sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

/

14

முந்தய பதிப்புகள்

இன்றுநேற்று
இன்றுநேற்று

To type in English

 (or) 

Press CTRL+G 

To type in English

மொத்த செய்திகள்: 1155

PM Modi announces 75,000 new medical seats

Kalvimalar News

14-Nov-2024

அசுவினி; திறமையாக செயல்படக்கூடிய ஆற்றலும் கொண்ட உங்களுக்கு, கார்த்திகை மாதம் நன்மைகள் நிறைந்த மாதம். கேது இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடிகளை நீக்குவார். வியாபாரம் தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடிகளை இல்லாமல் செய்வார். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடங்களை போக்குவார். வழக்கு விவகாரம் சாதகமாகும். டிச 3 வரை சுக்கிரனால் தன வரவு அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். தம்பதிகளுக்குள் இருந்த பிரச்னை நீங்கும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது நல்லது. சனி பகவானால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வருமானம் அதிகரிக்கும். தொழில், உத்தியோகம், உடல்நிலை என அனைத்திலும் கவனமாக இருப்பது நல்லது. சூரிய பகவான் செயல்களில் சங்கடத்தையும் உடலில் ஏதேனும் பிரச்னைகளையும் தோற்றுவிப்பார், மனம் சோர்வடையும்.   முயற்சி எல்லாம் வெற்றியாகும். மாணவர் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.சந்திராஷ்டமம்: நவ. 30.அதிர்ஷ்ட நாள்: நவ. 16, 18, 25, 27. டிச. 7, 9, பரிகாரம்: பைரவரை வழிபட நன்மை அதிகரிக்கும்.பரணி;  துணிச்சலாக செயல்படும் உங்களுக்கு நினைப்பதை சாதிக்கும் திறமை எப்போதும் இருக்கும். பிறக்கும் கார்த்திகை மாதம் திட்டமிட்டு செயல்படுவதால் எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர்கள். லாப ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் சனி பகவான் பொருளாதார நெருக்கடிகளை விலக்குவார். உற்பத்தி செய்த பொருட்கள் விற்பனையாகும். வியாபாரத்தில் இருந்த தேக்கம் நீங்கும். பணியாளர் ஒத்துழைப்பு கூடும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். தொண்டர்களின் ஆதரவு அதிகரிக்கும். நினைத்ததை சாதிக்கும் நிலை உருவாகும். சூரிய பகவான் மாதம் முழுவதும் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அரசு விவகாரங்களில்  யோசித்து செயல்படுவது நல்லது. அரசு ஊழியர்கள் அதிகாரியின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியதாக இருக்கும். தடைகளும் தாமதமும் ஏற்படும். ஒரு சிலருக்கு உடல்நிலையில் எதிர்பாராத நெருக்கடி தோன்றினாலும் மருத்துவத்தால் குணமடைவீர். கேது பகவான் அனைத்து சங்கடங்களில் இருந்தும் பாதுகாப்பார். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னைகளில் இருந்து வெளியில் கொண்டு வருவார். சிறு வியாபாரிகள் முதலீடுகள் செய்வது நல்லது. உங்கள் நட்சத்திரநாதனால் வரவு அதிகரிக்கும். பழைய கடன்களை அடைபடும். வாழ்க்கைத் துணையின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும். அதன் வழியாக லாபம் கூடும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். விவசாயிகள் விளைச்சலில் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: டிச. 1, 2.அதிர்ஷ்ட நாள்: நவ. 18, 24, 27. டிச. 6, 9, 15.பரிகாரம் சனீஸ்வரரை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.கார்த்திகை 1 ம் பாதம்;   உறுதியுடன் செயல்படும் உங்களுக்கு கார்த்திகை மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். சூரிய பகவான் அஸ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செயல்களில் நிதானம் வேண்டும். உடல் நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. அரசு விவகாரங்களில் கவனம் தேவை. எதிர்பார்த்த அனுமதி, சலுகை கிடைக்க தாமதமாகும். மனம் சோர்வடையும். கேது பகவான் உங்களைப் பாதுகாப்பார். உங்களது வேலைகளையும் முடித்துக் கொடுப்பார். தடைகளை நீக்கி வைப்பார். தொழிலில் போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடிகளை குறைக்கச் செய்வார். வழக்குகளில் சாதகத்தை ஏற்படுத்துவார். சனி பகவான் வரவை அதிகரிப்பார். அதனால் துணிச்சலுடன் செயல்படுவீர். வியாபாரம் முன்னேற்றம் அடையும். ஊழியர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். பணிபுரியும் இடத்திலும் ஆதரவாளர்கள் உங்களை வழி நடத்துவர்.  சுக்கிரனும் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். புதிய இடம், வீடு வாங்கும்போது பத்திரத்தை நன்கு படித்துப் பார்த்து கையெழுத்திடுவது நல்லது. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். ஒரு சிலருக்கு புதிய பதவி கிடைக்கும் மாணவர்கள் படிப்பில் கவனமாக இருப்பதுடன் நட்புகள் விஷயத்திலும் எச்சரிக்கையாகவும் இருப்பது நல்லது.சந்திராஷ்டமம்: டிச. 2.அதிர்ஷ்ட நாள்: நவ. 18, 19, 27, 28. டிச. 1, 9, 10பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.

கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்;  நினைத்ததை சாதிக்கும் திறமை கொண்ட உங்களுக்கு இந்த மாதம் யோகமான மாதம். சூரியனால் எதிர்பார்க்கும் இடமாற்றம், பதவி உயர்வு ஒரு சிலருக்கு ஏற்படும். தொழிலை விரிவு செய்ய முயற்சிப்பீர்கள். செவ்வாய் சாதகமாக சஞ்சரிப்பதால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். குரு பகவான் வக்ரமடைந்திருப்பதால் அலைச்சல் குறையும். குடும்பத்தில் நிம்மதியான நிலை ஏற்படும். சனி ஆட்சியாக சஞ்சரிப்பதால் வேலை பளு அதிகரிக்கும். அதிகாரிகளின் கவனம் உங்கள் மீது இருக்கும். உங்கள் ரகசியங்களை யாரிடமும் வெளிப்படுத்த வேண்டாம். சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. பணியாளர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். வருமானம் அதிகரிக்கும் நேரமிது. வெளிநாட்டு தொடர்பு ஆதாயத்தை ஏற்படுத்தும். அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும். புதிய நண்பர்களால் உங்கள் நிலையில் மாற்றம், முன்னேற்றம் ஏற்படும். வீடு, நிலம், நகைகள் வாங்குவதில் முதலீடு செய்வது நன்மை பயக்கும். பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவதும், வாழ்க்கைத் துணையின் ஆலோசனையை ஏற்று செயல்படுவதும் வாழ்க்கையை வளமாக்கும். மாணவர்கள் மற்ற சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் படிப்பில் அக்கறை செலுத்துவது அவசியம்.சந்திராஷ்டமம்: டிச. 2, 3.அதிர்ஷ்ட நாள்: நவ. 19, 24, 28. டிச. 1, 6, 10, 15.பரிகாரம்:  சூரியனை வழிபட வாழ்வில் வளமுண்டாகும்.ரோகிணி:  வாழ்வில் முன்னேற்றம் காணும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் நன்மையான மாதம். மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். புதிய பொருள் சேரும். பிறருக்கு கொடுத்து உதவிடக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும். ஒரு சிலர் குடும்பத்துடன் கோயில் வழிபாட்டை மேற் கொள்வீர். பெரியோர் ஆதரவால் வேலைகளை முடிப்பீர்கள். முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் நீங்கள் மேற்கொள்ளும் செயல் வெற்றியாகும். நினைத்ததை நடத்தி முடிப்பீர். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். விவசாயிகளுக்கு ஆதாயம் கூடும். ராகுவால் அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். எதிர்பாராத வருமானம் வரும். அந்நியர்களால் லாபம் அதிகரிக்கும். தடைபட்டிருந்த தொழிலில் மாற்றம் ஏற்படும். முயற்சிக்கு ஏற்ப லாபம் காண்பீர். சனி பகவானால் புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைத்தேடியவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். நண்பர்களை அனுசரித்துச் செல்வதால் நல்லது. வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் அக்கறை கொள்வது அவசியம். மாணவர்கள் கூடுதல் கவனம் செலுத்தி படியுங்கள்.சந்திராஷ்டமம்: டிச. 3, 4.அதிர்ஷ்ட நாள்: நவ. 20, 24, 29. டிச. 2, 6, 11, 15.பரிகாரம் மகாலட்சுமியை வழிபட நன்மை அதிகரிக்கும்.மிருக சீரிடம் 1, 2 ம் பாதம்; நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் முன்னேற்றமான மாதம்.  செவ்வாய் பகவான் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். தடைபட்ட வேலைகளை முடித்து வைப்பார். வரவேண்டிய பணம் வரும். சகோதரர்கள் வழியில் இருந்த பிரச்னை விலகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். வழக்கு விவகாரம் சாதகமாகும். லாப ஸ்தான ராகுவால் வருமானம் உயரும். கலைத்துறையினருக்கு மதிப்பு கூடும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். ஒரு சிலருக்கு புதிய பதவி, பொறுப்பு கிடைக்கும். காவல், ராணுவம், மீட்புப்பணிகள் துறையினருக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ் துறையில் உள்ளவர்களுக்கு வருமானம் கூடும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனை விலகும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் பல வழியிலும் வரும். சிறிய தொழிலிலும் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் அக்கறை தேவை.சந்திராஷ்டமம்: டிச. 4.அதிர்ஷ்ட நாள்: நவ. 18, 24, 27. டிச. 6, 9, 15.பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்; அறிவும் துணிவும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் கார்த்திகை மாதம் அதிர்ஷ்டமான மாதம். குரு பகவான் வக்ரம் அடைந்துள்ள நிலையில் ஆட்சியாக சஞ்சரிக்கும் சனி பகவானால்  செல்வாக்கு உயரும். பொது வாழ்வில் ஈடுபட்டிருப்போருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். போட்டியாளர் பலமிழப்பர். இழுபறி வழக்கு சாதகமாகும். வேண்டுதல் நிறைவேறி கோயில் வழிபாட்டை மேற்கொள்வீர்கள். மற்றவர்களால் கவனம் சிதறலாம். நல்ல வாய்ப்புகளை இழக்க வேண்டிய நிலை வரும். செவ்வாயால் குடும்பத்திற்குள் நெருக்கடி உண்டாகும். டிச 4 முதல் உங்கள் ராசிநாதன் புதனும் வக்ர நிவர்த்தி அடைவதால் சிந்தித்து செயல்படுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தடைபட்டிருந்த வேலை நடக்கும். வெளிநாட்டு தொடர்பு சாதகமாகும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும்.மாணவர்கள் மாதத்தின் முற்பகுதியில் படிப்பில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. விவசாயிகள் விளைச்சலில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.சந்திராஷ்டமம்: டிச. 4, 5.அதிர்ஷ்ட நாள்: நவ. 18, 23, 27. டிச. 9, 14.பரிகாரம்: சனீஸ்வரரை வழிபட நன்மைகள் உண்டாகும்.திருவாதிரை; நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு பிறக்கும் கார்த்திகை மாதம் யோகமான மாதம். மாதம் முழுவதும் சூரிய பகவான் ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் செல்வாக்கு உயரும். நினைத்த வேலை நினைத்தபடி நடக்கும். எதிரிகளால் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலை நடக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகம் ஆகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். ஒரு சிலருக்கு புதிய பதவி கிடைக்கும்.  சனி பகவானால் இதுவரை இருந்த நெருக்கடி விலகும் வருமானம் பல வழியிலும் வரத் தொடங்கும் புத்திசாலித்தனம் வெளிப்படும். எவ்வளவு நெருக்கடி ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் சக்தி உண்டாகும். குடும்பத்தினர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வீர். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். விரும்பிய வாகனம் வாங்குவீர். கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்கள். பெரிய மனிதர்கள் ஒத்துழைப்புடன் வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: டிச. 5, 6.அதிர்ஷ்ட நாள்: நவ. 22, 23, டிச. 4, 13, 14.பரிகாரம்:  துர்கையை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்......................புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்பிறர் மன நிலையை உணர்ந்தும் செயல்படும் உங்களுக்கு பிறக்கும் கார்த்திகை மாதம் முன்னேற்றமான மாதம். குரு பகவான் வக்ரமாகியிருப்பதால் வீண் செலவு கட்டுப்படும். அலைச்சல் குறையும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மாதம் முழுவதும் சூரிய பகவான் உங்களுக்கு முன்னேற்றமான பலன்களை வழங்குவார். எல்லா வகை எதிர்பார்ப்பும் நிறைவேறும். திறமை வெளிப்படும். வருமானம் அதிகரிக்கும். எதிர்ப்புகள் இல்லாத நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். பாக்ய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வை 3, 6, 11 ம் இடங்களுக்கு உண்டாவதால் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பாதிப்பு விலகும். வம்பு, வழக்கு சாதகமாகும். வருமானம் பல வழிகளிலும் வர ஆரம்பிக்கும். தெய்வ அருளும், பெரிய மனிதர்களின் ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய பாதைத் தெரியும். தடைபட்ட வேலை நடக்கும். மாதத்தின் பிற்பகுதியில் உங்கள் ராசிநாதன் வக்ர நிவர்த்தி அடைவதால் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வங்கியில் கேட்டிருந்த பணம் வரும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். நினைத்த வேலை நடக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவீர். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். சுறுசுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதித்திடும் வலிமை உண்டாகும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். சிறு வியாபாரிகள், உழைப்பாளர்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் சிறு சிறு நெருக்கடி ஏற்பட்டாலும் பிற்பகுதியில் படிப்பில் அக்கறை உண்டாகும்.சந்திராஷ்டமம்: டிச. 6.அதிர்ஷ்ட நாள்: நவ. 21, 23, 30. டிச. 3, 5, 12, 14.பரிகாரம்:  நரசிம்மரை வழிபட நன்மை அதிகரிக்கும்....................

