sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

/

01

முந்தய பதிப்புகள்

இன்றுநேற்று
இன்றுநேற்று

To type in English

 (or) 

Press CTRL+G 

To type in English

மொத்த செய்திகள்: 623

அரையாண்டு தேர்வு விடுமுறைகள் முடிந்து, பள்ளிகள் துவங்கவுள்ளதால், சொந்த ஊருக்கு சென்ற தொழிலாளர்கள் திரும்பி வந்ததால், திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகளவு இருந்தது.

இன்றைய போட்டோ

01-Jan-2024

அசுவினி; நல்லநேரம் ஆரம்பம்செவ்வாய், பகவான் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2024 ஆங்கில வருடத்தில் பொருளாதார நிலையில் இதுவரை இருந்த நெருக்கடிகள் எல்லாம் விலகப்போகிறது. அரசு வகையில் நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளில் இனி வெற்றியடைவீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்திலும் லாபம் என்ற நிலையை அடைய இருக்கிறீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறுவதுடன் சுயதொழில் செய்து வருபவர்கள் லாபம் காணும் காலமாக இந்த ஆண்டு இருக்கப் போகிறது. பொன் பொருள் சேர்க்கையும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு என முன்னேற்றமான காலமாக இக்காலம் இருக்கும்.சனி சஞ்சாரம்:சனி ஆண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் 2024ம் ஆண்டு மிகப்பெரிய யோக காலமாக இருக்கும்.  நினைத்ததை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு உருவாகும். அபரிமிதமான வருமானம் உண்டாகும். புதிய வாகனம், சொத்து சேர்க்கை ஏற்படும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பார்த்த பொறுப்பும் பதவியும் வந்து சேரும்.ராகு - கேது சஞ்சாரம்ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் கேதுவால் செல்வாக்கு உயரும். எதிர்ப்பு அகலும். ஆரோக்கியம் சீராகும், வழக்குகள் வெற்றியாகும்.குரு சஞ்சாரம்:ஏப் 30, 2024 வரை ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் வேலை வாய்ப்பு, திருமண வயதினருக்கு திருமணம், சிலருக்கு குழந்தை பாக்கியம், புதிய வீடு கட்டி குடியேறுதல் என யாவும் சுபமாகும். மே 1, 2024 முதல் ரிஷபத்திலும், சஞ்சரிக்கும் குரு பகவான், ரிஷப சஞ்சார காலத்தில் குடும்பத்தில் முன்னேற்றத்தையும், பொன் பொருள் சேர்க்கையையும், செல்வாக்கையும் உண்டாக்குவார்.சூரிய சஞ்சாரம்:சூரியன் ஜன 15, - பிப் 12. பிப் 13, - மார்ச் 13. ஜூன் 15, - ஜூலை 16. செப் 17, - அக் 17 காலங்களில் உங்கள் நிலையில் உயர்வை உண்டாக்குவார். செல்வாக்கை அதிகரிப்பார். அரசு வழி செயல்களில் ஆதாயத்தை வழங்குவார். அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறும். சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வெளிநாட்டிற்கு செல்வதற்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும்.பொதுப்பலன்:பொருளாதார நிலை மேம்படும். சேமிப்பு உயரும். சொத்து சேர்க்கை உண்டாகும். சுபநிகழ்வுகள் நடந்தேறும். எதிர்ப்பு விலகும். ஆரோக்கியம் மேம்படும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். கலைஞர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். வெளிநாட்டு வர்த்தகம் லாபம் தரும்.தொழில்:தொழிலில் இருந்த தடை விலகும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். லாபம் அதிகரிக்கும். இயந்திரம், எலக்ட்ரானிக், பங்கு வர்த்தகம், கெமிக்கல், மெடிக்கல் தொழில்கள் முன்னேற்றம் அடையும். விவசாயத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.பணியாளர்கள்:உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லையே என வருந்துவோரின் நிலை மாறும். ஊதியம் அதிகரிக்கும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு உண்டாகும். அதிகாரிகளின் ஆதரவு அதிகரிக்கும்.பெண்கள்:இதுவரையில் இருந்த சங்கடம் நீங்கும். குடும்பத்தினரிடையே உங்கள் ஆலோசனைக்கு மதிப்புண்டாகும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமண பாக்கியம் உண்டாகும். குழந்தைக்காக ஏங்கியவர்களின் ஏக்கம் தீரும்.கல்வி:கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். ஆசிரியர்களின் ஆலோசனை உங்களை உயர்வடையச் செய்யும்.உடல்நிலை: உங்களை அச்சுறுத்திய நோய்கள் மருத்துவத்தால் விலகும். பரம்பரை நோய்கள், தொற்று நோய்களால் உண்டான பாதிப்பு நீங்கும். ஆரோக்கியம் அதிகரிக்கும்.குடும்பம்:குடும்ப பிரச்னைகள் மறையும் தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். வாகன, சொத்து சேர்க்கையும் உண்டாகும்.பரிகாரம்: திருச்செந்தூர் முருகப்பெருமானை தரிசித்து வேண்டிவர உங்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும்பரணி; வெற்றி மீது வெற்றிசுக்கிரன். செவ்வாய் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2024 ஆங்கில வருடத்தில் பெரிய அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகப் போகிறது. செல்வம், செல்வாக்கு, புதிய பொறுப்பு என உங்கள் நிலையில் மாற்றங்களைக் காண்பீர்கள். புதிய வாகனம், வெளிநாடு செல்லும் யோகம், திருமண வயதினருக்கு திருமணம், வேலைத்தேடியவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை, திரைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தம், தொழிலில் முன்னேற்றம், புதிய தொழில் தொடங்கி லாபம் காணும் நிலை, எடுத்த காரியங்கள் யாவற்றிலும் வெற்றி என உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டமான காலமாக இக்காலம் இருக்கும்.சனி சஞ்சாரம்சனி பகவான் ஆண்டு முழுவதும் லாபஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் அதிர்ஷ்டங்களை அள்ளித் தருவார். வாழ்க்கையில் இருந்த சங்கடங்களை விலக்கி வைப்பார். முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். பொன் பொருள் சேர்க்கை, வாகன யோகம் என நீங்கள் விரும்பியவற்றை எல்லாம்  அடைய வைப்பார்.ராகு - கேது சஞ்சாரம்கேதுவால் வாழ்க்கை வளமாகும். எதிர்ப்பார்ப்பு நிறைவேறும். தொழில், உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். ஆரோக்கியம் மேம்படும். வெளிநாட்டுத் தொடர்புகள், முயற்சிகள் எல்லாம் வெற்றியாகும். பொன் பொருள் சேர்க்கையுடன் வாகனச் சேர்க்கையும் உண்டாகும்.குரு சஞ்சாரம்ஏப் 30, 2024 வரை ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் ஒருபக்கம் அலைச்சல் அதிகரித்தாலும் மறுபக்கம் முன்னேற்றங்களை அதிகரிப்பார். குலதெய்வ அருள் உண்டாகும்.  சுப காரியங்கள் நடந்தேறும். பொன், பொருள் சேரும். மே 1, 2024 முதல் தன, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரித்து யோகமான பலன்களை வாரி வழங்குவார். பொருளாதாரத் தடை விலகும். ஆரோக்கியம் சீராகும். எதிர்ப்பு விலகும்.உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும். வருமானம் பல வழியிலும் உண்டாகும்.சூரிய சஞ்சாரம்சூரியன் ஜன 15 - மார்ச் 13 ஜூன் 15 -  ஜூலை 16,  செப் 17 - அக் 17 காலங்களில்  உங்கள் ராசிக்கு ஜீவனஸ்தானம், லாபஸ்தானம், தைரிய ஸ்தானம், சத்ரு ஸ்தானம் ஆகியவற்றில் சஞ்சரிக்கும் காலங்களில் வியாபாரத்திலும் தொழிலிலும் முன்னேற்றத்தை உண்டாக்குவார். லாபத்தை அதிகரிப்பார். பணியாளர்களின் செல்வாக்கை உயர்த்துவார். பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவார். எதிரிகள் விலகிச் செல்ல வைப்பார். வழக்குகள் சாதகத்தை ஏற்படுத்துவார்.பொதுப் பலன்செல்வாக்கு அதிகரிக்கும். எந்த ஒரு செயலிலும் திறம்பட செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சி நிறைவேறும். ஆன்மிகப் பணியில் ஈடுபட்டு  பாராட்டு உண்டாகும். பணப்பற்றாக்குறை விலகும். கடன்கள் அடையும். சிலருக்கு திருமண யோகம் உண்டாகும்.  வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவதற்காக மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். வங்கியில் கடன் கிடைக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும்.  கலைத்துறையினருக்கு முன்னேற்றம் ஏற்படும்.தொழில் தொழில் லாபத்தை நோக்கிச் செல்லும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். அரசு வழியில் சலுகை கிடைக்கும். வாகனத் தொழில், ஸ்பேர் பார்ட்ஸ், எலக்ட்ரானிக்ஸ், பைனான்ஸ், விவசாயம், தொழில்கள் முன்னேற்றம் அடையும். திரையுலகினர், சின்னத்திரையினர், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், ஆலோசகர்களின் நிலை உயரும்.பணியாளர்கள்தனியார்த்துறையில் பணியாற்றி வருவோரின்  நிலை உயரும். சங்கடம் விலகும்.  எதிர்ப்பார்த்த சலுகை கிடைக்கும். சிலருக்கு புதிய பொறுப்பு உண்டாகும். அரசு ஊழியர்களுக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும்பெண்கள்வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டாகும். சிலர் சுயத்தொழில் தொடங்கி வெற்றி பெறுவீர்கள். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். பிள்ளைகள் மீதான அக்கறை அதிகரிக்கும். குடும்பத்தில் மதிப்பு உயரும்.கல்விபடிப்பின் மீதான அக்கறை அதிகரிக்கும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் கூடுதல் நன்மை தரும். சிலர் மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்வீர்கள். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லுாரியில் விருப்பப்பட்ட பாடத்தில் சேர்வீர்கள்.உடல்நிலைஉடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். ஆரோக்கியம் அதிகரிக்கும். பரம்பரை நோய்களுக்கு சிகிச்சைகள் பெற்று குணமடைவீர்கள். படுக்கையில் இருந்து மருத்துவம் பெற்று வந்தவர்களும் இனி எழுந்து நடந்திடும் நிலை உண்டாகும்.குடும்பம்குடும்ப உறவுகளிடம் இருந்த சங்கடங்கள் விலகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.  தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். சிலருக்கு வெளிநாட்டிற்கு சென்று பணிபுரியும் யோகம் உண்டாகும்.பரிகாரம் காளியை வழிபட்டுவர எதிர்ப்பு விலகும். எண்ணங்கள் நிறைவேறும்.கார்த்திகை; உழைப்பால் உயர்வுசூரியனின் நட்சத்திரத்தில் பிறந்தாலும் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு சந்திரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.ஆங்கில ஆண்டான 2024, கார்த்திகை 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு யோகத்தை வழங்கும்.  முயற்சியில் வெற்றி தரும். செல்வாக்கு உயரும். 2,3,4 ம் பாதத்தினருக்கு புதிய தொழில் தொடங்கும் யோகம், பணியில் முன்னேற்றம், வேலை வாய்ப்பை உண்டாக்கும். உழைப்பால் உயர்வு காண்பீர்கள். சனி சஞ்சாரம்கார்த்திகை 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு லாபாதிபதியும், 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜீவனாதிபதியுமான சனி பகவான் ஆண்டு முழுவதும் யோகப் பலன்கள் தருவார். தொழில் உத்தியோகத்தில் விருப்பம் நிறைவேறும். வருவாய் அதிகரிக்கும். பொருளாதார பிரச்னைகளில் இருந்து பாதுகாப்பார். வழக்கமான செயல்களில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். ராகு - கேது சஞ்சாரம்1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கேதுவால் விருப்பம் நிறைவேறும். ஆரோக்கியம் சீராகும். வழக்கு வெற்றியாகும். எதிர்ப்பு விலகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு ராகுவால் வியாபாரம், தொழிலில் லாபம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். குரு சஞ்சாரம்ஏப் 30, வரை 1 ம் பாதத்தினருக்கு ஜென்ம ராசியிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு 12ம் இடத்திலும், மே 1 முதல் 1ம் பாதத்தினருக்கு 2ம் வீட்டிலும், 2,3,4ம் பாதத்தினருக்கு ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்கும் குரு 1ம் பாதத்தினருக்கு ஏப்.30 வரை பொருளாதார நிலையில் முன்னேற்றம் தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிப்பார். 2,3,4 ம் பாதத்தினருக்கு மே 1 முதல் யோகத்தை உண்டாக்குவார். செல்வாக்கை அதிகரிப்பார். சமூகத்தில் அந்தஸ்தை உயர்த்துவார்.சூரிய சஞ்சாரம்கார்த்திகை 1 ம் பாதத்தினருக்கு ஜன 15 -  மார்ச் 13, ஜூன் 15 - ஜூலை 16, செப் 17 - அக் 17 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு பிப் 13 - ஏப் 13. ஜூலை 17 - ஆக 16. அக்18 - நவ 15 காலங்களிலும் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். வழக்குகளில் இருந்து விடுதலை உண்டாக்குவார். செல்வாக்கை உயர்த்துவார். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகளை, பதவியை வழங்குவார். அரசு பணியாளர்களின் மதிப்பை அதிகரிப்பார். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலக்குவார். உடல்நிலையில் ஆரோக்கியம் ஏற்படுத்துவார். அரசால் ஏற்பட்ட நெருக்கடி மறையும்.பொதுப்பலன்சங்கடங்கள் விலகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். அறிவாற்றல் அதிகரிக்கும். அரசு வழியில் சலுகை கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் வரும். தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். வெளிநாட்டிற்கு செல்ல நினைத்தவர்களின் முயற்சி வெற்றியாகும்.தொழில் தடைகள் விலகும். எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். முயற்சிகள் எளிதாக வெற்றியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் முன்னேற்றம் அடையும். இண்டஸ்ட்ரியல், ஹார்டுவேர்ஸ், ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர் வணிகம், சினிமா, பங்கு வர்த்தகம் கை கொடுக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.பணியாளர்கள்பணிபுரியிடத்தில் மதிப்பு அதிகரிக்கும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு உண்டாகும். இக்காலத்தில் மற்றவர் விவகாரங்களில் தலையிடாமல் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவதால் நன்மை அதிகரிக்கும்.பெண்கள் அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்களின் செல்வாக்கு உயரும். சுயதொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் ஏற்படும். சிலருக்கு திருமண பாக்கியம் உண்டாகும். கணவன், மனைவி உறவில் ஒற்றுமை இருக்கும். குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.கல்வி படிப்பில் முழு கவனத்தை செலுத்துவதால் எதிர்ப்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியும். சிலருக்கு வெளிநாட்டிற்கு சென்று கல்வி கற்கும் வாய்ப்புண்டாகும்.உடல்நிலைநீண்ட நாள் நோய்கள் மருத்துவ சிகிச்சையால் குணமாகும். நடமாட்டத்தில் இருந்த பாதிப்பு நீங்கும். சுறுசுறுப்புடன் செயல்படக்கூடிய அளவிற்கு உடல்நிலை ஆரோக்கியமடையும்.குடும்பம்திட்டமிட்டு செயல்படுவீர்கள். தம்பதி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வர். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சொத்து சேர்க்கை உண்டாகும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். பரிகாரம்; ஆலங்குடி குரு பகவானை வணங்க வாழ்க்கை வளமாகும்.

கார்த்திகை; உழைப்பால் உயர்வுசூரியனின் நட்சத்திரத்தில் பிறந்தாலும் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு சந்திரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.ஆங்கில ஆண்டான 2024, கார்த்திகை 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு யோகத்தை வழங்கும்.  முயற்சியில் வெற்றி தரும். செல்வாக்கு உயரும். 2,3,4 ம் பாதத்தினருக்கு புதிய தொழில் தொடங்கும் யோகம், பணியில் முன்னேற்றம், வேலை வாய்ப்பை உண்டாக்கும். உழைப்பால் உயர்வு காண்பீர்கள். சனி சஞ்சாரம்கார்த்திகை 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு லாபாதிபதியும், 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜீவனாதிபதியுமான சனி பகவான் ஆண்டு முழுவதும் யோகப் பலன்கள் தருவார். தொழில் உத்தியோகத்தில் விருப்பம் நிறைவேறும். வருவாய் அதிகரிக்கும். பொருளாதார பிரச்னைகளில் இருந்து பாதுகாப்பார். வழக்கமான செயல்களில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். ராகு - கேது சஞ்சாரம்1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கேதுவால் விருப்பம் நிறைவேறும். ஆரோக்கியம் சீராகும். வழக்கு வெற்றியாகும். எதிர்ப்பு விலகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு ராகுவால் வியாபாரம், தொழிலில் லாபம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். குரு சஞ்சாரம்ஏப் 30, வரை 1 ம் பாதத்தினருக்கு ஜென்ம ராசியிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு 12ம் இடத்திலும், மே 1 முதல் 1ம் பாதத்தினருக்கு 2ம் வீட்டிலும், 2,3,4ம் பாதத்தினருக்கு ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்கும் குரு 1ம் பாதத்தினருக்கு ஏப்.30 வரை பொருளாதார நிலையில் முன்னேற்றம் தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிப்பார். 2,3,4 ம் பாதத்தினருக்கு மே 1 முதல் யோகத்தை உண்டாக்குவார். செல்வாக்கை அதிகரிப்பார். சமூகத்தில் அந்தஸ்தை உயர்த்துவார்.சூரிய சஞ்சாரம்கார்த்திகை 1 ம் பாதத்தினருக்கு ஜன 15 -  மார்ச் 13, ஜூன் 15 - ஜூலை 16, செப் 17 - அக் 17 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு பிப் 13 - ஏப் 13. ஜூலை 17 - ஆக 16. அக்18 - நவ 15 காலங்களிலும் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். வழக்குகளில் இருந்து விடுதலை உண்டாக்குவார். செல்வாக்கை உயர்த்துவார். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகளை, பதவியை வழங்குவார். அரசு பணியாளர்களின் மதிப்பை அதிகரிப்பார். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலக்குவார். உடல்நிலையில் ஆரோக்கியம் ஏற்படுத்துவார். அரசால் ஏற்பட்ட நெருக்கடி மறையும்.பொதுப்பலன்சங்கடங்கள் விலகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். அறிவாற்றல் அதிகரிக்கும். அரசு வழியில் சலுகை கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் வரும். தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். வெளிநாட்டிற்கு செல்ல நினைத்தவர்களின் முயற்சி வெற்றியாகும்.தொழில் தடைகள் விலகும். எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். முயற்சிகள் எளிதாக வெற்றியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் முன்னேற்றம் அடையும். இண்டஸ்ட்ரியல், ஹார்டுவேர்ஸ், ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர் வணிகம், சினிமா, பங்கு வர்த்தகம் கை கொடுக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.பணியாளர்கள்பணிபுரியிடத்தில் மதிப்பு அதிகரிக்கும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு உண்டாகும். இக்காலத்தில் மற்றவர் விவகாரங்களில் தலையிடாமல் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவதால் நன்மை அதிகரிக்கும்.பெண்கள் அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்களின் செல்வாக்கு உயரும். சுயதொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் ஏற்படும். சிலருக்கு திருமண பாக்கியம் உண்டாகும். கணவன், மனைவி உறவில் ஒற்றுமை இருக்கும். குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.கல்வி படிப்பில் முழு கவனத்தை செலுத்துவதால் எதிர்ப்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியும். சிலருக்கு வெளிநாட்டிற்கு சென்று கல்வி கற்கும் வாய்ப்புண்டாகும்.உடல்நிலைநீண்ட நாள் நோய்கள் மருத்துவ சிகிச்சையால் குணமாகும். நடமாட்டத்தில் இருந்த பாதிப்பு நீங்கும். சுறுசுறுப்புடன் செயல்படக்கூடிய அளவிற்கு உடல்நிலை ஆரோக்கியமடையும்.குடும்பம்திட்டமிட்டு செயல்படுவீர்கள். தம்பதி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வர். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சொத்து சேர்க்கை உண்டாகும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். பரிகாரம்ஆலங்குடி குரு பகவானை வணங்க வாழ்க்கை வளமாகும்.ரோகிணி; வியாபார வளர்ச்சிசந்திரன், சுக்கிர பகவான் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2024 வருடத்தில் நீங்கள் செய்யும் தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். பார்த்து வரும் பணியில் எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். வருமானம் பல வழிகளிலும் வரும். வெளிநாட்டு வர்த்தகம் ஆதாயம் தரும். முதலீட்டாளர்களுக்கு பணியாளர் ஒத்துழைப்பு உண்டாகும். மாற்று மொழியினர், இனத்தினரால் எதிர்பார்ப்பு நிறைவேறும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் தேடிவரும். அவ்வப்போது உடல் பாதிப்பு தோன்றும். செலவுகள் பல வகையிலும் ஏற்படும்.சனி சஞ்சாரம் சனி ஜீவன ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் தொழிலில் முன்னேற்றம். உத்தியோகத்தில் உயர்வு, செல்வாக்கு, அந்தஸ்து என்று உண்டாவதுடன், உடல்நிலையில் முன்னேற்றம். வாழ்க்கைத் துணையுடன் ஒற்றுமை. விரயச் செலவுகள் தவிர்ப்பு என நிம்மதியான நிலை ஏற்படும்.ராகு - கேது சஞ்சாரம்ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் ராகுவால் வாழ்க்கை வளமாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் பல வழியிலும் வரும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். உயர்ந்த பதவி அல்லது பொறுப்பு  வந்து சேரும். குலதெய்வ அருள் உண்டாகும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணம் நடைபெறும். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும்.குரு சஞ்சாரம்ஏப் 30, வரை விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் குருவின் பார்வைகளால் ஆரோக்கியம் சீராகும். எதிர்ப்பு விலகும். செல்வாக்கு உயரும். மே 1 முதல் உயர் கல்வி எண்ணம் நிறைவேறும். வேலை வாய்ப்பு தேடுவோருக்கு நிரந்தர வேலை அமையும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பணத் தட்டுப்பாடு நீங்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை ஏற்படும்.சூரிய சஞ்சாரம்பிப் 13 -  ஏப் 13,  ஜூலை 17 - ஆக 16, அக் 18 -  நவ 15 காலங்களில் சூரிய பகவான், தொழிலில் வளர்ச்சியை உண்டாக்குவார். சுப காரியங்களை நடத்தி வைப்பார். தைரியமாக செயல்பட வைப்பார். முயற்சிகளில் வெற்றியை அடையச்செய்வார். செல்வாக்கை உயர்த்துவார். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடங்களுக்கு விடுதலை தருவார். பொதுப்பலன்தொழில் முன்னேற்றம் அடையும். போட்டியாளர்கள் விலகுவர். வருமானம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களின் எண்ணம் நிறைவேறும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும்.  கவுரவம் மேம்படும். உத்தியோகத்தில் உண்டான பிரச்னைகள் முடிவிற்கு வரும்.தொழில்இதுவரை இருந்த தடை, ஆதாயமற்ற நிலை நீங்கும். வாகன உற்பத்தி, ஸ்பேர் பார்ட்ஸ், இயந்திரத் தொழிற்சாலை, மின்சார சாதனங்கள் தயாரிப்பு, கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், சினிமா, விவசாயம், மினரல் வாட்டர் தொழில்களில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.பணியாளர்கள்தனியார் துறை பணியாளர்களுக்கு உழைப்பிற்கேற்ற வருமானம் உண்டாகும்.  விரும்பிய இடத்திற்கு இடமாற்றம், கூடுதல் பொறுப்பு ஏற்படும். வழக்கு நடவடிக்கைகளுக்கு ஆளாகி வேலையில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்கும். அதிகாரியின் ஆதரவு உண்டாகும்.பெண்கள்வேலைக்காக வெளிநாடு செல்வதற்கு முயற்சித்தவர்களின் எண்ணம் நிறைவேறும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். சுயதொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பர். அலுவலகப் பணியில் பொறுப்பும், உழைப்பும் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும்.கல்வி படிப்பில் அக்கறை கொள்வதாலும், ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பதாலும் எதிர்பார்த்த மதிப்பெண் பெற வழிவகுக்கும். சிலருக்கு மேலை நாட்டிற்கு அல்லது வெளி மாநிலத்தில் கல்வி கற்கும் நிலை ஏற்படும்.உடல்நிலைஉடல் பாதிப்புகள் மருத்துவத்தால் சரியாகும். அஜீரணக் கோளாறு, அல்சர், வாயுத்தொல்லைகளால் அவதிப்படுவோருக்கு இயற்கை வைத்தியத்தால் குணமுண்டாகும். சிலர் தொற்று நோய்களுக்கு ஆளாக வாய்ப்பிருப்பதால் பழக்க வழக்கங்களில் எச்சரிக்கை அவசியம்.குடும்பம்தேவைக்கேற்ற வரவு வந்து சேரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். குடும்பத்தினர்கள்  ஒருவருக்கொருவர் உதவியாக இருந்து செயல்படுவீர்கள். புதிய சொத்து, வாகனச் சேர்க்கை உண்டாகும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வேலை தேடுவோருக்கு  தகுதியான வேலை அமையும். திருமண வயதினருக்கு திருமணம் நடைபெறும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.பரிகாரம்; குலதெய்வத்தை வழிபட குறையனைத்தும் தீரும். நன்மை உண்டாகும்.மிருகசீரிடம்; முயற்சி வெற்றியாகும்செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு  சந்திரன் ராசி நாதனாகவும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு புதன் ராசி நாதனாகவும் உள்ளனர்.பிறக்கும் 2024 ஆண்டில், மிருகசீரிடம் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். செயல்பாட்டில் வேகம், விவேகம் உண்டாகும். வெளிநாட்டுத் தொடர்புகளில் லாபம் அதிகரிக்கும். 3,4ம்  பாதங்களில் பிறந்தவர்களுக்கு அனைத்திலும் யோகம் என்ற நிலை ஏற்படும். செல்வாக்கு அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வை வழங்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தொட்டதெல்லாம் வெற்றியென்ற நிலையை உண்டாக்கும்.சனி சஞ்சாரம்கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி தாரா பலன்களால் 4பாதங்களில் பிறந்தவர்களுக்கும் அதிர்ஷ்டப் பலன்களை அள்ளி வழங்கிடுவார். 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அஸ்தமனம், வக்கிர காலங்களில் முயற்சியில் இருந்த தடைகளை விலக்கி வைப்பார். நினைத்த செயல்களை நினைத்தபடி நடத்தி முடிக்கும் நிலையை உருவாக்குவார். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முயற்சிகளை எல்லாம் லாபமாக்குவார். யோகத்தை உண்டாக்குவார். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படுத்துவார். ராகு - கேது சஞ்சாரம்ஆண்டு முழுவதும் ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2ம் பாதங்களில்  பிறந்தவர்களுக்கு ராகுவால் ஆதாயம் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சி வெற்றி தரும்.  திரைத்துறையினருக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். நினைத்ததை சாதிக்கும் நிலை உண்டாகும். பணம் பலவழிகளிலும் வரும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். தொழில் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். துணிச்சலாக செயல்பட்டு இழந்த சொத்து, செல்வாக்கை மீண்டும் அடையும் நிலை ஏற்படும். நீண்டநாள் கனவு நிறைவேறும். எதிர்பாராத ஆதாயம் தோன்றும்.குரு சஞ்சாரம்ஏப் 30 வரை 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு செலவுகளை அதிகரித்தாலும் செல்வாக்கை உயர்த்துவார். எதிர்ப்புகளை இல்லாமல் செய்வார்.  விருப்பங்களையும் நிறைவேற்றுவார். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, தொழில், வியாபாரத்தில் லாபத்தை அதிகரிப்பார். குடும்பத்தில் நிம்மதி உண்டாக்குவார். சுபகாரியங்களை நடத்தி வைப்பார். மே 1, முதல் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம குருவாகவும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு விரய குருவாகவும் சஞ்சரிப்பவர் பார்வைகள் வழியே அதிர்ஷ்ட வாய்ப்புகளை உண்டாக்குவார். வியாபாரம், தொழில், உத்தியோகம், குடும்பம் என எல்லாவற்றிலும் முன்னேற்றம் தருவார். சூரிய சஞ்சாரம்மிருகசீரிடம் 1,2 ம் பாதத்தினருக்கு பிப்.13 -  ஏப்.13 வரையிலும், ஜூலை 17 - ஆக 16 வரையிலும்,  அக்.18, - நவ. 15 வரையிலும்,  3,4 ம் பாதத்தினருக்கு மார்ச் 14 - மே 13 காலத்திலும் ஆக. 17 - செப். 16 வரையிலும், நவ.16, - டிச. 15 வரையிலும் உங்கள் வாழ்வில் பிரகாசமான நிலையை உண்டாக்குவார். பிரச்னைகளை விலக்கி வைப்பார். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கை அதிகரிப்பார். பணியாளர்களுக்கு உயர்வை ஏற்படுத்துவார். அரசுவழி முயற்சிகளில் ஆதாயத்தை ஏற்படுத்துவார்.பொதுப்பலன்உங்களுக்கு யோகமான ஆண்டாக இருக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். வியாபாரம் விருத்தியாகும். செல்வாக்கு அதிகரிக்கும். தொழில் லாபத்தில் செல்லும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும். புதிய முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி அடைவீர்கள். அரசியல்வாதிகளுக்கு பொறுப்பு வந்து சேரும். கலைத்துறையினர் செல்வாக்கு பெறும் ஆண்டாக இருக்கும்.தொழில்இயந்திர தொழிற்சாலை, ஸ்பேர் பார்ட்ஸ், ஆசிரியர்கள், கலைஞர்கள், அறுவை சிகிச்சை மருத்துவர்கள், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்வோருக்கு முன்னேற்றமும் வளர்ச்சியும் உண்டாகும்பணியாளர்கள்உழைப்பு அதிகரிக்கும் என்றாலும் அதற்கேற்ற பலனை அடைவீர்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு பணியில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். மேலதிகாரியின் ஆதரவால் நெருக்கடி நீங்கும்.பெண்கள்குடும்பத்தினரை அனுசரித்து விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். திருமண வயதினருக்கு நல்ல செய்தி வரும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை அமையும். பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு அதிகரித்தாலும் ஊதியம் கூடும். கல்விபொதுத்தேர்வில் பங்கேற்போர் ஆசிரியர்களின் ஆலோசனைப்படி செயல்படுவது அவசியம். விளையாட்டுத்தனமான செயல்களை ஒதுக்கி விட்டு படிப்பில் முழு கவனம் செலுத்துவதால் எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெற முடியும்.உடல்நிலைஉடல் நிலையில் இருந்த சங்கடம் விலகும். விபத்து, நீண்டநாளாக நோய்வாய்ப் பட்டிருந்தவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் தோன்றும். பரம்பரை நோய், தொற்று நோய் பாதிப்புகள் குறையும்.குடும்பம்வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும். சுப காரியங்கள் நடைபெறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களுடன் ஒற்றுமை உண்டாகும். புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். நினைத்தவற்றை செய்து முடித்து ஆதாயம் காண முடியும். சிலருக்கு புதிய வாகனம் வீடு  அமையும்.பரிகாரம்; ராகு கேதுவிற்கு பூஜை செய்து, காளத்தீஸ்வரரை வணங்க நன்மை உண்டாகும்.

