sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 14, 2026 ,மாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

/

13

முந்தய பதிப்புகள்

இன்றுநேற்று
இன்றுநேற்று

To type in English

 (or) 

Press CTRL+G 

To type in English

மொத்த செய்திகள்: 1055

ொகுதியை செலக்ட் செய்வதில் தேமுதிகவில் குழப்பம் Dmk Alliance|Dmdk| premalatha| constesting in electio

வீடியோ: அரசியல்

7 hour(s) ago

மேஷம்அசுவினி: வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை உணர்ந்து, அனைத்தையும் எதிர்கொண்டு வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் நன்மையான மாதமாகும். ஞான, மோட்சக் காரகனான கேது ஐந்தாம் இடத்தில், விரய ஸ்தானத்தில் சனி பகவான், பூர்வ புண்ணியாதிபதி சூரியன் சஞ்சரித்தாலும், ராசிநாதன் செவ்வாய் ஏப். 1 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தைரியம் கூடும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வரவேண்டிய பணம் வரும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். மாதத்தின் தொடக்கத்தில் குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடைவதால் அவருடைய பார்வைகளால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். புதிய இடம் வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு கூடுதல் பொறுப்பு உண்டாகும். இக்காலத்தில் மருத்துவ செலவுகளுக்கு வாய்ப்பிருப்பதால் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். பெண்கள் குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்று செயல்படுவதால் பிரச்னைக்கு இடமில்லாமல் போகும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை செலுத்துவது நன்மை அளிக்கும்.சந்திராஷ்டமம்: ஏப். 5, 6.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 16, 18, 25, 27. ஏப். 7, 9.பரிகாரம்: கற்பக விநாயகரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.பரணிஉழைப்பால் உயர்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் பங்குனி மாதம் முன்னேற்றமான மாதமாகும். அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகள் வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். நவீன பொருட்கள், வாகனம் என்று வாங்க முடியும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்டிருந்த இடைவெளி விலகும். கூட்டுத்தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். விரய ஸ்தானத்தில் சனி, சூரியன் சஞ்சரித்தாலும் மாதம் முழுவதும் யோகக்காரன் ராகு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வரவிற்கு குறைவிருக்காது. நெருக்கடிகள் ஏற்படாது. நினைத்ததை உங்களால் நினைத்தபடி நடத்திக் கொள்ளமுடியும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி முடிவிற்கு வரும். முடங்கிக் கிடந்த தொழில்களும் முன்னேற்றம் அடையும்.  ஏப். 6 வரை புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் அனைத்திலும் நிம்மதியான நிலை உருவாகும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வங்கியில் கேட்டிருந்த பணம் வரும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் கனவு நனவாகும். ஏப். 1 முதல் ராசி நாதன் செவ்வாயும் விரய ஸ்தானத்திற்கு செல்வதால் வரவு செலவில் எச்சரிக்கையாக இருப்பது நன்மை அளிக்கும். வாகனப்பயணத்தில் சாகசங்களுக்கு இடம் கொடுக்காமல் நிதானம் காப்பது அவசியம். புதிய முதலீடுகள் செய்வதற்கு நன்றாக யோசிக்கவும். பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்வோர் ஏற்ற, இறக்க நிலைகளை அறிந்து முதலீடு செய்வது அவசியம். மேலதிகாரியின் உத்தரவின்படி செயல்படுவதால் சங்கடங்கள் உங்களை நெருங்காமல் போகும். மாணவர்கள் படிப்பைத்தவிர வேறு சிந்தனைக்கு இப்போது இடம் கொடுக்க வேண்டாம்.சந்திராஷ்டமம்: ஏப். 6, 7.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15, 18, 24, 27. ஏப். 6, 9.பரிகாரம்: பிரத்தியங்கிராவை வழிபட சங்கடங்கள் விலகும். கார்த்திகை 1 ம் பாதம்: முயற்சியால் முன்னேற்றம் அடைந்து வரும் உங்களுக்கு பிறக்கும் பங்குனி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். விரய ஸ்தானத்தில் மாதம் முழுவதும் சூரியன், சனி சஞ்சரிப்பதால் பல வகையிலும் செலவுகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த வரவும் இழுபறியாகும். உழைப்பு, அலைச்சல் என்று மனம் வேதனையில் மூழ்கும். ஒவ்வொரு வேலையிலும் கடுமையாக உழைக்க வேண்டியதாக இருக்கும். ஏப். 1 முதல் ராசி நாதன் செவ்வாயும் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரிகள் விற்பனை,  முதலீட்டில் கவனமாக இருப்பது நன்மையாகும். அரசியல்வாதிகள் தலைமையை அனுசரித்துச் செல்வது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பல வகையிலும் வேலை பளு கூடும். உடல்நிலையில் அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். எதிர்பாராத செலவுகள், தேவையற்ற முதலீடுகள், ஏமாற்று விளம்பரங்களால் கையிருப்பு கரைய வாய்ப்பிருப்பதால் பண விவகாரத்திலும். கொடுக்கல், வாங்கலிலும் நிதானம் காப்பது இந்த நேரத்தில் அவசியம். என்றாலும் மங்களக் காரகன் குருபகவான் மார்ச் 17 முதல் 7, 9, 11 ம் இடங்களைப் பார்ப்பதால் நண்பர்களால் ஆதாயம், வாழ்க்கைத் துணையின் ஆதரவு, பெரியோரின் உதவி என்று உங்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தும். தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டிருக்கும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சியும் வெற்றியாகும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். மாணவர்களுக்கு இது முக்கியமான காலம் என்பதால் படிப்பில் கூடுதல் அக்கறை செலுத்துவது அவசியம்.சந்திராஷ்டமம்: ஏப். 7, 8.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 18, 19, 27, 28. ஏப். 1, 9, 10.பரிகாரம்: அதிகாலையில் சூரியனை வழிபட்டுவர வாழ்வில் நன்மை உண்டாகும்.

கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: நினைத்ததை சாதிப்பதில் முதன்மையானவரான உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் யோகமான மாதமாகும். இதுவரை இருந்த நெருக்கடி, பிரச்னைகள் இருந்த இடம் தெரியாமல் போகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் நீங்கள் எடுக்கும் முயற்சிகளை எல்லாம் வெற்றியாக்குவார். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். சிலருக்கு தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் பிரச்னைகள் எல்லாம் முடிவிற்குவரும். கொடுத்த பணம் வரவில்லை, போட்ட முதலில் லாபமில்லை என்று சங்கடப்பட்டு வந்தவர்கள் நிலை மாறும். புதிய சொத்து, வாகனம் என்ற கனவுகள் நனவாகும். பத்தாமிட சனியால் இரண்டரை ஆண்டுகளாக இருந்த நெருக்கடிகள் எல்லாம் முடிவிற்கு வரும். மங்களக்காரனான குரு பகவானும் இரண்டாம் இடமான தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கையில் பணம் புழங்கும். கடன் தொல்லை விலகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். நோய் நொடி எதிர்ப்பு என்று சங்கடப்பட்டு வந்த நிலையெல்லாம் மாறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புகள், வர்த்தகம் சாதகமாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: ஏப். 8.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15, 19, 24, 28. ஏப். 1, 6, 10.பரிகாரம்: நெல்லையப்பரை வழிபட தொல்லைகள் யாவும் விலகும்.ரோகிணிஎந்த ஒன்றையும் அலசி ஆராய்ந்து முடிவிற்கு வரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். நடைபெற்ற சனிப்பெயர்ச்சி உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. இதுநாள்வரை தொழிலில் இருந்த நெருக்கடிகள் விலகும். வியாபாரம் லாபம் தரும். வேலையில் இருந்த பிரச்னைகள் இருந்த இடம் தெரியாமல் போகும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு வேலையில் இருந்த பயம் நீங்கும். சிலருக்கு தகுதிக்கேற்ற வேலைக் கிடைக்கும். வருமானம் உயரும். ஆத்ம காரகனான சூரியனும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். இதுவரை இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். வெளிநாடு செல்வதற்கு எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். ஏப்.1 முதல் செவ்வாயும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும்.  முடங்கிக்கிடந்த தொழில்கள் மீண்டும் முன்னேற்றம் அடையும். பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். பெண்கள் வாழ்வில் இந்த மாதம் யோகமாக இருக்கும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சங்கடங்கள் முடிவிற்குவரும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் என்று சேரும். வியாபாரிகளுக்கு வருமானத்திற்குரிய வழிகள் தெரியும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: ஏப். 9.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15. 20, 24, 29. ஏப். 2, 6, 11.பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும். சங்கடங்கள் விலகும்.மிருகசீரிடம் 1, 2 ம் பாதம் துணிச்சலாக எந்த ஒரு வேலையிலும் இறங்கி அதில் வெற்றி அடையும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் முன்னேற்றமான மாதமாகும். தைரிய வீரிய பராக்கிரம காரகனான செவ்வாய் ஏப். 1 வரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செய்துவரும் தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். தொழிலை விரிவு செய்யக்கூடிய அளவிற்கு வசதி வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாட்களாக உங்களை நெருக்கடிக்கு ஆளாக்கி வந்த கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள். உங்கள் தன குடும்ப வாக்காதிபதி புதன் ஏப். 6 வரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கையில் பணப்புழக்கம் இருக்கும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். புதிய சொத்து சேரும். வியாபாரிகளுக்கு கிடைக்காமல் இருந்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். முந்தைய மாதங்களை விட இந்த மாதத்தில் உங்களுக்கு அதிகபட்சமான நன்மைகள் நடந்தேறும். இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் குரு செல்வாக்கை உயர்த்துவார். வரவையும் வசதி வாய்ப்புகளையும் அதிகரிப்பார். கொடுத்த வாக்கை காப்பாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். தொண்டர்கள் பலமும், தலைமையின் ஆதரவும் வெற்றிநடை போடவைக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். உங்களைப் பார்த்து பிறர் ஆச்சரியப்படும் அளவிற்கு கடந்த கால சங்கடங்களில் இருந்து மீண்டு வருவீர்கள். வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கு மறுமணத்திற்குரிய வாய்ப்புகள் உருவாகும். பெண்களுக்கு உடல்நிலை சீராகும். குடும்பத்தில் மரியாதை கூடும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: ஏப். 10.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15, 18, 24, 27. ஏப். 6, 9.பரிகாரம்: சுப்ரமணியரை வழிபட நன்மை உண்டாகும். செல்வாக்கு அதிகரிக்கும்.

மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்எந்த ஒன்றிலும் உறுதியாக இருந்து செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஏப். 1 வரை செவ்வாய் பாக்ய ஸ்தானத்திலும், அதன்பின் ஜீவன ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால், எடுக்கும் முயற்சிகளில் கவனம் தேவை. புதிய முதலீடுகளின் எச்சரிக்கை அவசியம். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை நம்பி எந்த ஒரு வேலையிலும் இக்காலத்தில் ஈடுபட வேண்டாம். நம்பிக்கையோடு நீங்கள் உறவாடியவர்கள் கூட அவர்களின் ஆதாயத்திற்காக உங்களுக்கு எதிரியாவார்கள். என்றாலும், உங்கள் ராசிநாதன் ஏப். 6 முதல் சாதகமாக சஞ்சரிப்பதால் தடைபட்ட வேலைகளை உங்களால் முடித்துக் கொள்ள முடியும். எதிர்பார்த்த பணம் வரும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். ராசிக்குள் சஞ்சரிக்கும் குரு பகவான் மாதத்தின் தொடக்கத்தில் வக்கிர நிவர்த்தி அடைவதால் பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். காதல் புரிந்து வருபவர்களுக்கு திருமணத்திற்குரிய வாய்ப்பு உருவாகும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வால் இடமாற்றம் ஏற்படும். சிலருக்கு வேலையின் காரணமாக குடும்பத்துடன் இடைவெளி, வெளியூர் வாசம் ஏற்படும். நம்பிச்சென்று உதவி கேட்கும் இடத்தில் கேட்டது கிடைக்கும். பெரிய மனிதர் ஆதரவும் தெய்வ அருளும் இந்த நேரத்தில் உங்களைப் பாதுகாக்கும். நீண்ட நாள் முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். மாணவர்களுக்கு உயர் கல்விக்குரிய வாய்ப்புகள் உருவாகும்.சந்திராஷ்டமம்: ஏப். 10, 11.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 18, 23, 27. ஏப். 5, 9.பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.திருவாதிரைஎந்த ஒன்றையும் தன்னுடைய சுய முயற்சியால் அடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். இதுவரை உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து யோகப்பலன்களை வழங்கி வந்த சனி பகவான், ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செய்து வரும் தொழிலில் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். வேலையிலும் மேல் அதிகாரிகளால் நெருக்கடி ஏற்படும். ஒரே நேரத்தில் பல வேலைகளில் ஈடுபட வேண்டிய கட்டாயம் உண்டாகும். மனமும் உடலும் சங்கடத்திற்கு ஆளாகும் என்றாலும், உங்கள் சகாய ஸ்தானாதபதி சூரியன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வருமானத்திற்கு குறைவிருக்காது. வரவேண்டிய பணம் வரும். அரசுவழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நடக்க வேண்டிய வேலைகள் நடக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பொறுப்பும் கிடைக்கும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். யோகக்காரகன் ராகு பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். முயற்சிக்கு ஏற்ற ஆதாயம் உண்டாகும். முடங்கிக் கிடந்த தொழில் மீண்டும் செயல்பட ஆரம்பிக்கும். உறவினருடன் ஏற்பட்ட பகை விலகும். குரு பகவானின் பார்வைகளால் நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். விஐபிகள் உதவியால் உங்கள் வேலைகள் நடந்தேறும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைப்பார்க்கும் இடத்திலும், புதியவர்களிடமும் குடும்ப ரகசியங்களையோ, கணவன் மனைவிக்குள்ளான பிரச்னைகளையோ பேசாமல் இருப்பது நன்மையாகும். பண விவகாரத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். குரு பகவானின் பார்வை சாதகமாக இருப்பதால் மாணவர்களின் உயர் கல்வி கனவு நனவாகும்.சந்திராஷ்டமம்: மார்ச் 15, ஏப். 11, 12.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 22, 23, 31. ஏப். 4, 5, 13.பரிகாரம்: காளிகாம்பாளை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் உண்டாகும்.புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் நன்மையான மாதமாகும். உங்கள் ராசிக்குள் சஞ்சரித்துவரும் மங்களக்காரகன் குருபகவான் ஏப். 17 முதல் வக்கிர நிவர்த்தி அடைவதால் உழைப்பு அதிகரிக்கும் என்றாலும், இக்காலத்தில் உங்கள் நீண்டநாள் கனவுகள் நனவாகும். பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் இடத்தையும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் இடத்தையும், பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் இடத்தையும் குருபகவான் பார்ப்பதால், ஜென்ம குருவின் பார்வைகள் உங்களுக்கு நன்மைகளை உண்டாக்கும். இதுவரை குடும்பத்தில் இருந்த  பிரச்னைகள் எல்லாம் விலகும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள், சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். குழந்தை பாக்யத்திற்காக காத்திருந்தவர்களின் ஏக்கம் தீரும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். கூட்டுத் தொழிலில் ஆதாயம் கூடும். விலகிச்சென்ற நண்பர்கள் மீண்டும் தேடிவருவர். பெரியோரின் உதவியும் ஆதரவும் தக்க சமயத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு இடமாற்றம், பதவி உயர்வு என்று ஏற்பட்டு குடும்பத்தை விட்டு விலகி இருக்க வேண்டிய நிலையும் ஏற்படும். என்றாலும் மாதம் முழுவதும் சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதாலும், சகாய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றியாகும். விரும்பிய இடத்திற்கு மீண்டும் மாற்றம் கிடைக்கும். அரசாங்க வழியில் தடைபட்டிருந்த வேலைகள் முடிவிற்கு வரும். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான காலமாக இருக்கும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு அதற்குரிய வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் நிம்மதியும், நவீன பொருட்களின் சேர்க்கையும் இருக்கும். பெண்கள் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். உறவுகளுடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். பொன் பொருள் சேரும். மாணவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் ஏற்படும்.சந்திராஷ்டமம்: மார்ச் 16, ஏப். 12.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 21, 23, 30. ஏப். 3, 5.பரிகாரம்: ஆபத் சகாயேஸ்வரரை வழிபட வாழ்வில் நலமும் வளமும் உண்டாகும்.

