் ஏற்பட்ட இடைவெளி விலகும். உறவினர்கள் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பர். வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் நெருக்கடிகள் பிரச்னைகள் யாவும் முடிவிற்குவரும். உங்கள் செல்வாக்கு உயரும். விரய ஸ்தானத்தில் சஞ்சரித்துவரும் சனி பகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் கெடு பலன்கள் குறையும்.  நிம்மதியான நிலை உண்டாகும். வீண் செலவுகள் கட்டுப்படும் என்றாலும், தன புத்திர காரகனும் சப்தமாதிபதியுமான சுக்கிரன் சஞ்சாரம் மாதம் முழுவதும் எதிர்மறையாக இருப்பதால் உடல் நிலையில் கவனமாக இருப்பதுடன் எதிர்பாலினர் விஷயத்தில் ஓரடி விலகி இருப்பது உங்களுக்கு நன்மையை உண்டாக்கும். புதிய நட்புகளிடம் உங்கள் குடும்ப ரகசியத்தை வெளியிட வேண்டாம். வாழ்க்கைத் துணையின் ஆலோசனையை ஏற்பது என்பது இந்த நேரத்தில் உங்களுக்கு நன்மையாக இருக்கும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கி நிம்மதியான நிலை ஏற்படும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் ஆர்வம் ஏற்படும்.சந்திராஷ்டமம்: ஆக. 20.21, செப். 16, 17.அதிர்ஷ்ட நாள்: ஆக. 18, 25, 27. செப். 7, 9.பரிகாரம்: தேவபுரீஸ்வரரை வழிபட உங்களுக்கிருந்த சங்கடங்கள் விலகும்.பரணி: நினைத்ததை சாதிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் செப். 1 வரை சத்ரு ஸ்தானத்திலும், அதன்பின் சப்தம ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையளிக்கும். தேவையற்றப் பிரச்னைகளில் தலையிட்டு அதனால் சங்கடத்திற்கு ஆளாக வேண்டிய நிலை உருவாகும். மனதில் கவலையும் நிம்மதியற்ற நிலையும் சிலருக்கு இருக்கும். புதியதாக அறிமுகம் ஆகும் எதிர்ப்பாலினரால் குடும்பத்திற்குள் குழப்பத்தை சந்திக்க வேண்டியதாக இருக்கும். கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு என்ற நிலை உருவாக வாய்ப்பிருப்பதால் ஒழுக்கத்தில் கவனமாக இருப்பது இந்த நேரத்தில் மிக மிக அவசியம். சிலர் அவப்பெயரையும் மற்றவருடைய விமர்சனங்களையும் சந்திக்க வேண்டிய நிலை இருப்பதால் கவனமாக நடந்து கொள்வதால் அவற்றிலிருந்து தப்பிக்க முடியும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு உங்களைப் பாதுகாப்பார். வியாபாரம் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். வீடு வாகனம் என்ற கனவுகள் நனவாகும். சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகள் 8, 10, 12 ம் இடங்களுக்கு கிடைப்பதால் மறைமுக வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத வாய்ப்புகள் தேடிவரும். செய்துவரும் வியாபாரம் தொழில் ஆதாயம் தரும். வீண் செலவுகள் குறையும். நிம்மதியான தூக்கம் சந்தோஷம் என்ற நிலை ஏற்படும். மாதத்தின் பிற்பகுதியில் எடுத்த வேலைகள் யாவும் வெற்றியாகும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். அதிகாரிகளின் ஆலோசனையை ஏற்று செயல்படுவதால் சங்கடங்களில் இருந்து விடுபட முடியும். விவசாயத்தில் ஆதாயம் உண்டாகும். மாணவர்களின் கவனம் படிப்பின்மீது செல்லும்.சந்திராஷ்டமம்: ஆக. 21, 22. செப். 17.அதிர்ஷ்ட நாள்: ஆக. 18, 24, 27. செப். 6, 9, 15.பரிகாரம்: ஹரசாப விமோசன பெருமாளை வழிபட சங்கடங்கள் விலகும்.கார்த்திகை 1 ம் பாதம்: பிறருடைய நலனிலும் அக்கறை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் திட்டமிட்டு கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் பூர்வ புண்ணியாதிபதி சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் மனதில் இருந்த குழப்பம் விலகும். திட்டமிடாமல் செயல்படும் வேலைகளிலும் ஆதாயம் கூடும். உழைப்பு அதிகரிக்கும் என்றாலும் அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். எந்த வேலையை எடுத்தாலும் அதில் ஏதேனும் ஒரு தடை என்றிருந்த நிலை மாறும். ஞான மோட்சக்காரகன் கேதுவும் ஐந்தாம் இடத்தில் சஞ்சரிப்பதால் இந்த நேரத்தில் திட்டமிட்டு செயல்படுவது நன்மையை உண்டாக்கும். மாதம் முழுவதும் ராசிநாதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதுடன் செப். 3 முதல் ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் புதனால், பொன் பொருள் சேரும். பட்டம் பதவி செல்வாக்கு என்ற நிலை உருவாகும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கேட்ட இடத்தில் இருந்த பணம் வரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். லாப ஸ்தான ராகுவால் பொருளாதார நிலை உயரும். சேமிப்பு அதிகரிக்கும். தடைபட்ட வேலைகள் ஒவ்வொன்றாக நடந்தேறும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பெண்கள் குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பது அவசியம். விவசாயிகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவதால் நன்மை அதிகரிக்கும். மாணவர்கள் தவறான நண்பர்களை விட்டு விலகுவதால் எதிர்காலம் சாதகமாகும்.சந்திராஷ்டமம்: ஆக. 22.அதிர்ஷ்ட நாள்: ஆக.18, 19, 27, 28. செப். 1, 9, 10.பரிகாரம்: சிவசூரிய பெருமானை வழிபட உங்கள் வாழ்வில் நன்மை உண்டாகும்.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4 ம் பாதம்!உழைப்பை மூலதனமாகக் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். சுக ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் மறைமுகத் தொல்லைகள், எதிரிகளால் பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். உடல் ஆரோக்கியத்திலும் சிறு சிறு சங்கடங்கள் தோன்றி மறையும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் இணக்கமற்ற நிலை இருக்கும். தாய்வழி உறவுகளும் உங்களுக்கு எதிராக மாறக்கூடும். ஞான மோட்சக்காரகன் கேதுவும் நான்காமிடத்தில் சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகளில் தடைகளும் தாமதமும் குழப்பமும் ஏற்படும். நிதானமாக செயல்படுவதால் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை இந்த நேரத்தில் உங்களைப் பாதுகாக்கும். மாதத்தின் முற்பகுதியில் ராசிநாதன் சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வருமானம் அதிகரிக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். பொன் பொருள் புதிய வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். குருப்பார்வைகளால் திருமண வயதினருக்கு தகுதியான வரன்வரும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். கூட்டுத்தொழில் லாபம்தரும்.பெரியோரின் ஆதரவு உங்களைப் பாதுகாக்கும். விவசாயிகள் கவனமாக செயல்படுவது நன்மை அளிக்கும். மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதி யோகமானதாக இருக்கும். படிப்பில் கவனம் கூடும்.சந்திராஷ்டமம்: ஆக. 22, 23.அதிர்ஷ்ட நாள்: ஆக. 19, 24, 28. செப். 1, 6, 10, 15.பரிகாரம்: வில்வ வனேசுவரரை வழிபட வாழ்வில் இருந்த சங்கடங்கள் விலகும்.