மிருகசீரிடம்; முயற்சி வெற்றியாகும்செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு  சந்திரன் ராசி நாதனாகவும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு புதன் ராசி நாதனாகவும் உள்ளனர்.பிறக்கும் 2024 ஆண்டில், மிருகசீரிடம் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். செயல்பாட்டில் வேகம், விவேகம் உண்டாகும். வெளிநாட்டுத் தொடர்புகளில் லாபம் அதிகரிக்கும். 3,4ம்  பாதங்களில் பிறந்தவர்களுக்கு அனைத்திலும் யோகம் என்ற நிலை ஏற்படும். செல்வாக்கு அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வை வழங்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தொட்டதெல்லாம் வெற்றியென்ற நிலையை உண்டாக்கும்.சனி சஞ்சாரம்கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி தாரா பலன்களால் 4பாதங்களில் பிறந்தவர்களுக்கும் அதிர்ஷ்டப் பலன்களை அள்ளி வழங்கிடுவார். 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அஸ்தமனம், வக்கிர காலங்களில் முயற்சியில் இருந்த தடைகளை விலக்கி வைப்பார். நினைத்த செயல்களை நினைத்தபடி நடத்தி முடிக்கும் நிலையை உருவாக்குவார். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முயற்சிகளை எல்லாம் லாபமாக்குவார். யோகத்தை உண்டாக்குவார். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படுத்துவார். ராகு - கேது சஞ்சாரம்ஆண்டு முழுவதும் ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2ம் பாதங்களில்  பிறந்தவர்களுக்கு ராகுவால் ஆதாயம் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சி வெற்றி தரும்.  திரைத்துறையினருக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். நினைத்ததை சாதிக்கும் நிலை உண்டாகும். பணம் பலவழிகளிலும் வரும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். தொழில் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். துணிச்சலாக செயல்பட்டு இழந்த சொத்து, செல்வாக்கை மீண்டும் அடையும் நிலை ஏற்படும். நீண்டநாள் கனவு நிறைவேறும். எதிர்பாராத ஆதாயம் தோன்றும்.குரு சஞ்சாரம்ஏப் 30 வரை 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு செலவுகளை அதிகரித்தாலும் செல்வாக்கை உயர்த்துவார். எதிர்ப்புகளை இல்லாமல் செய்வார்.  விருப்பங்களையும் நிறைவேற்றுவார். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, தொழில், வியாபாரத்தில் லாபத்தை அதிகரிப்பார். குடும்பத்தில் நிம்மதி உண்டாக்குவார். சுபகாரியங்களை நடத்தி வைப்பார். மே 1, முதல் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம குருவாகவும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு விரய குருவாகவும் சஞ்சரிப்பவர் பார்வைகள் வழியே அதிர்ஷ்ட வாய்ப்புகளை உண்டாக்குவார். வியாபாரம், தொழில், உத்தியோகம், குடும்பம் என எல்லாவற்றிலும் முன்னேற்றம் தருவார். சூரிய சஞ்சாரம்மிருகசீரிடம் 1,2 ம் பாதத்தினருக்கு பிப்.13 -  ஏப்.13 வரையிலும், ஜூலை 17 - ஆக 16 வரையிலும்,  அக்.18, - நவ. 15 வரையிலும்,  3,4 ம் பாதத்தினருக்கு மார்ச் 14 - மே 13 காலத்திலும் ஆக. 17 - செப். 16 வரையிலும், நவ.16, - டிச. 15 வரையிலும் உங்கள் வாழ்வில் பிரகாசமான நிலையை உண்டாக்குவார். பிரச்னைகளை விலக்கி வைப்பார். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கை அதிகரிப்பார். பணியாளர்களுக்கு உயர்வை ஏற்படுத்துவார். அரசுவழி முயற்சிகளில் ஆதாயத்தை ஏற்படுத்துவார்.பொதுப்பலன்உங்களுக்கு யோகமான ஆண்டாக இருக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். வியாபாரம் விருத்தியாகும். செல்வாக்கு அதிகரிக்கும். தொழில் லாபத்தில் செல்லும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும். புதிய முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி அடைவீர்கள். அரசியல்வாதிகளுக்கு பொறுப்பு வந்து சேரும். கலைத்துறையினர் செல்வாக்கு பெறும் ஆண்டாக இருக்கும்.தொழில்இயந்திர தொழிற்சாலை, ஸ்பேர் பார்ட்ஸ், ஆசிரியர்கள், கலைஞர்கள், அறுவை சிகிச்சை மருத்துவர்கள், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்வோருக்கு முன்னேற்றமும் வளர்ச்சியும் உண்டாகும்பணியாளர்கள்உழைப்பு அதிகரிக்கும் என்றாலும் அதற்கேற்ற பலனை அடைவீர்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு பணியில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். மேலதிகாரியின் ஆதரவால் நெருக்கடி நீங்கும்.பெண்கள்குடும்பத்தினரை அனுசரித்து விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். திருமண வயதினருக்கு நல்ல செய்தி வரும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை அமையும். பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு அதிகரித்தாலும் ஊதியம் கூடும். கல்விபொதுத்தேர்வில் பங்கேற்போர் ஆசிரியர்களின் ஆலோசனைப்படி செயல்படுவது அவசியம். விளையாட்டுத்தனமான செயல்களை ஒதுக்கி விட்டு படிப்பில் முழு கவனம் செலுத்துவதால் எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெற முடியும்.உடல்நிலைஉடல் நிலையில் இருந்த சங்கடம் விலகும். விபத்து, நீண்டநாளாக நோய்வாய்ப் பட்டிருந்தவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் தோன்றும். பரம்பரை நோய், தொற்று நோய் பாதிப்புகள் குறையும்.குடும்பம்வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும். சுப காரியங்கள் நடைபெறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களுடன் ஒற்றுமை உண்டாகும். புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். நினைத்தவற்றை செய்து முடித்து ஆதாயம் காண முடியும். சிலருக்கு புதிய வாகனம் வீடு  அமையும்.பரிகாரம்; ராகு கேதுவிற்கு பூஜை செய்து, காளத்தீஸ்வரரை வணங்க நன்மை உண்டாகும்.திருவாதிரை; நல்லநேரம் வந்தாச்சுபுதன், ராகுவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2024 வருடத்தில் தொழிலில் முன்னேற்றம் தோன்றும். பணவரவில் தடைகள் விலகும். நெருக்கடிகள் நீங்கும். அரசியலில் மதிப்பு உயரும். கோயில்களுக்கு நிதியுதவி செய்வதுடன் பங்கேற்கவும் செய்வீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். சிலர்  புதிய வீடு கட்டி குடியேறுவீர்கள். களவு போன பொருள்  கிடைக்கும். எதிர்பார்த்த வருமானம் உண்டாகும்.சனி சஞ்சாரம் சனி பாக்கிய ஸ்தானத்தில் ஆண்டு முழுவதும் ஆட்சியாக சஞ்சரிப்பதால் அஷ்டம சனியின் பாதிப்பு நீங்கும். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் தடைகள் விலகும். முயற்சிகள் வெற்றியாகும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். பணவரவு அதிகரிக்கும். பகைவர் தொல்லைகள் விலகும். ராகு - கேது சஞ்சாரம்10ம் இடமான தொழில் ஸ்தானத்தில் ராகுவும், 4 ம் இடமான சுக ஸ்தானத்தில் கேதுவும்  சஞ்சரிக்கும் நிலையில் தொழில் மீதான அக்கறை அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும். தன்னம்பிக்கை ஏற்படும். வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். கேட்ட இடத்திலிருந்து உதவி தேடி வரும். புதிய தொழில் முயற்சி வெற்றியாகும். வேலை இல்லாதவர்களுக்கு தகுந்த வேலை அமையும்.குரு சஞ்சாரம்ஏப். 30 வரை லாப ஸ்தான குருவால் வாழ்வு வளமடையும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். குலதெய்வ அருள் பரிபூரணமாக கிடைக்கும். வருமானம் பலவகையிலும் அதிகரிக்கும். மே1 முதல் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், உடல்நிலை பாதிப்பு நீங்கும். மனதில் இருந்த பயம் போகும். எண்ணங்கள் எளிதாக நிறைவேறும். வழக்குகளில் வெற்றியுண்டாகும். சூரிய சஞ்சாரம்மார்ச் 14  - மே 13, ஆக.17 - செப். 16, நவ 16 -  டிச 15 காலங்களில் அரசு வழியில் மேற்கொள்ளும் முயற்சிகளை வெற்றியாக்குவார். எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவார். தொழில் தொடங்கும் முயற்சிக்கு வழிஅமைப்பார். லாபத்தை அதிகரிப்பார். எதிரி தொல்லை இல்லாமல் செய்வார். வழக்குகளில் சாதக நிலை ஏற்படுத்துவார். ஆரோக்கியத்தை அதிகரிப்பார். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகளை முடித்து வைப்பார்.பொதுப்பலன்கிரக சஞ்சார நிலை சாதகமாக இருப்பதால் முயற்சிகள் வெற்றியாகும். திட்டமிட்ட செயல்கள் திட்டமிட்டபடி நடந்தேறும். வழக்குகள் சாதகமாகமாகும். எதிர்பார்த்த வருமானம் உண்டாகும்.  சொத்து சேர்க்கை ஏற்படும். புதிய வாகனம் வாங்கும் யோகம் அமையும். தொழில்தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். திறமை வெளிப்படும். சிலர் தொழிலை விரிவு செய்வீர்கள். புதிய தொழில் தொடங்குவீர்கள். விவசாயத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வாகனம், இயந்திரம், பதிப்பகம், கல்வி நிறுவனம், கமிஷன் ஏஜன்சி, பங்கு வர்த்தகம், தொலைக்காட்சி, சினிமா, ஏற்றுமதி இறக்குமதி வியாரம் லாபமாகும்.பணியாளர்கள்பணிபுரியும் இடத்தில் சங்கடங்கள் குறையும். உழைப்பிற்கு மதிப்பும் மரியாதையும் உண்டாகும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு என எதிர்பார்ப்பு நிறைவேறும். அரசுப் பணியில் இருப்பவர்கள் மேலதிகாரியின் பாராட்டிற்கு ஆளாவதுடன் விரும்பிய இடமாற்றத்தை அடைவர். சிலருக்கு பதவி உயர்வு உண்டாகும்.பெண்கள்முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். உடல்நிலையில் சங்கடம் நீங்கும். கணவருடன் இருந்த சச்சரவு விலகும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்களின் ஆசை நிறைவேறும். அரசுப்பணிக்கு முயற்சித்தவர்களுக்கு வெற்றி உண்டாகும். சுய தொழிலில் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். விரும்பிய பொருளை வாங்குவீர்கள்.கல்விபடிப்பில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் எதிர்பார்த்த மதிப்பெண் பெற முடியாமல் போகும். ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பது அவசியம்.உடல்நிலைநீண்ட நாளாக இருந்த பாதிப்பு விலகும். ஆரோக்கியம் அதிகரிக்கும். இனம் புரியாத நோய்களால் அவதிப்பட்ட நிலை மாறும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.குடும்பம்சங்கடமான நிலைகள் மாறத் தொடங்கும். வருமானத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இடம் வாங்குவது, வீடு கட்டுவது, தொழில் தொடங்குவது என எண்ணங்கள் நிறைவேறும். நவீன பொருட்களை வாங்குவீர்கள். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னை விலகும் வீட்டில் சுபநிகழ்வுகள் நடந்தேறும். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களின் எண்ணம் நிறைவேறும்.பரிகாரம்; திருவெண்காடு புதன் பகவானை தரிசிக்க நன்மை அதிகரிக்கும். சங்கடம் விலகும்.புனர்பூசம்; நெருக்கடி விலகும்குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் முதல் 3 பாதங்களில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும், 4ம் பாதத்தினருக்கு சந்திரன் ராசி நாதனாகவும் உள்ளனர்.  2024ம் வருடத்தில் புனர்பூசம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சங்கடம் எல்லாம் விலகும். விரும்பியது கைக்கு வந்து சேரும். தகுதிக்கேற்ற பொறுப்புகள், பணியில் பதவி உயர்வு ஏற்படும். மற்றவர்களால் முடியாதவற்றை எல்லாம் முடித்துக் காட்டும் வல்லமை உண்டாகும். தெய்வீக சிந்தனை மேலோங்கும். ஆன்மிகப் பயணம் மேற்கொள்வீர்கள். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிக்கேற்ப பலன் ஏற்படும். புதிய முயற்சிகள் மேற்கொண்டு அதில் வெற்றியடைவீர்கள். எதிர்பாராத வருமானம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலைக்காக, உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிரிகளால் சங்கடம் ஏற்பட்டாலும் அதையெல்லாம் சமாளிப்பீர்கள்.சனி சஞ்சாரம்கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், தாரா பலன்களால் 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் அதிர்ஷ்டப் பலன் வழங்கிடுவார். தொட்டதெல்லாம் வெற்றி, முயற்சியெல்லாம் லாபம் உண்டாகும்.  1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முயற்சிகளை எல்லாம் வெற்றியாக்குவார். புதிய தொழில் தொடங்க வைப்பார். முன்னேற்றத்தை உண்டாக்குவார். வருமானத்தை அதிகரிப்பார். செல்வாக்கை அதிகரிப்பார். 4ம் பாதத்தினருக்கு அஸ்தமனம் மற்றும் வக்கிர காலங்களில் நெருக்கடிகளில் இருந்து பாதுகாப்பார். வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகளை வழங்குவார். ராகு - கேது சஞ்சாரம்ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொழில், வியாபாரம் லாபமாகும். வெளிநாட்டு முயற்சி ஆதாயமாகும். தொழில் தொடங்குவதற்காக எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் முன்னேற்றம் உண்டாகும். முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாள் விருப்பம் நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். துணிச்சலுடன் செயல்படும் நிலை உண்டாகும். சகோதரர்கள், பணியாளர்கள் ஒத்துழைப்பு நன்மை தரும். குரு சஞ்சாரம்ஏப் 30 வரை 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் வருமானத்தை உயர்த்துவார். வீட்டில் சுபநிகழ்வுகளை நடத்தி வைப்பார். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். மே 1 முதல் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து செலவுகளை அதிகரிப்பார். அலைச்சலை உண்டாக்குவார். கடன்களை அதிகரிப்பார். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு  ஏப்.30 வரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் தொழிலில் மந்த நிலையை உண்டாக்குவார். வருமானத்தில் தடையை ஏற்படுத்துவார். உத்தியோகத்தில் சில பிரச்னைகளை உண்டாக்குவார். மே 1 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து பண வரவை அதிகரிப்பார். செல்வாக்கை உயர்த்துவார். முயற்சியை வெற்றியாக்குவார். தொழில், குடும்பம், உத்தியோகம் என எல்லாவற்றிலும் யோகப்பலனை வழங்குவார். கன்னியருக்கு திருமணம், குழந்தைக்காக ஏங்கியவர்களுக்கு அந்த பாக்கியம் அருள்வார்.சூரிய சஞ்சாரம்புனர்பூசம் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, மார்ச் 14 - மே 13 வரையிலும், ஆக 17 - செப் 16 வரையிலும், நவ 16 - டிச 15 வரையிலும், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, ஜன 1 - 14 மற்றும், ஏப் 14 - ஜூன் 14 வரையிலும், செப் 17 - அக் 17 வரையிலும் செல்வாக்கை உயர்த்துவார். பிரச்னைகளில் இருந்து உங்களை வெளியில் கொண்டு வருவார். தனித்திறனை வெளிப்படுத்துவார். செல்வாக்கை உயர்த்துவார். இழுபறியான வழக்குகளை சாதகமாக முடித்து வைப்பார். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி, பொறுப்புகளை அடைய வைப்பார். அரசு ஊழியர்களுக்கு விரும்பிய இடம் மாற்றம், பணி உயர்விற்கு வழியமைப்பார்.பொதுப்பலன்நெருக்கடி யாவும் நீங்கும். முயற்சிகள் வெற்றியாகும். கடன்களால் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வேலையில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வழக்குகள் சாதகமாகும். வியாபாரம், தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடந்தேறும். பொருளாதாரம் உயரும். அரசு ஊழியர்களின் செல்வாக்கு அதிகரிக்கும். செயல் யாவும் வெற்றி பெறும். துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் இலக்கை அடைவீர்கள்.தொழில்மருத்துவம், கல்வி, ஏற்றுமதி, இறக்குமதி, சின்னத்திரை, இயந்திர தொழிற்சாலைகள், வியாபார நிறுவனங்கள், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர், குடிநீர், விவசாயம் ஆகிய தொழில்களைச் செய்வோர் வளர்ச்சியடைவர். எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.பணியாளர்கள்உழைத்தாலும் உயர்வில்லை என வருத்தப்பட்ட நிலை மாறும். உங்கள் உழைப்பிற்கு மதிப்புண்டாகும். சிலருக்கு புதிய பொறுப்பு ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். கலைஞர்கள், ஆன்மிகப் பேச்சாளர்கள், கல்வியாளர்களின் நிலை உயரும்.பெண்கள்சுயதொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணியாளர்களுக்கு அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். கணவர், குடும்பத்தினரின் பாராட்டிற்கு ஆளாவீர்கள். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். வேலைத்தேடியவர்களுக்கு தகுதியான வேலை அமையும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்களின் ஆசை நிறைவேறும்.கல்விபடிப்பில் அக்கறை இருந்தாலும் இக்காலத்தில் ஆசிரியர்களின் ஆலோசனை நன்மை தரும். உயர்கல்வி பெறும் கனவு நிறைவேறும்.உடல்நிலைகடந்த கால பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பிக்கும். படுக்கையில் இருந்தவர்கள் சிகிச்சையின் காரணமாக எழுந்து நடமாடத் தொடங்குவர். சிலருக்கு மூச்சுத் திணறல், நரம்புப் பிரச்னை ஏற்பட்டு சரியாகும்.குடும்பம்குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் நீங்கும். சொத்து சேர்க்கையில் ஆர்வம் உண்டாகும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடந்தேறும். பிள்ளைகளின் படிப்பு, திருமணம் போன்றவற்றில் கவனம் செல்லும். புதிய வாகனம், வீடு என்ற நீண்டநாள் கனவு நிறைவேறும். குடும்பத்தினர் ஆதரவு அதிகரிக்கும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவர். உறவினர் வருகை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.பரிகாரம்; அனுமனை சனிதோறும் வழிபட்டுவர வாழ்க்கை வளமாகும்.

