sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

/

16

முந்தய பதிப்புகள்

இன்றுநேற்று
இன்றுநேற்று

To type in English

 (or) 

Press CTRL+G 

To type in English

மொத்த செய்திகள்: 1098

திமுகவை முடிக்க MGR பிளான் என்ன சொல்றார் நாகேந்திரன்!

ஷார்ட்ஸ்

16-Sep-2025

மேஷம்அசுவினி: எந்த ஒன்றிலும் உறுதியாக இருந்து செயல்பட்டு வரும் உங்களுக்கு பிறக்கும் புரட்டாசி மாதம் வாழ்க்கையில் புதிய பாதையைக் காட்டும் மாதமாக இருக்கும். பூர்வ புண்ணியாதிபதி சூரியன் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரையில் இருந்த நெருக்கடி, பிரச்னை, போராட்டம் எல்லாம் ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். செப். 28 வரை புதன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த பணம் வரும். வாங்க நினைத்த இடத்தை வாங்க முடியும். கலைஞர்களுக்கும் வியாபாரிகளுக்கும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசு வழி வேலைகள் ஆதாயம் தரும். புதிய தொழில் தொடங்குவதற்காக எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். உங்கள் செல்வாக்கு உயரும் என்றாலும், பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் ஒவ்வொரு வேலையிலும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும். புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு முன்னதாக அதனால் உண்டாகக் கூடிய விளைவுகள், லாபம் நஷ்டம் பற்றி நன்றாக அறிந்து செயல்படுவதால் நன்மை உண்டாகும். பிள்ளைகள் நலனில் கூடுதல் அக்கறை தேவைப்படும். பூர்வீக சொத்தில் சின்னச் சின்ன பிரச்சனைகள் தோன்றுவதற்கு வாய்ப்பு இருப்பதால் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதாக இருக்கும். இக்காலத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்துச் செல்வதால் உங்கள் எண்ணம் பூர்த்தியாகும்.சந்திராஷ்டமம்: செப். 26, 27.அதிர்ஷ்ட நாள்: செப். 18, 25, அக். 7, 9, 16.பரிகாரம் கற்பக விநாயகரை வழிபட எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.பரணிசெல்வாக்கும் சொல்வாக்கும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் புரட்டாசி மாதம் யோகமான மாதமாகும். அதிர்ஷ்டக் காரகனான சுக்கிரன் அக். 10 வரை பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலக ஆரம்பிக்கும். பொன் பொருள் சேரும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளரின் ஒத்துழைப்பால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். பூர்வ புண்ணியாதிபதியின் சஞ்சாரமும், யோகக்காரகன் ராகுவின் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் வம்பு, வழக்கு முடிவிற்கு வரும். உடல் பாதிப்புகள் விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை, போட்டி இருந்த இடம் தெரியாமல் போகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். சேமிப்பு உயரும். வெளிநாட்டு தொடர்புகள் ஆதாயத்தை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும் சப்தம ஸ்தானத்தில் ராசிநாதன் சஞ்சரிப்பதால் புதிய நட்புகளிடம் எச்சரிக்கை அவசியம். தேவையற்ற பிரச்னைகளில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.சந்திராஷ்டமம்: செப். 27, 28.அதிர்ஷ்ட நாள்: செப். 18, 24. அக். 6, 9, 15பரிகாரம் தில்லை காளியை வழிபட தொல்லைகள் விலகும்.கார்த்திகை 1 ம் பாதம்எந்த ஒன்றிலும் தனித்துவத்துடன் செயல்பட்டு வரும் உங்களுக்கு பிறக்கும் புரட்டாசி மாதம், புத ஆதித்ய யோகத்துடனும், குரு மங்கள யோகத்துடனும் பிறப்பதால் உங்களுக்கு நன்மையான மாதமாகும். மாதம் முழுவதும் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் நீண்ட நாள் பிரச்னைகள் முடிவிற்கு வரும். அரசியல்வாதிகள் செல்வாக்குடன் இருப்பர். பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். வழக்கு, விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகும். எடுத்த வேலைகளை சரியான சமயத்தில் முடிக்கும் நிலை உண்டாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். திருமண வயதினருக்கு வரன் வரும். வங்கியில் கேட்டிருந்த பணம் கைக்கு வரும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடையக்கூடிய நிலை உண்டாகும். பிறருக்கு உதவி செய்து உங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். உறவினர் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். விவசாயிகள் விளைச்சலில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதால் நன்மை உண்டாகும்.சந்திராஷ்டமம்: செப். 28.அதிர்ஷ்ட நாள்: செப். 18, 19, 27. அக். 1, 9, 10.பரிகாரம் அதிகாலையில் சூரியனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

ரிஷபம்கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்:மனதில் தெளிவும் செயலில் உறுதியும் கொண்ட உங்களுக்கு புரட்டாசி  நன்மையான மாதமாகும். ஆத்ம காரகனான சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில், பூர்வ புண்ணியாதிபதி புதனுடன் சஞ்சரிப்பதால் மனதில் இருந்த பயம் விலகும். பிறரால் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். மாதம் முழுவதும் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சப்தமாதிபதி செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுத்த பணிகளில் வெற்றி உண்டாகும். உங்கள் செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும். மனதில் இருந்த குழப்பம் விலகி திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். போட்டியாளரால் ஏற்பட்ட தொல்லை, பிரச்னைகள் முடிவிற்கு வரும். வம்பு வழக்கு என்றிருந்த நிலையில் மாற்றம் ஏற்படும். கடன் தொல்லை விலகும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். அனைத்திலும் சாதகமான நிலை உண்டாகும். தினப் பணியாளர்களுக்கு வரவு கூடும். கடைநிலை ஊழியர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். ரியல் எஸ்டேட், தொழில் முன்னேற்றம் அடையும். சிலருக்கு புதிய சொத்து சேரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மாதத்தின் இறுதியில் புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை முடித்துக் கொள்வீர்கள். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட நெருக்கடி விலகி இணக்கம் ஏற்படும்.சந்திராஷ்டமம்: செப். 29.அதிர்ஷ்ட நாள்: செப். 19, 24, 28. அக். 1, 6, 10, 15.பரிகாரம் மீனாட்சி அம்மனை வழிபட குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.ரோகிணி வாழ்க்கையில் வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்ட உங்களுக்கு புரட்டாசி யோகமான மாதமாகும். அக். 7 வரை தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் குரு உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார்.  உடல்நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். பகை போட்டி என்றிருந்த நிலை மாறும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளுக்கு வழி அமைப்பார். தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். பணியில் இருப்பவர்களுக்கு  நெருக்கடிகளை இல்லாமல் செய்வார். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அக். 8 முதல் 3 ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு சப்தம ஸ்தானத்தை பார்ப்பதால் திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். நண்பர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் பூமிக்காரகன் செவ்வாயுடன் செப்.29 முதல் புதனும் சஞ்சரிப்பதால் நீண்ட நாளாக வாங்க நினைத்த இடத்தை வாங்குவீர்கள். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். செய்து வரும் தொழில் எதிர்பார்த்த லாபத்தை தரும். வருமானம் உயரும். வீட்டில் புதிய பொருள்கள் சேரும். செப். 28 வரை புத ஆதித்ய யோகம் இருப்பதால் செல்வாக்கு உயரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். எந்த ஒன்றிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். வயதானவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு விலகும். ஆரோக்கியம் மேம்படும். மனதில் ஏற்பட்ட பயம் போகும்.சந்திராஷ்டமம்: செப். 30.அதிர்ஷ்ட நாள்: செப். 20, 24, 29. அக். 2, 6, 11, 15.பரிகாரம் லட்சுமி நரசிம்மரை வழிபட நினைத்த வேலைகள் நடந்தேறும்.மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்எந்த ஒன்றையும் துணிச்சலாக எதிர் கொண்டு நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, புரட்டாசி அதிர்ஷ்டமான மாதமாகும். உங்கள் நட்சத்திர அதிபதியும், தைரிய வீரிய காரகருமான செவ்வாய் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் செல்வாக்கு வெளிப்படும். உங்களை எதிர்த்து செயல்பட்டவர்கள் உங்களைத் தேடி வந்து நட்பு பாராட்டுவர்.  உடல்நிலையும் மனநிலையும் சீராகும். உங்களை பாதிப்பிற்குள்ளாக்கி வந்த பிரச்னைகள், சங்கடங்கள், நோய்கள் விலகும். எந்த ஒன்றிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு எடுத்த வேலைகளை முடிப்பீர்கள். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வழக்கு, விவகாரம் சாதகமாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். செப்.29 முதல் புதனும் ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் வர வேண்டிய பணம் வரும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். அக். 8 முதல் சப்தம ஸ்தானத்திற்கு குரு பார்வை கிடைப்பதால் திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு தகுதியான வரன் வரும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணத்திற்குரிய வாய்ப்பு உருவாகும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். சுக ஸ்தான கேது ஆரோக்கியத்தில் சங்கடங்களை ஏற்படுத்தினாலும், 6ம் இடத்தைப் பார்க்கும் குருவும், 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயும் நோய் நொடிகளில் இருந்து உங்களைப் பாதுகாப்பர். சுறுசுறுப்பாக செயல்பட வைப்பார்கள். அதிர்ஷ்ட காரகன் சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பொன், பொருள் சேரும். உங்கள் தோற்றத்தில் மிடுக்கும் பொலிவும் இருக்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். கணவன், மனைவிக்குள் இணக்கம் ஏற்படும்.சந்திராஷ்டமம்: அக். 1.அதிர்ஷ்ட நாள்: செப். 18, 24, 27. அக். 6, 9, 15.பரிகாரம் அர்த்த நாரீஸ்வரரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.