புனர்பூசம் 4 ம் பாதம்சிந்தித்து செயல்படுவதுடன் மற்றவர்களை வழிநடத்தும் திறமையும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் நன்மையான மாதமாகும். விரய ஸ்தானத்தில் வக்கிரமாக சஞ்சரித்துவரும் குரு பகவான் மார்ச் 17 முதல் வக்கிர நிவர்த்தி அடைவதால், உங்கள் தேவைகளுக்காகவும், ஆடம்பரமாக வாழ்வதற்காகவும் கையிருப்பு கரையும். குடும்பத்திலிருந்த நெருக்கடிகள் விலகும். நிம்மதியாக தூங்க முடியவில்லை என்று வருத்தப்பட்டு வந்தநிலை மாறும். தாயாரின் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கூடும். எடுக்கும் வேலைகளில் வெற்றியும் எதிர்பார்த்த ஆதாயமும் உண்டாகும். திடீர் வாய்ப்புகள் தேடிவரும். அதிர்ஷ்ட தேவதை உங்கள் வாசலுக்கு வந்ததுபோல் சந்தோஷம் அதிகரிக்கும். உங்கள் தன, குடும்பாதிபதி சூரியன் மாதம் முழுவதும் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கடந்த மாதத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். பொது வாழ்க்கையில், அரசியலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். இதுவரை கிடைக்காமல் இருந்த பொறுப்பும் பதவியும் கிடைக்கும். திட்டமிட்டு செயல்படும் வேலைகள் ஆதாயம் தரும். விஐபிகள் ஆதரவும் இந்த மாதத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். வியாபாரிகளுக்கு அரசு வழியில் ஏற்பட்ட சங்கடங்கள் பிரச்னைகள் முடிவிற்கு வரும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். விவசாயிகள் மாதத்தின் முற்பகுதியில் விளைச்சலில் கவனமாக இருக்க வேண்டும். வயதானவர்களுக்கு ஆரோக்யம் சீராகும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தடைகள் விலகும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: மார்ச் 16, ஏப். 13.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 20, 21, 29, 30. ஏப். 2, 3, 11, 12.பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.பூசம்நினைத்ததை சாதிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் யோகமான மாதமாகும். இரண்டரை ஆண்டு காலமாக உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து நெருக்கடிக்குமேல் நெருக்கடிகளை உங்களுக்கு கொடுத்துவந்த சனி பகவான்,  பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் செல்வாக்கு உயரும். இதுவரை ஏற்பட்ட நெருக்கடிகள் பிரச்னைகள் முடிவிற்கு வரும். தொழிலில் முன்னேற்றமான நிலை உண்டாகும். சமூகத்தில் உங்களுக்கென்று தனி மரியாதை உருவாகும். இழுபறியாக இருந்த வழக்குகள், வேலைகள் முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சந்தித்த மெமோ, இடைநீக்கம் போன்ற சங்கடங்கள் முடிவிற்கு வரும்.  எதிர்பார்த்த இடமாற்றமும், பதவி உயர்வும் கிடைக்கும். சகோதரர்களின் ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். தலைமையின் ஆதரவும் தொண்டர்கள் பலமும் கூடும். தேர்தலில் போட்டியிடுவதற்கும் சிலருக்கு வாய்ப்புக் கிடைக்கும். பண வரவில் ஏற்பட்ட தடைகள் விலகும். வரவேண்டிய பணம் வரும். சனி பகவான் ஒரே நேரத்தில் நான்கு வழிகளில் இக்காலத்தில் நன்மைகளை வழங்கிட இருப்பதால், உங்களை இதுவரை உதாசீனம் செய்து வந்தவர்களும் உயர்ந்து பார்க்கும் நிலை ஏற்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு எதிர்காலத்தின் மீது அக்கறை உண்டாகும். அதனால் படிப்பில் ஆர்வம் ஏற்படும்.சந்திராஷ்டமம்: மார்ச் 17. ஏப். 13.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 20, 26, 29. ஏப். 2, 8, 11.பரிகாரம்: சனிக்கிழமை தோறும் நவக்கிரகத்திற்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்ற நன்மை உண்டாகும்.ஆயில்யம்எந்த ஒன்றிலும் நிதானமாகவும் யோசித்தும் செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். ஏப். 6 வரை புத பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் மனம் தெளிவாகும். அறிவாற்றல் வெளிப்படும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்குவரும். மறைந்த புதன் நிறைந்த செல்வங்களை தருவார் என்ற வார்த்தைக்கேற்ப இக்காலத்தில் ஷேர் மார்க்கெட் உயர்வதுபோல் உங்கள் பொருளாதார நிலை உயரும். கேட்ட இடத்திலிருந்து பணம் வரும். திரும்ப வரவே வராது என்று முடிவு செய்து கை விட்ட பணமும் வரும். வியாபாரிகளுக்கு இழுபறியாக இருந்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். கடன் தொல்லையால் ஏற்பட்ட பிரச்னை தீரும். வங்கியில் கேட்டிருந்த பணம் வரும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். இந்த நேரத்தில் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் உங்கள் செல்வாக்கை உயர்த்துவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். இதுநாள்வரை மற்றவர்கள் பார்வைக்கு சாதாரணமானவராக இருந்த உங்கள் நிலை இந்த மாதம் முதல் உயர ஆரம்பிக்கும். குரு பகவானின் பார்வைகள் சுக ஸ்தானத்திற்கும், சத்ரு ஜெய ஸ்தானத்திற்கும், அஷ்டம ஸ்தானத்திற்கும் கிடைப்பதால் மனதில் நிம்மதி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதாக கண்ட கனவுகள் நனவாகும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகி ஆரோக்கியமாக நடைபோடக்கூடிய நிலை உண்டாகும். சந்தோஷமாக வாழ்ந்திடக் கூடிய அளவிற்கு எல்லாம் சாதகமாகும். சிலர் செலவுகள் வழியே நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். பெண்களுக்கு உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். ஆரோக்கியமாக நடைபோடக்கூடிய நிலை உண்டாகும். வீட்டிலும், வேலைப்பார்க்கும் இடத்திலும் மதிப்பும் மரியாதையும் கூடும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உயர் கல்வி பற்றிய எண்ணத்துடன் பொதுத்தேர்வை எதிர்கொள்வீர்கள்.சந்திராஷ்டமம்: மார்ச் 18.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 20, 23, 29. ஏப். 2, 5, 11.பரிகாரம்: நரசிம்மரை வழிபட சங்கடங்கள் விலகும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும்.