புனர்பூசம் 4 ம் பாதம்;  திடமான சிந்தனை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். குரு பகவான் வக்ரமடைந்திருப்பதால் அவர் வழங்கிய யோகப்பலனில் மாற்றம் இருக்கும். சனிபகவான் ஆட்சி பெற்றிருப்பதால் ஒவ்வொரு செயலிலும் கவனமாக செயல்படுவது அவசியம். உடல் நிலையில் ஏதேனும் சிறு சங்கடங்கள் ஏற்படலாம். அல்லது, உங்களுடைய செல்வாக்கில், அந்தஸ்தில் பின்னடைவை சந்திக்க வேண்டிய நிலை உண்டாகலாம். கவனமாக செயல்படுவது நல்லது. கேது நெருக்கடிகளில் இருந்து  உங்களைப் பாதுகாப்பார். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். ராகு உழைப்பிற்கு ஏற்ற வருமானத்தை வழங்குவார். இக்காலத்தில் இஷ்ட தெய்வ கோயில்களுக்கு சென்று வருவதன் வழியாக சங்கடம் விலகும். பெரிய மனிதர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் செவ்வாயால் படபடப்பு, வேகம் என்பதெல்லாம் இருக்கும். அதன் காரணமாக உடல் நிலையில் சிறு சங்கடம் தோன்றும். இக்காலத்தில் குடும்பத்தினரின் ஆலோசனைகளை ஏற்பதும், அனுசரித்துச் செல்வதும் நல்லது. பணிபுரியும் இடத்தில் உங்களுடைய வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் படிப்பில் அக்கறையுடன் கவனம் செலுத்துவது அவசியம்.சந்திராஷ்டமம்: டிச. 7.அதிர்ஷ்ட நாள்: நவ. 20, 21, 29, 30. டிச. 2, 3, 11, 12.பரிகாரம்: நவகிரக வழிபாட்டால் நன்மை உண்டாகும்.பூசம்;  மனதில் சரி என பட்டதை செய்யும் தங்களுக்கு பிறக்கும் கார்த்திகை மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். சனி பகவான் ஆட்சி பலத்துடன் சஞ்சரிப்பதால் ஏதாகிலும் ஒரு வகையில் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். உடல் நிலையிலும் சிறு பாதிப்பு ஏற்படலாம். இதுவரை வேகமாக நடைபெற்று வந்த வேலை, கிடைத்த வருமானத்தில் தடைகளும் தாமதமும் ஏற்படும். வீண் பிரச்சனைகளும் தேடி வரும். வாகனப் பயணத்தில் நிதானம் காப்பதும், இயந்திரப் பணிகளில் கவனமாக செயல்படுவதும் நன்மையை உண்டாக்கும். மேல் அதிகாரிகளையும் அனுசரித்துச் செல்வதால் நெருக்கடி நீங்கும். குடும்ப உறவுகளிடம் முடிந்த வரை இணக்கமாக செல்வது நல்லது. குழந்தைகள்  மீது இக்காலத்தில் அக்கறை கொள்வது அவசியம். அவர்களுடைய செயல்பாடுகளில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய முதலீடு செய்யும்போது யோசித்து செய்வது நல்லது. ராசிக்குள் செவ்வாய் சஞ்சரிப்பதால் செயல்களில் தடுமாற்றமும் குழப்பமும் ஏற்படும் வார்த்தைகளால் சங்கடம் உண்டாகும். கேதுவால் எல்லாவற்றையும் சமாளித்திடக்கூடிய சக்தியும் ஏற்படும். வாழ்க்கைக்கேற்ற வருவாய் வரும். அடிப்படைத் தேவை பூர்த்தியாகும். பிறரை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும். வாழ்க்கைக்குத் தேவையானவற்றில் மட்டும் கவனத்தையும், உழைப்பையும் செலுத்துவது நல்லது. மாணவர்கள் படிப்பில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும். விவசாயிகள் விளைச்சலில் கூடுதல் கவனம் கொள்ள வேண்டும்.சந்திராஷ்டமம்: டிச. 7, 8.அதிர்ஷ்ட நாள்: நவ. 17, 20, 26, 29. டிச. 2, 11.பரிகாரம்: பைரவரை வழிபட சங்கடங்கள் விலகும்.ஆயில்யம்; வாழ்வில் முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். செயல்களில் கவனம் தேவை. வியாபாரிகள் புதிய முதலீடுகள் செய்யும்போது நன்றாக யோசிப்பது நன்மையாகும்.  அரசியல்வாதிகள் வார்த்தைகளில் கவனம் தேவை. பெரிய பொறுப்புகளில் இருப்பவர்கள் தங்கள் பணியில் நேர்மையாக செயல்படுவது அவசியம். பூர்வீக சொத்துகள் விஷயத்தில் பிரச்னை ஏற்படும். அதை சட்டரீதியாக எதிர்கொள்வது நல்லது. குடும்பத்தினர் ஆலோசனைக்கு இக்காலத்தில் மதிப்பளிப்பதும், பெரியோரை அனுசரித்துச்செல்வதும், உடன் பணிபுரிபவருடன் மோதல் போக்கை காட்டாமல் இருப்பதும் பெரிய நெருக்கடிகளில் இருந்து உங்களைப் பாதுகாக்கும். சனி பகவானால் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். கவனக்குறைவால் சிறு விபத்துகளையும் சந்திக்க நேரும். ஒரு சிலருக்கு எதிர்பாலினரால் பிரச்னைகளை சந்திக்க வேண்டிவரும். கேதுவால் அவற்றிலிருந்து விடுபடக்கூடிய நிலையும் உண்டாகும். தன்னம்பிக்கையும் தைரியமும் கூடும். சகோதரர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார். எதிர்பார்த்த பணம் வரும். புதிய சொத்து வாங்கும்போது மூல பத்திரத்தை நன்றாக கவனிப்பதும், ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் நன்றாக படித்துப் பார்ப்பதும் நல்லது. அரசு வழி முயற்சி, வழக்கு தள்ளிப்போகும். அவற்றால் உங்களுக்கு நன்மை உண்டாகும். மாணவர்கள் படிப்பில் முழுமையான கவனம் செலுத்துவது சிறப்பு.சந்திராஷ்டமம்: டிச. 8, 9.அதிர்ஷ்ட நாள்: நவ. 20, 23, 29. டிச. 2, 5, 11, 14. பரிகாரம்: நரசிம்மரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

மகம்:  எங்கும் முதன்மையை விரும்பும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். குரு வக்ரம் அடைந்திருப்பது நல்லது என்றாலும் இக்காலத்தில் அவருடைய பார்வைகள் இல்லாமல் 2, 4, ம் இடத்தில் சஞ்சரிக்கும் கிரகம் பலம் பெறுகிறது. இதுவரை குடும்பத்திற்குள் கேது பகவான் நெருக்கடியை உண்டாக்குவார். பண வரவிலும் தடையுண்டாகும். கொடுத்த வாக்கையும் காப்பாற்ற முடியாமல் போகும். தாய்வழி உறவுகளால் அடைந்து வந்த நன்மையில் மாற்றமுண்டாகும். வேலை பளு கூடும். உத்யோகத்தில் நெருக்கடி அதிகரிக்கும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதிய முதலீடுகளில் எச்சரிக்கை அவசியம். உங்கள் தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டிருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் வேலை நடந்தேறும். பொன் பொருள் சேரும். நெருக்கடி விலகும். புதன் உங்கள் நிலையை உயர்த்துவார். சிந்தித்து செயல்பட வைப்பார். பணிய வேண்டிய இடத்தில் பணிந்து உங்கள் வேலைகளை நடத்திக் கொள்வீர்கள். கேட்டிருந்த இடத்தில் இருந்து பணம் வரும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வரவு செலவில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் செல்வாக்கு உயரும். மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் இருக்கும் நெருக்கடி பிற்பகுதியில் நீங்கும். படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: டிச. 9.அதிர்ஷ்ட நாள்: நவ. 16, 19, 25, 28. டிச. 1, 7, 10.பரிகாரம்: நவக்கிரக வழிபாட்டால் நன்மை உண்டாகும்.பூரம்:  நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு பிறக்கும் கார்த்திகை மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். விரய ஸ்தானத்தில் செவ்வாய். சப்தம ஸ்தானத்தில் சனி. அஷ்டம ஸ்தானத்தில் ராகு. தன, குடும்ப ஸ்தானத்தில் கேது என்று சஞ்சரித்தாலும், நட்சத்திர நாதனும், சகாய, ஜீவனாதிபதியுமான சுக்கிரனின் சஞ்சார நிலை டிச. 3 வரை சாதகமாக இருப்பதால் வருமானம் உயரும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் நெருக்கடி இல்லாமல் போகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். செவ்வாய் வக்ரம் அடைவதால் செலவு குறையும். வீண் விரயம் இல்லாமல் போகும் என்றாலும், சுக ஸ்தானத்தில் சஞ்சரித்துவரும் ராசிநாதனுக்கும், உங்கள் ராசிக்கும் சனி பகவானின் பார்வை உண்டாகி இருப்பதால் கவனமாக செயல்படுவது நல்லது. வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் இக்காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். நேரத்திற்கு சாப்பிடுவது, உறங்குவது நன்மையாகும். டிச. 4 முதல் புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். அவசியமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். விவசாயிகள் விளைச்சலில் கவனம் செலுத்துவது அவசியம். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் அக்கறை தேவை வரமிது.சந்திராஷ்டமம்: டிச. 10.அதிர்ஷ்ட நாள்: நவ. 19, 24, 28. டிச. 1, 6, 15.பரிகாரம்: காளிகாம்பாளை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.உத்திரம் 1 ம் பாதம்; எதிலும் தனித்துவத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் யோசித்து செயல்பட வேண்டிய மாதம். 4 ம் இடத்தில் சஞ்சரிக்கும் உங்கள் ராசிநாதன் சூரியன், சனி பகவானின் பார்வைக்கு ஆட்பட்டிருப்பதால் உடல் நிலையில் சிறு சிறு சங்கடம் ஏற்படும். இனம் புரியாத பயம் தோன்றி மறையும். உங்கள் ராசிக்கும் சனி பகவான் பார்வை இருப்பதால் உடல்நிலையில் கவனம் செலுத்துவதுடன், நட்பு வட்டத்தில் இணக்கமாக செல்வது இக்காலத்தில் நன்மையாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் நலனில் அக்கறை கொள்வது அவசியம். கூட்டுத்தொழிலில் சில சங்கடம் தோன்றும் என்றாலும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சுக்கிரனால் நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். தேவையான அளவிற்கு வருமானம் வரும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். நெருக்கடி நீங்கும். மாதத்தின் பிற்பகுதியில் புதன் பகவான் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் புத்திசாலித்தனமாக செயல்படுவீர். எந்தவிதமான நெருக்கடி வந்தாலும் அதை சமாளித்து விடக்கூடிய சக்தி உண்டாகும். இக்காலத்தில் அனைத்திலும் கவனமாக இருப்பது நல்லது.  ராகுவும், கேதுவும்  குடும்பத்திற்குள் நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள். உடல் நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. புதிய முயற்சிகள் இந்த மாதத்தில் மேற்கொள்ள வேண்டாம். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். மாதத்தின் முற்பகுதியில் மருத்துவ செலவுகள் கூடும். தேவையற்ற செலவு ஏற்படும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. எதிலும் நிதானம் தேவை. மாணவர்கள் படிப்பில் முழுமையான கவனம் செலுத்துவது நல்லது.சந்திராஷ்டமம்: டிச. 11.அதிர்ஷ்ட நாள்: நவ. 19, 28. டிச. 1, 10.பரிகாரம்: சனீஸ்வரரை வழிபட சங்கடம் நீங்கும்.