புனர்பூசம்; நெருக்கடி விலகும்குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் முதல் 3 பாதங்களில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும், 4ம் பாதத்தினருக்கு சந்திரன் ராசி நாதனாகவும் உள்ளனர். 2024ம் வருடத்தில் புனர்பூசம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சங்கடம் எல்லாம் விலகும். விரும்பியது கைக்கு வந்து சேரும். தகுதிக்கேற்ற பொறுப்புகள், பணியில் பதவி உயர்வு ஏற்படும். மற்றவர்களால் முடியாதவற்றை எல்லாம் முடித்துக் காட்டும் வல்லமை உண்டாகும். தெய்வீக சிந்தனை மேலோங்கும். ஆன்மிகப் பயணம் மேற்கொள்வீர்கள். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிக்கேற்ப பலன் ஏற்படும். புதிய முயற்சிகள் மேற்கொண்டு அதில் வெற்றியடைவீர்கள். எதிர்பாராத வருமானம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலைக்காக, உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிரிகளால் சங்கடம் ஏற்பட்டாலும் அதையெல்லாம் சமாளிப்பீர்கள்.சனி சஞ்சாரம்கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், தாரா பலன்களால் 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் அதிர்ஷ்டப் பலன் வழங்கிடுவார். தொட்டதெல்லாம் வெற்றி, முயற்சியெல்லாம் லாபம் உண்டாகும்.  1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முயற்சிகளை எல்லாம் வெற்றியாக்குவார். புதிய தொழில் தொடங்க வைப்பார். முன்னேற்றத்தை உண்டாக்குவார். வருமானத்தை அதிகரிப்பார். செல்வாக்கை அதிகரிப்பார். 4ம் பாதத்தினருக்கு அஸ்தமனம் மற்றும் வக்கிர காலங்களில் நெருக்கடிகளில் இருந்து பாதுகாப்பார். வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகளை வழங்குவார்.ராகு - கேது சஞ்சாரம்ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொழில், வியாபாரம் லாபமாகும். வெளிநாட்டு முயற்சி ஆதாயமாகும். தொழில் தொடங்குவதற்காக எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் முன்னேற்றம் உண்டாகும். முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாள் விருப்பம் நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். துணிச்சலுடன் செயல்படும் நிலை உண்டாகும். சகோதரர்கள், பணியாளர்கள் ஒத்துழைப்பு நன்மை தரும்.குரு சஞ்சாரம்ஏப் 30 வரை 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் வருமானத்தை உயர்த்துவார். வீட்டில் சுபநிகழ்வுகளை நடத்தி வைப்பார். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். மே 1 முதல் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து செலவுகளை அதிகரிப்பார். அலைச்சலை உண்டாக்குவார். கடன்களை அதிகரிப்பார். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு  ஏப்.30 வரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் தொழிலில் மந்த நிலையை உண்டாக்குவார். வருமானத்தில் தடையை ஏற்படுத்துவார். உத்தியோகத்தில் சில பிரச்னைகளை உண்டாக்குவார். மே 1 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து பண வரவை அதிகரிப்பார். செல்வாக்கை உயர்த்துவார். முயற்சியை வெற்றியாக்குவார். தொழில், குடும்பம், உத்தியோகம் என எல்லாவற்றிலும் யோகப்பலனை வழங்குவார். கன்னியருக்கு திருமணம், குழந்தைக்காக ஏங்கியவர்களுக்கு அந்த பாக்கியம் அருள்வார்.சூரிய சஞ்சாரம்புனர்பூசம் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, மார்ச் 14 - மே 13 வரையிலும், ஆக 17 - செப் 16 வரையிலும், நவ 16 - டிச 15 வரையிலும், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, ஜன 1 - 14 மற்றும், ஏப் 14 - ஜூன் 14 வரையிலும், செப் 17 - அக் 17 வரையிலும் செல்வாக்கை உயர்த்துவார். பிரச்னைகளில் இருந்து உங்களை வெளியில் கொண்டு வருவார். தனித்திறனை வெளிப்படுத்துவார். செல்வாக்கை உயர்த்துவார். இழுபறியான வழக்குகளை சாதகமாக முடித்து வைப்பார். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி, பொறுப்புகளை அடைய வைப்பார். அரசு ஊழியர்களுக்கு விரும்பிய இடம் மாற்றம், பணி உயர்விற்கு வழியமைப்பார்.பொதுப்பலன்நெருக்கடி யாவும் நீங்கும். முயற்சிகள் வெற்றியாகும். கடன்களால் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வேலையில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வழக்குகள் சாதகமாகும். வியாபாரம், தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடந்தேறும். பொருளாதாரம் உயரும். அரசு ஊழியர்களின் செல்வாக்கு அதிகரிக்கும். செயல் யாவும் வெற்றி பெறும். துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் இலக்கை அடைவீர்கள்.தொழில்மருத்துவம், கல்வி, ஏற்றுமதி, இறக்குமதி, சின்னத்திரை, இயந்திர தொழிற்சாலைகள், வியாபார நிறுவனங்கள், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர், குடிநீர், விவசாயம் ஆகிய தொழில்களைச் செய்வோர் வளர்ச்சியடைவர். எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.பணியாளர்கள்உழைத்தாலும் உயர்வில்லை என வருத்தப்பட்ட நிலை மாறும். உங்கள் உழைப்பிற்கு மதிப்புண்டாகும். சிலருக்கு புதிய பொறுப்பு ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். கலைஞர்கள், ஆன்மிகப் பேச்சாளர்கள், கல்வியாளர்களின் நிலை உயரும்.பெண்கள்சுயதொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணியாளர்களுக்கு அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். கணவர், குடும்பத்தினரின் பாராட்டிற்கு ஆளாவீர்கள். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். வேலைத்தேடியவர்களுக்கு தகுதியான வேலை அமையும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்களின் ஆசை நிறைவேறும்.கல்விபடிப்பில் அக்கறை இருந்தாலும் இக்காலத்தில் ஆசிரியர்களின் ஆலோசனை நன்மை தரும். உயர்கல்வி பெறும் கனவு நிறைவேறும்.உடல்நிலைகடந்த கால பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பிக்கும். படுக்கையில் இருந்தவர்கள் சிகிச்சையின் காரணமாக எழுந்து நடமாடத் தொடங்குவர். சிலருக்கு மூச்சுத் திணறல், நரம்புப் பிரச்னை ஏற்பட்டு சரியாகும்.குடும்பம்குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் நீங்கும். சொத்து சேர்க்கையில் ஆர்வம் உண்டாகும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடந்தேறும். பிள்ளைகளின் படிப்பு, திருமணம் போன்றவற்றில் கவனம் செல்லும். புதிய வாகனம், வீடு என்ற நீண்டநாள் கனவு நிறைவேறும். குடும்பத்தினர் ஆதரவு அதிகரிக்கும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவர். உறவினர் வருகை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.பரிகாரம்; அனுமனை சனிதோறும் வழிபட்டுவர வாழ்க்கை வளமாகும்.பூசம்; நினைத்தது நிறைவேறும் சனி, சந்திரனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு 2024 வருடத்தில் நினைத்தது நிறைவேறும். முயற்சி வெற்றியாகும். எதிர்ப்புகள் விலகும். உடல் பாதிப்புகள் விலகும். தைரியமாக செயல்பட்டு  தனித்தன்மையை வெளிப்படுத்துவீர்கள். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். பொருளாதார சங்கடம் விலகும்.சிலருக்கு தேவையற்ற இடமாற்றம் உண்டாகும். வருமானத்தில் தடை ஏற்படும். பணத்தேவை அதிகரிக்கும். சிலருக்கு சொந்த ஊரை விட்டு வெளியூர் செல்லும் நிலை ஏற்படும். வீண் அலைச்சல், பண விரயம் ஏற்படும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். முயற்சிகளில் இழுபறி உண்டாகும்.சனி சஞ்சாரம்அஷ்டமாதிபதியான சனி, அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால்  மார்ச் 16 - ஜூன் 19 வரையிலும்,  நவ.4 – டிச. 31 வரையிலும், அஸ்தமன, வக்கிர காலங்களிலும் அஷ்டம சனியின் பாதிப்புகள் நீங்கும். திட்டமிட்டு செய்யும் செயல்களில் வெற்றி உண்டாகும். பிரச்னைகளில் இருந்து சாமர்த்தியமாக விடுபடுவீர்கள். திடீர் அதிர்ஷ்டப் பலன்களை அடைவீர்கள்.ராகு - கேது சஞ்சாரம்ஆண்டு முழுவதும் பாக்ய ஸ்தானத்தில் ராகுவும், தைரிய ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நிலையில் இதுநாள்வரை இருந்த துன்பங்கள் காணாமல் போகும். தேவையான பணம் வரும். உடல் உபாதை விலகும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். வேலைத் தேடியவர்களுக்கு முயற்சி வெற்றியாகும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள்.குரு சஞ்சாரம்ஏப். 30  வரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் உத்தியோகத்தில் நெருக்கடிகள் தோன்றும். விரும்பாத இடமாற்றம், வழக்கு என சங்கடங்கள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் தடை, எதிர்பார்ப்புகளில் தோல்வி, பொருளாதார நெருக்கடி தோன்றும். மே 1 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் இழந்த செல்வாக்கை அடைவீர்கள். அந்தஸ்து உயர்வு, பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம், குடும்பத்தில் சுபநிகழ்வுகள், தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காண்பீர்கள்.சூரிய சஞ்சாரம்ஜன 1 - 14 வரையிலும், ஏப் 14 -  ஜூன் 14 வரையிலும்,  செப் 17 - அக் 17 வரையிலும் சூரிய பகவான் முன்னேற்றத்தை உண்டாக்குவார். நெருக்கடிகளை விலக்கி வைப்பார். அரசியல்வாதிகளின் செல்வாக்கை உயர்த்துவார். அரசு பணியாளர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பார்.எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றத்தை வழங்குவார். சட்ட சிக்கல்களில் இருந்து விடுவிப்பார். புதிய தொழில் தொடங்க அரசு அனுமதிக்காக காத்திருந்தவர்களுக்கு அனுமதி கிடைக்கும். பொதுப்பலன்கேது, குரு, சூரியன், செவ்வாயால் வாழ்க்கை வளமாகும். நெருக்கடி விலகும். செல்வாக்கு உயரும். பொருளாதாரம் மேம்படும். அனைத்திலும் வெற்றி உண்டாகும். வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடைபெறும். வேலைக்காக முயற்சித்தவர்களின் கனவு நனவாகும். வெளிநாட்டு தொடர்பு ஆதாயம் தரும். துணிச்சலும் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.தொழில்தொழிலில் உழைப்பு அதிகரிக்கும். புதிய முதலீடு லாபம் தரும். போட்டியாளர்கள் விலகுவர். இயந்திரத் தொழிலில் லாபம் உண்டாகும்.  விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆதாயம் தரும். ஏற்றுமதி இறக்குமதி லாபம் தரும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்பு தேடி வரும். வழக்கறிஞர்களின் நிலை உயரும்.பணியாளர்கள்ஏப்.30 வரை பணிபுரியும் இடத்தில் நெருக்கடி தோன்றும் என்றாலும் அதை சமாளிப்பீர்கள். சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். புதிய பொறுப்பு வந்து சேரும். சூரிய பகவானின் அருளால் முன்னேற்றம் அடைவீர்கள். மேலதிகாரியை அனுசரித்துச் செல்வதும் உடன் பணிபுரிபவர்களின் ஆலோசனையை ஏற்பதும் நன்மை தரும். பெண்கள்ஏப்.30 வரை குடும்பத்தில் பிரச்னைகள் வந்து செல்லும். அதன் பிறகு வேலை வாய்ப்பிற்காக செய்த முயற்சி நிறைவேறும். திருமண வயதினருக்கு வரன் வரும். பொருளாதார நிலை உயரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதால் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்தவர்களின் கனவு நிறைவேறும். பணிபுரியும் இடங்களில் விழிப்புணர்வுடன் செயல்படுவதும் நன்மையளிக்கும்.கல்விஆசிரியர்களின் ஆலோசனையால் நன்மை காண்பீர்கள். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். பொதுத் தேர்வு, போட்டித் தேர்வுகளில் விடாமுயற்சியால் வெள்ளி காண்பீர்கள். உடல்நிலைபரம்பரை நோய்கள் கட்டுக்குள் இருக்கும். சிலருக்கு உஷ்ணம், தோல் தொடர்பான நோய்கள், மூட்டு வலி, இடுப்பு வலி ஏற்படலாம். சிலருக்கு விபத்து உண்டாகும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். குடும்பம்பணி, தொழிலில் இருந்த சங்கடம் விலகுவதால் வருமானம் உயரும். குடும்பத்தின் மீது அக்கறை அதிகரிக்கும். புதிய இடம் வாங்குதல், வீடு கட்டி குடியேறுதல் என உங்கள் கனவு நிறைவேறும்.  சிலர் விரும்பிய வாகனத்தை வாங்குவர். தம்பதியர் ஒற்றுமை சிறக்கும். பொன் பொருள் சேரும்.  சமூகத்தில் அந்தஸ்து உயரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.பரிகாரம்; திருநள்ளாறு  சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தானம் செய்து வழிபட நன்மை அதிகரிக்கும்.ஆயில்யம்; விழிப்புணர்வு அவசியம்புதன், சந்திரனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு 2024 வருடத்தில் பல வகையில் உழைப்பு அதிகரிக்கும். எந்த ஒன்றையும் அலசி ஆராய்ந்து அதன் பிறகு ஒரு முடிவிற்கு வருவது நன்மையாகும். உங்கள் சாதுர்யத்தால் நினைத்ததை சாதிக்க முடியும். சங்கடங்கள் வந்தாலும் அவற்றிலிருந்து மீண்டு வரக்கூடிய வல்லமை ஏற்படும். எதிர்ப்பு விலகும். ஆரோக்கியம் மேம்படும். பண முதலீட்டை விட உங்கள் உழைப்பை நம்பி செயல்படும்போது வெற்றி உண்டாகும். பொருளாதார நிலை உயரும். அரசியல்வாதிகள், கலைஞர்களின் செல்வாக்கு உயரும்.சனி சஞ்சாரம்சனி பகவான் ஆயுள் ஸ்தானத்திலேயே ஆட்சியாக சஞ்சரிப்பதால் பிப்.15 வரையிலான காலத்திலும், அதன்பின் அஸ்தமனம், வக்கிர காலங்களிலும் அஷ்டம சனியின் பாதிப்புகளில் இருந்து விடுபடுவீர்கள். மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். பணவரவு அதிகரிக்கும். நீண்ட நாளாக இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலர் வெளியூருக்கு செல்லும் நிலை ஏற்படும். சொத்து சேர்க்கை உண்டாகும். ராகு - கேது சஞ்சாரம்  2024ல் பாக்ய ஸ்தானத்தில் ராகுவும், வீரிய ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த மாற்றங்கள் வாழ்வில் உண்டாகும். முயற்சி வெற்றி பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இழந்த செல்வாக்கை மீட்டெடுப்பீர்கள். தொட்டதெல்லாம் பொன்னாகும். வெளிநாடு செல்லும் முயற்சி நிறைவேறும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும்.குரு சஞ்சாரம்ஏப்.30 வரை 10ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் பணியில் சங்கடம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். வருமானத்தில் நெருக்கடி தோன்றும். மே 1 முதல் 11ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். இழந்த செல்வாக்கை மீண்டும் அடைவீர்கள். பதவி உயர்வு கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் விசேஷங்கள், தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம், பணவரவு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்ப்பு விலகும்.சூரிய சஞ்சாரம்ஜன.1 - 14,  ஏப்.14 - ஜூன்14 வரையிலும், செப்.17 - அக்.17 வரையிலும் வாழ்வில் இருந்த சங்கடங்கள் விலகும். முயற்சி யாவும் வெற்றி பெறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராகும். வழக்குகளில் சாதக முடிவு கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். செல்வாக்கு உயரும். அரசு வழியில் உண்டான சிக்கல் விலகும், பணியாளர்களுக்கு உயர்வு உண்டாகும். அரசியல்வாதிகளின் முயற்சி வெற்றி பெறும். பொதுப்பலன்கேது சஞ்சாரமும், குரு அருளும் பெருமளவில் பாதுகாக்கும். சூரிய பகவானால் சங்கடங்களில் இருந்தும் விடுபட்டு செல்வாக்குடன் வாழ்வீர்கள். அஷ்டம சனியின் தாக்கத்திலிருந்து விடுதலை உண்டாகும். அரசு பணியாளர்களுக்கு உயர் பதவிக்குரிய வாய்ப்பு ஏற்படும். திட்டமிட்ட முயற்சிகள் வெற்றியாகும். வாழ்வில் அதிர்ஷ்ட வாய்ப்பு  உண்டாகும். வழக்குகளில் சாதகமான நிலை ஏற்படும். அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். செல்வாக்கு உயரும்.தொழில் தொழில், வியாபாரத்தில் நெருக்கடிக்கு தீர்வு காண்பீர்கள். உங்கள் அணுகுமுறை லாபத்தை ஏற்படுத்தும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். இயந்திரம், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், எக்ஸ்போர்ட், பப்ளிகேஷன்ஸ், ரியல் எஸ்டேட், பங்குச்சந்தை, சினிமா, சின்னத்திரை போன்ற தொழில்கள் வளர்ச்சி பெறும்.  பணியாளர்கள்தனியார் துறை பணியாளர்கள் கடந்த கால அனுபவத்தைக் கொண்டு சாதுர்யமாக செயல்படுவீர்கள். உங்கள் பிரச்னைகளை முதலாளியிடம் பக்குவமாக சொல்லி தீர்வு காண்பீர்கள். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு உண்டாகும். மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பர். உங்கள் திறமைக்கு மதிப்பு அதிகரிக்கும்.பெண்கள்தனித்திறமை வெளிப்படும். உயர்கல்விக்காக முயற்சித்தவர்களின் எண்ணம் நிறைவேறும். சிலர் வெளி மாநிலம், வெளிநாடு என மேற்கல்விக்காக செல்வீர்கள். பணியில் இருப்பவர்கள் எதிர்பார்த்த சலுகைகளை அடைவீர்கள். சிலர் சுய தொழில் தொடங்குவர். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். வாழ்க்கைத் துணையை அனுசரித்து குடும்பத்தை சிறப்பாக நடத்துவீர்கள்.கல்விவித்யாகாரகனின் அருள் பெற்ற உங்களுக்கு இயல்பாகவே கல்வியில் ஆர்வம் இருக்கும். இக்காலத்தில் ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவதால் தேர்வில் வெற்றி உண்டாகும். உடல்நிலைமருத்துவச் செலவு தோன்றும். நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறு, இதய பாதிப்புகள் சிலருக்கு ஏற்படும். பித்தம், மயக்கம், ஜலதோஷம் சங்கடப்படுத்தும் என்றாலும் அவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.குடும்பம்திட்டமிட்டு செயல்படுவீர்கள். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் அகலும். தம்பதியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வசதியான வீட்டிற்கு குடிபோகும் நிலை ஏற்படும். நீண்ட நாளாக தடைப்பட்ட சுப நிகழ்ச்சி நடந்தேறும். நவீன பொருள், வாகனம் என வாங்கும் நிலை உண்டாகும். சிலருக்கு வேலைக்காக வெளிநாடு செல்லும் நிலை ஏற்படும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்தவர்களின் ஆசை பூர்த்தியாகும். பொருளாதார நிலை உயரும்.பரிகாரம்; திருக்கோவிலுார் உலகளந்த பெருமாளை வழிபட தடைகள் விலகும். செல்வ நிலை உயரும்.

மகம்; எச்சரிக்கை அவசியம்கேது, சூரியனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2024 வருடத்தில், குடும்ப ஸ்தானத்தில் கேது, ஆயுள் ஸ்தானத்தில் ராகு, சப்தம ஸ்தானத்தில் சனி என்ற சஞ்சார நிலைகளால் குடும்பத்தில்  பிரச்னைகள் உருவாகும் அலைச்சல் அதிகரிக்கும். இருக்கும் இடத்தை விட்டு வெளியூர் சென்று வசிக்க நேரும். வேண்டாத நண்பர்களால் சங்கடம் உருவாகும். கூட்டுத் தொழிலில் நெருக்கடி அதிகரிக்கும். எதிர்பாலினரால் தடுமாற்றம் உண்டாக்கும். நேற்றுவரை அதிநட்பாக இருந்தவர்கள் எல்லாம் விலகும் நிலை உருவாகும். வாழ்க்கைத் துணையுடன் பிரச்னை அதிகரிக்கும். மனதில் குழப்பம் நீடிக்கும்.சனி சஞ்சாரம் சனி சப்தம ஸ்தானத்தில் கண்டகச் சனியாக சஞ்சரித்தாலும் மார்ச் 16 -  ஜூன் 19 வரையிலும், நவ. 4 - டிச. 31 வரையிலும், அஸ்தமனம், வக்கிர காலங்களிலும் செயல்கள் லாபமாகும். சங்கடங்கள் விலகும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். புதிய சொத்து, வாகனம் உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பும் பதவியும் வந்து சேரும். கண்டகச் சனியின் பாதிப்பு இல்லாமல் போகும்.ராகு - கேது சஞ்சாரம்2024 முழுவதும் அஷ்டம ஸ்தானத்தில் ராகுவும், தன ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நிலையில் மனதில் குழப்பம் ஏற்படும். குடும்பத்தில் சங்கடம் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நெருக்கடி தோன்றும். தொழிலில் தடையும், கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலையும் உருவாகும். உடல் நிலையில் எதிர்ப்பாராத சங்கடம் தோன்றும். வேலையில் அலைச்சல், நிம்மதி இல்லாத நிலை ஏற்படும். நட்புகளுக்கிடையே மனக்கசப்பு உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் சங்கடம் தோன்றும்.குரு சஞ்சாரம் ஏப். 30 வரை 9ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் எண்ணங்கள் நிறைவேறும். செல்வாக்கு உயரும். வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும்.  சங்கடங்களை சமாளித்து வெற்றி பெறும் நிலை உண்டாகும். மே 1 முதல் 10ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் தொழிலில் நெருக்கடி ஏற்படும். பணியில் பிரச்னைகள் தோன்றும். பொருளாதாரத்தில் தடை ஏற்படும்.சூரிய சஞ்சாரம்அக். 18 - நவ. 25 வரையிலும்,  ஜன 15 - பிப் 12 வரையிலும், மே 14 - ஜூலை 16 வரையிலும் சூரிய பகவான் 3,6,10,11ம் இடங்களில் சஞ்சரிப்பதால் முயற்சி யாவும் வெற்றியாகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். ஆரோக்கியம் சீராகும். எதிர்ப்பு விலகும். புதிய தொழில் தொடங்கும். முயற்சிகள் வெற்றியாகும். அலுவலகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். பணவரவு அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். புதிய பொறுப்பு, பதவி உண்டாகும். வழக்குகளில் சாதகமான நிலை உண்டாகும்.பொதுப்பலன்ஏப்.30 வரை குருவின் சஞ்சாரத்தால் சங்கடங்களில் இருந்து வெளியில் வருவீர்கள். பொருளாதார நெருக்கடி விலகும். குடும்பம், தொழிலில் நிம்மதியான நிலை இருக்கும். அதன்பின் மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்படும். கூட்டுத்தொழிலில் பிரச்னைகள் தோன்றும். நட்புகளுக்கிடையே கசப்பு உண்டாகும். செயல்களில் டென்ஷன் அதிகரிக்கும். அதனால் வார்த்தைகளில் கோபம் வெளிப்படும். எந்த இடத்திலும் இணக்கமாக இருக்க முடியாமல் போகும். வாழ்க்கைத் துணையுடன் சங்கடம் ஏற்படும். உடல்நிலையில் எதிர்பாராத பாதிப்பு உண்டாகும். புதிய முயற்சியில் இழுபறி ஏற்படும் என்றாலும் சூரியனின் 3,6,10,11 இடங்களில் சஞ்சரிக்கும் நாட்களில் நன்மை அதிகரிக்கும். தொழில்மருத்துவம், கால்நடை, இயந்திரம், கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல், மெடிக்கல், ஏற்றுமதி, இறக்குமதி ரியல் எஸ்டேட் போன்ற தொழில்கள் லாபமாக நடக்கும் என்றாலும் உழைப்பும் முயற்சியும் அதிகமாக தேவைப்படும்.பணியாளர்கள்பணிபுரியும் இடத்தில் உங்கள் உழைப்பிற்கு மதிப்பு அதிகரிக்கும். பொறுப்புடன் வேலை செய்து மேலிடத்தில் நற்பெயரை வாங்குவீர்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும், விரும்பிய இட மாற்றம் உண்டாகும். தனியார் துறை பணியாளர்கள் முதலாளியால் பாராட்டப்படுவீர்கள்.பெண்கள்சங்கடங்கள் மறைய ஆரம்பிக்கும். எதிர்பார்த்த வரவு உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் உழைப்பு அதிகரித்தாலும் தனித்திறமை வெளிப்படும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வீர்கள். உடல்நிலையில் சங்கடம் தோன்றும். சொத்து சேர்க்கை உண்டாகும்.  செல்வாக்கு அதிகரிக்கும்.கல்விஉங்கள் ராசிக்கு குருவின் பார்வை இருப்பதால் ஆசிரியர்கள் ஆலோசனை இக்காலத்தில் உங்களுக்கு உதவியாக இருக்கும். தேர்வில் வெற்றி உண்டாகும்.உடல்நிலைஆயுள் ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதும், சப்தம ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதும் உடல் நிலையில் எதிர்பாராத சங்கடங்களை ஏற்படுத்தும். வாகனம், விஷ ஜந்துக்கள், மருந்து, மாத்திரைகளாலும் பாதிப்பு உண்டாகும். சிலர் இனம்புரியாத நோய்க்கும் ஆளாகக்கூடும் என்பதால் எச்சரிக்கை அவசியம்.குடும்பம்சிந்தித்து செயல்பட்டால் குடும்பத்தில் நிம்மதியான சூழல் உருவாகும். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு தகுதியான வரன் வரும். பூர்வீக சொத்துகளை அடையும் வாய்ப்பு ஏற்படும்.  விரும்பிய கல்விநிறுவனத்தில் சேர்வீர்கள். வசதியான இருப்பிடம் அமையும். தம்பதியருக்குள் பிரச்னை ஏற்பட்டாலும் உடனடியாக அது முடிவிற்கு வரும்.பரிகாரம்ராகு காலத்தில் துர்கை, எமகண்ட காலத்தில் விநாயகரையும் வழிபட சங்கடங்கள் விலகும்.பூரம்; உழைப்பு அதிகரிக்கும்சுக்கிரன், சூரியன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2024 வருடத்தில் அஷ்டம ஸ்தானத்தில் ராகு, தன ஸ்தானத்தில் கேது, களத்திர ஸ்தானத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் எதிர்பார்க்கும் பலன்களில் பின்னடைவு ஏற்படும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு, பிரிவு என்ற நிலையும் சிலருக்கு ஏற்படும். வீண் அலைச்சல்,  தீயோர் சேர்க்கையால் அவப்பெயர், வாழ்க்கைத் துணையின் உடல் நலனில் பாதிப்பு, வெளியூரில் வாழும் நிலை. எதிர்பாலினரால் சங்கடம், பண விரயம் உண்டாகும் என்பது பொது விதி. இருந்தாலும் ஒருவரின் சுய ஜாதகத்தின் கிரக அமைப்பு, திசா புத்தி போன்றவைகளால் இவற்றிலிருந்து மாற்றமும் உண்டாகும்.சனி சஞ்சாரம்இந்த ஆண்டில் கண்டகச் சனியாக சஞ்சரித்தாலும் ஜன 1 - பிப் 15 வரை தாரா பலனாலும், அஸ்தமன, வக்கிர  நிலைகளிலும் நற்பலன் உண்டாகும். ஏழாமிட சனியின் பாதக பலன் விலகும். நினைத்ததை சாதிக்கும் செயல்பாடு உங்களுக்கு இருக்கும். பொன், பொருள் சேர்க்கை, நவீன வாகனம், பொருள் என்று வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடைபெறும். ராகு - கேது சஞ்சாரம்ராகு மறைவு ஸ்தானமான மீனத்திலும், கேது குடும்ப ஸ்தானமான கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் உங்கள் நிலையில் எதிர்பாராத மாற்றம் உண்டாகும். எதிர்பாலினரால் சங்கடம் தோன்றும். உடல்நிலையில் பாதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உருவாகும். மனதில் இனம் புரியாத சங்கடம் தோன்றும். வாழ்க்கைத் துணையுடன் பிரச்னைகள் உருவாகும். எதிர்பாலினரால் குடும்பத்திற்குள் தேவையற்ற சங்கடம் ஏற்படும். பொருளாதார ரீதியாக நெருக்கடி அதிகரிக்கும்.குரு சஞ்சாரம்ஏப்.30 வரை 9ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை  உங்கள் ராசிக்கு உண்டாவதால் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த ஒவ்வொன்றும் லாபத்தில் முடியும். குடும்பத்தில் சுபநிகழ்வுகள்  நடைபெறும். இக்காலம் உங்களுக்கு யோக காலமாக இருக்கும். மே 1 முதல் 10ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் உங்கள் நிலையில் சங்கடம் அதிகரிக்கும். தொழிலில், பணியில் நெருக்கடி தோன்றும். பணத்தேவை அதிகரிக்கும் என்றாலும் குருவின் பார்வையால் பணவரவு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு பிரச்னைகள் விலகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும். புதிய இடம், மனை, பொன் பொருள் என வாங்கக் கூடிய நிலை உண்டாகும். சூரிய சஞ்சாரம்அக்.18 - நவ.25 வரையிலும், ஜன.15 - பிப்.12 வரையிலும், மே 14 - ஜூலை 16 வரையிலும் சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 3,6,10,11ம் இடங்களில் சஞ்சரிப்பதால் சங்கடங்கள் விலகும், அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். புதிய தொழில் தொடங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். வழக்குகள் சாதகமாகும். வருமானம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். புதிய பொறுப்பு வந்து சேரும். தொண்டர்களின் ஆதரவு அதிகரிக்கும். அலுவலர்களுக்கு வேலை நீக்கம், விசாரணை என்ற நிலையில் மாற்றம் உண்டாகும். மீண்டும் செல்வாக்குடன் பழைய உத்தியோகத்தில் தொடர்வீர்கள்.பொதுப்பலன்உங்களின் தனித்தன்மை வெளிப்படும். உழைப்பு அதிகரிக்கும் என்றாலும் எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். சிலர் குற்றச்சாட்டுக்கு ஆளாவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தம் ஏற்படும். உடல்நிலையில் முன்னேற்றம் தோன்றும்.தொழில்தொழிலில் சில சங்கடம் ஏற்படும். கூட்டுத்தொழில் இக்காலத்தில் பிரச்னைகளில் முடியும். புதிய முதலீடுகள் எதிர்பார்த்த லாபத்தை ஏற்படுத்தாமல் போகும். சினிமா, சின்னத்திரை, பேன்சி ஸ்டோர்ஸ், ஜவுளி, கவரிங், நகை, வாகனம், ஆடம்பர பொருட்கள், குடிநீர் வியாபாரங்களில் லாபம் அதிகரிக்கும்.பணியாளர்கள்பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை என நிரூபிக்கப்படும். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும். தனியார் துறை பணியாளர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வை அடைய முடியும். முதலாளிகளால் மதிக்கப்படுவீர்கள்.பெண்கள்உத்தியோகத்தில் இருந்த சங்கடம் முடிவிற்கு வரும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். கணவரின் அன்பு அதிகரிக்கும். சிலருக்கு உடல்நிலையில் தொந்தரவு உண்டாகும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பர். அவர்கள் மீது அக்கறை அதிகரிக்கும். உறவினரிடம் செல்வாக்கு உயரும். புதியவர்களிடம் பழகும்போது  எச்சரிக்கை அவசியம். குடும்ப ரகசியங்களை யாரிடமும் கூற வேண்டாம்.கல்விமாணவர்களின் கவனம் படிப்பில் இருந்து சிதற வாய்ப்புண்டு. ஆனால் எதிர்காலத்தைப் பற்றி யோசித்து படிப்பில் கவனம் செலுத்துவதும், ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டு செயல்படுவதும் வெற்றியை உண்டாக்கும்.உடல்நிலைஅஷ்டம ராகுவும், சப்தம சனியும் போட்டி போட்டு உடல் பாதிப்பை உண்டாக்குவர். மருத்துவச் செலவு அதிகரிக்கும். சிலருக்கு மறைமுக, பரம்பரை நோய்கள் தோன்றி சங்கடப்படுத்தும் என்றாலும் சிகிச்சையால் குணமாகும்.குடும்பம்உழைப்பின் காரணமாக வருவாய் அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் இருந்த சங்கடம் விலகும். புதிய வாகனம், நவீன பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளின் நிலை உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய இடம் வாங்கி உங்கள் விருப்பப்படி வீடு கட்டி குடியேறுவீர்கள். வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வதால் வீட்டில் அமைதி நிலைக்கும்.பரிகாரம்மகாவிஷ்ணு, சக்கரத்தாழ்வாரை வழிபட்டு வர சங்கடங்கள் விலகும்.உத்திரம்; வீடு கட்டுவீங்கசூரிய பகவான் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனே ராசிநாதனாகவும், 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர்.2024 ஆண்டில் உத்திரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்ப்பில் இழுபறி,  காரியங்களில் தடை, வீண் அலைச்சல், குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, பொருளாதாரத்தில் சிரமம், உடல் நலனில் சங்கடம் வழங்கும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமான பலன்கள் உண்டாவதுடன் பிரபல யோக காலமாக இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும். ஆரோக்கியம் அதிகரிக்கும். வீடு கட்டும் யோகம் ஏற்படும். எதிர்ப்பு இல்லாமல் போகும். எதிரிகளை அடக்கி வெற்றி பெற முடியும். அபார ஆற்றல் உண்டாகும்.சனி சஞ்சாரம்ஆண்டு முழுவதும் கும்பத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான்,  மார்ச் 16 - ஜூன் 19 வரையிலும், நவ 4 - டிச 31 வரையிலும், அஸ்தமனம், வக்கிர நிலையிலும் 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் நன்மையான பலன் வழங்கிடுவார். சங்கடம் விலகும். நெருக்கடி இல்லாமல் போகும். முயற்சிகள் வெற்றியாகும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 2024 முழுவதும் யோகத்தை வழங்குவார். நினைத்ததை அடைவீர்கள். முயற்சியை வெற்றியாக்குவார். செல்வாக்கை உயர்த்துவார். வழக்குகளில் சாதகமான நிலையை ஏற்படுத்துவார். எதிர்ப்பு இல்லாத வாழ்வை வழங்குவார். ராகு - கேது சஞ்சாரம்ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் வாழ்வில் தடுமாற்றம் ஏற்படும். உடல்நிலையில் பாதிப்பு இருக்கும். குழப்பம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும். குடும்பத்தில் பிரச்னை அதிகரிக்கும். தம்பதியருக்குள் ஒற்றுமை இல்லாமல் போகும். நண்பர்கள் விலகிச் செல்வர். குரு சஞ்சாரம் ஏப்.30 வரை 1ம் பாதத்தினருக்கு பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் சங்கடம் வந்தாலும் சமாளிக்கும் நிலை உண்டாகும். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். எதிர்ப்பு விலகும். ஆரோக்கியம் சீராகும். செல்வாக்கு உயரும். மே 1 முதல் நல்ல மாற்றம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சங்கடம் அதிகரிக்கும். பணியிடத்தில் நெருக்கடி தோன்றும். குடும்பத்தில் பிரச்னை அதிகரிக்கும். 2,3,4ம் பாதத்தினருக்கு ஏப்.30 வரை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் முயற்சியில் தடையை ஏற்படுத்துவார். குழப்பத்தை அதிகரிப்பார்.மே1 முதல் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார். செல்வாக்கை அதிகரிப்பார். பணம், பதவி, பட்டம் என்ற நிலையுடன் உங்களை வெளி உலகத்திற்கு அறிமுகம் செய்வார். அதிர்ஷ்டகரமான நிலையை உருவாக்குவார். சங்கடங்களை எல்லாம் நீக்கி வைத்து பொன் பொருள் செல்வாக்கு என உங்கள் வாழ்க்கையை வளமாக்குவார். குடும்பம், தொழில், உத்தியோகம் என அனைத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவார். பண வரவை அதிகரிப்பார்.சூரிய சஞ்சாரம்உத்திரம் 1, ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அக்.18 - நவ.25 வரையிலும், ஜன 15 -  பிப் 12 வரையிலும், மே 14 - ஜூலை 16 வரையிலும், 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பிப் 13 - மார்ச் 13 மற்றும் ஜூன் 15 - ஆக 16 வரையிலும், நவ.16 - டிச.15 வரையிலும் சூரிய பகவான் உங்கள் நிலையில்  முன்னேற்றத்தை உண்டாக்குவார். சட்ட சிக்கல்களில் இருந்து விடுவிப்பார். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை விலக்கி வைப்பார். அரசியல்வாதிகளின் செல்வாக்கை அதிகரிப்பார். உடல்நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். எதிரிகளை பலமிழக்க வைப்பார். வெளிவட்டாரத்தில் செல்வாக்கை அதிகரிப்பார். புதிய தொழில் தொடங்கும் முயற்சியை வெற்றியாக்குவார். வருமானத்தை அதிகரிப்பார்.பொதுப்பலன்2024 ல் 1ம் பாதத்தினருக்கு குருபகவானின் சஞ்சாரமும், 2,3,4ம் பாதத்தினருக்கு சனி பகவானின் சஞ்சாரமும் பெரிய யோகத்தை வழங்கும். நெருக்கடி விலகும். முயற்சிகள் எல்லாம் வெற்றியாகும். சுபநிகழ்வுகள் நடந்தேறும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். பொருளாதார நிலை உயரும். அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள், கலைஞர்களின் செல்வாக்கு அதிகரிக்கும். எண்ணியதை நிறைவேற்றிக் கொள்ளும் ஆண்டாக அமையும்.தொழில்தொழிலில் இருந்த நெருக்கடி விலக ஆரம்பிக்கும். புதிய ஒப்பந்தம் வந்து சேரும். ஏற்றுமதி இறக்குமதி, பங்கு வர்த்தகம், ஆட்டோ மொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், மெடிக்கல், மருத்துவம், பப்ளிகேஷன்ஸ், யூடியூப், சினிமா, விவசாயம், டிரான்ஸ்போர்ட், வழக்கறிஞர், மருத்துவர் தொழில்களில் லாபம் அதிகரிக்கும்.பணியாளர்கள்பணியாளர்களுக்கு சங்கடங்கள் விலகும். உங்கள் திறமை இனி மதிக்கப்படும். ஊதிய உயர்வு உண்டாகும். வேலையில் பொறுப்பு உயரும். வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும் அதன் காரணமாக தனி மதிப்பு ஏற்படும். அரசு ஊழியர்கள் சிலருக்கு விரும்பிய இடமாற்றமும், பதவி உயர்வு கிடைக்கும்.பெண்கள்குழப்பங்கள் இனி விலகும். உடலில் இருந்த சங்கடம் நீங்கும். உறவினர்கள் மதிக்கும் நிலை உண்டாகும். பகைவர்களும் உங்களைத் தேடி வருவர். முயற்சிகள் யாவும் வெற்றியாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். இக்காலத்தில் மனதில் வேறு சிந்தனைகள் வேண்டாம். நட்புகளின் வழியே சில சங்கடங்கள், அவமானங்கள் தோன்ற வாய்ப்புண்டு. கல்விஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பீர்கள். படிப்பில் கவனம் அதிகரிக்கும். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மருத்துவம், இன்ஜினியரிங், சாப்ட்வேர் சார்ந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிலருக்கு வெளிநாட்டில் கல்வி பயிலும் வாய்ப்பு ஏற்படும்.உடல்நிலைநீண்ட நாளாக உடலில் இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். தொற்றுநோய், பரம்பரைநோயால் அவதிப்பட்டு வந்த நிலை மாறும். இதுவரை தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தவர்கள் இனி நோயின் தன்மையறிந்து சிகிச்சை பெற்று குணமடைவீர்கள்.குடும்பம்குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். இழுபறியாக இருந்த சொத்து விவகாரம் முடிவிற்கு வரும். பணத்தட்டுப்பாடு விலகும். சிலர் புதிய இடம் வாங்கி வீடு கட்டி குடியேறுவீர்கள். சொந்தமாக தொழில் தொடங்க நினைத்தவர்கள் தொழிலை ஆரம்பித்து லாபம் காண்பீர்கள். சிலருக்கு, திருமணம், வேலைவாய்ப்பு, குழந்தை பாக்கியம் என்ற கனவுகள் நனவாகும்.பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபட நன்மை அதிகரிக்கும்.

