தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

/

16

முந்தய பதிப்புகள்

இன்றுநேற்று
இன்றுநேற்று

To type in English

 (or) 

Press CTRL+G 

To type in English

மொத்த செய்திகள்: 1311

எழும்பூர் – காரைக்குடி நள்ளிரவு சிறப்பு ரயில்

சென்னை

16-Oct-2026

மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான மாதமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரித்து, மனக்குழப்பத்தை வழங்கிவரும் ஞான மோட்சக்காரகன் கேது நவ. 13 ம் தேதி கடகத்திற்கு பெயர்ச்சியாவதால் மனக்குழப்பம் விலகும். தவறான நண்பர்கள் உங்களை விட்டு விலகுவர். உழைப்பின் மீது கவனம் செல்லும். கடினமான வேலைகளையும் போராடி முடித்திடக்கூடிய திறமை உண்டாகும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைத்தேடி வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். அக். 20 ம் தேதி மங்களக்காரகன் குரு அதிசாரமாக சிம்ம ராசிக்குள் செல்வதால் உங்கள் நிலை உயரும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். எடுத்த வேலைகள் முடிவிற்குவரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். வரவும் வசதியும் அதிகரிக்கும். பட்டம் பதவி தேடிவரும். திருமண வயதினருக்கு வரன் அமையும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். விவசாயிகள் விளைச்சலில் கவனம் செலுத்துவது நன்மையளிக்கும்.சந்திராஷ்டமம்: நவ. 10.அதிர்ஷ்ட நாள்: அக். 18, 25, 27. நவ. 7, 9, 16.பரிகாரம்: காளத்தீஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகி நன்மை உண்டாகும்.பரணி: வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டே பழகிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் தன குடும்பாதிபதியும் சப்தமாதிபதியுமான சுக்கிரன் மாதம் முழுவதும் வக்கிரம் அடைந்திருப்பதால் உங்கள் எதிர்பார்ப்புகள் இழுபறியாகும். விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியாத அளவிற்கு சூழ்நிலை உங்களுக்கு எதிராக மாறும்.  வாழ்க்கைத்துணையுடன் இணக்கமற்ற நிலையும் உருவாக வாய்ப்பிருப்பதால்  அனுசரித்துச்செல்வது நன்மையளிக்கும். ஆடம்பரம், ஆசை என்பதற்கெல்லாம் இந்த நேரத்தில் இடம் கொடுக்க வேண்டாம். உங்கள் சகாய ஸ்தானதிபதி புதனும் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் எதிர்பாராத சங்கடங்கள் ஏற்படும். மனம் குழப்பத்திற்கு ஆளாகும். சிலர் நரம்பு சம்பந்தமான பிரச்னைகளுக்கு ஆளாவீர்கள். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது அதற்கு எதிரானதாகவும் இருக்கும். இந்த நேரத்தில் மாதம் முழுவதும் உங்கள் பூர்வ புண்ணியாதிபதி சூரியனும் நீச்சம் அடைந்திருப்பதால் அரசு பணியில் இருப்பவர்களும் அரசியல்வாதிகளும் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நன்மையளிக்கும். நீர் ராசியில் பூமிக்காரகன் செவ்வாய் நீச்சமடைந்திருப்பதால் விவசாயிகள் விளைச்சலில் கவனமாக இருப்பது நன்மையளிக்கும். அறுவடைக்குரிய காலம் வந்ததும் காலம் தாழ்த்தாமல் செயல்படுவது அவசியம். வியாபாரம் தொழிலில் முன்னேற்றம் அடைந்து வந்தவர்களுக்கு தடுமாற்றமும் குழப்பமும் ஏற்படும். அச்ச உணர்வு மேலோங்கும். சிலருக்கு வரவை விட செலவு அதிகரிக்கும். இந்த மாதம் முழுவதும் வியாபாரிகள் புதிய முதலீட்டில் கவனமாக இருப்பது நன்மையளிக்கும் என்றாலும், அக். 20 முதல் குருப்பார்வை ராசிக்கு கிடைப்பதால் எந்த விதமான நெருக்கடி வந்தாலும் அதையெல்லாம் உங்களால் சமாளித்துக் கொள்ள முடியும். தேவைக்கேற்ற பணம் வரும். கௌரவமும் செல்வாக்கும் நீடிக்கும்.மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் எடுப்பது அவசியம்.சந்திராஷ்டமம்: நவ. 11.அதிர்ஷ்ட நாள்: அக். 18, 24, 27. நவ. 6, 9, 15.பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் நடக்கும்.கார்த்திகை 1 ம் பாதம்: ஆயிரம் யானைகளுக்கு மத்தியில் சிங்கம்போல் வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் பூர்வ புண்ணியாதிபதி சூரியன் மாதம் முழுவதும் சப்தம ஸ்தானத்தில் நீச்சம் அடைவதுடன், ராசிநாதன் செவ்வாயும் நீச்சமடைகிறார். இதனால் கடந்த மாதத்தில் கிடைத்த நற்பலன்களில் மாற்றம் ஏற்படும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். உங்கள் இயல்பான நிலையிலும் மாற்றம் ஏற்படும். வேகம், வீரம், நினைத்ததை சாதிக்கும் ஆற்றல் என்றிருந்த நிலையெல்லாம் மாறும். சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும் உங்களை மாற்றும். நன்றாகப் போய்க்கொண்டிருந்த வேலைகளிலும் தடை தாமதம் என்று ஏற்படும். உத்தியோகத்தில் சிற்சில சங்கடங்கள் போராட்டம் என்று நெருக்கடி அதிகரிக்கும் என்றாலும் சுய ஜாதகத்தில் தசா புத்தி சாதகமாக இருப்பவர்களுக்கு இந்த நிலைகள் நெருங்காமல் போகும். சப்தம ஸ்தானாதிபதியும் வக்கிரம் அடைந்திருப்பதால் தம்பதிக்குள்ளும் ஏதாகிலும் ஒரு பிரச்னை ஓடிக்கொண்டிருக்கும். நன்றாகப் பழகி வந்த நண்பர்களுக்குள்ளும் இடைவெளி ஏற்படும் என்பதால் மனதில் நிம்மதியற்ற நிலை இருக்கும் என்பதால் தம்பதிகள் ஒருவருக்கொருவர் அனுசரித்துச்செல்வது இந்த நேரத்தில் நன்மையை உண்டாக்கும். பெரியோர் ஆலோசனையை ஏற்பதும், திட்டமிட்டு செயல்படுவதும், வியாபாரம் தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துவதும் அவசியம். தொழில் நிறுவனங்கள் நடத்தி வருபவர்கள் பணியாளர்களை அனுசரித்துச் செல்வதால் சங்கடங்கள் ஏற்படாமல் போகும். கூட்டுத்தொழில் எதிர்பார்த்த அளவிற்க்கு இந்த மாதத்தில் பலன் தராமல் போகும். நவ. 13 முதல் யோகக்காரகன் ராகு ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரம் தொழிலில் அக்கறை அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் உங்களை ஈடுபடச் சொல்லும் என்றாலும் சூழ்நிலையை அறிந்து செயல்படுவது நன்மையாகும். மாணவர்கள் ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பது நன்மையாகும்.சந்திராஷ்டமம்: நவ. 12.அதிர்ஷ்ட நாள்: அக். 18, 19, 27, 28. நவ. 1, 9, 10.பரிகாரம்: இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். 

ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஆத்ம காரகன் சூரியன் சத்துரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் மாதம் முழுவதும் நீச்சமடைந்திருப்பதால் உங்கள் வேலைகளில் நிதானமும் ஆரோக்கியத்தில் கவனமும் வேண்டும். வம்பு வழக்கு என்ற நிலையும் சிலருக்கு ஏற்படும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். வியாபாரத்தில் போட்டியும் பிரச்னைகளும் அதிகரிக்கும். குடும்பத்திலும் எதிர்பாராத சங்கடங்கள் ஏற்பட்டு உங்கள் மனதை சங்கடப்படுத்தும் என்றாலும், அக். 20 முதல் அதிசாரமாக சிம்மத்திற்கு செல்லும் குரு பகவானின் பார்வைகள் உங்கள் ராசிக்கு 8, 10, 12 ம் இடங்களுக்கு உண்டாவதால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். மறைமுகத் தொல்லைகள் விலகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். விரய செலவுகள் குறையும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். நவ. 13 முதல் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ஞான மோட்சக்காரகன் கேது உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். நினைத்ததை நடத்தி வைப்பார். தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரிப்பார். போராட்ட நிலையில் இருந்து உங்களை மீட்டெடுப்பார். பூமி காரகன் செவ்வாய் மாதம் முழுவதும் கடகத்தில் நீச்சமடைந்திருப்பதால் விவசாயிகள் விளைச்சலில் கவனமாக இருப்பது நன்மையளிக்கும். மாணவர்களுக்கு அக். 31 முதல் படிப்பில் அக்கறை கூடும். மனதில் இருந்த குழப்பம் விலகும்.சந்திராஷ்டமம்: நவ. 12, 13.அதிர்ஷ்ட நாள்: அக். 19, 24, 28. நவ. 1, 6, 10, 15.பரிகாரம்: தில்லை நடராஜரை வழிபட சங்கடங்கள் விலகும்.ரோகிணி: வாழ்க்கையின் எதார்த்தத்தை உணர்ந்து வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் துலாத்தில் வக்கிரமடைந்திருப்பதால் நோய் நொடி வம்பு வழக்கு என்றிருந்த நிலையில் மாற்றம் ஏற்படும். மனதில் புதிய நம்பிக்கைப் பிறக்கும். திட்டமிட்டு செயல்படக்கூடிய நிலை உருவாகும். உங்கள் தன குடும்பாதிபதி புதன் அக். 31 முதல் வக்கிர நிவர்த்தியாவதால் பொன் பொருள் சேரும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வரவேண்டிய பணம்வரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். அதிசார குருவினால் அதிர்ஷ்டம் கூடும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்குவரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். கர்மக்காரகன் சனிபகவான் லாப ஸ்தானத்தில் வக்கிரமாக சஞ்சரித்தாலும் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு நிம்மதியான நிலையை உண்டாக்குவார். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றத்திற்கும் பதவி உயர்வுக்கும் வழியமைப்பார். கடந்த ஒன்றரை வருடமாக ராகு ஜீவன ஸ்தானத்திலும், கேது சுகஸ்தானத்திலும் சஞ்சரித்து வேலை, ஆரோக்கியம், தாயாரின் உடல்நிலையில் சங்கடங்களை வழங்கி வரும் நிலையில் நவ. 13 முதல் ராகு பாக்கிய ஸ்தானத்திற்கும், கேது சகாய ஸ்தானத்திற்கும் செல்வதால் வேலையில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடங்களாகும் தாயாருக்கு ஏற்பட்ட ஆரோக்கிய கோளாறுகளும் இருந்த இடம் தெரியாமல் போகும். உங்களுக்குள் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். பெரியோருடைய ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகள் நிலை உயரும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். கணவன் மனைவிக்குள் இணக்கமான சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாதம் முழுவதும் விவசாயிகள் கவனமாக செயல்படுவதும், மாணவர்கள் படிப்பில் அக்கறை கொள்வதும் நன்மையளிக்கும்.சந்திராஷ்டமம்: நவ. 13, 14.அதிர்ஷ்ட நாள்: அக். 20, 24, 29. நவ. 2, 6, 11, 15.பரிகாரம்: அகோரமூர்த்தியை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்: எடுத்த வேலைகளை முடிப்பதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். தைரிய காரகன் செவ்வாய் மாதம் முழுவதும் சகாய ஸ்தானமான கடகத்தில் நீச்சமாக சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களில் தடை ஏற்படும். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். இதுவரை நன்றாகவே சென்று கொண்டிருந்த வேலைகளிலும் இழுபறியான நிலை ஏற்படும். காரணம் அறியாமல் குழப்பத்திற்கு ஆளாவீர்கள். உங்கள் ராசிநாதன் சுக்கிரனும் வக்கிரமடைந்திருப்பதுடன், ஆத்ம காரகன் சூரியனும் நீச்சமடைந்திருப்பதால் மாதம் முழுவதும் கவனமாகவும் நிதானமாகவும் யோசித்தும் செயல்படுவது அவசியம். வியாபாரம் தொழிலில் புதிய முதலீடுகள் செய்வதற்குமுன் சந்தை நிலவரத்தை அறிந்து கொள்வது நன்மையளிக்கும். உங்கள் நிறுவனத்தையும் தொழில்களையும் உங்களுடைய நேரடி கண்காணிப்பில் வைத்துக் கொள்வது அவசியம். பாதுகாப்புப் பணியில் ஈடுபடுபவர்களும் யூனிஃபார்ம் சர்வீஸில் இருப்பவர்களும் எல்லா நேரத்திலும் எச்சரிக்கையுடன் இருப்பது நன்மையளிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரியின் ஆலோசனையை ஏற்று செயல்படுவது அவசியம். உடல்நிலையில் சிறு சிறு சங்கடங்கள் தோன்ற வாய்ப்பு இருப்பதால் சங்கடம் வரும்போதே மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்வது நன்மையளிக்கும். அக். 20 முதல் உங்கள் லாபாதிபதி குரு பகவான் சுகஸ்தானத்திற்கு செல்வதால் வேலை பளு அதிகரிக்கும் என்றாலும், அவருடைய பார்வைகளால் வாழ்க்கையின் அடிப்படைத்தேவைகள் பூர்த்தியாகும். மறைமுகத் தொல்லைகள் விலகும். திடீர் வாய்ப்புகள் தேடிவரும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட சங்கடங்கள் பின்னடைவு என்பதெல்லாம் மாறும். வீண் செலவுகள் குறையும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். கணவன் மனைவிக்குள் இணக்கம் அதிகரிக்கும். நிம்மதியான தூக்கமில்லாமல் தவித்து வந்த நிலை மாறும். நவ. 13 முதல் சகாய ஸ்தானத்தில் ஞான மோட்ச்சக்காரகன் கேது சஞ்சரிப்பதால் தைரியத்துடன் செயல்படக்கூடிய நிலை உருவாகும். விவசாயிகளுக்கு முன்னேற்றமான நிலை இருக்கும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதி யோகமாக இருக்கும்.சந்திராஷ்டமம்: அக். 18. நவ. 14.அதிர்ஷ்ட நாள்: அக். 24, 27. நவ. 6, 9, 15.பரிகாரம்: பிரம்ம சிரகண்டீஸ்வரரை வழிபட நன்மைகள் நடக்கும். மனதில் நிம்மதி உண்டாகும்.

மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். தைரியகாரகனான செவ்வாய் நீச்சம் அடைந்திருப்பதால் எதிர்ப்பு போட்டி விலகும். ஆரோக்கியம் சீராகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். பணவரவு அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் என்றாலும், ஜீவன ஸ்தானத்தில் தொழில்காரகன் சனி பகவான் வக்கிரமாக சஞ்சரிப்பதால் வியாபாரம் தொழிலில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பொறுப்புணர்ந்து செயல்படுவது நன்மையளிக்கும். மேல் அதிகாரியின் ஆலோசனையின்படி செயல்படுவதால் உங்களுக்கு வரும் பிரச்னைகள் விலகிப்போகும். மாதத்தின் கடைசியில் ராகு அஷ்டம ஸ்தானத்திற்கும், கேது தன குடும்ப வாக்கு ஸ்தானத்திற்கும் பெயர்ச்சியாவதால் அனைத்திலும் நிதானம் தேவை. யோசிக்காமல் எந்த ஒரு வேலையிலும் ஈடுபட வேண்டாம். குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பதும், பண விவகாரங்களில் கவனமாக இருப்பதும், வார்த்தைகளில் நிதானம் காப்பதும் நன்மையளிக்கும். மறைமுகத் தொல்லைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் சூழ்நிலை அறிந்து செயல்படுவது அவசியம். யாரை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும் யாரை விலக்கி வைக்க வேண்டும் என்ற தெளிவு கிடைக்கும். உடல் நிலையிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். பெண்கள் வாழ்க்கைத் துணையின் ஆலோசனையை ஏற்பது அவசியம். புதிய நட்புகளிடம் ஓரடி விலகி இருப்பது உங்கள் கவுரவத்தை பாதுகாக்கும். விவசாயிகள் விளைச்சலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் ஆசிரியர் ஆலோசனை ஏற்பது நன்மையளிக்கும்.சந்திராஷ்டமம்: அக். 18, 19. நவ. 15.அதிர்ஷ்ட நாள்: அக். 23, 27. நவ. 5, 9, 14.பரிகாரம்: பிரத்தியங்கிராவை வழிபட நன்மை உண்டாகும். எதிர்ப்பு விலகும்.திருவாதிரை: உயர்ந்த லட்சியத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ஒவ்வொன்றிலும் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். நவ. 13 வரை பாக்கிய ஸ்தானத்தில் ராகுவும், சகாய ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். நினைப்பது நடந்தேறும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். மற்றவரால் முடியாத வேலைகளையும் உங்களால் முடிக்க முடியும். குடும்பத்திலும் சுபிட்சமான நிலை இருக்கும். சிலருக்கு சொந்த இடம் வீடு வாகனம் வாங்கும் கனவு நனவாகும். வரவேண்டிய பணம் வரும். அரசியலில் இருப்பவர்களுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு புதிய பொறுப்பும் தேடிவரும். என்றாலும் மாதத்தின் கடைசியில் ராகு கேது பெயர்ச்சி அடைவதால் அதன்பின் எச்சரிக்கையாக இருப்பது நன்மையளிக்கும். உங்கள் வளர்ச்சியின் காரணமாக சிலர் உங்கள் மீது அவதூறு பரப்ப வாய்ப்பிருப்பதால் அதைப் பொருட்படுத்தாமல் கடந்து செல்லுங்கள். உடல்நிலையிலும், குடும்பத்திலும், தொழிலிலும் அக்கறை கொள்ளுங்கள். ஆத்ம காரகன் சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நீச்சம் அடைந்திருப்பதால் செயல்களில் கவனம் தேவை. பிள்ளைகள் நலனில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வது நன்மையளிக்கும். பூர்வீக சொத்து விவகாரத்தில் பிரச்னைகள் ஏற்பட்டாலும் பேசித் தீர்ப்பது அவசியம். செவ்வாய் நீச்சம் அடைந்திருப்பதால் விவசாயிகள் கவனமாக செயல்படுவது அவசியம். பெண்கள் குடும்பத்தினர் வார்த்தைகளை ஏற்பதால் பிரச்னைகளில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும். மூத்த குடிமக்கள் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது அவசியம். வியாபாரிகள் புதிய முதலீடுகள் செய்வதற்குமுன் சந்தை நிலவரம் அறிந்து செயல்படவும். ஷேர் மார்க்கெட் விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம். மாணவர்கள் தவறான நட்புகளை விட்டு விலகுவது அவசியம்.சந்திராஷ்டமம்: அக். 19, 20. நவ. 15, 16.அதிர்ஷ்ட நாள்: அக். 22, 23, 31. நவ. 4, 5, 13, 14.பரிகாரம்: விஷ்ணு துர்க்கையை வழிபட எடுத்த வேலை வெற்றியாகும். ஆரோக்கியம் மேம்படும்.புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்: நியாயம் தர்மம் முன்னேற்றம் என்ற கொள்கையோடு வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் நன்மையான மாதமாகும். மாதத்தின் தொடக்கத்தில் குரு பகவான் இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்திலும், அக். 20 முதல் சகாய ஸ்தானத்திலும் சஞ்சரித்து பலன்கள் வழங்கிட இருக்கிறார். மூன்றாமிட குருவின் பார்வைகள் உங்கள் ராசிக்கு ஏழு, ஒன்பது, பதினொன்றாம் இடங்களுக்கு உண்டாவதால் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை ஏற்படும். பிரச்னைகள் காரணமாக பிரிந்திருந்த தம்பதிகளும், டைவர்ஸ் கேட்டு நீதிமன்றம் வரையில் சென்றவர்களும் மீண்டும் ஒன்று சேரக்கூடிய நிலை ஏற்படும்.  நண்பர்களுக்குள் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். கூட்டுத் தொழில் ஆதாயம் தரும். சொந்த வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். பொது வாழ்க்கையில் இருப்பவர்களின் செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவி தேடிவரும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். செய்துவரும் தொழிலில் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைய முடியும். வரவேண்டிய பணம் வரும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை மாறும். திருமண வயதினருக்கு வரன் அமையும். வேலை வாய்ப்பிற்காக காத்திருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும் என்றாலும், உடல் நிலையில் கவனம் செலுத்துவதும், உடன் இருப்பவர்களின் ஆலோசனைக்கு மதிப்பளிப்பதும் அவசியம். சிலர் உங்களைப்பற்றி அவதூறு பரப்பலாம் என்றாலும் அதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டாம். மாதத்தின் கடைசியில் ராகு கேது பெயர்ச்சி ஆவதால் அனைத்திலும் கூடுதல் கவனம் தேவை. பெண்களுக்கு நிம்மதியான நிலை இருக்கும். விவசாயிகள் விளைச்சலில் கவனம் எடுப்பது அவசியம். மாணவர்கள் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் படிப்பில் கவனம் செலுத்துவது நன்மையளிக்கும்.சந்திராஷ்டமம்: அக். 20.அதிர்ஷ்ட நாள்: அக். 21, 23, 30. நவ. 3, 5, 12, 14.பரிகாரம்: ஆபத் சகாயேஸ்வரரை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான மாதமாகும். மாதத்தின் தொடக்கத்தில் ஜென்ம ராசிக்குள் சஞ்சருக்கும் குரு, அக். 20 முதல் அதிசாரமாக தன குடும்ப வாக்கு ஸ்தானத்திற்கு செல்கிறார். இதனால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வார்த்தைகளில் தெளிவு உண்டாகும். பணவரவில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். கையில் பணம் புரளும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். குடும்ப குருவின் பார்வைகள் 6, 8, 10 ம் இடங்களுக்கு உண்டாவதால் செய்து வரும் தொழில் விருத்தியாகும். புதிய முயற்சிகள் லாபம் தரும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள், நெருக்கடிகள் நீங்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். உடம்பில் இருந்த பிரச்னைகள், நோய் நொடி என்பதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். வியாபாரம் தொழிலில் போட்டி பிரச்னை என்றிருந்த நிலை மாறும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். புதிய இடம் வீடு வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். நவ. 13 முதல் ராகு சப்தம ஸ்தானத்திலும், கேது ஜென்ம ராசிக்குள்ளும் சஞ்சரிப்பதால் குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது அவசியம். புதிய நட்புகளிடம் ஓரடி விலகி இருப்பது நன்மையளிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனையை ஏற்பதும். நிதானித்து செயல்படுவதும் அவசியம். விவசாயிகளுக்கு விளைச்சலில் அக்கறை தேவைப்படும். மாணவர்களுக்கு குழப்பம் விலகும் படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: அக். 21.அதிர்ஷ்ட நாள்: அக். 20, 23, 29, 30. நவ. 2, 3, 11, 12.பரிகாரம்: சட்டநாதரை வழிபட சங்கடங்கள் விலகும். வழக்கு வெற்றியாகும்.பூசம்: எந்த ஒன்றிலும் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் நன்மையான மாதமாகும். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் உங்களிடம் அதிகபட்சமான வேகம் இருக்கும். சில நேரங்களில் மனக்குழப்பமும் ஏற்படும். நடக்காத ஒன்றை நினைத்து சிலர் பயந்து கொண்டிருப்பீர்கள். அதே நேரத்தில் ஒரு வேலையை எடுத்து விட்டால் அதை நடத்தி முடிப்பதில் உறுதியாக இருப்பீர்கள். வியாபாரம் தொழில் லாபம் தரும். அக். 31 முதல் உங்கள் சகாய ஸ்தானாதிபதி புதன் வக்கிர நிவர்த்தி அடைவதால் உங்கள் திறமை பளிச்சிடும். திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர்கள். இழுபறியாக இருந்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சுய தொழில் செய்து வருபவர்களுக்கு மனதில் நிம்மதி உண்டாகும். ஜென்ம ராசியை விட்டு அக். 20 முதல் குரு விலகுவதால் அலைச்சல் குறையும். கணவன் ஓரிடம் மனைவி ஓரிடம் என்று வாழ்ந்த நிலை மாறும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். புதிய பொருள் சேரும். உங்கள் ஜீவனாதிபதி செவ்வாய் ராசிக்குள் நீச்சம் அடைந்திருப்பதால் செய்து வரும் தொழில்மீது கூடுதல் கவனம் தேவைப்படும். அவசரப்பட்டு எந்த வேலையிலும் ஈடுபட்டு சங்கடத்திற்கு ஆளாக வேண்டாம். எந்த ஒன்றாக இருந்தாலும் அதனால் ஏற்படப்பபோகும் பின் விளைவுகள் பற்றியும் ஆலோசிப்பது அவசியம். களத்திரக்காரகன் சுக்கிரன் மாதம் முழுவதும் சுக ஸ்தானத்தில் வக்கிரம் அடைந்திருப்பதால் உறவினருடன் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். ஆரோக்கியம் மேம்படும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய வாகனம் ஆடை ஆபரணம் வாங்குவீர்கள். ஜான்ம ராசிக்குள் செவ்வாய் நீச்சம் அடைந்திருப்பதால் விவசாயிகள் விளைச்சலில் கவனமாக இருப்பது அவசியம். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.சந்திராஷ்டமம்: அக். 21, 22.சந்திராஷ்டமம்: அக். 18, 20, 27, 29.பரிகாரம்: சனிக்கிழமை தோறும் சனீஸ்வரருக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபட்டுவர நன்மை உண்டாகும்.ஆயில்யம்: திட்டங்கள் தீட்டி அதைச் செயல்படுத்துவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் நன்மையான மாதமாகும். உங்கள் சகாய ஸ்தானாதிபதி புதன் மாதத்தின் தொடக்கத்தில் வக்கிரமாக சஞ்சரித்தாலும் அக். 31 முதல் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இதனால் தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். இழுபறியாக இருந்த முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். ஷேர் மார்க்கெட் லாபம் தரும். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வருமானம் உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். உங்கள் தன குடும்பாதிபதி சூரியன் சுக ஸ்தானத்தில் நீச்சம் அடைந்திருப்பதால் உங்கள் மனதில் இருந்த பயம், குழப்பம் எல்லாம் விலகும். ஆரோக்கியம் சீராகும். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும் என்றாலும், நவ. 13 வரை அஷ்டம ஸ்தானத்தில் ராகுவும், குடும்ப ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையளிக்கும். சிலருக்கு எதிரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் ஒவ்வொரு செயலிலும் வேலைகளிலும் கவனமாக இருப்பதும் சூழ்நிலை அறிந்து செயல்படுவதும் அவசியம். உங்கள் வார்த்தைகளே உங்களுக்கு எதிரியாக மாறக்கூடும் என்பதால் வார்த்தைகளில் நிதானம் வேண்டும். பண விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும் அவர்கள் ஆலோசனைகளை ஏற்பதும் நன்மையளிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு நிம்மதியான நிலை உண்டாகும். விவசாயிகள் அனைத்திலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். பெண்கள் வாழ்க்கைத்துணையின் ஆலோசனை இல்லாமல் எந்த வேலைகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டாம். மாணவர்களுக்கு இருந்த பிரச்னைகள் விலகும். படிப்பில் ஆர்வம் கூடும்.சந்திராஷ்டமம்: அக். 22, 23.அதிர்ஷ்ட நாள்: அக். 20, 29. நவ. 2, 5, 11, 14.பரிகாரம்: நரசிம்மரை வழிபட நன்மை உண்டாகும். சங்கடங்கள் விலகும்.

சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் மாதமாகும். ஜென்ம ராசிக்குள் கேதுவும் சப்தம ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரித்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உங்கள் வாழ்க்கையில் சோதனைகளை உண்டாக்கி வந்தனர். என்றாலும் அனைத்தையும் சமாளித்து வந்தீர்கள். இந்த நிலையில் நவ. 13 முதல் ஜென்ம கேது விரய ஸ்தானத்திற்கும், சப்தம ராகு சத்துரு ஜெய ஸ்தானத்திற்கும் பெயர்ச்சியாவதால் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட நெருக்கடிகள் போராட்டங்கள் பிரச்னைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். ஆறாம் இட ராகு அரியணையில் ஏற்றுவார் என்ற வார்த்தைக்கு ஏற்ப உங்கள் செல்வாக்கு உயரும். செய்துவரும் வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். வழக்கு விவகாரம் சாதகமாகும். அக். 20 முதல் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகள் ஐந்து, ஏழு, ஒன்பதாம் இடங்களுக்கு கிடைப்பதால், குழப்பங்கள் விலகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். நண்பர்களால் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் அமையும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு மனதில் இருந்த குழப்பம் விலகும். பிள்ளைகள், கணவர் நலனில் அக்கறை அதிகரிக்கும். உடல்நிலை சீராகும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். மாணவர்கள் சிந்தித்து செயல்படுவது நன்மையளிக்கும்.சந்திராஷ்டமம்: அக். 23, 24.அதிர்ஷ்ட நாள்: அக். 19, 25, 28. நவ. 1, 7, 10, 16.பரிகாரம்: தாணுமாலயனை வழிபட மனதில் நிம்மதி உண்டாகும். எடுத்த வேலைகள் வெற்றியாகும்.பூரம்: எந்த இடத்தில் பிறந்திருந்தாலும் முன்னேற்றத்தை நோக்கி நடைபோட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ராசிநாதன் சகாய ஸ்தானத்தில் நீச்சமடைந்திருக்க, சகாய ஸ்தானாதிபதி வக்கிரம் பெற்றிருப்பதால் செயல்களில் நிதானம் வேண்டும். எடுக்கும் முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. எந்த ஒரு வேலையாக இருந்தாலும் அதை நீங்களே எடுத்து செய்வது நன்மையளிக்கும். அக். 20 முதல் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் குரு உங்கள் நிலையை உயர்த்துவார். உழைப்பு, லாபம், பெருமை என்ற நோக்கோடு செயல்படத் தொடங்குவீர்கள்.  குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். பிள்ளைகள் வழியில் பெருமை உண்டாகும். கணவன் மனைவிக்குள் இணக்கும் ஏற்படும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும் கையில் பணம் புரளும், இழந்த செல்வாக்கு மீண்டும் கிடைக்கும் என்றாலும், அஷ்டம ஸ்தானத்தில் வக்கிரம் பெற்றிருக்கும் சனி பகவான் அவ்வப்போது உங்கள் நிலையில் சங்கடத்தை ஏற்படுத்துவார். உடலிலோ அல்லது பொருளாதார நிலையிலோ, மற்றவர்களால் நெருக்கடிககளையோ நீங்கள் காண வேண்டியதாக இருக்கும் என்பதால், எந்த ஒரு வேலையாக இருந்தாலும் அதில் நிதானம் அவசியம். மாதத்தின் பிற்பகுதியில் ராகு கேது பெயர்ச்சியாவதால் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள் விலகும். நண்பர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். உங்கள் மனம் தெளிவடையும். சூனியம் வைத்ததுபோல் பாதிக்கப்பட்டிருந்த உங்கள் நிலையில் திருப்பம் ஏற்படும். மற்றவர்கள் வியக்கத்தக்க வகையில் உங்கள் வளர்ச்சி இருக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். சங்கடத்தில் இருந்த அரசியல்வாதிகள் நிலையில் மாற்றம் உண்டாகும். எதிரிகளை வெல்லக்கூடிய சக்தி ஏற்படும். பெண்களுக்கு வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். திருமண வயதினருக்கு வரன் தேடிவரும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். விவசாயிகளுக்கு விளைச்சலில் கூடுதல் கவனம் தேவைப்படும். மாணவர்களுக்கு தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் அவற்றுக்கெல்லாம் இடம் கொடுக்காமல் படிப்பில் அக்கறை கொள்வது நன்மையளிக்கும்.சந்திராஷ்டமம்: அக். 24, 25.அதிர்ஷ்ட நாள்: அக். 19, 28. நவ. 1, 6, 10, 15.பரிகாரம்: ஆதி திருவரங்கனை வழிபட வேண்டுதல் பலிக்கும். நன்மைகள் நடக்கும்.உத்திரம் 1 ம் பாதம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். தைரியமாக செயல்பட்டு வந்த உங்களுக்குள் ஒரு அச்சம் ஏற்படும். எந்தவொரு வேலையிலும் எடுத்தோம் முடித்தோம் என்றில்லாமல் செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்படும். உங்களுக்கும் உங்களுக்குரியவர்களுக்கும் கம்யூனிகேஷன் கேப் உண்டாகும். அதனால் உடனடியாக முடிய வேண்டிய வேலைகளும் இழுபறியாகும் என்பதால், திட்டமிட்டு செயல்படுவது நன்மையாகும். அரசுவழி முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. அக். 20 முதல் உங்கள் பூர்வ புண்ணியாதிபதி குரு பகவான் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிப்பதால் வேலையின் காரணமாக சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படும். குடும்பம் ஓரிடம் தான் ஓரிடம் என்று வசிக்கும் நிலை உண்டாகும் என்றாலும், உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். கணவன் மனைவிக்குள்  இணக்கமான நிலை இருக்கும். பெரியோருடைய ஆதரவு கிடைக்கும் சிலருக்கு புதிய சொத்துசேரும். நீண்ட நாட்களாக விற்க நினைத்த சொத்துகளை இந்த நேரத்தில் விற்க முடியும். மாதத்தின் கடைசியில் ஜென்ம ராசியை விட்டு கேது நகர்வதால் உங்களுக்கேற்பட்ட சோதனைகள் பிரச்னைகள் குழப்பங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். பெண்கள் குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பது நன்மையளிக்கும். புதியவர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நன்மையளிக்கும். மூத்த குடிமக்கள் உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம். ஷேர் மார்க்கெட் விவகாரங்களில் ஈடுபடுபவர்கள் சந்தை நிலவரம் அறிந்து செயல்படுவது அவசியம். புதிய முயற்சிகளில் நிதானம் தேவை. விவசாயிகள் மாதம் முழுவதும் எச்சரிக்கையாக இருப்பது நன்மையளிக்கும். மாணவர்களுக்கு மாதத்தின் கடைசியில் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.சந்திராஷ்டமம்: அக். 25.அதிர்ஷ்ட நாள்: அக். 19, 28. நவ.1, 10.பரிகாரம்: அதிகாலையில் சூரியனை வழிபட்டுவர உங்கள் செல்வாக்கு உயரும். சங்கடங்கள் விலகும்.