உத்திரம் 2, 3, 4 ம் பாதம்: சாதிக்கும் திறமை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் அதிர்ஷ்டம் நிறைந்த  மாதம். சூரியனால் இதுவரை தடைபட்டிருந்த வேலை நடக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். கடந்த கால நெருக்கடி விலகும். உத்யோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். செல்வாக்கு உயரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். திட்டமிட்ட வேலைகளை ஒவ்வொன்றாக நடத்தி முடித்து ஆதாயம் காண்பீர்கள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். ராகுபகவானால் புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவர். அவர்களால் ஆதாயம் கூடும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு தொடர்பு ஏற்படும்.  உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் உண்டாகும். கேது சஞ்சரித்தினால் வாழ்க்கையில் ஒரு சில புதிய அனுபவங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வருமானம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. விவசாயிகளுக்கு மாதத்தின் முற்பகுதியில் யோகமாகவும் பிற்பகுதியில் சிறு சிறு சங்கடங்களும் ஏற்படும் என்பதால் கவனமாக செயல்படுவது அவசியம்.சந்திராஷ்டமம்: டிச. 11.அதிர்ஷ்ட நாள்: நவ. 19, 23, 28. டிச. 1, 5, 10, 14.பரிகாரம்: உலகளந்த பெருமாளை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.அஸ்தம்; எந்த வேலை ஆனாலும் அதில் வெற்றி அடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் யோகமான மாதம். சனி பகவான் இதுவரையில் உங்களுக்கிருந்த நெருக்கடிகளை  இல்லாமல் செய்வார். உடல் நிலையில் இருந்த சங்கடம் விலகும். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி நீங்கும். வழக்கு சாதகமாகும். செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். உத்யோகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த மாற்றத்தை அடைவீர்கள். சூரிய பகவானும் உங்கள் முயற்சிகளில் வெற்றிகளை உண்டாக்குவார். திட்டமிட்டிருந்த வேலை எல்லாம் நடந்தேறும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். வயது முதிர்ச்சியின் காரணமாக நோய் நொடிக்கு ஆளாகி இருந்தவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள். வாழ்க்கைத் துணையாலும், நண்பர்களாலும் உங்கள் வேலை நடந்தேறும். கூட்டுத்தொழிலில் லாபம் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு மாதத்தின் முற்பகுதி சாதகமாக இருக்கும். பிற்பகுதியில் கவனமாக செயல்படுவது நல்லது. மாணவர்கள் மாதம் முழுவதும் படிப்பில் முழுமையான கவனம் செலுத்துவது அவசியம்.சந்திராஷ்டமம்: டிச. 12.அதிர்ஷ்ட நாள்: நவ. 20, 23, 29. டிச. 2, 5, 11, 14.பரிகாரம்:  வீரட்டேஸ்வரரை வழிபட அனைத்திலும் வெற்றி உண்டாகும்.சித்திரை 1, 2 ம் பாதம் ; தைரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் முன்னேற்றமான மாதம். உங்கள் நட்சத்திரநாதன் செவ்வாய் நீங்கள் மேற்கொள்ளும் செயல்களை எல்லாம் லாபமாக்குவார். முடங்கியிருந்த தொழில்களை மீண்டும் இயங்க வைப்பார். வியாபாரத்தில் லாபத்தை அதிகரிப்பார். எதிர்பார்த்த வரவை வழங்குவார். உங்கள் வாழ்வில் இதுவரை இருந்த நெருக்கடி விலகும். மாதத்தின் பிற்பகுதியில் செவ்வாய் வக்ரமானாலும் மாதம் முழுவதும் சூரியனும், சனி பகவானும் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றத்தை உண்டாக்குவார்கள். டிச. 3 முதல் சுக்கிரனின் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் வருவாய் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உத்யோகம் பார்க்கும் இடத்தில் பணியாளர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். சிறு நிறுவனங்களில் வேலைச் செய்வோரின் விருப்பம் பூர்த்தியாகும். ஊதிய உயர்வு எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும். உங்கள் திறமை வெளிப்படும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். மாணவர்களுக்கு இக்காலத்தில் படிப்பில் முழுமையான அக்கறை வேண்டும்.சந்திராஷ்டமம்: டிச. 13.அதிர்ஷ்ட நாள்: நவ. 18, 23, 27. டிச. 5, 9, 14.பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