உத்திரம்; வீடு கட்டுவீங்கசூரிய பகவான் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனே ராசிநாதனாகவும், 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர்.2024 ஆண்டில் உத்திரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்ப்பில் இழுபறி,  காரியங்களில் தடை, வீண் அலைச்சல், குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, பொருளாதாரத்தில் சிரமம், உடல் நலனில் சங்கடம் வழங்கும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமான பலன்கள் உண்டாவதுடன் பிரபல யோக காலமாக இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும். ஆரோக்கியம் அதிகரிக்கும். வீடு கட்டும் யோகம் ஏற்படும். எதிர்ப்பு இல்லாமல் போகும். எதிரிகளை அடக்கி வெற்றி பெற முடியும். அபார ஆற்றல் உண்டாகும்.சனி சஞ்சாரம்ஆண்டு முழுவதும் கும்பத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான்,  மார்ச் 16 - ஜூன் 19 வரையிலும், நவ 4 - டிச 31 வரையிலும், அஸ்தமனம், வக்கிர நிலையிலும் 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் நன்மையான பலன் வழங்கிடுவார். சங்கடம் விலகும். நெருக்கடி இல்லாமல் போகும். முயற்சிகள் வெற்றியாகும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 2024 முழுவதும் யோகத்தை வழங்குவார். நினைத்ததை அடைவீர்கள். முயற்சியை வெற்றியாக்குவார். செல்வாக்கை உயர்த்துவார். வழக்குகளில் சாதகமான நிலையை ஏற்படுத்துவார். எதிர்ப்பு இல்லாத வாழ்வை வழங்குவார். ராகு - கேது சஞ்சாரம்ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் வாழ்வில் தடுமாற்றம் ஏற்படும். உடல்நிலையில் பாதிப்பு இருக்கும். குழப்பம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும். குடும்பத்தில் பிரச்னை அதிகரிக்கும். தம்பதியருக்குள் ஒற்றுமை இல்லாமல் போகும். நண்பர்கள் விலகிச் செல்வர். குரு சஞ்சாரம் ஏப்.30 வரை 1ம் பாதத்தினருக்கு பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் சங்கடம் வந்தாலும் சமாளிக்கும் நிலை உண்டாகும். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். எதிர்ப்பு விலகும். ஆரோக்கியம் சீராகும். செல்வாக்கு உயரும். மே 1 முதல் நல்ல மாற்றம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சங்கடம் அதிகரிக்கும். பணியிடத்தில் நெருக்கடி தோன்றும். குடும்பத்தில் பிரச்னை அதிகரிக்கும். 2,3,4ம் பாதத்தினருக்கு ஏப்.30 வரை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் முயற்சியில் தடையை ஏற்படுத்துவார். குழப்பத்தை அதிகரிப்பார்.மே1 முதல் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார். செல்வாக்கை அதிகரிப்பார். பணம், பதவி, பட்டம் என்ற நிலையுடன் உங்களை வெளி உலகத்திற்கு அறிமுகம் செய்வார். அதிர்ஷ்டகரமான நிலையை உருவாக்குவார். சங்கடங்களை எல்லாம் நீக்கி வைத்து பொன் பொருள் செல்வாக்கு என உங்கள் வாழ்க்கையை வளமாக்குவார். குடும்பம், தொழில், உத்தியோகம் என அனைத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவார். பண வரவை அதிகரிப்பார்.சூரிய சஞ்சாரம்உத்திரம் 1, ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அக்.18 - நவ.25 வரையிலும், ஜன 15 -  பிப் 12 வரையிலும், மே 14 - ஜூலை 16 வரையிலும், 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பிப் 13 - மார்ச் 13 மற்றும் ஜூன் 15 - ஆக 16 வரையிலும், நவ.16 - டிச.15 வரையிலும் சூரிய பகவான் உங்கள் நிலையில்  முன்னேற்றத்தை உண்டாக்குவார். சட்ட சிக்கல்களில் இருந்து விடுவிப்பார். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை விலக்கி வைப்பார். அரசியல்வாதிகளின் செல்வாக்கை அதிகரிப்பார். உடல்நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். எதிரிகளை பலமிழக்க வைப்பார். வெளிவட்டாரத்தில் செல்வாக்கை அதிகரிப்பார். புதிய தொழில் தொடங்கும் முயற்சியை வெற்றியாக்குவார். வருமானத்தை அதிகரிப்பார்.பொதுப்பலன்2024 ல் 1ம் பாதத்தினருக்கு குருபகவானின் சஞ்சாரமும், 2,3,4ம் பாதத்தினருக்கு சனி பகவானின் சஞ்சாரமும் பெரிய யோகத்தை வழங்கும். நெருக்கடி விலகும். முயற்சிகள் எல்லாம் வெற்றியாகும். சுபநிகழ்வுகள் நடந்தேறும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். பொருளாதார நிலை உயரும். அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள், கலைஞர்களின் செல்வாக்கு அதிகரிக்கும். எண்ணியதை நிறைவேற்றிக் கொள்ளும் ஆண்டாக அமையும்.தொழில்தொழிலில் இருந்த நெருக்கடி விலக ஆரம்பிக்கும். புதிய ஒப்பந்தம் வந்து சேரும். ஏற்றுமதி இறக்குமதி, பங்கு வர்த்தகம், ஆட்டோ மொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், மெடிக்கல், மருத்துவம், பப்ளிகேஷன்ஸ், யூடியூப், சினிமா, விவசாயம், டிரான்ஸ்போர்ட், வழக்கறிஞர், மருத்துவர் தொழில்களில் லாபம் அதிகரிக்கும்.பணியாளர்கள்பணியாளர்களுக்கு சங்கடங்கள் விலகும். உங்கள் திறமை இனி மதிக்கப்படும். ஊதிய உயர்வு உண்டாகும். வேலையில் பொறுப்பு உயரும். வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும் அதன் காரணமாக தனி மதிப்பு ஏற்படும். அரசு ஊழியர்கள் சிலருக்கு விரும்பிய இடமாற்றமும், பதவி உயர்வு கிடைக்கும்.பெண்கள்குழப்பங்கள் இனி விலகும். உடலில் இருந்த சங்கடம் நீங்கும். உறவினர்கள் மதிக்கும் நிலை உண்டாகும். பகைவர்களும் உங்களைத் தேடி வருவர். முயற்சிகள் யாவும் வெற்றியாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். இக்காலத்தில் மனதில் வேறு சிந்தனைகள் வேண்டாம். நட்புகளின் வழியே சில சங்கடங்கள், அவமானங்கள் தோன்ற வாய்ப்புண்டு. கல்விஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பீர்கள். படிப்பில் கவனம் அதிகரிக்கும். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மருத்துவம், இன்ஜினியரிங், சாப்ட்வேர் சார்ந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிலருக்கு வெளிநாட்டில் கல்வி பயிலும் வாய்ப்பு ஏற்படும்.உடல்நிலைநீண்ட நாளாக உடலில் இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். தொற்றுநோய், பரம்பரைநோயால் அவதிப்பட்டு வந்த நிலை மாறும். இதுவரை தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தவர்கள் இனி நோயின் தன்மையறிந்து சிகிச்சை பெற்று குணமடைவீர்கள்.குடும்பம்குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். இழுபறியாக இருந்த சொத்து விவகாரம் முடிவிற்கு வரும். பணத்தட்டுப்பாடு விலகும். சிலர் புதிய இடம் வாங்கி வீடு கட்டி குடியேறுவீர்கள். சொந்தமாக தொழில் தொடங்க நினைத்தவர்கள் தொழிலை ஆரம்பித்து லாபம் காண்பீர்கள். சிலருக்கு, திருமணம், வேலைவாய்ப்பு, குழந்தை பாக்கியம் என்ற கனவுகள் நனவாகும்.பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபட நன்மை அதிகரிக்கும்.அஸ்தம்; வழக்குகளில் வெற்றிசந்திரன், புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2024 வருடத்தில் ஜென்ம ராசிக்குள் கேது சஞ்சரித்தாலும் 6ம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிக்கிறார். ஆற்றல் அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றியாகும். எதிரிகள் இருக்கும் இடம் தெரியாமல் செல்வர். கடந்த காலத்தில் இருந்த சங்கடம் எல்லாம் விலகும். பொருளாதார உயர்வும், காரியத்தில் அனுகூலமும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும். ஆரோக்கியத்தில் முன்னேற்றமும், வழக்குகளில் வெற்றியும் உண்டாகும்.சனி சஞ்சாரம்சனிபகவான் ஆண்டு முழுதும் ராசிக்கு 6ம் இடத்தில் சஞ்சரிப்பதால் இருண்ட நிலையில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் உங்கள் நிலை மாறும். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்னை தீரும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனஉளைச்சல் நீங்கும். வழக்கு, விவகாரத்தில் உங்களுக்கு சாதகமாகும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். முயற்சி யாவும் வெற்றியாகும். இக்காலத்தில் அதிகபட்ச லாபத்தை அடைய முடியும். உங்கள் கவுரவம் அதிகரிக்கும்.ராகு - கேது சஞ்சாரம்ராகு 7ம் இடத்திலும், கேது ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்கும் நிலையில் மனதில் குழப்பம் அதிகரிக்கும். முயற்சியில் தடுமாற்றம் ஏற்படும். நட்புகளால் சங்கடங்களை சந்திக்க நேரிடும்.  சிலருக்கு எதிர்பாலினரால் தடுமாற்றம், தடமாற்றம் ஏற்படும். சிலர் வழக்கு விவகாரத்தில் சிக்க வேண்டியதாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் பிரச்னை தோன்றும். குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும்.குரு சஞ்சாரம்ஏப்.30 வரை அஷ்டம ஸ்தான குருவால் சங்கடம் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடி உண்டாகும். நினைத்ததை நடத்த முடியாமல் போகும். மனதில் குறை இருந்து கொண்டே இருக்கும். மே 1 முதல் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் உங்கள் நிலையில் முன்னேற்றம் தோன்றும். செல்வாக்கு உயரும். பட்டம், பதவி என்ற உங்கள் ஆசை நிறைவேறும். சமூக அந்தஸ்து உயரும்.   குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். சூரிய சஞ்சாரம்பிப் 13 - மார்ச் 13 மற்றும் ஜூன் 15 - ஆக 16 வரையிலும், நவ 16 - டிச 15 வரையிலும் சூரிய பகவானால் சங்கடங்கள் விலகும். ஜென்ம கேதுவின் பாதிப்பில் இருந்து விடுதலை ஏற்படும். சிக்கல்கள் வம்பு வழக்குகள் போன்றவற்றில் இருந்து மீள்வீர்கள். செல்வாக்கு பலமடங்கு உயரும். அந்தஸ்து அதிகரிக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழில் தொடங்க அனுமதி கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும். எதிர்ப்பு விலகும். முயற்சிகள் வெற்றியாகும்.பொதுப்பலன்2024ல்  உங்கள் செல்வாக்கு உயரும். கடந்த ஆண்டில் இருந்த சங்கடம் விலகும். ஆற்றல் அதிகரிக்கும். முயற்சி வெற்றியாகும். பொருளாதார நிலை உயரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். ஆரோக்கியம் மேம்படும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். வியாபாரம், தொழிலில் இருந்த தடை விலகும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர். சமூகத்தில் செல்வாக்கு உயரும்.தொழில்தொழிலில் இருந்த சங்கடம் விலகும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியாகும். அரசுவழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். பத்திர எழுத்தர்கள், கலைஞர்கள், ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம், வெள்ளி, ஜவுளி, குடிநீர், வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடுவோர் மேன்மையடைவர்.  பணியாளர்கள்அரசு பணியாளர்கள் செல்வாக்குடன் திகழ்வர். எதிர்பார்த்த பதவி உயர்வு, இட மாற்றம் கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு கூடும். தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவோரின் விருப்பம் நிறைவேறும். ஊதியம் உயரும். பொறுப்பு அதிகரிக்கும்.பெண்கள்வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்னைகள் தீரும். உடல்நிலையில் உண்டான சங்கடம் நீங்கும். அலுவலகப் பணியில் பதவி உயர்வு ஏற்படும். மே 1 முதல் குருபார்வை உண்டாவதால் திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். வேலைத் தேடுவோருக்கு தகுதியான வேலை கிடைக்கும். 7ம் இட ராகு மனதில் சஞ்சலத்தை உண்டாக்குவார் என்பதால் உடன் பழகி வருவோரிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையெனில் குடும்பத்தில் குழப்பம் தோன்றும். கணவன் மனைவிக்குள் பிரச்னை உண்டாகும்.கல்விமனக்காரகனும், வித்யாகாரகனும் உங்களை வழிநடத்துவதால் கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்று செயல்படுவீர்கள். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.உடல்நிலை6ம் இடச் சனியால் இதுவரை உங்களை அச்சுறுத்தி வந்த நோய்கள் மருத்துவத்திற்கு கட்டுப்படும். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரும். பரம்பரை நோயிலிருந்து விடுதலை கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.குடும்பம்வருமானம் பலவழியிலும் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். சொத்து மீதிருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாவதால் உங்கள் நிலை உயரும். சிலர் புதிய வீடு கட்டி அதில் குடியேறுவீர்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். தம்பதிகள் ஒற்றுமையுடன் செயல்படுவர்.  பிள்ளைகளின் நிலை உயரும். சிலர் நவீன சாதனம், வாகனம் வாங்குவீர்கள். கோயில் திருப்பணிக்கு நிதியுதவி புரிவீர்கள்.பரிகாரம்; துர்கைக்கு குங்குமம் சாத்தி, எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட வளம் உண்டாகும்.சித்திரை; காத்திருக்கு ராஜயோகம்செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தந்தாலும், 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு  புதன் ராசிநாதனாகவும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர். 2024 ல் சித்திரை 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சமூகத்தில் செல்வாக்கும், அந்தஸ்தும், முயற்சிகளில் வெற்றிகளும், பகைவரை வீழ்த்தும் வலிமையும், பணவரவும், நினைத்ததை நடத்திக் கொள்ளும் ஆற்றலும் உண்டாகும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம், வழக்குகளில் சாதகமான நிலை, எதிரிகளை வீழ்த்தும் வலிமை ஏற்படும். சனி சஞ்சாரம்ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், மார்ச் 16 - ஜூன் 19 வரையிலும், நவ 4  - டிச 31 வரையிலும் தாரா பலனால் 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் ராஜ யோகபலன்களை வழங்குவார். முயற்சியில் வெற்றியை உண்டாக்குவார். சங்கடங்களை விரட்டுவார். 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஆண்டு முழுவதும் யோகம், செல்வாக்கை அதிகரிப்பார். தொழில் உத்தியோகத்தில் முன்னேற்றம் தருவார். போட்டியாளர்களை எல்லாம் பின் வாங்க வைப்பார். வழக்கில் வெற்றியை உண்டாக்குவார். செயல்களை லாபமாக்குவார். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அஸ்தமனம், வக்கிர காலங்களில் அதற்கு முன்பிருந்த சங்கடங்களை அகற்றி வைப்பார். நன்மைகளை அதிகரிப்பார். போராட்டமான நிலையில் இருந்து விடுதலை வழங்குவார்.ராகு - கேது சஞ்சாரம்ஆண்டு முழுவதும் ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். குடும்பத்திற்குள் நிம்மதியற்ற நிலை ஏற்படும். புதிய நட்புகளால் ஒரு சிலர் அவமானத்திற்கு ஆளாக நேரும். பொருள் இழப்பும் உண்டாகும். 3, 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நினைத்ததை சாதித்துக் கொள்ளக்கூடிய நிலையும், புதிய முயற்சிகள் தொடங்கி அதில் வெற்றி அடையக்கூடிய நிலையும் உண்டாகும். பணவரவில் இருந்த தடைகள் விலகும். பலவழிகளிலும் பணம் வரும். செல்வாக்கு உயரும். பட்டம், பதவி, அந்தஸ்து என்ற கனவு நிறைவேறும்.குரு சஞ்சாரம்1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை அஷ்டம ஸ்தானத்திலும், மே 1 முதல் பாக்ய ஸ்தானத்திலும் குருபகவான் சஞ்சரிக்கிறார். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் யோகத்தை உண்டாக்குவார். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவார். வேலைத் தேடி வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவார். புதிய வீடு கட்டி குடியேற வைப்பார். அரசியல்வாதிகளின் செல்வாக்கை உயர்த்துவார். புதிய பதவி பொறுப்பு வந்து சேரும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.30, வரை தன் பார்வையின் மூலம் அதிகபட்சமான யோகத்தை வழங்குவார். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவார். அதிர்ஷ்ட வாய்ப்புகளை வழங்குவார். பணம், பதவி, பட்டம், செல்வாக்கு என வாழ்வை வளமாக்குவார்.சூரிய சஞ்சாரம்பிப் 13 - மார்ச் 13 மற்றும் ஜூன் 15 - ஆக16 வரையிலும், நவ 16 - டிச 15 வரையிலும் சித்திரை 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கும் ஜன 1- 14 மற்றும் மார்ச் 14 - ஏப் 13 வரையிலும், ஜூலை 17 - செப் 16 வரையிலும் 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கும் சூரிய பகவானின் சஞ்சார நிலைகளால் வாழ்க்கை நிலை உயரும். எதிர்பார்த்த நன்மை உண்டாகும். வியாபாரம், தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். பணியாளர்களின் கோரிக்கை நிறைவேறும். எதிர்ப்பு விலகும். ஆரோக்கியம் சீராகும். சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். புதிய ஒப்பந்தம் வந்து சேரும். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும்.பொதுப்பலன்2024ல் நினைத்ததை சாதிப்பீர்கள். சூழ்நிலைகளும் சாதகமாக அமையும். தொழில், பணியில் உங்கள் எண்ணம் நிறைவேறும். செயல்களில் விவேகம் இருக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தைரியமாக செயல்பட்டு வருவாயை அதிகரிப்பீர்கள். நீண்டநாள் ஆசை நிறைவேறும். சொத்து சேர்க்கை உண்டாகும். தொழில்தொழிலில் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவீர்கள். போட்டியாளர்கள் விலகுவர். புதிய முதலீடு ஆதாயம் தரும். பங்கு சந்தையில் லாபம் அதிகரிக்கும். அரசு வழியில் இருந்த தடைகள் விலகும். புதிய தொழிற்சாலை, தொழில் தொடங்க நினைத்தவர்களின் எண்ணம் நிறைவேறும்.பணியாளர்கள்பணியில் இருந்த பிரச்னை விலக ஆரம்பிக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக இருப்பர். சக ஊழியர்களும் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவர். தனியார் துறை பணியாளர்கள் நிலை உயரும். முதலாளியின் பாராட்டிற்கு ஆளாவீர்கள். திறமை மதிக்கப்படும். ஊதியம் உயரும்.பெண்கள்தனித்திறமை வெளிப்படும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். பணிபுரிவோருக்கு புதிய பொறுப்பு வந்து சேரும். வருமானம் அதிகரிக்கும். குலதெய்வ அருள் கிடைக்கும். உடலில் இருந்த சங்கடம் விலகும். வாழ்க்கைத்துணை உங்களின் ஆலோசனையின்படி செயல்படும் நிலை உண்டாகும். குடும்பத்தை வழிநடத்திச் செல்வதில் உங்கள் பங்கு அதிகரிக்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு புதிய சொத்து வாங்குவீர்கள். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். அவர்களின் கல்வி, வேலை, திருமணம், முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவீர்கள். மறைமுக எதிரிகள் காணாமல் போவர்.கல்விபடிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதால் தேர்வில் நீங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெற முடியும். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படுவது கூடுதல் நன்மை தரும். உடல்நிலைநோயில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பரம்பரை நோய், தொற்று நோய்களால் சங்கடம் உண்டாகும் என்றாலும் சிகிச்சையால் குணமாகும். நீண்டநாள் நோய்கள் நவீன சிகிச்சையால் குறைய ஆரம்பிக்கும். நடைபயிற்சி, யோகா போன்றவற்றால் நோய் கட்டுப்பாட்டிற்குள் வரும்.குடும்பம்திட்டமிட்டு செயல்படுவீர்கள். பெரியோரின் ஆதரவு அதிகரிக்கும். குலதெய்வ வழிபாட்டில் சிலர் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த வரவுகளால் சங்கடம் விலக ஆரம்பிக்கும். துணிந்து செயல்பட்டு குடும்பத்தில் இருந்த பிரச்னைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். உங்கள் வசதிக்கேற்ப வீடு கட்டி அதில் குடியேறுவீர்கள். தம்பதியர் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வீர்கள். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். பிள்ளைகளை மேற்கல்விக்காக வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.பரிகாரம்ராமேஸ்வரம் ராமநாத சுவாமியை தரிசித்து வர நன்மை அதிகரிக்கும்.