மகம்விடா முயற்சியுடன் தொடர்ந்து எதிர்நீச்சல் போட்டுவரும் உங்களுக்கும் பிறக்கும் பங்குனி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். கர்மக்காரகன் சனி, ராசிநாதன் சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வேலைப்பளு கூடும் எந்த ஒரு வேலையையும் எடுத்தோம் முடித்தோம் என்று முடிக்க முடியாமல் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். உடல்நிலையில் எதிர்பாராத சங்கடங்கள், செய்துவரும் தொழிலில் முதலீட்டிற்கேற்ற லாபம் இல்லாமல் போகும். என்றாலும் ஏப். 6 முதல் உங்கள் தன குடும்பாதிபதி புதன் 8ம் இடம் செல்வதால் எதிர்பார்த்த பணம் வரும். முடியாமல் இருந்த வேலைகளை முடிக்க முடியும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் தடைகள் விலகும். பணியாளர்கள் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான நிலை ஏற்படும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உருவாகும். ஜென்ம ராசிக்குள் ஞான மோட்சக்காரகன் கேது ராசிக்குள் சஞ்சரிப்பதால் உங்கள் வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு ஆசைகளை அதிகரிப்பார். கூட்டுத்தொழிலில் இருந்த ஒற்றுமையை வேற்றுமையாக்குவார். வீண் செலவுகளையும் அதிகரிப்பார். புதிய நட்புகள் வழியே சங்கடங்களை ஏற்படுத்துவார். அஷ்டம கிரகங்கள் கஷ்டங்களை அதிகரிக்கும் என்பதால் பெண்கள் தங்கள் உடல்நிலையில் கவனமாக இருப்பதும், வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதும் நன்மையளிக்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் குடும்ப ரகசியங்களையும் விவகாரங்களையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். மாணவர்கள் பொதுத்தேர்வில் கூடுதல் அக்கறை எடுப்பது அவசியம்.சந்திராஷ்டமம்: மார்ச் 19.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 16, 25, 28. ஏப். 1, 7, 10.பரிகாரம்: பைரவரை வழிபட சங்கடங்கள் விலகும். பயம் நீங்கும்.பூரம்நினைத்ததை சாதிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் நன்மையான மாதமாகும். அதிர்ஷ்டக்காரகனும், உங்கள் ராசிக்கு ஜீவனாதிபதியுமான சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் மனதில் இருந்த குழப்பம் விலகும். உங்களிடமும் ஒரு தெளிவு இருக்கும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். பொருளாதார நிலை உயரும். மற்றவரால் முடிக்க முடியாத வேலைகளை முடித்து ஆதாயம் காண்பீர்கள். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். புதிய இடம், வீடு வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். பிறருக்கு கொடுத்து உதவிடக்கூடிய அளவிற்கு உங்கள் நிலைமை உயரும். என்றாலும் ராசிநாதன் சூரியன் கர்மக்காரகன் சனியுடன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் வேலைகளில் நிதானம் வேண்டும். உங்களுக்கான எந்த ஒரு வேலையாக இருந்தாலும் அதைப் பிறரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்துகொள்வது நன்மையாகும். சனி பகவானின் பார்வைகள் பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், ஜீவன ஸ்தானத்தையும் பார்ப்பதால் செய்து வரும் தொழிலில் கூடுதல் அக்கறை தேவைப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரியை அனுசரித்துச் செல்வது நன்மைதரும். உறவினர்களால் சில நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் பேச்சிலும் வார்த்தைகளிலும் நிதானம் தேவை. பண விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம். ஏப். 6 முதல் புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் புதிய முயற்சிகள் வெற்றியுண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் கூடும்.சந்திராஷ்டமம்: மார்ச் 20.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15, 19, 24, 28. ஏப். 1, 6, 10.பரிகாரம்: ராஜ ராஜேஸ்வரியை வழிபட எடுக்கும் வேலைகள் வெற்றியாகும்.உத்திரம் 1 ம் பாதம்எந்த ஒன்றிலும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் முன்னேற்றமான மாதமாகும். ராசிநாதன் சூரியனும், கர்மக்காரகன் சனியும் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களுக்கு நெருக்கடிகளை உண்டாக்கினாலும், மார்ச் 17 முதல் குரு பகவான் லாப ஸ்தானத்தில் வக்கிர நிவர்த்தி அடைவதால், உங்களுக்கேற்பட்ட சங்கடங்கள் விலகும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வரும். புதிய தொழில் தொடங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இளைய சகோதரருடைய ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பிள்ளைகள் பெருமை அடையக்கூடிய நிலை உருவாகும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும்.  வேலையின் காரணமாக கணவன் ஓரிடம், மனைவி ஓரிடம் என்று வாழ்ந்து வந்த நிலைமாறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேலையில் ஏற்பட்ட பிரச்னைகள் சங்கடங்கள் முடிவிற்கு வரும். சேமிப்பு உயரும். புதிய சொத்து சேரும். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.சந்திராஷ்டமம்: மார்ச் 21.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 19, 28. ஏப். 1, 10.பரிகாரம்: சூரிய நாராயணரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

உத்திரம் 2, 3, 4 ம் பாதம்அறிவாற்றலுடன் வாழ்வில் முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் யோகமான மாதமாகும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் ராசியைப்பார்ப்பதால் உங்களுக்குள் நம்பிக்கை அதிகரிக்கும். இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்ததுபோல் உங்கள் நிலை மாறும். செல்வாக்கு உயரும். எடுத்த வேலைகளில் வெற்றியுண்டாகும். எதிர்ப்பு விரோதம் என்றிருந்த நிலையெல்லாம் மாறும். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். தொழில் லாபம் தரும். உங்கள் சகாய ஸ்தானாதிபதி செவ்வாய் மாதம் முழுவதும் ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் எந்த ஒன்றிலும் துணிச்சலாக செயல்படுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். தலைமையின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்புவரும். என்றாலும் மார்ச் 27 வரை சுக்கிரன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாலினரிடம் இருந்து ஓரடி விலகி இருப்பது உங்கள் பெயருக்கும் கவுரவத்திற்கும் நன்மையை உண்டாக்கும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை இந்த நேரத்தில் நன்மையளிக்கும். பெண்களுக்கு இந்த மாதம் யோகமாக இருக்கும். ஆரோக்கியமாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். பணியிடத்திலும் நிம்மதியான நிலை இருக்கும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வருவாய் அதிகரிக்கும். மாணவர்களுக்கு ராசிநாதனே வித்யா காரகன் என்பதால் படிப்பில் அக்கறை கூடும்.சந்திராஷ்டமம்: மார்ச் 21.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 19, 23, 28. ஏப். 1, 5, 10.பரிகாரம்: அதிகாலையில் சூரியனை வழிபட்டுவர வாழ்வில் வளம் உண்டாகும்.அஸ்தம்திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். ராசிநாதன் புதனின் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் எடுத்த வேலைகள் எல்லாம் வெற்றியாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வரவேண்டிய பணம் வரும். உங்கள் வார்த்தைக்கு மதிப்புண்டாகும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களை எதிர்த்து செயல்பட்டவர்கள் நிலை மாறும். சத்ரு ஜெய ஸ்தானத்தில் மாதம் முழுவதும் செவ்வாயும், ராகுவும் சஞ்சரிப்பதால் அரசியல்வாதிகள் செல்வாக்கு அதிகரிக்கும். துணிச்சலாக சில முடிவுகளை எடுத்து அதில் வெற்றி பெறுவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். சிலருக்கு தேர்தலில் போட்டியிடக்கூடிய வாய்ப்புகள் வரும். என்றாலும் மார்ச் 6 முதல் கர்மக்காரகன் சனி பகவான் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து ராசியை பார்ப்பதால் எந்தவொரு வேலையிலும் நிதானம் காப்பது நல்லது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படுவோருக்கு இந்தநேரம் சங்கடமான காலமாக இருக்கும். பாக்ய ஸ்தானத்திற்கு சனிபகவானின் பார்வை கிடைப்பதால் பெரியோர்களின் ஆதரவு, தெய்வ அனுகூலம் எல்லாம் இந்த நேரத்தில் உங்களைப் பாதுகாக்கும். குடும்பத்திலும் நிம்மதி இருக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். குருப் பார்வைகள் சாதகமாக இருப்பதால் தடைபட்ட வேலைகள் நடந்தேறும். பெண்களுக்கு குடும்பம், வேலையில் இருந்த பிரச்னைகள் விலகும். மனதில் நிம்மதி உண்டாகும். ஆரோக்கியத்துடன் செயல்படமுடியும். மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: மார்ச் 21, 22.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 20, 23, 29. ஏப். 2, 5, 11.பரிகாரம்: கைலாச நாதரை வழிபட சங்கடங்கள் விலகும். எடுத்த வேலைகள் வெற்றியாகும்.சித்திரை 1, 2 ம் பாதம்நேரம் வரும்வரை காத்திருந்து நினைத்ததை சாதிப்பதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் முன்னேற்றமான மாதமாகும். தைரிய, பராக்கிரமக்காரகனான செவ்வாய் மாதம் முழுவதும் சத்ரு ஜெயஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சங்கடமான நிலை மாறும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். பகைவரால் ஏற்பட்ட தொல்லைகள், வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி இருந்த இடம் தெரியாமல் போகும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். ராசிநாதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் வரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். ஞானக்காரகன் குரு பகவான் மார்ச் 17 முதல் ஜீவன ஸ்தானத்தில் வக்கிர நிவர்த்தியாவதால் வேலைப்பளு கூடும். மேலதிகாரிக்கும் உங்களுக்கும் இணக்கமற்ற நிலை ஏற்படும். தன, குடும்பம் மற்றும் சுகம், சத்ரு ஜெய ஸ்தானங்களுக்கு குரு பகவானின் பார்வை உண்டாவதால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்புண்டாகும். பணப்புழக்கம் இருக்கும். கடன் தொல்லை விலகும். மனதில் சந்தோஷமான நிலை இருக்கும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் கனவு நனவாகும். எல்லாவற்றையும் சமாளித்திடக்கூடிய நிலை உண்டாகும். பெண்களுக்கு மனதில் நிம்மதி உண்டாகும். நோய் நொடி என்ற நிலைகள் மாறும். மாணவர்களுக்கு தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: மார்ச் 22, 23.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 18, 23, 27. ஏப். 5, 9.பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