சித்திரை 3, 4 ம் பாதம்; விடாமுயற்சியை உயிராகக் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் நன்மையான மாதம். குரு பகவான் வக்ரம் அடைந்திருப்பதால் செயலில் தெளிவு இருக்கும். திட்டமிட்டு செயல்படுவீர். நினைத்ததை சாதிப்பீர். குரு பகவானின் பார்வை 12, 2, 4 ம் இடங்களுக்கு இல்லாமல் போனதால் குடும்பத்தில் சிறு சலசலப்பு உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலை ஒரு சிலருக்கு ஏற்படும். உடல் நிலையில் ஏதேனும் சிறு சங்கடம் ஏற்பட்டுக் கொண்டிருக்கும். வீண் செலவு அதிகரிக்கும். இருந்தாலும், 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவானால் ஆற்றல் வெளிப்படும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். அலுவலகம், வியாபாரம் போன்ற இடங்களில் ஏற்பட்ட தொந்தரவுகள் விலகும். உங்கள் உடல் நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரம் சாதகமாகும். விரய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் வரவு செலவுகளில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சிலர் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றி வருவீர்கள். சப்தம் ஸ்தானத்திற்கு சனி பகவானின் பார்வை உண்டாவதால் நண்பர்களுடனும், வாழ்க்கைத் துணையுடனும் இணக்கமாக செல்வது நன்மைக்கு வழிவகுக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வதற்கு முன் அதுபற்றி நன்றாக யோசிக்க வேண்டும். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக்காரகன் சுக்ரனின் ஆதரவும், மாதத்தின் பிற்பகுதியில் புத பகவானின் சஞ்சார நிலையும் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் நெருக்கடி இல்லாமல் போகும். பொன் பொருள் சேரும். ஒரு சிலருக்கு புதிய சொத்துகள், வாகனம் சேரும். மாணவர்கள் மாதத்தின் முற்பகுதியில் படிப்பில் கவனமாக இருக்க வேண்டும்.சந்திராஷ்டமம்: நவ.16. டிச. 13.அதிர்ஷ்ட நாள்: நவ. 18, 24, 27. டிச. 6, 9, 15.பரிகாரம்:  ராஜேஸ்வரியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.சுவாதி; சத்தமில்லாமல் எங்கும் வெற்றி அடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் முன்னேற்றமான மாதம். நட்சத்திரநாதன் ராகு பகவான் 6 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் எத்தனை நெருக்கடி வந்தாலும் அவற்றிலிருந்து உங்களால் விடுபட முடியும். வருமானம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த போட்டியாளர் விலகுவர். உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்துவீர். வெளியூர் பயணம் லாபம் தரும். வழக்கு  சாதகமாகும். நினைத்ததை சாதிக்கக் கூடிய நிலை ஏற்படும் என்றாலும், 5ல் வரும் சனி பகவான் உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானம், லாப ஸ்தானம், குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் பணவரவில் கவனமாக வேண்டும். உறவுகளை அனுசரித்துச் செல்வது நல்லது. 2 ம் இடத்தில் சூரியனும் சஞ்சரிப்பதால் அடிக்கடி கோபம் ஏற்படும். வார்த்தை சூடாக வரும் என்பதால் அதுவே  எதிரியாக மாறும். இக்காலத்தில் நண்பர்களுடனும், வாழ்க்கை துணையுடனும் இணக்கமாக இருப்பதும், விட்டுக் கொடுத்துச் செல்வதும் முயற்சிகளை வெற்றியாக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு உங்களைப் பாதுகாக்கும். சுக்ரனும், புதனும் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். தேவையற்ற ஆசைக்கு இடம் கொடுக்காமல் நேர்மையான வருமானத்தில் கவனம் செலுத்துவதால் முயற்சி லாபமடையும். வியாபாரம் முன்னேற்றமடையும். விவசாயிகள் விளைச்சலில் கவனமாக இருக்க வேண்டும். அரசு பணியாளர்கள் நேர்மையுடன் செயல்படுவது அவசியம். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் அக்கறை தேவை. உழைப்பாளர்களுக்கு தேவைக்கேற்ற வருவாய் வரும்.சந்திராஷ்டமம்: நவ.17., டிச. 14.அதிர்ஷ்ட நாள்: நவ. 22, 24. டிச. 4, 6, 13, 15.பரிகாரம்: துர்கையை வழிபட சங்கடம் விலகும்.விசாகம் 1, 2, 3 ம் பாதம்; திட்டமிட்டு செயல்படும் சக்தியும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் யோசித்து செயல்பட வேண்டிய மாதம். நட்சத்திர நாதன் குரு பகவான் வக்ரம் அடைந்திருப்பதால் செயல்களில் சில குழப்பம் ஏற்படும். திட்டமிடாமல் செயல்பட்டு அதனால் சங்கடத்திற்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும். ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் கவனம் தேவை. முதலீடு செய்வதற்கு முன்பாக ஒன்றிற்கு இரு முறைக்கு யோசித்து செயல் பட வேண்டும். லாபம், தனஸ்தானத்தில் சனியின் பார்வைகள் இருப்பதால் வருமானத்தில் கவனம் தேவை. வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. இக்காலத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். குடும்பத்தினரை அனுசரித்து செல்வதும், பிள்ளைகள் நலனில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது. பூர்வீக சொத்து குறித்து பிரச்னை உருவாகும். அதை உடனடியாக முடிவிற்கு கொண்டு வராமல் வழக்கு வழியாக தீர்த்துக் கொள்வது நன்மை தரும். ராகு உங்கள் செயல்களுக்கு ஆதரவாக இருப்பார். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அதிலிருந்து பாதுகாப்பார். உடல் நிலைக்கு முக்கியத்துவம்  கொடுப்பீர்கள். வழக்குகள் வெற்றியாக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கை உயர்த்துவார். பொது வாழ்வில் இருப்போர் வார்த்தைகளில் கவனமாக இருப்பது அவசியம். வரவு செலவுகளில் எச்சரிக்கையாக இருப்பது பெரும் இழப்பில் இருந்து உங்களைப் பாதுகாக்கும். இரவுப் பயணங்களில் சில நெருக்கடி தோன்றும் என்பதால் விழிப்புணர்வு அவசியம், அரசு பணியாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் பொறுப்புடன் செயல்படுவது நன்மையாகும்.  மாணவர்கள் மாதத்தின் முற்பகுதியில் படிப்பில் கவனம் தேவை.சந்திராஷ்டமம்: நவ. 18., டிச. 15.அதிர்ஷ்ட நாள்: நவ. 21, 24, 30. டிச. 3, 6, 12, 15.பரிகாரம்: மீனாட்சி அம்மனை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

விசாகம் 4 ம் பாதம்;  தைரியத்துடன் வாழ்க்கையில் வெற்றி பெற்று வரும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். பவுர்ணமி யோகத்துடன் பிறக்கும் இந்த மாதத்தில், உங்கள் முயற்சியின் காரணமாக நீங்கள் மேற்கொள்ளும் வேலைகள் வெற்றி அடையும். லாபகரகனால்  வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வருமானம் அதிகரிக்கும். என்றாலும், ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் சூரியனால் உடல் நிலையில் கவனமாக இருப்பது அவசியம். வேலைகளில் படபடப்பும், யோசிக்காமல் செயல்படக்கூடிய நிலையும் இருக்கும். அதன் காரணமாக எதிர்பார்ப்பு இழுபறியாகலாம். சுக்ரனின் சஞ்சாரம் மாதம் முழுவதும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் பண வரவிற்கும், சந்தோஷத்திற்கும் குறைவிருக்காது. உங்கள் எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். பொன் பொருள் சேரும். புதிய வாகனம் வாங்கிட மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். மாணவர்கள் மாதத்தின் முற்பகுதியில் படிப்பில் கவனமாக இருக்க வேண்டும். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் உங்கள் ராசிநாதன் உங்கள் உழைப்பிற்கு ஏற்ற வருமானத்தை வழங்குவார்.சந்திராஷ்டமம்: நவ. 18.அதிர்ஷ்ட நாள்: நவ. 21, 27, 30. டிச. 3, 9, 12.பரிகாரம்: அதிகாலையில் சூரியனை வணங்கி வர நன்மை உண்டாகும்.அனுஷம்;  அடுத்தவர் நலனில் அக்கறையும் கொண்டு துணிச்சலுடன் செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். சுக  ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் நட்சத்திரநாதன் சனி பகவான் உடல்நிலையில் சிறு சிறு சங்கடங்களை ஏற்படுத்துவார். வேலை பளுவை அதிகரிப்பார். பொறுப்பாக செயல்பட வைப்பார். நினைத்த வேலைகளை உடனே செய்து கொள்ள முடியாத அளவிற்கு சூழ்நிலை உண்டாகும்.  6 ம் இடத்திற்கு சனி பகவானின் பார்வை கிடைப்பதால் எல்லாவற்றையும் சமாளித்து விடக்கூடிய சக்தி உண்டாகும். எதிர்ப்பு ஏற்பட்டாலும் அவற்றை இல்லாமல் செய்வீர். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வழக்கில் சாதகம் உண்டாகும். ராசிக்குள் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் ஜீவனாதிபதி சூரியனுக்கும் சனி பகவானின் பார்வைகள் உண்டாவதால் செய்து வரும் தொழிலில் கவனம் வேண்டும். புதிய முதலீடுகள் செய்வதற்கு முன்பாக பலமுறை யோசிக்க வேண்டும். அரசு பணியில் இருப்பவர்கள் இக்காலத்தில் நேர்மையாக செயல்படுவது நன்மையாக இருக்கும். இல்லையெனில் சட்ட சிக்கல்களுக்கு ஆளாக வேண்டி வரும். அரசியல்வாதிகள் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நன்மையாகும். விவசாயிகள் விளைச்சலில் கவனம் செலுத்த வேண்டும். வயதானவர்கள் உடல் நிலையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு இக்காலத்தில் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.  மாணவர்கள் படிப்பில் முழுமையான கவனத்தை செலுத்துவது நன்மையாகும்.சந்திராஷ்டமம்: நவ. 18, 19.அதிர்ஷ்ட நாள்: நவ. 17, 26, 27. டிச. 8, 9.பரிகாரம்: சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வருவது நல்லது.கேட்டை; புத்தி சாதுரியம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் கார்த்திகை மாதம் சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டிய மாதம். உங்கள் நட்சத்திரநாதன் டிச. 4 வரை வக்ரமாக இருப்பதால் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். வரவு இழுபறியாகும். நினைத்த வேலைகளை உடனடியாக நடத்திக் கொள்ள முடியாமல் போகும்.  லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் கேது பகவான் நன்மைகளை அதிகரிப்பார். வருமானத்திற்கு வழிவகுப்பார். மாதம் முழுவதும்  சுக்ர பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும் சனிபகவானால் தாயாரின் நலனிலும் உங்கள் நலனிலும் கவனமாக இருக்க வேண்டும். புதிய சொத்துகள் வாங்கும்போது வில்லங்கம் பார்த்து வாங்குவது நன்மையாக இருக்கும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது நன்றாக படித்துப் பார்ப்பது அவசியம். ஏதேனும் சிறுசிறு சங்கடங்கள் அவ்வப்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் என்பதால், ஒவ்வொன்றிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். சனி பகவானின் பார்வைக்கு ஆட்பட்டிருப்பதால் தொழில் சில தடை, வருமானத்தில் தடை என ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. அதனால், முதலீடுகளின் கவனம் வேண்டும். செய்துவரும் வியாபாரத்தில் கவனம் வேண்டும். பிறரை அனுசரித்துச் செல்வதும், உத்யோகம் பார்க்கும் இடத்தில் மேலதிகாரிகள் உத்தரவுகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதும் நன்மையாகும். மாதத்தின் பிற்பகுதி உங்களுக்கு யோகமாக இருக்கும். தெளிவாக செயல்படுவீர்கள். நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். இடையில் இருந்த சங்கடம் விலகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: நவ. 19, 20.அதிர்ஷ்ட நாள்: நவ. 18, 23, 27. டிச. 5, 9, 14.பரிகாரம்:  நரசிம்மரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