சித்திரை; காத்திருக்கு ராஜயோகம்செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தந்தாலும், 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு  புதன் ராசிநாதனாகவும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர். 2024 ல் சித்திரை 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சமூகத்தில் செல்வாக்கும், அந்தஸ்தும், முயற்சிகளில் வெற்றிகளும், பகைவரை வீழ்த்தும் வலிமையும், பணவரவும், நினைத்ததை நடத்திக் கொள்ளும் ஆற்றலும் உண்டாகும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம், வழக்குகளில் சாதகமான நிலை, எதிரிகளை வீழ்த்தும் வலிமை ஏற்படும். சனி சஞ்சாரம்ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், மார்ச் 16 - ஜூன் 19 வரையிலும், நவ 4  - டிச 31 வரையிலும் தாரா பலனால் 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் ராஜ யோகபலன்களை வழங்குவார். முயற்சியில் வெற்றியை உண்டாக்குவார். சங்கடங்களை விரட்டுவார். 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஆண்டு முழுவதும் யோகம், செல்வாக்கை அதிகரிப்பார். தொழில் உத்தியோகத்தில் முன்னேற்றம் தருவார். போட்டியாளர்களை எல்லாம் பின் வாங்க வைப்பார். வழக்கில் வெற்றியை உண்டாக்குவார். செயல்களை லாபமாக்குவார். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அஸ்தமனம், வக்கிர காலங்களில் அதற்கு முன்பிருந்த சங்கடங்களை அகற்றி வைப்பார். நன்மைகளை அதிகரிப்பார். போராட்டமான நிலையில் இருந்து விடுதலை வழங்குவார்.ராகு - கேது சஞ்சாரம்ஆண்டு முழுவதும் ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். குடும்பத்திற்குள் நிம்மதியற்ற நிலை ஏற்படும். புதிய நட்புகளால் ஒரு சிலர் அவமானத்திற்கு ஆளாக நேரும். பொருள் இழப்பும் உண்டாகும். 3, 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நினைத்ததை சாதித்துக் கொள்ளக்கூடிய நிலையும், புதிய முயற்சிகள் தொடங்கி அதில் வெற்றி அடையக்கூடிய நிலையும் உண்டாகும். பணவரவில் இருந்த தடைகள் விலகும். பலவழிகளிலும் பணம் வரும். செல்வாக்கு உயரும். பட்டம், பதவி, அந்தஸ்து என்ற கனவு நிறைவேறும்.குரு சஞ்சாரம்1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை அஷ்டம ஸ்தானத்திலும், மே 1 முதல் பாக்ய ஸ்தானத்திலும் குருபகவான் சஞ்சரிக்கிறார். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் யோகத்தை உண்டாக்குவார். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவார். வேலைத் தேடி வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவார். புதிய வீடு கட்டி குடியேற வைப்பார். அரசியல்வாதிகளின் செல்வாக்கை உயர்த்துவார். புதிய பதவி பொறுப்பு வந்து சேரும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.30, வரை தன் பார்வையின் மூலம் அதிகபட்சமான யோகத்தை வழங்குவார். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவார். அதிர்ஷ்ட வாய்ப்புகளை வழங்குவார். பணம், பதவி, பட்டம், செல்வாக்கு என வாழ்வை வளமாக்குவார்.சூரிய சஞ்சாரம்பிப் 13 - மார்ச் 13 மற்றும் ஜூன் 15 - ஆக16 வரையிலும், நவ 16 - டிச 15 வரையிலும் சித்திரை 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கும் ஜன 1- 14 மற்றும் மார்ச் 14 - ஏப் 13 வரையிலும், ஜூலை 17 - செப் 16 வரையிலும் 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கும் சூரிய பகவானின் சஞ்சார நிலைகளால் வாழ்க்கை நிலை உயரும். எதிர்பார்த்த நன்மை உண்டாகும். வியாபாரம், தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். பணியாளர்களின் கோரிக்கை நிறைவேறும். எதிர்ப்பு விலகும். ஆரோக்கியம் சீராகும். சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். புதிய ஒப்பந்தம் வந்து சேரும். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும்.பொதுப்பலன்2024ல் நினைத்ததை சாதிப்பீர்கள். சூழ்நிலைகளும் சாதகமாக அமையும். தொழில், பணியில் உங்கள் எண்ணம் நிறைவேறும். செயல்களில் விவேகம் இருக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தைரியமாக செயல்பட்டு வருவாயை அதிகரிப்பீர்கள். நீண்டநாள் ஆசை நிறைவேறும். சொத்து சேர்க்கை உண்டாகும். தொழில்தொழிலில் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவீர்கள். போட்டியாளர்கள் விலகுவர். புதிய முதலீடு ஆதாயம் தரும். பங்கு சந்தையில் லாபம் அதிகரிக்கும். அரசு வழியில் இருந்த தடைகள் விலகும். புதிய தொழிற்சாலை, தொழில் தொடங்க நினைத்தவர்களின் எண்ணம் நிறைவேறும்.பணியாளர்கள்பணியில் இருந்த பிரச்னை விலக ஆரம்பிக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக இருப்பர். சக ஊழியர்களும் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவர். தனியார் துறை பணியாளர்கள் நிலை உயரும். முதலாளியின் பாராட்டிற்கு ஆளாவீர்கள். திறமை மதிக்கப்படும். ஊதியம் உயரும்.பெண்கள்தனித்திறமை வெளிப்படும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். பணிபுரிவோருக்கு புதிய பொறுப்பு வந்து சேரும். வருமானம் அதிகரிக்கும். குலதெய்வ அருள் கிடைக்கும். உடலில் இருந்த சங்கடம் விலகும். வாழ்க்கைத்துணை உங்களின் ஆலோசனையின்படி செயல்படும் நிலை உண்டாகும். குடும்பத்தை வழிநடத்திச் செல்வதில் உங்கள் பங்கு அதிகரிக்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு புதிய சொத்து வாங்குவீர்கள். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். அவர்களின் கல்வி, வேலை, திருமணம், முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவீர்கள். மறைமுக எதிரிகள் காணாமல் போவர்.கல்விபடிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதால் தேர்வில் நீங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெற முடியும். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படுவது கூடுதல் நன்மை தரும். உடல்நிலைநோயில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பரம்பரை நோய், தொற்று நோய்களால் சங்கடம் உண்டாகும் என்றாலும் சிகிச்சையால் குணமாகும். நீண்டநாள் நோய்கள் நவீன சிகிச்சையால் குறைய ஆரம்பிக்கும். நடைபயிற்சி, யோகா போன்றவற்றால் நோய் கட்டுப்பாட்டிற்குள் வரும்.குடும்பம்திட்டமிட்டு செயல்படுவீர்கள். பெரியோரின் ஆதரவு அதிகரிக்கும். குலதெய்வ வழிபாட்டில் சிலர் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த வரவுகளால் சங்கடம் விலக ஆரம்பிக்கும். துணிந்து செயல்பட்டு குடும்பத்தில் இருந்த பிரச்னைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். உங்கள் வசதிக்கேற்ப வீடு கட்டி அதில் குடியேறுவீர்கள். தம்பதியர் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வீர்கள். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். பிள்ளைகளை மேற்கல்விக்காக வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.பரிகாரம்ராமேஸ்வரம் ராமநாத சுவாமியை தரிசித்து வர நன்மை அதிகரிக்கும்.சுவாதி; நெருக்கடி நீங்கும்ராகு, சுக்கிரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு பிறக்கப் போகும் 2024 வருடத்தில் குருவின் பார்வையும், ராகுவின் சஞ்சாரமும் உங்கள் முயற்சிகளை வெற்றியடைய வைக்கும். இதுவரையில் இருந்த பிரச்னைகளை விலக வைக்கும். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாக்கும். பொருளாதார நிலை சீராகும். வியாபாரத்தில் இருந்த சங்கடம் முடிவிற்கு வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். பிறரால் செய்ய முடியாத செயல்களை இக்காலத்தில் நீங்கள் செய்து முடிப்பீர்கள். சமூகத்தில் செல்வாக்கு உயரும்.சனி சஞ்சாரம்சனி பகவான் பஞ்சம ஸ்தானத்திலேயே ஆட்சியாக சஞ்சரிப்பதால் ஜன.1 - பிப்.15 காலத்தில் தாரா பலனாலும், அஸ்தமன, வக்கிர காலங்களிலும் 5ம் இட சனியின் பலன்கள் மாறுபடும். முயற்சிகள் வெற்றியாகும். சங்கடத்தில் இருந்து பாதுகாப்பு உண்டாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பூர்வீக சொத்துகள் கைக்கு வந்து சேரும்.ராகு - கேது சஞ்சாரம்ஆண்டு முழுதும் ராகு 6ம் இடத்திலும், கேது 12ம் இடத்திலும் சஞ்சரிக்கும் நிலையில் முயற்சிகள் வெற்றியாகும். எதிர்ப்பு விலகும். பொருளாதாரம் உயரும். வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகுவர். வழக்கு வெற்றியாகும். உடல்நிலை சீராகும். உங்கள் சங்கடங்கள் ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். எதிர்பார்த்த வருமானம் வரும். வியாபாரம், தொழிலில் லாபம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவியை அடைவர். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும்.குரு சஞ்சாரம்ஏப். 30 வரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் சங்கடம் எல்லாம் விலகும். செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடந்தேறும். வருமானத்தில் இருந்த தடை விலகும். வரவு அதிகரிக்கும். சொத்து சேர்க்கை உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். புதிய பொறுப்பு வந்து சேரும். மே 1 முதல் அஷ்டம ஸ்தான குருவால் நெருக்கடி அதிகரிக்கும். முயற்சிகள் இழுபறியாகும். எதிர்பார்த்த வரவு இருக்காது. சூரிய சஞ்சாரம்ஜன.1 - 14 மற்றும் மார்ச் 14 - ஏப்.13 வரையிலும், ஜூலை 17 - செப் 16 வரையிலும் சூரிய பகவானின் சஞ்சாரத்தால் சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். புதிய முயற்சி பலிதமாகும். வழக்கில் சிக்கி இருந்தவர்கள் விடுதலை அடைவீர்கள். பணியில் இருந்த பிரச்னைகள் விலகும். எதிரிகள் விலகிச் செல்வர். ஆரோக்கியம் சீராகும். செல்வாக்கு உயரும். வேலைத் தேடி வந்தவர்களுக்கு தகுதியான வேலை அமையும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு, விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் ஏற்படும். இக்காலம் யோக காலமாக இருக்கும்.பொதுப்பலன்2024ம் ஆண்டில்  நீண்ட நாள் பிரச்னைகளில் இருந்து தீர்வு உண்டாக்கும். பிள்ளைகளின் வழியில் சங்கடம் ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் சக்தி உண்டாகும். உங்கள் தேவைகள் தக்க சமயத்தில் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடந்தேறும். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது கவனமாக செயல்படுவது நல்லது. பூர்வீக சொத்து விவகாரத்தில் பிரச்னைகள் தோன்றினாலும் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்பு விலகும். புதிய பொறுப்பு, பதவி வந்து சேரும். வருமானம் உயரும். வெளிநாட்டுக்கு செல்லும் முயற்சி வெற்றி பெறும். ஆதாயம் அதிகரிக்கும்தொழில்பூர்வ புண்ணியாதிபதியான சனி ஆட்சியாக சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் சிறப்படையும். சினிமா, சின்னத்திரை, நவீன சாதனங்கள், டிராவல்ஸ், கம்ப்யூட்டர், கமிஷன் ஏஜன்சி, குடிநீர், ஆட்டோமொபைல்ஸ்,  போன்ற தொழில் துறைகளில் முன்னேற்றம் உண்டாகும்.பணியாளர்கள்உழைப்பு அதிகரித்தாலும்  உங்கள் செல்வாக்கு உயரும். மேலதிகாரிகள் கடுமையாக நடந்து கொள்வர். என்றாலும், உங்களுடைய புத்திசாலித்தனத்தினால் நினைத்ததை சாதிப்பீர்கள். பதவி உயர்வு, இடமாற்றம் போன்ற எதிர்பார்ப்பு நிறைவேறும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். பெண்கள்சுயதொழில் செய்பவர்கள் லாபம் காண முடியும். வேலைவாய்ப்பை எதிர்பார்த்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். பணியாளர்களின் விருப்பம் நிறைவேறும். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு வரன் வந்து சேரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் உண்டாகும். செல்வாக்கு அதிகரிக்கும்.கல்விஇக்காலத்தில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். ஆசிரியர்களின் ஆலோசனையால் தேர்வில் உங்களால் வெற்றிபெற முடியும்.உடல்நிலைவேலைப்பளுவின் காரணமாக உடலில் சோர்வு, சங்கடம் ஏற்படும். அல்சர், நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, பரம்பரை நோய்களால் சிலருக்கு சங்கடம் அதிகரிக்கும். என்றாலும் மருத்துவ சிகிச்சையால் அவற்றிலிருந்து விடுபடுவீர்கள்.குடும்பம்எதிர்பார்த்த வரவால் குடும்பத்தில் இருந்த சங்கடம் மறையும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பொருளாதாரம் மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். புதிய வீட்டிற்கு குடியேறுவீர்கள். உறவினர் ஆதரவு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். தம்பதியர் ஒற்றுமை உண்டாகும். இக்காலத்தில் பொறுப்பை உணர்ந்து செயல்படுவீர்கள். குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும்.பரிகாரம்சனீஸ்வரர் பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட சங்கடம் விலகும்.விசாகம்; விருப்பம் நிறைவேறும்குருவின் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும் உள்ளனர்.2024 ஆண்டில், விசாகம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு யோக காலமாக இருக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். சுபநிகழ்வுகள் நடந்தேறும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். சிலர் புதிய வீடு கட்டி குடியேறுவீர்கள். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். வருமானம் பலவழியிலும் அதிகரிக்கும். வேலைக்காக முயற்சித்தவர்களின் விருப்பம் நிறைவேறும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு உடல்நிலையில் சங்கடம் தோன்றும்.குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும். பிள்ளைகளால் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். இருந்தாலும் எதிர்பார்த்த வரவு இருக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள்.சனி சஞ்சாரம்கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி ஜன 1 -  பிப் 15 வரையிலும், மார்ச் 16 - ஜூன் 19 மற்றும் நவ 4 - டிச. 31 வரையிலும் தாரா பலனாலும், அஸ்தமன, வக்கிர நிலைகளிலும் 4 பாதங்களில் பிறந்தவர்களையும் சங்கடத்தில் இருந்து பாதுகாப்பார். முயற்சியை வெற்றியாக்குவார். பணவரவில் இருந்த தடைகளை அகற்றுவார். யோக பலன்களை வழங்கி வாழ்வில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்கள் தன் உடல்நிலையில் கவனமாக இருக்க வேண்டும். தாயின் உடல் நிலையில் சங்கடங்களை சந்திக்க நேரும். ஆசைகள் காரணமாக அலைச்சல் உண்டாகும் என்பதால் எல்லா விஷயங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்ல வேண்டும். பிள்ளைகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து வரவேண்டும். ராகு - கேது சஞ்சாரம்ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 6ம் இட ராகு நன்மையை அதிகரிப்பார். வழக்கில் வெற்றி தருவார். உடல்நலக்குறைவை போக்குவார். எதிர்ப்பு விலகும். 4ம் பாதத்தினருக்கு 11 ம் இட கேது, தொட்டதில் எல்லாம் வெற்றி கிடைக்கும். பட்டம், பதவி, செல்வாக்கு என்று அதிகரிப்பார். பணம் பல வழிகளிலும் வரும். செல்வாக்கு உயரும். சொத்து சேர்க்கை அதிகரிக்கும்.குரு சஞ்சாரம்1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை ஏழாமிடத்திலும், மே 1 முதல் அஷ்டமத்திலும் சஞ்சரிக்க இருக்கிறார் குரு. சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். வாழ்வில் முன்னேற்றம் தருவார். புதிய வீடு, வாகனம் என்ற கனவுகளை நினைவாக்குவார். பொன் பொருள் சேர்க்கை தருவார். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வை வழங்குவார். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கை அதிகரிப்பார். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே1 முதல் நினைத்த காரியத்தில் வெற்றி, வேலை தேடுவோருக்கு  தகுதியான வேலை, கன்னியருக்கு திருமண யோகத்தை தருவார். பணவரவை அதிகரிப்பார். குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவார்.சூரிய சஞ்சாரம்1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜன.1 - 14 மற்றும் மார்ச் 14 - ஏப்.13 வரையிலும், ஜூலை 17 - செப்.16 வரையிலும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜன.15 - பிப்.12 மற்றும் ஏப்.14 - மே 13 வரையிலும் ஆக.17 - அக்.17 வரையிலும் சூரிய பகவானின் சஞ்சார நிலைகளால் வாழ்வில்  எதிர்பார்த்த முன்னேற்றம் அடைவீர்கள். குடும்பம், தொழிலில் இருந்த சங்கடம் விலகும். செல்வாக்கு உயரும். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்பு நீங்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகும். பொருளாதார நிலை உயரும். பொதுவாழ்வில் ஈடுபடுவோருக்கு செல்வாக்கு அதிகரிக்கும். இக்காலம் யோக காலமாக இருக்கும்.பொதுப்பலன்2024ல் ராகு - கேது சஞ்சாரம், குருவின் சஞ்சாரம், 120 நாட்கள் சூரிய பகவானால் நன்மை உண்டாகும். எதிர்பார்ப்பை பூர்த்தியாக்கும். வாழ்வில் முன்னேற்றத்தை உண்டாக்கும். சங்கடங்களில் இருந்து உங்களை விடுவிக்கும். தொழில், வியாபாரத்தில் ஆதாயத்தை ஏற்படுத்தும். பொன், பொருள், பூமி, வாகனச் சேர்க்கை உண்டாகும். புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். தொழில்தொழிலில் போட்டிகள் பிரச்னைகள் இருந்தாலும் அதை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். வருமானம் தரும் தொழில்களை மேற்கொள்வீர்கள். முயற்சியனைத்தும் லாபமாகும். உங்களை மட்டுமே நம்பி நடத்தப்படும் தொழிலில் ஆதாயம் உண்டாகும்.பணியாளர்கள்அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். உழைப்பு அதிகரிக்கும் என்றாலும் அதன் காரணமாக செல்வாக்கும் உயரும். சிலருக்கு விரும்பிய இட மாற்றம், ஊர் மாற்றம் ஏற்படும். தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கும் செல்வாக்கு அதிகரிக்கும். உடன் பணிபுரிவர்கள் ஆதரவாக இருப்பர். சிலருக்கு புதிய நிர்வாக பொறுப்பு வந்து சேரும்.பெண்கள்அரசுப் பணியாளர்களுக்கு புதிய பொறுப்பு வந்து சேரும். சுயதொழில் செய்பவர்கள் திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பர். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். பொறுப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். கணவர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார். சேமிப்பு அதிகரிக்கும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். செல்வாக்கு உயரும்.கல்விபடிப்பில் சில தடைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. மற்ற விஷயத்தில் கவனம் செலுத்தாமல் ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்று செயல்பட்டால் பொதுத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.உடல்நிலைநோயால் சங்கடப்பட்ட நிலை மாறும். குணமாகாது என்று நீங்கள் நினைத்த நோய்களும் இக்காலத்தில் மருத்துவத்திற்கு கட்டுப்படும். பரம்பரை நோயால் சங்கடப்பட்டு வந்தவர்களுக்கு நவீன மருத்துவத்தால் தீர்வு கிடைக்கும். மூச்சுத்திணறல் இருப்பவர்கள் தொடர்ந்து உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பம்நீண்ட நாள் கனவு நிறைவேறும். தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி, திருமண முயற்சியில் நல்ல முடிவு கிடைக்கும். சிலருக்கு சொத்து சேர்க்கை உண்டாகும். பொன் பொருள் சேரும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணி தொடரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சிலர் புதிய வீடு கட்டி குடியேறுவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.பரிகாரம்; ஆலங்குடி குருபகவானை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும்.

விசாகம்; விருப்பம் நிறைவேறும்குருவின் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும் உள்ளனர்.2024 ஆண்டில், விசாகம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு யோக காலமாக இருக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். சுபநிகழ்வுகள் நடந்தேறும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். சிலர் புதிய வீடு கட்டி குடியேறுவீர்கள். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். வருமானம் பலவழியிலும் அதிகரிக்கும். வேலைக்காக முயற்சித்தவர்களின் விருப்பம் நிறைவேறும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு உடல்நிலையில் சங்கடம் தோன்றும்.குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும். பிள்ளைகளால் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். இருந்தாலும் எதிர்பார்த்த வரவு இருக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள்.சனி சஞ்சாரம்கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி ஜன 1 -  பிப் 15 வரையிலும், மார்ச் 16 - ஜூன் 19 மற்றும் நவ 4 - டிச. 31 வரையிலும் தாரா பலனாலும், அஸ்தமன, வக்கிர நிலைகளிலும் 4 பாதங்களில் பிறந்தவர்களையும் சங்கடத்தில் இருந்து பாதுகாப்பார். முயற்சியை வெற்றியாக்குவார். பணவரவில் இருந்த தடைகளை அகற்றுவார். யோக பலன்களை வழங்கி வாழ்வில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்கள் தன் உடல்நிலையில் கவனமாக இருக்க வேண்டும். தாயின் உடல் நிலையில் சங்கடங்களை சந்திக்க நேரும். ஆசைகள் காரணமாக அலைச்சல் உண்டாகும் என்பதால் எல்லா விஷயங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்ல வேண்டும். பிள்ளைகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து வரவேண்டும். ராகு - கேது சஞ்சாரம்ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 6ம் இட ராகு நன்மையை அதிகரிப்பார். வழக்கில் வெற்றி தருவார். உடல்நலக்குறைவை போக்குவார். எதிர்ப்பு விலகும். 4ம் பாதத்தினருக்கு 11 ம் இட கேது, தொட்டதில் எல்லாம் வெற்றி கிடைக்கும். பட்டம், பதவி, செல்வாக்கு என்று அதிகரிப்பார். பணம் பல வழிகளிலும் வரும். செல்வாக்கு உயரும். சொத்து சேர்க்கை அதிகரிக்கும்.குரு சஞ்சாரம்1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை ஏழாமிடத்திலும், மே 1 முதல் அஷ்டமத்திலும் சஞ்சரிக்க இருக்கிறார் குரு. சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். வாழ்வில் முன்னேற்றம் தருவார். புதிய வீடு, வாகனம் என்ற கனவுகளை நினைவாக்குவார். பொன் பொருள் சேர்க்கை தருவார். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வை வழங்குவார். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கை அதிகரிப்பார். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே1 முதல் நினைத்த காரியத்தில் வெற்றி, வேலை தேடுவோருக்கு  தகுதியான வேலை, கன்னியருக்கு திருமண யோகத்தை தருவார். பணவரவை அதிகரிப்பார். குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவார்.சூரிய சஞ்சாரம்1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜன.1 - 14 மற்றும் மார்ச் 14 - ஏப்.13 வரையிலும், ஜூலை 17 - செப்.16 வரையிலும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜன.15 - பிப்.12 மற்றும் ஏப்.14 - மே 13 வரையிலும் ஆக.17 - அக்.17 வரையிலும் சூரிய பகவானின் சஞ்சார நிலைகளால் வாழ்வில்  எதிர்பார்த்த முன்னேற்றம் அடைவீர்கள். குடும்பம், தொழிலில் இருந்த சங்கடம் விலகும். செல்வாக்கு உயரும். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்பு நீங்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகும். பொருளாதார நிலை உயரும். பொதுவாழ்வில் ஈடுபடுவோருக்கு செல்வாக்கு அதிகரிக்கும். இக்காலம் யோக காலமாக இருக்கும்.பொதுப்பலன்2024ல் ராகு - கேது சஞ்சாரம், குருவின் சஞ்சாரம், 120 நாட்கள் சூரிய பகவானால் நன்மை உண்டாகும். எதிர்பார்ப்பை பூர்த்தியாக்கும். வாழ்வில் முன்னேற்றத்தை உண்டாக்கும். சங்கடங்களில் இருந்து உங்களை விடுவிக்கும். தொழில், வியாபாரத்தில் ஆதாயத்தை ஏற்படுத்தும். பொன், பொருள், பூமி, வாகனச் சேர்க்கை உண்டாகும். புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். தொழில்தொழிலில் போட்டிகள் பிரச்னைகள் இருந்தாலும் அதை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். வருமானம் தரும் தொழில்களை மேற்கொள்வீர்கள். முயற்சியனைத்தும் லாபமாகும். உங்களை மட்டுமே நம்பி நடத்தப்படும் தொழிலில் ஆதாயம் உண்டாகும்.பணியாளர்கள்அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். உழைப்பு அதிகரிக்கும் என்றாலும் அதன் காரணமாக செல்வாக்கும் உயரும். சிலருக்கு விரும்பிய இட மாற்றம், ஊர் மாற்றம் ஏற்படும். தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கும் செல்வாக்கு அதிகரிக்கும். உடன் பணிபுரிவர்கள் ஆதரவாக இருப்பர். சிலருக்கு புதிய நிர்வாக பொறுப்பு வந்து சேரும்.பெண்கள்அரசுப் பணியாளர்களுக்கு புதிய பொறுப்பு வந்து சேரும். சுயதொழில் செய்பவர்கள் திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பர். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். பொறுப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். கணவர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார். சேமிப்பு அதிகரிக்கும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். செல்வாக்கு உயரும்.கல்விபடிப்பில் சில தடைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. மற்ற விஷயத்தில் கவனம் செலுத்தாமல் ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்று செயல்பட்டால் பொதுத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.உடல்நிலைநோயால் சங்கடப்பட்ட நிலை மாறும். குணமாகாது என்று நீங்கள் நினைத்த நோய்களும் இக்காலத்தில் மருத்துவத்திற்கு கட்டுப்படும். பரம்பரை நோயால் சங்கடப்பட்டு வந்தவர்களுக்கு நவீன மருத்துவத்தால் தீர்வு கிடைக்கும். மூச்சுத்திணறல் இருப்பவர்கள் தொடர்ந்து உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பம்நீண்ட நாள் கனவு நிறைவேறும். தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி, திருமண முயற்சியில் நல்ல முடிவு கிடைக்கும். சிலருக்கு சொத்து சேர்க்கை உண்டாகும். பொன் பொருள் சேரும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணி தொடரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சிலர் புதிய வீடு கட்டி குடியேறுவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.பரிகாரம்; ஆலங்குடி குருபகவானை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும்.அனுஷம்: லாபம் அதிகரிக்கும்சனியை நட்சத்திர நாதனாகவும்,  செவ்வாயை ராசிநாதனாகவும் கொண்ட உங்களுக்கு,2024 வருடத்தில் கேது லாப ஸ்தான சஞ்சாரமும், குருவின் பார்வைகளும் முயற்சி எல்லாம் வெற்றியாக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்ப பிரச்னை மறையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பநலனில் அக்கறை அதிகரிக்கும். புதிய சொத்து, வீடு, வாகனச் சேர்க்கை உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். சமூகத்தில் செல்வாக்கு உயரும். உடல்நலனில் கவனம் தேவை. பழக்க வழக்கங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தாயாரின் உடலில் சில சங்கடம் ஏற்படலாம். சிகிச்சை தேவைப்படும்.சனி சஞ்சாரம்மார்ச் 16 - ஜூன் 19 வரையிலும், நவ. 4 - ஜன. 31 வரையிலும் தாரா பலனாலும், அஸ்தமனம், வக்கிர காலங்களிலும் அர்த்தாஷ்டமச் சனியின் பாதிப்பில் இருந்து  விடுதலை உண்டாகும். உங்கள் வழக்கமான முயற்சி தடை இல்லாமல் நிறைவேறும். திட்டமிட்ட காரியங்களில் லாபம் உண்டாகும். பிரச்னைகளை எல்லாம் சமாளிக்கும் சக்தி ஏற்படும். நீங்களே எதிர்பார்க்காத அதிர்ஷ்ட பலன்கள் உண்டாகும்.ராகு - கேது சஞ்சாரம்ராகு பூர்வ புண்ணியத்திலும், கேது லாப ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் நிலையில் லாப ஸ்தான கேதுவால் சங்கடம், நெருக்கடிகள் காணாமல் போகும். முயற்சிகள் யாவும் வெற்றியாகும். தொழிலில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த வசதியான நிலை உண்டாகும். வீடு, வாகனம், பொன், பொருள், அந்தஸ்தை அடைவீர்கள். ராகுவின் சஞ்சார நிலையால் பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் இடைவெளி உண்டாகும்.குரு சஞ்சாரம்ஏப்.30 வரை 6 ல் சஞ்சரிக்கும் குருவால் உடல்நிலையில் சங்கடம் ஏற்படும். பணவரவிலும் தடை உண்டாகும். எதிர்ப்பு அதிகரிக்கும். அனைவரிடமும் எச்சரிக்கையுடன் பழகினால் சங்கடங்களில் இருந்து தப்ப முடியும். மே 1 முதல் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் செல்வாக்கு உயரும். பணவரவு அதிகரிக்கும். முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடந்தேறும். அலுவலகத்தில் பிரச்னைகள் விலகி எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும்.சூரிய சஞ்சாரம்ஜன 15 - பிப்.12 மற்றும் ஏப்.14 - மே 13 வரையிலும், ஆக. 17 - அக்.17 காலத்திலும் சூரிய பகவானின் 3,6,10,11 ம் இட சஞ்சார நிலைகளால் செல்வாக்கு உயரும். துணிச்சலாக செயல்படுவீர்கள். எதிர்ப்பு விலகும். வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகிச் செல்வர். தொழிலில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். லாபம் அதிகரிக்கும். முயற்சி யாவும் வெற்றியாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். அரசு பணியாளர், அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். புதிய பொறுப்பு வந்து சேரும்.பொதுப்பலன்2024 ல் நான்காமிட சனியால் அலைச்சல் அதிகரித்தாலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். குலதெய்வ அருளால் செயல்கள் வெற்றியாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். அரசுவழி முயற்சிகளில் வெற்றி உண்டாகும். நீண்டநாள் பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். அரசியல்வாதிகள் கலைஞர்களுக்கு யோகமான காலமாக இருக்கும். எதிர்பார்த்த வருமானம் இருக்கும். கடன்கள் அடைபடும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணம் நடக்கும்.தொழில்தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புதிய கிளைகள் தொடங்கி வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும் உங்கள் முயற்சி வெற்றியாகும். அரசாங்க ரீதியாக எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். ரியல் எஸ்டேட், மெடிக்கல், ஓட்டல், விவசாயம், பில்டர்ஸ், கமிஷன் வியாபாரம், இயந்திர தொழிற்சாலைகள், ஆன்லைன் தொழில்களில் ஆதாயம் அதிகரிக்கும்.பணியாளர்கள்பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும் உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். மேலதிகாரிகள், முதலாளிகள் ஆதரவாக இருப்பர். எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும்.பெண்கள்குருபகவானின் பார்வைகளாலும், மே 1 முதல் ஏழாமிடத்தில் குரு சஞ்சரிப்பதாலும் வாழ்க்கைத் துணையின் அன்பு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். உறவினருடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வேலைத் தேடுவோருக்கு தகுதியான வேலை கிடைக்கும். அரசு, தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம், சலுகை கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். திருமண வயதினருக்கு மாங்கல்ய பாக்கியம் உண்டாகும். கணவரை இழந்தவர்களுக்கு மறுமணம் நடந்தேறும். கல்விபடிப்பில் அக்கறை அதிகரிக்கும். ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பீர்கள். விரும்பிய கல்லுாரியில் மேற்படிப்பிற்கு இடம் கிடைக்கும்.உடல்நிலைஉடல்நிலை ஒரு நேரம் இருப்பது போல் மறுநேரம் இல்லாமல் போகும். சிலருக்கு தொற்று நோய், பரம்பரை நோய் என பாதிப்பு ஏற்பட்டு மருத்துவரை நாடும் நிலை ஏற்படும். இக்காலத்தில் ஆரோக்கியத்தில் அதிகபட்ச கவனத்தை செலுத்த வேண்டியதாக இருக்கும்.குடும்பம்அர்த்தாஷ்டமச் சனியின் காலம் என்றாலும், இக்காலத்தில் ராகு - கேதுவின் சஞ்சாரமும், குருவின் ஸ்தான, பார்வைகளின் பலன்களும் முயற்சிகளை வெற்றியாக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும் எதிரி தொல்லை விலகும். தொழில் வளர்ச்சியால் பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வேலையில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். புதிய வீடு, வாகனம், நகை என உங்கள் விருப்பம் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.பரிகாரம்: குச்சனுார் சனீஸ்வரரை தரிசித்து நல்லெண்ணெய் தானம் செய்ய சங்கடம் தீரும்.கேட்டை; வாழ்வில் முன்னேற்றம்புதன், செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2024 வருடத்தில் குருபகவான் பார்வைகளும், மே 1 முதல் குருவின் ஏழாமிட சஞ்சார நிலையும், லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவின் அருளும், உங்கள் நிலையில் மாற்றத்தை உண்டாக்கும். சங்கடத்தை எல்லாம் விலக்கி வைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். சிலர் புதிய தொழில் தொடங்கி முன்னேற்றம் காண்பர். அரசு ஊழியர்களுக்கு அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வருமானம் பல வழியிலும் வரும். எல்லாவற்றையும் எதிர்கொண்டு சமாளிக்கும் அளவிற்கு உங்கள் நிலை மாறும். அலைச்சல் அதிகரிக்கும் என்பதால் உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. தாயாரின் உடல் நிலையிலும் சங்கடம் ஏற்படலாம். சனி சஞ்சாரம்அர்த்தாஷ்டமச் சனியாக சனி 4ல் சஞ்சரிக்கும் நிலையில் ஜன 1 - பிப் 15 வரையிலும், அஸ்தமனம், வக்கிர காலங்களிலும் பாதிப்பில் இருந்து விடுபடுவீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி யாவும் வெற்றி பெறும். எதிர்பார்ப்பு நிறைவேறும். நீண்ட நாளாக இருந்த சங்கடம் முடிவிற்கு வரும். பண வரவு அதிகரிக்கும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். பணியின் காரணமாக வெளியூரில்  வசிக்கும் நிலை ஏற்படலாம். புதிய பொறுப்பு சிலருக்கு கிடைக்கும். ராகு - கேது சஞ்சாரம்பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகுவும், லாப ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நிலையில் கேதுவால் அடைபடாத கடன்களை அடைப்பீர்கள். வழக்குகளில் நெருக்கடி விலகும். பணவரவு அதிகரிக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். புதிய பொறுப்பு, பதவி, அந்தஸ்து என எதிர்பார்ப்பு நிறைவேறும். திருமணமாகி வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணம் நடந்தேறும்.குரு சஞ்சாரம்ஏப்.30 வரை 6ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் எதிர்ப்பு அதிகரிக்கும். உடல்நிலையில் சங்கடம் உண்டாகும். வீண் பிரச்னைகள் உங்களைத் தேடி வரும் என்றாலும், குருவின் பார்வையால் தொழில் வளர்ச்சி ஆகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்களின் பிரச்னை தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மே 1 முதல் 7 ல் சஞ்சரிக்கும் குருவால் எதிர்பார்ப்பு நிறைவேறும். கனவு பூர்த்தியாகும். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். முயற்சி யாவும் வெற்றியாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். சூரிய சஞ்சாரம்ஜன15 - பிப் 12 மற்றும் ஏப் 14 - மே13 வரையிலும், ஆக.17 - அக்.17வரையிலும் சூரியனின் சஞ்சார நிலைகளால் வாழ்வில் பிரகாசமான நிலை உண்டாகும். பிரச்னைகள் விலகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். எதிர்ப்பு விலகும். ஆரோக்கியம் சீராகும். அரசுவழி முயற்சியில் ஆதாயம் உண்டாகும். சொத்து சேர்க்கை ஏற்படும். லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும்.பொதுப்பலன்2024ல் உழைப்பு அதிகரித்தாலும் அதற்கேற்ற லாபம் உண்டாகும். சூழ்நிலையைப் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். உங்கள் முன்னேற்றத்தில் தனிக்கவனம் செலுத்துவீர்கள். குடும்ப நிலையை உயர்த்தும் முயற்சியை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் வழக்கில் இருந்து விடுபடுவீர்கள். வரவேண்டிய பணம் வரும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள், கலைஞர்கள் இக்காலத்தில் எதிர்பார்த்த நன்மை அடைய முடியும். புதிய பொறுப்பு ஒப்பந்தம் வந்து சேரும். உங்கள் மதிப்பு அதிகரிக்கும்.தொழில்சுய தொழில் செய்பவர்களின் முயற்சி வெற்றியாகும். அரசு வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வருமானம் உயரும். ஷேர் மூலம் அதிக அளவு ஆதாயம் உண்டாகும். பப்ளிகேஷன், பத்திரப்பதிவு, விவசாயம், இயந்திர நிறுவனம், ஆன்லைன் வியாபாரங்களில் ஆதாயம் அதிகரிக்கும்.பணியாளர்கள்தனியார் துறை பணியாளர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும் என்றாலும் எதிர்பார்த்த ஊதியம் கிடைக்கும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். இடமாற்றம் உண்டாகும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். பெண்கள்கல்வி, வேலை, திருமணம் என எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்புண்டாகும். நிறைய வேலைகளை இழுத்துப் போட்டு செய்வீர்கள். அதன் காரணமாக உடல்பாதிப்பு உண்டாகும். சுயதொழில் புரிவோருக்கு உழைப்பும் முதலீடும் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு உங்களுக்கு பலத்தை கொடுக்கும். கணவரை அனுசரித்துச் செல்வதால் பிரச்னை இல்லாமல் போகும். முதல் திருமணத்தில் முறிவு ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் திருமணம் நடக்கும். கல்விபடிப்பில் கவனம் செல்லும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்று பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் பெறுவீர்கள்.உடல்நிலை4ம் இட சனியால் உடல் பாதிப்புண்டாகும். என்றாலும் மற்ற கிரகங்களின் சஞ்சார நிலையால்  உங்களுக்கு நிவாரணம் உண்டாகும். வாகனப் பயணத்திலும், இயந்திரப் பணியிலும் எச்சரிக்கை அவசியம். பரம்பரை நோய், ரகசிய நோயால் சங்கடம் உண்டாக வாய்ப்பிருப்பதால் உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம்.குடும்பம்கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். உறவினர் வழியில் இருந்த பிரச்னைகள் தீரும். பொருளாதாரநிலை உயரும். வீடு கட்டுதல், தொழில் தொடங்குதல் போன்றவற்றில் தடைபட்ட முயற்சி வெற்றியாகும். குடும்பத்திற்கு தேவையான வசதிகளை உருவாக்கிக் கொள்வீர்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். சேமிப்பு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். பரிகாரம்; குலதெய்வத்தை அடிக்கடி வழிபட நன்மைகள் அதிகரிக்கும் சங்கடம் விலகும்.