மிதுனம்மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்நினைத்ததை சாதிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு புரட்டாசி கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். தைரிய வீரிய பராக்கிரம காரகனான செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பல வகையில் செலவு அதிகரிக்கும். விரயம் உண்டாகும். திட்டமிட்ட வேலைகள் தள்ளிப் போகும் என்றாலும், அக். 7 வரை ஐந்தாம் இடத்திற்கு குருபார்வை இருப்பதால் செவ்வாயால் உண்டாகும் சங்கடங்கள் உங்களை நெருங்காமல் போகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். உறவினர்கள் உதவிக்காக உங்களைத் தேடி வரும் நிலை இருக்கும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது நீங்கள் எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். சகோதரர் ஒத்துழைப்பால் உங்கள் வேலைகள் நடந்தேறும். இழுபறியான விவகாரங்கள் முடிவிற்கு வரும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். ராசிநாதன் சஞ்சாரம் செப். 28 வரை சாதகமாக இருப்பதால் புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். எதிர்பார்த்ததை அடைவீர்கள். வாங்க நினைத்த இடத்தை வாங்குவீர்கள். செல்வாக்கு உயரும். தொழில் முன்னேற்றம் பெறும். பணியாளர்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். செப். 29 முதல் புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களைப் பற்றி மற்றவர்கள் புறம் பேசும் நிலை ஏற்படும் என்பதால் செயல்களில் கவனம் தேவை. யாரையும்  பகைக்க வேண்டாம். புதியவர்களை முழுமையாக நம்பவும் வேண்டாம். உங்களுடைய முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள். சந்திராஷ்டமம்: அக்.1அதிர்ஷ்ட நாள்: செப். 18, 23, 27. அக். 5, 9, 14.பரிகாரம் பகவதி அம்மனை வழிபட சங்கடங்கள் விலகும்.திருவாதிரைஅதிர்ஷ்ட வாய்ப்புகளை இயல்பாகவே பெற்ற உங்களுக்கு பிறக்கும் புரட்டாசி மாதம் யோகமான மாதமாகும். யோகக் காரகன் ராகு பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். வருவாய் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது உங்கள் திறமையை வெளிப்படுத்துவார். மற்றவர்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழ்ந்திடக்கூடிய நிலையினை ஏற்படுத்துவார். அக். 7 வரை ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் குரு 5, 7, 9 ம் இடங்களைப் பார்ப்பதால் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். குழந்தைகள் நலனில் அக்கறை கூடும். பூர்வீக சொத்து விவகாரத்தில் சாதகமான நிலை ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். புதிய இடம், வீடு வாங்கிடக் கூடிய நிலை சிலருக்கு உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். செப். 28 வரை புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த பணம் வரும். கலைஞர்களுக்கும் வியாபாரிகளுக்கும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். சூரியன் நான்காம் இடத்தில் சஞ்சரிப்பதால் எதிரிகள் பற்றி ஒரு அச்சம் உள்ளுக்குள் இருக்கும் என்றாலும் குருப் பார்வைகளால் அவற்றிலிருந்து விடுபடுவீர்கள். அக். 8 முதல் சத்ரு ஜெய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் எதிர்ப்புகள் விலகும். மனதில் இருந்த பயம் போகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். தொழில் வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். வேலைத் தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும்.சந்திராஷ்டமம்: அக். 2.அதிர்ஷ்ட நாள்: செப். 22, 23, அக். 4, 5, 13, 14.பரிகாரம் தில்லை காளியை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்எந்த ஒன்றிலும் நன்மை தீமைகளை அறிந்து எச்சரிக்கையாக செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். ஞானக் காரகன், மங்களக் காரகன் குரு அக் 7 வரை ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து 5, 7, 9 ம் இடங்களைப் பார்ப்பதால் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். அக். 8 முதல் தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் எதிர்ப்புகள் அகலும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வம்பு வழக்குகள் சாதகமாகும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். வேலைத் தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். செப் 28 வரை புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் புத்திசாலித்தனமாக செயல்பட்டு உங்கள் வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவும் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவும் உங்கள் செல்வாக்கை உயர்த்துவார்கள். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புகள் சாதகமாகும். பெரிய நிறுவனங்களை நடத்தி வருபவர்களுக்கு பணியாளர்கள் ஒத்துழைப்பாக இருப்பர். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். விவசாயிகள் இக்காலத்தில் கவனமாக செயல்படுவது நன்மையாகும். உணவகம், கெமிக்கல், ரியல் எஸ்டேட், மருத்துவம் சம்பந்தமான தொழில் புரிந்து வருவோர் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். புதிய முதலீடுகளில் எச்சரிக்கை அவசியம்.சந்திராஷ்டமம்: அக். 3.அதிர்ஷ்ட நாள்: செப். 21, 23, 30. அக். 5, 12, 14.பரிகாரம் ஆலங்குடி குருவை வழிபட அனைத்து தடைகளும் விலகும்.