கன்னி.. உத்திரம் 2, 3, 4 ம் பாதம்: எந்த இடத்திலும் முதன்மையாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சூரியன் நீச்சமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். கடந்த மாதத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நெருக்கடிகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும் என்றாலும், அக். 20 முதல் குரு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சுபச்செலவுகள் கூடும்.  குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவதற்காக சேமிப்பு கரையும். பிள்ளைகளின் கல்விக்காகவும், சொந்த இடம் வீடு வாங்கவும் சிலர் கடன் வாங்கவும் செய்வீர்கள்.  ராசிநாதன் புதன் அக். 31 முதல் வக்கிர நிவர்த்தி அடைவதால் சாதுரியமாக செயல்படுவீர்கள். பிறருக்கு வழிகாட்டக் கூடிய அளவிற்கு உங்கள் நிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிம்மதியான நிலை உண்டாகும். உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பெண்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நனவாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும் என்றாலும் புதியவர்களிடம் ஓரடி விலகி இருப்பதும் குடும்ப ரகசியங்களை வெளிப்படுத்தாமல் இருப்பதும் நன்மையளிக்கும். விவசாயிகளுக்கு விளைச்சலில் லாபம் கூடும். மாணவர்களுக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை உருவாகும்.சந்திராஷ்டமம்: அக். 25, 26.அதிர்ஷ்ட நாள்: அக். 19, 23, 28. நவ. 1, 5, 10, 14.பரிகாரம்: ராமநாத சுவாமியை வழிபட தடைகள் விலகும். வேண்டுதல் நிறைவேறும்.அஸ்தம்: வாழ்வின் ஏற்றத்தையும் மாற்றத்தையும் ஒரே சமமாக நினைத்து வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் நன்மையான மாதமாகும். சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு உங்கள் செல்வாக்கை உயர்த்துவார். உடல் நிலையிலும் மனநிலையிலும் ஏற்பட்ட சங்கடங்களை விலக்குவார். தடைபட்ட வேலைகளை முடித்து வைப்பார். வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி பிரச்னைகளை எல்லாவற்றையும் இருந்த இடம் தெரியாமல் செய்வார். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரத்தை உங்களுக்கு சாதகமாக்குவார். தெய்வ நம்பிக்கையை உண்டாகும். பிறரால் உங்களுக்கு வரும் சங்கடங்களில் இருந்து பாதுகாப்பார். உறவினர்கள் ஆதரவும் உங்களைப் பாதுகாக்கும் என்றாலும், அக். 20 முதல் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானுக்கு கிடைத்து வந்த குருப்பார்வை விலகுவதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நன்மையளிக்கும். உங்களுக்கு ஆதரவாக இருந்த நண்பர்கள் கூட இந்த நேரத்தில் உங்களை நெருக்கடிக்கு ஆளாக்குவர். மனம் குழப்பத்திற்கு ஆளாகும் என்பதால் புதிய நண்பர்களுடன் எச்சரிக்கை அவசியம். உங்க தன குடும்பாதிபதி மாதம் முழுவதும் வக்கிரம் அடைந்திருப்பதால் பண விவகாரத்தில் எச்சரிக்கை தேவை. குடும்பத்திற்குள் சிறு குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். இந்த நேரத்தில் வாழ்க்கைத் துணையின் ஆலோசனை உங்களைப் பாதுகாக்கும். ராசிநாதன் அக். 31 முதல் உங்களைப் பாதுகாப்பார். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். வர வேண்டிய பணம் வரும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பர். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் விவசாயிகள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருவது நன்மையளிக்கும்.சந்திராஷ்டமம்: அக். 26, 27.அதிர்ஷ்ட நாள்: அக். 20, 23, 29. நவ. 2, 5, 11, 14.பரிகாரம்: ஏழுமலையானை வழிபட எண்ணிய எண்ணம் நிறைவேறும். மனதில் நிம்மதி உண்டாகும்.சித்திரை 1, 2 ம் பாதம்: எந்த ஒன்றிலும் உறுதியாக இருந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் நன்மையான மாதமாகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் ஒவ்வொன்றும் வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். வேலையாட்கள் உங்கள் முயற்சிக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள். சகோதரருடன் ஏற்பட்ட வருத்தம் விலகும். முடங்கிக்கிடக்கும். அக். 20 முதல் குருப் பார்வைகளால் தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். எதிர்ப்பு பகை பிரச்சினை என்பதெல்லாம் விலகும். ஆரோக்கியம் மேம்படும். வழக்கு விவகாரம் சாதகமாகும். மறைமுகத் தொல்லைகள் நீங்கும். திடீர் வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும், சப்தம ஸ்தானத்தில் வக்கிரமாக சஞ்சரிக்கும் சனி பகவானால் குடும்பத்திற்குள்ளும் நண்பர்களிடையேயும் பிரச்னைகள் உருவாகும் என்பதால் அனைத்திலும் நிதானம் அவசியம். வேலையில் இருப்பவர்கள் உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வதால் சங்கடங்கள் ஏற்படாமல் போகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கூறும் ஆலோசனையின்படி செயல்படுவதால் உங்களுக்கு வரும் பிரச்னைகளில் இருந்து தப்பிக்க முடியும். வியாபாரிகள் தங்கள் வேலைகளை பிறரிடம் ஒப்படைக்காமல் தாங்களே முன்னின்று செய்து கொள்வதால் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைய முடியும். விவசாயிளுக்கேற்பட்ட நெருக்கடி நீங்கும். ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சி அடையும். மாணவர்கள் ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்பது அவசியம்.சந்திராஷ்டமம்: அக். 27.அதிர்ஷ்ட நாள்: அக். 18, 23, நவ. 5, 9, 14.பரிகாரம்: சுப்ரமணியரை வழிபட சங்கடங்கள் விலகும். எடுத்த வேலைகள் வெற்றியாகும்.

துலாம் .. சித்திரை 3, 4 ம் பாதம்: உழைப்பால் உயர்வடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் நன்மையான மாதமாகும். தைரிய வீரிய காரகன் செவ்வாய் ஜீவன ஸ்தானத்தில் நீச்சம் அடைந்திருப்பதால் பண விவகாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். நிறைய முதலீடுகள் செய்தும் அதற்கேற்ற லாபம் கிடைக்கவில்லையே என்று சங்கடப்பட்டு வந்தவர்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். காவல்துறை மற்றும் பாதுகாப்புத்துறைகளில் பணியாற்றி வருவோரின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். பெரிய தொழில் நிறுவனங்கள் நடத்தி வருபவர்களுக்கு பணியாளர்கள் ஆதரவு கிடைக்கும். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைப்பதுடன் சிலருக்கு எதிர்பார்த்த பொறுப்பும் பதவியும் தேடிவரும். மற்றவர்கள் ஆச்சரியப்படும் வகையில் உங்கள் செல்வாக்கு உயரும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். நவ. 13 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது தேவைக்கேற்ற பணத்தைத் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருப்பார். பெரியோரின் ஆதரவும் கிடைக்கும். விவசாயிகளுக்கு விளைச்சலில் கூடுதல் கவனம் தேவைப்படும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும்.சந்திராஷ்டமம்: அக். 28.அதிர்ஷ்ட நாள்: அக். 18, 24, 27. நவ. 6, 9, 15.பரிகாரம்: மூகாம்பிகையை மனதில் எண்ணி வழிபட சங்கடங்கள் விலகும். நன்மை உண்டாகும்.சுவாதி: உயர்ந்த லட்சியமும், வாழ்க்கையில் முன்னேற்றத்தை எட்ட வேண்டும் என்ற கொள்கையும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் முன்னேற்றமான மாதமாகும். லாப ஸ்தானத்தில் ஞான மோட்சக்காரகன் கேதுவும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரிக்கும் நிலையில் மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். சிலருக்கு காதலும் உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். சிலருக்கு அவர்களைப்பற்றிய கவலையும் ஏற்படும். அதே நேரத்தில், லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார். பெரியோருடைய நட்பை ஏற்படுத்திக் கொடுப்பார். அவர்கள் வழியே உங்கள் வாழ்க்கைக்குரிய வழிகள் தெரிய ஆரம்பிக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். அக். 20 முதல் அதிசாரமாக குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வேலையில் ஏற்பட்ட நெருக்கடிகள், சங்கடங்கள் எல்லாம் விலகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல்வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு ஆதாயம் கூடும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்பம் மற்றும் வேலையில் ஏற்பட்ட சங்கடங்கள், பிரச்னைகள் விலகும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டாகும்.சந்திராஷ்டமம்: அக். 28, 29.அதிர்ஷ்ட நாள்: அக். 22, 24, 31. நவ. 4, 6, 13, 15.பரிகாரம்: பிரத்தியங்கிராவை வழிபட தடைகள் விலகும். எடுத்த வேலை வெற்றியாகும்.விசாகம் 1, 2, 3 ம் பாதம்: உயர்ந்த லட்சியமும் தெளிவான சிந்தனையும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான மாதமாகும். இதுவரை ஜீவன ஸ்தானமான பத்தாம் இடத்தில் சஞ்சரித்து உத்தியோகத்தில் நெருக்கடிகளை ஏற்படுத்தி வந்த குரு பகவான், அக். 20 முதல் லாப ஸ்தானத்தில் அதிசாரமாக சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த நெருக்கடிகள் எல்லாம் விலகும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். எந்த ஒன்றையும் திட்டமிட்டு செயல்பட்டு அதில் ஆதாயம் அடைவீர்கள். மனதில் இருந்த போராட்டம் பிரச்னைகள் எல்லாம் முடிவிற்கு வரும். குழந்தை பாக்கியத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சங்கடங்கள் போராட்டங்கள் விலகும். வாழ்க்கையில் பிரிவை சந்தித்தவர்களும் மீண்டும் ஒன்றிணைந்து வாழக்கூடிய நிலை உருவாகும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் அமையும். கூட்டுத் தொழில் லாபம்தரும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். செய்துவரும் தொழிலில் ஏற்பட்ட சங்கடங்கள் இருந்த இடம் தெரியாமல் போகும். கையில் பணம் புரளும். பெரியோருடைய ஆதரவு கிடைக்கும். சத்துரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் வக்கிரம் அடைந்திருந்தாலும் உக்கிரமான பலன்களை வழங்குவார் என்பதால் தைரியமுடன் செயல்படுவீர்கள். எதிர்ப்பு போட்டி பகை பிரச்னை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். வழக்கு விவகாரம் ஜெயமாகும். நீண்ட நாள் முயற்சிகள் எல்லாம் ஒவ்வொன்றாக நடந்தேறும். விவசாயிகளுக்கு உழைப்பு அதிகரித்தாலும் அதற்கேற்ற ஆதாயம் உண்டாகும். மாணவர்களுக்கு அக். 31 முதல் படிப்பில் அக்கறை கூடும்.சந்திராஷ்டமம்: அக். 29, 30.அதிர்ஷ்ட நாள்: அக். 21, 24. நவ. 3, 6, 12, 15.பரிகாரம்: ஆபத்சகாயேஸ்வரரை வழிபட நன்மை உண்டாகும். செல்வாக்கு உயரும்.

