sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

/

11

முந்தய பதிப்புகள்

இன்றுநேற்று
இன்றுநேற்று

To type in English

 (or) 

Press CTRL+G 

To type in English

மொத்த செய்திகள்: 1027

கூவத்தை சுத்தப்படுத்தி படகு சவாரி துவங்கலாம்!

ஷார்ட்ஸ்

11-Jan-2025

மேஷம்: அசுவினி: எதிர்காலத்தை சரியாக தெரிந்து, அதன் வழியாக வெற்றி பெற்று வரும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் யோகமான மாதம். இதுவரை தடைபட்டிருந்த வேலை ஒவ்வொன்றாக நடைபெறும். உங்கள் நீண்டகால கனவு நனவாகும். உத்தியோகம் தொழிலில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி, நெருக்கடி குறையும். செல்வாக்கு உயரும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும் குடும்பத்தில் நிம்மதியான சூழல் உருவாகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சனிபகவான் முன்னேற்றமான பலன்களை வழங்குவார். முடங்கிக் கிடந்த தொழில்களை  இயங்க வைப்பார். தொழிலில் லாபத்தை உண்டாக்குவார். வரவை அதிகரிப்பார். புதிய தொழில், வேலை வாய்ப்பிற்கு முயற்சி செய்து வருகின்றவர்களுக்கு அதற்குரிய வழிகளை வழங்குவார். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் பலத்தை அதிகரிப்பார். ஒரு சிலருக்கு புதிய பொறுப்பும், பதவியும் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட இடைவெளி விலகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். தடைபட்டிருந்த சுப காரியம் நடக்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். அரசுவழி முயற்சி வெற்றியாகும். உறவுகள் ஆதரவால் திட்டமிட்டிருந்த வேலை நடக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: ஜன. 23, 24.அதிர்ஷ்ட நாள்: ஜன. 16, 18, 25, 27. பிப். 7, 9.பரிகாரம்: செல்வ விநாயகரை வழிபட செல்வாக்கு உண்டாகும்.பரணி  : அதிர்ஷ்டம் நிறைந்த உங்களுக்கு பிறக்கும் தை மாதம் லாபமான மாதம். திட்டமிட்டிருந்த வேலைகளை திட்டமிட்டபடி நடத்தி முடிப்பீர்கள். உங்கள் வார்த்தைக்கு வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். இதுவரை நீங்கள் சந்தித்து வந்த தடை ஒவ்வொன்றாக விலகும். ஜீவன ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் உங்கள் நிலை மாறும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி, பிரச்னை விலகும். எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான நிலை உண்டாகும். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். சுக்கிரனின் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும். ஒரு சிலர் பழைய வாகனத்தை விற்று விட்டு விருப்பப் பட்ட வாகனம் வாங்குவீர். சனி லாப ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். வருமானம் அதிகரிக்கும். தை பிறந்ததும் வழி பிறக்கும் என்பதுபோல் ஒரு சிலருக்கு புதிய தொழில் அமையும். வெளிநாட்டு வாய்ப்பு தேடி வரும். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். ஒரு சிலர் புதிய வீட்டில் குடிபுகுவீர்கள். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவீர்.சந்திராஷ்டமம்: ஜன. 24, 25.அதிர்ஷ்ட நாள்: ஜன. 15, 18, 27. பிப். 6, 9.பரிகாரம்: துர்கைக்கு தீபமேற்றி வழிபட நன்மை உண்டாகும்.கார்த்திகை 1 ம் பாதம்; எதிலும் முதலிடத்தில் இருக்கும் வாய்ப்பு பெற்ற உங்களுக்கு பிறக்கும் தை மாதம் நன்மையான மாதம். உங்கள் நட்சத்திரநாதன் சூரியன் ஜீவன ஸ்தானமான பத்தாம் இடத்தில் சஞ்சரிப்பதால் இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடி, பிரச்னை, சங்கடம் அனைத்தும் ஒவ்வொன்றாக விலகும். நீங்கள் திட்டமிட்டிருந்த வேலை திட்டமிட்டபடி நடக்கும். அலுவலகப் பிரச்னை முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம், உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். வீட்டில் சுப செயல் நடக்கும். கேதுவால் உடல்நிலை முன்னேற்றம் அடையும். நோய்களால் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த எதிர்ப்பு விலகும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். தலைமையின் நம்பிக்கைக்கு உரியவராவீர்கள். லாப சனியால் எடுத்த வேலை லாபமாகும். வரவு அதிகரிக்கும். சுக்கிரனும், புதனும் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த இடத்தை வாங்க முடியும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். அன்பு அதிகரிக்கும். உறவினர்களும் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். விவசாயிகள் கவனமாக செயல்படுவது நல்லது.சந்திராஷ்டமம்: ஜன. 26.அதிர்ஷ்ட நாள்: ஜன. 18, 19, 27, 28. பிப். 1, 9, 10.பரிகாரம்: அதிகாலையில் சூரிய பகவானை வணங்கி வழிபட்டுவர வாழ்க்கை வளமாகும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4ம் பாதம்எதிலும் திறமையாக செயல்பட்டு நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் நன்மையான மாதம். பாக்ய ஸ்தானத்தில் மாதம் முழுவதும் சூரியன் சஞ்சரிப்பதால் கடந்த மாத நெருக்கடி குறையும். நீங்கள் நினைத்த வேலை நினைத்தபடி நடக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். குலதெய்வத்தின் அருளால் தடைபட்ட வேலையெல்லாம் நடக்கும். அரசு பணியில் இருக்கும் ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். உத்யோகத்தில் இருப்பவர்கள் முடிந்தவரை கவனமாக இருக்கவும், நியாயமாக செயல்படுவதும் நன்மையை அதிகரிக்கும். இல்லையெனில் மேலதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும். விரய ஸ்தானத்திற்கு சனி பகவானின் பார்வை உண்டாவதால் புதிய இடம், வீடு வாங்கும் யோகம் ஏற்படும். நீண்ட காலமாக விற்பனையாகாமல் இருந்த இடத்தை விற்பனை செய்வீர்கள். மாதத்தின் முற்பகுதியிலும் பிற்பகுதியிலும் புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சுக்கிரனின் சஞ்சாரம் மாதத்தின் முற்பகுதியில் எதிர்மறையாக இருப்பதால் பண விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பாலினர் விவகாரத்தில் முடிந்தவரை எச்சரிக்கையாக இருக்கவும். புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது அதன் விளைவுகள் பற்றி யோசித்து சாத்தியப்பட்டதை மட்டும் செய்வது நல்லது. வெளிநாட்டு முயற்சி இம்மாதம் உங்களுக்கு சாதகத்தை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பின் மீதான அக்கறை அதிகரிக்கும். விவசாயிகள் சிரமம் பாராமல் செயல்படுவது அவசியம்.சந்திராஷ்டமம்: ஜன. 26.அதிர்ஷ்ட நாள்: ஜன. 15, 19, 24, 28. பிப். 1, 6, 10.பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.ரோகிணி: தெளிவான சிந்தனையுடன், வாழ்வின் நிலையினை உணர்ந்து வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். எதிலும் நிதானம் காப்பதும், பின்விளைவுகள் பற்றி யோசித்து செயல்படுவதும் நல்லது. ஜீவன ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரித்து வரும் சனி பகவான் உங்கள் செயல்களுக்கும், முயற்சிக்கும் ஏற்ப பலன்களை வழங்குவார். அரசு பணியில் இருப்பவர்கள் முடிந்தவரை நேர்மையாக செயல்படுவது நல்லது. இல்லையெனில், மெமோ இடமாற்றம் போன்றவற்றை சந்திக்க வேண்டிய நிலை ஒரு சிலருக்கு ஏற்படும். லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரித்து வருவதால் எதிர்பார்த்த வரவு வரும். தொழில் முன்னேற்றமடையும். வெளிநாட்டு தொடர்பு லாபத்தை ஏற்படுத்தும். குடும்பத்திலிருந்த நெருக்கடி விலகும். கடந்த மாதத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். அரசு வழியில் ஏற்பட்ட பிரச்னை முடியும். வழக்கு விவகாரம் இழுபறியாகும். பிப். 6 முதல் புதன் பகவானின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த வேலைகள் முடியும். கலைஞர்களுக்கும் வியாபாரிகளுக்கும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். புதிய இடம், வீடி வாங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு கல்வியில் அக்கறை அதிகரிக்கும். பூர்வீக சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். ஒரு சிலர் கோயிலுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றி வருவீர்கள். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகள் நலனில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வேலை வாய்ப்பிற்காக முயற்சி மேற்கொண்டு வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.சந்திராஷ்டமம்: ஜன. 27.அதிர்ஷ்ட நாள்: ஜன.15, 20, 24, 29. பிப். 2, 6, 11.பரிகாரம்: திங்களூர் சந்திர பகவானை வழிபட மனம் தெளிவடையும். வெற்றி உண்டாகும்.மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்: இடைவிடா முயற்சியும், நினைத்ததை சாதிக்கும் ஆற்றலும் பெற்ற உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். உங்கள் ராசிக்கு விரயாதிபதியும், சப்தமாதிபதியும், நட்சத்திராதிபதியுமான செவ்வாய் மாதம் முழுவதும் வக்ரமாகவே சஞ்சரிக்கிறார். பிப்ரவரி 11 வரை குரு பகவானும் ராசிக்குள் வக்ரமாக சஞ்சரிப்பதால் ஒவ்வொரு வேலையிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. கடந்த மாதத்தை விட இந்த மாதம் உங்களுக்கு நன்மை அதிகரிக்கும். சூரியன் அஷ்டம ஸ்தானத்தை விட்டு விலகி பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பெரிய மனிதர்கள் தொடர்பு கிடைக்கும். அதன் வழியாக நினைத்ததை சாதித்துக்கொள்வீர்கள். வம்பு வழக்குகள், சட்ட சிக்கல் முடிவிற்கு வரும். லாப ராகு உங்களுக்குத் தேவையான வருமானத்தை வழங்குவார். ஒரு சிலருக்கு சேமிப்பு உயரும். தொழிலில் முன்னேற்றம் உண்டு. சுக்கிரன் ஜனவரி 28 வரை உங்களுக்கு நெருக்கடிகளை உண்டாக்கி வந்தாலும் அதன்பின் சாதகமாக சஞ்சரித்து நன்மைகளை அதிகரிப்பார். அதனால், குடும்பத்திலும், மனதிலும் நிம்மதி இருக்கும். பொன் பொருள் சேரும். இடையில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் இணக்க நிலை உண்டாகும். பிள்ளைகள் நலனில் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்வீர். அவர்களுடைய கல்வி, எதிர்காலம், வேலை வாய்ப்பு என்ற சிந்தனை உங்களுக்குள் ஓடிக்கொண்டிருக்கும். அதற்குரிய வேலைகளை முன்னெடுப்பீர். ஒரு சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு உண்டாகும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். நீங்கள் எடுக்கும் முயற்சிக்கேற்ப லாபமடைவீர்கள். இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கை உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். அரசியல்வாதிகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். விவசாயிகள் விளைச்சலில் கவனமாக இருப்பது அவசியம்.சந்திராஷ்டமம்: ஜன. 27, 28.அதிர்ஷ்ட நாள்: ஜன. 15, 18, 24. பிப். 6, 9.பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.