கடகம்புனர்பூசம் 4 ம் பாதம்தெளிவான சிந்தனையும் பிறருக்கு வழிகாட்டும் மனமும் கொண்ட உங்களுக்கு புரட்டாசி நன்மையான மாதம். அக். 9 வரை விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு செலவுகளை ஏற்படுத்தினாலும் அவையெல்லாம் சுபச் செலவாகவே இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள், வாழ்க்கைக்குத் தேவையான இடம், வீடு, பிள்ளைகளின் கல்வி,  சுபநிகழ்ச்சிகள் என்று செலவுகள் ஏற்படும். அதே நேரத்தில் 4, 6, 8 ம் இடங்களை விரய குரு பார்ப்பதால், மனதில் நிம்மதி, சந்தோஷம், தெளிவு இருக்கும். உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும். எதிர்ப்பு, போட்டி, விரோதம் என்றிருந்த விஷயங்களில் சாதகமான நிலை ஏற்படும். இழுபறியாக இருந்த வழக்கு வெற்றியாகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். வரவேண்டிய பணம் வரும். அக். 8 முதல் ஜென்ம ராசிக்குள் அதிசாரமாக சஞ்சரிக்கும் குரு 5, 7, 9 ம் இடங்களைப் பார்ப்பதால் குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட விரிசல் விலகும். நண்பரால் ஆதாயம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு உண்டாகும். கோயில் வழிபாட்டில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும், பேச்சில் நிதானம் காப்பதும் நல்லது.  உங்கள் செல்வாக்கு மூலம் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.சந்திராஷ்டமம்: அக். 3.அதிர்ஷ்ட நாள்: செப். 20, 21, 29, 30. அக். 2, 11, 12.பரிகாரம் காளத்தீஸ்வரரை வழிபட சங்கடம் தீரும். நன்மை உண்டாகும்.பூசம்எந்த ஒன்றிலும் நிதானமாகவும் அதே நேரத்தில் உறுதியாகவும் செயல்பட்டு வெற்றி அடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் மாதமாகும். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சனி வக்ரம் அடைந்திருந்தாலும் அங்கு ராகு சஞ்சரிப்பதால் நெருக்கடிகள் பிரச்சனைகள் என்று ஏற்பட வாய்ப்புகள் இருந்தாலும், விரய குருவின் பார்வை அஷ்டம ஸ்தானத்திற்கு கிடைப்பதால் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று உங்களுக்கு யோக பலன்களே உண்டாகும். பொன் பொருள் சேரும். திடீர் வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் தன குடும்பாதிபதி சூரியன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். தன்னம்பிக்கையும் துணிச்சலும் அதிகரிக்கும். இதுவரை தடைபட்டு இழுபறியாக இருந்து வந்த வேலைகள் நடந்தேறும். உங்கள் வேலைகளுக்கு சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரிகளுக்கு பணியாளர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள் என்பதால் லாபம் அதிகரிக்கும்.  செப். 29 முதல் புத்தி தாதா புதன் 4 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் புத்திசாலித்தனம் ஒவ்வொன்றிலும் வெளிப்படும். எந்த ஒன்றிலும் பின் விளைவுகள் பற்றி யோசித்து செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் ஆதாயம் காண்பது எப்படி என்ற வழிமுறைகள் உங்களுக்கு தெரிய ஆரம்பிக்கும். நீண்ட நாள் முயற்சிகள் இப்போது நிறைவேறும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசு வழியில் மேற்கொள்ளும் முயற்சிகள் சாதகமாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.சந்திராஷ்டமம்: அக். 4.அதிர்ஷ்ட நாள்: செப். 17, 20, 26, 29. அக். 2, 8, 11.பரிகாரம் தர்பாரண்யேஸ்வரரை வழிபட பயம் தீரும். உடலில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும்.ஆயில்யம்எதிலும் புத்திசாலித்தனமாக செயல்பட்டு ஆதாயம் அடையும் உங்களுக்கு, புரட்டாசி அதிர்ஷ்டமான மாதமாகும். செப்.29 முதல் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதனால் செல்வாக்கு உயரும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். நெருக்கடி நீங்கும். பொருளாதார நிலை உயரும். கலைஞர்கள், வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். எந்த வேலையை எப்படி செய்து முடிப்பது என்பதை அறிந்து செயல்பட்டு ஆதாயம் அடைவீர்கள். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். அதே நேரத்தில், மாதம் முழுவதும் சூரியன் மூன்றாம் இடத்தில் சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகள் தடையின்றி நடந்தேறும். இழுபறியாக இருந்த முயற்சிகள் வெற்றியாகும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும். அக்.9 வரை தன குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரனால் பொருளாதார நிலை உயரும். எதிர்பார்த்த பணம் வரும். புதிய வாகனம், நவீன பொருட்கள் என்று வாங்கிடும் நிலை உண்டாகும். குரு பார்வை சாதகமாக இருப்பதால் வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். தம்பதிகளுக்குள் இணக்கம் உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். குழந்தைக்காக ஏங்கியவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். புரட்டாசி நன்மை நிறைந்த மாதமாக இருக்கும்.சந்திராஷ்டமம்: அக். 5.அதிர்ஷ்ட நாள்: செப். 20, 23, 29. அக். 2, 11, 14.பரிகாரம் ஆண்டாள் அழகரை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

சிம்மம்மகம்வாழ்வின் ஒவ்வொரு அடியையும் யோசித்து எடுத்து வைக்கும் உங்களுக்கு புரட்டாசி கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஞான மோட்சக்காரகன் கேது ஜென்ம ராசிக்குள் சஞ்சரிப்பதால் மனதில் வீண் குழப்பங்களும், குடும்பத்தில் நெருக்கடிகளும், செய்து வரும் தொழிலில் பிரச்னைகளும், பணியில் மேல் அதிகாரிகளின் நெருக்கடிகளும் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.  உங்கள் லாபாதிபதி  புதன் சஞ்சாரம் மாத முற்பகுதியில் சாதகமாக இருப்பதால் என்ன வந்தாலும் அதை சமாளிக்கும் சக்தியும் திறமையும் ஏற்படும். பொருளாதார நிலை உயரும். செப். 29 வரை புத ஆதித்ய யோகம் இருப்பதால் நினைத்ததை உங்களால் சாதிக்க முடியும். நெருக்கடி நீங்கும் வகையில் பணவரவு வரும்.  தேவைகள் பூர்த்தியாகி கொண்டிருக்கும். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் வியாபாரம், தொழில் அனைத்திலும் லாபம் காணும் நிலை இருக்கும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு அக். 8 முதல் உங்கள் நிலையில் சில மாற்றம், தடுமாற்றங்களை ஏற்படுத்துவார். புதிய நட்பு வழியே சிலருக்கு அவமானம், நெருக்கடியை உண்டாக்குவார். அதற்கு காரணம் குரு பார்வை ஏழாம் இடத்தை விட்டு விலகுவதுதான். எனவே புதிய நண்பர்களிடம் இக்காலத்தில் எச்சரிக்கையாக இருப்பதுடன், கூட்டுத்தொழிலில் கவனமாக இருக்க வேண்டும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதால் குடும்பத்திற்குள் நிம்மதி இருக்கும். மாதத்தின் பிற்பகுதியில் புதிய முயற்சிகளில் அதிகபட்ச கவனம் தேவை.சந்திராஷ்டமம்: அக். 6.அதிர்ஷ்ட நாள்: செப். 19, 25, 28. அக். 1, 7, 10, 16.பரிகாரம் இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட சங்கடம் விலகும். பூரம்நினைத்ததை சாதிப்பதில் வல்லவரான உங்களுக்கு புரட்டாசி  யோகமான மாதமாகும். அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்கள் தோற்றத்தில் பொலிவு இருக்கும். மற்றவர் மத்தியில் கம்பீரமாக வலம் வருவீர்கள். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். கணவன், மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். வியாபாரிகள் மத்தியில் செல்வாக்கு உயரும். செய்து வரும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கையுடன் சிலருக்கு புதிய இடம் வீடு வாகனமும் ஏற்படும். நீண்ட நாள் கனவு நனவாகும். மாத்த்தின் முற்பகுதியில் புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். ராசிநாதன் வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வார்த்தையில் நிதானம் தேவை. ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் கேது சில சங்கடம், குழப்பங்களை ஏற்படுத்த தயாராக இருப்பதால் அதற்கு உங்களின் வார்த்தைகளும் காரணமாகி விடும் என்பதை மனதில் வைத்து செயல்படுவது நல்லது. அக். 7 வரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவிற்கு குரு பார்வை இருப்பதால் நெருக்கடி இல்லாமல் போகும். அதன் பிறகு நட்பு வட்டத்திலேயே எதிர்மறை நிலை ஏற்படும். ஒன்றாக இருந்தவர்களும், நன்றாகப் பழகியவர்களும் விலகிச் செல்லும் நிலை ஏற்படும். இதை கவனத்தில் கொண்டு செயல்படுவது உங்களுக்கு நன்மை தரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். எவரையும் பகைத்துக் கொள்ளாமல் நிதானமாக செயல்படுவது நன்மை தரும்.சந்திராஷ்டமம்: அக். 7.அதிர்ஷ்ட நாள்: செப். 19, 24, 28. அக். 1, 6, 10, 15.பரிகாரம் மகாலட்சுமியை வழிபட வாழ்வில் நிம்மதி உண்டாகும்.உத்திரம் 1 ம் பாதம்எந்த நிலையில் இருந்தாலும் உயர்ந்த நிலையை அடையும் உங்களுக்கு புரட்டாசி  நினைத்ததை சாதிக்கும் மாதமாக இருக்கும். செப்.28 வரை புத ஆதித்ய யோகம் இருப்பதால் உங்களுக்கு இருந்த நெருக்கடி, சங்கடம், பிரச்னை, போட்டிகள் எல்லாம் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். புதிய சொத்து சேரும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். மாதம் முழுவதும் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் முயற்சிகள் ஒவ்வொன்றும் வெற்றியாகும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். சுயதொழில் புரிபவர்களுக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உடல் நிலை பாதிப்புகள் விலகும். சகோதரர்களுடைய ஆதரவு கிடைக்கும். அக்.7 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் வருமானம் உயரும். வர வேண்டிய பணம் வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். அக்.8 முதல் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு செலவுகளை அதிகரிப்பார். அதே நேரத்தில் உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவார். எதிர்ப்பு, நோய் நொடி யில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்துவார். அதிர்ஷ்ட வாய்ப்பை உண்டாக்குவார். அரசியல் வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். நீண்ட நாள் முயற்சி வெற்றியாகும்.சந்திராஷ்டமம்: அக். 8.அதிர்ஷ்ட நாள்: செப். 19, 28. அக். 1, 10.பரிகாரம் காலையில் சூரியனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.