விசாகம் 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். மாதத்தின் தொடக்கத்தில் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் தன குடும்பாதிபதியான குரு, அக். 20 முதல் அதிசாரமாக உங்கள் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் வேலையில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நன்மையளிக்கும். மேல் அதிகாரியின் உத்தரவிற்கேற்ப செயல்படுவதால் சங்கடங்கள் உங்களை நெருங்காமல் போகும். சிலருக்கு திடீர் இடமாற்றமும் ஏற்படும். குருவின் பார்வைகளால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் விலகும். நிம்மதி இருக்கும். தேவையான பணம் வரும். கண் தொடர்பான பிரச்னைகள் விலகும். பழைய கடன்களை அடைக்க முடியும். தாய்வழி உறவுகள் ஆதரவு கிடைக்கும். நீண்டநாள் கனவுகள் நனவாகும். மனதில் இருந்த பயம் குழப்பம் விலகும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். போட்டியாளர்கள் உங்கள் பாதையில் இருந்து நகர்வர். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். வழக்கு விவகாரங்கள் ஜெயமாகும். ராசிநாதன் பாக்கிய ஸ்தானத்தில் நீச்சமடைந்திருப்பதால் நெருக்கடிகள் நீங்கும். தேவையற்ற செலவுகள் குறையும். பொருளாதார நிலை உயரும். ஒரு சிலருக்கு சொந்த இடம் வீடு வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட சிரமங்கள் விலகும். கவனமாக செயல்பட்டு ஆதாயம் அடைவீர்கள். மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை செலுத்துவது நன்மையளிக்கும்.சந்திராஷ்டமம்: அக். 30.அதிர்ஷ்ட நாள்: அக். 18, 21, 27. நவ. 3, 9, 12.பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபண நினைத்த வேலைகள் நடந்தேறும்.அனுஷம்: உழைப்பால் உயர்வடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் விழிப்புடன் செயல்பட வேண்டிய மாதமாகும். கர்மக்காரகன் சனி பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் வக்கிரமாக சஞ்சரிப்பதால் மனதில் இருந்த குழப்பம், நெருக்கடிகள் நீங்கும். பிள்ளைகள் பற்றிய கவலை விலகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவிற்கு வரும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். உங்கள் ஜீவனாதிபதி சூரியன் விரய ஸ்தானத்தில் நீச்சமாக சஞ்சரிப்பதால் வேலையில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வழக்கு விவகாரம் சாதகமாகும். சிலருக்கு வரவேண்டிய நிலுவைத்தொகை வரும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்பவர்கள் கவனமாக இருப்பதும் சந்தை நிலவரம் அறிந்து செயல்படுவதும் நன்மை அளிக்கும். ஷேர் மார்க்கெட்டில் ஈடுபடுபட்டிருப்பவர்கள் யோசித்து செயல்படுவது அவசியம். இடம் வீடு என்ற கனவு சிலருக்கு நனவாகும். நீண்ட நாட்களாக பல்வேறு முயற்சி செய்தும் விற்க முடியாமல் இருந்த இடத்தையும் விற்க முடியும். கழுத்தை நெறிக்கும் அளவிற்கு இருந்த கடன்களை அடைக்க முடியும். நவ. 13 முதல் ராகு சகாய ஸ்தானத்திலும், கேது பாக்கிய ஸ்தானத்திலும் சஞ்சரிக்க இருப்பதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். இதுவரை தடைபட்டுவந்த வேலைகள் முடிவிற்கு வரும். உங்கள் தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். சுறு சுறுப்பாக செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். பெண்களுக்கு வேலையில் ஏற்பட்ட பிரச்சினைகளும் குடும்பத்தில் தோன்றிய நெருக்கடியும் இருந்த இடம் தெரியாமல் போகும். தொழில் நிறுவனங்களில் வேலைப் பார்த்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகளும் நிர்வாகத்தின் ஆதரவும் கிடைக்கும். பாக்கிய கேதுவால் பெரியோருடைய ஆதரவும் தெய்வ அருளும் உண்டாகும். தந்தைவழி உறவுகள் உங்களுக்கு உதவியாக இருப்பர். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்கள் கவனமாக செயல்படுவது அவசியம்.சந்திராஷ்டமம்: அக். 30, 31.அதிர்ஷ்ட நாள்: அக். 18, 26, 27. நவ. 8, 9.பரிகாரம்: நரசிம்மரை வழிபட தடைகள் விலகும். வாழ்வில் நன்மை உண்டாகும்.கேட்டை: நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். வித்யாகாரகன் புதன் விரய ஸ்தானத்தில் அக். 31 வரை நீச்சமடைந்திருப்பதால் பொருளாதார நெருக்கடி நீங்கும். நஷ்டத்தில் இயங்கிய தொழில்களும் லாபம் காண ஆரம்பிக்கும். வரவேண்டிய பணம் வரும். புதிய முதலீடு ஆதாயம் தரும். ஷேர் மார்க்கெட்டில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அக். 20 முதல் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள், பண வரவில் ஏற்பட்ட தடைகள் விலகும். பொருளாதார நிலை உயரும். பழைய கடன்களை அடைக்க முடியும். உங்கள் விரயாதிபதியும் சப்தமாதிபதியுமான சுக்கிரன் மாதம் முழுவதும் வக்கிரம் அடைந்திருப்பதால் வீண் செலவு அதிகரிக்கும். ஆடம்பரம் கேளிக்கை என்று சிலர் நிறைய செலவு செய்வீர்கள். என்னதான் முயற்சி செய்தாலும் சேமிப்பில் இருந்து பணம் குறைய வாய்ப்பிருப்பதால் கொடுக்கல் வாங்கலிலும், செலவுகளிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மையளிக்கும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் அனுசரித்துச்செல்வதால் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படாமல் போகும். ராசிநாதன் செவ்வாய் மாதம் முழுவதும் நீச்சம் அடைந்திருப்பதால் திட்டமிட்டு செயல்படுவது நன்மையளிக்கும். தேவையற்ற பிரச்னைகளில் தலையிடாமல் இருப்பதும் உங்களுக்கு நன்மையாகும். பெரியோரின் ஆலோசனை கை கொடுக்கும் என்பதால் அலட்சியம் வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடமையில் சரியாக இருப்பதும் தவறுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதும் அவசியம். விவசாயிகளுக்கு மனதில் இருந்த குழப்பம் விலகும். மாணவர்கள் தவறான நட்புகளை விட்டு விலகுவது அவசியம்.சந்திராஷ்டமம்: அக். 31.அதிர்ஷ்ட நாள்: அக். 18, 23, 27. நவ. 5, 9, 14.பரிகாரம்: வரதராஜப் பெருமாளை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.

தனுசு .. மூலம்: ஒவ்வொரு படிப்பினைகளையும் அனுபவமாக ஏற்று வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் நன்மையான மாதமாகும். பாக்கிய ஸ்தானத்தில் கேது, சகாய ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் உங்கள் செல்வாக்கு உயரும். பெரியோருடைய ஆதரவு கிடைக்கும். குடும்பம் தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் போராட்டங்கள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். கடந்த மாதம்வரை போராட்டங்களை சந்தித்து வந்த உங்களுக்கு இந்த மாதம் அவற்றிலிருந்து மாற்றம் ஏற்படும். தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வருபவர்களுக்கு நிம்மதியான நிலை உண்டாகும். சுயதொழில் நடத்தி வருபவர்களுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். சிலரால் சொந்த இடம் வீடு என்று வாங்க முடியும். பெண்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். உடலில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். மனதில் நிம்மதி உண்டாகும். விவசாயிகளுக்கு விளைச்சலில் கூடுதல் கவனம் தேவைப்படும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைப்பதுடன் புதிய பொறுப்பு பதவி என்ற ஆசையும் நிறைவேறும். மாணவர்கள் தவறான நட்புகளை விட்டு விலகுவது நன்மையளிக்கும்.சந்திராஷ்டமம்: அக். 31, நவ. 1.அதிர்ஷ்ட நாள்: அக். 21, 25, 30. நவ. 3, 7, 12, 16.பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபட நன்மை உண்டாகும்.பூராடம்: நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் முன்னேற்றமான மாதமாகும். அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் மாதம் முழுவதும் லாப ஸ்தானத்தில் வக்கிரமாகவும், உங்கள் ஜீவனாதிபதி புதன் மாதத்தின் முற்பகுதியில் வக்கிரமாகவும், பிற்பகுதியில் நேர்கதியிலும் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். குடும்பம் தொழில் உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். இழுபறியாக இருந்த பணம் வரும். சிலருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். சொந்த இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் விலகி இருந்த தம்பதிகள் மீண்டும் இணைந்து வாழக்கூடிய நிலை உருவாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். பிள்ளைகளுக்காக எடுக்கிற முயற்சிகள் வெற்றியாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். கடந்த மாதம் வரை இருந்த நெருக்கடிகள் இந்த மாதம் இல்லாமல் போகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். தடைபட்டிருந்த பதவி உயர்வு இடமாற்றம் கிடைக்கும். வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு வேலையில் நிம்மதி உண்டாகும். புதிய வியாபாரம் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். விவசாயிகள் விளைச்சலில் முழுமையான கவனம் செலுத்துவது அவசியம். மாணவர்கள் ஆசிரியர் ஆலோசனைகளை ஏற்பது நன்மையளிக்கும்.சந்திராஷ்டமம்: நவ. 2.அதிர்ஷ்ட நாள்: அக். 21, 24, 30. நவ. 3, 6, 12, 15.பரிகாரம்: காளிகாம்பாளை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மை உண்டாகும்.உத்திராடம் 1 ம் பாதம்: நினைத்ததை சாதிப்பதில் உறுதியானவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான மாதமாகும். மாதம் முழுவதும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் உங்கள் வேலையில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். பெரியோருடைய ஆதரவு கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரம் தொழில் லாபம் தரும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். அரசுவழி முயற்சி வெற்றியாகும். அக். 20 முதல் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவும் அவருடைய பார்வைகளும் உங்கள் நிலையை மாற்றும். செல்வாக்கை உயர்த்தும். வசதி வாய்ப்புகளை அதிகரிக்கும். போராட்டம் பிரச்னை என்றிருந்த நிலையெல்லாம் மாறும். சிலருக்கு சொந்த இடம், வீடு என்ற கனவு நனவாகும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் இல்லாமல் போகும். ஆரோக்கியம் மேம்படும். சொந்த வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். கருத்து வேறுபாட்டால் பிரிந்திருந்த சகோதரர்கள் தங்கள் கோபத்தை மறந்து ஒன்றாவீர்கள். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள் என்றாலும், நவ. 13 முதல் தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் ராகுவும், அஷ்டம ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போவதால் அனைத்திலும் நிதானம் காப்பது நன்மையளிக்கும். குடும்பத்தினரை அனுசரித்துப்போவது அவசியம். பண விவகாரங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். வார்த்தைகளில் கோபத்தைக் காட்டாமல் இருப்பது அவசியம். பெண்கள் கணவரின் நலனில் அக்கறை எடுப்பது அவசியம். விவசாயிகளுக்கு உழைப்பு அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.சந்திராஷ்டமம்: நவ. 3.அதிர்ஷ்ட நாள்: அக். 19, 21, 28. நவ. 1, 10, 12.பரிகாரம்: வடாரண்யேசுவரரை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் ஏற்படும்.