மிதுனம்: மிருகசீரிடம் 3, 4ம் பாதம்; மனவலிமையும், செயல் திறனும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் நன்மையான மாதம். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். இதுவரை இருந்த நெருக்கடிகளில் இருந்து உங்களைப் பாதுகாப்பார். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். புதிய தொழில் தொடங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பெரிய மனிதர் ஆதரவு, ஒத்துழைப்பு கிடைக்கும். ஆலய வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்வீர்கள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். உங்கள் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுக்கின்ற முயற்சி அனைத்தும் வெற்றியாகும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகி ஆரோக்கியமாக நடமாடத் தொடங்குவீர். வியாபாரத்தில், தொழிலில் ஏற்பட்ட எதிர்ப்பு விலகும். வழக்களில் சாதகமான நிலை ஏற்படும். இந்த மாதம் உங்கள் வாழ்க்கையில் புதிய நம்பிக்கை உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். புதிய வீட்டில் குடியேறக்கூடிய நிலையும் ஏற்படும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். அதே நேரத்தில் மறுபக்கம் அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் அலச்சலும், வேலை பளுவும் இருக்கும். இருந்தாலும் அவற்றின் வழியாக லாபம் காணக் கூடிய நிலை உங்களுக்கு ஏற்படும். ஜன.19 முதல் புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த பணம் வரும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கலைஞர் நிலை உயரும். விவசாயத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: ஜன. 28.அதிர்ஷ்ட நாள்: ஜன. 14, 18, 23, 27. பிப். 5, 9.பரிகாரம்: அனுமனை வழிபட சங்கடம் விலகும்.திருவாதிரை: கால நேரம் அறிந்து செயல்பட்டு வாழ்வில் வெற்றி அடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் யோகமான மாதம். உங்கள் நட்சத்திரநாதன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் லாபம் அடையும். உங்களிடம் பணி புரிபவர்களின் மனநிலை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பார்த்த லாபம் வரும். ஜன. 28 வரை சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் வருமானம் அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். எதிர்பார்த்த பணம் வரும். ஜன. 19 முதல் புதன் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வங்கியில் கேட்டிருந்த பணம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் முயற்சி வெற்றியாகும். உறவினர் ஆதரவு அதிகரிக்கும். சமூகத்தில் செல்வாக்கு உயரும். சனி பகவானின் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி, பொறுப்பு கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். சுயமாக தொழில் தொடங்க முயற்சித்தவர்களுக்கு அதற்குரிய வாய்ப்பு அமையும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். தாய் வழி உறவினர்களால் சில சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். உங்கள் உடல் நிலையிலும் ஏதேனும் சின்னச் சின்ன பாதிப்பு தோன்றி மறையும். ஆறாம் இடத்தை சனி பார்ப்பதால் எதுவும் வந்தவழி தெரியாமல் ஓடிவிடும். உங்கள் செல்வாக்கு உயரும். புதிய சொத்து வாங்கும் நிலையும் ஒரு சிலருக்கு ஏற்படும். நினைத்ததை சாதித்திடும் மாதமாக இந்த மாதம் இருக்கும். சிறிய வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். கனவுகள் நனவாகும். ஒரு சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். குழந்தைகள் பற்றிய பயம் நீங்கும். அவர்களால் பெருமை அடையக்கூடிய நிலையும் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் அனைத்திலும் கவனமாக செயல்படுவது நல்லது.சந்திராஷ்டமம்: ஜன. 29அதிர்ஷ்ட நாள்: ஜன. 14, 22, 23, 31. பிப். 4, 5.பரிகாரம்: பிரத்தியங்கிராவை வழிபட நன்மை உண்டாகும்.புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்; நினைத்ததை சாதித்திடக்கூடிய திறமை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் முன்னேற்றமான மாதமாகும் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் குரு பகவான் பிப். 11 வரை வக்ரமாக சஞ்சரிப்பதால் செலவு கட்டுப்படும். நினைத்த வேலைகளை உங்களால் நடத்திக் கொள்ள முடியும். என்றாலும், கையில் எடுக்கும் வேலைகளில் நிதானம் தேவை. எந்த முயற்சியாக இருந்தாலும் யோசித்து செயல்படுவது நல்லது. உங்கள் ராசிநாதன் ஜன. 19 தொடங்கி பிப். 4 வரை சாதகமாக சஞ்சரிப்பதால் திட்டமிட்டு செயல்படுவீர். எதிர்பார்த்த வரவு வரும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கேட்ட இடத்திலிருந்து பணம் வரும். அரசு வழி முயற்சிகளில் கவனமாக இருப்பது நல்லது. அஷ்டம சூரியன் அலைக்கழிப்பை உண்டாக்குவார். பாக்ய சனியால் நீங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். சுக்கிரனும் ஜன. 28 வரை சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த வரவு இருக்கும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். வியாபாரம் விருத்தியாகும். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். விவசாயிகள் விளைச்சலில் கவனம் செலுத்துவது நல்லது. உழைப்பாளர்களுக்கு முயற்சிக்கேற்ற லாபம் கிடைக்கும். சந்திராஷ்டமம்: ஜன. 30.அதிர்ஷ்ட நாள்: ஜன. 14, 21, 23. பிப். 3, 5, 12.பரிகாரம்: விஷ்ணு துர்கையை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