கன்னிஉத்திரம் 2, 3, 4 ம் பாதம்முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். ஜென்ம ராசிக்குள் சூரியன் சஞ்சரித்தாலும் ராசிநாதன் புதன் செப். 28 வரை ராசிக்குள் சஞ்சரிப்பதால் புத ஆதித்ய யோகம் உண்டாகி உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாக போகிறது. எதிர்பார்ப்புகள் நிறைவேற போகிறது. புதிய சொத்து, வசதி வாய்ப்புகள், செல்வாக்கு, அந்தஸ்து என்ற கனவுகள் நனவாகப் போகிறது. 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் யோகக்காரகன் ராகு மாதம் முழுவதும் உங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளை வழங்குவார். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். வம்பு வழக்குகள் என்றிருந்த நிலை மாறும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்யோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். வழக்கு சாதகமாகும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் மாதம் முழுவதும் வருமானத்தை அதிகரிப்பார். குடும்பத்தில் நிம்மதியை உண்டாக்குவார். பொன் பொருள் சேர்க்கைக்கு வழி அமைப்பார். உங்கள் திறமையை வெளிப்படுத்துவார். கணவன், மனைவிக்குள் இணக்கத்தை ஏற்படுத்துவார். அக்.8 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் இதுவரை இருந்த நெருக்கடிகள் மறையும். இந்த மாதம் உங்களுக்கு யோகமானதாக இருக்கும்.சந்திராஷ்டமம்: அக். 8.அதிர்ஷ்ட நாள்: செப். 19, 23, 28. அக். 1, 5, 10, 14.பரிகாரம் திருவள்ளூர் வரதராஜ பெருமாளை வழிபட சங்கடம் விலகும்.அஸ்தம்மனதில் தெளிவும் செயலில் உறுதியும் கொண்டு வாழும் உங்களுக்கு எடுத்த வேலைகள் எல்லாம் இந்த மாதத்தில் வெற்றி பெறும்.  அக். 7 வரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, வேலை தொழில், வேலை, வியாபாரம் போன்றவற்றில் நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும், அவரது பார்வைகள் 2, 4, 6 ம் இடங்களுக்கு உண்டாவதால் குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வழக்குகள் சாதகமாகும். உங்கள் திறமை வெளிப்படும். அக். 8 முதல் குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வேலையில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். வரவேண்டிய பணம் வரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். சகோதரர்களின் ஒத்துழைப்பு உங்கள் வேலைகளை வெற்றியாக்கும். தன்னம்பிக்கை கூடும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். பூர்வீகச் சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். திருமண வயதினருக்கு வரன் வரும். 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு அதிர்ஷ்ட வாய்ப்புகளை அள்ளி வழங்குவார். ராசிநாதன் புதன் செப். 28 வரை ஆத்ம காரகனுடன் இணைந்து உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வாங்க நினைத்த இடத்தை வாங்க முடியும். தொழிலை விருத்தி செய்வதற்காக கேட்டிருந்த பணம் கைக்கு வரும். பங்கு மார்க்கெட்டில் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழல் மாறும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளால் பெருமைப்படும் நிலை சிலருக்கு ஏற்படும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரனுடைய சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பொன், பொருள் சேர்க்கை இருக்கும். செல்வாக்கு வெளிப்படும்.சந்திராஷ்டமம்: அக். 9.அதிர்ஷ்ட நாள்: செப். 20, 23, 29. அக். 2, 5, 11, 14.பரிகாரம் ராமநாத சுவாமியை வழிபட நன்மைகள் நடக்கும்.சித்திரை 1, 2 ம் பாதம்துணிச்சல், தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, மாதம் முழுவதும் செவ்வாய் 2 ம் இடமான தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், குடும்பம், பண விவகாரங்களில் நெருக்கடியை சந்திக்க வேண்டியதாக இருக்கும். ஞானக்காரகன் குருவின் பார்வை அக். 7 வரை 2 ம் இடத்திற்கு கிடைப்பதால் நெருக்கடி, பிரச்னைகள் உங்களை நெருங்காமல் போகும். அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் கடலில் மூழ்கியவர் கரையேறுவது போல் உங்கள் நிலை மாறும். கையில் பணம் புரளும். நீண்ட நாள் கனவு நனவாகும். சேமிப்பு உயரும். உறவினர் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். உதவி என கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்து அனுப்புவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் அக். 8 முதல் மாறும். துறை ரீதியான வழக்குகளில் முடிவு ஏற்படும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.  குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். திருமண வயதினருக்கு வரன் வரும். கூட்டுத்தொழில் முன்னேற்றம் அடையும். பிரிந்து சென்ற நண்பர்கள் தவறை உணர்ந்து உங்களைத் தேடி வருவர். ராகுவின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட போட்டி, நெருக்கடி நீங்கும். உடல்நிலை முன்னேற்றம் அடையும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும்.சந்திராஷ்டமம்: அக்.10அதிர்ஷ்ட நாள்: செப்.18, 23, 27. அக். 5, 9, 14பரிகாரம் மருதமலை முருகன் வழிபாட்டால் வேண்டுதல் நிறைவேறும். 