மூலம்: வழிகாட்டியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் முன்னேற்றமான மாதம். இதுவரையில் இருந்த நெருக்கடி ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். சனி பகவான் உங்கள் செயல்களை எல்லாம் ஆதாயமாக்குவார். நினைப்பதை எல்லாம் நடத்தி வைப்பார். தடைபட்டிருந்த வேலை ஒவ்வொன்றும் நடந்தேறும். 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் உங்கள் ராசிநாதன் வக்ரமடைந்திருப்பதும் யோகமான நிலை. தொழிலில் முன்னேற்றமும், குடும்பத்தில் நிம்மதியும் உண்டாகும். உங்கள் நட்சத்திர நாதன் கேது சஞ்சரித்து வருவதால் செய்து வரும் தொழிலில் அதிகபட்ச அக்கறை தேவை. பார்த்து வரும் உத்யோகத்தில் நியாயமாக செயல்படுவதால் நன்மைகள் உண்டாகும். சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்களுக்கு பிரச்னை ஏற்படும். சனிபகவானின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் செயல்பாடுகளும் நியாயமாக இருக்கும்.  சுக ஸ்தானத்தில் ராகு சஞ்சரித்து வருவதால் ஆசைகள் அதிகரிக்கும். திட்டமிட்ட பணிகளில் கவனம் செலுத்துவதால் உங்கள் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்கள் மாதம் முழுவதும் படிப்பில் அதிகபட்ச அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.சந்திராஷ்டமம்: நவ. 20, 21.அதிர்ஷ்ட நாள்: நவ. 16, 25, 30. டிச. 3, 7, 12.பரிகாரம்: கணபதிக்கு அருகம்பும் மாலை சார்த்தி வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.பூராடம்;  திட்டமிட்ட வழியில் சென்று, நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு பிறக்கும் கார்த்திகை மாதம் நன்மையான மாதம். உங்கள் நட்சத்திரநாதன் சுக்ர பகவான் மாதம் முழுவதும் உங்களுக்கு யோகமான பலன்களை வழங்குகிறார். எதிர்பார்த்த வருமானம் வரும். குடும்பத்தில் நிம்மதி நிலை இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சனி பகவானால் வேலைகள் எல்லாம் நினைத்தபடி நடக்கும். தடை இல்லாமல் வெற்றி பெறும் காலம். அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் விவசாயிகள் விளைச்சலில் கவனம்  வேண்டும். உடல் நிலையில் கவனம் தேவை. பூர்வ புண்ணிய, பாக்ய, விரய ஸ்தானங்களுக்கு  பார்வை உண்டாவதால் குடும்பம், பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. தந்தையின் உடல் நிலையில் கூடுதல் கவனம் தேவை. வரவு செலவுகளில் கவனமாக இருப்பது நன்மையாகும். புதிய முயற்சிகள், ஒப்பந்தங்களில் கூடுதல் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதால் நன்மைகள் கூடும். பணி புரியும் இடத்தில் நெருக்கடிகளை சந்திக்க வேண்டிவரும். புதன் பகவான் விரய ஸ்தானத்தில் வக்ரமடைந்திருப்பதால் மாணவர்கள் படிப்பில் முழுமையான அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.சந்திராஷ்டமம்: நவ. 21, 22.அதிர்ஷ்ட நாள்: நவ. 24, 30. டிச. 3, 6, 12, 15.பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.உத்திராடம் 1 ம் பாதம் ;  தலைமைத் தாங்கி வழிநடத்தும் திறமையும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் செலவு அதிகரிக்கும். சூரியன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத செலவு ஏற்படும். ஒரு சிலருக்கு மருத்துவ செலவு அதிகரிக்கும். ஜென்ம ராசிக்குள்ள சுக்ரனால் பொருளாதார நெருக்கடி விலகும். எதிர்பார்த்த வரவு வரும். வியாபாரம், பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். வெளிநாட்டு தொடர்பு லாபத்தை ஏற்படுத்தும். சனி பகவான் முயற்சிகளை எல்லாம் வெற்றியாக்குவார். வழக்குகளில் சாதகமான நிலை ஏற்படும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு நினைத்ததை சாதித்திடக்கூடிய காலமாக இக்காலம் இருக்கும். அவ்வப்போது உடல் நிலையில் கவனம் செலுத்தி வருவது அவசியம். புதபகவான் வக்ரம் அடைந்து விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஒப்பந்த விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். பத்திரங்களில் கையெழுத்திடும் முன் தாய் பத்திரத்தை பார்த்து நன்றாகப் பார்த்து அதன்பிறகே கையெழுத்திட வேண்டும். மாணவர்கள் படிப்பில் கவனமும்,  விவசாயிகள் விளைச்சலில் கவனமும் செலுத்த வேண்டும். வீடு, நிலம் விற்றல் வாங்கலை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைப்பது ஆதாயமாகும்.சந்திராஷ்டமம்: நவ. 22.அதிர்ஷ்ட நாள்: நவ. 19, 21, 28, 30. டிச. 1, 3, 10, 12.பரிகாரம்: குரு பகவானுக்கு முல்லை மலர் சார்த்தி வழிபட நன்மை உண்டாகும்.

உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்;  நீதிநெறிக்கு மட்டும் கட்டுப்பட்டு வாழும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் முன்னேற்றமான மாதம். நட்சத்திரநாதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த வரவு வரும். அரசு வழியில் மேற்கொள்ளும் முயற்சி சாதகமாகும். புதிய தொழில் முயற்சிக்குரிய அனுமதி கிடைக்கும். வெளி வட்டாரத்தில்  செல்வாக்கு உயரும் வாரமிது. அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். குரு பகவான் வக்ரம் அடைந்திருந்தாலும் அவருக்குரிய பலன்களை சூரியன் வழங்குவார். ஜென்ம ராசிக்குள்ளும் சஞ்சரிக்கும் சுக்ரன் பொன் பொருள் சேர்க்கையை உண்டாக்குவார். புதிய வாகனம் வாங்குவீர். உங்கள் வாழ்க்கையில் புதிய பாதை தெரியும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். செவ்வாய் பகவானால் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். நட்பு வட்டத்தில் எச்சரிக்கை அவசியம். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதும், எந்த ஒன்றிலும் திட்டமிட்டு செயல்படுவதும் நல்லது. உங்கள் ராசி நாதன் பாதச் சனியாக சஞ்சரிப்பதுடன், 4, 8, 11 ம் இடங்களையும் பார்ப்பதால் உடல்நிலையிலும், வருமானத்திலும் கவனம் வேண்டும். மாணவர்களுக்கு மாத பிற்பகுதியில் படிப்பில் ஆர்வம் கூடும்.சந்திராஷ்டமம்: நவ. 22, 23.அதிர்ஷ்ட நாள்: நவ.17, 19, 26, 28. டிச. 1, 8, 10.பரிகாரம்: திருவல்லீஸ்வரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.திருவோணம்; திட்டமிட்டு செயல்பட்டு முன்னேற்றம் கண்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் யோகமான மாதம். குரு, செவ்வாய், ராகு ஆகியோர் இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு யோகத்தை உண்டாக்குவார்கள். மேற்கொள்ளும் முயற்சிகளை எல்லாம் வெற்றியாக்குவார். தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் அதிகரிப்பார்கள். நீங்கள் மேற்கொள்ளும் வேலைகளில் லாபத்தை காணக்கூடிய நிலையினை ஏற்படுத்துவார். இந்த நேரத்தில்  சூரிய பகவான் உங்கள் வாழ்க்கையில் புதிய வெளிச்சத்தை உண்டாக்குவார். தடைபட்டிருந்த வருமானம் வரத் தொடங்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். பயணத்தினால் லாபம் அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் வந்து சேர்வர். புதிய தொழில் தொடங்க எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். அதிர்ஷ்டக் காரகனான சுக்ரனும் சாதகமாக சஞ்சரிப்பதால் வருமானம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். எதிர்பாலினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். வேலைத் தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். எந்த ஒன்றிலும் அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது அவசியம். உடல்நிலையிலும், உங்கள் செல்வாக்கிலும் எப்போதும் கவனம் வேண்டும். அது மட்டுமே உங்கள் நிலையை மேலும் உயர்த்தும். மாதத்தின் பிற்பகுதியில் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் ஒப்பந்தங்கள் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.சந்திராஷ்டமம்: நவ. 23, 24.அதிர்ஷ்ட நாள்: நவ. 20, 26, 29. டிச. 2, 8, 11.பரிகாரம்:  காளத்தீஸ்வரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.அவிட்டம் 1, 2 ம் பாதம்; நேர்மையாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் நன்மையான மாதம். எந்த ஒன்றிலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தவறான நட்புகளை நீக்குவதும், சட்டத்திற்கு புறம்பான செயல்களைத் தவிர்ப்பதும் நல்லது. மாதம் முழுவதும் சூரிய பகவான், ராகு, சுக்ரன் சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் வேலைகள் எல்லாம் வெற்றியாகும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்கள் வந்து இணைவார்கள். வெளிநாட்டிற்கு செல்ல முயற்சிப்பவர்களுக்கு அனைத்தும் சாதகமாகும். முடங்கிக் கிடந்த தொழில்களில் யாவும் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். கணவன் மனைவிக்குள் இருந்த நெருக்கடிகள் விலகும். குடும்பத்தில் மங்கள ஓசைக்கான அறிகுறி தென்படும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். புதிய இடம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். ஒரு சிலர் பழைய வாகனத்தை விற்றுவிட்டு மனதிற்கு பிடித்த புதிய வாகனம் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: நவ. 24, 25.அதிர்ஷ்ட நாள்: நவ. 17, 18, 26, 27. டிச. 8, 9.பரிகாரம்:  மருதமலை முருகனை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

அவிட்டம் 3, 4 ம் பாதம்; உழைப்பால் முன்னேறும்  உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதத்தில் புதிய பாதை தெரியும் ஜென்ம ராசிக்குள் சனி பகவான் ஆட்சி பலம் பெற்றிருப்பதால் ஒவ்வொரு செயலிலும் நிதானம் தேவை. நண்பர்களையும், வாழ்க்கைத் துணையையும் அனுசரித்துச் செல்வது நல்லது. எதிலும்  அவசரம் காட்டாமல் யோசித்து செயல்படுவது நல்லது. தன, குடும்ப, வாக்கு இடத்தில் ராகு,  8 ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்திற்குள்  தேவையற்ற குழப்பம் உருவாகும். பணவரவில் தடை ஏற்படும். உடல் நிலையில் ஏதேனும் தொந்தரவு இருந்து கொண்டிருக்கும். எதிரிகள் கை மேலோங்கும். பெண்கள் தங்கள் நலனையும், கணவரின் நலனையும் கவனமாக பார்த்துக் கொள்ளுதல் அவசியம். செவ்வாய் சஞ்சரித்தினால் எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அவற்றிலிருந்து உங்களால் விடுபட முடியும். நினைத்ததை சாதிக்க முடியும். உடலில் இருந்த சங்கடம் விலகும். எதிர்ப்பு இல்லாமல் போகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். சூரியனால் அரசு பணியில் இருப்போர் முன்னேற்றம் அடைவர். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். சுக்ரன் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் வரவு அதிகரிக்கும், பொன் பொருள் சேரும். மாதத்தின் பிற்பகுதியில் புதனின் சஞ்சாரம் உங்கள் நிலையை உயர்த்தும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: நவ. 25.அதிர்ஷ்ட நாள்: நவ. 17, 18, 26, 27. டிச. 8, 9.பரிகாரம்:  நவக்கிரக வழிபாட்டால் நன்மை உண்டாகும்.சதயம் ; சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் எதிர்பார்ப்பு நிறைவேறும் மாதம். சனி பகவான் ஆட்சியாக சஞ்சரிக்கும் நிலையில், உங்கள் செயல்களில்  தடைகளும் நெருக்கடிகளும் ஏற்பட்டாலும், ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சூரிய பகவானால்  எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும்.  உத்யோகத்தில் ஏற்பட்ட பிரச்சனை முடிவிற்கு வரும். ஒரு சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். நீண்ட நாட்களாக திட்டமிட்ட வேலை நடந்தேறும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். சொத்து விவகாரத்தில் இருந்த சிக்கல்கள், வழக்குகள் சாதகமாகும். போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். இடம் விற்பது வாங்குவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு இருப்போர் முன்னேற்றமான நிலையை அடைவீர்கள். சனி பகவானின் பார்வை உண்டாவதால் வாழ்க்கைத் துணையின் உடல் நிலையில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.  2 ம் இடமான தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் ஒரு பக்கம் பண வரவு அதிகரித்தாலும், மறுபக்கம் ஏதேனும் குழப்பங்கள் இருந்து கொண்டே இருக்கும்.  கேதுவினால் மறைமுகத் தொல்லை இருக்கும். பெண்களுக்கு வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் இனம்புரியாத சங்கடம் தோன்றும்.  மாதத்தின் பிற்பகுதியில் புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் புதிய இடம் வாங்கும். முயற்சி, கேட்டிருந்த இடத்திலிருந்து பணம் கிடைத்தல், புதிய ஒப்பந்தங்கள் கிடைத்தல் என்று முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். மாதம் முழுதும் சுக்ரனும் சாதகமாக சஞ்சரிப்பதால் வருமானத்திற்கும், சந்தோஷத்திற்கும் குறைவிருக்காது. மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: நவ. 25, 26.அதிர்ஷ்ட நாள்: நவ. 17, 22, டிச. 4, 8, 13.பரிகாரம்: சனீஸ்வரரை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நன்மை அதிகரிக்கும்.அவிட்டம் 1, 2, 3 ம் பாதம்; நீதி நேர்மையுடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் கார்த்திகை மாதம் நன்மையான மாதம். குரு பகவான் வக்ரம் அடைந்துள்ள நிலையில், சூரிய பகவான் மாதம் முழுவதும் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்து நன்மைகளை வழங்க இருக்கிறார். செய்து வரும் தொழில், பார்த்து வரும் உத்யோகம் முன்னேற்றம் அடையும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். புதிய தொழில் தொடங்க அனுமதி கிடைக்கும். அரசு வழி விவகாரம் சாதகமாகும். பணிபுரியும் இடத்திலிருந்த நெருக்கடி விலகும். உங்கள் திறமை வெளிப்படும். செவ்வாய் பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். இதுவரை இருந்த எதிர்ப்பு இல்லாமல் போகும். வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டிகள் விலகும். தொழில் முன்னேற்றம் அடையும். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பார். வழக்கு சாதகமாகும். சுக்ரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். புத பகவானும் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். புதிய இடம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். ஜென்ம ராசிக்குள் சனி பகவான் ஆட்சியாக சஞ்சரிப்பதால் ஒவ்வொன்றிலும் கவனமாக இருக்க வேண்டும். நிதானமாக செயல்படுவது நல்லது. வயிறு, மார்பு சம்பந்தப்பட்ட பிரச்னை ஒரு சிலருக்கு ஏற்படும். வாழ்க்கைத் துணையின் உடல் நிலையிலும் பாதிப்பு ஏற்படும். குடும்பத்திலும் சிறு குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு. போட்டியாளர்கள் உங்களுக்கு எதிராக சதிகள் செய்வார்கள் என்பதை கவனத்தில் கொண்டு மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். பெண்கள் தங்களது கவன் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: நவ. 26, 27.அதிர்ஷ்ட நாள்: நவ. 17, 21, 30. டிச. 3, 8, 12.பரிகாரம்: அனுமனை வழிபட நன்மை அதிகரிக்கும்.