கடகம்; புனர்பூசம் 4ம் பாதம்: பிறர் நலனில் அக்கறை கொண்டு மற்றவருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் அதிர்ஷ்டமான மாதம். குரு பகவான் மாதம் முழுவதும் லாப ஸ்தானத்தில் வக்ரம் அடைந்திருந்தாலும், 3 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது எடுக்கும் முயற்சிகளுக்கு எல்லாம் வெற்றியாக்குவார். மனதில் புதிய நம்பிக்கை உண்டாகும். செயல்களில் துணிவு ஏற்படும். எடுத்த வேலைகளை முடித்து விடக்கூடிய அளவிற்கு வாய்ப்புகள் உருவாகும்.  குடும்பத்தினர் ஆலோசனை உங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்கும். உடன் பிறந்தவர்களும் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள். மாதத்தின் முதல், கடைசி வாரத்திலும் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். புதிய வீட்டில் குடியேறுவீர்கள். நேற்றைய கனவு நனவாகும். பணவரவு அதிகரிக்கும். கலைஞர்கள், வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். தொழில் முன்னேற்றமடையும். பாக்ய ஸ்தான ராகுவால் பெரியோரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். இஷ்ட தெய்வத்தின் அருள் உண்டு. அஷ்டம ஸ்தானத்தில் சனி சஞ்சரித்து வருவதால் எப்போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உடல் நலனில் சின்னச் சின்ன சங்கடம் வந்து செல்லும். எதிரிகளால் உங்கள் செல்வாக்கு அந்தஸ்துக்கு சில சோதனை உண்டாகும். அனைத்திலும் கவனமாக இருப்பது நல்லது. மனக்குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். சப்தம ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் எப்பொழுதும் வேலையின் மீதான சிந்தனை ஓடிக் கொண்டிருக்கும். அதனால் உங்கள் மீதான அக்கறையே உங்களுக்கு இல்லாமல் போகும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் அக்கறை கூடும். குடும்பத்தில் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். விவசாயிகள் விளைச்சலில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டி வரும்.சந்திராஷ்டமம்: ஜன. 30.அதிர்ஷ்ட நாள்: ஜன. 20, 21, 29. பிப். 2, 3, 11, 12.பரிகாரம்: மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.பூசம்: மனம் சொல்லும்படி வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். உங்கள் நட்சத்திரநாதன் அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சி பலத்துடன் சஞ்சரிப்பதால் ஒவ்வொரு வேளையிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. சட்டத்திற்கும் நீதிக்கும் புறம்பான செயல்  உங்களுக்கு சங்கடத்தை உண்டாக்கும். எதிரிகளால் சின்னச் சின்ன பிரச்னைகளை சந்திக்க நேரும். அது உங்களுடைய அந்தஸ்திற்கு கேள்விக் குறியாக மாறும். இந்த நேரத்தில் மாதம் முழுவதும் லாபாதிபதியான சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த வரவு இருக்கும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை அமையும். தம்பதிக்குள் இணக்கம் கூடும். எல்லா பிரச்னைகளையும் ஒன்றாக சேர்ந்து எதிர்கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வழக்கத்தை விட இந்த மாதம் கூடுதல் அக்கறை தேவை. உடன் பணிபுரிபவர்களுடன் வாக்குவாதம், பிரச்னைகளை வைத்துக் கொள்ள வேண்டாம். சப்தம ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் வேலைபளு கூடும். ஒரு சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். பணியின் காரணமாக அடிக்கடி வெளியூர் சென்று வர வேண்டிய நிலையும் ஒரு சிலருக்கு ஏற்படும். பல வகையிலும் அலைச்சல் அதிகரிக்கும். இந்த நேரத்தில் வெளிநாட்டு தொடர்புகள் அந்நியரால் உங்களுக்கு உண்டாகும். மாதத்தின் பிற்பகுதியில் ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். புதிய வீட்டில் குடியேறும் பாக்கியம் உண்டாகும்.  நேற்றைய கனவுகள் நனவாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். விவசாயி கவனமுடன் செயல்படுவது அவசியம்.சந்திராஷ்டமம்: ஜன. 31.அதிர்ஷ்ட நாள்: ஜன. 17, 20, 26, 29. பிப். 2, 8, 11.பரிகாரம்: பைரவரை வழிபட சங்கடம் விலகும்.ஆயில்யம்: நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் முன்னேற்றமான மாதம். மாதத்தின் முதல் வாரத்திலும் கடைசி வாரத்திலும் புதபகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்கள் வேலை எளிதாக நடக்கும். வரவேண்டிய பணம் வரும். இடம் விற்பது வாங்குவது போன்ற வேலை லாபம் தரும். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வெளியூர் பயணம் லாபம் தரும். மாதம் முழுவதும் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். தம்பதிக்குள் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி குறையும். இருந்தாலும், சப்தம ஸ்தானத்தில் சூரியனும், அஷ்டம ஸ்தானத்தில் சனியும் சஞ்சரித்து வருவதால் அனைத்திலும் கவனமாக செயல்படுவது நல்லது. உடல் நிலையும் ஒரு நேரம் இருப்பது போல் மறு நேரம் இல்லாமல் போகும். நேரத்திற்கு உணவு துாக்கம் போன்றவற்றைக் கடைபிடிப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் பதற்றப்படாமல் செயல்படுவது அவசியம். இறை வழிபாடு இந்த மாதத்தில் உங்களுக்கு அதிகபட்சமான நன்மை ஏற்படும். பெரியோரின் ஆதரவு கிடைத்து அதனால் சங்கடங்களில் இருந்து வெளியில் வர முடியும். நினைத்திருந்த வேலை நடக்கும். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும். புதிய முயற்சிகளில் மட்டும் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு மாதத்தின் கடைசியில் படிப்பில் அக்கறை உண்டாகும். உழைப்பாளர்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.சந்திராஷ்டமம்: பிப். 1.அதிர்ஷ்ட நாள்: ஜன. 14, 20, 23, 29. பிப். 2, 5, 11.பரிகாரம்: சக்கரத்தாழ்வாரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

சிம்மம்: மகம்; எதிலும் பின்விளைவுகள் பற்றி யோசித்து நிதானமாக செயல்படும் உங்களுக்கு பிறக்கும் தை மாதம் யோகமான மாதம். சனி, ராகு, கேது ஆகியோர் உங்களுக்கு தை மாதம் மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல் உங்கள் ராசிநாதன் சூரியனால் ஆற்றல் அதிகரிக்கும். கண்களைக் கட்டி நடுக்காட்டில் விட்டது போல் தவித்துக்கொண்டிருந்த நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவார். வாழ்க்கைக்குரிய தேவைகளை அடைய வைப்பார். உடல் நிலை, மன நிலையில் இருந்த சங்கடம், பிரச்னை எல்லாம் விலகும். தொழிலில் ஏற்பட்ட போட்டி இருந்த இடம் தெரியாமல் மறையும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்ப்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தடைபட்ட வேலை நடக்கும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும்.  திறமை வெளிப்படும் மாதம் இது. புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் புதிய சொத்து சேரும். கலைஞர் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்திலும், பண வரவிலும் இருந்த சங்கடம் விலகும். எதிர்பார்த்த வரவு வரும். அரசு வழியில் தடைபட்ட வேலை ஒவ்வொன்றாக நடைபெற ஆரம்பிக்கும். எல்லாவற்றிலும் நிதானமாக செயல்படுவதால் விருப்பம் பூர்த்தியாகும். உழைப்பாளர் நிலை உயரும். மாணவர் ஆசிரியர் ஆலோசனையை ஏற்பது நல்லது. விவசாயிகள் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம்.சந்திராஷ்டமம்: பிப். 2.அதிர்ஷ்ட நாள்: ஜன. 16, 19, 25, 28. பிப். 1, 7, 10.பரிகாரம்: வல்லப கணபதியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.பூரம்: உங்கள் நிலையில் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருந்து, சமூகத்தில் நற்பெயர் பெற்று வரும் உங்களுக்கு பிறக்கும் தை மாதம் முன்னேற்றமான மாதம். கடந்த மாதத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலக ஆரம்பிக்கும். மாதத்தின் முற்பகுதியில் சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு சில சங்கடங்களை ஏற்படுத்தும். எதிர் பாலினரால் பிரச்னைகளுக்கு ஆளாக வேண்டியதாக இருக்கும். உங்களுக்கு அவப்பெயர் உண்டாகலாம் என்பதால் எச்சரிக்கை அவசியம். மாதத்தின் பிற்பகுதியில் நிலைமை மாறும். உங்களை நீங்களே புரிந்து கொள்வீர்கள். ராசிநாதன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் எத்தனை சங்கடம் வந்தாலும் அவற்றிலிருந்து வெளியில் வர முடியும். நீங்கள் நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்திக் கொள்வீர்கள். குடும்பத்திலும், தொழிலிலும் நிம்மதி இருக்கும். உத்யோகம் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகளும் விலகும். எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். உறவினர் ஆதரவாக இருப்பர். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் ஏற்படும். பிள்ளைகள் பற்றிய கவலை வேண்டாம். உடல் நிலையில் எப்பொழுதும் கவனமாக இருப்பது நல்லது. ராகுவால் உடலில் இனம் புரியாத பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டாலும் அதை அப்படியே விட்டு விடாமல் மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.  விவசாயிகள் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். மாணவர்களுக்கு கல்வியின் மீது ஆர்வம் கூடும். அரசியல்வாதிகள், உழைப்பாளர்கள் நிலை உயரும்.சந்திராஷ்டமம்: பிப். 3.அதிர்ஷ்ட நாள்: ஜன. 15, 19, 24, 28. பிப். 1, 6, 10.பரிகாரம்: கருமாரி அம்மனை வழிபட கஷ்டம் விலகும்.உத்திரம் 1ம் பாதம்: ஆத்ம பலம் கொண்ட உங்களுக்கு எந்த ஒன்றையும் சமாளித்திடும் சக்தி எப்பொழுதும் இருக்கும். பிறக்கும் தை மாதம் வாழ்வில் யோகமான மாதம். உங்கள் நட்சத்திர, ராசிநாதன் 6 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் இதுவரையில் உங்களுக்கு இருந்த நெருக்கடி எல்லாம் இந்த மாதத்தில் இல்லாமல் போகும். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். எதிலும் யோசித்து, யோசித்து செயல்பட்டு வந்த நிலையில் மாறும். தைரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்திடக் கூடிய அளவிற்கு வாய்ப்பு உருவாகும். அரசு வழி முயற்சி சாதகமாகும். சனி, ராகு, கேது என்று கிரகம் எதிர்மறையாக சஞ்சரித்தாலும் சூரியனின் சஞ்சாரம் எல்லா பாதிப்புகளையும் தடுத்து நிறுத்தி முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் செல்லும். புதபகவானும் மாதத்தின் முதல் வாரத்திலும் கடைசி வாரத்திலும் உங்களுக்கு யோகமான பலன்களை வழங்குவார். நேற்றைய கனவு நனவாகும். இடம், வீடு என்ற ஆசை பூர்த்தியாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். புதிய வீட்டில் குடியேற முடியும். வீட்டில் சுப காரியம் நடக்கும். சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் சமூகத்தில் உங்கள் நிலை உயரும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாலினரால் ஏற்பட்ட பிரச்சினைகள் எல்லாம் முடிவிற்குவரும். வெளிநாடு செல்வதற்காக எதிர்பார்த்த அனுமதிகள் கிடைக்கும். விவசாயிகள் விளைச்சலில் கூடுதல் அக்கறை எடுக்க வேண்டியதாக இருக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். உழைப்பாளர்களும் மதிப்பும் மரியாதையும் கூடும். மாணவர்கள் படிப்பின் அவசியம் புரிந்து செயல்படுவர்.சந்திராஷ்டமம்: பிப். 3.அதிர்ஷ்ட நாள்: ஜன. 19, 28. பிப். 1, 10.பரிகாரம்: நாள்தோறும் சூரிய பகவானை வழிபட வளம் உண்டாகும்.