துலாம்சித்திரை 3, 4 ம் பாதம்நினைத்ததை சாதிப்பதில் உறுதியாக இருந்து வரும் உங்களுக்கு புரட்டாசி நன்மையான மாதம். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் செவ்வாய் உங்கள் செயல்களில் வேகத்தை ஏற்படுத்தலாம். எடுத்தோம் கவிழ்த்தோம் என சில முடிவுகளை மேற்கொள்ள வைக்கலாம். அதன் காரணமாக பொருளாதாரத்தில் நெருக்கடியும், தொழிலில் பிரச்னைகளும் உண்டாகும். ஞான மோட்சக்காரகன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால்  பணம் வந்து கொண்டிருக்கும். நடக்க வேண்டிய வேலைகள் நடந்து கொண்டிருக்கும். முயற்சிகளில் தவறு ஏற்பட்டாலும் அவற்றை மாற்றம் செய்யக்கூடிய நிலை  ஏற்படும். அக். 7 வரை பாக்ய குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் பிரச்னைகள்  உங்களை நெருங்காமல் போகும். அந்தஸ்து உயரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். நீண்டநாள் முயற்சிகள் வெற்றி பெறும். தடைபட்டு வந்த வேலைகள் நடந்தேறும். உறவினரால் ஆதாயம் உண்டாகும். சகோதரர்கள் உதவியாக இருப்பர். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மாதம் முழுவதும் ராசியாதிபதி சாதகமாக இருப்பதால் மனதில் நிம்மதியும், எடுத்த வேலைகளில் லாபமும் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். நீண்ட நாளாக விற்க முடியாமல் இருந்த சொத்தை விற்க முடியும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் அக். 8 முதல் கவனமாக செயல்படுவது நல்லது. சந்திராஷ்டமம்: அக். 10.அதிர்ஷ்ட நாள்: செப். 18, 24, 27. அக். 6, 9, 15.பரிகாரம் சிவபெருமானை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.சுவாதிநியாயம் நேர்மை மிக்க உங்களுக்கு பிறக்கும் புரட்டாசி கவனமாக செயல்பட வேண்டிய மாதம். 5 ல் சஞ்சரித்து வரும் ராகுவிற்கு அக். 7 வரை குருபார்வை இருப்பதால் எதிர்வரும் பிரச்னைகள், சங்கடங்கள், சிக்கல்கள் எல்லாவற்றையும் சமாளித்துக் கொள்ள முடியும். அக். 8 முதல் குரு பார்வை 5 ம் இடத்தை விட்டும், ராசியை விட்டும் விலகுவதால் செயல்களில் தடை, தாமதம், குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். சிலருக்கு பிள்ளைகளால் நெருக்கடி, பூர்வீக சொத்தில் பிரச்னையை சந்திக்க நேரிடும். உங்கள் லாபாதிபதி சூரியன் விரய ஸ்தானத்தில் சந்திப்பதால் செலவுகள் பல வழியிலும் அதிகரிக்கும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் செவ்வாய் அக்.8 முதல் உங்கள் செயல்களில் வேகத்தை ஏற்படுத்துவார். அவசர முடிவுகளை மேற்கொள்ள வைப்பார். அதனால் சங்கடத்திற்கு ஆளாகலாம். ராசிநாதன் தேவையான வருமானத்தை வழங்குவதோடு   நிம்மதியை உருவாக்குவார். குருவின் பார்வையும் குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்தும். தாய் வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பை நீக்கும். வழக்குகளில் சாதகமான சூழலை ஏற்படுத்தும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். செப். 29 முதல் பாக்கியாதிபதி புதன் ராசிக்குள் சஞ்சரிப்பதால் திடீர் பயணம் ஏற்படும். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். பணியாளர்கள் தங்கள் பணிகளில் கவனமாக இருப்பது அவசியம். அதிகாரிகளின் ஆலோசனைக்கேற்ப செயல்படுவதால் நேரடியான பாதிப்பு இல்லாமல் போகும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.சந்திராஷ்டமம்: அக். 10, 11.அதிர்ஷ்ட நாள்: செப். 22, 24. அக். 4, 6, 13, 15.பரிகாரம் விஷ்ணு துர்கையை வழிபட சங்கடங்கள் நீங்கும்.விசாகம் 1, 2, 3 ம் பாதம்புத்தி சாதுரியமும், பிறரின் பார்வைக்கு நல்லவராகவும், நேர்மையானவராகவும் வாழும் உங்களுக்கு புரட்டாசி நன்மையான மாதம். அக். 7 வரை பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் செல்வாக்கு அதிகரிக்கும், பெரியோரின் உதவியும் ஆதரவும் கிடைக்கும், நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்த முடியும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த பூர்விக சொத்து விவகாரம் சாதகமாகும். சகோதரர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். அக். 8 முதல் அதிசாரமாக ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் பார்த்து வரும் வேலையில் நெருக்கடி ஏற்படும். இந்த மாதம் முழுவதும் ராஜ கிரகமான சூரியனும் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணியாளர்கள் கவனமாக செயல்படுவது நல்லது.  அக்.8 முதல் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் செவ்வாயும், 5ம் வீட்டில் சஞ்சரிக்கும் ராகுவும் எல்லா வகையிலும் சோதனைகளை உண்டாக்குவர். குடும்பத்தில் ஒரு நிமிடம் இருந்தது போல் அடுத்த நிமிடம் நிம்மதி இல்லாமல் போகும். உறவுகளுக்குள் இருந்த இணக்கமான நிலையில் விரிசல் ஏற்படும். குருவின் பார்வைகள் உங்களை ஓரளவிற்கு பாதுகாக்கும். தேவைக்கேற்ப பணவரவு இருக்கும். மனதில் நிம்மதி இருக்கும். எந்த பாதிப்பு வந்தாலும் அதை சமாளிக்கும் ஆற்றல் இருக்கும். நோயின்றி  ஆரோக்கியமாக வாழும் நிலை இருக்கும். வியாபாரத்தில், தொழிலில் உண்டான போட்டி விலகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது எதிர்பார்ப்பை பூர்த்தியாக்குவார். பொருளாதார நெருக்கடியில் இருந்து உங்களை விடுவிப்பார். விவசாயிகள் விளைச்சலில் கவனமாகவும், வியாபாரிகள் புதிய முதலீட்டில் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.சந்திராஷ்டமம்: அக். 11, 12.அதிர்ஷ்ட நாள்: செப். 21, 24, 30. அக். 3, 6, 15.பரிகாரம் நின்ற நாராயணப் பெருமாளை வழிபட நினைத்தது  நடந்தேறும்.