ரோகிணி: தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகளால் உங்களுக்கிருந்த சங்கடங்கள் விலகி நன்மைகள் உண்டாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பொன் பொருள் சேரும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உருவாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும் பிரிந்தவர்களுக்கும் மறுமணத்திற்குரிய வாய்ப்புகள் உருவாகும். யோகக்காரகன் ராகு ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். வேலைக்காக வெளிநாடு செல்ல நினைப்பவர்கள் இடைத்தரகர்களை நம்பாமல் நீங்களே முயற்சிப்பது நன்மையை உண்டாக்கும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட போட்டி பொறாமை பிரச்னைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். எதிர்பார்த்த லாபம் வரும். சேமிப்பு உயரும் என்றாலும், மாதத்தின் பிற்பகுதியில் உடல் நிலையில் கவனம் செலுத்துவது நன்மையினை உண்டாக்கும். சிலருக்கு அவப்பெயர் ஏற்படவும் வாய்ப்பிருப்பதால் சுய ஒழுக்கத்தில் கவனமாக இருப்பது நன்மையளிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரியின் ஆலோசனையை ஏற்பது அவசியம். மாணவர்களுக்கு வித்யா காரகன் புதனின் சஞ்சாரம் மாதத்தின் முற்பகுதியில் சாதகமாக இருப்பதால் படிப்பில் ஆர்வம் கூடும். பெண்களுக்கு குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை இருக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.சந்திராஷ்டமம்: ஆக. 23, 24.அதிர்ஷ்ட நாள்: ஆக. 20, 29. செப். 2, 6, 11, 15.பரிகாரம் : முக்தீஸ்வரரை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்: தைரியமாக செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். பூமிக்காரகனான செவ்வாய் இரண்டாம் இடத்தில் சஞ்சரிப்பதால் விவசாயம் லாபம்தரும். விளைச்சல் மீது கவனம் அதிகரிக்கும். எதிர்பார்த்த வரவு இருக்கும். பழைய கடன்களை அடைக்க முடியும் என்றாலும், வார்த்தைகளில் நிதானமும் குடும்பத்தினரை அனுசரித்துச்செல்வதும் நன்மையளிக்கும். தனக்காரகனான குருவின் பார்வைகள் களத்திர, பாக்ய, லாப ஸ்தானங்களுக்கு கிடைப்பதால் தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளால் விவாகரத்துவரை நீதிமன்றத்திற்கு சென்றவர்கள்கூட பெரியோரின் ஆலோசனைகளை ஏற்று மீண்டும் இணைந்து வாழ்ந்திடக்கூடிய நிலை உண்டாகும். சொந்த இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். தலைமையின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். வரவேண்டிய பணம் வரும். மாதத்தின் முற்பகுதியில் பணப்புழக்கம் இருக்கும். புத்திசாலித்தனமும் அதிகரிக்கும். பெண்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். நீண்டநாள் கனவுகள் நனவாகும். சிலருக்கு வரன் தேடிவரும். கலைத்துறையினருக்கு மாதத்தின் முற்பகுதி யோகமாக இருக்கும். எடுக்கும் முயற்சி ஆதாயம்தரும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது நன்மையளிக்கும்.சந்திராஷ்டமம்: ஆக. 24.அதிர்ஷ்ட நாள்: ஆக. 18, 27. செப். 6, 9, 15.பரிகாரம்: ஸ்ரீவாஞ்சிநாதரை வழிபட உடல்நிலை சீராகும். ஆரோக்யம் மேம்படும்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4 ம் பாதம்திட்டமிட்டு செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் நன்மையான மாதமாகும். ஜென்ம ராசிக்குள் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். நினைத்ததை நடத்தி முடித்திடக்கூடிய நிலையும் உண்டாகும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மருத்துவம், காவல் துறைகளில் பணியாற்றி வருபவர்களுக்கு முன்னேற்றமான நிலை இருக்கும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ஞான மோட்சககாரகன் கேது தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரிப்பார். ராசிநாதன் புதன் செப். 3 முதல் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். எதிர்பார்த்த பணம்வரும். கலைஞர்களுக்கும் வியாபாரிகளுக்கும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கேட்ட இடத்திலிருந்து கேட்ட உதவிகள் குறித்த நேரத்தில் வரும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை இருக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்புண்டாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பழைய கடன்களை அடைத்திடக்கூடிய நிலை உருவாகும். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் வேலையில் ஏற்பட்ட நெருக்கடிகள், பிரச்னைகள் உங்களை நெருங்காமல் போகும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்துவது நன்மை அளிக்கும்.சந்திராஷ்டமம்: ஆக. 25.அதிர்ஷ்ட நாள்: ஆக. 18, 23, 27. செப். 5, 9, 14.பரிகாரம்: கோமதி அம்மனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.திருவாதிரைஉயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்ற லட்சியத்தோடு வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் யோகமான மாதமாகும். உங்களுக்கும் மேலானவர்களின் ஆதரவு இந்த மாதத்தில் கிடைக்கும். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள், பிரச்னைகள் விலகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் பொறுப்பும் தேடிவரும். யோகக் காரகன் ராகு பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீண்ட நாள் முயற்சிகள் வெற்றியாகும். மற்றவர்களால் முடித்திட முடியாத வேலைகளை முடித்து ஆதாயம் காண முடியும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் செவ்வாயும் உங்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருப்பார். உங்கள் பூர்வ புண்ணியாதிபதியும் அதிர்ஷ்டக் காரகனுமான சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பொன் பொருள் சேரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். தடைபட்ட வேலைகள் மீண்டும் நடைபெற ஆரம்பிக்கும். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் குடும்பத்தில் நிம்மதியை உண்டாக்குவார். கையில் பணப்புழக்கத்தை ஏற்படுத்துவார். வார்த்தைகளில் தெளிவினை வழங்குவார். எடுத்த வேலைகள் முடிவிற்கு வரும். வியாபாரம் தொழிலில் ஆதாயம் கூடும். பெண்களுக்கு குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். விவசாயத்தில் கவனம் கூடும். மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: ஆக. 26.அதிர்ஷ்ட நாள்: ஆக. 22, 23, 31. செப். 4, 5, 13, 14.பரிகாரம்: சரபேஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் நடக்கும்.புனர்பூசம் 1,2,3 ம் பாதம்அறிவாளியான உங்களுக்கு பிறக்கும் ஆவணி மாதம் நன்மையான மாதமாகும். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குருபகவான் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை இல்லாமல் செய்வார். கொடுத்த வாக்கை காப்பாற்றும் நிலையை உருவாக்குவார். பணப்புழக்கத்தை அதிகரிப்பார். நோய் நொடி வம்பு வழக்கு சங்கடம் பிரச்னைகள் என்றிருந்த நிலைகளை இல்லாமல் செய்வார். மறைமுகமாக தொல்லைகள் கொடுத்து வந்தவர்கள் காணாமல் போவர். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். செய்துவரும் வியாபாரம் தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். தனியார் நிறுவனங்களில் வேலைப் பார்த்து வருபவர்களுக்கு வேலையின் மீதிருந்த பயம் போகும். உங்கள் செயல்களிலும் மாற்றம் ஏற்படும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் தைரியமாக உங்களை செயல்பட வைப்பார். அரசு வழி முயற்சிகள் ஆதாயம் தரும். தொழில் நிறுவனங்கள் நடத்தி வருபவர்களுக்கு பணியாளர்களின் ஆதரவு அதிகரிக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். பெண்களுக்கு குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். பொன் பொருள் சேரும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். விவசாயத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். வருமான உயரும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதி யோகமாக இருக்கும்.சந்திராஷ்டமம்: ஆக. 27.அதிர்ஷ்ட நாள்: ஆக. 21, 23, 30, செப். 3, 5, 12, 14.பரிகாரம்: ஆபத் சகாயேஸ்வரரை வழிபட நன்மைகள் நடக்கும்................