கன்னி: உத்திரம் 2, 3, 4ம் பாதம்; முன்னேற்றம் ஒன்றையே நோக்கமாக கொண்டு வாழ்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் தை மாதம் நன்மையான மாதம். மனக்குழப்பம் விலக ஆரம்பிக்கும். தொழிலில் புதிய பாதை தெரியும். இதுவரை இருந்த நெருக்கடியில் இருந்த இடம் தெரியாமல் போகும். எதிர்பார்ப்பு ஒவ்வொன்றாக பூர்த்தியாகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி, வழக்கு விலகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் முன்னேற்றத்தை நோக்கியதாகவே இருக்கும். புத்திசாலித்தனம் வெளிப்படும். அதனால் நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் எதிர்மறையாக இருப்பதால் எதிர்பாலினர் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும், அவர்களுடைய ஆலோசனைகளை ஏற்பதும் பெரும் சங்கடங்களில் இருந்து பாதுகாக்கும். உத்யோகம் பார்க்கும் இடத்தில் வேலையில் மட்டும் கவனமாக இருப்பது அவசியம். பிறருக்கு ஜாமீன் போடுவது, சிபாரிசு செய்வது என்ற வேலைகளில் ஈடுபட வேண்டாம். அது உங்களுக்கே எதிர்மறையாக மாறும். ஒரு சிலர் உடன் பணிபுரிபவரால் அவமானத்திற்கு ஆளாகவும் நேரும். விலகி நின்று பழகுவது நல்லது. சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு மனதில் சலனங்களை ஏற்படுத்தலாம், தவறானவர்கள் பின்னால் உங்களைப் போக வைக்கலாம்.  அதனால், குடும்ப வாழ்க்கையில் பிரச்னை உருவாகும். என்பதை மனதில் கொண்டு செயல்படுவது அவசியம். சனிபகவான் உங்களைப் பாதுகாப்பார். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகளை நீக்குவார். வழக்கு விவகாரம், போட்டிகள், பிரச்னைகளில்  உங்களுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்துவார். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். உழைப்பாளர்கள் நிலை முன்னேற்றமடையும். சந்திராஷ்டமம்: பிப். 4.அதிர்ஷ்ட நாள்: ஜன. 14, 19, 23, 28. பிப். 1, 5, 10.பரிகாரம்: வராகியை வழிபட சங்கடம் விலகும்.அஸ்தம்: தெளிந்த சிந்தனையுடன், திட்டமிட்டு வாழ்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் தை மாதம் நன்மையான மாதம். சனி பகவானின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால், சனி கொடுக்க எவர் தடுக்க முடியும் என்பதை உணர்வீர்கள். இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடி விலக ஆரம்பிக்கும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு இருந்த இடம் தெரியாமல் மறையும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட போட்டி, எதிர்ப்பு விலகும். விவகாரம் சாதகமாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். உத்யோகத்தில் இருப்பவரின்  எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தடைபட்ட வேலை நடக்கும். புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் நினைத்த வேலைகளை நடத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். நேற்றைய  கனவு நனவாகும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். மாதம் முழுவதும் குரு பகவான் வக்ரமடைந்திருப்பதால் ஜென்ம கேதுவின் சஞ்சாரம் குழப்பங்களை ஏற்படுத்தும். நன்மை எது? தீமை எது? என்பதைத் தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு சிந்தனை மழுங்கும். ஒவ்வொன்றிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. 7 ம் இட ராகு ஆசைகளை அதிகரிக்கலாம். அதற்கெல்லாம் இடம் கொடுத்தால் அது உங்களுக்கு எதிர்மறையான பலன்களை ஏற்படுத்தும் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகளை ஏற்பது அவசியம். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும். யாரை எப்படி பயன்படுத்துவது? எந்த இடத்தில் வைப்பது? என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். பொதுவாக பிறரை நம்பி எந்த ஒரு வேலையிலும் இந்த நேரத்தில் ஈடுபட வேண்டாம். உங்களால் முடிந்தவற்றில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உழைப்பாளர்களுக்கு முயற்சிக்கேற்ற லாபம் உண்டாகும். மாணவர்கள் ஆசிரியரின் அறிவுரைகளை ஏற்பது நல்லது.சந்திராஷ்டமம்: பிப். 4, 5.அதிர்ஷ்ட நாள்: ஜன. 14, 20, 23, 29. பிப். 2, 11.பரிகாரம்: உலகளந்த பெருமாளை வழிபட நன்மை உண்டாகும்.சித்திரை 1, 2ம் பாதம்: சூழ்நிலைக்கேற்ப உங்களை மாற்றிக் கொள்ளும் திறமை படைத்த உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் முன்னேற்றமான மாதம். நட்சத்திரநாதன் செவ்வாய் வக்ரம் அடைந்திருந்தாலும், 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி உங்களை உயர்த்துவார். செல்வாக்கை உண்டாக்குவார். நேற்றுவரை அனுபவித்து வந்த சங்கடங்களில் இருந்து விடுவிப்பார். தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். போட்டியாளர்களால் அடைந்து வந்த சங்கடம் இல்லாமல் போகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரத்தை விருத்தி செய்வீர். வேலைப் பார்க்கும் இடத்தில் உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். குடும்பத்திலும் நிம்மதியான நிலை ஏற்படும். புதிய வாகனம், சொத்து வாங்கும் கனவு நனவாகும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். பிள்ளைகள் நலனிலும் பூர்வீக சொத்து விஷயத்திலும் கவனமாக இருப்பது நல்லது. எதிர்பாலினரிடம் ஓரடி விலகி இருப்பது அவசியம். மாதம் முழுவதும் சுக்கிரனின் சஞ்சாரமும், மாதத்தின் இடைப்பகுதியில் புதனின் சஞ்சாரமும் உங்களுக்கு எதிர்மறையாக இருப்பதால் செல்வாக்கு, அந்தஸ்திற்கு நெருக்கடி ஏற்படலாம். அவப்பெயரும் உண்டாகலாம். மற்றவர்கள் விமர்சனம் செய்யும் உருவாகும். இந்த நிலைகளை உணர்ந்து செயல்படுகின்றபோது நன்மை அதிகரிக்கும். குடும்பம், கௌரவம், பிள்ளை, அவர்களின் நலன், எதிர்காலம் என்பதை யெல்லாம் யோசித்து செயல்படுவது மிக அவசியம். தை பிறந்தால் வழிபிறக்கும் என்பதுபோல் கும்ப சனியால் நல்ல வழி உங்களுக்குத் தெரியும். ஒரு சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்திலும் நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பின் மீது அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: பிப். 5, 6.அதிர்ஷ்ட நாள்: ஜன. 14, 18, 23, 27. பிப். 9.பரிகாரம்: செந்தூர் வேலனை வழிபட நன்மை நடந்தேறும்.