சித்திரை 3, 4 ம் பாதம்உழைப்பையே மூலதனமாக கொண்டு வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் யோகமான மாதமாகும். நடைபெற்ற சனிப் பெயர்ச்சி பிரச்னைகளில் இருந்து உங்களை விடுவிக்கும். எடுத்த வேலைகளில் வெற்றிபெற முடியும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். போராட்டமாக இருந்த வாழ்க்கையில் புதிய பாதை தெரியும். வருமானம் அதிகரிக்கும். வசதி வாய்ப்புகள் உண்டாகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களும் இனி உங்களிடம் வந்து சமாதானம் பேசக்கூடிய நிலை உண்டாகும். தைரிய வீரிய காரகனான செவ்வாயும் ஏப். 1 முதல் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இத்தனை நாளும் பயந்தும் பதுங்கியும் வாழ்ந்து வந்த நீங்கள் துணிச்சலுடன் நடைபோடுவீர்கள். எடுத்த வேலைகளை முடிப்பீர்கள். அரசு வழியில் தடைபட்டிருந்த வேலைகள் முடிவிற்கு வரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். வம்பு வழக்கு என்றிருந்த நிலை மாறும். வாழ்க்கையில் எதுவுமே கிடைக்கவில்லை ஒரே போராட்டமாக இருக்கிறது என்று புலம்பி வந்த நிலையிலும் மாற்றம் ஏற்படும். தொழில் லாபம் தரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பிள்ளைகள் உங்கள் வார்த்தைக்கு மதிப்பளிப்பார்கள். மாணவர்களுக்கு ஏற்பட்ட குழப்பங்கள் விலகும். படிப்பில் ஆர்வம் உண்டாகும்.சந்திராஷ்டமம்: மார்ச் 23.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15, 18, 24, 27. ஏப். 6, 9.பரிகாரம்: அங்காள பரமேசுவரியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.சுவாதிஉழைப்பதற்கு தயங்காத உங்களுக்கு பிறக்கும் பங்குனி மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். யோகக்காரகன் ராகு ஐந்தாம் இடத்தில் சஞ்சரித்தாலும், பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை ஐந்தாம் இடத்திற்கு உண்டாவதால், உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாகும். எத்தனை முயற்சிகள் எடுத்தும் நடக்காத வேலைகள் இப்போது முடிவிற்கு வரும். செல்வாக்கு அதிகரிக்கும். லாபாதிபதி சூரியன் சத்ரு ஜெய ஸ்தானத்தில் கர்மக்காரகன் சனியுடன் இணைந்து சஞ்சரிப்பதால் இத்தனை நாளும் பட்ட கஷ்டங்களுக்கு ஒரு முடிவு உண்டாகும். சலிப்பும் வேதனையுமாக வாழ்ந்த நிலையில் மாற்றம் ஏற்படும். வேலைக்காக முயற்சித்து தோல்வி அடைந்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். பணியாளர்களுக்கு தடைபட்டுவந்த பதவி உயர்வு கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். சமூகத்தில் உங்களுக்கென்று ஒரு தனி இடம் உண்டாகும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். உடல், மன நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். இழுபறியாக இருந்த விவகாரங்கள் முடிவிற்கு வரும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமான நிலை உண்டாகும். பெண்களுக்கு நீண்ட நாள் கனவுகள் பூர்த்தியாகும். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு தகுதியான வரன் வரும். குழந்தை பாக்யத்திற்காக ஏங்கியவர்கள் ஏக்கம் தீரும். ஏப். 6 முதல் பாக்யாதிபதி புதனும் ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் பணவரவு அதிகரிக்கும். வராமல் இருந்த பணம் வரும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும் மாணவர்களுக்கு படிப்பில் ஏற்பட்ட கவனக்குறைவு விலகும். சந்திராஷ்டமம்: மார்ச் 23, 24.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15, 22, 31. ஏப். 4, 6, 13.பரிகாரம்: துர்கையை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மை உண்டாகும்.விசாகம் 1, 2, 3 ம் பாதம்எந்த ஒன்றையும் முன்னதாகவே அறிந்து அதற்கேற்ப செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் யோகமான மாதமாகும். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்துவரும் குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடைவதால், இதுநாள்வரையில் இருந்த சங்கடங்கள் விலகும். பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்களைக் கண்டு கொள்ளாமல் விலகிச் சென்றவர்களும் பாக்ய குருவால் மீண்டும் உங்கள் தயவை நாடிவருவர். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். உங்கள் ராசியை குருபகவான் பார்ப்பதால் எடுத்த முயற்சிகள் வெற்றியாகும். சமூகத்தில் செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளுக்கு பட்டம், பதவி தேடி வரும். சிலர் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி அடைவீர்கள். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் புத்திரர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். அவர்களால் பெருமை உண்டாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். ஆத்ம காரகன் சூரியன், கர்மக்காரகன் சனி, ஞான மோட்சக்காரகன் கேது, ஞானக்காரகன் குரு என்று இந்த மாதத்தில் உங்களுக்கு பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகள் யாவும் முடிவிற்குவரும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். விவாகரத்திற்காக நீதிமன்றம் வரை சென்றவர்களும் மீண்டும் பேசி சமாதானம் அடையக்கூடிய நிலை உருவாகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி கிடைக்கும். விவசாயத்தில் ஆதாயம் உண்டாகும். பொன், பொருள், வாகனம் என்று வாங்குவதுடன் பிறருக்கு உதவி செய்யக் கூடிய அளவிற்கு உங்கள் நிலை மாறும். மாணவர்கள் அக்கறையுடன் படித்து பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் பெற முடியும்.சந்திராஷ்டமம்: மார்ச் 24. 25.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15, 21, 30. ஏப். 3, 6, 12.பரிகாரம்: ஆதி திருவரங்கனை வழிபட வாழ்வில் வெற்றி உண்டாகும்.