மூலம்; லாபமோ லாபம்கேது, குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, 2024 வருடத்தில் தொழில் லாபமோ லாபம் என பணம் கொழிக்கும். உடல்நிலை சீராகும். வேலை தேடியவர்களுக்கு வேலை அமையும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம்  உண்டாகும். எதிரிகளை அடக்கும் ஆற்றல் உண்டாகும். சமூகத்தில் கவுரவம் அதிகரிக்கும். வீட்டில் சுபச்செலவு கூடும். சிலருக்கு பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும். சனி சஞ்சாரம்சனி பகவான் ராசிக்கு 3ம் இடத்தில் சஞ்சரிப்பதால் செயல்கள் யாவும் வெற்றியாகும். சமூகத்தில் செல்வாக்கு உயரும். உடல்நிலை மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். சிரமங்கள் யாவும் நீங்கும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். இடம், பூமி, வாகனம் ஆகிய எண்ணம் பூர்த்தியாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பும் பதவியும் வந்து சேரும். கலைஞர்களுக்கு இக்காலம் யோகமான. காலமாக இருக்கும்.ராகு - கேது சஞ்சாரம்சுக ஸ்தானமான 4ம் இடத்தில் ராகுவும், ஜீவன ஸ்தானமான 10ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நிலையில் வெளிநாட்டு தொடர்பு ஆதாயம் தரும். தொழிலில் முழு கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் சில சங்கடம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர். உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். மற்றவர்களை வழிநடத்தக் கூடியவர்களாக இருப்பீர்கள்.குரு சஞ்சாரம்ஏப்.30 வரை 5ம் இட குருவால் செல்வாக்கு உயரும். விருப்பங்கள் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். பணவரவு அதிகரிக்கும். குலதெய்வத்தின் அருளால் உங்கள் நிலை உயரும். சொத்து சேர்க்கை உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு வந்து சேரும் பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். மே1 முதல் 6ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானின் பார்வைகளால் செல்வாக்கு உயரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். சூரிய சஞ்சாரம்பிப்.13 - மார்ச் 13 மற்றும் மே 14 - ஜூன் 14 வரையிலும், செப்.17 - நவ.15 காலத்திலும் சூரிய பகவானின் 3,6,10,11 ம் இட சஞ்சாரம் அத்தனை சங்கடங்களையும் விலக்கி வைக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாக்கும். வியாபாரம், தொழிலில் இருந்த தடை நீங்கி லாபம் கிடைக்கும். அரசு வழியில் ஏற்பட்ட சிக்கல்களை முடிவிற்கு கொண்டு வரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். உடல் நிலையில் இருந்த சங்கடம் விலகும். நினைத்ததை சாதிக்கும் காலமாக இக்காலம் இருக்கும்.பொதுப்பலன்முன்பிருந்த நெருக்கடி, சங்கடம் இனி முழுமையாக விலக ஆரம்பிக்கும். முயற்சி யாவும் வெற்றியாகும். நினைத்ததை சாதிக்கும் நிலை உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறத் தொடங்கும். இழப்பில் இருந்து கற்ற பாடங்களின் வழியாக திறம்பட செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும். துணிச்சலும் தைரியமும் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்வுகள்  நடைபெறும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும்.தொழில்நஷ்டத்தில் இயங்கிய தொழில் இனி லாபத்தில் செல்லும். வருமானம் அதிகரிக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புகள், ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் லாபத்தை கொடுக்கும். பணியாளர்கள்உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை. சிரமப்பட்டு உழைத்தாலும் அதற்குரிய மரியாதை இல்லை என்று ஏங்கிய நிலை மாறும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு உயரும். எதிர்பார்த்த பொறுப்பும், ஊதிய உயர்வும் ஏற்படும். அரசு ஊழியர்களுக்கு யோகமான காலமாக இருக்கும்.பெண்கள்நெருக்கடிகளை சந்தித்து வந்த உங்களுக்கு, இனி யோகமான பலன் உண்டாகும். விருப்பப்படி செயல்பட்டு வாழ்க்கையை நடத்துவீர்கள். பணிபுரியும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்களைப் பாராட்டுவர். புதிய சொத்து வாங்குதல், வாகனம் வாங்குதல் என்ற எண்ணம் நிறைவேறும். இழந்ததை மீட்கும் காலமாக இக்காலம் இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும்.கல்விபடிப்பிலிருந்த தேக்கநிலை மாறும். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்று செயல்பட்டு தேர்வில் வெற்றியடைவீர்கள்.உடல்நிலைஏழரை சனியின் காலம் முடிந்து விட்டதால் இனி நோய்கள் உண்டானாலும் மருத்துவ சிகிச்சை மூலம் விடுதலை அடைவீர்கள்.குடும்பம்குடும்பத்தில் இருந்த சங்கடம் விலக ஆரம்பிக்கும். வருமானம் அதிகரிக்கும். நீண்ட நாளாக தடைபட்ட சுபநிகழ்வுகள் நடந்தேறும். செல்வாக்கு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் சென்று குடும்பத்தை நடத்துவீர்கள். தடைபட்ட முயற்சிகள் இனி வெற்றியாகும். சிலர் புதிய வாகனம், புதிய வீடு என வாங்குவீர்கள். பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்றவற்றில் அக்கறை கொள்வீர்கள். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களின் வேண்டுதல் நிறைவேறும்.பரிகாரம்மயிலை கபாலீஸ்வரரை அர்ச்சனை செய்து வணங்க சங்கடங்கள் தீரும்.பூராடம்; வெற்றி மீது வெற்றிசுக்கிரன் மற்றும் குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, உங்கள் வாழ்வில் கடந்த சில ஆண்டுகளாக சிக்கல், போராட்டம் நிறைந்திருக்கும். இந்த நிலையில் 2024ல் உங்கள் வாழ்வின் திருப்புமுனை உண்டாகப் போகிறது. இத்தனை நாளும் இருந்த சங்கடங்களில் இருந்து முழுமையாக விடுபட்டு நிம்மதி பெறுவீர்கள். வெற்றி மீது வெற்றியை சந்திப்பீர்கள். பொருளாதார நிலையில் மேம்பாடு உண்டாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்களின் செல்வாக்கு உயரும். பதவி உயர்வும் விரும்பிய இடமாற்றமும் ஏற்படும். மனதில் தன்னம்பிக்கை, துணிச்சல் அதிகரிக்கும்.சனி சஞ்சாரம்உங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியால் எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். ஆதாயம் ஏற்படும். பணியில் இருந்த பிரச்னைகள் முழுமையாக முடிவிற்கு வரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். வெளிநாட்டு தொடர்புகளால் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த செல்வாக்கு, அந்தஸ்து ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். புதிய வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது, மற்றவர்களுக்கு உதவி செய்வது என உங்களை பிறர் பாராட்டும்படி இருக்கும்.ராகு- கேது சஞ்சாரம்ராகு மீனத்திலும் கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் உங்கள் விருப்பம் எளிதாக நிறைவேறும். வெளிநாட்டு தொடர்புகளால் ஆதாயம் உண்டாகும். பணியில் வேலைப்பளு அதிகரிக்கும். தொழிலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். செல்வாக்கு உயரும். சிலர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு நிதியுதவி செய்வர். பெரியோரின் ஆசி உண்டாகும். முயற்சிகள் வெற்றியாகும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும்.குரு சஞ்சாரம்ஏப்.30 வரை பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால், குலதெய்வ அருள் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். தடைபட்ட சுபநிகழ்ச்சி நடைபெறும். பணவரவு அதிகரிக்கும். வீடு, நிலம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலை மாறி தேவை அனைத்தும் பூர்த்தியாகும். மே 1 முதல் சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகளால் வாழ்க்கை பிரகாசிக்கும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மற்றவர்களால் மதிக்கும் நிலை ஏற்படும். பணிபுரியும் இடத்தில் மரியாதை அதிகரிக்கும்.சூரிய சஞ்சாரம்பிப்.13 - மார்ச் 13 மற்றும் மே 14 - ஜூன் 14 வரையிலும், செப்.17 - நவ.15 வரையிலும் சூரியனின் சஞ்சார நிலைகளால் வாழ்வில் முன்னேற்றம் அதிகரிக்கும். இதுவரையில் இருந்த சங்கடம் விலக ஆரம்பிக்கும். பணியில் உண்டான பிரச்னைகள் மறையும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். தொழிலை விரிவு செய்வீர்கள். எதிர்பார்த்த வருமானம் வரும். ஆரோக்கியம் உண்டாகும். துணிச்சலாக செயல்படுவீர்கள். எதிர்த்தவர்கள் விலகிச் செல்வர். பொதுப்பலன்போராட்டம், பிரச்னைகள், நிம்மதியின்மை என்ற நிலை இனி மாறும். செயல்கள் யாவும் வெற்றியாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில், வியாபாரத்தில் தடைகள் விலகும். உழைக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். கடந்தகால பிரச்னைகளை அலசி ஆராய்ந்து திட்டமிட்டு செயல்படுவீர்கள். எதிர்பார்த்தவற்றில் ஆதாயம் அதிகரிக்கும். உழைப்பும் முயற்சியும் வெற்றியை உண்டாக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். பொருளாதார நிலை உயரும். பொது வாழ்வில் செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பதவி வந்து சேரும். வெளிநாட்டு தொடர்பு ஆதாயம் தரும். தொழில்தொழிலில் இருந்த தடைகள் விலகும். எதிர்பார்த்த வளர்ச்சியைக் காண முடியும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். புதிய ஒப்பந்தங்கள் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். இயந்திரத்தொழில், விவசாயம், கால்நடை, வாகன உற்பத்தி, வாகன விற்பனை, கலைத்துறை, அச்சுத்தொழில் செய்வோர் அதிக லாபம் காண்பர். பணியாளர்கள்உங்கள் உழைப்பிற்கு இனி மரியாதை கிடைக்கும். வேலை நிரந்தரமாகும். ஊதிய உயர்வும் புதிய பொறுப்பும் உண்டாகும். முதலாளிகள் உங்களைப் புரிந்து கொண்டு செயல்படுவர். பணியில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும்.பெண்கள்குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். விரும்பிய பொருட்களை வாங்கும் நிலை உண்டாகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். சோர்வுற்ற மனம் இனி சுறுசுறுப்படையும். பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள். வேலைத்தேடிபவர்களுக்கு வேலை அமையும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சுயதொழில் செய்வோரின் விருப்பம் நிறைவேறும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பணிபுரியும் இடங்களில் இருந்த சங்கடம் விலகி செல்வாக்கு தோன்றும். வாழ்க்கைத்துணை இல்லாதவர்களுக்கு மறுமணம் நடைபெறும். கல்விபடிப்பில் ஆர்வம் உண்டாகும். பொதுத்தேர்வு, போட்டித்தேர்வுகளில் ஆசிரியர்களின் ஆலோசனையின்படி செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள்.  உடல்நிலைபரம்பரை, மறைமுகநோய்களால் தொந்தரவு உண்டாகும் என்றாலும் சிகிச்சைக்கு கட்டுப்படும். விபத்துகளில் சிக்கி சிகிச்சை பெற்றவர்கள் இனி எழுந்து நடமாடுவர்.  குடும்பம்குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் இனி விலகும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளின் மீது படிப்பு, வேலை, புதிய தொழில் தொடங்குதல், திருமணம் என கவலைப்பட்டு வந்தவர்களின்  எண்ணங்கள் நிறைவேறும். தம்பதியருக்குள் இருந்த சங்கடம் விலகும். பெரியோரின் ஆதரவு அதிகரிக்கும். சொத்து சேர்க்கை உண்டாகும். கடுமையாக உழைத்து நினைத்ததை சாதிப்பீர்கள். உறவினரிடையே செல்வாக்கு அதிகரிக்கும். சிலர் புதிய வீட்டைக் கட்டி குடியேறுவர். பரிகாரம்; சனிக்கிழமையன்று அனுமனை வழிபடுவதால் நன்மை அதிகரிக்கும்.உத்திராடம்; முயற்சி வெற்றி தரும்சூரியபகவான் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு குரு பகவான் ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சனிபகவான் ராசிநாதனாகவும் உள்ளனர்.பிறக்கும் 2024 ஆண்டு உத்திராடம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 3ம் இட சனி பகவானாலும், 5ம் இட குருபகவானாலும் அதிர்ஷ்டங்களை அள்ளித் தரும். தொழிலில் முன்னேற்றம். வாழ்க்கையில் உண்டான சங்கடங்களில் இருந்து விடுதலை. நினைத்த காரியங்களில் வெற்றி பெறும் நிலை. சமுதாயத்தில் அந்தஸ்து, இழந்தவற்றை மீட்டெடுக்கும் ஆற்றல், குடும்பத்தில் சுபநிகழ்வுகள்,  சொத்து சேர்க்கை என ஆதாயப் பலன்களை வழங்கும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 3 ம் இட ராகுவால் அதிர்ஷ்ட நிலை உண்டாகும் வெளிநாட்டு தொடர்பு, ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் ஆதாயத்தை உண்டாக்கும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். சிலர் தொழிலை வளர்ச்சி செய்வீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். ஜென்ம சனி முடிந்திருப்பதால் சங்கடம் குறைய ஆரம்பிக்கும்.சனி சஞ்சாரம்கும்பத்தில் சஞ்சரிக்கும் சனிபகவானால், 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சி யாவும் வெற்றியாகும். கடந்த கால நெருக்கடி விலகும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 16  -  ஜூன் 19, நவ.4 - டிச.31 வரையிலும் அதிர்ஷ்டகரமான பலன் உண்டாகும். சனிபகவானின் அஸ்தமனம், வக்கிர காலங்களிலும் சங்கடம் விலகும். நினைத்தது நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய இடம், வாகனம் வாங்கும் முயற்சி, தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியாகும்.ராகு - கேது சஞ்சாரம்ஆண்டு முழுவதும் ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 4ம் இட ராகுவும் 10ம் இட கேதுவும் அலைச்சலை அதிகரிப்பர். உடல் நிலையில் சங்கடம் ஏற்படுத்துவர். தொழிலில் தடைகள், வருமானத்தில் இழுபறியை உண்டாக்குவர். முயற்சிகளில் ஏமாற்றத்தை வழங்குவார். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகுவும், பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவும் தொழிலில் முன்னேற்றம், பணியில் உயர்வு, வருமானத்தில் நிறைவு, தொட்டதெல்லாம் வெற்றி என்ற நிலையை உண்டாக்குவர். நன்மைகளை அதிகரிப்பர். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்ளும் நிலையை ஏற்படுத்துவர். அந்தஸ்தையும் செல்வாக்கையும் உயர்த்துவர். குரு சஞ்சாரம்உத்திராடம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏப்.30  வரை பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் வாழ்வில் முன்னேற்றம், பொன், பொருள் சேர்க்கை,  குடும்பத்தில் சுபநிகழ்ச்சி, புதிய தொழில் முயற்சி. பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம், சமூக அந்தஸ்தை வழங்குவார். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 1 முதல் நன்மைகளை அதிகரிப்பார். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு வந்து சேரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை தேடி வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு உண்டாகும். சூரிய சஞ்சாரம்பிப் 13 - மார்ச் 13,  மே 14 - ஜூன் 14 வரையிலும் மற்றும் செப். 17 - நவ.15 வரையிலும் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கும், மார்ச் 14 - ஏப். 13, ஜூன் 15 - ஜூலை 16 வரையிலும் மற்றும் அக்.18 - டிச.15 வரையிலும் 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கும் சூரியனால் நன்மைகள் அதிகரிக்கும். வாழ்வில் எதிர்பார்த்த உயர்வு உண்டாகும். பிரச்னைகள் விலகும். நீண்டகால வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். உடலில் இருந்த பாதிப்பு நீங்கும். ஆரோக்கியம் மேம்படும். ஆற்றல் வெளிப்படும்.பொதுப்பலன்2024 ல் உங்களில் சிலருக்கு சனிபகவானும், குருபகவானும் சாதகமான நிலையில் உள்ளனர். சிலருக்கு ராகு பகவானும், மே1 முதல் குரு பகவானும் அதிர்ஷ்டத்தை வழங்குவர். வாழ்க்கை வளமாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். தொழிலில் வளர்ச்சி உண்டாகும். பணவரவில் இருந்த தடை விலகும். பணியில் இருந்த பிரச்னை நீங்கும். வேலைத் தேடியவர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டாகும். திருமண வயதினருக்கு திருமணம் முடியும். பொன், பொருள், பூமி, வாகனச்சேர்க்கை உண்டாகும்.தொழில்தொழிலில் அக்கறை அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். விவசாயம், இயந்திரத்தொழில், பத்திரிகை, பதிப்பகம், கம்ப்யூட்டர் தொழில்கள், ஸ்டேஷனரி, ஆட்டோ மொபைல்ஸ், பேக்டரி, எலக்ட்ரானிக்ஸ், எக்ஸ்போர்ட், ரியல் எஸ்டேட் போன்றவை வளர்ச்சியடையும்.பணியாளர்கள்தனித்திறன் வெளிப்படும். வேலையில் முழுகவனம் செலுத்துவீர்கள். அதன் காரணமாக முதலாளியின் பாராட்டையும் பெறுவீர்கள். ஊதியம் உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். அரசு ஊழியர்கள் மேலதிகாரியின் பாராட்டிற்கு ஆளாவர். உங்கள் உழைப்பு மதிக்கப்படும். எதிர்பார்த்த பொறுப்பு வந்து சேரும்.பெண்கள்குடும்பத்தில் இருந்த பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவீர்கள். உங்கள் அணுகுமுறையால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். மேற்கல்வி, வேலை வாய்ப்பு, திருமணம் என்ற கனவோடு இருப்பவர்களின் எண்ணம் நிறைவேறும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளி வட்டாரத்திலும், அலுவலகப் பணியிலும் செல்வாக்கு உயரும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.கல்விபடிப்பில் கவனம் அதிகரிக்கும். அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பீர்கள். முயற்சி வெற்றியாகும்.உடல்நிலைஉடல் நிலையில் பிரச்னைகள் தோன்றும். உறக்கம், நிம்மதிக்கு சங்கடம் ஏற்படும். யோகா, தியானத்தால் தீர்வு உண்டாகும். சிலர் அல்சர், வாயு, பரம்பரை நோய்களால் பாதிக்கப்பட  வாய்ப்புண்டு. சிகிச்சை, சரியான உணவு முறையால் நிவாரணம் கிடைக்கும்.குடும்பம்இதற்கு முன்பிருந்த சங்கடம் விலக ஆரம்பிக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் திருமணம், குழந்தை பாக்கியம், புதிய வீட்டில் குடியேறுதல் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வெளிநாட்டு முயற்சிகள் ஆதாயம் தரும். தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக திட்டமிட்டு செயல்படுவீர்கள். சேமிப்பு அதிகரிக்கும். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள்.பரிகாரம்; திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வர், பழநி முருகனை வழிபட்டு வர வாழ்க்கை வளமாகும்.