துலாம்: சித்திரை 3, 4ம் பாதம்; எதிலும் வேகமாக செயல்பட்டு வெற்றியடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் நன்மையான மாதம். உங்கள் வேலை இந்த மாதத்தில் எளிதாக நடக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சி வெற்றி அடையும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கைக்கு வரும். வங்கியில் கேட்டிருந்த பணம் கிடைக்கும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். உறவுகளிடம்  செல்வாக்கு உயரும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரனால் வருமானம் அதிகரிக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். வியாபாரியின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். கணவன் மனைவிக்குள் இணக்கமான சூழல் உண்டாகும். குடும்ப பிரச்னை விலகும். தை பிறந்தால் வழி பிறக்கும். புதிய பாதை தெரிய ஆரம்பிக்கும். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவருக்கு வாய்ப்பு உண்டாகும். பெரியோரின் துணையும், ஆசீர்வாதமும் முன்னேற வைக்கும். நெருக்கடி இல்லாத மாதமாக இந்த மாதம் உங்களுக்கு இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். விவசாயிகள் கவனமாக செயல்படுவது நல்லது. உழைப்பாளர் நிலை உயரும்.சந்திராஷ்டமம்:  பிப். 6.அதிர்ஷ்ட நாள்: ஜன. 15, 21, 24, 30. பிப். 3, 12.பரிகாரம்: மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட  வளம் உண்டாகும்.சுவாதி: நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் யோகமான மாதம். உங்கள் நட்சத்திரநாதன் நெருக்கடிகளை விலக ஆரம்பிப்பார். குடும்பத்திலும் வெளி வட்டாரத்திலும் ஏற்பட்ட அவமரியாதை மாறும். நினைத்ததை சாதிப்பீர்கள். புதிய முயற்சி வெற்றி அடையும். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். குடும்ப பிரச்னை விலகும். ஒரு சிலர் இருக்கும் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு மாறுவீர்கள். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை, நெருக்கடி முடிவிற்கு வரும். அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். வியாபாரத்தில் போட்டியாளர்களால் ஏற்பட்ட பிரச்னை இருந்த இடம் தெரியாமல் போகும். எதிர்ப்பு விலகும். வழக்கு சாதகமாகும். அரசு வழி முயற்சி லாபத்தை ஏற்படுத்தும்.  வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான நிலை உண்டாகும். விவசாயி விளைச்சல் மீது முழுமையான கவனம் செலுத்துவது நல்லது. அரசியல்வாதிகள் தலைமையை அனுசரித்துச் செல்வது சிறப்பு.  எதிர்பார்த்த பதவி கிடைக்கும். சேமிப்பில் அக்கறை உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை, புதிய வாகனம் என்று மகிழ்ச்சியான நிலை உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை இருக்கும் என்றாலும் ஆசிரியர் ஆலோசனை மேலும் நன்மை தரும்.சந்திராஷ்டமம்: பிப். 6, 7.அதிர்ஷ்ட நாள்: ஜன. 15, 22, 24, 31. பிப். 4.பரிகாரம்: காளிகாம்பாளை வழிபட கஷ்டம் தீரும்.விசாகம் 1,2,3ம் பாதம் : சூழ்நிலைக்கேற்ப செயல்பட்டு வெற்றியடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் முன்னேற்றமான மாதம். நீங்கள் நினைத்த வேலை இந்த மாதத்தில் நடக்கும். நட்சத்திராதிபதி அஷ்டம ஸ்தானத்தில் வக்ரம் அடைந்திருப்பதால் குழப்பம் விலகும்.ராகுவும், சுக்கிரனும் உங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவர்கள். குடும்பம், தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலக ஆரம்பிக்கும். எதிர்பார்த்த வரவு இருக்கும். உறவினர்கள் உங்களைத் தேடிவந்து உதவிகள் பெற்றுச் செல்வர். சமூகத்தில் உங்கள் அந்தஸ்தும், செல்வாக்கும் உயரும். உங்களுக்கு சரியெனப்பட்டதை செய்து முடித்து வழிகாட்டியாக இருப்பீர்கள். அரசு பணியில் இருப்பவர்களுக்கு இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வந்து எதிர்பார்த்த உயர்வு, மற்றும் கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்களுக்கு புதிய பொறுப்பு ஊதிய உயர்வு கிடைக்கும். எடுக்கும் வேலை வெற்றியாகும். கனவாக இருந்த இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். புதிய வாகனம் வாங்கும் கனவும் நனவாகும். பிள்ளைகள் வழியில் ஒரு சிலருக்கு செலவு ஏற்படும். அவர்களுடைய முன்னேற்றத்தை மேற்கொள்வீர்கள். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். வியாபாரத்தில் பிரச்னை இல்லாத நிலை உருவாகும். வழக்கு விவகாரம்  சாதகமாகும். கலைஞர்களுக்கு, வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். விவசாயிகள் கவனமாக செயல்படுவது அவசியம். தொழிலாளர் நிலை உயரும்.சந்திராஷ்டமம்: பிப். 7, 8.அதிர்ஷ்ட நாள்: ஜன. 15, 21, 24, 30. பிப். 3, 6, 12.பரிகாரம்: ஆதி திருவரங்கனை வழிபட அல்லல் நீங்கும்.

விருச்சிகம்: விசாகம் 4ம் பாதம்;  ஆற்றல் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் முன்னேற்றமான மாதம். இதுவரை தடைபட்ட வேலை ஒவ்வொன்றாக நடக்கும். எடுக்கின்ற முயற்சி லாபத்தை உண்டாக்கும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். சுயமாக தொழில் ஆரம்பிக்க நினைத்தவரின் முயற்சி வெற்றியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். தாமதம் என்றிருந்த நிலையில் மாற்றம் ஏற்படும். சின்னச் சின்ன சங்கடம் வந்து செல்லும்.  குழந்தைகளுக்காக அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர். அவர்களைப்பற்றிய சிந்தனை மேலோங்கும். நீங்கள் நினைத்த வேலை வேகமாக நடந்தேறும். புதிய சொத்து வாங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வங்கியில் கேட்ட பணம் கைக்கு வரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். உழைப்பாளர் நிலை உயரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு ஆதரவாக இருந்து வழிகாட்டுவார். வெளியூர் பயணம் லாபத்தை ஏற்படுத்தும். வெளிநாடு செல்வதற்கு முயற்சி மேற்கொண்டவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பூமி வாங்கும், விற்கும் முயற்சிகளில் கவனமாக இருப்பது தேவை. மூல பத்திரத்தைப் படிக்காமல் எந்த ஒரு முடிவிற்கும் வர வேண்டாம். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த செல்வாக்கு உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நேற்றைய முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: பிப். 8.அதிர்ஷ்ட நாள்: ஜன. 18, 21, 27, 30. பிப். 3, 9, 12.பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.அனுஷம் : எதிலும் உறுதியாக இருந்து வெற்றியடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் யோகமான மாதம். சனிபகவான் உங்கள் ராசியையும் பார்ப்பதால் அனைத்திலும் நிதானம் தேவை. நீங்கள் மேற்கொள்ளும் வேலைகளில் பின் விளைவு பற்றி யோசித்து செயல்படுவது நல்லது. தை பிறந்தால் வழி பிறக்கும். சூரியனால் எதிர்பார்த்த முன்னேற்றத்தை ஏற்படுத்தப் போகிறார். கடந்த மாதத்தில் இருந்த நெருக்கடி, பிரச்சனை, சங்கடம் எல்லாம்  விலகும். நினைத்த வேலைகளை எந்தவிதமான தடையுமில்லாமல் நடத்தி முடித்திடக்கூடிய நிலை உண்டாகும். தொழில் நிறுவனம் நடத்தி வருபவர்களுக்கு பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்கள் பலம் அதிகரிக்கும். கேதுபகவான் தேவைக்கேற்ற வருமானத்தை வழங்குவார். முயற்சிக்கேற்ற லாபத்தை ஏற்படுத்துவார். ஒரு சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர். உங்கள் நீண்ட நாள் கனவு நனவாகும். ஆசைபட்ட இடத்தை வாங்கும் நிலை உண்டாகும். வியாபாரிகளுக்கும், கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். தடைபட்டிருந்த வருமானம் வரத்தொடங்கும். பழைய முதலீட்டில் இருந்து எதிர்பார்த்த லாபம் வரும். சுக்கிரன் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செய்து வரும் தொழிலை விரிவு செய்யக்கூடிய நிலை ஒரு சிலருக்கு ஏற்படும். பிள்ளைகள் நலனுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். மாணவர்கள், ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்று படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.சந்திராஷ்டமம்: பிப். 8, 9.அதிர்ஷ்ட நாள்: ஜன. 17, 18, 26, 27.பரிகாரம்: அங்காள பரமேஸ்வரியை வழிபட நன்மைகள் நடந்தேறும்.கேட்டை:  அனைத்திலும் வெற்றி பெறும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் அதிர்ஷ்டமான மாதம். லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் கேது பகவான் செய்துவரும் தொழிலில் லாபத்தை ஏற்படுத்துவார். முன்னேற்றத்தை உண்டாக்குவார். பணியாளர், ஒத்துழைப்பை அதிகரிப்பார். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். நேற்று இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். டெபாசிட் செய்த பணத்திருந்து லாபம் வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். முயற்சி ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் இது உங்களுக்கு யோகமான காலம். உங்கள் செல்வாக்கும், திறமையும் வெளிப்படும். எடுத்த வேலைகளை முடித்து அதில் லாபம் காண்பீர். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்னை விலகி இணக்கம் ஏற்படும். எல்லா வகையிலும் இம் மாதம் உங்களுக்கு யோகமான மாதம். நினைத்த வேலைகளை நினைத்தபடி உங்களால் நடத்திக்கொள்ள முடியும். ஒரு சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர். மாணவர்கள் படிப்பின் மீது அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நன்மையை ஏற்படுத்தும். உழைப்பாளர்களுக்கு எதிர்பார்த்த வருமானம் வரும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும்.சந்திராஷ்டமம்: பிப். 9, 10.அதிர்ஷ்ட நாள்: ஜன. 14, 18, 23, 27. பிப். 5.பரிகாரம்: கள்ளழகரை வழிபட வளம் உண்டாகும்.