விருச்சிகம்விசாகம் 4 ம் பாதம்வேகமும் விவேகமும் கொண்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு புரட்டாசி  நன்மையான மாதம். மாதத்தின் முற்பகுதியில் அஷ்டம ஸ்தானத்தில் குரு சஞ்சரித்தாலும், அவருடைய பார்வைகள் 12, 2, 4 ம் இடங்களுக்கு கிடைப்பதால் விரயச்செலவு கட்டுப்படும். மனதில் நிம்மதி உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட சச்சரவு விலகும். பணப்புழக்கம் இருக்கும். தாய் வழி உறவுகள் ஆதரவு கிடைக்கும். அக்.8 முதல் அதிசாரமாக பாக்ய ஸ்தானத்திற்கு செல்லும் குருவால் உங்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். ராசிக்கு குருபார்வை கிடைப்பதால் இதுவரை இருந்த நெருக்கடி, பிரச்னை எல்லாம் விலக ஆரம்பிக்கும். செல்வாக்கு உயரும். பட்டம் பதவி தேடி வரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும். வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். குழந்தை பாக்யத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். ஜீவன ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. புதிய முயற்சிகளில் நிதானம் தேவை. ஷேர் மார்க்கெட்டில் ஈடுபடுவோர் நிதானமாக செயல்படுவது நல்லது. புதிய ஏஜென்சி எடுக்க முயற்சிப்பவர்கள் மார்க்கெட் நிலவரம் அறிந்து அதன் பின் முடிவிற்கு வரவும்.சந்திராஷ்டமம்: அக். 12.அதிர்ஷ்ட நாள்: செப். 18, 21, 27, 30. அக். 3, 9.பரிகாரம் வியாழக்கிழமை நவகிரக குருபகவானை வழிபட நன்மை உண்டாகும்அனுஷம்தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்ட உங்களுக்கு புரட்டாசி யோகமான மாதம். உங்கள் ராசிக்கு ஜீவனாதிபதியான சூரியன் மாதம் முழுவதும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அரசு வழி முயற்சிகள் வெற்றியாகும். புதிய தொழில் தொடங்க, வெளிநாடு செல்ல எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். மூடி வைத்திருந்த தொழிலை மீண்டும் தொடங்கும் அளவிற்கு வாய்ப்பு உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். அக். 7 வரை அஷ்டம ஸ்தானத்தில் குரு சஞ்சரித்து வந்தாலும், அக். 8 முதல் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நெருக்கடி, பிரச்னை, போராட்டங்கள் எல்லாம் விலகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். 4 ம் இட ராகுவும், விரய ஸ்தான செவ்வாயும் ஒரு பக்கம் அலைச்சல், மறுபக்கம் செலவை ஏற்படுத்தலாம். ஒவ்வொரு வேலையையும் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும். அரசு பணியாளர்களுக்கு மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு வரும். புதிய தொழில் தொடங்க வங்கியில் கேட்ட பணம் கிடைக்கும். செப்.29 முதல் புதனும் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செலவு கட்டுக்கடங்காமல் போகும். புதிய முதலீடுகளில் அதிகபட்ச கவனம் தேவை.  ஆடம்பரத்திற்கும் அலட்சியத்திற்கும் இடம் கொடுக்காமல் அவசிய பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். குடும்பத்தினர் ஆலோசனைகளை ஏற்பதும், தம்பதியர் விட்டுக் கொடுப்பதும் மிக  அவசியம்.சந்திராஷ்டமம்: அக். 12, 13.அதிர்ஷ்ட நாள்: செப். 17, 18, 26, 27. அக். 8, 9, 17.பரிகாரம் சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வாழ்வில் வளம் உண்டாகும்.கேட்டைஎந்த ஒன்றிலும் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு வெற்றி பெறும் உங்களுக்கு புரட்டாசி  நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். விரய ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதுடன் செப். 29 முதல் புதனும் விரய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆவதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வரவை விட செலவு அதிகரிக்கும். குடும்பத்தினர் வழியில் நெருக்கடி ஏற்படும். தொழில், வேலை என அலைச்சல் உண்டாகும். அக். 8 முதல் குரு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்து ராசியை பார்ப்பதால், கடலில் மூழ்கிக் கொண்டிருந்தவருக்கு படகு கிடைத்தது போல் மனதில் நம்பிக்கை உண்டாகும். எல்லாவற்றையும் சமாளிக்கும் அளவிற்கு உங்கள் நிலை மாறும். கடந்த கால நெருக்கடி ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். புதிய சொத்து வாங்கும் முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். சகோதரர் வழியில் உதவி கிடைக்கும். வியாபாரிகளுக்கு தொழிலாளர்கள் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். பூர்வீக சொத்து விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். மாதம் முழுவதும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனும், அக்.10 முதல் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் குடும்பம், தொழிலில் இருந்த போராட்ட நிலை மாறும். மனதில் நிம்மதி உண்டாகும். வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய வாய்ப்பு தேடிவரும். சிறு வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். தம்பதிக்குள் இணக்கம் அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: அக்.13, 14.அதிர்ஷ்ட நாள்: செப்.18, 23, 27. அக். 5, 9.பரிகாரம் உலகளந்த பெருமாளை வழிபட நன்மை அதிகரிக்கும்.

தனுசுமூலம்தெய்வ அருளும் பெரியோர் துணையும் கொண்டு துாய சிந்தனையோடு வாழும் உங்களுக்கு, புரட்டாசி  யோகமான மாதம். பாக்ய ஸ்தானத்தில் ஞான மோட்சக் காரகன் சஞ்சரிப்பதால் உலகைப் பற்றியும், உறவுகளைப் பற்றியும் தெளிவு ஏற்படும். பெரியோர் ஆதரவும் தெய்வ அருளும் கிடைக்கும். உங்கள் பாக்யாதிபதி சூரியன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். வேலையில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். புதிய தொழில் தொடங்க மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறும். பணவரவு அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். கலைஞர், வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆன்மிகவாதிகளின் நிலை உயரும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வேலை நிரந்தரத்திற்காக எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு நல்ல தகவல் வரும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சஞ்சாரம் அக். 9 வரை சாதகமாக இருப்பதால் வருமானம் அதிகரிக்கும். உதவி என கேட்பவர்களுக்கு உதவி செய்யும் நிலை உண்டாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். திருமண வயதினருக்கு வரன் வரும். எடுக்கும் முயற்சி வெற்றி பெறும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: செப். 17. அக். 14, 15.அதிர்ஷ்ட நாள்: செப். 21, 25, 30. அக். 3, 7, 12, 16.பரிகாரம் கற்பக விநாயகரை வழிபட்டு வர சங்கடம் விலகும்.பூராடம்நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு புரட்டாசி அதிர்ஷ்டமான மாதமாகும். அக்.9 வரை அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்ப்பு நிறைவேறும். வரவு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். புதிய வாகனம், நவீன பொருள் வாங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வரவேண்டிய பணம் வரும். இருப்பதை வைத்து புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உதவி எனக் கேட்டு வருபவர்களுக்கு உதவி புரிவீர்கள். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். தைரியம், தன்னம்பிக்கையை அதிகரிப்பார். இதுநாள் வரை மற்றவர்களுக்கு கட்டுப்பட்டு இருந்த நிலை மாறி சுயமாக முடிவெடுக்கும் நிலை உண்டாகும். உங்கள் செல்வாக்கு உயரும். மாதம் முழுவதும் புதன் சாதகமாக இருப்பதால் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். எடுத்த வேலைகள் நடந்தேறும். அக்.7 வரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசிநாதன் குரு உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். திருமண வயதினருக்கு வரன் வரும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும் பிரிந்தவர்களுக்கும் மறுமண வாய்ப்பு உருவாகும். அக்.8 முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு விரயச் செலவை கட்டுப்படுத்துவார். குடும்பத்தில் நிம்மதி, மகிழ்ச்சியை அதிகரிப்பார். எதிர்பார்த்த ஆதாயத்தை வழங்குவார். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும்.  தொல்லைகள் விலகும். நீண்ட நாள் கனவு நனவாகும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு கூடும்.சந்திராஷ்டமம்: செப். 18. அக். 15, 16.அதிர்ஷ்ட நாள்: செப். 21, 24, 30, அக். 3, 6, 12.பரிகாரம் சங்கர நாராயணரை வழிபட மனதில் நிம்மதி உண்டாகும்.உத்திராடம் 1 ம் பாதம்எந்த ஒன்றிலும் தனித்துவத்துடன் செயல்படும் உங்களுக்கு புரட்டாசி யோகமான மாதமாகும். ஆத்மகாரகன் சூரியன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் உங்கள் நிலை மாறும். உங்களை சாதாரணமாக எண்ணியவர்கள் ஆச்சரியப்படும் வகையில் செயல்படுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். பணியாளர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். நீண்டநாள் முயற்சி வெற்றி பெறும். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பல வழியில் வருமானம் வரும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றி பெறும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். ராசி நாதனின் சஞ்சாரமும் பார்வைகளும் அக்.7 வரை சாதகமாக இருப்பதால் குழந்தை பாக்யத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். விவசாயத்தில் முன்னேற்றம் ஏற்படும். நினைத்தவற்றை உங்களால் நடத்திக் கொள்ள முடியும். எதிர்பார்த்தவற்றை அடைய முடியும். சேமிப்பு உயரும். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்கள் பலம் கூடும். சுயதொழில் புரிபவர்களுக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு கூடும். அக்.8 முதல் குரு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும்,  சூரியன், செவ்வாய், ராகு, புதன் என கிரகங்கள் யோகப் பலன்களை வழங்க இருப்பதால் புரட்டாசி  நினைத்ததை நடத்திக் கொள்ளும் மாதமாக இருக்கும்.சந்திராஷ்டமம்: செப். 19. அக். 16.அதிர்ஷ்ட நாள்: செப். 21, 28, 30. அக். 1, 3, 10, 12.பரிகாரம் பிரதோஷ நாளில் சிவபெருமானை வழிபட நன்மை நடந்தேறும்.