கடகம்: புனர்பூசம் 4 ம் பாதம்தெளிவான சிந்தனை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் நன்மையான மாதமாகும். ஜென்ம ராசிக்குள் உச்சமாக சஞ்சரிக்கும் குரு பகவான் அலைச்சலை அதிகரிப்பார். வேலை பளுவை உண்டாக்குவார். உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு திடீர் மாறுதலை ஏற்படுத்துவார் என்றாலும், நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலைகளில் முடிவு ஏற்படும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன்வரும். நண்பர்களுடன் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். சொந்த இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு தலைமையின் ஆதரவும் சிலருக்கு புதிய பொறுப்பும் கிடைக்கும். அரசியல் மற்றும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான காலம் என்றாலும், தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சூரியனும் கேதுவும் சஞ்சரிப்பதால் வார்த்தைகளில் நிதானம் தேவை. உடன் இருப்போரின் மனம் புண்படாதவாறு நடந்து கொள்வது அவசியம். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நன்மையளிக்கும். உங்கள் குடும்ப பிரச்னைகளையும் சொந்த விவகாரங்களையும் மற்றவரிடம் தெரிவிக்கவும், விவாதிக்கவும் வேண்டாம். அதனால் தேவையற்ற சங்கடங்கள் ஏற்படும் நிலை உள்ளது. பெண்களுக்கு இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை உருவாகும். மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் படிப்பில் கவனம் இருக்கும் எதிர்காலம் பற்றிய எண்ணத்துடன் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.சந்திராஷ்டமம்: ஆக. 27.அதிர்ஷ்ட நாள்: ஆக. 20, 21, 29, 30. செப். 2, 3, 11, 12.பரிகாரம்: மாசாணி அம்மனை வழிபட சங்கடங்கள் விலகும்.பூசம்நினைத்ததை சாதிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்துவரும் சனி பகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் இதுவரை கிடைத்து வந்த நற்பலன்களில் மாற்றம் ஏற்படும். அஷ்டம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் வேலைகள் இழுபறியாகும். வரவை விட செலவு அதிகரிக்கும். சிலருக்கு கடன் வாங்கி செலவு செய்ய வேண்டிய நிலையும் உருவாகும். வியாபாரம் தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்காமல் போகும். சிலருக்கு பணம், ஆவணங்கள் களவு போகவும் வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கை அவசியம். நண்பர்களுடனும் உடன் பணி புரிபவர்களுடனும் தேவையற்ற பிரச்னைகள் உருவாகும். நன்றாகப் போய்க்கொண்டிருந்த வேலைகளிலும் பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். தினப்பணியாளர்கள் வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வது நன்மையளிக்கும். அதிகாரியை அனுசரித்துச் செல்வதும் அவர்களின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு வேலைப் பார்ப்பதும் நன்மையாகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் இந்த நேரத்தில் வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்களும் தங்களுக்கு மேலிடத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதும் வார்த்தைகளில் நிதானம் காப்பதும் அவசியமாகும். விவசாயிகள் எச்சரிக்கையாக இருப்பது நன்மையளிக்கும். விரய ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் செலவு கூடுதலாக வாய்ப்புண்டு என்பதால் கவனம் தேவை. பெண்கள் வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதும் குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பதும் அவசியம் சிலருக்கு உடல் நிலையில் சங்கடம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது இந்த நேரத்தில் நன்மையாகும். குடும்ப விவகாரங்களை பிறரிடம் வெளிப்படுத்துவதால் குடும்பத்திற்குள் பிரச்னைகளும் நிம்மதியற்ற நிலையும் உருவாக வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கை அவசியம். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். தவறான நட்புகளை விட்டு விலகுவது நன்மையளிக்கும்.சந்திராஷ்டமம்: ஆக. 28.அதிர்ஷ்ட நாள்: ஆக. 20, 26, 29. செப். 2, 8, 11.பரிகாரம்: குச்சனூர் சனீஸ்வரனை வழிபட வாழ்வில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.ஆயில்யம்வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். மாதத்தின் முற்பகுதியில் நீங்கள் எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். கடன் தொல்லை விலகும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை இருக்கும் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும் என்றாலும், விரய ஸ்தானத்தில் உங்கள் ஜீவனாதிபதி செவ்வாய் சஞ்சரிப்பதால் வியாபாரத்திலும் வரவு செலவிலும் கவனமாக இருப்பது நன்மையளிக்கும். வெளியூர் பயணத்தில் பணம் பொருட்கள் களவு போக வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையாக பயணிப்பது நன்மையாகும். வேலையில் இருப்பவர்கள் மேல் அதிகாரியை அனுசரித்துச் செல்வதும், சுய தொழில் செய்வோர் புதிய முதலீட்டில் எச்சரிக்கையாக இருப்பதுடன் ஒவ்வொரு வேளையிலும், பொறுப்புகளிலும் கவனமாக இருப்பதும் நன்மையளிக்கும். கூட்டுத் தொழில் செய்து வருபவர்களுக்கு கூட்டாளிகளுடன் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருப்பதால் வார்த்தைகளில் நிதானம் காப்பதும் அனுசரித்துச் செல்வதும் இந்த நேரத்தில் மிக அவசியம். தசா புத்திகள் சாதகமற்று இருப்பவர்கள் அனைத்திலும் கவனமாக இருப்பது நன்மையளிக்கும். விவசாயிகள் கால நிலை அறிந்து செயல்படுவதும் விளைச்சலில் கவனமாக இருப்பதும் இந்த மாதத்தில் அவசியம். கலைஞர்களுக்கு மாதத்தின் முற்பகுதி யோகமாக இருக்கும். பெண்களுக்கு வேலைப் பார்க்கும் இடத்தில் சில பிரச்னைகள் ஏற்படலாம். உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வதும் வாழ்க்கைத் துணையின் ஆலோசனைகளை ஏற்பதும் நன்மையளிக்கும். திருமண வயதினருக்கு வரன்கள் வந்தாலும் ஜாதக பொருத்தம் பார்த்து முடிவு செய்வது நன்மையளிக்கும். சிலருக்கு உடல்நிலையில் சின்னச் சின்ன சங்கடங்கள் வந்து போகும். மருத்துவ செலவுகளும் ஏற்படும். மாணவர்கள் தவறான நட்புகளை விட்டுவிட்டு ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பதால் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும்.சந்திராஷ்டமம்: ஆக. 29.அதிர்ஷ்ட நாள்: ஆக. 20, 23. செப். 2, 5, 11, 14.பரிகாரம்: திருவிக்ரமனை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.

சிம்மம்: மகம்தெளிந்த சிந்தனை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஜென்ம ராசிக்குள் சுய சாரத்தில் கேது சஞ்சரிப்பதால் செயல்களில் தடைகளும் தடுமாற்றங்களும் ஏற்படும். நம்பிக்கையோடு மேற்கொண்ட முயற்சிகளிலும் இழுபறியான நிலை இருக்கும். எதை எப்படிச் செய்வது என்ற ஆற்றல் கொண்ட உங்களுக்கு இந்த நேரத்தில் அதில் பின்னடைவு ஏற்படும் என்பதால் முடிந்தவரை இந்த மாதம் நிதானமாக செயல்படுவது நன்மையாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகளுடனும் உடன் பணிபுரிபவர்களுடனும் அனுசரித்துச்செல்வது நன்மையாகும். குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பதும் இந்த நேரத்தில் அவசியம். வியாபாரிகள் புதிய முதலீட்டில் கவனமாக இருப்பது நன்மையாகும். ஜென்ம சூரியனும் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரனும் முன்னேற்றத்தை வழங்குவர். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பொறுப்பும் தேடிவரும் என்றாலும் உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம். தங்கள் செல்வாக்கை வைத்து தவறான செயல்களை மேற்கொள்வது சங்கடங்களை உண்டாக்கும். விவசாயிகளுக்கு இந்த மாதம் ஆதாயம் நிறைந்த மாதமாக இருக்கும். நல்ல விளைச்சலும் அதற்கேற்ற வருமானமும் ஏற்படும். அஷ்டம சனி வக்கிரம் அடைந்திருப்பதால் இதுவரை இருந்த நெருக்கடிகள் போராட்டங்கள் பிரச்னைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: ஆக. 29, 30.அதிர்ஷ்ட நாள்: ஆக. 19, 25, 28. செப். 1, 7, 10, 16.பரிகாரம்: சதுர்த்தி அன்று விநாயகரை வழிபட சங்கடங்கள் விலகும்.பூரம்முயற்சியால் முன்னேற்றம் அடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் நன்மையான மாதமாகும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். பொருளாதார நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம்வரும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உருவாகும் பொன் பொருள் சேர்க்கையுடன் சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் கனவும் நனவாகும். பெண்கள் குடும்பத்தினரை அனுசரித்துச்செல்வதும் வாழ்க்கைத்துணையின் ஆலோசனையை ஏற்பதும் நன்மையளிக்கும். அலுவலகப்பணியில் இருப்பவர்கள் உடன் பணி புரிபவர்களுடன் நெருக்கம் காட்டாமல் இருப்பது அவசியம். தங்கள் குடும்பத்தின் பிரச்னைகளை அவர்களுடன் விவாதிக்காமல் இருப்பது நன்மையளிக்கும். சப்தம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் தவறான சிந்தனைகள், தவறான நட்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அனைத்திலும் கவனம் அவசியம். வியாபாரிகள் முடிந்தவரை இந்த மாதம் கடன் கொடுப்பதை தவிர்ப்பது நன்மையாகும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வரும் என்றாலும் உடன் இருப்பவர்களை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நன்மையாகும். விவசாயிகளுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். எதிர்பார்த்த வருவாய் வரும். சங்கடங்கள் விலகும். மருத்துவர்கள் காவல்துறையினருக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனை நன்மை அளிக்கும்.சந்திராஷ்டமம்: ஆக. 30, 31.அதிர்ஷ்ட நாள்: ஆக. 19, 24, 28. செப். 1, 6, 10, 15.பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.உத்திரம் 1 ம் பாதம்எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தில் முதன்மையாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் யோகமான மாதமாகும். ராசிநாதன் சூரியன் ஜென்ம ராசிக்குள் ஆட்சி பெறுவதால் இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். பிரச்னைகள் போராட்டங்கள் என்ற நிலையில் மாற்றம் ஏற்படும். எந்த ஒன்றும் நடக்கவில்லையே என்ற மனக்கவலை விலகும். எடுக்கும் முயற்சிகள் ஆதாயம் தரும். உங்கள் பாக்யாதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வரவேண்டிய பணம் வரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். செல்வம் செல்வாக்கு அந்தஸ்து என்பதெல்லாம் கூடும். வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். அரசியலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர் பார்த்த இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை இருக்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கு திட்டம் தீட்டுவீர்கள். சேமிப்பை மேற்கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் வழக்குகள் முடிவிற்குவரும். விரய குருவின் பார்வைகள் 4,6,8 ம் இடங்களுக்கு கிடைப்பதால் தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். எதிர்ப்பு பகை போட்டி என்பதெல்லாம் இல்லாமல் போகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். பெண்களுக்கு குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். குடும்பத்தினர் ஆதரவு ஏற்படும். விவசாயத்தில் லாபம் கூடும். மாணவர்களுக்கு இருந்த நெருக்கடிகள் விலகும்.சந்திராஷ்டமம்: ஆக. 31.சந்திராஷ்டமம்: ஆக. 19, 28. செப். 1, 10.பரிகாரம்: அதிகாலையில் சூரியனை வழிபட அன்றைய பொழுது சுபமாகும்.