மகரம்.. உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்: எதிர்காலத்தின்மீது நம்பிக்கைக்கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் நன்மையான மாதமாகும். உங்கள் அஷ்டமாதிபதி சூரியன் ஜீவன ஸ்தானத்தில் நீச்சம் அடைந்திருப்பதால் கடந்த மாதத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். வியாபாரம் தொழில் லாபம் தரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். உங்கள் ஜீவனாதிபதி சுக்கிரன் மாதம் முழுவதும் வக்கிரம் அடைந்திருப்பதால் பண விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். கையிருப்பு கூடும். வீண் செலவுகள் கட்டுக்குள் வரும். தன் குடும்பம், தன் பிள்ளைகள் என்ற எண்ணத்துடன் வாழத் தொடங்குவீர்கள். சகாய ஸ்தானத்தில் வக்கிரமாக சஞ்சரிக்கும் உங்கள் ராசிநாதன் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரிப்பார். துணிச்சலுடன் செயல்பட வைப்பார் என்றாலும், எந்த ஒரு வேலையாக இருந்தாலும் அதில் பின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை யோசித்து செய்வதால் நன்மை உண்டாகும். நட்பு வட்டத்தில் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் வார்த்தைகளிலும் செயல்களிலும் நிதானம் தேவை. வாழ்க்கைத் துணையின் பேச்சுக்கு மதிப்பளிப்பதும், ஆலோசனையை ஏற்று செயல்படுவதும் நன்மையளிக்கும். மூத்த குடிமக்கள் உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம். விவசாயிகளுக்கு கூடுதல் முயற்சி தேவைப்படும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதி யோகமாக இருக்கும்.சந்திராஷ்டமம்: நவ. 3.அதிர்ஷ்ட நாள்: அக். 19, 26, 28. நவ. 1, 8, 10.பரிகாரம்: பைரவரை வழிபட சங்கடங்கள் நீங்கும். நன்மை உண்டாகும்.திருவோணம்: இதுதான் வாழ்க்கை, இப்படித்தான் வாழ வேண்டும் என்ற முடிவுடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். இதுவரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து நன்மைகளை வழங்கி வந்த குருபகவான், அக். 20 முதல் அதிசாரமாக அஷ்டம ஸ்தானத்திற்கு செல்கிறார். இதனால் எதிர்பாராத நெருக்கடிகளும், பிரச்னைகளும் உருவாகும். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது அதற்கு வேறாகவும் அமையும். நன்றாகப் பழகிவந்த நண்பர்களுக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி ஏற்படும். குடும்பத்திலும் நேற்றுவரை இருந்த நிலை இனி மாறும். கணவன் மனைவிக்குள் சிறு சிறு சங்கடங்கள் பிரச்னைகள் என்று உருவாகும். அஷ்டம ஸ்தானத்தில் நவ. 13 வரை ஞான மோட்சக் காரகன் கேது சஞ்சரித்துக் கொண்டிருப்பதால் உடல் நிலையில் கவனமாக இருப்பது அவசியம். வியாபாரம் தொழிலில் மறைமுகத் தொல்லைகள் இருக்கும் என்பதால் அனைத்தையும் சமாளித்து வெளியில் வர வேண்டிய நிலை உருவாகும். இந்த நேரத்தில் ஒழுக்கத்தில் மிகவும் கவனம் தேவை. மாதம் முழுவதும் உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதியான சூரியன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வரும் பிரச்னைகளை உங்களால் எதிர்கொள்ள முடியும். நெருக்கடிகளை சமாளிக்க முடியும். வாழ்க்கையை நடத்திச் செல்ல முடியும். அரசு வழியில் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரியையும் உடன் இருப்பவர்களையும் அனுசரித்துச் செல்வது என்பது இந்த நேரத்தில் மிக அவசியம். உங்கள் பாக்கியாதிபதி அக். 31 முதல் வக்கிர நிவர்த்தி அடைவதால் பண விவகாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். உங்கள் நீண்டநாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். பெண்கள் குடும்பத்தினரின் ஆலோசனையை ஏற்பது நன்மையளிக்கும். வாழ்க்கைத்துணைக்கு தெரியாமல் எந்தவொரு முயற்சியிலும் இந்த நேரத்தில் ஈடுபட வேண்டாம். வேலைப் பார்க்கும் இடத்திலும் குடும்ப ரகசியங்களை நெருக்கமானவரிடமும் சொல்ல வேண்டாம். விவசாயிகளுக்கு அதிக உழைப்பு இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தடைகள் விலகும்.சந்திராஷ்டமம்: நவ. 4.அதிர்ஷ்ட நாள்: அக். 20, 26, 29. நவ. 2, 8, 11.பரிகாரம்: அண்ணாமலையாரை வழிபட தடைகள் விலகி நன்மை உண்டாகும்.அவிட்டம் 1, 2 ம் பாதம்: எந்தநிலை வந்தாலும் எதற்காகவும் அச்சப்படாமல் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். மாதம் முழுவதும் தைரிய காரகன் செவ்வாய் சப்தம ஸ்தானத்தில் நீச்சம் அடைந்திருப்பதால் மனதில் இருந்த பயம் போகும். நண்பர்களுடன் இணக்கம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் ஜீவனாதிபதி சுக்கிரன் வக்கிரம் அடைந்திருப்பதால் பண விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவிற்கு வரும். வீண் செலவுகள் குறையும். சேமிப்பு உயரும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படக்கூடிய நிலை உண்டாகும். அக். 20 முதல் குரு அதிசாரமாக அஷ்டம ஸ்தானத்திற்கு செல்வதால் உங்கள் செயல்களில் நிதானம் வேண்டும். இதுவரை இருந்த ஆரோக்கியமான நிலையில் இனி மாற்றம் ஏற்படும். வரவு செலவில் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். செல்வாக்கு அந்தஸ்து என்று வாழ்ந்துவந்த நிலையில் ஒரு பின்னடைவு ஏற்படும்.  சிலருக்கு உடல்நிலை பாதிக்கும் என்பதால் அனைத்திலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மையளிக்கும். நவ. 13 முதல் ஜென்ம ராசிக்குள் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் தேவையற்ற ஆசைகள் உருவாகும். சிலர் சட்டத்திற்குப் புறம்பான வழிகளிலும் செல்வீர்கள். தவறானவர்களுடைய அறிமுகம் கிடைக்கும். அவர்களால் உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். நிம்மதி என்பது கேள்விக்குறியாகும். குடும்பத்திலும் குழப்பம் உண்டாகும் என்பதால் எச்சரிக்கையாக இருப்பது நன்மையளிக்கும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனையை ஏற்று செயல்படுவதால் சங்கடங்கள் உங்களை நெருங்காமல் போகும். சகாய ஸ்தானத்தில் வக்கிரமாக சஞ்சரிக்கும் சனி பகவானும், ஜீவன ஸ்தானத்தில் நீச்சமடைந்திருக்கும் சூரியனும் உங்களைப் பாதுகாப்பர். தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டிருக்கும். எடுக்கும் வேலைகள் உங்கள் முயற்சிக்கேற்ப நடந்தேறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அனைத்திலும் நிதானமும் கவனமும் கொள்ள வேண்டும். வியாபாரிகள் புதிய முதலீடுகளில் அவசரம் காட்ட வேண்டாம். ஷேர் மார்க்கெட் விவகாரத்திலும் எச்சரிக்கை அவசியம். விவசாயிகளுக்கு உழைப்புக்கூடும். பெண்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும். மாணவர்களுக்கு நிம்மதியான நிலை உண்டாகும்.சந்திராஷ்டமம்: நவ. 5.அதிர்ஷ்ட நாள்: அக். 18, 26, 27. நவ. 8, 9.பரிகாரம்: மாசாணி அம்மனை வழிபட மனக்கவலை விலகும். வாழ்வில் நன்மை உண்டாகும்.