விசாகம் 4 ம் பாதம்வேகமும் விவேகமும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் பங்குனி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். அஷ்டம ஸ்தானத்தில் வக்கிரம் அடைந்திருந்த குரு பகவான் மார்ச் 17 முதல் வக்கிர நிவர்த்தி அடைவதால் உங்கள் வேலைகளில் குழப்பம் அதிகரிக்கும். அவசரமாக சில வேலைகளில் இறங்கி அதனால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரிகளுக்கு போட்ட முதலீட்டையும் எடுக்க முடியாத அளவிற்கு நிலைமை மாறும். பணியாளர்களுக்கு வேலைப்பளு கூடும். மேல் அதிகாரிகளால் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். குரு பகவானின் பார்வை 12, 2, 4 ம் இடங்களுக்கு கிடைப்பதால் விரயச்செலவுகள் ஏற்பட்டாலும், அது வாழ்க்கைக்குத் தேவையானதாக இருக்கும். உறக்கம் இன்றி தவித்தவர்களுக்கு நிம்மதியாக உறங்கும் நிலை உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் விலகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். தேவைக்கேற்ற பணம் வந்துகொண்டிருக்கும். சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவிற்கும் குருப்பார்வை உண்டாவதால் உடல், மனநிலையில் ஏற்பட்ட சோர்வு விலகும். தாய் வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படத் தொடங்குவீர்கள். புதிய முயற்சிகளில் மட்டும் கூடுதல் கவனம் தேவைப்படும். பிறருடைய ஆலோசனைகளுக்கு இடம் கொடுக்காமல் எந்த ஒன்றாக இருந்தாலும் அதை நீங்களே முடிவு செய்வது நன்மையளிக்கும். மார்ச் 27 வரை சுக்கிரன் சாதகமாக இருப்பதால் ஆடம்பர செலவுகள் கூடும். பொன், பொருள் சேரும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். பெண்களுக்கு உடலில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். பொதுத்தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நன்மையாகும்.சந்திராஷ்டமம்: மார்ச் 25.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 18, 21, 27, 30. ஏப். 3, 9, 12.பரிகாரம்; பண்ணாரி அம்மனை வழிபட சங்கடங்கள் விலகும்.அனுஷம்எந்த நிலை வந்தாலும் மனம் தளராமல் வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். நான்காம் இடத்தில் அர்த்தாஷ்டம  சனியாக சஞ்சரித்து, ராசியையும் பார்த்து உங்களுக்கு நிறையவே சோதனைகளை வழங்கி வந்த சனி பகவான், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அவருடைய பார்வை உங்கள் ராசியை விட்டு விலகி உள்ளது. சனி பகவான் பார்வை உங்களை விட்டு விலகுவதே பெரும் நன்மையாகும். லாப ஸ்தானத்திற்கு சனிப்பார்வை உண்டாவதால் இதுவரை இருந்த நெருக்கடிகள் இனி இருக்காது. தொடர்ந்து பல சங்கடங்களை சந்தித்து வந்த உங்களுக்கு இனி அவற்றில் மாற்றம் ஏற்படும். தொழில் முன்னேற்றம் அடையும். போட்ட முதலீட்டில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெரியவர்கள் ஆதரவும் இந்த நேரத்தில் உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். குரு பகவானின் பார்வைகளால் பொருளாதார நிலை உயரும். மனதில் சந்தோஷம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஏப். 1 வரை சுக ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் குரு பகவானின் பார்வை அவருக்கு கிடைப்பதால் குரு மங்கள யோகம் உண்டாகிறது. எனவே போராட்டம் முடிவிற்கு வரும். முயற்சியில் வெற்றி உண்டாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். புதிய வாகனம், நவீன பொருட்கள் வாங்குவீர்கள். பணியாளர்கள் மேலதிகாரியை அனுசரித்துச் செல்வதும், மாணவர்கள் மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் அக்கறை செலுத்துவதும் நன்மையை ஏற்படுத்தும்.சந்திராஷ்டமம்: மார்ச் 25, 26.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17, 18, 27. ஏப். 8, 9.பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். சங்கடங்கள் விலகும்.கேட்டைஉழைப்பில் ஆர்வமும், எடுத்த வேலைகளை முடிக்கும் திறமையும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதத்தில் நெருக்கடிகள் நீங்கும். ஏப். 6 வரை புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர்கள். வியாபாரம், தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய வாகனம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். ராசியை விட்டு சனி பகவான் பார்வை விலகி இருப்பதால் உடல் ரீதியாக ஏற்பட்ட நலிவுகள் விலகும். ஆரோக்கியமாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும். பிள்ளைகள் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். அந்நியரின் ஆதரவும் அக்கறையும் உங்கள் பலத்தை மேலும் உயர்த்தும். சோகத்தில் மூழ்கிக் கிடந்தவர்களுக்கு தெளிவு ஏற்படும். குரு பகவானின் பார்வைகள் விரய மற்றும் தன குடும்ப, சுக ஸ்தானங்களுக்கு கிடைப்பதால் செலவு குறையும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உருவாகும். மனதிலும் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் நிலவிய பிரச்னைகள் முடிவிற்கு வரும். ஒருவரை ஒருவர் ஆலோசித்து செயல்படத் தொடங்குவீர்கள். வேலையில் இருப்பவர்கள் தங்கள் பணியில் கவனமாகவும், மேல் நிலையில் இருப்பவர்கள் குற்றம் சொல்லாத அளவிற்கு நடந்து கொள்வதும் நன்மையாகும்.  மாணவர்களுக்கு இது பொதுத்தேர்வு காலம் என்பதால் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நன்மையாகும்.சந்திராஷ்டமம்: மார்ச் 26, 27.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 18, 23, ஏப். 5, 9.பரிகாரம்: வீர ராகவப் பெருமாளை வழிபட நன்மை உண்டாகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.

மூலம்தன்னம்பிக்கையும் பிறரை வழிநடத்தும் திறமையும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் பங்குனி மாதம் நன்மையான மாதமாகும். ஞான மோட்சக்காரகன் கேது பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து வருவதால் பெரியோரின் உதவியும், தெய்வ அருளும் கிடைக்கும். கடந்த மாதத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். புதிய சொத்து வாங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்துவரும் ராசிநாதன், குரு வக்கிர நிவர்த்தி அடைவதால் தடைபட்ட வேலைகள் முடியும். தம்பதிகளுக்குள் தோன்றிய பிரச்னைகள் விலகும். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்தவர்கள், விவாகரத்து கேட்டு நீதிமன்றம் வரையில் சென்றவர்கள் மீண்டும் இணைந்து வாழும்  நிலை உருவாகும். வாழ்வில் இருந்த போராட்டங்கள் மாறி நினைத்ததை சாதித்திடும் வலிமை உண்டாகும். வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். முடங்கிக் கிடந்த தொழில்கள் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்கள் நிர்வாகத்தின் நம்பிக்கைக்கு ஆளாவீர்கள்.  வெளிநாட்டில் பணி செய்வோருக்கு நிம்மதி உண்டாகும். பெண்களுக்கு குடும்பத்திலும், வெளியிலும் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும்.  மாணவர்களுக்கு பொதுத் தேர்வில் ஆர்வம் இருக்கும். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: மார்ச் 27, 28.அதிர்ஷ்ட நாட்கள்: மார்ச் 16, 21, 25, 30. ஏப். 3, 7, 12.பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட குறைகள் நீங்கும். நன்மை அதிகரிக்கும்.பூராடம்நினைத்ததை சாதிக்கும் திறமை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் முயற்சியால் முன்னேற்றம் காணும் மாதமாகும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் ஆடை, ஆபரணம் சேரும். உங்கள் தோற்றத்தில் அழகு வெளிப்படும். வருமானத் தடைகள் விலகும். குடும்ப பிரச்னைகள் முடிவிற்கு வரும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். நவீன பொருட்கள், புதிய வாகனம் வாங்குவீர்கள். பொருளாதார நிலை சீராக இருக்கும். யோகக்காரகன் ராகு மாதம் முழுவதும் சகாயஸ்தானத்தில் குருப் பார்வையுடன் சஞ்சரிப்பதால் முயற்சிகள் வெற்றியாகும். சுய தொழில் செய்பவர்களுக்கு ஆதாயம் கூடும். தொழிலை விரிவு செய்வதற்கு எதிர்பார்த்த பணம் கிடைக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புகழ் கூடும். முயற்சிகள் சாதகமாகும் என்றாலும், பாக்யாதிபதி சூரியனும், குடும்பாதிபதி சனி பகவானும் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உடல் நிலையில் சிறு சங்கடங்கள் ஏற்பட்டு மறையும். தனியார் நிறுவன பணியாளர்களுக்கு நிர்வாகத்தின் பாராட்டுதல் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னை விலகும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவு கூடும். பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் ஏப்.1 வரை சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எந்தவித பிரச்னைகள் வந்தாலும் தைரியமாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும். புதிய இடம், வீடு வாங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தடைகள் விலகும். சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும்.சந்திராஷ்டமம்: மார்ச் 28, 29.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15, 21, 24, 30. ஏப். 3, 6, 12.பரிகாரம்: மீனாட்சி அம்மனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும்.உத்திராடம் 1 ம் பாதம்முன்னேற்றத்தை நோக்கி நடைபோட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். ஆத்ம காரகன் சூரியன் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும். எந்த ஒன்றையும் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும். அவ்வப்போது சிறு சிறு சங்கடங்கள் தோன்றும். ஆயுள்காரகன் கர்மக்காரகன் சனி பகவானும் சுக ஸ்தானத்தில் சஞ்சரித்து ராசியைப் பார்ப்பதால் வேலைகளில் நிதானம் தேவை. புதிய முயற்சிகளில் கவனமுடன் செயல்படுங்கள். மார்ச் 17 முதல் ராசிநாதன் குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடைந்து ராசியைப் பார்ப்பதால் செல்வாக்கு உயரும். எடுத்த வேலைகள் நடந்தேறும். குடும்பம், தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். ஏப். 6 முதல் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் திட்டமிட்டு செயல்படுவீர்கள். உங்கள் அறிவாற்றலும், திறமையும் வெளிப்படும். உங்களுக்கு மேலானவர்களும் உங்கள் ஆலோசனைகளை கேட்பார்கள். வியாபாரிகளுக்கும், கலைஞர்களுக்கும் இழுபறியாக இருந்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். கேட்ட இடத்தில் இருந்து பணம் வரும். நெருக்கடிகள் நீங்கும். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் மதிப்பு உயரும். பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். முதியவர்களுக்கு உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும்.சந்திராஷ்டமம் மார்ச் 29.அதிர்ஷ்ட நாட்கள்: மார்ச் 19, 21, 28, 30. ஏப். 1, 3, 10, 12.பரிகாரம் : அர்த்தநாரீசுவரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும். சங்கடங்கள் விலகும்.

உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்எந்த ஒன்றுக்காகவும் சோர்ந்துவிடாமல் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் நினைத்ததை சாதிக்கும் மாதமாக இருக்கும். ஆத்ம காரகன் சூரியன் சகாய ஸ்தானத்தில் மாதம் முழுவதும் சஞ்சரிப்பதால் நெருக்கடிகள் விலகும். எதிர்பார்த்த வாய்ப்புகள் தேடிவரும். அரசுவழி முயற்சிகள் வெற்றியாகும். அரசியல் வாதிகளின் செல்வாக்கு உயரும். தலைமையின் ஆதரவு கிடைப்பதுடன் தொண்டர்கள் பலமும் கூடும். சிலருக்கு தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்புக் கிடைக்கும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட சட்டப்பிரச்னைகள் முடிவிற்குவரும். எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். சிலர் புதிய தொழில் தொடங்க முயற்சி மேற்கொள்வீர்கள். அதற்கான அனுமதியும் தேவையான பணமும் கிடைக்கும். பெரியோரின் ஆதரவால் செல்வாக்கு உயரும். ஜீவன ஸ்தானத்திற்கு குருப்பார்வை உண்டாவதால் வேலைக்காக செய்யும் முயற்சி வெற்றியாகும். வியாபாரம் விருத்தியாகும். முடியாது என்று கைவிட்ட வேலைகளையும் மீண்டும் தொடர்ந்து ஆதாயம் அடைவீர்கள். விவசாயிகளுக்கு ஏப்.1 முதல் நம்பிக்கை அதிகரிக்கும். விளைச்சலில் எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். மாணவர்கள் கவனக்குறைவிற்கு இடம்கொடுக்காமல் படிப்பில் அக்கறை செலுத்துவது நன்மையாகும்.சந்திராஷ்டமம்: மார்ச் 29, 30.அதிர்ஷ்ட நாள் மார்ச் 17, 19, 26, 28. ஏப். 1, 8, 10.பரிகாரம்: வீரட்டேஸ்வரரை வழிபட வாழ்வில் இருந்த சங்கடம் நீங்கும்.திருவோணம்உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்று தொடர்ந்து முயற்சித்துவரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். ஏழரை சனியின் காலம் முடிந்து சகாய ஸ்தானத்தில் உங்கள் ராசிநாதனான சனி பகவான் சஞ்சரிப்பதால் இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்ததுபோல் தோன்றும். இதுவரை போராட்டமாகவே இருந்த நிலை இனி மாறும். தொழிற்சாலைகளில் உற்பத்தி அதிகரிக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும். சிறுதொழில் நடத்தி வருபவர்களுக்கு வருமானம் உயரும். அரசியல்வாதிகளுக்கும், பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் இதுநாள்வரை இருந்த போராட்ட நிலைமாறும். எதுவுமே நடக்கவில்லை என்று சங்கடப்பட்டு வந்தவர்களுக்கு நீண்டநாள் கனவு நனவாகும். சகாய ஸ்தானாதிபதி குரு பகவான் 6 ம் இடத்தில் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வைகள் குடும்பத்தில் நிம்மதியை உண்டாக்கும். பணவரவை அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற வைக்கும். பழைய கடன்களை அடைத்து நிம்மதியைக் காணவைக்கும். விரயச்செலவுகளைக் குறைக்கும், மனதில் நிம்மதியை உண்டாக்கும். வியாபாரம், தொழிலில் ஆதாயத்தை அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட சிக்கல்களும் விலகும். பெண்களுக்கு உடல்நிலை சீராகும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். மாணவர்கள் மற்ற சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.சந்திராஷ்டமம்: மார்ச் 30, 31.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17, 20, 26, 29. ஏப். 2, 8, 11.பரிகாரம்: பர்வத வர்த்தினியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.அவிட்டம் 1, 2 ம் பாதம்எல்லாம் அவன் செயல் என்று வாழ்க்கையை அதன்போக்கில் நடத்திவரும் உங்களுக்கு பிறக்கும் பங்குனி மாதம் முன்னேற்றமான மாதமாகும். உழைப்பதற்கு தயங்காதவரான உங்களுக்கு கடந்த மாதம்வரை எல்லாமே போராட்டமாக இருந்திருக்கும். எடுத்த வேலைகளிலும் இழுபறியான நிலை ஏற்பட்டிருக்கும். எந்த வழியில் போனாலும் அங்கே ஒரு நெருக்கடி ஏற்பட்டிருக்கும். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற சனிப்பெயர்ச்சியும், மாதம் முழுவதும் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனும், ஏப். 1 முதல் தைரிய காரகனான செவ்வாயும் உங்கள் வாழ்க்கையில் அதிசயக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துவர். நீங்களே நம்ப முடியாத அளவிற்கு வாய்ப்புகள் தேடிவரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். இதுவரையில் உங்களைக் கண்டும் காணாமல் போனவர்களும் உங்களைத்தேடி வரக்கூடிய நிலை உருவாகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு தகுதிக்குரிய வேலைக்கிடைக்கும். இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். புதிய தொழில் தொடங்குவதற்குரிய வாய்ப்புகள் உருவாகும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். குருப்பார்வைகளால் உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உருவாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். பெண்களின் நிலை உயரும். பிறர் தயவை எதிர்பார்த்து வாழ்ந்து வந்தவர்களுக்கு புதிய நம்பிக்கை உண்டாகும். முதியவர்கள் ஆரோக்கியமாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை செலுத்துவது நன்மையாகும்.சந்திராஷ்டமம்: மார்ச் 31.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17, 18, 26, 27. ஏப். 8, 9.பரிகாரம்: ஆறுமுகனை வழிபட உங்கள் வாழ்வில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.