கன்னி: உத்திரம் 2, 3, 4 ம் பாதம்வாழ்க்கையை புரிந்து வைத்திருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் விழிப்புடன் செயல்பட வேண்டிய மாதமாகும். ஆத்ம காரகனும் உங்கள் ராசிக்கு விரயாதிபதியுமான சூரியன் விரய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் திடீர் செலவுகளும் எதிர்பாராத பயணமும் ஏற்படும். திட்டமிட்டு செய்கின்ற வேலைகளில்கூட தடைகள் தாமதம் என்ற நிலை உருவாகும். உங்கள் அஷ்டமாதிபதி செவ்வாய் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்பட வேண்டிய நேரம் இது. மேல் அதிகாரிகளின் ஆலோசனை இல்லாமல் உங்கள் எல்லைக்கு அப்பாற்பட்ட வேலைகளில் ஈடுபட வேண்டாம். வியாபாரிகள் முதலீட்டில் கவனம் செலுத்துவது அவசியம். சுய தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலில் முழுமையான கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது என்றாலும், லாப குருவால் தேவையான வருமானம் வந்து கொண்டிருக்கும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். கையில் பணப்பழக்கம் இருக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து வருபவர்கள் இடைத்தரகர்களை இந்த நேரத்தில் நம்ப வேண்டாம். முயற்சி தாமதம் ஆனாலும் பண இழப்பு ஏற்படாமல் போகும். கலைஞர்கள் நிதானமாக செயல்படுவது அவசியம். அரசியல்வாதிகள் தலைமையை அணுசரித்துச் செல்வதால் நன்மை உண்டாகும். விவசாயிகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நன்மையளிக்கும். மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் படிப்பில் கவனக்குறைவு ஏற்பட்டாலும் பிற்பகுதியில் முன்னேற்றம் இருக்கும்.சந்திராஷ்டமம்: செப். 1.அதிர்ஷ்ட நாள்: ஆக. 19, 23, 28. செப். 5, 10, 14.பரிகாரம்: பார்த்தசாரதியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.அஸ்தம் பிறரின் மனநிலையை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் நன்மையான மாதமாகும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து நெருக்கடிகளை வழங்கி வந்த சனி வக்கிரம் அடைந்திருப்பதால் உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். உடல்நிலை சீராகும். நண்பர்கள் ஆதரவு மீண்டும் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சச்சரவு விலகும். உங்கள் சப்தமாதிபதி குரு லாப ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிப்பதுடன் 3,5,7 ம் இடங்களையும் பார்ப்பதால் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். சுய தொழில் செய்து வருபவர்களுக்கு பணியாளர் ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். செப். 3 முதல் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் வீண் செலவுகள் குறையும். வியாபாரம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிக்க முடியும். சுக்கிரன் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் பணப்புழக்கம் இருக்கும். கடன்களை அடைத்து நிம்மதி அடைய முடியும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். பெண்களுக்கு மரியாதையும் பொறுப்பும் கூடும். உடல் நிலையில் சின்னச் சின்ன சங்கடங்கள் வந்து போகும். விவசாயிகளுக்கு விளைச்சலில் கவனம் தேவை. சூழ்நிலை அறிந்து செயல்படுவது அவசியம். மாணவர்கள் ஆசிரியர் ஆலோசனைகளை ஏற்பதுடன் தவறான நட்புகளை விட்டு விலகுவது நன்மைகளை ஏற்படுத்தும்.சந்திராஷ்டமம்: செப். 2.அதிர்ஷ்ட நாள்: ஆக. 20, 23, 29. செப். 5, 11, 14.பரிகாரம்: அர்த்தநாரீசுவரரை வழிபட வாழ்வில் இருந்த சங்கடங்கள் விலகும்.சித்திரை 1, 2 ம் பாதம்தன்னம்பிக்கையுடன் செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். யோகக் காரகன் ராகுவும், தனக்காரகன் குருவும் சாதகமாக சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும் என்றாலும், உங்கள் அஷ்டமாதிபதியும் தைரிய வீரிய காரகனுமான செவ்வாய் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரம் தொழிலில் சிறு சிறு பிரச்னைகள், சங்கடங்கள் ஏற்படும். முதலீட்டிற்கேற்ற ஆதாயம் கிடைக்காமல் போகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பாராத பிரச்னைகள், இடமாற்றம் என்று சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும் என்றாலும், குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை இருக்கும் கணவன் மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். புதிய பொருள் சேரும் சிலருக்கு புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். மாதத்தின் முற்பகுதி செலவுகள் வழியே உங்கள் தேவைகள் பூர்த்தியானாலும் பிற்பகுதியில் வரவு அதிகரிக்கும். உங்களிடம் புதிய நம்பிக்கை உண்டாகும். நோய் நொடி வம்பு வழக்கு என்ற நிலையெல்லாம் இல்லாமல் போகும். செல்வாக்கு உயரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இந்த நேரத்தில் கர்மக்காரகன் சனி பகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் கடந்த மாதத்தில் இருந்த நெருக்கடிகள் இப்போது இல்லாமல் போகும். குடும்பத்தில் நிம்மதியான நிலையும் நட்பு வட்டத்தில் ஆதரவும் உண்டாகும். பெண்கள் உடல்நிலையில் கவனம் செலுத்துவதுடன் நேரத்திற்கு உறங்குவது நன்மையளிக்கும். விவசாயிகளுக்கு விளைச்சலில் அக்கறை எடுத்துக்கொள்வது அவசியம். மாணவர்கள் எதிர்காலத்தை மனதில் எண்ணி படிப்பில் கவனம் செலுத்துவது நன்மையாகும்.சந்திராஷ்டமம்: செப். 3.அதிர்ஷ்ட நாள்: ஆக. 18, 23, 27. செப். 5, 9, 14.பரிகாரம்: சுப்ரமணியரை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.