பூரட்டாதி 4 ம் பாதம்: திடமான சிந்தனையும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். குரு பகவான் வக்ரம் அடைந்துள்ள நிலையில் ஒவ்வொரு வேலையிலும் கவனமாக இருக்க வேண்டும்.  ராகு பகவான் சஞ்சரிப்பதால் ஆசை அதிகரிக்கும். திட்டமிடாமல் செயல்பட்டு சில வேலைகளில் அவதிப்பட வேண்டிய நிலை உண்டாகும். கேது பகவான் சஞ்சரிப்பதால் நண்பர்களின் வழிகாட்டுதல் தவறான பாதையில் அழைத்துச் செல்லும்.  குடும்பத்திற்குள் குழப்பம் ஏற்படும். செவ்வாய் பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புதிய பிரச்னைகள் உருவாகும். பூர்வீக சொத்துகள் சம்பந்தமாக எதிர்பாராத நெருக்கடி தோன்றும். உறவினர்களுடன் இதுவரை இருந்த இணக்கமான நிலை இப்போது இல்லாமல் போகும். சனி பகவானின் பார்வையால் குடும்ப உறவுகளை அனுசரித்துச் செல்வதும், பண விவகாரங்களில் கவனத்துடன் இருப்பது நன்மையில் முடியும். யாருக்கும் எந்த விதமான வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம். எதிர்பாலினர் விஷயத்தில் மாதம் முழுவதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.  ஒரு சிலர் சொத்துகளை விற்று நிலைமைகளை சமாளிக்க வேண்டியதாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் முழுமையாக கவனம் செலுத்துவது நல்லது.சந்திராஷ்டமம்: நவ. 27.அதிர்ஷ்ட நாள்: நவ. 21, 30. டிச. 3, 12.பரிகாரம்:  மூகாம்பிகையை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.உத்திரட்டாதி ; நடப்பது எல்லாம் புண்ணிய பலன்களே என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம்.  சனி பகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் நிலையில் செலவு பல வகையிலும் அதிகரிக்கும். அவருடைய 3 ம் பார்வை குடும்ப ஸ்தானத்திற்கு உண்டாவதால் சிறு சிறு பிரச்சனை உண்டாகும். பணவரவிலும் நெருக்கடி அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். பின் விளைவுகள் பற்றி யோசிக்காமல் சில வேலைகளை மேற்கொண்டு அதனால் அவதிக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும். உங்களுக்கும் கீழானவர்களால் சில சங்கடங்களை சந்திக்க வேண்டி வரும். நண்பர்களால் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டிய நிலை உருவாகும். ஒரு சிலர் உங்களைத் தவறான வழிக்கும் அழைத்துச் செல்வார்கள்.  ராசிநாதன் வக்ரம் அடைந்திருப்பதால் குழப்பம் அதிகரிக்கும். யோசிக்காமல் செயல்பட்டு நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.  புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் முதலீடு செய்யும் முன் சூழ்நிலை அறிந்து செயல்படவும். ஒரு சிலருக்கு இருக்கும் சொத்துகளை விற்று கடன்களை அடைக்க வேண்டிய நிலை உருவாகும். பணிபுரியும் இடத்திலும் நெருக்கடி அதிகரிக்கும். குடும்பத்திலும் நிம்மதியற்ற நிலை இருக்கும். மாணவர்கள் மாதம் முழுவதும் படிப்பில் கவனமாக இருக்க வேண்டும்.சந்திராஷ்டமம்: நவ. 28, 29.அதிர்ஷ்ட நாள்: நவ. 17, 21, 26, 30. டிச. 3, 8, 12.பரிகாரம்: திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரரை வழிபட நன்மை நடக்கும்.ரேவதி;  முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் அமைதியாக செயல்பட வேண்டிய மாதம். புதிய முயற்சிகளில் இக்காலத்தில் ஈடுபட வேண்டாம். வழக்கமான வேலைகளில் மட்டும் நிதானமாக செயல்படுவது நன்மையாக இருக்கும். வியாபாரிகள் புதிய முதலீடு செய்வதற்கு முன்னதாக நன்றாக யோசிக்க வேண்டும். கடன் கொடுப்பது வாங்குவது போன்ற வேலைகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. விரய ஸ்தானத்தில் ராகு, கேது,  செவ்வாய், சுக்ரன் உங்கள் செயல்களில் சங்கடத்தை ஏற்படுத்தும். வருமானத்தில் தடைகளை உண்டாக்கும். உங்கள் சுய ஜாதகத்தில் திசா புத்தி சாதகமாக இருந்தால் பெருமளவில் சங்கடம் ஏற்படாமல் போகும். அதே நேரத்தில் சனி பகவான் அருளால் எதிர்வரும் பிரச்னைகளை எல்லாம் சமாளித்து விடக்கூடிய சக்தி உங்களுக்கு உண்டாகும். உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டாலும் சிகிச்சையின் மூலமாக நிவாரணம் கிடைக்கும். வழக்கு சாதகமாகும். போட்டிகளை சமாளித்திடக்கூடிய சக்தி உங்களுக்கு உண்டாகும். அடுத்தடுத்த மாதங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் நிலையில் இந்த மாதத்தில் ஒவ்வொரு வேலையிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நிதானமாக செயல்பட வேண்டும். உங்கள் வேலைகளை பிறரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது உங்களுக்கு நன்மைகளை அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் தங்கள் முழு கவனத்தையும் செலுத்துவது நல்லது.சந்திராஷ்டமம்: நவ. 29, 30.அதிர்ஷ்ட நாள்: நவ. 21, 23, டிச. 3, 5, 12, 14.பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மைகள் கூடும்.


ShareTweetShareShare

Advertisement

Advertisement Tariff

Advertisement




      Dinamalar
      Follow us