உத்திராடம்; முயற்சி வெற்றி தரும்சூரியபகவான் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு குரு பகவான் ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சனிபகவான் ராசிநாதனாகவும் உள்ளனர்.பிறக்கும் 2024 ஆண்டு உத்திராடம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 3ம் இட சனி பகவானாலும், 5ம் இட குருபகவானாலும் அதிர்ஷ்டங்களை அள்ளித் தரும். தொழிலில் முன்னேற்றம். வாழ்க்கையில் உண்டான சங்கடங்களில் இருந்து விடுதலை. நினைத்த காரியங்களில் வெற்றி பெறும் நிலை. சமுதாயத்தில் அந்தஸ்து, இழந்தவற்றை மீட்டெடுக்கும் ஆற்றல், குடும்பத்தில் சுபநிகழ்வுகள்,  சொத்து சேர்க்கை என ஆதாயப் பலன்களை வழங்கும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 3 ம் இட ராகுவால் அதிர்ஷ்ட நிலை உண்டாகும் வெளிநாட்டு தொடர்பு, ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் ஆதாயத்தை உண்டாக்கும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். சிலர் தொழிலை வளர்ச்சி செய்வீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். ஜென்ம சனி முடிந்திருப்பதால் சங்கடம் குறைய ஆரம்பிக்கும்.சனி சஞ்சாரம்கும்பத்தில் சஞ்சரிக்கும் சனிபகவானால், 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சி யாவும் வெற்றியாகும். கடந்த கால நெருக்கடி விலகும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 16  -  ஜூன் 19, நவ.4 - டிச.31 வரையிலும் அதிர்ஷ்டகரமான பலன் உண்டாகும். சனிபகவானின் அஸ்தமனம், வக்கிர காலங்களிலும் சங்கடம் விலகும். நினைத்தது நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய இடம், வாகனம் வாங்கும் முயற்சி, தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியாகும்.ராகு - கேது சஞ்சாரம்ஆண்டு முழுவதும் ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 4ம் இட ராகுவும் 10ம் இட கேதுவும் அலைச்சலை அதிகரிப்பர். உடல் நிலையில் சங்கடம் ஏற்படுத்துவர். தொழிலில் தடைகள், வருமானத்தில் இழுபறியை உண்டாக்குவர். முயற்சிகளில் ஏமாற்றத்தை வழங்குவார். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகுவும், பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவும் தொழிலில் முன்னேற்றம், பணியில் உயர்வு, வருமானத்தில் நிறைவு, தொட்டதெல்லாம் வெற்றி என்ற நிலையை உண்டாக்குவர். நன்மைகளை அதிகரிப்பர். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்ளும் நிலையை ஏற்படுத்துவர். அந்தஸ்தையும் செல்வாக்கையும் உயர்த்துவர். குரு சஞ்சாரம்உத்திராடம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏப்.30  வரை பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் வாழ்வில் முன்னேற்றம், பொன், பொருள் சேர்க்கை,  குடும்பத்தில் சுபநிகழ்ச்சி, புதிய தொழில் முயற்சி. பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம், சமூக அந்தஸ்தை வழங்குவார். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 1 முதல் நன்மைகளை அதிகரிப்பார். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு வந்து சேரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை தேடி வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு உண்டாகும். சூரிய சஞ்சாரம்பிப் 13 - மார்ச் 13,  மே 14 - ஜூன் 14 வரையிலும் மற்றும் செப். 17 - நவ.15 வரையிலும் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கும், மார்ச் 14 - ஏப். 13, ஜூன் 15 - ஜூலை 16 வரையிலும் மற்றும் அக்.18 - டிச.15 வரையிலும் 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கும் சூரியனால் நன்மைகள் அதிகரிக்கும். வாழ்வில் எதிர்பார்த்த உயர்வு உண்டாகும். பிரச்னைகள் விலகும். நீண்டகால வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். உடலில் இருந்த பாதிப்பு நீங்கும். ஆரோக்கியம் மேம்படும். ஆற்றல் வெளிப்படும்.பொதுப்பலன்2024 ல் உங்களில் சிலருக்கு சனிபகவானும், குருபகவானும் சாதகமான நிலையில் உள்ளனர். சிலருக்கு ராகு பகவானும், மே1 முதல் குரு பகவானும் அதிர்ஷ்டத்தை வழங்குவர். வாழ்க்கை வளமாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். தொழிலில் வளர்ச்சி உண்டாகும். பணவரவில் இருந்த தடை விலகும். பணியில் இருந்த பிரச்னை நீங்கும். வேலைத் தேடியவர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டாகும். திருமண வயதினருக்கு திருமணம் முடியும். பொன், பொருள், பூமி, வாகனச்சேர்க்கை உண்டாகும்.தொழில்தொழிலில் அக்கறை அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். விவசாயம், இயந்திரத்தொழில், பத்திரிகை, பதிப்பகம், கம்ப்யூட்டர் தொழில்கள், ஸ்டேஷனரி, ஆட்டோ மொபைல்ஸ், பேக்டரி, எலக்ட்ரானிக்ஸ், எக்ஸ்போர்ட், ரியல் எஸ்டேட் போன்றவை வளர்ச்சியடையும்.பணியாளர்கள்தனித்திறன் வெளிப்படும். வேலையில் முழுகவனம் செலுத்துவீர்கள். அதன் காரணமாக முதலாளியின் பாராட்டையும் பெறுவீர்கள். ஊதியம் உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். அரசு ஊழியர்கள் மேலதிகாரியின் பாராட்டிற்கு ஆளாவர். உங்கள் உழைப்பு மதிக்கப்படும். எதிர்பார்த்த பொறுப்பு வந்து சேரும்.பெண்கள்குடும்பத்தில் இருந்த பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவீர்கள். உங்கள் அணுகுமுறையால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். மேற்கல்வி, வேலை வாய்ப்பு, திருமணம் என்ற கனவோடு இருப்பவர்களின் எண்ணம் நிறைவேறும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளி வட்டாரத்திலும், அலுவலகப் பணியிலும் செல்வாக்கு உயரும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.கல்விபடிப்பில் கவனம் அதிகரிக்கும். அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பீர்கள். முயற்சி வெற்றியாகும்.உடல்நிலைஉடல் நிலையில் பிரச்னைகள் தோன்றும். உறக்கம், நிம்மதிக்கு சங்கடம் ஏற்படும். யோகா, தியானத்தால் தீர்வு உண்டாகும். சிலர் அல்சர், வாயு, பரம்பரை நோய்களால் பாதிக்கப்பட  வாய்ப்புண்டு. சிகிச்சை, சரியான உணவு முறையால் நிவாரணம் கிடைக்கும்.குடும்பம்இதற்கு முன்பிருந்த சங்கடம் விலக ஆரம்பிக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் திருமணம், குழந்தை பாக்கியம், புதிய வீட்டில் குடியேறுதல் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வெளிநாட்டு முயற்சிகள் ஆதாயம் தரும். தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக திட்டமிட்டு செயல்படுவீர்கள். சேமிப்பு அதிகரிக்கும். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள்.பரிகாரம்; திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வர், பழநி முருகனை வழிபட்டு வர வாழ்க்கை வளமாகும்.திருவோணம்; உழைப்பால் உயர்வீர்கள்சந்திரன், சனி பகவான் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2024 ஆண்டு அதிர்ஷ்டங்களை அள்ளித் தரப் போகிறது. இதற்கு முன்பிருந்த சங்கடமான பலன்கள் உண்டாகாது. இக்காலம் ஏழரை சனியின் கடைசி காலம் என்பதால் நெருக்கடி இனி ஏற்படாது. சனிபகவானும் இதுவரை அவர் வழங்கிய சங்கடங்களுக்கு ஆறுதல் புரிவது போல் நற்பலன்களை தருவார். 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு  உங்கள் முயற்சிகளை எல்லாம் வெற்றியாக்குவார். செயல்களில் லாபத்தை ஏற்படுத்துவார். தொழிலில் இருந்த சங்கடங்களை விலக்குவார். வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்தவர்களின் எண்ணத்தை நிறைவேற்றுவார். மே1 முதல் குருபகவான் உங்கள் ஜென்ம ராசியை பார்ப்பதால் எதிர்பார்ப்பு எல்லாம் நிறைவேறும். சங்கடம் எல்லாம் விலகும். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடந்தேறும். சொத்து சேர்க்கை உண்டாகும்.சனி சஞ்சாரம்ஜன.1 - பிப்.15 வரையிலும், அஸ்தமனம், வக்கிர நிலைகளில் 2ம் இட சனிபகவானால் உண்டாகும் சங்கடமான பலன்களில் இருந்து உங்களுக்கு விடுதலை உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.ராகு - கேது சஞ்சாரம்தைரிய, வீரிய ஸ்தானமான 3ம் இடத்தில் ராகுவும், பாக்கிய ஸ்தானமான 9ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நிலையில் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். பொருளாதாரம் உயரும். எடுத்த செயல்களில் முன்னேற்றமும் லாபமும் உண்டாகும். தொழில் சிறப்படையும். ஆரோக்கியம் சீராகும். எதிர்பாராத பணவரவு ஏற்படும். விரோதியை வெற்றி கொள்ளும் நிலை உண்டாகும். கோயில் திருப்பணிகளில் பங்கேற்பீர்கள். வேலை, தொழில் விஷயமாக வெளிநாடு செல்ல மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும்.குரு சஞ்சாரம்ஏப்.30 வரை சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் மனதில் வீண் ஆசைகள் உருவாகும். அதை நோக்கி நீங்கள் நடை போடுவீர்கள். தொழிலில் கவனம் செலுத்த முடியாத அளவிற்கு சந்தோஷத்திற்குள் மூழ்குவீர்கள். சிலர் புதிய வாகனம் வாங்குவர். வீட்டை உங்கள் ரசனைக்கேற்ப மாற்றி அமைப்பீர்கள். தாயாரின் உடல்நிலையில் பாதிப்பு உண்டாகும். தாய்வழி சொத்துகள் வந்து சேரும். மே1 முதல் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். குடும்பம், தொழில், பணியிடத்தில் இருந்த சங்கடம் விலகி நன்மை அதிகரிக்கும். பட்டம், பதவி என ஆசைகள் பூர்த்தியாகும். சமூகத்தில்  அந்தஸ்து அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். சூரிய சஞ்சாரம்மார்ச் 14 - ஏப் 13, ஜூன் 15 - ஜூலை 16 வரையிலும், அக்.18 - டிச.15 வரையிலும் சூரியனின் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் உங்கள் நிலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். திறமை வெளிப்படும். சட்ட சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கு எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். அரசுவழி முயற்சிகள் வெற்றியாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். எதிரி விலகுவர். ஆரோக்கியம் மேம்படும். வெளிநாட்டிற்கு செல்ல அரசிடம் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும்.பொதுப்பலன்ஜென்ம ராசியை விட்டு சனிபகவான் விலகி இருப்பதுடன், மற்ற கிரக சஞ்சார நிலைகளும் சாதகமாக இருப்பதால் பெருமளவில் நன்மை அடைவீர்கள். விருப்பம் நிறைவேறும். குடும்பத் தேவை பூர்த்தியாகும். தொழில், பணி போன்றவற்றில் கவனமாக செயல்படுவீர்கள். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தடைகள் வந்தாலும் அதை சமாளிக்கக்கூடிய சக்தி உண்டாகும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். புதிய தொழில் தொடங்கி லாபம் காண்பீர்கள். அரசியல்வாதி, கலைஞர்களுக்கும் மிகப்பெரிய யோகம் ஏற்படும்.  தொழில்தொழில் மீதான அக்கறை அதிகரிக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். தொழிலை விரிவு செய்வீர்கள். பங்கு வர்த்தகம், ஏற்றுமதி இறக்குமதி, பேக்டரி, எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோ மொபைல்ஸ், டிராவல்ஸ், கம்ப்யூட்டர், சினிமா, இன்ஜினியரிங், விவசாயத்துறையினர் முன்னேற்றம் அடைவர்.பணியாளர்கள்உழைப்பிற்கேற்ற மரியாதை இல்லை என்ற நிலை மாறும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். திறமை வெளிப்படும். புதிய பொறுப்பு உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். மனதில் அமைதி ஏற்படும். அரசு பணியாளர்கள் பழைய பிரச்னை, வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு விரும்பிய இடமாற்றம்  உண்டாகும்.பெண்கள்தனித்திறன் வெளிப்படும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள் என்றாலும் முயற்சிகளில் கவனம் வேண்டும். வார்த்தைகளில் நிதானம் அவசியம். குடும்பத்தினரிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. உங்கள் முன்னேற்றத்திற்காக அதிகம் பாடுபட வேண்டிய கட்டாயம் ஏற்படும். தடைபட்ட திருமணம் கைகூடும். சிலருக்கு வேலைவாய்ப்பு உண்டாகும். உறவினரின் ஆதரவு அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த பிரச்னை தீரும்.கல்விவிடாமுயற்சியுடன் படிப்பவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். ஆசிரியர்களின் ஆலோசனையை பின்பற்றுவது அவசியம்.உடல்நிலைஉடல் நிலையில் இருந்த சங்கடம் மறையும். உணவு செரிமானம், அல்சர், வீசிங் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இருப்பினும் சனியின் பார்வை 8ம் இடத்தின் மீது பதிவதால் வாகனப் பயணம், இயந்திரப் பணிகளில் எச்சரிக்கையாக இருப்பதும், உடல் நலனில் கவனம் செலுத்துவதும் அவசியம். குடும்பம்முன்பிருந்த சங்கடங்கள் விலகும். விருப்பம் நிறைவேறும். வருமானத்திற்காக உங்கள் முயற்சி அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து அவசிய செலவுகளுக்கு முதலிடம் கொடுப்பீர்கள். புதிய இடம் வாங்குவது, வாகனம் வாங்குவது, பொன், பொருள் வாங்குவது என குடும்பத்தின் நலனுக்காக ஒவ்வொன்றாக வாங்குவீர்கள். பணத்தேவை அதிகரிக்கும் என்றாலும் லாப ஸ்தானத்தின் மீதான சனியின் பார்வை படுவதால் எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். கணவன், மனைவிக்குள் இருந்த சங்கடம் விலகும். பரிகாரம் ஜென்ம நட்சத்திரத்தன்று காலபைரவர், நரசிம்மருக்கு அர்ச்சனை செய்து வழிபட நன்மை உண்டாகும்.அவிட்டம்; செயல்களில் நெருக்கடிசெவ்வாய் பகவான் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும் முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்களுக்கு மகரமும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கும்பமும் ராசிகளாகவும். சனி பகவானே ராசிநாதனாகவும் உள்ளார்.பிறக்கும் ஆண்டான 2024ல் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் குழப்பம், வருமானத்தில் நெருக்கடி, முயற்சியில் இழுபறி, வாக்கை காப்பாற்ற முடியாத நிலை, உடல் நிலையில் சங்கடம் என சிரமங்கள் ஏற்பட்டாலும் 3ம் இட ராகுவால் இந்த நிலைகளில் மாற்றம் உண்டாகும். முயற்சி யாவும் வெற்றியாகும். தொழில், உத்தியோகத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறும். எல்லாவற்றையும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். 3, 4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு உடல் நலனில் பாதிப்பு, உறவினரால் சங்கடம், வெளியூரில் வசிக்கும் நிலை, தேவையற்ற சங்கடம், நண்பர்களை விலகிச் செல்லும் நிலை, பெண்களுக்கு கர்ப்பப்பையில் பிரச்சினை. வருமானத்தில் தடை, குடும்பத்திலும், பணத்திலும் நெருக்கடி, விபத்து, விரயம் என நெருக்கடிகள் உண்டாகும்.சனி சஞ்சாரம்மார்ச் 16  - ஜூன் 19 வரையிலும் நவ. 4 - ஜன. 31 வரையிலும் தாரா பலன்களாலும், அஸ்தமனம், வக்கிர காலங்களிலும் சங்கடங்களில் இருந்து உங்களுக்கு விடுதலை வழங்குவார் சனிபகவான். இக்காலத்தில் நினைத்ததை எல்லாம் நடத்திக்கொள்வீர்கள். குடும்பம், தொழில், பணிகளில்  நன்மை அதிகரிக்கும். பணவரவில் இருந்த தடை விலகும். உடல்நிலை சீராகும். ராகு - கேது சஞ்சாரம்2024 ம் ஆண்டு முழுவதும் ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முயற்சி யாவும் வெற்றியாகும். நினைத்ததை சாதிக்கும் சக்தியுண்டாகும். துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். எதிர்பார்ப்பு எல்லாம் நிறைவேறும். எதிர்பார்த்த வரவு உண்டாகும். 3,4 ம் பாதத்தினருக்கு ராகு 2ம் இடத்திலும், கேது 8ம் இடத்திலும் சஞ்சரிக்கும் நிலையில் வீண் பிரச்னைகள் அதிகரிக்கும். தொழிலில் சங்கடம் உண்டாகும். குரு சஞ்சாரம்அவிட்டம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, ஏப்.30 வரை சுக ஸ்தானத்திலும், மே 1 முதல் பஞ்சம ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் குருபகவான், மே1 முதல் உங்கள் வாழ்வில் முன்னேற்றம், தொழிலில் வளர்ச்சி, வியாபாரத்தில் லாபத்தை உண்டாக்குவார். பணியில் இருந்த பிரச்னைகளை விலக்கி வைப்பார். எதிர்பார்ப்பை நிறைவேற்றி வைப்பார். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொன், பொருள் சேர்க்கையை உண்டாக்குவார். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குரு பகவானால் நன்மை வழங்க இயலாது. ஆனால் அவர் பார்க்கும் இடங்களின் வழியே நன்மை உண்டாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார்.சூரிய சஞ்சாரம்1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 14 - ஏப். 13, ஜூன் 15 - ஜூலை 16 வரையிலும்,  மற்றும் அக்.18 - டிச.15 வரையிலும், 3,4 ல் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.14 - மே13, ஜூலை 17 - ஆக.16 வரையிலும் நவ.16 - டிச.31 வரையிலும் சூரியன் 3,6,10,11 ம் இட சஞ்சாரங்களால் வாழ்வில் இருந்த நெருக்கடிகளை நீக்கி வைப்பார். செல்வாக்கை உயர்த்துவார். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகளை வழங்குவார். வழக்குகளில் இருந்து உங்களை விடுவிப்பார். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடத்தை அகற்றி வைப்பார். எதிரிகளை விரட்டி வைப்பார். ஆரோக்கியத்தை மேம்படுத்துவார் சமுதாயத்தில் தனி அந்தஸ்தை ஏற்படுத்துவார்.பொதுப்பலன்அவிட்டம் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ராகு - கேது, குருவின்  சஞ்சாரம் இக்காலத்தில் சாதகமான நிலையில் இருப்பதால் நினைத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகளை அடைவீர்கள். செல்வாக்கு உயரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏழரை சனியும், ராகு கேதுக்களின் சஞ்சாரமும் எதிர்மறை பலன்களையே ஏற்படுத்தும். இக்காலத்தில் செயல்களில் நிதானம் தேவை. புதிய முயற்சிகளில் கவனமுடன் ஈடுபட வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களை நம்பி புதிய செயல்களில் இறங்க வேண்டாம். வாகன இயக்கத்திலும், இயந்திரப் பணியிலும் எச்சரிக்கை அவசியம்.தொழில்அவிட்டம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.  தொழிலிலும் போட்டி அதிகரிக்கும்.பணியாளர்கள்முதல் 2 பாதங்களில் பிறந்தவர்களுக்கு முன்னேற்றமான பலன் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு செல்வாக்கு உயரும். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நெருக்கடி தோன்றும். வேலையில் சங்கடமான நிலை ஏற்படும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். பெண்கள்முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்வில், தொழிலில், பணியில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். வேலைக்காக காத்திருந்தவர்களின் முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் அமையும். பணியில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு செயல்களில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதும், உடல் நலனில் கவனம் செலுத்துவதும் மிக அவசியம். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடி தோன்றும் என்பதால் வேலைகளில் கவனமுடன் செயல்படுவது நன்மை தரும். கல்விமுதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். ஆசிரியர்களின் அறிவுரைகளை ஏற்று தேர்வில் வெற்றி அடைவீர்கள். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத சங்கடம் நெருக்கடி உண்டாகும் என்பதால் படிப்பில் கவனம் சிதறும்.உடல்நிலை1,2 ம் பாதத்தினருக்கு உடலில் இருந்த சங்கடம் மருத்துவத்தால் விலக ஆரம்பிக்கும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பரம்பரை நோய், தொற்று நோய் என்பதுடன் வாகன பயணத்தால் சங்கடம், விஷ ஜந்துக்களால் பாதிப்பு ஏற்படும்.குடும்பம்முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். வீட்டில் சுபநிகழ்வுகள் நடைபெறும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும். வேலையில் பதவி உயர்வு ஏற்படும். பொருளாதார நிலை உயரும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். பணவரவில் தடை உண்டாகும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும் என்பதால் ஒவ்வொரு செயலிலும் கவனம் தேவை. பரிகாரம்நவக்கிரக வழிபாடு நன்மை தரும். சங்கடத்தில் இருந்து விடுவிக்கும்.

அவிட்டம்; செயல்களில் நெருக்கடிசெவ்வாய் பகவான் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும் முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்களுக்கு மகரமும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கும்பமும் ராசிகளாகவும். சனி பகவானே ராசிநாதனாகவும் உள்ளார்.பிறக்கும் ஆண்டான 2024ல் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் குழப்பம், வருமானத்தில் நெருக்கடி, முயற்சியில் இழுபறி, வாக்கை காப்பாற்ற முடியாத நிலை, உடல் நிலையில் சங்கடம் என சிரமங்கள் ஏற்பட்டாலும் 3ம் இட ராகுவால் இந்த நிலைகளில் மாற்றம் உண்டாகும். முயற்சி யாவும் வெற்றியாகும். தொழில், உத்தியோகத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறும். எல்லாவற்றையும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். 3, 4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு உடல் நலனில் பாதிப்பு, உறவினரால் சங்கடம், வெளியூரில் வசிக்கும் நிலை, தேவையற்ற சங்கடம், நண்பர்களை விலகிச் செல்லும் நிலை, பெண்களுக்கு கர்ப்பப்பையில் பிரச்சினை. வருமானத்தில் தடை, குடும்பத்திலும், பணத்திலும் நெருக்கடி, விபத்து, விரயம் என நெருக்கடிகள் உண்டாகும்.சனி சஞ்சாரம்மார்ச் 16  - ஜூன் 19 வரையிலும் நவ. 4 - ஜன. 31 வரையிலும் தாரா பலன்களாலும், அஸ்தமனம், வக்கிர காலங்களிலும் சங்கடங்களில் இருந்து உங்களுக்கு விடுதலை வழங்குவார் சனிபகவான். இக்காலத்தில் நினைத்ததை எல்லாம் நடத்திக்கொள்வீர்கள். குடும்பம், தொழில், பணிகளில்  நன்மை அதிகரிக்கும். பணவரவில் இருந்த தடை விலகும். உடல்நிலை சீராகும். ராகு - கேது சஞ்சாரம்2024 ம் ஆண்டு முழுவதும் ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முயற்சி யாவும் வெற்றியாகும். நினைத்ததை சாதிக்கும் சக்தியுண்டாகும். துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். எதிர்பார்ப்பு எல்லாம் நிறைவேறும். எதிர்பார்த்த வரவு உண்டாகும். 3,4 ம் பாதத்தினருக்கு ராகு 2ம் இடத்திலும், கேது 8ம் இடத்திலும் சஞ்சரிக்கும் நிலையில் வீண் பிரச்னைகள் அதிகரிக்கும். தொழிலில் சங்கடம் உண்டாகும். குரு சஞ்சாரம்அவிட்டம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, ஏப்.30 வரை சுக ஸ்தானத்திலும், மே 1 முதல் பஞ்சம ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் குருபகவான், மே1 முதல் உங்கள் வாழ்வில் முன்னேற்றம், தொழிலில் வளர்ச்சி, வியாபாரத்தில் லாபத்தை உண்டாக்குவார். பணியில் இருந்த பிரச்னைகளை விலக்கி வைப்பார். எதிர்பார்ப்பை நிறைவேற்றி வைப்பார். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொன், பொருள் சேர்க்கையை உண்டாக்குவார். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குரு பகவானால் நன்மை வழங்க இயலாது. ஆனால் அவர் பார்க்கும் இடங்களின் வழியே நன்மை உண்டாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார்.சூரிய சஞ்சாரம்1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 14 - ஏப். 13, ஜூன் 15 - ஜூலை 16 வரையிலும்,  மற்றும் அக்.18 - டிச.15 வரையிலும், 3,4 ல் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.14 - மே13, ஜூலை 17 - ஆக.16 வரையிலும் நவ.16 - டிச.31 வரையிலும் சூரியன் 3,6,10,11 ம் இட சஞ்சாரங்களால் வாழ்வில் இருந்த நெருக்கடிகளை நீக்கி வைப்பார். செல்வாக்கை உயர்த்துவார். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகளை வழங்குவார். வழக்குகளில் இருந்து உங்களை விடுவிப்பார். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடத்தை அகற்றி வைப்பார். எதிரிகளை விரட்டி வைப்பார். ஆரோக்கியத்தை மேம்படுத்துவார் சமுதாயத்தில் தனி அந்தஸ்தை ஏற்படுத்துவார்.பொதுப்பலன்அவிட்டம் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ராகு - கேது, குருவின்  சஞ்சாரம் இக்காலத்தில் சாதகமான நிலையில் இருப்பதால் நினைத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகளை அடைவீர்கள். செல்வாக்கு உயரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏழரை சனியும், ராகு கேதுக்களின் சஞ்சாரமும் எதிர்மறை பலன்களையே ஏற்படுத்தும். இக்காலத்தில் செயல்களில் நிதானம் தேவை. புதிய முயற்சிகளில் கவனமுடன் ஈடுபட வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களை நம்பி புதிய செயல்களில் இறங்க வேண்டாம். வாகன இயக்கத்திலும், இயந்திரப் பணியிலும் எச்சரிக்கை அவசியம்.தொழில்அவிட்டம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.  தொழிலிலும் போட்டி அதிகரிக்கும்.பணியாளர்கள்முதல் 2 பாதங்களில் பிறந்தவர்களுக்கு முன்னேற்றமான பலன் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு செல்வாக்கு உயரும். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நெருக்கடி தோன்றும். வேலையில் சங்கடமான நிலை ஏற்படும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். பெண்கள்முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்வில், தொழிலில், பணியில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். வேலைக்காக காத்திருந்தவர்களின் முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் அமையும். பணியில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு செயல்களில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதும், உடல் நலனில் கவனம் செலுத்துவதும் மிக அவசியம். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடி தோன்றும் என்பதால் வேலைகளில் கவனமுடன் செயல்படுவது நன்மை தரும். கல்விமுதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். ஆசிரியர்களின் அறிவுரைகளை ஏற்று தேர்வில் வெற்றி அடைவீர்கள். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத சங்கடம் நெருக்கடி உண்டாகும் என்பதால் படிப்பில் கவனம் சிதறும்.உடல்நிலை1,2 ம் பாதத்தினருக்கு உடலில் இருந்த சங்கடம் மருத்துவத்தால் விலக ஆரம்பிக்கும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பரம்பரை நோய், தொற்று நோய் என்பதுடன் வாகன பயணத்தால் சங்கடம், விஷ ஜந்துக்களால் பாதிப்பு ஏற்படும்.குடும்பம்முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். வீட்டில் சுபநிகழ்வுகள் நடைபெறும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும். வேலையில் பதவி உயர்வு ஏற்படும். பொருளாதார நிலை உயரும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். பணவரவில் தடை உண்டாகும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும் என்பதால் ஒவ்வொரு செயலிலும் கவனம் தேவை. பரிகாரம்நவக்கிரக வழிபாடு நன்மை தரும். சங்கடத்தில் இருந்து விடுவிக்கும்.சதயம்; எச்சரிக்கை அவசியம்ராகு, சனி பகவான் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2024 எத்தகைய பலன்களை வழங்கப் போகிறது?ஜென்ம ராசிக்குள் சனி, குடும்ப ஸ்தானத்தில் ராகு, அஷ்டம ஸ்தானத்தில் கேது, தைரிய ஸ்தானத்தில் குரு என பிரதான கிரகங்கள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு உங்களுக்கு எதிர்மறையாக சஞ்சரிக்கின்றனர் இந்த ஆண்டில்.இத்தகைய நிலையில் ஆரோக்கியத்தில் சங்கடம் ஏற்படும். செயல்பட முடியாத அளவிற்கு நெருக்கடி தோன்றும். வருமானத்தில் தடை உண்டாகும். கூட்டாளிகள் பிரிந்து சென்று தனித்து செயல்படுவர். மனதில் இனம் புரியாத பயம் உண்டாகும். அளவிற்கு மீறிய சங்கடம் தோன்றும். நண்பர்கள், உறவினர்கள் எதிரியாக மாறுவர். குடும்பத்திலும் நிம்மதி இருக்காது, செவ்வாய், சூரியனின் சஞ்சார நிலை, சுய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்துள்ள நிலை, நடைபெறும் திசா புத்தியும் இந்த சங்கடங்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கும். சனி சஞ்சாரம்ஜன.1 -  பிப்.15 வரையிலும் தாரா பலனாலும், அஸ்தமன, வக்கிர காலங்களிலும் ஜென்ம சனியால் உண்டாகும் பலன் மாறுபடும். முயற்சிகள் வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் நன்மை அதிகரிக்கும். செயல்களில் ஆதாயம் ஏற்படும். நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள்.ராகு - கேது சஞ்சாரம்தன, குடும்ப ஸ்தானத்தில் ராகுவும், அஷ்டம ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் உங்களுக்கு எதிர்பாராத சங்கடம் ஏற்படும். வீண் பிரச்சினைகளால் நெருக்கடி அதிகரிக்கும். அந்நியரால் சில சிக்கல்களுக்கு ஆளாவீர்கள். குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும். சிலருக்கு வெளியூரில் வசிக்கும் நிலை ஏற்படும். பொருளாதார நிலை என்பது கேள்விக்குறியாகும். வழக்குகளில் எதிர்மறையான பலன்கள் ஏற்படும். ஆசை காரணமாக குறுக்கு வழியில் செல்வதால் வழக்குகளில் சிக்கும் நிலை சிலருக்கு ஏற்படும். குரு சஞ்சாரம்ஏப்.30 வரை 3ம் இடத்திலும், மே 1 முதல் சுக ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் குரு பகவான்,  உங்களுக்கு பாதக பலன்களை வழங்குவார். சங்கடம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும். உங்கள் புத்திசாலித்தனம் இக்காலத்தில் பயன்படாமல் போகும். பிறருக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையும், உடலிலும் மனதிலும் சங்கடங்களும் உண்டாகும் என்றாலும் குருவின்  பார்வை பலனால் எல்லாவற்றையும் சமாளிக்கும் அளவிற்கு பொருளாதாரநிலை உயரும், பெரியோரின் ஆதரவு கிடைக்கும், நண்பர்கள், வாழ்க்கைத் துணையால் நன்மை உண்டாகும்.சூரிய சஞ்சாரம்ஏப்.14 - மே 13, ஜூலை 17 - ஆக.16 வரையிலும் நவ. 16 - டிச. 31 வரையிலும் சூரியன் தன் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள். எல்லாவற்றையும் சமாளித்திடக் கூடிய சக்தி உண்டாகும். எண்ணங்கள் நிறைவேறும். அரசு வழியிலான செயல்களில் ஆதாயம் வரும். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். உடல் நிலை மேம்படும். எதிரி தொல்லை விலகும். செல்வாக்கு உயரும். பொதுப்பலன்ஜென்ம சனியும், ராகு, கேது, குருவின் சஞ்சார நிலை சாதகமாக இல்லை என்பதால் செயல்களில் கவனம் அவசியம். மற்றவர்களின் ஆலோசனைகளை யோசித்து முடிவிற்கு வருவது நன்மை தரும். புதிய ஒப்பந்தங்கள் இக்காலத்தில் வேண்டாம். பத்திரங்களில் கையெழுத்திடும் போது விழிப்புடன் இருக்கவும். குறுக்கு வழியில் செல்பவர்களுக்கு நெருக்கடி தோன்றும். அறிமுகமில்லாத நபர்களை நம்பி செயல்பட வேண்டாம். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நன்மையளிக்கும். தொழில்தொழிலில் எதிர்பாராத தடை உண்டாகும். புதிய முயற்சி பலன் தராமல் சங்கடத்தை ஏற்படுத்தும்.  இக்காலத்தில் ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைப்பது நல்லது. பணியாளர்கள்பணிபுரியும் இடத்தில் உழைப்பு அதிகரிக்கும். வருமானம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் போகும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். பணியில் முழு கவனம் இருந்தால் மட்டுமே வேலையை உங்களால் தக்க வைக்க முடியும். பணியாளர்களிடம் மேலதிகாரிகள் கண்டிப்பாக நடந்து கொள்வர். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பர். பெண்கள்குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்று செயல்படுவதால் நன்மை உண்டாகும். பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு பக்கபலமாக இருக்கும். வயிறு, கர்ப்பப்பை போன்றவற்றில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் உடல்நலனில் கவனம் தேவை. பயணத்திலும் எச்சரிக்கை அவசியம். சுயதொழில் புரிபவர்கள் வரவு செலவில் கவனமுடன் இருக்க வேண்டும். புதிய முயற்சிகளை இக்காலத்தில் ஒத்தி வைப்பது நல்லது. வாழ்க்கைத் துணையுடன் அனுசரிப்பதன் மூலம் பிரச்னை தோன்றாமல் போகும்.கல்விஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்பட வேண்டிய காலமிது. படிப்பில் முழு கவனத்தையும் செலுத்துவதால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியும்.உடல்நிலைபரம்பரை நோய்கள் மீண்டும் தலைதுாக்கும். தொற்று நோய்களும் சங்கடத்தை ஏற்படுத்தும். எதிர்பாராத விபத்துகளால் மருத்துவச் செலவு ஏற்படும். உடல்நலனில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.குடும்பம்ஜென்ம சனி, 2ம் இட ராகு, 8ம் இட கேது, 3,4ல் குரு போன்ற சஞ்சார நிலைகளால் நெருக்கடி அதிகரிக்கும். குடும்பத்தில் சங்கடம் தோன்றும். உறவுகளிடம் பகை உண்டாகும். தம்பதியரிடம் பிரச்னைகள் தலைதுாக்கும். சிலர் வெளியூரில் வசிக்கும் நிலை ஏற்படும். தொழில், பணியில் எந்த செயலையும் சரிவர நடத்திக் கொள்ள முடியாமல் போகும். நிதானம் என்பது மிக அவசியம். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பதுடன் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதால் மனதைரியம் உண்டாகும்.பரிகாரம்; காளஹஸ்தியில் ராகு, கேதுவிற்கு பரிகாரம் செய்து வழிபட சங்கடங்கள் குறையும்.பூரட்டாதி; நெருக்கடி அதிகரிக்கும்குரு பகவான் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும், முதல் 3 பாதங்களில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் ராசிநாதனாகவும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு உங்கள் நட்சத்திரநாதனே ராசி நாதனாகவும் உள்ளனர்.பிறக்கும் 2024 ல் பூரட்டாதி முதல் 3 பாதங்களில் பிறந்தவர்களுக்கு சனிபகவான் ஜென்ம ராசியிலும், ராகு 2ம் இடத்திலும், கேது 8ம் இடத்திலும், குரு 3ம் இடத்திலும் சஞ்சரிக்கின்றனர். இதனால் முதல் 3 பாதங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நெருக்கடி, தொழில், பணியில் பிரச்னை, மனதில் குழப்பம். வாழ்க்கைத்துணையுடன் சங்கடம் ஏற்படும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 12ம் இடத்தில் சனியும், ஜென்ம ராசியில் ராகுவும், 7ம் இடத்தில் கேதுவும், தன ஸ்தானத்தில் குருவும் சஞ்சரிக்கின்றனர். வருமானத்தில் தடைகள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். சண்டை, சச்சரவுகள் எதிரிகளால் இடையூறு என்ற நிலைகள் மாறும். பணஆசை அதிகரிக்கும், அதன் காரணமாக தவறான வழியில் செல்லக்கூடிய சூழலும் ஏற்படும்.சனி சஞ்சாரம்ஜன 1 - பிப்.15 வரையிலும், மார்ச் 16 - ஜூன் 19 வரையிலும், நவ. 4 - டிச. 31 வரையிலும் தாரா பலனகளாலும், அஸ்தமன, வக்கிர காலங்களிலும் சங்கடங்களில் இருந்து சனிபகவான் உங்களை விடுவிப்பார். எதிர்பார்த்த நன்மை உங்களால் அடைய முடியும். முயற்சிகள் யாவும் வெற்றியாகும். வருமானத்தில் தடைகள் விலகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும்.ராகு, கேது பெயர்ச்சிராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் முதல் மூன்று பாதங்களில் பிறந்தவர்களுக்கு 2ம் இடத்தில் ராகு, 8ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால், குடும்பத்தில் பிரச்னை, தொழிலில் பாதிப்பு, வருமானத்தில் குறைபாடு, வீண் அலைச்சல், செயல்களில் தடைகள், பொருளாதார நெருக்கடி, உடல்நிலையில் சங்கடம், எதிர்பாராத விபத்து என்று உண்டாகும். 4ம் பாதத்தினருக்கு தொழிலில் தடுமாற்றம், பணியில் பிரச்னை, வீண் அலைச்சல், செயல்களில் நெருக்கடி, வீண்பழி, செய்யாத குற்றத்திற்கு அபராதம், பொருள் இழப்பு, குடும்பத்தில் பிரச்னை, நோயால் தொல்லை அதிகரிக்கும். குரு சஞ்சாரம்பூரட்டாதி 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.30  வரை தைரிய ஸ்தானத்திலும், மே 1 முதல் சுக ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் குருபகவான் எதிர்மறை பலன்களை வழங்குவார். முயற்சிகள் இழுபறியாவதுடன் வருமானத்தில் தடையுண்டாகும் என்றாலும் தன் பார்வைகளின் வழியே வளத்தை வழங்குவார், நலத்தை உண்டாக்குவார். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 2ம் இட குருவால் ஏப்.30 வரை நன்மை அதிகரிக்கும். வருமானம் உயரும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். அதன்பின் 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் நன்மைகளை வழங்க முடியாமல் போகும். நெருக்கடி நிலை உண்டாகும் என்றாலும் தன் பார்வைகளால் வாழ்க்கையை வளமாக்குவார்.சூரிய சஞ்சாரம்1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.14 - மே 13, ஜூலை 17 - ஆக.16, நவ.16 - டிச.31 வரையிலும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜன.15 - பிப்.12, மே 14 - ஜூன் 14, ஆக.17 - செப்.16, டிச. 16 - 31 வரையிலும் சூரியன் தன் 3,6,10,11 ம் இட சஞ்சாரங்களால் மற்ற கிரகங்களால் ஏற்படும் சங்கடங்களில் இருந்து உங்களைப் பாதுகாப்பார். செல்வாக்கை உயர்த்துவார். பணவரவில் இருந்த தடைகளை விலக்குவார். உடல்நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். தொழில், வியாபாரத்தில் லாபத்தை உண்டாக்குவார். பணியாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகளில் இருந்து விடுவிப்பார். வழக்குகளில் சாதகமான நிலையை உண்டாக்குவார். லாபத்தை அதிகரிப்பார்.பொதுப்பலன்பிரதான கிரகங்கள் சாதகமான பலன்களை வழங்க முடியாத நிலையில் சஞ்சரிக்கும் செயல்களில் நிதானம் அவசியம். முயற்சி இழுபறியாகும். ஆரோக்கியத்தில் பின்னடைவு உண்டாகும். அதற்காக செலவு அதிகரிக்கும். குடும்பத்திலும் பிரச்னைகள் ஏற்படும். வர வேண்டிய பணம் வருவதற்கு தாமதமாகும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த வருமானம் இல்லாமல் மனம் குழப்பமடையும். வீண்செலவு அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் பிரச்னைகள் ஏற்பட்டு உங்களை சங்கடப்படுத்தும்.தொழில்தொழிலில் உழைப்பு அதிகரிக்கும். திட்டமிட்ட முயற்சிகள் லாபமாகும். விற்பனையில் கூடுதல் கவனம் தேவைப்படும். ஊழியர்களை நம்பி எந்தவொரு பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம்.பணியாளர்கள்தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு அலைச்சலும் வேலையில் சங்கடம் அதிகரிக்கும். எதிர்பார்த்த வருமானம் இல்லாமல் போகும். அரசுத்துறையில் பணியாற்றுபவர்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரும்.பெண்கள்வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். சுயதொழில் செய்பவர்கள் புதிய முதலீடுகள் செய்வதற்கு முன் பலமுறை யோசிக்க வேண்டும். அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் வேலை பளுவிற்கு ஆளாக நேரும். இருந்தாலும் எதிர்பார்த்த வருமானம் இருக்கும். சிலர், படிப்பிற்காக, வேலைக்காக வெளிநாட்டிற்கு செல்வர்.கல்விபடிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆசிரியர்கள் அறிவுரை இக்காலத்தில் உங்களுக்கு அவசியம்.உடல்நிலைதிடீர் திடீரென உடலில் சங்கடம் தோன்றும். இதுநாள்வரை மறைந்திருந்த நோய்கள் இப்பொழுது தலைக்காட்டும். சிலர் விபத்துகளிலும் சிக்க நேரும் என்பதால் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.குடும்பம்குடும்பத்தில் ஒரு நேரம் இருப்பதுபோல் மறு நேரம் நிம்மதி இல்லாமல் போகும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். தம்பதியருக்குள் சண்டை ஏற்படும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதால் நிம்மதி உண்டாகும். ஆடம்பர செலவு, வீண் பயணத்தை தவிர்ப்பது நல்லது. புதிய நபர்களை  வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம். உறவினர்கள் உங்களுக்கு எதிராவர் என்பதால் அவர்களிடம் எச்சரிக்கை அவசியம். புதிய முயற்சிகளில் யோசித்து செயல்படுவது நல்லது. பரிகாரம்; குலதெய்வத்தை வணங்கி வழிபட்டு வருவதுடன் உணவு, உடை தானம் செய்ய நன்மை அதிகரிக்கும்.