துலாம்: சித்திரை 3, 4 ம் பாதம்மனஉறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் நன்மையான மாதமாகும். உங்கள் சப்தமாதிபதி செவ்வாய் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கடந்த மாதத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். ஒரு சிலருக்கு சொந்த இடம் வீடு என்ற கனவு நனவாகும் என்றாலும் திட்டமிட்டு செயல்படுவதும், மற்றவர் பிரச்னைகளில் தலையிடாமல் இருப்பதும் நிம்மதியையும் மன அமைதியையும் கொடுக்கும். லாப ஸ்தானத்தில் ஞான மோட்சக்காரகன் கேது சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த பணம் வரும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் நெருக்கடிகள் எல்லாம் விலகும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உருவாகும். பொன் பொருள் சேரும். உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு தேடி வரும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். தலைமையின் ஆதரவும் சிலருக்கு புதிய பொறுப்பும் கிடைக்கும். ஜீவன ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் வேலையில் இருப்பவர்கள் தங்கள் எல்லைக்குள் கட்டுப்பட்டு வேலைப்பார்ப்பது நன்மையளிக்கும். விவசாயிகளுக்கு சுபிட்சமான நிலையிருக்கும். மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதி தெளிவான சிந்தனையுடன் படிப்பில் கவனம் செல்லும். பிற்பகுதியில் கூடுதல் கவனம் தேவைப்படும்.சந்திராஷ்டமம்: செப். 3.அதிர்ஷ்ட நாள்: ஆக. 18, 24, 27. செப். 6, 9, 15.பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.சுவாதிதிட்டங்களை தீட்டி வெற்றி பெறும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் யோகமான மாதமாக இருக்கும். மாதம் முழுவதும் உங்கள் லாபாதிபதி சூரியன் லாப ஸ்தானத்திலேயே ஆட்சியாக சஞ்சரிப்பதால் வருமானம் உயரும். வரவேண்டிய பணம் வரும். நெருக்கடிகள் நீங்கும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். நிதிநிறுவனம், ஒப்பந்தம், கமிஷன் வர்த்தகம் புரிபவர்கள் ஆலோசகர்கள் லாபமடைவர். ஜீவன ஸ்தான குருவின் பார்வைகள் 2,4,6 ம் இடங்களுக்கு கிடைப்பதால் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள், பிரச்னைகள் யாவும் இருந்த இடம் தெரியாமல் போகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். தாய் வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். எடுத்த வேலைகள், இழுபறியாக இருந்த வழக்குகள் யாவும் முடிவிற்கு வரும். பெண்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். வேலைப் பார்க்கும் இடத்தில் நிம்மதியான சூழல் உருவாகும். சுய தொழில் செய்து வருபவர்களுக்கு ஆதாயம் கூடும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: செப். 3, 4.அதிர்ஷ்ட நாள்: ஆக. 22, 24, 31. செப். 6, 13, 15.பரிகாரம்: துர்கையை வழிபட்டுவர எடுத்த வேலைகள் வெற்றியாகும்.விசாகம் 1,2,3 ம் பாதம்கால நேரத்தை அறிந்து வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். தனக்காரகன் குரு பகவான் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நன்மையளிக்கும். மேல் அதிகாரி ஆலோசனையை ஏற்பதுடன் உடன் பணி புரிபவர்களையும் அனுசரித்துச்செல்வது நன்மையளிக்கும். ஆத்ம காரகனும் உங்கள் லாபாதிபதியுமான சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வருவாய் அதிகரிக்கும். எதிர்வரும் பிரச்னைகளை சமாளித்திடக்கூடிய சக்தி உண்டாகும். உங்கள் செல்வாக்கு உயரும். ஞானமோட்சக்காரகன் கேதுவும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பெரியோர் ஆதரவு கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். மாதம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் கனவு நனவாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். சேமிப்பு உயரும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும் என்றாலும், யோகக்காரகன் ராகு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மனதில் ஏதேனும் ஒரு குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதால் எடுத்த வேலைகளில் லாபம் காண முடியும். பெண்கள் தங்கள் வேலைகளில் கவனமாக இருப்பதுடன் குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பது நன்மையளிக்கும். விவசாயிகள் காலநிலை அறிந்து செயல்படுவது அவசியம். மாணவர்கள் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம்.சந்திராஷ்டமம்: செப். 4, 5.அதிர்ஷ்ட நாள்: ஆக. 21, 24, 30. செப். 3, 6, 12, 15.பரிகாரம்: சட்டநாதரை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் நடக்கும்.

விருச்சிகம்: விசாகம் 4 ம் பாதம்விழிப்புடன் செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் யோகமான மாதமாகும். பாக்ய ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குரு பகவான் உங்கள் ராசியையும் பார்ப்பதால் இதுவரை இருந்த நெருக்கடிகள் பிரச்னைகள் எல்லாம் உங்களை விட்டு விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். வியாபாரம் தொழில் வளர்ச்சி அடையும். எடுத்த வேலைகள் வெற்றிதரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் நெருக்கடிகள் நீங்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பொன் பொருள் புகழ் என்ற அனைத்தும் கிடைக்கும் நேரம் இந்த நேரம் என்பதால் சமூகத்தில் தனித்த செல்வாக்கு உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவுடன் எதிர்பார்த்த பொறுப்பும் கிடைக்கும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வருவதுடன், குழந்தை பாக்யத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பிள்ளைகளுக்காக எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியாகும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். ராசிநாதன் செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் விவசாயிகள் விளைச்சலில் கவனமாக இருக்க வேண்டும். திடீர் மழையினால் சங்கடங்களை அடைய வேண்டியதாக இருக்கும்.மாணவர்களுக்கு படிப்பில் கவனம் கூடும்.சந்திராஷ்டமம்: செப். 5.அதிர்ஷ்ட நாள்: ஆக. 18, 21, 27, 30. செப். 3, 9, 12.பரிகாரம்: ஏகாம்பரேஸ்வரரை வழிபட வாழ்வில் இருந்த சங்கடங்கள் விலகும்.அனுஷம்வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அது நன்மைக்கே என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் நன்மையான மாதமாகும். பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில் வக்கிர கதியில் சனி பகவான் சஞ்சரிப்பதால் கடந்த மாதத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். எதிர்பார்த்த வரவு வரும். மனதில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். உறவினருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவுடன் சக பணியாளர்களின் ஊக்கமும் கிடைத்து மகிழ்ச்சி அதிகரிக்கும். மனதில் நிம்மதி உண்டாகும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு  எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் பிரச்னைகள் எல்லாம் விலகும். வெளிநாடு செல்ல விரும்புகிறவர்களுக்கு அதற்குரிய அனுமதி கிடைக்கும். சிலர் செய்துவரும் தொழிலை விரிவு செய்வீர்கள். வாடகை இடத்தில் தொழில் செய்து வந்தவர்கள் சொந்த இடத்தில் தொழில் செய்யக்கூடிய அளவிற்கு நிலை உயரும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் கூடுதல் லாபம் ஏற்படும். அரசியலில் இருப்பவர்களுக்கு சூழ்நிலை சாதகமாகும். செல்வாக்கு உயரும். புதிய பதவி பொறுப்பு கிடைக்கும். சுய ஜாதகத்தில் தசா புத்தி சாதகமாக இருந்தால் நன்மைகள் கூடுதலாகும். பெண்களுக்கு மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். குழந்தைகள் நலனில் அக்கறை உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். விவசாயிகளுக்கு நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.சந்திராஷ்டமம்: செப். 5, 6.அதிர்ஷ்ட நாள்: ஆக. 18, 26, 27. செப். 8, 9, 17.பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.கேட்டைஎந்த நிலையிலும் வாழக்கூடிய திறமை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் முன்னேற்றமான மாதமாகும். வித்யா காரகன் புதன் செப். 3 வரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கையில் பணம் புரளும். வரவே வராது என்று கோயில் உண்டிக் கணக்கில் எழுதிய பணமும் வரும். வங்கியில் கேட்டிருந்த கடன் கிடைக்கும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். கலைஞர்களுக்கும் வியாபாரிகளுக்கும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கல்வியாளர்களுக்கு தடைபட்டு வந்த பதவி உயர்வு கிடைக்கும். பாக்ய குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதும், உங்கள் ராசிக்கு ஜீவனாதிபதி ஜீவன ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதும் முன்னேற்றத்தை நோக்கி உங்களை அழைத்துச் செல்லும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு அதற்குரிய தகவல் வரும். புதிய தொழில் தொடங்க முயற்சி செய்து வருபவர்களுக்கும் தொழிலை விரிவு செய்யும் பணியை மேற்கொண்டிருப்பவர்களுக்கும் எடுத்த வேலைகள் வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். பொன் பொருள் வாகனம் என்ற கனவு நனவாகும். விரய செலவுகள் குறைந்து சேமிப்பு உயரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். கணவன் மனைவிக்குள் நீடித்த சச்சரவு இருந்த இடம் தெரியாமல் போகும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் முடிவிற்கு வரும். விளைச்சலில் எதிர்பார்த்த ஆதாயம் வரும். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பீர்கள்.சந்திராஷ்டமம்: செப். 6, 7.அதிர்ஷ்ட நாள்: ஆக. 18, 23, 27. செப். 5, 9, 14.பரிகாரம்: சக்கரத்தாழ்வாரை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் நடக்கும்.