கும்பம் .. அவிட்டம் 3, 4 ம் பாதம்: எந்த ஒன்றிலும் கவனமாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான மாதமாகும். தைரிய வீரிய பராக்கிரமக்காரகன் செவ்வாய், சத்துரு ஜெய ஸ்தானத்தில் நீச்சமடைந்திருந்தாலும், உங்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் எல்லாம் தீரும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். கடந்த மாதத்தில் உத்தியோகம், தொழில், குடும்பம், வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதையல் கிடைத்ததுபோல் உங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். தவறான நட்புகளால் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். தொழிலில் முதலீட்டிற்கேற்ப ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு சுபிட்சமான நிலை இருக்கும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். உங்கள் பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் வக்கிரம் அடைந்திருந்தாலும் எதிர்பார்த்த பணம் வரும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். வயதானவர்கள் ஆபத்து கட்டத்தில் இருந்து மீண்டு வருவீர்கள். ஆரோக்கியம் மேம்படும். சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையளிக்கும்.சந்திராஷ்டமம்: நவ. 5அதிர்ஷ்ட நாள்: அக். 18, 26, 27. நவ. 8, 9.பரிகாரம்: அனுமனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும். போராட்ட நிலை மாறும்.சதயம்: செல்வாக்கு அந்தஸ்து என்ற இடத்தை நோக்கி நடைபோட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். இதுவரை இருந்த நெருக்கடிகள் இருந்த இடம் தெரியாமல் போகும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் கேது நவ. 13 முதல் சத்துரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தவறான நண்பர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வர். மனதில் இருந்த குழப்பம் பயம் விலகும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். வியாபாரம் தொழிலில் லாபம் காணக்கூடிய நிலை உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகும். ஜென்ம ராசியில் சஞ்சரித்து உங்கள் ஆசைகளை அதிகரித்து சிலரை தவறான வழியில் அழைத்துச்சென்ற ராகுவும் நவ. 13 முதல் விரய ஸ்தானத்திற்கு செல்வதால் ஆடம்பர செலவு அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கை நிலைநிறுத்தவும், ஆசைகளைப் பூர்த்தி செய்யவும் தாராளமாக செலவுகள் செய்வீர்கள். அதற்கேற்ற வருவாயும் வரும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பெண்களுக்கு குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். மாணவர்கள் ஆசிரியர் ஆலோசனைகளை ஏற்பது நன்மையளிக்கும்.சந்திராஷ்டமம்: நவ. 6.அதிர்ஷ்ட நாள்: அக். 22, 26. நவ. 4, 8, 13.பரிகாரம்: மடப்புரம் பத்திரகாளியம்மனை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்: பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் முன்னேற்றமான மாதமாகும். குருபகவான் அக். 20 முதல் அதிசாரமாக சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன் உங்கள் ராசியையும் பார்ப்பதால் எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பும் பதவியும் தேடிவரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். கூட்டுத்தொழில் ஆதாயம் தரும். நண்பர்களுடன் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். முடங்கிக்கிடந்த தொழில் மீண்டும் இயங்குவதுடன் லாபம் தரத்தொடங்கும். பெரியோருடைய ஆதரவு கிடைக்கும். சேமிப்பு உயரும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் அமையும். எடுத்த வேலையை முடித்து அதில் ஆதாயம் காண முடியும். சிலருக்கு சொந்த இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். சகோதர வகையில் ஏற்பட்ட நெருக்கடிகள் பிரச்னைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும் என்றாலும், அனைத்திலும் நிதானமாக செயல்படுவது நன்மையாகும். பெண்களுக்கு மனதில் இருந்த பயம் போகும். துணிச்சலுடன் செயல்படுவதற்கு சூழ்நிலைகள் சாதகமாகும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.சந்திராஷ்டமம்: நவ. 7.அதிர்ஷ்ட நாள்: அக். 21, 26, 30. நவ. 3, 8, 12.பரிகாரம்: திருவெள்ளியங்குடி ஸ்ரீகோலவில்லி ராமரை வழிபட தடைகள் விலகும்.

மீனம் .. பூரட்டாதி 4 ம் பாதம்: சுய கவுரவத்திற்கு முதலிடம் கொடுக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். குருபகவான் அக். 20 முதல் ருண ரோக சத்துரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத சங்கடங்கள் உண்டாகும். வியாபாரம் தொழிலில் எதிர்ப்பு போட்டி என்ற நிலை உருவாகும். உடல் நிலையிலும் அவ்வப்போது ஏதேனும் சங்கடங்கள் ஏற்பட்டு மறையும் என்றாலும், நவ. 13 வரை ஆறாமிட கேது உங்களைப் பாதுகாப்பார். எந்த நிலை வந்தாலும் அதையெல்லாம் சமாளித்திடக்கூடிய நிலை உண்டாகும். வரும் சங்கடமெல்லாம் வந்த வழி தெரியாமல் போகும். உங்கள் தன குடும்பாதிபதி செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நீச்சமடைந்திருப்பதால் பிள்ளைகள் பற்றிய கவலை அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் எதிர்பாராத பிரச்னைகள் தோன்றும். சகோதரர்களும் உங்களுக்கு எதிராக மாறுவர். சிலர், புதிய நபர்களின் சொல்படி நடக்க வேண்டிய நிலைக்கு ஆளாவர். ஜென்ம ராசிக்குள் சனி  வக்கிரமாக சஞ்சரிப்பதா அனைத்திலும் நிதானம் தேவை. பெண்கள் உடல்நிலையில் கவனமாக இருப்பது நன்மையளிக்கும். விவசாயிகள் விளைச்சலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டாகும்.சந்திராஷ்டமம்: நவ. 7.அதிர்ஷ்ட நாள்: அக். 21, 30. நவ. 3, 12.பரிகாரம்: ராமநாதசுவாமியை வழிபட சங்கடங்கள் விலகி நன்மை உண்டாகும்.உத்திரட்டாதி: திட்டமிட்டு செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். மாதம் முழுவதும் ராசிக்குள் கர்மக்காரகன் சனி வக்கிரமாக சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி ஏற்படும். உங்கள் சத்துரு ஜெய ஸ்தானாதிபதி சூரியன் மாதம் முழுவதும் அஷ்டம ஸ்தானத்தில் நீச்சம் அடைந்திருப்பதால் மனதில் நிம்மதி உண்டாகும். கடந்த மாதத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். இடமாற்றம் ஏற்பட்டு விடுமோ என்று பயந்த நிலை மாறும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். பிள்ளைகள்மீது அக்கறை கூடும். சுய தொழில் செய்து வருபவர்கள் முதலீட்டில் கவனமாக இருப்பது நன்மையளிக்கும். எந்த ஒன்றிலும் உங்களுடைய நேரடிப்பார்வை என்பது இந்த நேரத்தில் அவசியம். மாதத்தின் தொடக்கத்தில் ராசிநாதன் குரு ஆறாம் இடத்திற்கு அதிசாரமாக சென்றாலும் மாதத்தின் கடைசியில் விரய ஸ்தானத்தை விட்டு ராகு லாப ஸ்தானத்திற்கு செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வரும். சமூகத்தில் அந்தஸ்து செல்வாக்கும் உண்டாகும். பெரியோருடைய உதவி கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். வீண் செலவுகள் குறையும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். பெண்களுக்கேற்பட்ட பிரச்னைகள், குழப்பம் விலகும். ஆரோக்கியம் சீராகும். சிலருக்கு புதியவர்களின் நட்பு கிடைக்கும். விவசாயிகளுக்கு உழைப்பு அதிகரிக்கும். எந்த ஒன்றும் சரியாக நடக்கவில்லை என்ற வருத்தம் மேலிடும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதி யோகமாக இருக்கும்.சந்திராஷ்டமம்: நவ. 8.அதிர்ஷ்ட நாள்: அக். 21, 26, 30. நவ. 3, 8, 12.பரிகாரம்: மகாலிங்கசுவாமியை வழிபட தடைகள் விலகும். வாழ்வில் நன்மை உண்டாகும்.ரேவதி: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். வித்யா காரகன் புதன் அஸ்டம ஸ்தானத்தில் வக்கிரம் அடைந்திருந்தாலும், அக். 31 முதல் வக்கிர நிவர்த்தி அடைவதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம்வரும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். ராசிநாதன் குரு ஆறாம் இடத்தில் சஞ்சரித்தாலும், அவருடைய பார்வைகள் 10, 12, 2 ம் இடங்களுக்கு கிடைப்பதால், செய்து வரும் தொழில் லாபம் தரும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு தகவல் வரும். புதிய தொழில் தொடங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வீண் செலவுகள் குறையும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். எதிர்பார்த்த பணம் வரும். பெண்களுக்கு உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும் என்றாலும், ஜென்ம ராசிக்குள் சனி வக்கிரமாக சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களில் நிதானமும் கவனமும் தேவை. கூட்டுத்தொழிலில் கூடுதல் கவனம் தேவை. விவசாயிகள் விழிப்புடன் செயல்படுவது அவசியம். மாணவர்களுக்கு படிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும்.சந்திராஷ்டமம்: நவ. 9.அதிர்ஷ்ட நாள்: அக். 21, 23, 30. நவ. 3, 5, 12, 14.பரிகாரம்: சுவேதாரண்யேசுவரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.


ShareTweetShareShare

Advertisement

Advertisement Tariff

Advertisement




      Dinamalar
      Follow us