அவிட்டம் 3, 4 ம் பாதம்நினைத்ததை அடைவதற்காக தொடர்ந்து போராடி வரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் யோகமான மாதமாகும். ராசியை விட்டு சனி பகவான் விலகி இருப்பதால் முயற்சியில் இருந்த தடைகள் விலகும். மந்தமான நிலை மாறும். ஜென்ம ராசிக்குள் ஏப். 1 வரை செவ்வாய் சஞ்சரிப்பதால் துணிச்சலாக செயல்படுவீர்கள். இதுவரை உங்களுக்கு நெருக்கடியை உண்டாக்கி வந்த பிரச்னைகள் விலகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் குரு மங்கள யோகம் உங்கள் செல்வாக்கை உயர்த்தும். திருமண வயதினருக்கு வரன் வரும். குழந்தைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். முதலீட்டிற்கேற்ற லாபம் உண்டாகும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். அரசியல் வாதிகளின் நீண்டநாள் கனவு நனவாகும். சிலருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். சுதந்திரமாக செயல்படக்கூடிய நிலை உருவாகும். பெண்களுக்கு குடும்பத்தில் மரியாதையும் பொறுப்பும் கூடும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் இருக்கும். உயர்கல்விக்குரிய வாய்ப்பு உருவாகும்.சந்திராஷ்டமம்: மார்ச் 31, ஏப். 1அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17, 18, 26, 27. ஏப். 8, 9.பரிகாரம்: பைரவரை வழிபட சங்கடங்கள் விலகும். வேண்டுதல் நிறைவேறும்.சதயம்வாழ்வில் உச்சத்தை எட்டிவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் யோகமான மாதமாகும். ராசிக்குள் சஞ்சரித்து வந்த சனி பகவான் இரண்டாம் இடத்திற்கு சென்று விட்டதால் முன்பு போன்ற நெருக்கடிகள் இப்போது இருக்காது. வேகமாக செயல்பட்டு விரும்பியதை அடைந்து விடவேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இந்த நேரத்தில் பாக்ய ஸ்தானம் பலமடைவதால் கடந்த கால நெருக்கடிகள் விலகும். ஞானக்காரகன் குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் உங்கள் அந்தஸ்து உயரும். எந்த ஒன்றிலும் போராட்டமாக இருந்த நிலை மாறும். பெரியோரின் ஆதரவும், தெய்வ அருளும் கிடைக்கும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றமான நிலை உண்டாகும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை உண்டாகும். பொன், பொருள் சேரும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடியும். சப்தம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் புதிய நட்புகளிடம் எச்சரிக்கை அவசியம். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வது நன்மையாகும். பணியிடத்தில் உங்கள் குடும்ப ரகசியங்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம். பெண்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சங்கடம் முடிவிற்கு வரும். முதியவர்கள் கடந்த காலங்களில் அனுபவித்து வந்த சங்கடங்கள் மாறும். உடல்நிலை சீராகும். ஆரோக்கியமாக நடைபோட முடியும். விவசாயிகளுக்கு மனதில் நிம்மதி உண்டாகும். மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: ஏப். 1, 2.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17, 22, 26. ஏப். 4, 8, 13.பரிகாரம்: விஷ்ணு துர்கையை வழிபட வாழ்வில் வளமும் நலமும் உண்டாகும்.பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்மற்றவருடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் பங்குனி மாதம் யோகமான மாதமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் உங்கள் ராசியையும் பார்க்கிறார். குரு பார்க்க கோடி புண்ணியம் என்று முன்னோர்கள் சொன்ன வார்த்தை உண்மையாகப் போகிறது. இதுவரை தடைபட்ட வேலைகள் இனி நடந்தேறும். நீண்டநாள் கனவுகள் நனவாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் லாபம் இல்லை, போட்ட முதலீட்டை திரும்பவும் எடுக்க முடியவில்லை என்று வருந்திக் கொண்டிருந்தவர்கள் மனம் மகிழும் வகையில் இக்காலம் யோகமான காலமாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். சுயதொழில் செய்பவர்களுக்கு விற்பனை உயரும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். நீண்ட காலமாக முயற்சித்தும் திருமணம் முடியாமல் இருந்தவர்களுக்கு தகுதியான வரன் வரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நற்செய்தி கிடைக்கும். பெண்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.சந்திராஷ்டமம்: ஏப். 2, 3.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17, 21, 26, 30. ஏப். 8, 12.பரிகாரம்: கோமதி அம்மனை வழிபட குறைகள் விலகும். நினைப்பது நடந்தேறும்...........

பூரட்டாதி 4 ம் பாதம்யோசித்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ராசிக்குள் சனி பகவானும் சூரியனும் சஞ்சரிப்பதால் வேலைபளு கூடும். ஒரு பக்கம் வேக வேகமாக செயல்பட நினைத்தாலும் மறுபக்கம் அதில் ஏதேனும் ஒரு தடை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இந்த நேரத்தில் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசிநாதன் குரு பகவான் 8, 10, 12 ம் இடங்களைப் பார்ப்பதால் உங்களுக்கு எதிராக செயல்படக்கூடியவர்களை கண்டறிவீர்கள். மறைமுகத்தொல்லைகள் விலகும். உங்கள் செல்வாக்கு வெளிப்படும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். தைரியமாக செயல்படக்கூடிய நிலை ஏற்படும். தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வேலைத்தேடி வருபவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும். செலவுகள் கட்டுப்படும். விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய்க்கு, குரு பகவானின் பார்வை உண்டாவதால் பிரச்னைகள் தீரும். எடுத்த வேலைகளை வெற்றியாகும். முன்னேற்றப் பாதையில் நடைபோடுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியான நிலை உருவாகும். வரவு அதிகரிக்கும். விவசாயிகள் விளைச்சலில் கூடுதல் அக்கறை எடுப்பது அவசியம். பெண்களுக்கு குடும்பத்திலும் வெளியிலும் நிம்மதியான நிலை உண்டாகும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். பொன் பொருள் சேரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும்.சந்திராஷ்டமம்: ஏப். 3.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 21, 30. ஏப். 12.பரிகாரம்: பகவதி அம்மனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும். சங்கடங்கள் விலகும்.உத்திரட்டாதிநிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, இதுவரையில் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்த சனிபகவான் தற்பொழுது ராசிக்குள் ஜென்ம சனியாக சஞ்சரிக்கிறார். எனவே உங்களுக்குள் ஒரு மந்தமான நிலை இருக்கும். எந்த ஒன்றிலும் வேகமாக செயல்பட முடியாமல் போகும். பணியிடத்திலும் கடினமான நிலை இருக்கும். என்றாலும் ராசிநாதனின் பார்வைகள் சாதகமாக இருப்பதால் அனைத்தையும் உங்களால் சமாளித்துக் கொள்ள முடியும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் ஆரோக்யமும், ஐஸ்வர்யமும் உண்டாகும். கையில் பணம் புழங்கும். பொன் பொருள் சேரும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். மாதத்தின் பிற்பகுதியில் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் வெளியூர் பயணம் அதிகரிக்கும். அதன் வழியே ஆதாயங்களையும் காண முடியும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். பெண்களுக்கு உடல்நிலையும், மனநிலையும் சீராகும். கணவருடன் ஏற்பட்ட பிரச்னை விலகும். ஆடை, ஆபரணம் சேரும். வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும் என்றாலும் மனதில் ஏதேனும் ஒரு சங்கடம் இருந்து கொண்டே இருக்கும். விவசாயிகளுக்கு விளைச்சலில் கூடுதல் கவனம் தேவைப்படும். ஜென்ம சனிக்காலம் இது என்பதால் அரசியல்வாதிகள் அவசர முடிவுகளை இந்த நேரத்தில் எடுக்க வேண்டாம். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையாகும்.சந்திராஷ்டமம்: ஏப். 3, 4.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17, 21, 26, 30. ஏப். 8, 12.பரிகாரம்: சனீஸ்வரரை வழிபட்டுவர சங்கடங்கள் விலகும்.ரேவதிதிட்டமிட்டும் செயல்பட்டுவரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஏப். 6 வரை புதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், விரய ஸ்தானத்திற்கு குருப்பார்வை உண்டாவதால் செலவுகள் குறையும். மனதில் இருந்த குழப்பம் விலகும். வியாபாரிகளுக்கும், கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். எந்த வேலையை எடுத்தாலும் அதில் முன்னேற்றமில்லை என்ற நிலைமாறும். ஜீவன ஸ்தானத்திற்கும் குருப்பார்வை உண்டாவதால் வியாபாரம் லாபம் தரும். புதிய முயற்சிகள் சாதகமாகும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். புதிய தொழில் தொடங்க எதிர்பார்த்த அனுமதிகள் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கு ஞான மோட்சக்காரகன் கேதுவால் உடல்நிலை சீராகும். எதிர்ப்புகள் விலகும். வம்பு வழக்குகள் சாதகமாகும். எந்தவொரு சங்கடமும் உங்களை நெருங்காமல் போகும். பெண்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். மாதம் முழுவதும் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் மனம் தெளிவடையும். பொன் பொருள் சேரும். உறவினர் மத்தியில் செல்வாக்குடன் வாழும் நிலை உண்டாகும். ஆசிரியர்களின்  ஆலோசனைகளை மாணவர்கள் ஏற்பது அவசியம்.சந்திராஷ்டமம்: ஏப். 4, 5.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 14, 21, 23, 30. ஏப். 3, 12.பரிகாரம்: ராமநாத சுவாமியை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மை உண்டாகும்.


ShareTweetShareShare

Advertisement

Advertisement Tariff

Advertisement




      Dinamalar
      Follow us