தனுசு: மூலம்; நன்மைத் தீமைகளை அறிந்து அதற்கேற்ற வகையில் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் முன்னேற்றமான மாதம். உங்கள் நட்சத்திரநாதனால் தொழிலில் முன்னேற்றம் அடைவீர். வெளிநாட்டு முயற்சிகளில் வெற்றியுண்டாகும். அந்நியரால் லாபம் ஏற்படும். பண நெருக்கடி விலகும். நேற்றைய முயற்சி வெற்றியாகும். அனைத்திலும் கவனமாக செயல்படுவது நல்லது. ஒவ்வொன்றிலும் தடை ஏற்படும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். இந்த மாதத்தில் உங்களுடைய வேலைகளை நீங்களே செய்து கொள்வது நல்லது. பிறரை நம்பி ஒப்படைக்கும் வேலைகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரனின் சஞ்சார நிலை சாதகமாக இருப்பதால் கனவு நனவாகும். நினைப்பது நடந்தேறும். வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும் கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை ஏற்படும். ஒரு சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும். அதன் வழியாக லாபம் உண்டாகும். உங்கள் புத்திசாலித்தனத்தின் காரணமாக நினைத்த வேலைகளை நடத்திக் கொள்வீர்கள். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். தாய்வழி உறவு உங்களுக்கு உதவியாக இருக்கும். அரசியல்வாதியின் செல்வாக்கு உயரும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும்.சந்திராஷ்டமம்: ஜன. 14, பிப். 10, 11.அதிர்ஷ்ட நாள்: ஜன. 16, 21, 25, 30. பிப். 3, 7, 12.பரிகாரம்: விநாயகரை வழிபட நன்மை நடந்தேறும்.பூராடம்: நினைத்ததை சாதிக்கும் சக்தி கொண்ட உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். உங்கள் நட்சத்திரநாதன் சுக்கிரன் மாதம் முழுவதும் எதிர்பார்த்த லாபத்தை வழங்குவார். உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். நேற்று இருந்த நெருக்கடி விலகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். ஆயுள் காரகன் 3ம் இடத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் திறமை வெளிப்படும். நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். இதுவரை தடைபட்ட வேலை நடந்தேறும். வேலைக்காக முயற்சி செய்தவருக்கு நல்ல தகவல் வரும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். நண்பர்கள் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். பார்த்து வரும் உத்தியோகத்தில் இருந்த பிரச்னை விலக ஆரம்பிக்கும். உங்கள் திறமை வெளிப்படும். ஒரு சிலர் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்வதற்காக கோயிலுக்கு சென்று வருவீர்கள். புதபகவானும் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த வேலை எதிர்பார்த்தபடி நடக்கும். மனச்சுமை குறையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடைபெறும். ஒரு சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். மாணவர்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். விவசாயிகள் கவனமாக செயல்படுவது நல்லது. தொழிலாளர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: ஜன. 15. பிப். 11, 12.அதிர்ஷ்ட நாள்: ஜன. 21, 24, 30. பிப். 3, 6.பரிகாரம்: அஷ்டலட்சுமியை வழிபட வளம் உண்டாகும்.உத்திராடம் 1ம் பாதம்: முன்னேற்றத்தை மட்டும் லட்சியமாக கொண்ட உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் நன்மையான மாதம். உங்கள் நட்சத்திரநாதன் சூரியன் இந்த மாதம் முழுவதும் 2ம் இடமான தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அதனால், கடந்த மாதத்தில் இருந்த நெருக்கடி இப்போது இல்லாமல் போகும். உங்கள் வார்த்தையில் தெளிவு இருக்கும். குடும்ப நலனில் அக்கறை உண்டாகும். நினைத்த வேலைகளை நடத்தி முடித்திடும் நிலையுண்டாகும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு வேண்டியதை அடைவீர்கள். சனி பகவான் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். இதுவரையில் உங்களுக்கிருந்த நெருக்கடிகளை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றுவார். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடைவீர்கள். என்னதான் முயற்சி செய்தாலும் எதுவும் நடக்கவில்லையே என்ற எண்ணம் விலகும். திட்டமிட்டபடி ஒவ்வொரு வேலையும் நடந்தேறி எதிர்பார்த்த வரவு ஏற்படும். சங்கடம், நெருக்கடி என்ற நிலை மாறும். ஒரு சிலர் கை வசம் உள்ள பணத்தை தங்க நகைகளில் முதலீடு செய்வீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் உடன் பணிபுரிபவர் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். அரசுவழி வேலைகளில் சிறு தடை ஏற்பட்டாலும் இறுதியில் எதிர்பார்த்த லாபத்தை உங்களால் அடைய முடியும். வெளியூர் பயணம் லாபம் தரும். செல்வாக்கு அந்தஸ்து உயரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். தொண்டர்களின் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் அக்கறை கொள்வீர். தொழிலாளர் நிலை உயரும்.சந்திராஷ்டமம்: ஜன. 16. பிப். 12.அதிர்ஷ்ட நாள்: ஜன. 19, 21, 28, 30. பிப். 1, 3, 10.பரிகாரம்: அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்துவர நன்மை அதிகரிக்கும்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4ம் பாதம்;  நினைத்ததை சாதித்துக் காட்டும் தங்களுக்கு பிறக்கும் தை மாதம் யோகமான மாதம்.   உங்கள் நட்சத்திரநாதன் சூரியன் தை மாதம் முழுவதும் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிப்பதால், வேலைகளில் கவனம் செல்லும் முன்னேற்றத்தை நோக்கி நடை போடுவீர்கள். நடைபெறாமல் இருந்த வேலைகளை நடத்தி முடிப்பதற்காக முயற்சிகள் அதிகரிக்கும். இந்த நேரத்தில் சூரியனின் பார்வை ஏழாம் இடத்திற்கு உண்டாவதால் வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வது நல்லது. நண்பர்கள் எதிராக மாறக்கூடிய நிலை ஒரு சிலருக்கு ஏற்படும். கூட்டுத்தொழிலில் கவனமாக இருப்பது நல்லது. முடிந்தவரை வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தி முன்னேற்றத்தை நோக்கி செயல்படுவது அவசியம். மாதம் முழுவதும் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் வருமானம் அதிகரிக்கும். குடும்பக் குழப்பம் விலகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். புதிய தொழில் தொடங்க முயற்சி செய்து வந்தவர்களுக்கு அதற்குரிய வாய்ப்புகள் அமையும். வேலைத் தேடி வந்தவர்களின் கனவு நனவாகும். பதவியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், உயர்வு கிடைக்கும். முடிந்தவரை உடல் நலனில் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் அக்கறை உண்டாகும். விவசாயி கவனமாக செயல்படுவது அவசியம். உழைப்பாளர்களுக்கு வேலைபளு கூடும். அதே நேரம் தேவையான வரவும் இருக்கும்.சந்திராஷ்டமம்: ஜன. 16, 17.அதிர்ஷ்ட நாள்: ஜன. 19, 26, 28. பிப். 1, 8, 10.பரிகாரம்: கருமாரி அம்மனை வழிபட கஷ்டம் போகும்.திருவோணம்: எப்போதும் தெளிவுடன் செயல்பட்டு வரும் உங்களுக்கு முன்னேற்றமான மாதம். ராகு உங்கள் வேலைகளை எல்லாம் வெற்றியாக்குவார். எடுக்கின்ற முயற்சிகளில் லாபத்தை உண்டாக்குவார். வியாபாரத்தில் இருந்த தடை அகலும். வெளிநாட்டு முயற்சிகளை வெற்றியாக்குவார். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் தேடிவரும். எதிர்பார்த்த வரவு வரும். புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் வரவு அதிகரிக்கும். புதிய சொத்து, வீடு வாங்கும் கனவு நனவாகும். வங்கியில் கேட்ட பணம் கிடைக்கும். அரசு வழி முயற்சி சாதகமாகும். எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். ஜென்ம ராசிக்குள் சூரியன் சஞ்சரிப்பதால் முடிந்தவரை வேலைகளில் நிதானம் தேவை. அஷ்டம ஸ்தானத்திற்கு சனிப்பார்வை உண்டாவதால் உடல்நிலையிலும், பழக்க வழக்கங்களிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நண்பர்களிடமும் வாழ்க்கைத் துணையிடமும் அனுசரித்துச்செல்வதால் நன்மை அதிகரிக்கும். வார்த்தைகளில் நிதானம் அவசியம். குடும்பத்தினருடைய விருப்பங்களை அறிந்து அதன்படி செயல்படுவீர்கள்.  புதிய நண்பர்கள் விஷயத்தில் எப்பொழுதும் கவனம் தேவை. ஒரு சிலருக்கு நண்பர்களால் பிரச்னை சங்கடம் ஏற்படலாம். பெரிய மனிதர்கள் தொடர்பும், அவர்களுடைய ஆதரவும் கிடைக்கும். அனைத்தையும் சமாளிப்பீர். நினைத்த வேலைகளை நடத்திக் கொள்வீர்கள். உங்கள் முயற்சி எளிதாக வெற்றியாகும். மாணவர்கள் படிப்பில் அக்கறை எடுத்துக் கொள்வதால் பொதுத் தேர்வை சந்திப்பதற்கு ஏதுவாக இருக்கும்.சந்திராஷ்டமம்: ஜன. 17, 18.அதிர்ஷ்ட நாள்: ஜன. 20, 26, 29. பிப். 2, 8, 11.பரிகாரம்: திங்களூரில் குடிகொண்டுள்ள சந்திர பகவானை வணங்க நினைப்பது நடந்தேறும்.அவிட்டம் 1, 2ம் பாதம்: எதிலும் வேகமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் முன்னேற்றமான மாதம் இருக்கும். நட்சத்திரநாதன் வக்ரம் அடைந்துள்ள நிலையில்  ராகு முன்னேற்றமான பலன்களை வழங்குவார். எடுக்கும் முயற்சி யாவும் வெற்றியாகும். நினைத்த காரியம் நடக்கும். செய்துவரும் தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரம் லாபம் தரும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகள் நிலை உயரும். தொண்டர் பலம் அதிகரிக்கும். தலைமையை அனுசரித்துச் செல்வதால் நல்லது. உழைப்பாளர்கள் தங்கள் பணியில் கவனமாக இருப்பது சிறப்பு. அலுவலகத்தில் பணிபுரிவோர் தன்னுடன் பணிபுரிபவர்களுடன் அனுசரித்துச் செல்வது அவசியம். மாதம் முழுவதும் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். இதுவரை இருந்த நெருக்கடி, பிரச்னை எல்லாம் விலக ஆரம்பிக்கும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். ஒரு சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற வார்த்தைக்கேற்ப இந்த தை மாதம் உங்களுக்கு அத்தனை நன்மைகளும் ஏற்படுத்தும். வாழ்க்கைக்குரிய வழிகள் தெரியும். பாக்கிய ஸ்தானத்தில் ஞான மோட்சக்காரகன் சஞ்சரிப்பதால் பெரிய மனிதர்கள் தொடர்புகள் கிடைத்து நடத்த முடியாத வேலைகளை நடத்தி முடிப்பீர்கள் தெய்வ அருளும் இக்காலத்தில் உங்களுக்கு கிடைக்கும். தடைபட்ட முயற்சி வெற்றியாகும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. விவசாயி மாதம் முழுவதும் விளைச்சலில் கவனமாக இருக்க வேண்டும்.சந்திராஷ்டமம்: ஜன. 18.அதிர்ஷ்ட நாள்: ஜன. 17, 26, 27. பிப். 8, 9.பரிகாரம்: சுப்ரமணியரை வழிபட சுபிட்சம் உண்டாகும்.