மகரம்உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைத்து நிதானமாக செயல்படும் உங்களுக்கு, புரட்டாசி யோசித்து செயல்பட வேண்டிய மாதமாகும். ஆத்ம காரகனான சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து விலகி பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கடந்த மாதத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். இனம் புரியாத பயம் இருக்கும். அச்ச உணர்வுடன் செயல்படுவீர்கள். அதனால் நன்மை உண்டாகும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் அக். 9 வரை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அவதுாறு செய்தவர்கள் விலகிச் செல்வர். குடும்பத்தினர் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவீர்கள். அக்.10 முதல் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரன் வருமானத்தை அதிகரிப்பார். குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்துவார். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்திற்கு வழியை உண்டாக்குவார். எதிர்பார்த்த பணம் சரியான நேரத்தில் வரும். உதவி கேட்டு வருபவர்களுக்கும். உறவினர்களுக்கும் உதவி செய்யும் அளவிற்கு நிலை உயரும். லாபாதிபதி செவ்வாய் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஒரு பக்கம் வரவு இருக்கும். மறுபக்கம் அதற்கேற்ப செலவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். வாங்க நினைத்த இடத்தை வாங்குவீர்கள். தொழிலை விரிவு செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள். அரசு பணியாளர்கள் முடிந்தவரை நிதானமாக செயல்படுவது நல்லது. சிறு வியாபாரிகள் புதிய முயற்சிகளை இந்த மாதத்தில் மேற்கொள்ள வேண்டாம். வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தவும். உடல் நிலையில் கவனம் தேவை. சந்திராஷ்டமம்: செப். 19. அக். 16, 17.அதிர்ஷ்ட நாள்: செப். 17, 26, 28. அக். 1, 8, 10.பரிகாரம் காஞ்சி ஏகாம்பரேஸ்வரரை வழிபட நன்மை உண்டாகும்.திருவோணம்வாழ்க்கைப் பயணத்தில் நிலையான இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வாழும்  உங்களுக்கு புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். தன குடும்ப ஸ்தானத்தில் ராசிநாதன் சனி வக்ரம் அடைந்த நிலையில், அங்கு ராகு சஞ்சரித்தாலும் அக்.7 வரை குரு பார்வை கிடைப்பதால் குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். எதிர்பார்த்த பணம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும்.  தொழில் லாபம் தரும். புதிய முயற்சி வெற்றியாகும். விரயம் கட்டுப்படும். அக். 8 முதல் குரு அதிசாரமாக கடகத்தில் சஞ்சரிப்பதால் இந்நிலையில் மாற்றம் ஏற்படும். குருபார்வை ராசிக்கு கிடைப்பதால் நெருக்கடி சற்று விலக ஆரம்பிக்கும். அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த பணம் வரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அக். 8 முதல் ராகுவிற்கு குரு பார்வை விலகுவதால் குடும்பத்தில் பிரச்னை வரலாம். பண விவகாரத்தில் கவனக்குறைவு ஏற்படும். நிதானமில்லாமல் பேசுவதால் சங்கடம் ஏற்படும். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் உடல் நிலையில் நெருக்கடி இருக்கும். முடிந்தளவு  நிதானமாக செயல்படுவது நல்லது. எந்த ஒன்றிலும் வேகமான செயல்பாடு இந்த மாதத்தில் வேண்டாம். அரசு பணியாளர்களுக்கு வேலையில் கூடுதல் கவனம் தேவை. பிறரின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு முடிவுக்கு வர வேண்டாம். மேலதிகாரியின் அனுமதியுடன் செயல்படுவதால் நெருக்கடி விலகும். செப். 29 முதல் புதன் சஞ்சாரம் வருமானத்தை அதிகரிக்கும். தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். கடந்த மாதத்தை விட இந்த மாதம்  அதிகபட்ச நன்மை தரும் மாதமாக இது இருக்கும்.சந்திராஷ்டமம்: செப். 20. அக். 17.அதிர்ஷ்ட நாள்: செப்.17, 26, 29. அக். 2, 8, 11.பரிகாரம் வளர்பிறை நிலவை தரிசித்து வழிபட குழப்பம் தீரும்.அவிட்டம் 1, 2 ம் பாதம்கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி முன்னேற்றம் அடையும் உங்களுக்கு, புரட்டாசி முன்னேற்றமான மாதமாகும். தைரிய வீரிய காரகன் செவ்வாய் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அக்.7 வரை அங்கு குரு பார்வை இருப்பதால் தொழில் முன்னேற்றம் அடையும். புதிய முயற்சி வெற்றி தரும். வேலைத் தேடுவோருக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு  இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். குறிப்பாக காவல்துறையினருக்கு நீண்டநாள் கோரிக்கை நிறைவேறும். சொந்த இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். அக். 8 முதல் சப்தம ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குரு உங்கள் ராசியை பார்ப்பதால் எதையும் எதிர்கொண்டு சமாளிக்கும் சக்தி உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். செல்வாக்கு உயரும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். பணவரவு அதிகரிக்கும். 2 ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகுவும், அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவும் குடும்பத்தில் குழப்பம், உடல் பாதிப்பு, எதிர்பாராத தடைகளை ஏற்படுத்துவர். ஒவ்வொரு வேலையிலும் கவனமாக இருப்பது நல்லது. செப். 29 முதல் புதனும், அக். 10 முதல் சுக்கிரனும் அதிகபட்ச யோகத்தை தருவர். புதிய வாகனம், நகை, நவீன பொருட்கள் வந்து சேரும். மனதில் நிம்மதி உண்டாகும். வழக்கில் இருந்து விடுதலை கிடைக்கும். சாதகமான நிலை ஏற்படும். விவசாயம் முன்னேற்றம் பெறும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.சந்திராஷ்டமம்: செப். 21.அதிர்ஷ்ட நாள்: செப். 17, 18, 26, 27. அக். 8, 9, 17.பரிகாரம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரரை வழிபட சங்கடம் தீரும். 