தனுசு; மூலம்உறுதியாக இருந்து வெற்றி பெற்று வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் முன்னேற்றமான மாதமாக இருக்கும். ஞானமோட்சக்காரகன் பாக்ய ஸ்தானத்திலும் யோகக்காரகன் சகாய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த வேலைகள் நடந்தேறும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். சுக ஸ்தானத்தில் அர்த்தாஷ்டம சனியாக சஞ்சரித்து வரும் சனி பகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடைகள், பிரச்னைகள் இருந்த இடம் தெரியாமல் போகும். மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். உடல்நிலை சீராகும். தாய் வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் லாபாதிபதி சுக்கிரன் செப். 1 வரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வரவை விட செலவு அதிகரிக்கும். திட்டமிடாமல் சில வேலைகளை மேற்கொண்டு அதில் சங்கடத்திற்கு ஆளாக வேண்டிய நிலை உருவாகும். குடும்பத்தினர் விருப்பத்தையும், பிரியமானவர்கள் ஆசைகளையும் பூர்த்தி செய்வதற்காக பொன் பொருள் என்று வாங்கி கையிருப்பு கரைய ஆரம்பிக்கும் என்றாலும், குடும்பத்தில் நிம்மதியான நிலையும் கணவன் மனைவிக்குள் ஒற்றுமையும் இருக்கும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். விவசாயிகள் விளைச்சலில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டி வரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.சந்திராஷ்டமம்: செப். 7, 8.அதிர்ஷ்ட நாள்: ஆக. 21, 25, 30. செப். 3, 12, 16.பரிகாரம்: இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட சங்கடங்கள் விலகும்.பூராடம்செல்வாக்கோடு வாழ வேண்டும் என்று வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ராசிநாதன் குரு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் யோசிக்காமல் சில வேலைகளில் ஈடுபட்டு அதனால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். வீண் செலவு அதிகரிக்கும். நெருக்கடிகள் ஏற்படும். செய்து வரும் வேளையிலும் பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும் என்றாலும், குரு பகவானின் பார்வைகள் விரய, குடும்ப, சுக ஸ்தானங்களுக்கு கிடைப்பதால் வீண் செலவுகள் கட்டுப்படும். நிம்மதியான உறக்கம் இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் ஆக. 31 வரை விரயங்களை ஏற்படுத்திட இருக்கிறார் என்பதால் வரவு செலவில் கவனமாக இருப்பது நன்மை தரும். வியாபாரிகள் புதிய முதலீட்டில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தங்களுடைய சந்தோஷத்திற்காகவும் செல்வாக்கை நிலைநாட்டவும் சிலர் வீண் செலவுகளை செய்து நஷ்டத்திற்கு ஆளாக வேண்டி வரும் என்றாலும், செப். 1 முதல் நிலைமை சீராகும். வருமானம் அதிகரிக்கும். தேவைக்கேற்ற பணம் வரும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். கடன்களை அடைத்திடும் அளவிற்கு வருமானம் வரும். பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து ராசியைப் பார்ப்பதால் உங்கள் செயல்களில் வேகம் இருக்கும் எடுத்த வேலைகளில் உறுதியாக இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடந்த மாதத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். ஞானமோட்சக்காரகன் கேது பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தெய்வ அருளும் பெரியோர் ஆதரவும் இந்த நேரத்தில் உங்களுக்கு கை கொடுக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் குடும்ப ரகசியங்களை பேசாமல் இருப்பது நன்மை தரும். சிலருக்கு மாதத்தின் பிற்பகுதியில் சொந்த இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டாகும்.சந்திராஷ்டமம்: செப். 8, 9.அதிர்ஷ்ட நாள்: ஆக. 21, 24, 30. செப். 3, 6, 12, 15.பரிகாரம்: பைரவரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும். ஆரோக்யம் சீராகும்.உத்திராடம் 1 ம் பாதம்உறுதியான மனம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆவணி மாதம் நன்மையான மாதமாகும். உங்கள் பாக்யாதிபதியும் ஆத்ம காரகனுமான சூரியன் பாக்ய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் நினைத்ததை உங்களால் சாதிக்க முடியும். எடுத்த வேலைகளை முடிக்க முடியும். பெரியோர் ஆதரவும் தெய்வ பலமும் கிடைக்கும். பிறருக்கு கட்டுப்பட்டு வாழ்ந்து வந்தவர்களுக்கு சுதந்திரமாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும். எடுத்த வேலைகளை முடிப்பதில் உறுதியாக இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். புதிய தொழில் தொடங்குவதற்காக எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். உத்தியோகத்தின் காரணமாகவோ வேறு காரணங்களுக்காகவோ பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்றாக வாழும் நிலை உருவாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும் என்றாலும், ராசிநாதன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஒவ்வொரு வேலையிலும் நிதானமும் கவனமும் இந்த நேரத்தில் அவசியம். உங்கள் செயல்களே உங்களுக்கு சங்கடத்தையும், சட்ட சிக்கல்களையும் உண்டாக்க வாய்ப்பிருப்பதால் நிதானமாக செயல்படுவது அவசியம். உங்கள் சப்தமாதிபதி புதனும் செப். 3 வரை மறதியையும், கவனக்குறைவையும் ஏற்படுத்திட வாய்ப்பிருப்பதால் உங்களுக்குள் குழப்பமும் தெளிவற்ற நிலையும் இருக்கும். அதனால் எடுக்கும் வேலைகளில் தடையும் தாமதமும் ஏற்படும். ஆக. 31 வரை அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சஞ்சாரமும் பொன் பொருள் இழப்பிற்கு காரணமாக இருப்பதால் பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம். கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பது நன்மையளிக்கும். மாதத்தின் பிற்பகுதி உங்களுக்கு யோகமாக இருக்கும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை இருக்கும்.சந்திராஷ்டமம்: செப். 9.அதிர்ஷ்ட நாள்: ஆக. 19, 21, 28, 30. செப். 1, 3, 10, 12.பரிகாரம்: அகோரமூர்த்தியை வழிபட உங்களுக்கிருந்த சங்கடங்கள் விலகும். வேண்டுதல் நிறைவேறும். 