கும்பம்: அவிட்டம் 3, 4ம் பாதம்; திடமான சிந்தனையுடன் எடுத்த வேலைகளில் வெற்றியடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாக இருக்கும். செவ்வாய் வக்ரம் அடைந்துள்ள நிலையில் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் பல வழியிலும் செலவுகளை அதிகரிப்பார். அலைச்சலை ஏற்படுத்துவார். மனதில் ஏதேனும் ஒரு குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். உடல் ரீதியாகவும் சில சங்கடங்கள் ஏற்படும். என்றாலும், மாதத்தின் முதல், கடைசி வாரங்களில் புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் நினைத்த வேலைகள் நடந்தேறும். எதிர்பார்த்த வருமானம் வரும். வாங்க நினைத்த இடத்தை வாங்குவீர்கள். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். வங்கியில் கேட்டிருந்த பணம் கைக்கு வரும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து வரும் சனி பகவான் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். வேகமாக செயல்பட வைப்பார். நினைத்த காரியங்களை நடத்தி வைப்பார். என்றாலும், நண்பர்களையும் குடும்பத்தினரையும் அனுசரித்துச் செல்வது நன்மையாக இருக்கும். செய்துவரும் தொழிலில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அரசு பணியில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். ஒரு சிலர் மேலதிகாரிகளின் கண்டிப்பிற்கு ஆளாக வேண்டிவரும் என்பதால் பணியில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தினர் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். 2 ம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால் வார்த்தைகளில் நிதானம் தேவை. யாரிடமும் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது மிக மிக அவசியம். மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை கொள்வதுடன் ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்பது வெற்றிக்கு வழிவகுக்கும்.சந்திராஷ்டமம்: ஜன. 19.அதிர்ஷ்ட நாள்: ஜன. 17, 18, 26, 27. பிப். 8, 9.பரிகாரம்: நவகிரக வழிபாட்டால் நன்மை உண்டாகும்.சதயம்: எந்த ஒன்றிலும் தனித்துவத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாக இருக்கும். ராகு பகவான் 2ம் இடமான தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச்செல்வது அவசியம். எதிர்பார்த்த வரவு வரும். பழைய கடன்களை அடைத்து நிம்மதியடைவீர்கள். வேலையில் இருப்பவர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நன்மையாக இருக்கும். வியாபாரிகள், கணக்கு வழக்குகளில் கவனமாக இருப்பதும் அரசு முயற்சிகளில் எச்சரிக்கையாக இருப்பதும் அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் வழங்கும்  வேலைகளை மட்டும் செய்வதால் சங்கடங்கள் இல்லாமல் போகும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து வரும் சனி பகவான் மனதிற்குள் ஏதேனும் ஒரு சங்கடத்தை ஏற்படுத்திக்கொண்டே இருப்பார். கையில் எடுத்த வேலையை முடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் ஒரு சிலருக்கு இருக்கும். அதே நேரத்தில் குடும்பத்திலும், நட்பு வட்டத்திலும் சின்னச் சின்ன பிரச்சனைகள் வந்து செல்லும். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது உடல் நிலையில் ஏதேனும் சங்கடத்தை ஏற்படுத்துவார். ஒரு சிலருக்கு எதிர்பார்ப்பில் ஏமாற்றத்தை உண்டாக்குவார். என்றாலும், புதன், சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் வரவு தடையின்றி வரும். செலவுகளை சமாளிக்க முடியும். இடம் வாங்குவது விற்பது போன்ற வேலைகள் நடந்தேறும். பொன் பொருள் சேரும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். அரசியல்வாதிகள் நிதானமாக செயல்படுவதும், தலைமையை அனுசரித்துச் செல்வதும் நன்மையை உண்டாக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவைப்படும்.சந்திராஷ்டமம்: ஜன. 19, 20.அதிர்ஷ்ட நாள்: ஜன. 17, 22, 26, 31. பிப். 4, 8.பரிகாரம்: வராகியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்: எந்த ஒன்றையும் அறிவு பூர்வமாக சிந்தித்து, அதற்கேற்ப செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். குரு பகவான் வக்ரம் அடைந்திருப்பதால் உங்கள் வேலைகளில் அதிகபட்ச கவனம் வேண்டும். எந்த ஒன்றையும் யோசித்து செயல்படுவது நன்மையாகும். ஜென்ம ராசிக்குள் சனி, 2ல் ராகு, 8ல் கேது, 12ல் சூரியன் என்ற சஞ்சார நிலை உங்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும், மாதம் முழுவதும் அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் எதிர்பார்த்த ஆதாயத்தை உங்களுக்கு வழங்குவார். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். எதிர்பார்த்த லாபம் வரும். எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியாகும். உழைப்பாளர்களுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையிலும் நிதானமாக செயல்படுவது நன்மையாகும். புதிய முயற்சிகளில் எச்சரிக்கை அவசியம். பிறரை நம்பி எந்ம வேலையிலும் இந்த மாதத்தில் ஈடுபட வேண்டாம் அதனால் எதிர்மறையான பலன்களே ஏற்படும். குடும்பத்தினரையும் நண்பர்களையும் அனுசரித்துச் செல்வது உங்கள் நெருக்கடிகளைக் குறைக்கும். சில நேரங்களில் எதையோ இழந்ததுபோல் மனம் தடுமாறும் என்றாலும் எல்லாவற்றையும் சமாளித்திடும் சக்தி உங்களுக்கு உண்டாகும். மாணவர்கள் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் படிப்பில் முழுமையான அக்கறை எடுத்துக் கொள்வது நன்மையாகும்.சந்திராஷ்டமம்: ஜன. 20, 21.அதிர்ஷ்ட நாள்: ஜன. 17, 26, 30. பிப். 3, 8, 12.பரிகாரம்: ஐயப்பனை வழிபட சங்கடங்கள் விலகும்.