கும்பம்அவிட்டம் 3, 4 ம் பாதம்நேர்மையான முறையில் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு  புரட்டாசி  நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் உங்கள் செயல்களில் தடைகளை ஏற்படுத்துவார், அலைச்சலை அதிகரிப்பார், நிம்மதியற்ற நிலையை உண்டாக்குவார். அக்.7 வரை பாக்கிய ஸ்தானத்திற்கு குரு பார்வை இருப்பதால் எடுத்த வேலைகளை முடிக்கக் கூடிய நிலை உண்டாகும். பெரிய மனிதர்கள் தொடர்பும், ஆதரவும் கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். தெய்வ பலம் உங்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும். தொழிலில் ஆதாயம் உண்டாகும். அக்.8 முதல் குரு 6ம் இடத்தில் சஞ்சரிப்பதால் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயும், ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகுவும் எதிர்மறையான பலன்கள்,  நெருக்கடிகளை ஏற்படுத்துவர். மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகும். எடுக்கும் வேலைகள் இழுபறியாகும். ஞான மோட்சக்காரகன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புதிய நண்பர்களால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். சிலருக்கு வாழ்க்கையின் திசையே மாறும். அக். 9 வரை களத்திரக்காரகன் சுக்கிரனும் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாலினரால் சிலர் அவமானம், குடும்பத்தில் பிரச்னையை சந்திக்க நேரிடும். பணியில் கவனம் செல்லாமல் கேளிக்கை, சந்தோஷம் என உங்கள் மனநிலை மாறும் என்பதால் விழிப்புடன் செயல்படுவது நல்லது. சந்திராஷ்டமம்: செப். 21.அதிர்ஷ்ட நாள்: செப்.17, 18, 26, 27. அக். 8, 9.பரிகாரம் பைரவரை வழிபட்டு வர சங்கடம் அனைத்தும் நீங்கும்.சதயம் மனதில் இருப்பதை வெளிக்காட்டாமல் நினைத்ததை சாதிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு,  புரட்டாசி திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். செப்.28 வரை புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றி பெறும். விற்க முடியாத சொத்தை விற்க முடியும். வியாபாரிகள் கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவு செய்வதற்காக வங்கியில் கேட்டிருந்த பணம் கைக்கு வரும். அக்.7 வரை குரு சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எடுத்த வேலைகளை முடித்துக் கொள்ள முடியும். அக்.8 முதல் சத்ரு ஸ்தானத்திற்கு குரு அதிசாரமாக செல்வதால் எதிர்ப்பு தோன்றும். உடல் நிலையில் சிறு பிரச்னைகள் வந்து போகும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவும், குடும்பம் நட்பு வகையில் எதிர்பாராத பிரச்னைகளை உண்டாக்குவர். புதியவர்களால் சங்கடம் தோன்றும். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் உடல் நிலையில் பாதிப்பை ஏற்படுத்துவார். வீண் விவகாரத்தில்  ஈடுபட வைத்து அதனால் நெருக்கடிகளை சந்திக்க வைப்பார். அரசு பணியாளர்கள் மாதம் முழுவதும் தங்கள் பணியில் கவனமாகவும், நேர்மையாகவும் இருப்பது நல்லது. வியாபாரிகள் கணக்கு வழக்குகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையெனில் அரசுக்கு அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். சட்டத்திற்கு புறம்பான காரியங்கள் சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதால்  யோசித்து செயல்படுவது நல்லது. வாழ்க்கைத் துணை, உறவினர்களை அனுசரித்துச் செல்வது சங்கடங்களில் இருந்து உங்களை பாதுகாக்கும்.சந்திராஷ்டமம்: செப். 22.அதிர்ஷ்ட நாள்: செப். 17, 26. அக். 4, 8.பரிகாரம் அஷ்டபுஜ துர்கையை வழிபட்டால் முன்னேற்றம் உண்டாகும்.பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்பொது நலனை பெரிதாக எண்ணும் உங்களுக்கு பிறக்கும் புரட்டாசி மாதம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய மாதமாகும். குரு சஞ்சாரம் அக். 7 வரை 5 ம் இடத்தில் இருப்பதால் எல்லாவற்றையும் சமாளித்திடும் நிலை உண்டாகும். உங்கள் வேலைகளில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் வரும். வருமானம் உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். அக். 8 முதல் 6 ம் இடத்தில் சஞ்சரித்தாலும், அவருடைய பார்வை 10ம் இடத்திற்கு கிடைப்பதால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தை விரிவு செய்ய திட்டமிடுவீர்கள். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். நிம்மதியான துாக்கம் இல்லை, வீண் செலவு ஆகிறதே என்ற நிலைகள் மாறி செலவு கட்டுப்படும். மனதில் நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் தீரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். செப். 28 வரை புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் கவனம் தேவை. எடுத்தோம் கவிழ்த்தோம் என செயல்படாமல் யோசித்து செயல்பட்டால் பிரச்னை நெருங்காது. சந்திராஷ்டமம்: செப். 23.அதிர்ஷ்ட நாள்: செப். 17, 21, 26, 30. அக். 3, 8, 12.பரிகாரம் அமிர்தகடேஸ்வரரை வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும்.

மீனம்பூரட்டாதி 4ம் பாதம்வாழ்வின் பொருள் உணர்ந்து வாழ்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் புரட்டாசி மாதம் யோகமான மாதமாகும். அக்.7 வரை குரு சுக ஸ்தானத்தில் சஞ்சரித்து அலைச்சலையும் உழைப்பையும் அதிகரித்தாலும் அவருடைய பார்வைகள் 8, 10, 12 ம் இடங்களுக்கு கிடைப்பதால் மறைந்திருந்த உங்கள் செல்வாக்கு வெளிப்படும். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பு உண்டாகும். வேலையில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். விரய செலவுகள் கட்டுப்படும். அக்.8 முதல் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு 9, 11 ம் இடங்களுடன் உங்கள் ராசியையும் பார்ப்பதால் இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலகும். செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். பெரிய மனிதர்கள் தொடர்பும், தெய்வ அருளும் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். நீண்ட நாள் கனவு நனவாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். திருமண வயதினருக்கு வரன் வரும். சொத்து சேர்க்கை ஏற்படும். சிலருக்கு திடீர் இடமாற்றம் உண்டாகும். வசிக்கும் ஊரை விட்டு வெளியூர் செல்லும் நிலை சிலருக்கு ஏற்படும். விவசாயிகள் முன்னேற்றம் காண்பர். உழைப்பாளர்களுக்கு முயற்சிக்கேற்ற லாபம் வரும்.சந்திராஷ்டமம்: செப். 24.அதிர்ஷ்ட நாள்: செப். 21, 30. அக். 3, 12.பரிகாரம் ஆலங்குடி குருபகவானை வழிபட நன்மை அதிகரிக்கும். உத்திரட்டாதிவாழ்வின் மீது ஆர்வம் கொண்டு அனைத்தையும் அடைய விரும்பும் உங்களுக்கு, புரட்டாசி நன்மையான மாதமாகும். விரய ஸ்தானத்தில் சனி வக்ரம் அடைந்திருப்பதால் ஏழரை சனியின் தாக்கம் உங்களை நெருங்காது. ஆத்ம காரகன் சூரியன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படும். செப். 29 முதல் புதன் மறைவு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நிறைந்த செல்வம் சேரும். பணவரவு அதிகரிக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்புண்டாகும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். கலைஞர்கள், வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக, வீடு கட்டுவதற்காக கேட்டிருந்த பணம் கிடைக்கும். புதிய வாகனம், பொன், பொருள் சேரும். ருண ரோக சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது உடல் பாதிப்புகளை நீக்குவார். எதிர்ப்பு, போட்டி, பிரச்னை என்றிருந்த நிலை மாறும். நீண்டநாள் வழக்கு சாதகமாகும். செல்வாக்கு உயரும். அக். 8 முதல் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு நெருக்கடியில் இருந்து உங்களை மீட்டெடுப்பார். மறைந்திருந்த உங்கள் செல்வாக்கு வெளிச்சத்திற்கு வரும். எதிர்பார்ப்பு நிறைவேறும். பணம், புகழ், பதவி உங்களைத் தேடிவரும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட தொந்தரவு நீங்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும்.சந்திராஷ்டமம்: செப். 24, 25.அதிர்ஷ்ட நாள்: செப். 17, 21, 26, 30. அக். 3, 8, 12.பரிகாரம் குலதெய்வத்தை வழிபட தடைபட்ட வேலைகள் நடந்தேறும்.ரேவதிநிதானம் எச்சரிக்கையாகவும் செயல்பட்டு நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் முன்னேற்றமான மாதமாகும். மாதத்தின் தொடக்கத்தில் தனப்ராப்தன் புதன்  சங்கடங்களை ஏற்படுத்தினாலும், செப். 29 முதல் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவார். எதிர்பார்த்த பணம் வரும். இழுபறியாக இருந்த ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வங்கியில் கேட்ட பணம் கைக்கு வரும். எதிர்ப்பு, போட்டி என்றிருந்த நிலை மாறும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். ராசி நாதன் குருவின் பார்வைகள் மாதம் முழுவதும் உங்களைப் பாதுகாக்கும். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். அக்.8 முதல் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். இதுவரை போராட்டத்தையே வாழ்க்கையாக கொண்டிருந்தவர்களுக்கும் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரம் விருத்தி அடையும். செல்வாக்கு  உயரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். விவசாயிகளுக்கு முன்னேற்றம் ஏற்படும். சிறு வியாபாரிகள் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவர்.  வயதானவர்களுக்கு உடல் பாதிப்பு விலகி ஆரோக்யமான உடல்நிலை ஏற்படும்.சந்திராஷ்டமம்: செப். 25, 26.அதிர்ஷ்ட நாள்: செப். 21, 23, 30. அக். 3, 5, 12, 14.பரிகாரம் ஏழுமலையான வழிபட நினைத்த வேலைகள் நடந்தேறும்.


ShareTweetShareShare

Advertisement

Advertisement Tariff

Advertisement




      Dinamalar
      Follow us