மகரம்: உத்திராடம் 2,3,4 ம் பாதம்குறிப்பிட்ட லட்சியத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் அஷ்டமாதிபதி சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதுடன் ஞான மோட்சக்காரகன் கேதுவும் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல் நிலையிலும் மன நிலையிலும் எதிர்பாராத சங்கடங்கள் உண்டாகும். வேலைப் பார்க்கும் இடத்தில் நிம்மதியற்ற நிலை இருக்கும். மறைமுகத் தொல்லை அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்ப்புகள் இழுபறியாகும். சிலருக்கு அபராதம் செலுத்த வேண்டிய நிலையும் உருவாகும். அரசியல்வாதிகளுக்கும் தலைமைக்கும் ஒரு இடைவெளி உண்டாகும். உங்கள் வார்த்தைகளால் சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும் என்றாலும், உங்கள் பூர்வ புண்ணியாதிபதி சுக்கிரன் சஞ்சாரம் ஆக. 31 வரை சாதகமாக இருப்பதால் கையில் பணப்புழக்கம் இருக்கும். வரவேண்டிய பணம் வரும். உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்யக்கூடிய நிலை இருக்கும். எல்லாவற்றையும் நம்மால் சமாளிக்க முடியும் என்ற எண்ணத்துடன் வாழத் தொடங்குவீர்கள். சகாய ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சனி பகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் செயல்களில் நிதானம் தேவை. முன்பிருந்த நிலையில் இந்த மாதம் மாற்றம் ஏற்படும். எடுத்த வேலைகளில் இழுபறி உண்டாகும். மாதத்தின் பிற்பகுதியில் பல வகையிலும் செலவு அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் சேமிப்பை உயர்த்திக் கொள்வதும், பண   விவகாரத்தில் கவனமாக இருப்பதும் உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும். விவசாயிகளுக்கு ஆவணி மாதம் யோகமான மாதமாக இருக்கும். விளைச்சலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பெண்களுக்கு மனதில் நிம்மதி உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதி முன்னேற்றமாக இருக்கும்.சந்திராஷ்டமம்: செப். 9.10.அதிர்ஷ்ட நாள்: ஆக. 19, 26, 28. செப். 1, 8, 17.பரிகாரம்: வடாரண்யேசுவரரை வழிபட நினைத்தது நிறைவேறும்.திருவோணம்முன்னேற்றத்தை நோக்கி நடைபோட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் யோகமான மாதமாகும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் உங்கள் ராசியையும் பார்ப்பதால் நீண்டநாள் கனவுகள் நனவாகும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். நட்பு வட்டம் விரிவடையும். செய்துவரும் வியாபாரம் தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். துணிச்சலாக சில வேலைகளில் ஈடுபட்டு அதில் ஆதாயம் காண்பீர்கள். உங்கள் லாபாதிபதி செவ்வாய் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஆரோக்கியம் மேம்படும். எதிர்ப்பு, மறைமுகத் தொல்லை எல்லாம் விலகும். வழக்கு விவகாரம் ஜெயமாகும். எந்த ஒன்றையும் எதிர்கொண்டு வெற்றி பெறக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை மாறும். கையில் பணம் புரளும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவில் உங்கள் செல்வாக்கு இருக்கும். செப். 2 வரை புதன் அஸ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இழுபறியாக இருந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சிலருக்கு புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தை விரிவு செய்வதற்காகவும், வீடு கட்டுவதற்காகவும் வங்கியில் கேட்டிருந்த கடன் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் என்றாலும், சூரியனும், கேதுவும் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல் நிலையிலும் சுய ஒழுக்கத்திலும் கவனமாக இருப்பது நன்மையளிக்கும். விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் வரும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனை நன்மை தரும்.சந்திராஷ்டமம்: செப். 10, 11.அதிர்ஷ்ட நாள்: ஆக. 20, 26, 29. செப். 2, 8, 17.பரிகாரம்: ராமநாதசுவாமியை வழிபட வாழ்வில் இருந்த தடைகள் விலகும்.அவிட்டம் 1,2 ம் பாதம்உறுதியாக இருந்து வெற்றி பெற்று வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் முன்னேற்றமான மாதமாகும். தைரிய வீரிய பராக்கிரமக் காரகன் செவ்வாய் ருண ரோக சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். ஆரோக்கியம் சீராகும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் போட்டிகள் முடிவிற்கு வரும். இழுபறியாக இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். குரு பகவானின் சஞ்சாரமும் பார்வைகளும் சாதகமாக இருப்பதால் பொன் பொருள் சேரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். மாதத்தின் முற்பகுதியில் சுக்கிரனும் புதனும் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய வாகனம், இடம் வீடு வாங்கும் கனவு நனவாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைக்க முடியும். சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  நிதானம் தேவை. மேல் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது அவசியம். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு இந்த நேரத்தில் கிடைக்காமல் போகும். அதற்காக வேறு வழிகளில் செல்லாமல் அமைதி காப்பது நன்மையளிக்கும். உங்களைப் பற்றி ஒரு சிலர் அவதூறு பரப்புவதற்கும் வாய்ப்பிருப்பதால் அனைத்து விவகாரத்திலும் கவனமாக இருப்பது உங்கள் கவுரவத்தை பாதுகாக்கும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும் வார்த்தையில் நிதானம் காப்பதும் பண விவகாரத்தில் எச்சரிக்கையாக இருப்பதும் இந்த நேரத்தில் மிகவும் அவசியமானது. பெண்கள் குடும்பத்தினரை ஆலோசிக்காமல் எந்த முயற்சியிலும் இறங்க வேண்டாம். விவசாயிக்கு லாபம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மாணவர்கள் ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்பது நன்மையாகும்.சந்திராஷ்டமம்: செப். 11.அதிர்ஷ்ட நாள்: ஆக. 18, 26, 27. செப். 8, 9, 17.பரிகாரம்: திருத்தணி முருகனை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.

கும்பம்: அவிட்டம் 3,4 ம் பாதம்உழைத்து வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். பூமி காரகன் செவ்வாய் மாதம் முழுவதும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பூர்வீக சொத்தி ஏதேனும் வில்லங்கம் உருவாகலாம். உறவினர்களுக்கும் உங்களுக்கும் இடைவெளி, பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடு, அவர்களுடைய செயல்களினால் சங்கடங்கள் என்பதையெல்லாம் சந்திக்க வேண்டியதாக இருக்கும். சிலர் அவசர செலவிற்காக இடம், வயல் போன்றவற்றை விற்கவும் செய்வீர்கள். சப்தம ஸ்தானத்தில் ஞான மோட்சக்காரகன் கேது சஞ்சரிப்பதால் நட்பு வட்டத்தில் விரிசல் ஏற்படும். தம்பதியர் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் பிரச்னைகளை வளர்த்துக்கொள்ள வேண்டிய நிலை உருவாகும். கூட்டுத்தொழிலில் அதிருப்தி ஏற்படும். ராசிநாதன் சனிபகவான் தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் வக்கிரமடைந்திருப்பதால் கடந்த மாதத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். கையில் பணம் புரளும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லக்கூடிய நிலை உருவாகும். வியாபாரிகள் புதிய முதலீடுகள் விஷயத்திலும் வியாபாரத்தை விரிவு செய்வதிலும் கவனமாக இருப்பது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப் பார்க்கும் இடத்தில் பிரச்னைகளை சந்தித்தாலும் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். சொந்த இடம் வீடு என்ற கனவு நனவாகும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகள் தலைமையை அனுசரித்துச் செல்வதால் நன்மையுண்டாகும். விவசாயிகளுக்கு முன்னேற்றமான நிலை இருக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் மரியாதை கூடும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். விவசாயத்தில் ஆதாயம் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: செப். 11, 12.அதிர்ஷ்ட நாள்: ஆக. 18, 26, 27. செப்.8, 9, 17.பரிகாரம்: மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.சதயம்உயர்ந்த நோக்கத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு,  பிறக்கும் ஆவணி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். ஜென்ம ராசிக்குள் ராகு சஞ்சரிப்பதால் மனதி ஆசை அதிகரிக்கும். புதிய புதிய வேலைகளை எடுத்து அதில் வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். வருமானத்தின் மீது கவனம் அதிகரிக்கும் என்றாலும், சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது நட்புகள் வழியே சங்கடத்தை ஏற்படுத்துவார். குடும்பத்திற்குள்ளும் நிம்மதியற்ற நிலையை  உண்டாக்குவார். உங்கள் சப்தமாதிபதியும் ஆத்ம காரகனுமான சூரியன் சப்தம ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். செய்துவரும் வியாபாரத்தையும் தொழிலையும் விரிவு செய்வதற்காக சிலர் இடம் மாறுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தனக் காரகன் குரு ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வைகள் 10,12,2 ம் இடங்களுக்கு கிடைப்பதால் செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் தொடங்க எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வீண் செலவுகள் குறையும். மனதில் நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் இருந்த இடம் தெரியாமல் போகும். உங்கள் ஜீவனாதிபதி செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில சஞ்சரிப்பதால் உறவுகளுக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி ஏற்படும். பூர்வீக சொத்திலும் சிலருக்கு பிரச்னைகள் உண்டாகும். குழந்தைகள் பற்றிய கவலை அதிகரிக்கும் என்பதால் கவனமாக செயல்படுவது நன்மையளிக்கும். பெண்கள் குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பது அவசியம். பணிபுரியும் இடத்தில் தங்கள் குடும்ப ரகசியங்களை யாரிடமும் தெரியப்படுத்த வேண்டாம். விவசாயிகளுக்கு விளைச்சலில் கூடும் கவனம் வேண்டும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆலோசனை நன்மை தரும்.சந்திராஷ்டமம்: செப். 12, 13.அதிர்ஷ்ட நாள்: ஆக. 22, 26, 31. செப். 4, 8, 17.பரிகாரம்: தில்லை காளியை வழிபட வாழ்வில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.பூரட்டாதி 1,2,3 ம் பாதம்பிறருக்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் நன்மையான மாதமாகும். தனக்காரகன் குருபகவான் ஆறாம் இடத்தில் சஞ்சரித்தாலும், அவருடைய பார்வைகளால் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் விலகும். நிம்மதியான உறக்கம் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேரும் புதிய இடம் வீடு வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும். அரசியல் வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைப்பதுடன் நீண்டநாள் லட்சியமாக இருந்த புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு வேலையில் ஏற்பட்ட அச்சம் விலகும். சிலருக்கு நிரந்தர குடியுரிமைக் கிடைக்கும். செப். 3 முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதனால் மனதில் இருந்த குழப்பம், வாழ்க்கையில் ஏற்பட்ட பயம் விலகும். வரவேண்டிய பணம் வரும். சேமிப்பு உயரும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்புண்டாகும். பெண்களுக்கு குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். விவசாயிகள் பருவநிலை அறிந்து செயல்படுவது அவசியம். முதியவர்கள் உணவில் கட்டுப்பாட்டுடனும் உடல் நிலையில் கவனமாகவும் இருப்பது நன்மையளிக்கும். மாணவர்கள் எதிர்காலத்தை எண்ணி படிப்பில் அக்கறை செலுத்துவது அவசியம்.சந்திராஷ்டமம்: செப். 13.அதிர்ஷ்ட நாள்: ஆக. 21, 26, 30. செப். 3, 8, 12, 17.பரிகாரம்: மகாலிங்கேஸ்வரரை வழிபட வாழ்வில் ஏற்பட்ட தடைகள் விலகும்.