பூரட்டாதி; நெருக்கடி அதிகரிக்கும்குரு பகவான் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும், முதல் 3 பாதங்களில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் ராசிநாதனாகவும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு உங்கள் நட்சத்திரநாதனே ராசி நாதனாகவும் உள்ளனர்.பிறக்கும் 2024 ல் பூரட்டாதி முதல் 3 பாதங்களில் பிறந்தவர்களுக்கு சனிபகவான் ஜென்ம ராசியிலும், ராகு 2ம் இடத்திலும், கேது 8ம் இடத்திலும், குரு 3ம் இடத்திலும் சஞ்சரிக்கின்றனர். இதனால் முதல் 3 பாதங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நெருக்கடி, தொழில், பணியில் பிரச்னை, மனதில் குழப்பம். வாழ்க்கைத்துணையுடன் சங்கடம் ஏற்படும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 12ம் இடத்தில் சனியும், ஜென்ம ராசியில் ராகுவும், 7ம் இடத்தில் கேதுவும், தன ஸ்தானத்தில் குருவும் சஞ்சரிக்கின்றனர். வருமானத்தில் தடைகள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். சண்டை, சச்சரவுகள் எதிரிகளால் இடையூறு என்ற நிலைகள் மாறும். பணஆசை அதிகரிக்கும், அதன் காரணமாக தவறான வழியில் செல்லக்கூடிய சூழலும் ஏற்படும்.சனி சஞ்சாரம்ஜன 1 - பிப்.15 வரையிலும், மார்ச் 16 - ஜூன் 19 வரையிலும், நவ. 4 - டிச. 31 வரையிலும் தாரா பலனகளாலும், அஸ்தமன, வக்கிர காலங்களிலும் சங்கடங்களில் இருந்து சனிபகவான் உங்களை விடுவிப்பார். எதிர்பார்த்த நன்மை உங்களால் அடைய முடியும். முயற்சிகள் யாவும் வெற்றியாகும். வருமானத்தில் தடைகள் விலகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும்.ராகு, கேது பெயர்ச்சிராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் முதல் மூன்று பாதங்களில் பிறந்தவர்களுக்கு 2ம் இடத்தில் ராகு, 8ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால், குடும்பத்தில் பிரச்னை, தொழிலில் பாதிப்பு, வருமானத்தில் குறைபாடு, வீண் அலைச்சல், செயல்களில் தடைகள், பொருளாதார நெருக்கடி, உடல்நிலையில் சங்கடம், எதிர்பாராத விபத்து என்று உண்டாகும். 4ம் பாதத்தினருக்கு தொழிலில் தடுமாற்றம், பணியில் பிரச்னை, வீண் அலைச்சல், செயல்களில் நெருக்கடி, வீண்பழி, செய்யாத குற்றத்திற்கு அபராதம், பொருள் இழப்பு, குடும்பத்தில் பிரச்னை, நோயால் தொல்லை அதிகரிக்கும். குரு சஞ்சாரம்பூரட்டாதி 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.30  வரை தைரிய ஸ்தானத்திலும், மே 1 முதல் சுக ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் குருபகவான் எதிர்மறை பலன்களை வழங்குவார். முயற்சிகள் இழுபறியாவதுடன் வருமானத்தில் தடையுண்டாகும் என்றாலும் தன் பார்வைகளின் வழியே வளத்தை வழங்குவார், நலத்தை உண்டாக்குவார். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 2ம் இட குருவால் ஏப்.30 வரை நன்மை அதிகரிக்கும். வருமானம் உயரும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். அதன்பின் 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் நன்மைகளை வழங்க முடியாமல் போகும். நெருக்கடி நிலை உண்டாகும் என்றாலும் தன் பார்வைகளால் வாழ்க்கையை வளமாக்குவார்.சூரிய சஞ்சாரம்1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.14 - மே 13, ஜூலை 17 - ஆக.16, நவ.16 - டிச.31 வரையிலும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜன.15 - பிப்.12, மே 14 - ஜூன் 14, ஆக.17 - செப்.16, டிச. 16 - 31 வரையிலும் சூரியன் தன் 3,6,10,11 ம் இட சஞ்சாரங்களால் மற்ற கிரகங்களால் ஏற்படும் சங்கடங்களில் இருந்து உங்களைப் பாதுகாப்பார். செல்வாக்கை உயர்த்துவார். பணவரவில் இருந்த தடைகளை விலக்குவார். உடல்நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். தொழில், வியாபாரத்தில் லாபத்தை உண்டாக்குவார். பணியாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகளில் இருந்து விடுவிப்பார். வழக்குகளில் சாதகமான நிலையை உண்டாக்குவார். லாபத்தை அதிகரிப்பார்.பொதுப்பலன்பிரதான கிரகங்கள் சாதகமான பலன்களை வழங்க முடியாத நிலையில் சஞ்சரிக்கும் செயல்களில் நிதானம் அவசியம். முயற்சி இழுபறியாகும். ஆரோக்கியத்தில் பின்னடைவு உண்டாகும். அதற்காக செலவு அதிகரிக்கும். குடும்பத்திலும் பிரச்னைகள் ஏற்படும். வர வேண்டிய பணம் வருவதற்கு தாமதமாகும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த வருமானம் இல்லாமல் மனம் குழப்பமடையும். வீண்செலவு அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் பிரச்னைகள் ஏற்பட்டு உங்களை சங்கடப்படுத்தும்.தொழில்தொழிலில் உழைப்பு அதிகரிக்கும். திட்டமிட்ட முயற்சிகள் லாபமாகும். விற்பனையில் கூடுதல் கவனம் தேவைப்படும். ஊழியர்களை நம்பி எந்தவொரு பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம்.பணியாளர்கள்தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு அலைச்சலும் வேலையில் சங்கடம் அதிகரிக்கும். எதிர்பார்த்த வருமானம் இல்லாமல் போகும். அரசுத்துறையில் பணியாற்றுபவர்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரும்.பெண்கள்வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். சுயதொழில் செய்பவர்கள் புதிய முதலீடுகள் செய்வதற்கு முன் பலமுறை யோசிக்க வேண்டும். அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் வேலை பளுவிற்கு ஆளாக நேரும். இருந்தாலும் எதிர்பார்த்த வருமானம் இருக்கும். சிலர், படிப்பிற்காக, வேலைக்காக வெளிநாட்டிற்கு செல்வர்.கல்விபடிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆசிரியர்கள் அறிவுரை இக்காலத்தில் உங்களுக்கு அவசியம்.உடல்நிலைதிடீர் திடீரென உடலில் சங்கடம் தோன்றும். இதுநாள்வரை மறைந்திருந்த நோய்கள் இப்பொழுது தலைக்காட்டும். சிலர் விபத்துகளிலும் சிக்க நேரும் என்பதால் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.குடும்பம்குடும்பத்தில் ஒரு நேரம் இருப்பதுபோல் மறு நேரம் நிம்மதி இல்லாமல் போகும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். தம்பதியருக்குள் சண்டை ஏற்படும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதால் நிம்மதி உண்டாகும். ஆடம்பர செலவு, வீண் பயணத்தை தவிர்ப்பது நல்லது. புதிய நபர்களை  வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம். உறவினர்கள் உங்களுக்கு எதிராவர் என்பதால் அவர்களிடம் எச்சரிக்கை அவசியம். புதிய முயற்சிகளில் யோசித்து செயல்படுவது நல்லது. பரிகாரம்; குலதெய்வத்தை வணங்கி வழிபட்டு வருவதுடன் உணவு, உடை தானம் செய்ய நன்மை அதிகரிக்கும்.உத்திரட்டாதி; முயற்சில் முன்னேற்றம்சனி, குரு பகவான் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு பிறக்கப் போகும் 2024 வருடத்தில் எந்தவிதமான பலன்களை வழங்கப் போகிறது?உங்கள் ஜென்ம ராசிக்குள் ராகு, 7ம் இடத்தில் கேது, 12ல் சனி பகவான் சஞ்சரிக்கும் நிலையில் ஆண்டு பிறக்கிறது. இக்காலம் உங்களுக்கு ஏழரைச் சனியின் தொடக்க காலமாகும். அவருடைய பார்வைக்குள் இப்போது நீங்கள் வந்துள்ளீர்கள் என்பதால் பொருளாதாரத்தில் பிரச்னைகள். வீண் அலைச்சல், எதிரிகளால் இடையூறு, வீண் செலவு, உடல்நிலையில் சங்கடம், உறவுகளிடம் பகை என்ற நிலை ஏற்படலாம். ஜென்ம ராகு உங்கள் மனதில் சஞ்சலத்தை உருவாக்கலாம். தவறான பாதைகளுக்கு வழிகாட்டலாம். 7ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது உறவுகளிடம் பகை, வாழ்க்கைத் துணையிடம் ஒற்றுமை இல்லாத நிலையை உருவாக்கலாம். இந்த நிலையில் 2ம் இடத்தில் ஏப்.30 வரை சஞ்சரிக்கும் குருபகவான் குடும்பத்தில் நிம்மதியை உருவாக்குவார். பிரச்னைகள் இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்துவார். சங்கடங்களில் இருந்து உங்களைப் பாதுகாப்பார்.சனி சஞ்சாரம்மார்ச் 16  -  ஜூன் 19 வரையிலும், நவ. 4 - டிச. 31 வரையிலும்  தாரா பலன்களாலும் அஸ்தமனம், வக்கிர நிலைகளிலும் விரய சனியின் பாதிப்பில் இருந்து உங்களுக்கு விடுதலை உண்டாகும். வழக்கமான உங்கள் முயற்சிகள் எந்தவித தடைகளும் இல்லாமல் நிறைவேறும். திட்டமிட்டு நீங்கள் செய்யும் செயல்களில் லாபம் உண்டாகும். பிரச்னைகள் வந்தாலும் அதையெல்லாம் சமாளிக்கும் சக்தி ஏற்படும். பணியில் இருந்த நெருக்கடி தீரும். எதிர்பாராத அதிர்ஷ்ட பலன்களால் உங்களுக்கு நன்மை உண்டாகும்.ராகு - கேது சஞ்சாரம்ராகு உங்கள் ராசிக்குள்ளும், கேது 7ம் இடத்திலும் சஞ்சரிக்கும் நிலையில் உங்கள் செயல்களில் தடுமாற்றம் உண்டாகும். வீண் அலைச்சல் அதிகரிக்கும். தொழில், பணியில் நெருக்கடிகள் தோன்றும். சிலருக்கு வீண்பழியும், செய்யாத குற்றங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையும்  ஏற்படும். குடும்பத்தில் சங்கடம், பிரச்னை, வாழ்க்கைத் துணையுடன் மனக்கசப்பு, உடல்நிலையில் பாதிப்பு என எதிர்மறையான பலன்கள் உண்டாகும். குரு சஞ்சாரம்ஏப்.30 வரை 2ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். எதிர்பார்ப்புகள் எல்லாம் பூர்த்தி செய்வார். பணவரவை அதிகரிப்பார். குடும்பத்தில் இருந்த சங்கடங்களை விலக்கி வைப்பார். கொடுத்த வாக்கை காப்பாற்றும் நிலையை உண்டாக்குவார். பொன், பொருள் சேர்க்கையை ஏற்படுத்துவார். பணியில் உங்கள் நிலையை உயர்த்துவார். தொழிலில் இருந்த பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவார். வியாபாரத்தில் லாபத்தை அதிகரிப்பார். மே 1 முதல் 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் எதிர்பாராத நெருக்கடிகளை ஏற்படுத்துவார். உங்கள் செல்வாக்கில் சங்கடங்கள் உண்டாகும். ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படும். உங்களைச் சுற்றி இருந்தவர்கள் உங்களை விட்டு விலகிச்செல்வர். சூரிய சஞ்சாரம்ஜன 15 - பிப் 12, மே 14 - ஜூன் 14, ஆக 17 - செப் 16, டிச 16 - 31 காலங்களில் சூரியபகவானின் சஞ்சார நிலைகளால் சங்கடங்கள் விலகும். பணியில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும் ஆரோக்கியம் சீராகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த வரவு வந்து சேரும். பொருளாதார நிலை உயரும். வம்பு வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். தொழில் தொடங்குவதற்கு எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். பணியில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு பதவி உயர்வு உண்டாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். வெளிநாட்டிற்கு செல்ல அரசின் அனுமதி கிடைக்கும்.பொதுப்பலன்குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். அலைச்சல் அதிகரிக்கும். வேலைகளில் டென்ஷன் உண்டாகும். சிலருக்கு மேற்படிப்பிற்காகவும், வேலைக்காகவும் வெளிநாட்டிற்கு செல்லும் நிலை உண்டாகும். புதிய நட்புகளால் தேவையற்ற பிரச்னைகள் தோன்றும். வீண்பழி, குடும்பத்தில் குழப்பம் தோன்றும். வியாபாரம், தொழிலில் புதிய முதலீடுகள் செய்வதற்கு முன் யோசிப்பது நன்மையாக இருக்கும். புதியவர்களை நம்பி எந்தவித முயற்சிகளிலும் ஈடுபடக் கூடாது. உங்களுக்கு சரி என்று தோன்றுகின்ற விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில்தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும். பங்கு வர்த்தகம், பைனான்ஸ், ஹார்டுவேர்ஸ், நகை, வியாபாரம், ரியல் எஸ்டேட், பதிப்பகம், கல்விக்கூடங்கள் உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும்.பணியாளர்கள்பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். உங்கள் வேலைகளை ஒட்டி வெளியூர் பயணம் உண்டாகும். சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு உண்டாகும். அரசுத்துறையில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் பாராட்டிற்கு ஆளாவீர்கள். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும்.பெண்கள்குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு வேலை அமையும். சிலருக்கு வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் வாய்ப்பு உண்டாகும். நீண்டகாலம் நட்பாக பழகியவர்கள் உங்களை விட்டு விலகுவர். வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்துச் செல்வீர்கள். பொன், பொருள் சேரும். புதிய நட்புகளால் சில சங்கடம், அவப்பெயருக்கு ஆளாக நேரிடும். இக்காலத்தில் எதிர்பாலினரை தள்ளி வைத்து பழகுவது நல்லது. கல்விஇக்காலத்தில் படிப்பில் முழுகவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஆசிரியர்களின் ஆலோசனை உங்களுக்கு நன்மையை உண்டாக்கும்.உடல்நிலைபரம்பரை நோய், தொற்று நோய் போன்றவற்றால் இக்காலத்தில் சங்கடம் தோன்றும். பருவ நோய்களால் பாதிப்பிற்கு ஆளாவீர்கள். உடல் அடிக்கடி சோர்வடையும். மருத்துவச் செலவு அதிகரிக்கும்.குடும்பம்ஜென்ம ராகு, 7ம் இட கேது, விரயச் சனி என்ற நிலையில் குடும்பத்தில் எதிர்பாராத சங்கடங்கள் ஏற்படும். நட்புகளால் குடும்பத்திற்குள் பிரச்னை உண்டாகும். மனதில் இனம் புரியாத சங்கடமும் பயமும் தோன்றும். புதிய முயற்சிகள் இழுபறியாகும். அதே நேரத்தில் செலவிற்கேற்ற வருவாய் வந்து சேரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். வெளிநாட்டு தொடர்புகள் ஆதாயத்தை ஏற்படுத்தும். வருமானத்திற்காக வெளிநாட்டிற்கு செல்லும் முயற்சி வெற்றியாகும்.பரிகாரம்; ஐயாவாடி பிரத்யங்கிரா, வனபத்ர காளியை வழிபட்டு வர சங்கடங்கள் விலகும். நன்மை அதிகரிக்கும்.ரேவதி; செயல்களில் சங்கடம்புதபகவான், குருபகவான் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு பிறக்கும் வருடமான 2024 எத்தகைய பலன்களை வழங்கப் போகிறது?உங்கள் ராசிக்கு 2ம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவானால் உங்களுக்கு எத்தனை சங்கடங்கள் வந்தாலும் அதையெல்லாம் எதிர்கொள்ளும் சக்தி உங்களுக்கு உண்டாகும் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும். விரய ஸ்தானம் என்னும் 12ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனிபகவானால் காரியத்தில் தேக்கம், வருமானத்தில் குறைபாடு உண்டாகும். பொருள் விரயமாகும். வீண் அலைச்சல், மன உளைச்சல் ஏற்படும். மதிப்பிற்கும் கவுரவத்திற்கும் பங்கம் உண்டாகும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் ராகுவும், ஏழாமிட கேதுவும் உங்கள் நிலையில் பெரிய மாற்றங்களை உண்டாக்குவர்.சனி சஞ்சாரம்சனி பகவானின் சஞ்சார நிலை உங்களுக்கு சாதகமாக இல்லை என்றாலும் ஜன 1 -  பிப் 15, காலத்தில் தாரா பலனாலும், அஸ்தமனம், வக்கிர நிலைகளிலும் விரயச்சனியின் பாதிப்பில் இருந்து விடுபடுவீர்கள். முயற்சி யாவும் லாபமாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். இதற்கு முன்பிருந்த சங்கடங்கள் முடிவிற்கு வரும். தடைப்பட்ட முயற்சி முடிவிற்கு வரும். பணவரவு அதிகரிக்கும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். பணியின் காரணமாக வெளியூருக்கு செல்லும் நிலை சிலருக்கு ஏற்படும். புதிய பொறுப்பு, பதவிகள் வந்து சேரும். ராகு - கேது சஞ்சாரம்உங்கள் ராசிக்குள் ராகுவும், 7ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவும் அலைச்சலை அதிகரிப்பர். பிரச்னைகளில் உங்களை சிக்க வைப்பர். அதே நேரத்தில் யோகப் பலன்களை வழங்குவர். சட்டரீதியான பிரச்னைகளையும் சந்திக்க வைப்பர். தீயவரோடு சேர வைப்பர். வாழ்க்கைத் துணையோடு பிரச்னை, நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடு, கூட்டுத்தொழிலில் சங்கடம், மனதில்  பயத்தை உண்டாக்குவர். குரு சஞ்சாரம்ஏப்.30  வரை குடும்ப ஸ்தானமான 2ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருபகவான், குடும்பத்தில் இருந்த சங்கடங்களை விலக்கி வைப்பார். பணவரவு அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்ப்பு நீங்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். பணியில் எதிர்பார்த்த இட மாற்றமும், பதவி உயர்வும் உண்டாகும். வியாபாரம், தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய முயற்சி வெற்றியாகும். உடல்நிலை சீராகும். மே 1 முதல் 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருபகவானால் எதிர்பார்ப்பு இழுபறியாகும். முயற்சிகளில் சங்கடம் தோன்றும். நண்பர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வர். உடல் நிலையிலும் மன நிலையிலும் பாதிப்பு உண்டாகும். உறவுகளிடம் பிரச்னைகள் தோன்றும். சூரிய சஞ்சாரம்ஜன 15 - பிப் 12, மே 14 - ஜூன் 14, ஆக.17 - செப்.16, டிச.16 - 31 காலங்களில் சூரிய பகவானின் சஞ்சார நிலை சாதகமாக இருப்பதால் நினைத்தது நினைத்தபடி நடந்தேறும். முயற்சிகள் யாவும் வெற்றியாகும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். ஆரோக்கியம் சீராகும். எதிரிகள் விலகிச் செல்வர். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.பொதுப்பலன்விரய சனியின் காலம் என்றாலும் ஏப். 30 வரை 2ம் இட குருவும்,  சூரிய பகவானும், செவ்வாய் பகவானும் இந்த ஆண்டில் உங்களுக்கு நன்மைகளை அதிகரிப்பர். விரய சனியின் தாக்கத்திலிருந்து உங்களைப் பாதுகாப்பார்கள். முயற்சிகள் வெற்றியாகும். நெருக்கடி விலகும். பண வரவில் இருந்த தடைகள் நீங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் தீரும், வழக்கு, விவகாரங்களில் சாதகமான நிலை ஏற்படும். வெளிநாட்டு முயற்சி ஆதாயம் தரும். தொலைந்து போன பொருட்கள் கிடைக்கும். உங்கள் மதிப்பு உயரும்.தொழில்தொழிலில் கவனம் அதிகரிக்கும். கடந்த கால அனுபவத்தைக் கொண்டு தொழிலில் வெற்றியடைவீர்கள். முதலீட்டில் லாபம் காண்பீர்கள். சிலர் வெளிநாட்டு தொடர்புடைய வர்த்தகத்தில் ஈடுபடுவீர்கள்.பணியாளர்கள்பணிபுரியும் இடத்தில் நன்மை அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். முதலாளி உங்கள் திறமைக்கு மதிப்பளிப்பார். அரசு பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு உண்டாகும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.பெண்கள்சாதுரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, இக்காலத்தில் யாவும் நன்மையாகும். வாழ்க்கைத் துணையின் எண்ணத்தை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். புதிய நட்புகளை எடை போட்டு அங்கீகரிப்பீர்கள். பணியில் கவனம் செலுத்தி மேலதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். தனியார் நிறுவத்தில் பணிபுரிபவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். சுயதொழில் செய்து வருபவர்கள் தொழிலை விரிவு செய்து லாபம் அடைவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். எந்த ஒன்றையும் சமாளித்து வெற்றி பெறக்கூடிய சக்தி ஏற்படும்.கல்விஇக்காலத்தில் படிப்பில் கவனம் சிதறும் என்பதால் எதிர்காலத்தை மனதில் வைத்து ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பது நலமாகும்.உடல்நிலைபரம்பரை நோய், பருவ நோய்களால் எதிர்பாராத பாதிப்பு உண்டாகும். ஏழரைச் சனியின் காலம் என்பதால் ஏதாவது கோளாறு உடலில் இருந்து கொண்டே இருக்கும். மருத்துவச் செலவு அதிகரிக்கும்.குடும்பம்குடும்பத்தின் மீது எப்போதும் அக்கறை உண்டாகும்.  ஏப் 30 வரை 2ம் இட குருவால் குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடந்தேறும். சிலர் புதிய வீட்டிற்கு குடியேறுவர். தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதும், பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவதும், நேர்மையான வழியில் செல்வதும் குடும்பத்தில் நன்மையை அதிகரிக்கும்.பரிகாரம்; திருவெண்காடு புதன் பகவானை வழிபட்டு அன்னதானம் செய்ய நன்மை அதிகரிக்கும்.


ShareTweetShareShare

Advertisement

Advertisement Tariff

Advertisement




      Dinamalar
      Follow us