மீனம்: பூரட்டாதி 4ம் பாதம்; குருவருள் பெற்று பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் யோகமான மாதமாக இருக்கும். கடந்த கால நெருக்கடிகள் ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். குடும்பத்திலிருந்த பிரச்சனைகள் நீங்கும். அலுவலகப் பணியில் நெருக்கடிகளை சந்தித்து வந்தவர்களுக்கு நிம்மதி உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். விரய ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரித்து வருவதால் மறு பக்கம் செலவும் அதிகரிக்கும். புதிய வாகனம், புதிய இடம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதுபோல் உங்கள் வாழ்வில் நன்மைகள் நடக்கும் மாதமாக இந்த மாதம் இருக்கும். வியாபாரம், தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வேலைத்தேடி வந்தவர்களுக்கு தகுதியான வேலைக் கிடைக்கும். குடும்பத்தினரை அனுசரித்துச்செல்வதால் மகிழ்ச்சி நிலைக்கும். பிப். 5 வரை புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்கள் திறமை வெளிப்படும். கலைஞர்களுக்கும் வியாபாரிகளுக்கும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கேட்டிருந்த இடத்திலிருந்து பணம் வரும். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்திக் கொள்ளக்கூடிய நிலை உண்டாகும். ஜென்ம ராசிக்குள் ராகு சஞ்சரிப்பதால் நட்புகளின் போக்கு உங்களை சங்கடப்படுத்தும். சில நண்பர்கள் உங்களைத் தவறான பாதைக்கும் அழைக்கலாம் என்பதால், பின்விளைவுகள், குடும்பம், உங்கள் சுய கௌரவம் போன்றவற்றை யோசித்து கவனமாக செயல்படுவது நன்மையாக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். இருந்தாலும், ஆசிரியர்களின் ஆலோசனை நன்மைகளை உண்டாக்கும். உழைப்பாளர்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். கலைஞர்கள் கனவு நனவாகும். அரசியல்வாதிகள் நிலை உயரும். வயதானவர்கள் உடல்நிலையில் கவனம் கொள்வது அவசியம்.சந்திராஷ்டமம்: ஜன. 21.அதிர்ஷ்ட நாள்: ஜன. 30. பிப். 3, 12.பரிகாரம்: குரு பகவானை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.உத்திரட்டாதி: எந்த ஒன்றிலும் நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் நன்மையான மாதமாக இருக்கும். உங்கள் நட்சத்திர நாதனும், உங்கள் ராசிக்கு லாபாதிபதியும், விரயாதிபதியுமான சனிபகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், அவருடைய 7ம் பார்வை உங்கள் ராசிக்கு 6ம் இடத்தில் பதிவதால் உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். ஆரோக்யமாக செயல்படத் தொடங்குவீர்கள். வியபாரத்தில் ஏற்பட்ட போட்டிகள், பிரச்சனைகள், தடைகள் விலகும். இழுபறியாக இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். இருந்தாலும், குடும்ப ஸ்தானத்திற்கும் சனி பகவானின் பார்வை உண்டாவதால் குடும்பத்தினரை அனுசரித்துச்செல்வது நன்மையாக இருக்கும். 7ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது, நட்புகள் வழியே உங்கள் கௌரவத்திற்கு பாதகத்தை உண்டாக்கலாம் என்பதால் எச்சரிக்கை அவசியம். யாரையும் நம்பி எந்தவொரு செயலிலும் இந்த நேரத்தில் ஈடுபட வேண்டாம். அது உங்களுக்கு எதிர்மறையாக மாறும். ஜென்ம ராசிக்குள் ராகு சஞ்சரித்து வருவதால் ஆசைகள் அதிகரிக்கலாம் என்றாலும், அதைக் கட்டுப்படுத்துவதன் வழியாக எதிர்காலம் உங்களுக்கு யோகமானதாக, நிம்மதியானதாக இருக்கும். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். எதிர்பார்த்த பணம் வரும். சந்தோஷமாக இருந்திடக்கூடிய சூழல் அதிகரிக்கும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். ஒரு சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். ஒரு சிலர் இருக்கும் வீட்டை உங்கள் ரசனைக்கேற்ப மாற்றம் செய்வீர்கள். மாதம் முழுவதும் லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு யோகமான பலன்கள் ஏற்படும். எதிர்பார்த்த மாற்றங்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வருமானம் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உழைப்பாளர் நிலை உயரும். உண்டாகும் மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். வயதானவர்களுக்கு மருத்துவச்செலவு ஏற்படும். அரசியல் வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். சந்திராஷ்டமம்: ஜன. 21, 22.அதிர்ஷ்ட நாள்: ஜன. 17, 26, 30. பிப். 3, 8, 12.பரிகாரம்: சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்ற நன்மை உண்டாகும்.ரேவதி: புத்தி சாதுரியத்துடன் வாழ்வில் முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் நன்மையான மாதமாகும். ஆத்ம காரகன் சூரியன் மாதம் முழுவதும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி விற்பனை அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். புதிய தொழில் தொடங்க முயற்சி செய்து வந்தவர்களுக்கு அரசின் அனுமதி கிடைக்கும். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். பொன் பொருள் சேரும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். இழுபறியாக இருந்த பிரச்சனைகள் முடிவிற்கு வரும். சனி பகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அத்யாவசிய செலவுகளுக்காக கையிருப்பு கரையும். புதிய இடம், வாகனம் என்று வாங்கும் முயற்சி வெற்றியாகும். உங்கள் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். வேலைக்காக வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்து வந்தவர்களுக்கு அதற்குரிய அனுமதி கிடைக்கும். ஜென்ம ராசிக்குள் ராகு சஞ்சரிப்பதால் ஆசைகள் அதிகரிக்கும். அதன் காரணமாக தவறான வழியிலும் செல்லக்கூடிய நிலை ஒரு சிலருக்கு ஏற்படும். அதனால் உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் கவனமாக செயல்படுவதும், தவறான நண்பர்களை விட்டு விலகுவதும் உங்களுக்கு நன்மையை உண்டாக்கும். குடும்பத்திலும் நிம்மதியான நிலையை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் வாழ்க்கைத் துணையின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவதால் வீண் பிரச்சனைகளுக்கு இடமில்லாமல் போகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். பணியாளர்கள் நிலை உயரும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். கலைஞர்களுக்கும், வியாபாரிகளுக்கும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.சந்திராஷ்டமம்: ஜன. 22, 23.அதிர்ஷ்ட நாள்: ஜன. 14, 21, 30. பிப். 3, 5, 12.பரிகாரம்: விஷ்ணு துர்கையை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.


ShareTweetShareShare

Advertisement

Advertisement Tariff

Advertisement




      Dinamalar
      Follow us