மீனம்: பூரட்டாதி 4 ம் பாதம்: நாளை நடப்பதை இன்றே அறியக்கூடிய அளவிற்கு ஆற்றல் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் யோகமான மாதமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் ராசிநாதன் குரு பகவான், தன்னுடைய 9 ம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் இதுநாள் வரை உங்களுக்கிருந்த நெருக்கடிகள் பிரச்னைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். நினைத்த வேலைகள் நினைத்தபடி நடந்தேறும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் பிரச்னைகள் எல்லாம் முடிவிற்கு வரும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும் சிலருக்கு புதிய பொறுப்பு பதவி தேடிவரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவும் எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். வெளிநாட்டில் பணியாற்றி வருபவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். மனதில் நிம்மதியான நிலை உண்டாகும். பொருளாதார நிலை உயரும். பெண்களுக்கு உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை இருக்கும். திருமண வயதினருக்கு பொருத்தமான வரன் வரும். விவசாயிகளுக்கு உழைப்பு அதிகரிக்கும். விளைச்சலில் கவனம் செல்லும் மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவைப்படும்.சந்திராஷ்டமம்: செப். 14.அதிர்ஷ்ட நாள்: ஆக. 21, 30. செப். 3, 12.பரிகாரம்: கோமதி அம்மனை வழிபட குறைகள் யாவும் விலகும்.உத்திரட்டாதிநினைத்ததை சாதிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் நன்மையான மாதமாகும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து வரும் சனி பகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு, மனநிலையில் தோன்றிய குழப்பம், குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி யாவும் விலகும் என்றாலும், விரய ஸ்தானத்தில் யோக, போகக்காரகன் ராகு சஞ்சரிப்பதால் வரவை விட செலவு அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் தேவையற்ற பிரச்னைகள் உண்டாகும். அதனால் ஒருவருக்கொருவர் அனுசரித்துச்செல்வது இந்த நேரத்தில் நன்மையை உண்டாக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராசிநாதன் குரு பகவான் சஞ்சரிப்பதால் குழந்தைகள் பற்றிய சிந்தனை மேலேங்கும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும்.  பிள்ளைகள் திருமணம், வேலை வாய்ப்பு என்பதில் அக்கறை அதிகரிக்கும். சத்ரு ஜெய ஸ்தானத்தில் சூரியன் ஆட்சியாக சஞ்சரிப்பதுடன் கேதுவும் சஞ்சரிப்பதால் எல்லாவற்றிலும் அடங்கி அடங்கி சென்றுக் கொண்டிருந்தவர்களும் வேகமாக செயல்படத் தொடங்குவீர்கள். எதிர்ப்பு, போட்டி என்று பயந்த நிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் பிரச்னைகள் எல்லாம் முடிவிற்கு வரும். வேலையில் ஏற்பட்ட வழக்கு சாதகமாகும். தடைபட்ட ஊதியம், பதவி உயர்வு கிடைக்கும். சுய தொழில் செய்து வருபவர்களுக்கு ஆதாயம் கூடும் சொந்த இடம் வீடு என்ற நீண்டநாள் கனவு நனவாகும். உங்கள் சப்தமாதிபதி புதன் சஞ்சாரம் செப். 2 வரை சாதகமாக இருப்பதால் கையில் பணம் புரளும். சேமிப்பு உயரும். இந்த நேரத்தில் உங்கள் அஷ்டமாதிபதி சுக்கிரன் ஆக. 31 வரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாலினரால் உங்கள் மனதில் தடுமாற்றமும் குழப்பம் ஏற்படும். அதனால் குடும்பத்திலும் சங்கடங்கள் தோன்றும். பிரச்னைகள் ஏற்படும் என்பதால், முடிந்த வரை நட்பு வட்டத்தை விட்டு விலகி இருப்பது இந்த நேரத்தில் நன்மைதரும். குடும்ப ரகசியங்களை வேறு யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம், அதனால் குடும்பத்திற்குள் பிரச்னைகளை சந்திக்க வேண்டிவரும். கலைஞர்களுக்கு மாதத்தின் முற்பகுதி யோகமாக இருக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். விவசாயிகள் செலவிலும் விளைச்சலிலும் கவனமாக இருப்பது நன்மையளிக்கும். சூழ்நிலை அறிந்து செயல்படுவது அவசியம். மாணவர்கள் தவறான நட்புகளை விட்டு விலகுவதால் எதிர்காலம் பிரகாசமாக மாறும்.சந்திராஷ்டமம்: ஆக. 18. செப். 14, 15.அதிர்ஷ்ட நாள்: ஆக. 21, 26, 30. செப். 3, 8, 12, 17.பரிகாரம்: அஷ்டமி திதியில் பைரவரை வழிபட சங்கடங்கள் நீங்கும்.ரேவதிபிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் நன்மையான மாதமாகும். வித்யா காரகன் புதன் செப். 2 வரை ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த வரவு இருக்கும். கையில் பணம் புரளும். அடமானம் வைத்த பத்திரம் கைக்கு வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். செய்துவரும் வியாபாரம் தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும். தடைபட்ட பணம்வரும். வங்கியில் கேட்டிருந்த கடன் கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்குவரும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். புதிய இடம் வீடு என்ற கனவு நனவாகும். கடக ராசிக்குள் உச்சமாக சஞ்சரிக்கும் குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால், பெரியோர் ஆதரவுடன், செல்வாக்கு அந்தஸ்து எல்லாம் ஏற்படும். நஷ்டத்தில் இயங்கிய தொழிலிலும் லாபம் காண முடியும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். திருமண வயதினருக்கு வரன் அமையும். குழந்தை பாக்யத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். ஞான மோட்சக்காரகன் கேதுவும், ஆறாமிட அதிபதி சூரியனும் 6 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகள் யாவும் வெற்றியாகும். உடல்நிலை சீராகும். வம்பு வழக்குகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். நீதிமன்ற வழக்கு ஜெயமாகும். நீண்டான முயற்சிகள் நடந்தேறும் என்றாலும், சப்தம ஸ்தானத்தில் ஆக. 31 வரை சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்ப்பாலினர் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நன்மையளிக்கும். பெண்கள் குடும்பத்தினர. ஆலோசனையை ஏற்று செயல்படுவது நன்மையாகும். வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். உடல்நிலை சீராகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். விவசாயிகளுக்கு உழைப்பு அதிகரிக்கும். மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதி யோகமாக இருக்கும். ஆசிரியர்கள் ஆலோசனை நன்மையளிக்கும்.சந்திராஷ்டமம்: ஆக. 19. செப். 15, 16.அதிர்ஷ்ட நாள்: ஆக. 21, 23, 30. செப். 3, 5, 12, 14.பரிகாரம்: புதன் கிழமையில் மீனாட்சி அம்மனை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.


ShareTweetShareShare

Advertisement

Advertisement Tariff

Advertisement




      Dinamalar
      Follow us